பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.
1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்
2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும் அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால் பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார் அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால்,
3.தேசாபிமானியாய் இருந்தால், அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி அக்ரமங்களை கண்டும் காணாமலும் இருக்க மாட்டார்.
4.முகத்துக்கு நேரே நீங்கள் சரியாக செயல்படவில்லை என்று கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது விலகி இருப்பார் நேர்மையான மனிதராய் இருந்தால்
5.அல்லது உண்மையாகவே நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால் தவறு நடக்கும் இடத்தில் தைரியமாக தட்டிக் கேட்பார் தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால் அவரைக் குற்றம் சாட்டுவதில் தவறே இல்லை
பொருளாதார மேதை என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
அன்புடன்
தமிழ்த்தேனீ
*
இன்னம்பூரான்
No comments:
Post a Comment