அன்றொருநாள்: மார்ச் 11
தர்மம் சர.
சமயங்களின் உள்பிரிவுகள் ஏற்படுவதை விமரிசிக்கும் முன், அவை புதிதாக கூறுவதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நலம் பயக்கும். ஒவ்வொன்றிலும் தனி விதிகள் உண்டு. ஹிந்து மதத்தின் ஒரு கிளையாகிய ஸ்வாமிநாராயண் மார்க்கம், ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை தினந்தோறும் தொழுவதை, மரபாக வைத்துள்ளது. குஜராத்தில், இதற்கு சீடர்கள் அதிகம். இது ஒரு வைணவ மரபு என்றாலும், சிவபெருமானை தொழுவதும் அவர்களது சாத்திரப்படி, உரிய முறையாகும்.
மார்ச் 11, 1826 அன்று ‘சிக்ஷாபத்ரி’ என்ற அடிப்படை தத்துவத்தொகுப்பை, ஸ்வாமிநாராயண் ஸ்வாமி படைத்ததாக சொல்லப்படுகிறது. ஹிந்து மதத்தை மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்திய ஸர் மோனியர் வில்லியம்ஸ் ஸ்வாமிநாராயண் ஸ்வாமியை சந்தித்ததாகவும், கைரா ஜில்லா கலெக்டருடன் கோயில் திருவிழாக்களை கண்டு, அவர்களின் வழிபாடு முறைகளை பற்றி அறிந்தார் என்றும், 1825ல் ஸ்வாமிநாராயண் ஸ்வாமி, தான் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கல்கத்தா பிஷப் ரெஜினால்ட் ஹீபரிடன் சொன்னதாகவும், அந்த மரபின் ஆவணங்கள் கூறுகின்றன. மனித இயல்புக்கேற்றபடி, இந்த சம்பிரதாயத்திலும் கருத்து வேற்றுமைகள், பிரிவினைகள் எல்லாம் நிகழ்ந்தன. ஸ்வாமிநாராயண் சமுதாயத்தின் கோயில்கள் நவீன சிற்பக்களஞ்சியங்கள், பிருமாண்டமானவை. சீடர்களில் செல்வந்தர்கள் அதிகம் என ஒரு தோற்றம். குஜராத் போல, பிரிட்டனிலும், இந்த சம்பிரதாயத்துக்கு சீடர்கள், கோயில், இணைய தளங்கள் உளன. சொல்லப்போனால், இங்கிலாந்தில், அரசு ஆதரவுடன், ‘சிக்ஷாபத்ரி’ வேதத்தை மின்னாக்கம் செய்த பெருமையை போற்றவேண்டும். நாம் கற்றுக்கொள்ள,அந்த உழைப்பில், பாடங்கள் இருக்கின்றன. காதில் விழுந்த சில முரண் செய்திகள்: லண்டனில் கோயில் கட்டிய போது, சிற்பத்தொழிலாளிகளை கொடுமைபடுத்தினர் என்று ஒரு செய்தியையும், மத குருமார்களில் சிலரின் நடத்தை சரியில்லை என்றும் சில வருடங்கள் முன்னால் படித்த ஞாபகம். அது போகட்டும்.
இன்னம்பூரான்
11 03 2012
My devotees shall never intentionally kill or harm any living being, ...
உசாத்துணை:
No comments:
Post a Comment