Showing posts with label 20. Show all posts
Showing posts with label 20. Show all posts

Saturday, October 8, 2016

சிவகாமியின் செல்வன் 20

சிவகாமியின் செல்வன் 20

இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2016

'...இது இவ்வாறு இருக்க,1963லிருந்தே இறங்குமுகம் கண்ட காங்கிரஸ், 1967ல் காங்கிரஸ்ஸின் தூணாகிய காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலத்தையும் சந்தித்தது. அதற்கு பல காரணங்கள் சாங்கோபாங்கமாக கூறப்பட்டாலும் அது பற்றி காமராஜரும், ராஜாஜியும் கூறியவற்றை அடுத்த பதிவில் பார்த்த பின்னர் தான் ஓரளவு பின்னணி தெரிய வரும்.'

~சிவகாமியின் செல்வன் 19ன் இறுதி வரி.

எதிர்பாராத இன்னல்களாலும், இன்றியமையாத இதர பணிகளாலும் தொடரில் தொய்வு ஏற்பட்டதால், மேற்கண்ட நினைவூட்டல். முழுமை காண, இதுவரை வந்த தொடர், இணைப்பில்.

காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலம் பலவிதமான ஊகங்களுக்கும், வதந்திகளுக்கும், காளான்களின் உற்பத்திக்கும் வித்திட்டது. ஒரு தீப்பொறி போதும், ஊரை கொளுத்த. அத்தகைய தீப்பொறிகளும் பிறந்தன;பறந்தன;துரத்தி அடித்தன, நாம் ஆகிய மக்களை. தீப்பொறிகளுக்கு பிறகு வருவோம். 

காந்திஜி, ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்ற சொல்லை வழக்கம் போல் நன்கு சிந்தித்த பின் தான் பயன்படுத்தினார்.'சிவகாமியின் செல்வன் 19' என்ற பதிவில் உள்ள படத்தை பாருங்கள். காமராஜர் காந்திஜியின் அருகில் தான் அமர்ந்திருக்கிறார். எல்லாம் நடந்த பின் தாக்காமல், தன் இயல்பு படி காந்திஜி காமராஜரிடன் தன் உள்மனதை கூறியிருந்தால், தமிழ்நாட்டின் தலை விதி இத்தனை பாடுபட்டிருக்காது என்பதில் ஐயமில்லை. அரசியல் நல்லதொரு ராஜபாட்டையில் பயணித்திருக்கலாம். இது நிற்க.

பிற்காலம் ஹிந்தி எதிர்ப்பதில் ஆர்வம் காட்டிய ராஜாஜி சுதந்திரா கட்சியை துவக்கினார. அத்துடன் நில்லாமல், 1964ம் வருட சென்னை மகராட்சித் தேர்தலில், தி.மு.க. வுடன் கூடா நட்பை வளர்த்துக்கொண்டார். காங்கிரஸ் தோற்றது. 1965ல் தி.மு.க. ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. என் போன்றவர்களுக்கு அக்காலத்து அரசி தட்டுப்பாடு நினைவில் இருக்கிறது. மக்களுக்கு ஒரு 'கச கச' கசப்பு. இந்த பின்னணியில் தான் 1967, வருட தேர்தல். காமராஜர் கூறிய 'ஒரே குட்டையில் அழுகிய மட்டைகளுடன்' ராஜாஜி, ம.பொ.சி., காயிதே மில்லத், மார்க்ஸிஸ்ட் ஆகியோரும் பிரசன்னம். இந்த கூட்டணி வஸ்தாத் காங்கிரஸை தோற்கடித்தது. போயும், போயும் விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற மாணவன் காமராஜரை தோற்கடித்தார். இந்த தொடரின் முதல் இதழில் சுட்டியபடி, அங்குமிங்குமாக திராவிடகட்சி நோக்கில் தொகுத்து, காமராஜரை மற்றொரு பெரியார் போல சித்தரித்த “வானவில்” ஆடி 2016 இதழ், பக்கம் 12-13 போல, காளிமுத்து, கோபால்சாமி போன்றோர் 'அரிசி பஞ்சம்' 'மாணவர்களை சுட்டு விட்டார்கள் என்றெல்லாம் செய்த கலப்பட பிரச்சாரம் கை கூடியது என்று தான் பலர் பேசிக்கொண்டார்கள். ஆனால், சீனிவாசனை நிறுத்திய அறிஞர் அண்ணாவுக்கு உள்ளூர கொஞ்சம் வருத்தம் தான். இது இப்படியிருக்க, சீனிவாசனின் தலைகால் தெரியாமல் குதிக்கும் நிகழ்வுகள் அண்ணாவுக்கு பிடிக்கவேயில்லை. அமைச்சர் நமைச்சல் பிடித்த சீனிவாசன் ஓரம் கட்டப்பட்டார். அவர் ராஜாஜியிடம் சிபாரிசு நாடினார். ராஜாஜிக்கும் அண்ணாவுக்கும் அப்படியென்ன தாக்ஷிண்யம் என்று கேட்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தான். ஆனாலும் ராஜாஜி ஒரு காரியம் நடக்கவேண்டாம் என்றால் தனது சிபாரிசு போதும் என்று தன்னையே கேலி செய்து கொள்வார். ராஜாஜி சீனிவாசனிடம் சொன்னது வைர வரி: 

