Tuesday, March 12, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 20




அன்றொரு நாள்: அக்டோபர் 20
2 messages

Innamburan Innamburan Thu, Oct 20, 2011 at 6:22 PM
To: thamizhvaasal

அன்றொரு நாள்: அக்டோபர் 20
தேசிகன் சொன்னால் பணிந்து போவது சிலாக்யம். ‘நம்மூர் பக்கம் தலையை சாய்க்காதே. கொய்துடுவார்கள், மலை முழுங்கிகள். எல்லாருக்கும் போர் அடிக்றதாம். ஐஏஎஸ் இண்டர்வ்யூவா போடு.’ என்றார். ‘திசை மாறுமே, சுவாமி. படிச்சவளோல்லியோ’ன்னேன். நோ ரிப்ளை.
இண்டர்வ்யூ ரணகளம். மூன்று மெம்பர்கள். (சின்ஹா, ஐயர், பாசு.) பலிகடா: ராஜூ.
பாசு: இந்திய அரசியல் சாஸனத்தை சமைத்ததில் பெரும்பங்கு யாருக்கு?
ராஜூ: பெனெகல் நரசிங்க் ராவ்.
ஐயர்: சரி தான். ஆனால், நாங்கள் நினைப்பது வேறு.
ராஜூ: (தேவுடா!) அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.
சின்ஹா: தம்பி!
ராஜூ: டாக்டர் அம்பேத்கார்.
பாசு: ரைட். அவர் நம் அரசியல் சாஸனத்திற்கு, ஒரு அமெரிக்க வேதாந்தியிடமிருந்து அடிப்படைக்கருத்துக்கள் எடுத்துக்கொண்டது உனக்கு தெரியுமா?
ராஜூ: (நேரடியாக தெரியாது: என்ன ‘கோன் பனேகா க்ரோர்பதி’ மாதிரி கேக்கறாரு!) பணிவாக: ‘அமெரிக்காவாவது? வேதாந்தியாவது? (இதெல்லாம் அலெளட்.)
பாசு: சரி. ஒரு தத்துவ ஞானி.
ராஜூ: நீங்கள் ஜான் ட்யெவி அவர்களை சொல்கிறீர்கள். அக்டோபர் 20, 1859ல் பிறந்தவர். கல்யாணச்சாவு 93 வயதில். அப்போது மும்முரமாக சில புத்தகங்கள் எழுதி வந்தார். டாக்டர். அம்பேத்கார் மட்டுமல்ல. நான் கூட அவருடைய சிஷ்யன்.
சின்ஹா: சரி. அவரை பற்றி சொல்லு.
(விட்ட கேப்லெ சைகிளை ‘விர்’னு... இனி ராஜூ.)
ராஜூ: இந்த நூற்றாண்டில் கல்வியை பற்றி உயர் கருத்துக்களை போதித்தவர் அவரே. அனுபவம், சிந்தனை,மீள்பார்வை (Reflective Practice), ஜனநாயகம், சமூகம், சூழல் ஆகியவை பற்றி அவருடைய சிந்தனைகள் அபாரம். கோல்ப், லிண்ட்மென், நான் அறிந்திருந்த வால்டெர் லிப்மன், என்னுடைய ஆசான் டொனால்ட் ஷான், க்ரிஸ் ஆர்க்ரிஸ், மேலும், நிஜமாகவே அவருடைய சிஷ்ய -கோடிகள்..
ஐயர்: நன்றி. நீ சொல்லி முடிக்க எத்தனை நேரமாகும்?
ராஜூ: ஒரு வாரம்?
பாசு: (புன்முறுவலுடன்) (ராஜூ: பாதிக்கிணறு தாண்டியாச்சு.) 20 நிமிடங்கள். 
ராஜூ: ஐயன்மீர்! திசை மாற்றவேண்டாம். குறுக்கே பேசவேண்டாமே. (நம்ம ஶ்ரீரங்கம் நண்பர் கூட...)
ராஜூ: ஜான் ட்யெவி ஒரு யுகபுருஷர். ‘ஜனநாயகமும் கல்வியும்’ என்ற நூலை படிப்பது கஷ்டம். தெளிவு காண திரும்பி, திரும்பி படிக்கவேண்டும். ஆனால், அது பொன்வயல். ‘சிந்திப்பது எப்படி? [1933] என்ற நூல் தான், இன்று உலகெங்கும் எல்லாத்துறைகளிலும் வியாபித்து இருக்கும் மீள்பார்வை இலக்கணம்...
சின்ஹா: அதை பற்றி சொல்லு.
ராஜூ: டொனால்ட் ஷான் ஜான் ட்யெவியை புனருத்தாரணம் செய்ததும், பீட்டர் ஸெஞ்ஞே அதை மேனஜ்மெண்டில் கொண்டு வந்ததும் சொல்லவே ஒரு வாரம் பிடிக்கும். இது அம்பேத்கார் காலத்திற்கு பிறகு.
[ஐயர் ~ பாசு: இவன் அதிக பிரசங்கி. ஆடிட் சர்வீஸ்ஸுக்குத்தான் லாயக்குப்படும்!]
சின்ஹா: சரி. ஜான் ட்யெவியை பற்றி சொல்லு.
