|
சிந்தனை சிந்திய சிரிப்பு!
|
|
2010.10.09.
|
‘சிந்தனை சிந்திய சிரிப்பு’ என்று என் குடும்ப நண்பர் திருமதி. சாரதா தொடங்கிய இழை, இது. என் பயணம் உள்ளது. அதனால் தான் இங்கே.
----- Forwarded Message ----
From: Radha Viswanathan
To: sharadha subramanian
Sent: Wed, 6 October, 2010 12:32:35 AM
Subject: sindanai sindhiya sirippu
ப ண் - பா டு
இரயிலில் நீண்ட தூரப் பயணம் என்பது முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஜாலியான
விஷயம். நான் கீழ் தட்டுப் படுக்கைக்கு விருப்பம் தெரிவித்தாலும் எனக்குக்
கிடைப்பது என்னவோ உச்சிப் படுக்கைதான்.
சில சமயம் அபூர்வமாகக் கீழ்ப்படுக்கை கிடைப்பதுண்டு. அப்படிக் கிடைத்தாலும் பயணம்
செய்யும் போது பக்கத்துப் பயணியோடு நிச்சயமாக ஒரு வயதான தாயார் அவசியம் வருவார்
அல்லது ஒரு குண்டான மனைவி வருவார். அப்புறம் என்ன, விட்டுக் கொடுத்தல்தான் என்
இலட்சியம் ஆயிற்றே.
கீழ் பெர்த்துக்கும் எனக்கும் எப்பவுமே இராசி இல்லை. யாரும் விரும்பாத மேல் பெர்த்
எப்பவும் எனக்கு சாஸ்-வதம். அதில் தூங்கத் தனிப் பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள்
சிறுவயதில் சிற்றூர்ப் புறங்களிலே பிறந்திருந்தால் உங்கள் ஊரில் சுண்ணாம்புக்
காளவாய் பார்த்திருப்பீர்கள். இப்போது உள்ள பசங்களுக்குத்தான் இது தெரியவில்லை.
செம் டிஸடம்பர் எமல்ஸன் என வந்து விட்டதால் யார் சுண்ணாம்பு அடிக்கிறார்கள் ?
அந்தச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் உட்கார்ந்து பார்த்தால் எப்படி வேகுமோ அப்படி
வேகும் அந்த மேல் பெர்த். காற்றாடி போட்டாலும் காற்று நமக்கு வராமல் கீழ்
படுக்கைக்கு ஏக போகமாய்ப் போகும். அப்போது பார்த்து கீழே சக பயணியின் தாயாருக்குக்
குளிர் எடுக்கும். உடனே அவர் பேனை ஆப் செய்ய நமக்கு வெளிக் காட்ட முடியாத கோபம் ஆன்
ஆகும். சிவனே என்று படுக்கலாம் என்றால் கக்கூஸ் போகும் இன்னொரு பயணியின் தலையில்
என் கால் இடிக்கும். அப்புறம் அர்ச்சனைதான்.
சிவனே என்று படுத்தேன் என்றேனே தேவைதான். சரி உடகாரலாம் என்றால் தலை இடிக்கும்.
அடிமைப் பெண் எம்ஜியாரை விட மோசம் போங்கள். தூங்க யத்தனித்தால் கொசுப்படை அப்பும்.
ஓங்காரமிடும். சிவன்-சுண்ணாம்புக் காளவாய்- ஓங்காரம்—வெப்பு—என வரிசையாக யோசிக்கும்
போது அடுத்த பொருத்தமான வார்த்தை எது என்று நீங்கள் யூகித்திருந்தால் பக்தி
இலக்கியத்தில் நீங்கள் பாஸ்.
அந்த அடுத்த வார்த்தை திருநாவுக்கரசர். மகேந்திர வர்ம பல்லவன் சமணர்களில் போதனையால்
திருநாவுக்கரசரை இப்படித்தால் சுண்ணாம்புக் காளவாயிலிலே வேகும்படி நீற்றினான்.
நாவுக்கரசருக்கு வெப்பம் தாக்கவில்லை. அவர் சிவனே என்றார். திரு வடி நீழலாய்
குளிர்ந்தது காளவாய்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டுறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணை அடி நீழலே
நானும் மேல் பெர்த்தின் வெப்பம் தாளாமல் மாசில் வீணையும் பாடிப் பார்த்தேன். வேர்வை
கொட்டியது கீழே . சக பயணி கீழே எதுவும் தப்பாக நினைக்காமல் இருக்க வேண்டும் கடவுளே.
படுத்துக் கொண்டிருக்கும் போது கற்பனை சிறகடிக்கும் எனக்கு. அன்றும் அடித்தது.
எனக்கு அப்போதுதான் புரிந்தது இந்த மேல் பெர்த்துக்கு ஏன் அப்பர் பெர்த் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள் என்று. இந்தக் கடைசிவரி உங்களுக்கு விளங்கிக் கொள்ள
ஏலவில்லை என்றால் பக்தி இலக்கியத்தில் நீங்கள் பெயில்.
பெயிலாகி அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் மேலே படிக்கலாம், கடைசி வரி என்னவென்று
விளங்கிக் கொள்ள. நேற்று ஞாயிற்றுக் கிழமை சன் தெலைக் காட்சியில் இரம்யாக்கி
(இராமகிருஷ்ணனை இராம்கி என்று சொல்லும் போது . . . ) தத்த தத்தத் தங்க வேட்டை.
மேசையில் கோப்பை நிறையத் தங்க நாணயங்களுடன் நடுவே இரம்யாக்கி. இருபுறமும்
போட்டியாளர்கள்.
இரம்யாக்கி கேட்டார். ‘ அப்பர் என்பது யாருடைய பேர் ? ‘
A) திரு ஞான சம்பந்தர்
B) திரு நாவுக் கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்க வாசகர்
முதற் போட்டியாளர் ஒரு நடுத்தர வயது பெண். அவருக்கு விடை தெரியவில்லை என்றாலும்
விடையைக் கேள்வி போலச் சொன்னார்.
‘ மாணிக்க வாசகர் . . ?’
இந்தப் பதிலைத் தப்பாகச் சொன்னவர் முதற் போட்டியாளர். ஒரு முஸ்லீம் பெண்மணி. எனவே
என்னதான் தப்பாகச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இரண்டாவது போட்டியாளர் முறை வந்த
போது, அவர் ,
‘ சுந்தரர்ர்ர்ர்.... என இழுக்க நொந்தேன். அப்பருக்கு அன்று வந்த காளவாய்,
ஆனைக்கால் அடி, கடலில் ஆழ்த்தல் முதலிய எல்லாச் சோதனைகளையும் விட இன்றுதான் நிசமான
சோதனை.
இரண்டாவது போட்டியாளர் ஒரு இந்து. அதைவிடப் பணி ஓய்வு பெற்ற நரைத்த தலை. அதுதான்
எனக்குப் பொறுக்க முடியவில்லை. சின்னப் பையன்கள் என்றால் இந்தக்கால ப்
பாடத்திட்டங்களின் சாபக்கேடாய் தெரியாதிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் எனக்கும் மூத்த
ஒரு தலைமுறை திணறியது எனக்கு சாடும் கோபத்தை உண்டு பண்ணியது. அதெப்படித் தெரியாது
போகலாம். நாலில் ஒன்றைத் தெரிந்தெடுக்கச் சொன்னதால் சுந்தர ர்ர்ர்ர்ர். வெறுமனே
கேட்டிருந்தால் UPPER என்று ஸபெல்லிங் சொல்லியிருப்பார்.
‘ ஒரு இனத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழி.
அப்புறம் அதன் பண்பாட்டை அழி ! ‘
சொன்னவன் எவன். ? அவன் வாய்க்குள் போட ஒருகிலோ சர்க்கரை
அடுத்தமாதம் கூடவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதுதானே இப்போது நம் நாட்டில்
நடந்து கொண்டிருக்கிறது. எது எது தெரியவேண்டுமோ அது தெரியவில்லை. தெரியக்கூடாதது
எல்லாம் நிறையவே.
இளைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரியவில்லையே என்று நான் நிச்சயம் கவலைப் படப்
போவதில்லை. படுவது என் வேலையும் இல்லை. என் கவலை எல்லாம் இந்த மூமூத்த தலைமுறை
இப்படித் திரிகிறதே என்றுதான். யார் இவர்கள் ? பிறருக்குச் சொல்லித்தர
வேண்டியவர்கள். பாதை காட்ட வேண்டியவர்கள். கண்களைக் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
இன்னும் இரண்டு வருடத்தில் பணி ஓய்வு பெறப் போகும் அன்பர் என்னிடம் பேசிக்
கொண்டிருந்தார். எப்பப் பார்த்தாலும் தன் பேரனைப் பற்றியே பீற்றிக் கொண்டிருப்பார்.
