அன்றொருநாள்: மார்ச் 24
‘மஜிஸ்டர் லூடி’ (குருப்யோ நம:)
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
—(கூத்தநூல் - தோற்றுவாய்)
யாமொன்று நினைக்க, சிந்தனை எங்கெங்கேயெல்லாம் இழுத்தடிக்கிறது. ‘மனதே’ என்றேன்: -தீக்ஷிதர் ~மும்மூர்த்திகள் ~கர்நாடக சங்கீதம் ~இசை ~அரங்கேற்றுக்காதை ~வி.கே.நாராயணமேனன் ~ கூத்தநூல்~Ludwig Pesch எழுதிய கர்நாட்டிக் ம்யூசிக்ஆய்வு~ Magister Ludi ~Nils L. Wallin, Björn Merker, and Steven Brown ஆகியோர் எழுதிய ‘இசையின் மூலம்’ ~~~ என்னது இது? மைண்ட் மேப்பிங்?/மைண்ட் அலைச்சல்? ஹெர்மன் குண்டெர்ட் என்ற ஜெர்மானியர் ஒரு மலையாள புலவர். அவருடைய மருமானும், பிரபல நாவலாசிரியருமான ஹெர்மென் ஹெஸ், இந்திய கலாச்சாரத்தையும், தத்துவத்தையும் போற்றுபவர். Magister Ludi ("The Master Player") என்று அவர் எழுதிய நூலுக்கு நோபெல் பரிசு கிடைத்தது. அதில் அவர் சொல்கிறார்:
“...என் வாழ்க்கை, பல இலக்குகளை தாண்டியபடி, ஊர்வலம் சென்றபடி இருக்கவேண்டும். எப்படி தெரியுமோ? சங்கீதம் மாதிரி. ஒரு சங்கதி ~ ஒரு படி ஏறிய சங்கதி; ஆரோஹணம் ~அவரோஹணம்~ ஆரோஹணம்..., பிர்காவிலிருந்து பிர்கா...~ ஸ்வரம் பிசகாமல் ~சதா ஸ்மரணை~ ஆலாபனை ~ நிரவல் ~ இங்க்லீஷ் நோட் எப்போதும் நிகழ்காலம்...” ( மொழியாக்கம்ம்பொறுப்ப்உ எனது)
ஒரு பாடாக, அது என்னை முத்துஸ்வாமி தீக்ஷிதர்வாளிடம் கொண்டு வந்து சேர்த்தது. ‘மனதே! நீ திருவாரூர் தியாகராஜனை தியானி...’ என்று ஆனந்த பைரவியில் இசைத்து, நம்மை எல்லாம் ஆட்கொண்ட முத்துசாமி தீக்ஷிதர்வாளின் அவதார தினம் இன்று: மார்ச் 24, 1775. 1835ம் வருட தீபாவளி விழா, அக்டோபர் 21, 1835. அன்றைய தினம், வழக்கம் போல் விஸ்தாரமான பூஜை, புனஸ்காரம் எல்லாம் முடித்து விட்டு, சிஷ்ய கோடிகளை, பூர்வீகல்யாணியில் ‘மீனாக்ஷி மே...‘ பாடச்சொன்னார், இந்த ‘குருகுஹ’ இலச்சனை பதித்த தீக்ஷிதர்வாள். ‘மீனலோசனி,...‘ என்ற வரி வந்தவுடன், கையை உயர்த்தி, ‘சிவ பாஹி‘ என்றார், இந்த ஞானமார்க பக்திமான். ஆத்மா விமோசனம் ஆயிற்று. அவருடைய சமாதி எட்டையபுரத்தில் இருக்கிறது. எண்ணங்களின் ஊர்வலம் -1 என்ற கட்டுரையில் (30 09 2009) நமது ஸுபாஷிணி எழுதியது: ‘... எட்டயபுரம் ஆஸ்தானத்திற்கு நிறைய சங்கீத வித்வான்கள் உண்டு. ஆனால் அங்கேயே தங்கியிருந்தவர்களில் முக்கியமானவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் தம்பியான பாலுசாமி தீக்ஷிதர். தம்பி வாழ்ந்த இடத்திற்கு அண்ணனும் வந்தார், வாழ்ந்தார், மறைந்தார். முத்துசாமி தீக்ஷிதருக்கும் நினைவு மண்டபம் இருக்கின்றது. பாரதியின் நினைவு மண்டபத்திற்குக் கொஞ்ச தூரத்திலேயே இதுவும் அமைந்துள்ளது...’
எனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருக்கிறது. அபூர்வமான உசாத்துணைகள், சொல்லி வைத்தாற்போல், ‘அப்பா! இங்கு வந்து மொண்டுக்கோ. அமுதகலசம் கொண்டு வந்திருக்கிறேன். நிறைகுடம். எடுத்துக்கோ. வாரி, வாரி, எல்லாருக்கும் கொடு’ என்கிறது.
எனவே, நண்பர்களே!, நேராக உசாத்துணைக்குப் போய், 1936ல் நாகஸ்வர வித்வான் திரு. நடராஜசுந்தரம் பிள்ளை எளிய ஆங்கிலத்தில் எழுதிய “தீக்ஷித கீர்த்தன பிரகாசிகையை படியுங்கள். எனக்கு, அவரை விட சிறப்பாக எழுதத் தெரியாது.
டாக்டர். வி.ராகவன் அவர்கள் அளித்த புகழ்மாலையையும் படியுங்கள்.
[TRANSLATION: He who received the boundless Grace of Lord Subrahma- n. ya, the One who revealed the meaning of Pran. ava; he who attained immortality by bestowing his timeless compositions, the life blood of our karn. a ̄tik music; he who became the soul of the very spirit of Music; he who by his sporting acts and deeds, showed us the essence of that spirit of Music — let him, the revered Muddusva ̄mi D ̄ıks.itar, confer his benign blessings on us!]
உங்களுடைய நாதோபசனைக்கு குறுக்கே வர விரும்பாத,
இன்னம்பூரான்
24 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment