Saturday, March 23, 2013

இன்னம்பூரான் பக்கம் – 13




இன்னம்பூரான் பக்கம் – 13
7 messages

Innamburan S.Soundararajan Mon, Mar 18, 2013 at 9:17 AM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com
இன்னம்பூரான் பக்கம் – 13
‘…இந்த Authenticity பற்றி சில மேற்கோள்களை எழுதி வைத்துக்கொண்டேன். அது
என்னை படுத்திய பாடு பற்றி, இன்னம்பூரான் பக்கம் -13ல் எழுதுகிறேன். இந்த
கட்டுரை நீண்டு விட்டது…’ என்று 12வது பதிவில் கூறப்பட்ட நிகழ்வுக்கு
இப்போது மணி விழா எடுக்கலாம். அறுபது வருடங்கள் சுற்று ஒன்று முடிந்து
விட்டதல்லவா!

அந்த மேற்கோள்கள் Jean Paul Sartre என்ற ஃப்ரென்ச் சிந்தனையாளரின்
கருத்துக்கள். அதற்கு வருமுன் அவர் ‘சொற்கள்’ என்ற தலைப்பில் தன்னுடைய
பாலப்பருவத்தைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை சற்றே பார்ப்போம். ‘ஓதாமல்
ஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்ற வைரவரியை ஒரு சமயக்கோட்பாடு போல அவர்
அந்த சிறுவயதிலேயே போற்றியது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தாத்தாவின்
நூலகம் தான் தன்னுடைய அறிவை வளர்த்தது என்று நினைவுகளை அசை போதும் அவர்
அந்த தேட்டல் தன் வாழ்நாள் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது என்கிறார்.
சிறுபிள்ளை விளையாட்டுகளில் அவர் மனம் செல்லவில்லை. ‘புத்தகங்களே
எனக்குப் பக்ஷிகள், பறவைக்கூடுகள், எனக்குப் பிரியமான பிராணிகள், டேரா,
நந்தவனம்… இவ்விந்தையுலகின் வண்ணத்தையும், உருவங்களையும் சதா
மாற்றிக்கொண்டே இருக்கும் மாயக்கண்ணாடி, இந்த நூலகம்’ என்கிறார். அந்த
விந்தையை பார்த்து விடுவோம்.
இடைவிடாதத் தத்துவ விசாரணையும், கடைந்தெடுத்த சிந்தனை கருவூலங்களும்,
இலக்கியபடைப்பின் உன்னதமும், பிற்காலத்தில் அரசியல் அலசல்களும், அவருக்கு
ஆதரவு அளிக்கத் தயங்கினாலும், புகழை வாரிக்கொடுத்தன. எட்மண்ட் ஹோசர்ல்
என்ற ஜெர்மானிய சிந்தனையாளரின் சிந்தனைக்களம் தான் இவருடைய தத்துவ
விசாரணையின் வேர். எட்மண்ட் ஹோசரிலின் சிந்தனைக்களத்தின் ஊற்று தொன்மையான
இந்திய வேதாந்த விசாரணைகள் என்பதும் யாவரும் ஒத்துக்கொண்ட உண்மை. நாம்
இந்தக் கட்டுரையில் அந்தப்பக்கம் போனால், திசை மாறி விடுவோம். மனோதத்துவ
சாத்திரத்தில் (உளவியல் என்ற சொல் எனக்கு சம்மதம் இல்லை.) ஒரு நான்காவது
ராஜபாட்டை அது. முன்னுரைக்கே நூறு கட்டுரைகள் தேவை. எனவே, இந்த
Authenticity பற்றி மட்டுமே இன்று சிந்தனை பரிமாற்றம். ஆங்கில சொற்களை
கலப்பது இன்றியமையாதத் தேவை. பொறுத்தாள்க.
மனது வேறு;சித்தம் வேறு. சேதனா, பிரஞ்ஞை என்ற வடமொழிச்சொற்கள்
உணர்ச்சியையும், விழிப்புணர்வையும், மனத்தின் சிந்தனையை சித்தம்
அலசியபின் கிடைக்கும் மகத்துவத்தையும் உள்ளடக்கியும், கடந்தும் இயங்கும்
உயர் நிலைகள். அவற்றில் எது முதலில் வரும் என்று சொல்ல இயலாது. மனம்
இல்லாமல் சித்தம் இல்லை; சித்தம் இல்லாமல் சேதனம் இல்லை; சேதனம் இல்லாமல்
பிரஞ்ஞை இல்லை; பிரஞ்ஞை இல்லாமல் நிறைவாழ்வே இல்லை என்றால் அது
மிகையாகாது. அது மோனம் என்ற உச்சியை தொடவும் இல்லை. மோனம் பற்றிய
மேற்கத்திய சிந்தனைகள் அறிய ஆல்டோஸ் ஹக்ஸ்லீ என்ற சிந்தனையாளரின்
‘Perennial Philosophy’ படிக்க வேண்டும். அது முக்காலும் முச்சூடும்