‘ என் பேரன் சார், - அப்படிப் போடு போடு போடு தன்னாலே—என்று பாடினாத்தான்
தூங்கறான். இதுக்காவே ஒரு விஜய் ஹிட்ஸ் வாங்கி வைத்து இருக்கேன் ‘
செல்லப் பேரன் இந்தப் பாட்டுத்தான் போடு என்று கேட்டானாக்கும். அவன் இன்னும் பேசவே
ஆரம்பிக்கவில்லை, இவர் மகள் பேரனைச் சுமந்த போதே இந்தப் பாட்டை ஓயாமல்
கேட்டிருப்பாள். பாத்திரம் கழுவும் போது கூட—அப்படிப் போடு போடு—என்று
போட்டிருப்பள். அதனால்தான் பேரனையும் ஒருநாள் நட்சத்திரம் பார்த்துப் பூமியிலே
போட்டுவிட்டாள்.
அப்புறம் என்ன, குழந்தைக்குத் தாலாட்ட தொலைக்காட்சித் தாயார். ( கடைசி வார்த்தை
முதல் எழுத்தின் காலை எடுத்து வாசிக்கவும்.) சீராட்ட வீடியோச் செவிலி. அதனால்தான்
போடு போடு என்கிறான் பையன்.
என்ன செய்யலாம் ? பையன் கருவில் திரு உருவாக இருக்கும் போதே திருவாசகம், நா.தி.பி.
படிக்கலாம். நல்ல தமிழ் பண்ணோடு தேவாரம் கேட்கலாம். அடுத்தகட்டம். குழந்தை
பிறந்தவுடன் தாலாட்ட வேண்டுமானால் நம் இனிய தமிழ் பாடல்கள் எத்தனை உள்ளன
இலக்கியங்களில் அவற்றைப் பாடலாம் என்று சோன்னால் கேட்டுச் சிரித்தார் ஒருவர்.
‘ சார் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ‘ இது வேகமான யுகம் அவசரமாயமான காலம். நம்
பழந் தமிழ்ப் பாடல்களுக்கு எல்லாம் வேகம் பத்தாது. இதற்கு இப்போதைய சினிமாப்
பாடல்கள்தான் சரிப் பட்டு வரும் ‘என்றார். இதற்கு எல்லோரும் ஒத்துக் கொள்ளும்
படியான காரணம் ஒன்றையும் சொன்னார்.
அந்தக் காலத் தூளி, தொட்டில் வடிவமைப்பு மிக எளிமை. ஒரு கயிறு ஒரு கிளை அல்லது
கொக்கி. ஒருசீலை. அவ்வளவே. தொட்டலின் உயரத்தின்குத் தக்கவாறு பக்கவாட்டில்
ஆட்டலாம். ஆட்டலாம் என்ன, பக்க வாட்டில்தான் தொட்டில் ஆடும். ஆங்கிலத்தில் இதை TO
and FRO motion என்று சொல்வார்கள். ஆனால் காலம் நவீனமாகி விட்டது. இப்போது தூளி
வடிவமைப்பு மாறி விட்டது. பெட்டி போல வந்துவிட்டது. மேலே என்றால் ஒரு ஸ்பிரிங்க்
வேறு மாட்டிக் கொள்கிறார்கள். அன்பர் என்னிடம் இதைத்தான் சொன்னார்.
‘ சார் உங்கள் பழம் பாடல் களிலே விரைவு இல்லை. இந்தக் காலத்து சினிமாப் பாடல்கள்க்
கேளுங்கள். எவ்வளவு வேகமான இசை, அதுதான் தாலட்டச் சரி ‘ என்றார்.
சரியாய்ப் போச்சு போங்கள். எனக்கு என்ன சொல்லி இவருக்குப் புரிய வைக்க என்றே
தெரியவில்லை. புதிய தூளிகள் அதிவேகமாக மேலும், கீழும் குதித்து ஆடும் என்பது
உண்மைதான். அதற்கு அப்படிப் போடு போடு—முதலிய பாட்டுகள் இசைவாக உள்ளன என்தும்
மறுக்க இயலாத உண்மைதான். ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்தத் தூளிகள் மேலும் கீழும்
மட்டுமல்ல, பக்க வாட்டிலும் ஆடும் . எனவே அதற்குத் தகுந்த பாட்டும் படிக்கலாம்.
‘ மாணிக்கம் கட்டி
வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன் னால்செய்த
வண்ணச் சிறு தொட்டில்
பேணி யுனக்குப்
பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ . . .
வையம் அளந்தானே. . .’
என்று தொடங்கி பத்துப் பாட்டையும் படித்துத் தாலாட்ட நீங்கள் ஒன்றும் பெரியாழ்வாராக
இருந்தால் மட்டுமே முடியும் என்று சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
உங்களுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான். ஆண்டாள் கோதைக்கு இப்பாக்கியம்
தந்தைவாயிலாக்க் கிட்டியது.
இப்படித் தாலாட்டிப் பாடும் தமிழ்க் குடும்பங்கள் இருந்தால் அவர்கள் உள்ள திசைக்கு
ஆயிரம் தெண்டனிட்டு வணங்கி மகிழ்வேன். பிறந்த குழந்தைகள் களிமண்கள். நீங்கள்
உருவாக்கும் வடிவமைப்புக்குக் காத்திருக்கின்றன். சாத்தானாகவும் உருவாக்கலாம்.
சரித்திர புருஷனாகவும் உருவாக்கலாம். இனி எல்லாம் உங்கள் கையில்.
இன்றையக் குழந்தைகள் கண்ணனாக உங்கள் வீட்டில் என்றுமே தவழ இயலும். நீங்கள்தான்
பெரியாழ்வாராகத் தயாராக இல்லை. தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டே தாலாட்டினால்
யசோதைக்கு எங்கே போவான் தொட்டிலில் படுத்துத் துயில் கொள்ளும் கண்ணன்?
இன்னொன்றையும் சொல்லவேண்டும். குதி குதி எனக் குதிக்க வைக்கும் வேகமான பாடல்கள்,
பழந் தமிழில் இல்லையாம், சொல்கிறார்கள். ஆர் சொன்னது? நீங்கள் படிக்க வில்லை
அவ்வளவே. எடுத்துக் காட்டாய் எத்தனையோ என்றாலும் இரண்டு மட்டும் இங்கே.
‘ பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியின் இரவாக
பத்தர்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு இரட்சித் தருளுவ தொருநாளே . . .’
திருப்புகழ் பாடலின் ஒரு அடி மட்டுமே இது. வாய் விட்டுப் பாடிப் பாருங்கள். உள்ளே
உண்மையாகவே ஒரு புயல் இருக்கும். புயலின் கதிவேகம் இருக்கும். உங்கள் மாடர்ன்
தொட்டில் ஸ்பிரிங்க் இந்தப் பாடலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிச்சயம்
திணறும். ஸ்பிரிங்க் செய்த கம்பெனிக்கு ஒரு ஷமேயில் அனுப்பிக் கூடவே இந்தப்
பாடலையும் ஒரு அட்டாச்மெண்ட்டாக அனுப்பி வடிவமைப்பை இன்னிம் அதிஅதி
விரைவாக்குங்கள். தாளாது.
இன்னொரு திருவாசகப் பாடல். பொருள் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
வாய்விட்டுப் பாடிப் பாருங்கள். நியூட்டனின் முதல் விதியை நிரூபிக்கும்.
புரியாதவர்களுக்கு விளக்குகிறேன். பாடினால் நிறுத்த முடியால் சும்மா விடுவிடுவென்று
ஓடிக் கொண்டேஇருக்கும். எங்கே, சத்தம் போட்டுப் பாடுங்கள்.
‘ வான நாடரும் அறியொ ணாதநீ
மறைகள் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி யான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா . . .
வேண்டாம் கடைசி வரி சொல்லும் போதே மூச்சு முட்டுகிறது. மூச்சு விடாமல் பாடுவதற்கு
என்று ஏதாவதுஒருவகைப் பிராணாயாமம் பதஞ்சலி யோக சாத்திரத்தில் இருந்தால்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
எனவே பண் பாடுங்கள். உங்கள் பண் பாடுகள் அழியாமல் இருக்கப் பண் பாடுங்கள். இந்தக்
கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்த நொடியில் -அப்படிப் போடு போடு போடு
தன்னாலே-ம(றை)றந்து போய் இருக்கலாம். கேட்தில்லையே இதை, என்ன சொல்கிறான் இவன் என
விழிக்கலாம் ஆனால் நான் சொன்ன மற்ற பாடல்கள் உங்களுக்கு வேண்டுமானால் புதிதாக
இருக்கலாம் ஆனால் வருங்காலத் தலைமுறைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், நீங்கள்
படித்துக் கற்றுக் கொடுத்தால்.
வருங்கால உலகம் எங்கே என்றால் இனித் தைரியமாகக் கையை விரித்து இங்கே என்று
சொல்லுங்கள். நில்லுங்கள், எங்கே போகிறீர்கள், பிறக்கப் போகும் உங்கள் பேரனுக்குப்
பாடிக் காட்ட திருப் புகழ் வாங்கவா ?
