Thursday, March 21, 2013

அன்றொருநாள்: மார்ச் 21 சட்டதிட்டம்




அன்றொருநாள்: மார்ச் 21 சட்டதிட்டம்
7 messages

Innamburan Innamburan Tue, Mar 20, 2012 at 6:08 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 21
சட்டதிட்டம்
உன்னதமான ராஜாங்கத்தை ராமராஜ்யம் என்பார்கள். அங்கே தர்மம் தலை காக்கும். நியாயம் தர்மதேவதையின் கிருபை. சட்டத்தின் முக்கண்கள் நியாயத்தின் ஊழியர்கள். அவையாவன: இயற்றிய சட்டம் (Statute), ஆளுமையின் விதிகள் (Subordinate legislation), நீதிமன்றத்தின் தீர்வுகள் (Super-stare decisis/Precedent/Judge-made law). மூன்றும் ஒருமைப்பாடுடன் இயங்குவது தான் சட்டம். இன்று நான் வேறொரு சமாச்சாரத்தைப் பற்றி எழுதுவதாக இருந்தேன். மற்றொரு இழையில் நீதிபதி சந்துரு அவர்களின் தீர்வு ஒன்றை பற்றி விவாதிக்கப்பட்டது. அதில், நான் மதிக்கும் சான்றோர்களில் ஒருவர் கூறினார், ‘... தீர்ப்புகளை அரசே மதிப்பதில்லை.  மக்கள் மதிப்பது என்பது எங்கே... சட்டம் புத்தகத்தில் கிடக்கும் சவமாக.’. மற்றவர்,’அக்ரமம் கண்டால், தட்டிக் கேட்க  மனிதர்களுக்கு தைரியம் வராதவரையில்  சட்டங்கள்  வெறும்  காகிதங்களே’ என்றார். இந்த கருத்துக்கள் எனக்கு வியாகூலத்தை அளித்தன. ஏனெனில்,  அவை கசப்பான யதார்த்த உண்மைகளின் பிரதிபலிப்பு. பொது மக்களுக்கு சட்டத்தின் மேற்படி மூன்று பிரிவுகளின் நுட்பங்களை பற்றிய விழிப்புணர்ச்சியும், சட்ட நிர்வாகத்தின் மேல் மக்களின் மேலாண்மையும், நீதி மன்றங்கள் தாமதத்தை தவிர்ப்பதும் தான் மக்கள் நலத்துக்குக் கவசம். அத்தகைய கவசம் அளித்தவர்கள் எல்லாம் சர்வாதிகாரிகள் என்ற விந்தையும் வரலாற்று உண்மை.

விதுர நீதி ஒரு தர்மசாத்திரம். ஒரு இக்கட்டான அதர்ம நிகழ்வு போது, அது செல்லாக்காசாயிற்று. பேயரசு புரிந்ததால், சாத்திரங்கள் பிணம் தின்றன. சாணக்யர் இயற்றிய அர்த்த சாஸ்திரம் ஒரு அரசு நிர்வாக கையேடு. அது பற்றி எழுத பல அரிய விஷயங்கள் உளன. பிறகு பார்க்கலாம். அதனுடைய திட்டவட்டமான சட்டதிட்டங்கள் எப்படிப்பட்ட அரசுக்கும் உதவும். ரோமானியர்களின் சட்டம் சார்ந்த அணுகுமுறை நிகரற்றது. அதனுடைய சூழ்நிலை முற்றிலும் யதேச்சாதிகாரம். ஹுமாயுனை தூக்கியடித்த ஷெர்ஷா சூரி ஒரு அருமையான சட்டதிட்டத்தை ராஜ்யபாரத்தின் அடித்தளமாக அமைத்தார். முகம்மது பின் துக்ளக் கூட சட்டநிர்வாகத்தில் தவறு இழைக்கவில்லை. மார்ச் 21, 1804 அன்று நான்கு பகுதிகளில் 2281 ஷரத்துக்களை உட்கொண்டு பிரகடனம் படுத்தப்பட்ட சட்டபுத்தகம் பற்றி எழுதுவதற்கு, இத்தனை பீடிகை.