ஹிந்து சனாதன கோட்பாடு என்பதால், முனைவர் பீ.டீ.ராஜுவின் ‘வேதாந்த
சித்தாந்தங்களும்’, ஜோசஃப் காம்ப்பெல்லின் மறை பொருள்
வ்யாக்யானங்களுக்குச் செல்ல வேண்டும். அதற்கெல்லாம் எப்போது காலம் வருமோ,
யான் அறியேன்.
அந்த சேதனா/ பிரஞ்ஞைக்கு ‘ஈகோ‘ எனப்படும் சுயமரியாதை கிடையாது.
‘நல்வழிக்கு ஒரு கையேடு‘ என்ற நூலில் Jean Paul Sartre இது சம்பந்தமான
ஆத்மவிசாரணை சிக்கல்களை அவிழ்க்க மிகவும் பிரயாசை
எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் empirical ego என்று சொல்வது சேதனா
என்றும், அவர் transcendental ego என்று சொல்வது பிரஞ்ஞை என்றும்
எனக்குத் தோன்றுகிறது. மற்றவர்கள் விளக்கம் அளித்தால்,
நன்றியுடையவனாவேன். அவர் “accessory reflection.” என்ற சொல்லை
புகுத்தியுள்ளார். ஆம். அதுவும் சரி தான். இந்த சேதனா ஒரு புழு. அது
பிரஞ்ஞை என்ற பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன் இந்த “accessory
reflection.” என்ற ‘ஊசலாடும் கருத்தரங்கம்’ தேவைப்படுகிறது. இல்லையெனில்,
அவரவர் செயல்களுக்கு மானசீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதிலிருந்துத் தப்பி விட
சாத்தியமாகிறது.
Jean Paul Sartre நம்மிடமிருந்து நாம் தப்பிச்செல்வது எப்படி என்பதை
விவரித்துத்தான் Authenticity என்ற கருத்தை விளக்குகிறார். ‘நான்’ என்ற
தன்மையிடமிருந்து விலக வேண்டும் என்கிறார். அது ஒரு விடுதலை என்கிறார்.
அந்த கருத்தை விளக்க, ipseity என்ற சொல்லைப் புகுத்துகிறர். அதுவும் ஒரு
விதத்தில் சுயம் தான். தனக்குத் தானே அளித்துக்கொள்ளும் மரியாதையை
விலக்கிய சுயபாவம் தான் ipseity. இதை புரிந்துகொள்வது எளிது அல்ல.
சுகபிரம்மரிஷியை நினைத்துக்கொண்டால், ஓரளவு புரியலாம். இந்த சுயபாவம்
தான் படைபாற்றலையும், சத்தியமான விடுதலையையும், தாராள மனப்பான்மையையும்
அளிக்கிறது என்பது அவருடைய கூற்று. அது தான் Authenticity. அது ஒரு
மெருகேற்றிய சிந்தனை மட்டுமே. அதில் ஆழ்ந்த சிந்தனை இல்லை என்று
சொல்பவர்களும் உண்டு. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், அது ஒரு
பட்டிமன்ற விவாத அணுகுமுறை மட்டுமே. சிந்தித்துப் பார்த்தால், அது ஒரு
வாழ்நெறி என்பது புலப்படும் என்பதற்கு, நான் பட்ட பாடு நல்ல உதாரணம்.
அந்த புத்தகம் வாங்கியதில், கையில் இருந்த காசு காலி. அடுத்த வேளை
சோற்றுக்கு வழியில்லை. ஆனால், Jean Paul Sartre என் முழுமனதையும்
ஆக்ரமித்துக்கொண்டார். அவருடைய Authenticity சிந்தனைகள், சேதனா, பிரஞ்ஞை
ஆகியவை தான் என்னை தத்துவ விசாரணையில் ஆழ்த்தியது. லெளகிக உலகில் அந்த
விசாரணை மிகவும் உதவியது. ஒரு தேர்வின் போது நேர்காணலில் அளவளாவிய
விஷயங்களுக்கு இவை தான் எனக்குத் துணை. வெற்றி கிடைத்தது. என் இலக்கு
நோக்கி வாழ்வியலை அமர்த்திக்கொள்ள முடிந்தது. அது பழைய கதை. இன்றளவும்
அந்த நான்காவது ராஜபாட்டையில் நடப்பது மனதுக்கிசைவாக இருக்கிறது. ஆக
மொத்தம் ஆத்மவிசாரணை நல்லதொரு பாதை.
எந்த அளவுக்கு இம்மாதிரியான கட்டுரைகளை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என்று
தெரியவில்லை. அடுத்தப்பக்கத்தில் தடம் மாறும்.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