"...கென்னடி ரொம்ப ரொம்ப பெரிய மனுஷன் தான். ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளைக்கீழே சாய்ச்சுடுச்சு, அதுக்காக அந்த புல்லட்டை எடுத்துவச்சி அங்கே எவனாவது கொண்டாடினா?என்ன...?"
(கென்னடிக்காக டில்லியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ராஜாஜி, வஸந்தா, நான் மூவரும் ஒரே வரிசையில் நின்று கையெழுத்து இட்டது நினைவுக்கு வருகிறது.) ~ இது ராஜாஜி.

எதற்கும் அலங்காத காமராஜர் உதகமண்டலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். காங்கிரஸ் பெருந்தலைகள் அவரை சந்தித்தபோது, பலவிதமான ஊகங்களையும், வதந்திகளையும், காளான்களின் உற்பத்தி ஆகியவற்றை பட்டியல் இட்டார்கள். அவற்றை எல்லாவற்றையும் நிராகரித்த நம் தலைவர் இது வியாபாரிகள் சம்பந்தப்பட்டது என்றார். அவர் சொன்ன காரணங்கள்: காங்கிரஸ் கட்சியின் பத்து அம்ச திட்டம் மக்கள் நலனுக்கு. அதன்படி உணவு தானிய மொத்த வர்த்தகத்தை அரசு எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது, விருது நகரில் இருந்த 40-50 வியாபாரிகளுக்கு பிடிக்கவில்லை. அந்த வகையில் நாலாயிரம் ஓட்டுக்கள் பிறழ்ந்து அளிக்கப்பட்டதில் இருமடங்கு நஷ்டம், தோல்வி என்றார்.ஒரு கார் விபத்தினால் தன்னுடைய பிரசாரம் தடை பெற்றதையும் கூறினார். தமிழ்நாட்டு மக்களின் மனதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக வைத்திருந்த காமராஜர் தப்புக்கணக்கு போடுபவர் அல்ல. இந்த காரணம், இந்திய அரசியல் உலகத்தின் சாபக்கேடான தீப்பொறி.

சிவகாமியின் செல்வன் 1-19:





(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:
Attachments area

Sunday, August 25, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! – 20




கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

Innamburan S.Soundararajan Sat, Aug 24, 2013 at 9:08 PM


கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

இன்னம்பூரான்
page1
நானோ! ஒரு அப்பாவி!
மகா கனம் பொருந்திய கோர்ட்டார் சமூகத்தின் முன்னிலையில் நடை பெற்றதாக ஒரு கற்பனை உரையாடலை செவி சாய்த்து கேட்பீர்களாக. இரட்டை ஜீயும், நிலத்தடி எண்ணை வளமும் உங்களது கற்பனையில் மேய்ந்தால், யான் அதற்குப் பொறுப்பல்ல. ‘நானோ! ஒரு அப்பாவி!’ அது கூட இரவல்.
இனி உரையாடல்.
சாக்ஷி (சா), கோர்ட்டார் (கோ), அரசு வழக்கறிஞர். (அ.வ.) கோர்ட்டு குமாஸ்தா (கோ.கு.), டவாலி (ட).
ட: பராக்! பராக்!! பராக்!!! கோர்ட்டார் வருகிறார்! வந்துகொண்டே இருக்கிறார்! டட்! டட்! டட்!
எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.
சாவதானமாக, அலம்பல் யாதும் செய்யாமல், குறித்த நேரத்துக்கு முன்பே, ‘கூஜாக்கள்’ உடனில்லாமல், சமத்தாக வந்து கூண்டேறினார், சாக்ஷி பெருமகனார்.
கோ.கு: உமது பெயர் என்ன?
சா: ரிஷ்ய சிருங்கர், மாமுனி மைந்தன், மாமுனி (ஜூனியர்) தம்பி.
கோ.கு: ‘யான் பேசுவது உண்மையே. பேசுவது முற்றிலும் உண்மையே. உள்ளுறையாகக்கூட பொய் பேசமாட்டேன். இது சத்யம். சத்யம். சத்யம் என்று அடித்துக்கூறும். கடவுளைக்கூப்பிடுவீர்களா? அல்லது உம் நாணயத்தை நம்புவீர்களா?. உடனே பதில் சொல்லும். ஹூம்!
சா: கடவுளே என் சாக்ஷி. (தனிமொழி: அவர் குரலெடுக்கமாட்டார்.)
(கோ.கு. பகவத் கீதை நூலை சாக்ஷியின் கையில் கொடுத்தார். அவரும் அதை பவ்யமாக வாங்கி, அதன் மேல் ஒரு ஷொட்டு கொடுத்து, நடுநடுங்கும் குரலில் சத்தியப்பிரமாணம் செய்தார்.)
கோ:உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா?
சா: என் பெயரே ரிஷ்ய சிருங்கர், வணக்குத்துக்கு உரிய என் தந்தையோ மாமுனி. மரியாதைக்கு உரிய என் மூத்த உடன்பிறப்போ மாமுனி (ஜூனியர்). எனக்கு பெண்பால் பரிச்சயமில்லை. In fact…
அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷி வினவிய வினாவுக்கு விடை அளித்தால் போதும். அவர் கேட்டக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. I object…
கோ: Objection sustained. உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.
( ஒரு விசிட்டர்: ‘என்ன இது பெர்ரி மேஸன் கதை போல் போகிறது!’ டெல்லா ஸ்ட் ரீட் வருவாளா அல்லது ‘தரகு’ மாமியா?) நல்ல வேளை அவர் முணுமுணுத்ததால் அது யார் காதிலும் விழவில்லை.)
சா: யான் அன்னலக்ஷ்மியை அறியேன். அறிந்ததுமில்லை, அறியப்போவதுமில்லை.
கோ: உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.
சா: (சுளித்த முகத்துடன்) அறியேன். அறியேன். அறியேன்.
கோ: உமக்கு எத்தனை தடவை சொல்வது? ஒரு வினா.ஒரு விடை. போதும்.
சா: என்னுடைய வக்கீல் ஐயா பாரீஸ்டராக்கும். லண்டனில் படித்தவர் அவர் சொன்னபடி கக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே. சத்தியம் ஜெயிக்க வேண்டுமல்லவா, பாரதநாட்டின் இலச்சினையில் கூறிய மாதிரி.
(அரசு வக்கீல் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். சாக்ஷியின் வக்கீல் கோர்ட்டார் பார்க்கும் மாதிரி தன் கைகளை விரித்து, முணுமுணுக்கிறார்.
கோ: அரசு வக்கீலைப் பார்த்து: Go ahead.
அ.வ.: சரி. விருந்தாந்தத்தை சொல்லவும்.
சா: அன்னலக்ஷ்மியை லவலேசமும் அறியேன். ‘நம்பிக்கை -1’ கம்பெனி ‘நம்பிக்கை -2’ கம்பெனியில் அடக்கம். நான் ‘நம்பிக்கை -2‘கம்பெனியின் நிர்வாகப்பொறுப்பேற்காதத் தலைவன். ‘நம்பிக்கை -1’ கம்பெனியின் தலைமைக்குழுவில் இருந்தேன். எப்போது? என்ன? என்பதை மறந்து விட்டேன். வெகுதான்ய ௵ அந்த பதவியில் இருந்தேனா என்று சொல்ல இயலாது.
(இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)
(அரசு வக்கீல் அவரிடம் ஒரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க, சாக்ஷியும், சாக்ஷிணியும் (ஆஹா! அவர் பெண்பால் அறிந்தவர் என்பது தெளிவாயிற்று. அது ஒரு புறமிருக்க…அந்த தஸ்தாவேஜில் சாக்ஷியும், சாக்ஷிணியும் கையொப்பமிட்டு இருந்தனர். அன்னலக்ஷ்மியின் சித்திரம் வேறே பதிவாகி இருந்தது.)
சா: அவை எங்கள் கையொப்பம் என்று உறுதி செய்கிறேன். எங்கள் இருவரின் வருமான வரி ஆவணங்கள் அங்கு பதிவு ஆகியுள்ளன. ஸத்யமேவ ஜயதே! ஸத்ய ஸத்யமேவ ஜயதே! மேவ ஜயதே!
(அரசு வக்கீல் அவரிடம் மற்றொரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் இவரது கம்பேனி ‘அன்னதானம்’ செய்வதை பற்றியது, அது.)
சா: அது பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே. (ஒரு கூஜா ஓடி வந்து கொடுத்த திருநீரை அணிந்துகொள்கிறார்.)
சா: (தென்பு திரும்ப) அந்த தஸ்தாவேஜில் என் பெயரும், சாக்ஷிணியின் பெயரும் இருந்தாலும், அது வங்கியின் தஸ்தாவேஜு. அதை பற்றியும், அதன் பொருளடக்கத்தைப் பற்றியும் யான் லவலேசமும் அறியேன் என்பது கண்கூடு, வெட்ட வெளிச்சம், உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடை மலை.
(கோ: சாக்ஷியின் வக்கீலிடம் ‘உமது கட்சிக்காரர் சொல்லாட்டம் ஆடுகிறார். அதை கட்டுப்படுத்தி வைக்கவும். இது என் ஆணை.)
(அரசு வக்கீல் சாக்ஷியிடம் அன்னலக்ஷ்மியின் ஊழியர்களான, சித்தார்த், இந்திரன், விஷ்ணு என்ற மூவரின் சித்திரங்களை காண்பித்தார்.)
சா: ஓ! இவர்களை தெரியுமே. இவர்கள் குழுவினர் ஆச்சே. ஆனால் அவர்களின் பதவி, கையொப்பம் பற்றி யாதும் அறியேன்.
அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்
கோ: Granted.
குறுக்கு விசாரணையின் போது, தான் வேவுத்துறை அதிபதியிடம், இவ்வழக்கு சம்பந்தமாக போனதை ஒப்புக்கொண்ட சாக்ஷி, தான் எழுத்தில் கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை என்று கம்பீரமாக பதிலினார். கோர்ட்டார் கேட்ட வினாவுக்கு பதில் அளிக்கும்போது தனக்கு அச்சுறுத்தல், இற்செறிப்பு ஒன்றும் வரவில்லை என்று திண்ணமாகக் கூறினார். பொய் சொன்னால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிவேன் என்று அடித்துக்கூறினார்.
(இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)
மறுபடியும் குறுக்கு விசாரணை:
சா: அன்னலக்ஷ்மியை எங்களுடன் உறவாட யாம் அழைக்கவில்லை. அவளது வானள்ளும் சாகசங்களை பற்றி கொஞ்சம் கூட எனக்குத் தெரியாது. அவளுக்கு ‘நம்பிக்கை -1’ கம்பெனி எக்கச்சக்கமாகக் கொடுத்த பொன் மோஹராக்கள் பற்றி எனக்கு எப்படித்தெரியும்?நீங்களே சொல்லுங்கள். நானோ! ஒரு அப்பாவி!
அன்றைய கோர்ட்டுக் கலைந்தது.
மறுநாள் சாக்ஷிணியும் கிருகலக்ஷ்மி என்ற பீடத்திலமர்ந்து, கம்பெனிகளுக்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்ற தோரணையில் விடையளித்தார். (கம்பெனி ஆவணங்கள் சொலவு வேறானால் என்பது வேறு ஒரு கேள்வியோ என்ற ஐயம்.
ஹூம்!

சித்திரத்துக்கு நன்றி
மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்
POSTED ON 5:39 PM BY SANKARA RAMASAMY WITH NO COMMENTS

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பிஎசுரம்: வல்லமை: 24 08 2013


Aadhiraa Sat, Aug 24, 2013 at 10:00 PM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
ம்ம்ம்  கட்டுரை படித்தேன். மிகவும் பயனுள்ளது.தங்களது கட்டுரையை விட பதிலினார், இற்செறிப்பு முதலிய சொல்லாட்சிகளை மிகவும் ரசித்தேன் சார்.

சென்னையிலா? பாண்டியிலா?

2013/8/24 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>


Innamburan S.Soundararajan Sun, Aug 25, 2013 at 6:56 AM
To: "vallamai@googlegroups.com"
பாண்டியில் பாண்டி ஆடி வருகிறேன். மிக்க நன்றி ஆதிரா.

Tuesday, June 18, 2013

அன்றொரு நாள்: ஜூலை 20:II




அன்றொரு நாள்: ஜூலை 20:II
Innamburan Innamburan Wed, Jul 20, 2011 at 5:43 AM



அன்றொரு நாள்: ஜூலை 20:II


‘...Full many a gem of purest ray serene
The dark unfathom'd caves of ocean bear:
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.

Some village-Hampden, that with dauntless breast
The little tyrant of his fields withstood,
Some mute inglorious Milton here may rest,
Some Cromwell, guiltless of his country's blood...’

தாமஸ் க்ரே அவர்களின் ‘கிராமீய கல்லறை இரங்கற்பாட்டை திரு. வீ.கே. விஸ்வநாதய்யர் சொல்லிக்கொடுத்ததை மறக்கமுடியுமோ? ‘ஆழ்கடலின் நன்முத்தை கண்டது யார்? ...

காட்டு ரோஜா மணக்குமா? திருட்டுக்கும்பலில் மாட்டிக்கொண்ட நாணயஸ்தன் என்ன செய்யவேண்டும்? தலைகால் தெரியாமல் குதிக்கும் அரசன் வீசி கடாசிய செங்கோலை நாமும் மிதித்துத் துவம்சம் பண்ணத்தான் வேண்டுமா? ‘யதா ராஜா! ததா பிரஜா!’ இது வேத வாக்கா? பைசாச துர்போதனையா? 
     
இரண்டாம் உலக யுத்தத்தில் நார்மண்டி லேண்டிங்க் உலகபிரசித்தம்.   அமெரிக்காவின் ‘அருண் க்ஷேத்ரபால்’ ந்னு வச்சுக்கோங்கோ. படுகாயமடைந்த நண்பனை காப்பாற்ற ஒரு வாலிபன் (23)  உயிரை பணயம் வைக்கிறான். நல்லவேளை பொழைச்சுட்டான். பல வருஷங்களுக்கு பின் செங்கோலை மிதிக்கச்சொல்றா. போடான்னுட்டார். அவர் சொல்றார். நார்மண்டியில் இருந்த மனோதர்மம் தான் இங்கும் என் துணை என்று. அதான் கதை. ஆனால், இவரை பற்றி எனக்கு முன்னாலேயே தெரியும் என்று யாராவது சொன்னால், எனக்கு ஆத்ம திருப்தி. ஸ்வாமி! காட்டு ரோஜா, அநாமதேய நாணயஸ்தன், விடாக்கொண்டன்ஸ், உடும்புப்பிடி, இவர்கள் எல்லாம் இல்லையானால், இந்த அரசியலர், அதிகாரமையங்கள், Extra Constitutional Power Centres, எல்லாம் நம்மை தூக்கி சாப்பிட்டிருக்கும். வரலாறு அவர்களை மறந்து போகிறது. மறக்கவைக்கப்படுகிறது. நான் சொல்வது உலக அளவில். அன்றைய இந்தியா, இன்றைய இந்தியா, உண்ணா விரதிகள், உண்ணும் ..., அவர்களை எல்லாம், நீங்களே தான் இனம் கண்டு இயங்கவேண்டும். ஒன்று திண்ணம். ‘அச்சம் தவிர். தேசம் பசாவ்!’