அது பொருட்கள், மக்கள், சொத்து, சட்டத்தின் அணுகுமுறை எல்லாவற்றையும் தெளிவாக விளக்கிற்று. அதை நாட்டை ஆளும் சாத்திரமாக படைத்தவர், ஒரு மாவீரர். ‘என்னுடைய நாற்பது போர்க்களங்கள் ஒரு பொருட்டல்ல; வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்து போகும். ஆனால் என்னுடைய சட்டப்புத்தகம் அழியா வரம் பெற்றது.’ என்றார், அவர். அது மிகையல்ல.

பல வருடங்களாக உழைத்து பதப்படுத்தப்பட்ட அந்த பிரகடனத்தின் அடித்தளம்:
  1. மனிதனின் இயல்பான உரிமைகளுக்கு முன்னுரிமை; ஏனெனில் மற்றைதை விட அவை தான் உயர்ந்தவை.
  2. உன்னிப்புடன் சட்டம் இயற்றப்படவேண்டும். வாய்மை ஒன்றே. அதற்குள் பிரிவுகள் காணக்கூடாது என்ற கவனம் வெளிப்படையாக தெரியவேண்டும்.
  3. எளிமை. சட்டம் பாமரனுக்கும் புரியவேண்டும். யோக்கியஸ்தர்களுக்கு ஆயிரம் சட்டங்கள் தேவையில்லை.
நான்கு முறை திருத்தியமைக்கப்பட்ட இந்த சட்டப்புத்தகம், மேஜராவது, திருமணம், விவாகரத்து, மரணம் ஆகியவற்றை பளிங்கு நீர் போன்ற தெளிவுடன் கையாளுகிறது.பெற்றோர்களின் உரிமை, கடமை இரண்டையும், சுற்றி வளைக்காமல், பட்டியலிடுகிறது. குழந்தைகள் நாட்டின் பொக்கிஷம் என்கிறது. சொத்துபத்துக்கள், விற்பனை, உயில், குழந்தைகளுக்கு சமபங்கு, கொஞ்சம் சுய உரிமை எல்லாம் இடம் பெறுகின்றன. சுருங்கச்சொல்லின், எல்லா சட்டங்களும், விடுதலை உரிமை, சொத்துரிமை, ஒப்பந்தமிடும் உரிமை, இவை மூன்றையும் அடைத்தளமாக வைத்தவை எனலாம். விவாதபுலிகளும், தர்க்கவாதிகளும் முடிவுக்கு வராமல் ஜவ்வுமிட்டாயாக இழுத்தடிப்பதைக் கண்ட அந்த மாவீரர், சட்டமன்றத்லைவர் கம்பாசெரஸ் அவர்களிடம் சொன்னார், ‘பல தடவை எல்லாம் அடித்துத் திருத்தியிருக்கிறீர்கள். ஒரே ஒரு தடவை எல்லாவற்றையும் சீர் தூக்கி, சட்டப்புத்தகத்தை பிரகடனம் செய்யும் வழியை பாருங்கள். இதற்கு ஒரு கமிட்டி அமைப்போம். தகுதியுள்ளவர்களின் பெயர்களை சொல்லுங்கள்.’ நான்கு பேர்கள் உள்ள கமிட்டி ஒன்று, ஆகஸ்ட் 12, 1800 அன்று அமைக்கப்பட்டது. இப்படித்தான், இன்றளவும் போற்றப்படும் சட்டபுத்தகம் ஃபிரான்ஸ் நாட்டில் 13 வருடங்கள் விவாதம் நடந்தபின், மார்ச் 21,1804 அன்று பிரகடனம் செய்யப்பட்டது. இதன் வெண்கொடை படைப்பாளர், நெப்போலியன் போனபார்ட்டே,, தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்ட சக்ரவர்த்தி. அவரை பற்றி ஒரு அருமையான ‘You know, we stormed Ratisbon....’ என்ற ஆங்கிலக்கவிதை உள்ளது. அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்தக் கவிதை. அதை பற்றி தருணம் வந்தால் சொல்லலாம்.
இன்னம்பூரான்
21 03 2012
Inline image 1


உசாத்துணை:

renuka rajasekaran Tue, Mar 20, 2012 at 8:27 PM
To: Innamburan Innamburan
ஐயா 
உங்களுடைய இந்தத் தொடரை வல்லமையில் எங்கு காணுவது - அதாவது எந்தப்  பகுதியில் 