உசாத்துணை:
http://www.jeanpaulsartre.org/index.html
நன்றி: அதீதம் March 18 03 2013:
http://www.atheetham.com/?p=4252

பழமைபேசி Mon, Mar 18, 2013 at 11:45 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
விடுப்பு நாளில்தான் இருந்து படிக்கணுமுங்க ஐயா. வாசித்தால் மட்டும்
போதாது என்பதால்!!

On Mar 18, 5:17 am, "Innamburan S.Soundararajan"
[Quoted text hidden]
--


Innamburan S.Soundararajan Mon, Mar 18, 2013 at 11:47 PM
To: mintamil@googlegroups.com
ரைட்டு, தம்பி.
[Quoted text hidden]

sk natarajanWed, Mar 20, 2013 at 1:38 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
அருமையான பகிர்வு ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

2013/3/18 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
இன்னம்பூரான் பக்கம் – 13

வித்யாசாகர் Wed, Mar 20, 2013 at 8:59 PM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
//நான்’ என்ற தன்மையிடமிருந்து விலக வேண்டும் என்கிறார்.

அது ஒரு விடுதலை என்கிறார்.
தனக்குத் தானே அளித்துக்கொள்ளும் மரியாதையை
விலக்கிய சுயபாவம் தான் ipseity.
அது ஒரு
மெருகேற்றிய சிந்தனை மட்டுமே. சிந்தித்துப் பார்த்தால், அது ஒரு
வாழ்நெறி என்பது புலப்படும் என்பதற்கு, நான் பட்ட பாடு நல்ல உதாரணம்//

தாரணம் சொல்லி எழுதுங்கள் ஐயா. இதுபோல் எழுதுவது அழியாநிலையைக் கொண்டது. யாருக்குள்ளேனும் ஒரு வரி, ஒரு வார்த்தை பற்றிக்கொண்டு எரியும். பீறிடும் வெளிச்சத்தைக் காட்டும் சிறு துவாரம்போன்ற வார்த்தைகளுக்கு அந்த துவாரத்தின் வழியேத் தெரியும் அகண்ட வானம்' வண்ணமய உலகத்தைப் போல' பல அர்த்தங்கள் கிடைக்கலாம். அதற்கான சிறுகீற்றுகளை வார்த்தைகளின் வழியே பட்டுத் தெரிக்கச் செய்யுங்கள். உங்களின் வழ்பனுபவத்தின் வழியேப் பேசுங்கள். இன்னும் எளிமையாகப் புரியவரும். எங்களுக்கும் வழிகாட்டும். உடல்நலம் இடம் தருமெனில் நிறைய எழுதுங்கள். நன்றியாயிருப்போம்..

உடல்நலத்திற்கும் நிறைய வேண்டிக்கொள்கிறோம்..

வணக்கமும் அன்பும் ஐயா...

வித்யாசாகர்




Innamburan S.Soundararajan Wed, Mar 20, 2013 at 10:40 PM
To: 
Cc: vallamai@googlegroups.com, mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள்
உங்கள் அன்புக்கு நன்றி, வித்யாசாகர். இன்று மத்தியானம் என் மகனுடன்
அளவளாவும் போது, 'நான்' என்ற தன்மையிலிருந்து நான் முற்றிலும் விலக
முடியவில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது. நான் ஒரு சராசரி பலவீனமான
மனிதன்.


