Thursday, May 9, 2013

பாமரகீர்த்தி 2

>


பாமரகீர்த்தி 2
1 message




  1. பாமரனொருவர்
  2. Inline image 2

'ஆபத்சம்பந்துக்கு' என்ற சொல், முன்னறிவிப்பில்லாமல் வந்து உதவும் சமயசஞ்சீவியை சுட்டுகிறது. அத்தகைய மாந்தர்களை அன்றாடம் கண்டாலும், நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இருந்தும், சில நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றன - டா.ராதாகிருஷ்ணன் ஒரு மாணவருக்கு உதவியது போல. நானும் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அலுவல்கள் ஒரு டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தன ~ எதிராளியாக! அதாவது என் கூற்றை எதிர்ப்பது அவருக்கிடப்பட்ட பணி. காலாவட்டத்தில் என் கூற்று ஏற்கப்பட்டது. அவரும் நண்பராயினார். நான் அரசு பணியில் அமர்வதும், அவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அத்தனை வயது வித்தியாசம். அவர் மற்றதொரு பணி ஏற்றுக்கொண்ட ஊரில் என் தந்தை வாசம். அவருக்கு பார்கின்ஸன் டிஸீயஸ் என்ற நிவாரணம் காணாத வியாதி. இந்த டாக்டரும் முடிந்த வரை அவரை மருத்துவரீதியில் கவனித்துக்கொண்டார். ஒரு நாள் சென்னையில் ஆளனுப்பி என்னை வரவழைத்து சொன்னது: 'இன்று ஹிந்துவில் வந்திருக்கிறது, ஒரு பிரிட்டீஷ் டாக்டர் மூளை அறுவை சிகிச்சை செய்து இந்த வியாதிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் பணியில் வந்திருக்கிறார் என்று. அது டா.பி.ராமமூர்த்தியின் பிரிவு. அவர் என்னுடைய மாணவர். இந்த கடிதம் எடுத்துச் செல்லுங்கள்.'. இதே மனிதர் பத்து மாதங்கள் முன் என்னிடம் சொன்னது, 'தம்பி! நீ சொல்வது சரியென்றாலும் ஒத்து வராது. நீ சின்னப்பையன். உனக்கு அனுபவம் போதாது!' நான் மசியவில்லை அப்போது என்று கோபப்பட்டவர், அவர்! அவருடைய அறிவுரையினால், மள மள என்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து, பாரிச வாயு போன்ற இந்த பிணியால் பீடிக்கப்பட்டு இருந்த என் தந்தை, அதற்கு பிறகு ஒரு வாழைத்தோட்டம் போட்டார். பல வருடங்களுக்கு புனர்வாழ்வு. இந்த சமய 'சஞ்சீவி'யின் பெயர் டா. மாருதி ராவ். என்னே பொருத்தம்!

அன்பர்கள் யாவரும்மின் தமிழில், 'பாமரர்களின்
வரலாறுஎன்ற இலக்கிய வரவை தரவேண்டும் என்று மறுபடியும் விண்ணப்பம்.
அன்புடன், 
இன்னம்பூரான்
05 09 2011
Mohanarangan V Srirangam 
9/5/11

2011/9/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அருமையான அறிமுகம், மெருகான நடையில், மாருதிராவ் என்றும் நினைவில் பதியும் விதத்தில். இது போல் தொடராகப் பலர் பற்றியும் எழுதினால் ஒரு நல்ல தொகுப்பாக ஆகும்.
Innamburan Innamburan <innamburan@gmail.com>
9/5/11

நன்றி பல. ஶ்ரீ. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,

பாமர கீர்த்தி தான் சமூகத்தின் உண்மையான வரலாறு என்று கருதுகிறேன்.
Mohanarangan V Srirangam 
9/5/11


நன்றி பல. ஶ்ரீ. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,

பாமர கீர்த்தி தான் சமூகத்தின் உண்மையான வரலாறு என்று கருதுகிறேன். 


மிக அழகான வாக்கியம் ஐயா இது. -- “பாமர கீர்த்திதான் சமூகத்தின் உண்மையான வரலாறு”.  