*
அருமை !அருமை ! என்ன சொல்லியும் இவர்கள் காதில் ஏறாது
ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது
வெகுநேரமாக தாலாடிக்கொண்டிருந்த தாயிடம் குழந்தை அம்மா நான் தூங்க்கபோறேன் நீ உன் பாட்டை கொஞ்ச நேரம் நிறுத்தறையா
என்றதாம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
|
|
2010.10.09.
|
ரொம்ப ஜாலியா எழுதறாங்க..
சுவாரசியமா இருக்கு..
திவாகர்
*
அப்படிப் போடு!
இப்படியொரு எழுத்து இதுவரை கண்ணில் படவில்லையே!
அப்பர் பெர்த்தை இவ்வளவு அனுபவித்து எழுதியவர் யாரும் இல்லை. நான் அப்பர்
பெர்த்தில் படுத்தால் என் பாத தூளி பட்டு மோட்சம் போனவர்கள் அநேகம் :-))
பெர்த்தில் படுத்தால் என் பாத தூளி பட்டு மோட்சம் போனவர்கள் அநேகம் :-))
நிறைய எழுதுங்கள். பண் பாடு என்றால் என்னவென்று புரிகிறது இப்போது!!
உங்களுக்கு குரல் வளம் உண்டென்றால் உங்கள் மடலுடன் நியூட்டன் விதிப்
பாடல்களையும் பாடி இசை விருந்து தரலாம். பண் பாடு காக்கும் நம்
குழுவிற்கு மிகப் பொருந்தும் ;-)
பாடல்களையும் பாடி இசை விருந்து தரலாம். பண் பாடு காக்கும் நம்
குழுவிற்கு மிகப் பொருந்தும் ;-)
நா.கண்ணன்
2010/10/9 sharadha subramanian
*
>> ரொம்ப சுவாரஸ்யமாக ஒரே மூச்சில்..( யப்பா எனக்கும் மூச்சுமுட்டுது)படிச்சாச்சு!
மீனா
2010/10/9 sharadha subramanian
அந்தக் காலத் தூளி, தொட்டில் வடிவமைப்பு மிக எளிமை. ஒரு கயிறு ஒரு கிளை அல்லது
கொக்கி. ஒருசீலை. அவ்வளவே. தொட்டலின் உயரத்தின்குத் தக்கவாறு பக்கவாட்டில்
ஆட்டலாம். ஆட்டலாம் என்ன, பக்க வாட்டில்தான் தொட்டில் ஆடும். ஆங்கிலத்தில் இதை TO
and FRO motion என்று சொல்வார்கள். ஆனால் காலம் நவீனமாகி விட்டது. இப்போது தூளி
வடிவமைப்பு மாறி விட்டது. பெட்டி போல வந்துவிட்டது. மேலே என்றால் ஒரு ஸ்பிரிங்க்
வேறு மாட்டிக் கொள்கிறார்கள். அன்பர் என்னிடம் இதைத்தான் சொன்னார்.
‘ சார் உங்கள் பழம் பாடல் களிலே விரைவு இல்லை. இந்தக் காலத்து சினிமாப் பாடல்கள்க்
கேளுங்கள். எவ்வளவு வேகமான இசை, அதுதான் தாலட்டச் சரி ‘ என்றார்.
எழுதியது ராதாவிஸ்வனாதனா இல்லை விஸ்வனாதனா ?!
*
>>ஊனை நாடகம் <<
ஊன நாடகம் என வரும்..
திவாகர்
*
‘ ஒரு இனத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழி.
அப்புறம் அதன் பண்பாட்டை அழி ! ‘
ஒரு கிலோ சர்க்கரை அபேஸ்.
என்ன கண்ணன்? மின் தமிழில் வரலாற்று பிரிவு வராப்லெ இருக்கு.
இந்த ரயில் பயண வரலாறு ஒன்று கையில். சிரித்து மாளாது. என்னே பயன்?
சொல்லி மாளாது. உரிய காலத்தில் நேனு செப்தானு.
சொல்லி மாளாது. உரிய காலத்தில் நேனு செப்தானு.
இன்னம்பூரான்
*
அருமை......அருமை......எவ்வளவு அழகாகச் சிந்திக்கச் செய்துள்ளீர்கள்......நிறைய எழுதுங்கள்.நகைச்சுவை விருந்து........
பவளா
*
அன்பின் பவள சங்கரி,
திரு. தங்கவேலன் உங்கள் மாமனார் என்பதறிய மகிழ்ச்சி.