இந்த நான் ‘விலகும்’ தன்மை 'அடாது மழை பெய்தாலும் விடாது நடைபெறும்'
நிகழ்வு எல்லாருடை வாழ்விலும். விலக முயற்சி செய்வதிலேயே வாய்மை
திகழ்கிறது. நீங்கள் கேட்டதினால் இந்த மேற்கோள் என்னை உசுப்பிய நிகழ்வு
ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். என் தம்பிக்கு 30 வருடங்கள் முன்னால்
சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடைந்தன. உடன் பிறந்தவர்கள் குறைவில்லை
என்றாலும், 50 வயது ஆன நான் தானம் செய்தால் தான் உண்டு என்ற நிலை. என்
மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. மகவுகள் தலையெடுக்க வில்லை. டாக்டர் ஒரு
வாய்மை மனிதர். உன் உயிருக்கும் ஆபத்து உண்டு என்று திட்டவட்டமாக
சொல்லிவிட்டார். அவருடைய சொல்,' உன் உடலுக்கு, எங்கள் கத்தியும் ஒன்று
தான். பிச்சுவாவும் ஒன்று தான். உனக்கு ஏற்கனவே நீரழிவு வியாதி....'.
ஆகவே அச்சம் மேலோங்கியது. என் நலம் பேணுபவர்கள் யாவரும் எதிர்த்தனர்.
இந்த சூழ்நிலையில் எப்படியோ நடந்து முடிந்தது, வெற்றிகரமாக. இன்று அந்த
தம்பி இவ்வுலகில் இல்லை என்றாலும், நடந்தது வாய்மைக்கும் ஒரு பரிக்ஷை.
சிறுநீரக தானம் ஒரு தொடர்கதை. மருத்துவ அறிவுரைப்படி அவ்வப்பொழுது என்
ரத்தத்தை மூன்று முறை, சில மாதங்களுக்குள் செலுத்தி, அவனுடைய உடலை
பழக்கப்படுத்த வேண்டும், முறையாக செய்தால். அதற்கு நான்
அஹமதாபாத்திலிருந்து சில இரவுகளில் சென்னை  வந்து கொடுத்து விட்டு, உடனே
திரும்பினால் தான், என் குடும்பத்தை கவனிக்க முடியும். அப்படி வரும்போது
எல்லாம் தனிமை. எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று தோன்றும். வாய்மை என்ற
சொல்லை authenticity என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

அன்புடன்,

இன்னம்பூரான்
20 03 2013

http://innamburan.blogspot.co.uk

வித்யாசாகர் Thu, Mar 21, 2013 at 2:03 PM
To: "Innamburan S.Soundararajan"
Cc: vallamai@googlegroups.com, mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
ல்லவராய் வாழ்தல் ஒரு சுகம் ஐயா. உண்மையாய் இருக்கையில் சூழ்நிலைக்காட்பட்டு விழும் ஒரு துளி கண்ணீரும் கடலின் கனத்தைக் கொண்டதாயிருக்கிறது. மனதில் உறையும் பெருந்தன்மை ஆத்ம சாந்தியை பெறுக்கிவிடுகையில் காணும் உலகம் மிகச் சிறியதாகிப் போகிறது. ஒரு ஆன்மாவாக நாம் உலக ஜீவராசிகளிலெங்கும் வியாபித்து நிற்குமொரு பெருமனசு பரமசுகத்தின் பாடுபொருள். அது எல்லோருக்கும் அத்தனை வாய்த்துவிடுவதில்லை. உங்களுக்கு நிறைய வாய்த்திருப்பதை அந்த ரயில் பயணத்தின் தனிமைகள் சன்னலோரம் பார்க்குமந்த சோகப் பார்வையுள் பொதித்திருப்பதை அறிந்திருப்பீர்களோ. நான் அறிகிறேன். இம்மடலை படித்தோர் அறிந்திருப்பர். மனதிற்குள் நம் நட்புறவுகள் அனைவருக்கும் ஒரு பிரார்த்தனை கசிந்திருக்கும்...

கடவுள் புரிந்துகொள்வார் ஐயா..

வித்யாசாகர்
2013/3/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்: 
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழைமாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

No comments:

Post a Comment