வணக்கம் 
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Tue, Mar 20, 2012 at 9:37 PM
To: 
இது வல்லமையில் வருவதில்லை, றேணுகா. இது ஜூன் 18லிருந்து  தினந்தோறும் மின் தமிழில் வருகிறது. தன்னார்வப்பணியாக, இதை பவளசங்கரி மரபு விக்கியில் இணைத்து வருகிறார். மார்ச் 9 வரை செய்துள்ளார்.
http://www.heritagewiki.org/index.php?title=பகுப்பு:அன்றொரு_நாள்

அன்புடன்,

இன்னம்பூரான்
[Quoted text hidden]

renuka rajasekaran Tue, Mar 20, 2012 at 10:49 PM
To: Innamburan Innamburan

நன்றி ஐயா 
வணக்கம்
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

s.bala subramani B+ve Wed, Mar 21, 2012 at 3:33 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் 

மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற நிலையில் 
அரசு ஊழியர்கள் என்ற மக்களால் ஏற்படுத்தப்பட்ட தணிக்கை துறையின் நிலை என்ன  
தவறுகள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன 

பொதுவான வாக்கு எடுத்து இந்த நிலையை மாற்ற முடியுமா 

என்னுடிய முயற்சிகள் கூட என்னோடிய முன்னோர்கள் உடைய சிந்தனைகளின் தொடர்ச்சி கூட என்று சொல்வேன் 

இந்திய விடுதலைக்காக தன்னுடிய உடமைகளை கூட இழந்த குடும்பத்தின் சார்பில் 

சிவ பாலசுப்ரமணி

2012/3/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan Wed, Mar 21, 2012 at 7:00 AM
To: mintamil@googlegroups.com
மிகவும் நன்றி பல. உங்களுடைய வினா முக்யமானது. அதற்கு விவரமான விடை எழுதும்போது, உங்களுக்கு தனிமடலும் அனுப்புகிறேன். உடனடி பதில். அரசாங்கம் மக்கள் நலத்தை மறந்து விடுவது அதிகாரமோகத்தினால். அது தான் ஜனநாயகத்தை யதேச்சதிகாரமாக மாற்றும் விஷக்கலவை. தணிக்கைத்துறை கரடியாக கத்தினாலும், அந்த நாடாளுமன்றம் தானே எஜமானன். அதனால் தான் தவறுகள் தொடர்கின்றன. இதை மாற்றக்கூடிய பொதுவான வாக்கு (Referendum & Recall) இந்தியாவில் கிடையாது. சில நாடுகளில் புரட்சி செய்து, மக்கள் மேலாண்மையை மாற்றி இருக்கிறார்கள்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
2012/3/21 s.bala subramani 
[Quoted text hidden]

கி.காளைராசன் Wed, Mar 21, 2012 at 7:43 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சட்டதிட்டம்
  1. மனிதனின் இயல்பான உரிமைகளுக்கு முன்னுரிமை; ஏனெனில் மற்றைதை விட அவை தான் உயர்ந்தவை.
  2. உன்னிப்புடன் சட்டம் இயற்றப்படவேண்டும். வாய்மை ஒன்றே. அதற்குள் பிரிவுகள் காணக்கூடாது என்ற கவனம் வெளிப்படையாக தெரியவேண்டும்.
  3. எளிமை. சட்டம் பாமரனுக்கும் புரியவேண்டும். யோக்கியஸ்தர்களுக்கு ஆயிரம் சட்டங்கள் தேவையில்லை.
அருமையான கருத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, எங்களுக்கு விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்.
நன்றி ஐயா,
 
ஆனால், இந்தியாவில் பெரும்பான்மையர் (கிராமங்களில் வாழ்வோர்) சட்டம் பற்றி அறிந்து கொண்டதைவிட,
பாவ புண்ணியங்களையே அறிந்துள்ளனர். அதற்கு ஏற்பவே செயல்படுகின்றனர்.
 
ஒருவனைப் பாம்பு கடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிந்தால், அவனைப் பார்த்தவன், “உன்னைக் காப்பாற்ற நான் ஒரு மருத்துவன் இல்லை“ என்று சொல்வதில்லை, அவனது சுய அறிவுக்குத் தெரிந்த வகையில் காப்பாற்றவே முற்படுவான்.  அவனது செயல்கள் சட்டப்படி தவறாகக் கூட இருக்கலாம்.  ஆனால்
“அல்லவை தேய அறம் பெருக நல்லவை நாடிய“ செயல்களாக இருக்கும் என்பது எனது எண்ணம்.
 
அன்பன்
கி.காளைராசன்

No comments:

Post a Comment