அவரது வாழ்க்கைக் குறிப்பு, பிறப்பாண்டு. ஊர், கல்வி,
எழுதிய புத்தகங்கள், சமயப் பணி, ... ஒரு கட்டுரை எழுதுங்களேன்.
அச்சாகாத காயிதங்கள் இருந்தால் கணியில் ஏற்றலாம்.
எழுதிய புத்தகங்கள், சமயப் பணி, ... ஒரு கட்டுரை எழுதுங்களேன்.
அச்சாகாத காயிதங்கள் இருந்தால் கணியில் ஏற்றலாம்.
அன்புடன்,
நா. கணேசன்
நா. கணேசன்
*
வணக்கம் அய்யா. மிக்க மகிழ்ச்சி. அய்யா தங்கவேலனார் குறைந்த பட்சம் 30- 40 புத்தகங்கள் எழுதியிருப்பதாக நானறிவேன். சமயப்பணி அளப்பரியது அய்யாவினுடையது.......தமிழ் அர்ச்சனை பக்தவச்சலம் அவர்கள் காலத்தில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தியதோடூ, தமிழ் அர்ச்சனைப் புத்தகமும் வெளியிட்டுள்ளார் அய்யாவின் வாழ்க்கைக் குறிப்பும், அவர்தம் சமயப் பணியும் குறித்து விரைவில் கட்டுரை சமர்பிக்கிறேன். நன்றி..
*
இது சரித்திர இழையென்று நம் இன்னம்புரான் சார் ‘சர்டிபிகேட்’
கொடுத்துவிட்டதால் சொல்கிறேன்..
தங்கவேலனாரின் நாட்குறிப்பு, கையெழுத்துப் பிரதி இருந்தால் அதையும்
மின்னாக்கம் செய்யவும். உ.வே.சா நூலகத்தில் சாமிநாதய்யரின்
உரைக்குறிப்புகள் உள்ளன.
மின்னாக்கம் செய்யவும். உ.வே.சா நூலகத்தில் சாமிநாதய்யரின்
உரைக்குறிப்புகள் உள்ளன.
க.>
2010/10/10 coral shree <cor...@gmail.com>:
> வணக்கம் அய்யா. மிக்க மகிழ்ச்சி. அய்யா தங்கவேலனார் குறைந்த பட்சம் 30- 40
> புத்தகங்கள் எழுதியிருப்பதாக நானறிவேன். சமயப்பணி அளப்பரியது
> அய்யாவினுடையது.......தமிழ் அர்ச்சனை பக்தவச்சலம் அவர்கள் காலத்தில்
> முதன்முதலில் நடைமுறைப்படுத்தியதோடூ, தமிழ் அர்ச்சனைப் புத்தகமும்
> வெளியிட்டுள்ளார் அய்யாவின் வாழ்க்கைக் குறிப்பும், அவர்தம் சமயப் பணியும்
> குறித்து விரைவில் கட்டுரை சமர்பிக்கிறேன். நன்றி.
*
இன்னம்பூரானின் ரயில் பயணமும், அதன் பலாபலன்களும்
டைம்லைன் 1962:
‘Mr.S.Soundararajan, Deputy Accountant General, AP left for Hyderabad.’ அந்தக்காலத்தில் ஹிந்து இதழில், Social & Personal என்ற தலைப்பில் இத்தகைய அரிய செய்திகள் வரும். (எங்க ஆஃபீஸ் அனுப்பித்தான்!). தேடினால், தேதி கிடைக்கும். இப்போ Obituary கூட காசு கொடுத்தால் தான் போடுவார்கள். நான் மேற்படி பயணம் மேற்கொள்ளும் போது, லோயர் பெர்த் உத்தரவாதம். எனக்கு எல்லாம் ஒண்ணு தான். இவ்வாறு ஒரு நாலு பெர்த் வண்டியில் மதியம் அமர்ந்து, அறிமுகங்கள், உபயகுசோலபரி எல்லாம் இனிதே நடந்தேறி, எஞ்சின் ஊதும்போது, அடித்துப்பிடித்துக்கொண்டு ஒருவர் ஏறினார். திருக்கோவிலூர் ஆழ்வார்களுடன், நாலாவதாக வந்து நின்றானே, அவனைப்போல. ஆனால் ஐந்தாவது! மூன்று வீ.ஐ.பி.களும் ஒருவரை ஒருவர் பார்த்து உதடுகளை பிதுங்கினர். பொருள்: யார் இந்த காட்டான்? இத்தனைக்கும் விதிப்படி ஆறு நபர்கள் சாயுங்காலை வரை இதில் அமரலாம். க்ஷணத்தில் புரிந்து கொண்டேன், அவர் யார் என்று. நால்வர் அறிமுகம் ரிஸர்வேஷன் அட்டையை பார்த்தபிறகு. இவரை அறிமுகப்படுத்தியது, யான் செய்த பாக்கியம். மூவரும் சுயநிலைக்கு திரும்பினர், ராக்காலம் போவது எப்படி என்ற 64 ஆயிரம் டாலர் சிந்தனையோடு!