ராஜூ: அமெரிக்காவின் தவபுதல்வனான வெர்மாண்ட் மாநிலத்தில் பிறந்து,ஜான் ட்யெவி, பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில், ஜார்ஜ் மாரிஸ் அவர்களின் மாணவனாக படித்து, மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பணி தொடங்கி, 1894ல் அது துவக்கப்பட்டவுடனேயே, ஷிகாகோ பல்கலைகழகத்தில் சேர்ந்து, நான்கே வருடங்களில் கொலம்பியா பல்கலைக்கழகம் சென்று, தன் ஆத்மவிசாரணையில் வாழ்நாள் முழுதும், அங்கே, கழித்தார். முதல் கவலை: பள்ளியில் கல்வி: The School and Society (1899), The Child and the Curriculum (1902). விசாலமான சமுதாய முன்னேற்றங்களுக்கு ஆணிவேர் கல்வி என்று கருதிய ஜான் ட்யெவி, பெண்களுக்கு வாக்குரிமை, ஆசிரியர்களின் சங்கம், யுத்தங்களுக்கு எதிர்ப்பு, மக்கள் கருத்து, ஜனநாயகம் ஆகிய விழிப்புணர்ச்சி இயக்கங்களுக்கு தன் சிந்தனாசக்தியின் ஆதரவு அளித்தார். பாருங்களே ~ வெர்சேயில்ஸ் உலக சமாதான உடன்படிக்கையிலிருந்து அஞ்சல் அலுவலகங்களில் கலையார்வம் வரை! அவருடைய சீடர் வால்டர் லிப்மென் ‘பொது ஜனத்தின் கருத்துத்தளம்’ என்று படைத்த அரசியல் இலக்கணத்தின் மூலாதாரமும்/எதிர்மறையும் ஜான் ட்யெவி என்றால் மிகையன்று.
நடுவு நிலை என்றால் ஜான் ட்யெவி எனலாம். சோவியத் ரஷ்யா ட்ராட்ஸ்கியை குற்றம் சாற்றியது ஆதாரமற்றது என்று அவர் கூறியது, அத்தருணத்து இடம், காலம், ஏவல் நோக்கினால், எளிதான விஷயம் என்று சொல்லமுடியாது. ஹங்கேரி விஷயத்தில், நமது மதிப்புக்குரிய பிரதமர் நேருவின் அடி சறுக்கவில்லையா?
ஐயர்: (கோபமாக) நீ நேருவை இங்கு வம்புக்கிழுத்து அரசியல் பேசவந்தாயா?
பாசு: அது வயசுக்கோளாறு, ஐயர். போகட்டும். 17 நிமிடங்கள் ஆயின.
ராஜூ: ஜான் ட்யெவியின் காலத்திற்கு பிறகு, அவர் புகழ் மங்கத்தொடங்கியது ~ சாக்ரெட்டீஸுக்கு ஆன மாதிரி.
ஐயர்: இரு நிமிடம் பாக்கி. திசை மாறினால் உனக்குத்தான் கஷ்டம்.
ராஜூ: சார்! தற்காலம் யுர்கன் ஹாபர்மாஸ்ஸின் தத்துவம் (சுதந்திரமும், பேச்சுரிமை போற்றும் குடியரசும் சமுதாயத்தின் கவசங்கள்.) பெரிதும் பேசப்படுகிறது. அவருக்கு முன்னோடி என்று ஜான் ட்யெவியை சொல்லலாம். ஜனநாயகத்தின் நியதிகளை விவாதிக்கும் போது, அவர்
உரைத்தது:’...மனிதர்கள் தனித்து இருக்கும் துகள்கள் அல்ல. அன்யோன்யமாக உறவாடுவதில் தான் அவர்களின் மனித பண்பு உளது. சமுதாயத்தின் ஒன்றுபட்ட இலக்கையும், ஆர்வத்தையும், அது ஏற்றுக்கொண்டால் தான், மக்கள்~ஆள்பவர் இடையே இயல்பான உறவாடுதல் இருந்தால் தான், அரசு என்ற அமைப்பை மக்களின் பிரிதிநிதியாக கருதமுடியும். (He means the ‘State’ and not the ‘Government’, Sir)...’ அவர் ஜனநாயகத்தை 1. மக்கள் நலன் பாதுகாவலாராக, 2.சமுதாய விசாரிப்பு செய்பவராக, 3.மனிதனின் தனித்துவத்தின் ரக்ஷகராக கணித்து வைத்தார்.
சின்ஹா: நல்லது. தம்பி. போய் வா.
இன்னம்பூரான்
20 10 2011
721cea13f72d4344db0900ea626b082e2b90f88d.gif
உசாத்துணை:

Geetha Sambasivam Thu, Oct 20, 2011 at 7:42 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அதான் ஆடிட்லே போட்டாங்களா?

2011/10/20 Innamburan Innamburan innamburan@gmail.com
.
[ஐயர் ~ பாசு: இவன் அதிக பிரசங்கி. ஆடிட் சர்வீஸ்ஸுக்குத்தான் லாயக்குப்படும்!]
சின்ஹா: சரி. ஜான் ட்யெவியை பற்றி சொல்லு.
இன்னம்பூரான்
20 10 2011
721cea13f72d4344db0900ea626b082e2b90f88d.gif
உசாத்துணை:
-- 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

No comments:

Post a Comment