ஜூலை 20, 1920யில் பிறந்த சராசரி மனிதன் எலியட் ரிச்சர்ட்ஸன். தேசப்பற்றில் ஊறிய பாஸ்டன் மண். அவர் பார்க்காத பெரிய ஊழியம் இல்லை; அட்டர்னி ஜெனெரல், மாநிலத்திலும், மத்திய அரசிலும், பிரட்டனுக்கு அமெரிக்கத் தூதர், சர்வதேச கடல் சம்பந்தமான சட்டங்களை வகுத்து நிர்ணயம் செய்தவர், ஐ.நா.வின் சார்பில், நிகராகுவே தேர்தலை கண்காணித்தவர், வரலாற்றில் காணாத வகையில், அமெரிக்க அமைச்சரகத்தில் நான்கு பதவிகள் வகித்தவர், இத்யாதி.
     

நிக்சன் ஜனாதிபதியாக இருந்த போது, அவர் எதிக்கட்சியின் அலுவலகத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தது (ஜூன் 17, 1972) முதல், பண்ணாத லூட்டி கிடையாது. கேட்காத ஒட்டு கிடையாது. அதிகார துஷ்பிரயோகம் கொடி கட்டி பறந்தது. பக்கிரியும், போக்கிரியுமாக அவருக்கு துணை நின்றோர் பலர். நன்றாக ஞாபகம் இருக்கு. பாப் உட்வெர்ட், கார்ள் பெர்ன்ஸ்டீன் என்ற இரு நிருபர்கள், பிச்சு உதறி விட்டார்கள். அந்தக் கதை படு சுவாரஸ்யம். இன்று இந்தியாவில் பாடம் எடுக்க உதவும். எங்கிட்ட ட்யூட்டோரியல் ரெடி. எப்போ சொல்வதற்க்கு வேளை வருமோ? நம்ம எலியட் ரிச்சர்ட்ஸன் ஐயா தான் அட்டர்னி ஜெனெரல்.  ஆர்ச்சிபால்ட் காக்ஸ் என்பவர் அரசு வக்கீல் (Special Public Prosecutor). கொளுத்தரராரு போட்டு. நிக்சனுக்கு சூடு தாங்கலை. எளுந்து நின்னு செங்கோலை வளைச்சுட்டு, ‘ஆர்ச்சிபால்ட் காக்ஸை டிஸ்மிஸ் பண்ணு’ என்றார், எலியட் ரிச்சர்ட்ஸனிடம். அவரு முடியாது மன்னனே! என்று சொல்லிவிட்டார். (தனி மொழி: கோவிச்சுக்காதங்கோ! பின்ன என்ன? கோபால் சுப்ரமணியம் என்ற அரசு வக்கீலை கபில் சைபல் அவமதித்தது கண்டீரோ?).

ராஜிநாமா செய்தார். அடுத்தபடி வந்த வில்லியம் ரக்கல்ஹெளஸ்ஸும் முடியாது என்க, அவரும் வேலை இழந்தார். பின்னர் செங்கோலை மிதித்து, அந்த அபகீர்த்தியை கட்டிக்கொண்டது, ராபெர்ட் போர்க் என்ற பெரிய அதிகாரி. ஆனால். அவர் பெயரும் பெர்மனெண்டா டாமேஜ் ஆயிடுத்து. அதிபரும் ஜெயிலிலிருந்து தப்ப, ராசியாகமாகவே, ராஜீநாமா செய்யும்படி ஆகிவிட்டது.  
     
‘ஒரு மிதவாதியின் எண்ணோட்டங்கள்’ என்ற 1996ல் எழுதிய நூலில், எலியட் ரிச்சர்ட்ஸன் எழுதியது: 

‘...இந்த விசாரணை சுதந்திரமாக இருந்தால் மட்டும் போதாது; அந்த சுதந்திரம் மக்களுக்கு கண்கூடாக இலங்க வேண்டும்’ என்று செயல் பட்டேன்..அதிபரின் கைக்கூலிகள் தீயவர்கள் மட்டுமல்ல. பச்சோந்திகள்...’