அப்பெல்லாம், ஹோல்டால் என்ற மெத்தை, தலைக்கணி சுருள். பெட்டி, கூஜா, டிஃபன் கேரியர் இன்றியமையாத உறுதுணைகள். படுக்கைகள் விரிக்கப்பட்டன. அவரிடம், நான் தரையில் படுத்துக்கொள்வேன் என்று அடம் பிடித்து, அவரை என்னுடைய விலை மதிப்பற்ற லொயர் பெர்த்தில் சயனிக்கச்செய்தேன். மற்ற மூவரும் ‘அப்பாடா!’ என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ‘உஷ்ஷ்ஷ்..’ / ஊதுகுழல்/ கர்ர்ர்./ போன்ற குறட்டையில் ஆழ்ந்தனர். ஹைதராபாத்தும் வந்தது. ஒருவரை ஒருவர் மறப்பதில்லை என்ற போலி பிரமாணம் செய்து கொண்டு பிரியா விடை பெற்றோம். பலாபலன்கள் வரும் பின்னே!
வருடங்கள் கடந்தோடின. டைம்லைன் 1968:
அக்காலம் நான், ஹைதரை கைவிட்டுவிட்டு, அஹ்மதை பரிணயம் செய்து கொண்டிருந்தேன். அதாவது அஹமதாபாத்தில் வேலை. அப்பாவின் மணிவிழாவுக்காக, நெய்வேலி வந்திருந்தேன். நான் படைக்கு அஞ்சமாட்டேன், தம்பி உடையான் என்பதால். (அவன் என் தனிப்படைக்கு அஞ்சுவான், அக்காலம்; இப்போது, ஓய்வு பெற்றும், கியாதியான சம்பளம். மணி விழா நடந்தேறியது; பக்கத்து வீடு. அவனிடம் இதை சொல்லாதீர்கள்; அஞ்சுவது யான்!) இந்த தம்பி மேல்படிப்பை உதறிவிட்டு, சென்னையிலிருந்து,சண்டியராக வருகை புரிய, அப்பா ஒரு கோரிக்கை எடுத்து முன் வைத்தார். அவன் மூன்றாமவன். மூத்த இரு ஆண்பிள்ளைகளும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். அவனும் பட்டம் பெறவேண்டும். ‘காரியத்தில் இறங்கு’ என்று எனக்கு ஆணை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று, யானும், அவனும், அவனுடைய ‘கொடாய்ங்க்’ மார்க் லிஸ்டுடன், விரைந்தோம், அண்ணாமலை பல்கலைக்கழகம் நோக்கி. எடுத்தவுடன், இணை வேந்தரிடம் சென்றோம். அவர் என்னை அடையாளம் புரிந்து, ‘யார் இந்த மஹாபுருஷன்?’ என்று மறந்துவிட்ட நிலையில், வாய் தவறிக் கேட்டுவிட்டார், ‘What can I do for you?’ என்று. விட்டேனா நான். ‘Sir, I gave you a berth that day. I want only a seat now.’ என்றேன். உடனடி ஷாக் தணிந்த பின், இன்முகத்துடன், B.Sc. (Chemistry) seat கொடுத்தாரே, பார்க்கலாம்! அவர் தான் தத்துவ பேராசிரியர் சந்திரன் தேவநேசன், சென்னை கிருத்துவக்கல்லூரியில், 1962ல். ஒரு கேள்வி எழலாம். வேறு கல்லூரியில் பொருளியல் படித்த உனக்கு, இவரை எப்படி தெரியும்? இவரின் அருமையான இண்டெர்காலேஜியட் லெக்ச்சர் கேட்க மகளிர் கூட்டமிருக்கும். அதான்.
இது பலாபலன் நம்பர் 1. மேற்படி சொல்ல அச்சம்.