ஆங்கிலத்தில் சொன்னால் 

Micro-history forms the real history of the society as such. 

இதை நிச்சயம் தேசியம் இழையில் மேற்கோள் காட்டுவேன். அனுமதி உண்டுதானே. 

Innamburan Innamburan <innamburan@gmail.com>
9/5/11

தாராளமாக. நானே பொது சொத்து அல்லவா!

Subashini Tremmel
9/5/11

இந்தப் புதிய கருத்துக்கு நல்வரவு!

-சுபா
coral shree 
9/5/11

நல்ல ஆரம்பம் ஐயா. தொடரலாம் அருமையாக.நன்றி. வணக்கம்.
shylaja 
9/5/11

 இ சார் .ஜனரஞ்சகம்!  தொடரலாம்..நானும் வரேன்.

____________
innamburan
08 05 2013

Wednesday, May 8, 2013

’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34




’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34
1 message

Innamburan S.Soundararajan Wed, May 8, 2013 at 6:04 PM


’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34 
Inline image 1

மறு நாள் அஸன்சால் ஸ்டேஷனில் ஆரவாரம். ரயில்வண்டிக்கதவை திறந்து கொண்டு நேருஜி. 'அஸால்ட்டா' நின்றுகொண்டு இருந்தார். தற்காலம் போல கெடுபிடிகள் கிடையாது.
திவாஜீ ஆடிட் பூசலைப் பற்றிக்கேட்கிறார். நேரு மீட்டிங்கை ஆடிட் பகிஷ்காரம் செய்தது, அழைப்பு இல்லாததால். என்னை மட்டும் தான் அழைத்திருந்தார்கள் என்றது பிறகு தெரிய, ஜெனெரல் மானேஜருக்கு ஒரு கண்டனக்கடிதம் எழுதினேன். தீர விசாரித்து, எங்கள் ஆஃபீஸுக்கு வந்து, ஆடிட் சமூகத்திடன் மன்னிப்பு கேட்டார், அந்த பெரிய மனிதர்.
பூசல் தணிந்தது; கிதாப்பு ஏறியது.
ரயில்வே ஆடிட் ரிப்போர்ட்டில், பலவருடங்களாக சித்தரஞ்சன் தொழிற்சாலையைப்பற்றி குறை கூறபடவில்லை என்ற சாதனையும் முறிந்தது. மூன்று ஆடிட் பாரா, முதல் வருடமே. அதில் ஒன்று ஒரு தீ விபத்து. அது ஆண்டவன் செயல் என்று அவர்கள் கூற்று. அது மனிதனின் பொறுப்பற்ற செயலின் விளவு என்று என் ஆதாரங்கள்.
வேலை மிக குறைவாக இருந்தது; தொழிற்சாலையிலே மணிக்கணக்காக இருந்து, நுணுக்கங்கள் கற்று வரும்போது, ஜி.எம். கூப்பிட்டார். 'ஒரு முக்யமான பாகம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வாங்குகிறோம்; அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். உள்நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சலுகை கொடுத்து, வளர்க்க விரும்புகிறோம். நீயோ மடியில் இருக்கும் தேள் மாதிரி கொட்டுவாயோ? என்று கவலைப்படுகிறார்கள் என்றார். அக்காலம், டி.ஜி.டி.டி (DGTD) என்ற துறை இத்தகைய சலுகைகள் பற்றி கொள்கை அறிவித்திருந்தது. அவற்றை திரட்டி அவரிடம் கொடுத்தபோது தான், வேறு யாரும் அது பற்றி தகவல் தரவில்லை என்று நன்றி கூறினார். ஆடிட் தேள் தப்பு செய்தால் தான் கொட்டும் என்று சொல்லி விட்டு, ஓடி வந்து விட்டேன்.
டபிள் சார்ஜும், நானும் கூடப்பிறந்தவர்கள். காசிக்கு அருகில் உள்ள மற்றொரு தொழிற்சாலை ஆடிட் அடிஷனல் சார்ஜ். அந்த கதைக்கு பிறகு வருகிறேன். படா டமாஷ்!
சித்தரஞ்சனிலிருந்து என்னை டில்லியில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் அண்டர்செக்ரெட்டரியாக (டைம் லைன் 1962) மாற்றினார்கள். 'இன்றே வருக.' 'நேற்றே வருக.' என்ற வகையில் தந்திகள் பறந்தன. என் பையன் படு ஜுரம்; ஆஸ்பத்திரியில். டில்லியில் லேசில் வீடு கிடைக்காது. தவித்து போனேன்.
ஒரு நாள் ஆஸ்பத்திரியிக்கு வந்து என் பையனைப் பார்த்த ஜி.எம்., 'இவன் தேறியபிறகு, குடும்பத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டு, வீட்டுச்சாவியை என்னிடம் கொடுத்து விட்டு, டில்லிக்குப்போ; நான் சாமான்களை கொணருகிறேன்' என்றார். அப்படியே, எனக்கு வீடு கிடைத்த பிறகு,தன் தனிவண்டியில் (ஸலூன்) கொணர்ந்தும் கொடுத்தார். அத்துடன் விடவில்லை. ஒரு வருடம் கழித்து, சித்தரஞ்சனில் ஒரு புதிய வகை எஞ்சின் தயாரிப்பைத் தொடக்கிவைக்க, நேருஜி வந்த போது, ' ...as an old guard of CLW...'நீயும் வரவேண்டும் என்ற அழைப்பும், ரயில்வே பாஸ்ஸும் அனுப்பினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சான்றோகளின் நடைமுறை எல்லாம் படிப்பினை அல்லவோ!
இன்னம்பூரான்


