அன்றொருநாள்: மார்ச் 15
கைக்கா உருளி
என்னது இது? நீயுமா? [“Et tu, Brute?"]
மூன்றே சொற்கள்! கதை முற்றிற்று,முதல் வரியிலேயே! பெரும்பாலோர் ஜூலியஸ் சீஸரின் படுகொலை நடந்த தினம் மார்ச் 15, 44 கி.மு. அதை சொல்லி விட்டார் என்று அடுத்த இழைக்கு போய்விடுவார்கள். உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கைத்துரோகத்துக்கு உருவகமாகி விட்டன, இந்த மூன்று சொற்கள். இத்தனைக்கும், ஷேக்ஸ்பியர் சொன்னமாதிரி, ப்ரூடஸ் நாணயமான மனிதர் தான்.
சீஸர்: இந்த நெரிசலில் என்னை அழைப்பவன் யார்? ஒரு கீச்சுக்குரல் கேட்குது. நான் செவி சாய்க்கிறேன் (சொல்லு).
ஆருடம் சொல்பவன்: மார்ச் 15: சாக்கிரதை.
சீசர்: பேசுவது யார்?
ப்ரூடஸ்: ஒரு ஆரூடம் சொல்பவன் உங்களை ‘இன்று மார்ச் 15: சாக்கிரதை.’ என்று எச்சரிக்கிறான்.
***
நான் பலதலைக்கொள்ளி போல் தவிக்கிறேன்.
‘கதை முற்றிற்றே’ என்று நன்றி நவின்று நகர்ந்து விடுவதா?
அல்லது
‘நீயிரும் வம்மின்’ என்று இலக்கியபோக்கில் பீடு நடை போட்டு உலகை அசத்திய ஷேக்ஸ்பியர் பாதையில் செல்வதா?
அல்லது
‘ப்ரூடஸ் நாணயமான மனிதர்’ என்ற மூன்று சொற்கள் படுத்திய பாட்டை விவரிப்பதா?
அல்லது
உயிரை த்ருணமாக மதித்த ஜூலியஸ் சீஸரின் நிஜமான மெய்கீர்த்தி பாடுவதா?
அல்லது
‘ப்ரூடசும், எடுபிடியும்’ என்று உளவியல் பேசும் சித்திரம் வரைவதா?
அல்லது
ரோமாபுரி உயர்ந்த கதையையும், வீழ்ந்த கதையையும், ஜூலியஸ் சீஸரின் படுகொலையை மையப்படுத்தி, வரலாற்றை கூறுவதா?
அல்லது
ஜூலியஸ் சீஸரின் படுகொலை எப்படி ஒரு வரலாற்று பாடமாக அமைந்தது என்று விமரிசிப்பதா?
அல்லது
இருப்பதோ ஆயிரமாயிரம் அற்புத செய்திகளின் நதி மூலம் என்று கூறி, அவற்றை குடைவதா?
நீங்கள் தான் சொல்லவேண்டும். ஏனெனில், மின் தமிழ் ஒரு கைக்கா உருளி. எந்த பதார்த்தமும் கச்சிப்போகாது (கெட்டுப்போகாது).
இன்னம்பூரான்
15 03 2012
உசாத்துணை:
Willard Crompton, S. (1999) 100 Military leaders who Shaped World.
No comments:
Post a Comment