இப்படிக்கு,
இன்னம்பூரான் (‘பூ’ நெடில்)
10 10 2010
*
திருக்கோவிலூர் ஆழ்வார்களுடன், நாலாவதாக வந்து நின்றானே, அவனைப்போல. ஆனால் ஐந்தாவது
‘What can I do for you?’ என்று. விட்டேனா நான். ‘Sir, I gave you a berth that day. I want only a seat now.’ என்றேன். உடனடி ஷாக் தணிந்த பின், இன்முகத்துடன், B.Sc. (Chemistry) seat கொடுத்தாரே, பார்க்கலாம்!
இதெல்லாம் அருமை !
பொருளியல் படித்த உனக்கு, இவரை எப்படி தெரியும்? இவரின் அருமையான இண்டெர்காலேஜியட் லெக்ச்சர் கேட்க மகளிர் கூட்டமிருக்கும். அதான்.
இது பலாபலன் நம்பர் 1. மேற்படி சொல்ல அச்சம்.
இது திரு இன்னம்பூராரின் இயல்பான ...............?
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>
*
aஅன்புடையீர்,
sசரித்திர இழை என்பதாலும் வரலாறு என்று வரும்போதும் கொஞ்சம் ஆவண் உட்திற்னாய்வு Internal criticism of document தேவை.
உங்களின் மலரும் நினைவுகளில் சில சந்தேகங்கள்
அண்ணாமலைப் பல்கலையின் இணை வேந்தர் செட்டிநாட்டு அர்சர் குடும்பத்தில் ஒருவராக் இருத்தல் மரபு. எனவே சந்திரன் தேவநேசன் இணைவேந்தராய் இருப்பதற்கு வாய்ப்பில்லை. என் யூகம் சரியா?
மேலும் சந்திரன் தேவநேசன் வரலாற்றுப் பேராசிரியர். அவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியவர்.
அருள்கூர்ந்து மீண்டும் நினைவுகூர்ந்து நீங்கள் லோயர் பெர்த் கொடுத்து கெமிஸ்ட்ரி சீட் வாங்கிய பேராசிரியரின் பெயரை மீண்டும் நினைவு கூறவும்..
நானும் ‘கொடாய்ங்க்’ மார்க் லிஸ்ட் தான். கெமிஸ்ட்ரி தான், அந்த்க்காலத்தில் அந்தமார்க்குக்கு கெமிஸ்ட்ரி அந்தர் பல்டி போட்டாலும் கிடைக்காது.
அண்ணாமலைப் பல்கலையில் டாக்டர். ஆதிநாராயணா என்ற உளவியல் பேராசிரியர் துணைவேந்தராக இருந்திருக்கிறார். ஒரு வேளை அவராக இருக்குமோ
நாகராசன்
2010/10/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>
---
*
மிக்க நன்றி, பேரசிரியரே, I am all for internal criticism of document
and shall welcome it. 'துணை'/இணை குழப்பம் இருந்திருக்கலாம் என்னிடம்.
நிகழ்வுகள் நடந்தவை என்பதால், டாக்டர் ஆதிநாராயணாவைத்தான் நான்
குறிக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு இருவரையும் தெரியும்;
சந்திரன் தேவநேசன், டாக்டர் பாயிட்டின் காலத்திற்கு பிற்காலம் சென்னை
கிறிஸ்துவக்கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியதும்
ஞாபகத்தில் இருக்கிறது.
பிழை திருத்தம்: 'சந்திரன் தேவநேசன்' என்பதற்கு பதில் 'டாக்டர் ஆதிநாராயணா'.
இன்னம்பூரான்
2010/10/10 Nagarajan Vadivel
- Idézett szöveg megjelenítése -
*
>> ‘Sir, I gave you a berth that day. I want only a seat now.’ <<
Superb, Excellent!!
Dev
On Oct 10, 12:47 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
wrote:
- Idézett szöveg megjelenítése -
> 2010/10/10 N. Kannan <navannak...@gmail.com>
>
> > இது சரித்திர இழையென்று நம் இன்னம்புரான் சார் ‘சர்டிபிகேட்’
> > கொடுத்துவிட்டதால் சொல்கிறேன்
*
‘சிந்தனை சிந்திய சிரிப்பு’ என்று என் குடும்ப நண்பர் திருமதி. சாரதா தொடங்கிய இழை, இது. என் பயணம் உள்ளது. அதனால் தான் இங்கே.
அதெல்லாம் அப்படித்தான்! Accountant General--னா எப்பவும் balance book-எ maintain பண்ணுவார்கள் என்று சொல்லிக் கேள்வி!
அன்புடன்.
ராஜம்
No comments:
Post a Comment