ஒரு லேசு தகவல்: எலியட் ரிச்சர்ட்ஸன் அவர்கள் சிலகாலம் புகழ் வாய்ந்த நீதிபதி ஃபெலிக்ஸ் ஃப்ராங்க்ஃபெர்ட்டரிடம் குருகுலவாசம் செய்தபோது, தினந்தோறும் ஷேக்ஸ்பியர் படிக்க ஒரு மணி வேண்டும் என்றார். அது கேட்டு மனம் குளிர்ந்த நீதிபதி, இவரை (வயது 33) ஹார்வேர்ட் தலைமைக்கு சிபாரிசு செய்தார்.
சுருங்கச்சொல்லின், இந்தியாவுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான எலியட் ரிச்சர்ட்ஸன்கள் வேண்டும். நீதிபதி ஃபெலிக்ஸ் ஃப்ராங்க்ஃபெர்ட்டர் மாதிரியும் வேணும். ஒரு வகையில் வீ.ஆர். கிருஷ்ணய்யார் மாதிரி. ஹெரால்ட் லாஸ்கியின் நண்பர். ஹெரால்ட் லாஸ்கி தான், நமது மாஜி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை, நேருவிடம் சிபாரிசு செய்தவர். மனசு வச்சா, லோகம் சின்னது.
     
மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்பதற்காக, கொஞ்சம் கசப்பு கலக்காமல் மருந்து கொடுக்க முடியுமா? இதோ ஒளஷதம். (பிடிக்கலை என்றால் டெலீட் பட்டன் இருக்கவே இருக்கு). 

மதிப்பிக்குரிய மாஜி ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை புகழ்ந்து எனது ஒரு மடல். ஹிந்து இதழில் போட்டார்கள். அதற்கு பிறகு அவர் செயலை குறை கூறி ஒரு மடல். போட்டார்களோ? போட்டதாக  நினைவில் இல்லை.
Opinion - Letters to the Editor 
The President has articulated ethical concerns and echoed public opinion.
The Oxonian in Prime Minister Manmohan Singh will recognise the incongruity
of applying a British constitutional device to the opposite end. It is not
beyond the realm of possibility that the President may resign, rather than
being pressured into giving assent in the second round. 
S. Soundararajan, 
Chennai 
Note: He did not resign and gave assent in the second round. I recall that my letter condemning the same was not published.]
இப்போ மட்டும் ஒரு இந்திய எலியட் ரிச்சர்ட்ஸன் இருந்திருந்தால்...

இன்னம்பூரான்
20 06 2011
உசாத்துணை:
http://img.freebase.com/api/trans/image_thumb/m/02chh4t?errorid=%2Ffreebase%2Fno_image_png&maxheight=200&mode=fit&maxwidth=150

Image Credit:http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/ElliotLeeRichardson.jpg/220px-ElliotLeeRichardson.jpg

pastedGraphic.pdf

Geetha Sambasivam Wed, Jul 20, 2011 at 8:56 AM


நார்மன் லேண்டிங் பற்றியோ எலியட் ரிச்சர்ட்சன் பற்றியோ கேட்டதில்லை.  இந்தத் தகவல்கள் புதுசு.  ஆனால் கபிலி சிபல்(சைபல்??), கோபால் சுப்ரமணியம் பிரச்னை புரியும்.  அதனால் இதுவும் புரிந்தது.  பகிர்வுக்கு நன்றி.

2011/7/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>






anantha narayanan nagarajan Wed, Jul 20, 2011 at 2:36 PM

வணக்கம்,
உங்கள் மடல்களை தவறாமல் படித்துவிடுகிறேன். பெரும்பாலும் அவை -அந்த செய்திகள்- அன்னியமானதாகவே உள்ளன. எனது உலகியல்  அறியாமையின் அளவு ஒரு பூதம்போல முன்னே நிற்கிறது.
அன்புடன்,
அரவக்கோன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Jul 20, 2011 at 5:00 PM


மிக்க மகிழ்ச்சி, திரு.அரவக்கோன், உங்கள் கருத்துக்களை நாடுகிறேன். எனக்கும் புதிய அணுகுமுறை கிடைக்கிறது. இவற்றை, நீங்கள் வரலாற்று நோக்கில், உங்களது மகனார் தன்னுடைய தலைமுறை நோக்கில், கிருஷாங்கினி, இலக்கிய நோக்கில், பரிசோதித்து, கருத்து சொன்னால், சீர்திருத்தங்கள் செய்யலாம்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

]