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 5:39 PM


07. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:தண்டம்
Inline image 1

அப்டேட்:
கடந்த பத்து வருடங்களில், நான் இந்த கட்டுரையில் சுட்டிய ஊழல்களை எல்லாம்  அசுரவேகத்தில் வளர்த்து,
நாட்டின் செல்வத்தை சூறையாடுகிறார்கள். அதனால் தான் சிவப்பு மசி.  இதை படித்தவர்கள் தங்கள் அனுபவங்களை/கருத்துக்களை/ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டால், நலம். என் நன்றி. தனிமடல் அனுப்புவோர்க்கும் பதில் அனுப்பபடும்.

அன்புடன், 
இன்னம்பூரான்
06 05 02013

கொஞ்சம் மாற்றம் வேண்டாமோ?  இது நான் 2004 லில் எழுதிய கட்டுரை.
இன்னம்பூரான்
07 02 2010------------


Date:03/08/2004 URL: http://www.thehindu.com/thehindu/op/2004/08/03/stories/2004080300261300.htm

Back Open Page

Containing waste

PENCIL SHAVINGS is a waste product. 
Throwing the stub away is a waste. 
Throwing the pencil away is a malpractice.
Most governmental activities throw the metaphorical pencil away, as premeditated subversion. Private sector is no paragon of virtue, debiting philately to postage! Nevertheless, the immediate concern is on public money. Unburnt coal is deliberately heaped with coal ash for sharing the loot, in some power stations. The top managers in one case sat up and took notice only when it was shown that gold prices rose less steadily than the bids for coal ash! Dhanbad mafia is a direct product of waste and malpractices in mining and dispatching coal. Floor sweepings in factories command a premium in auctions as a rich pick of tools, products and raw material can be salvaged. Ingenious are the ways of those who thrive on waste. The story goes that a Soviet factory was losing wheelbarrows daily. Having failed to solve the riddle, the management adopted a capitalistic stratagem; they announced a reward and immunity. The culprit confessed to heaping a barrow daily with waste and walking away. Security guards let him out after checking the contents!
The limited focus is here on the deliberate waste for illegal gain. The national Common Minimum Programme will meet its nemesis in the hardcore waste-taker in all spheres, if the government does not watch out. Primarily comes the inefficiency of services and wasting of working time. Employment guarantee is welcome. However, employee obligation in the form of discipline and reasonable obedience should be defined and enforced. Legislation in the U.K. protects the employee jealously in many respects, including maternity, rest, safety and whistleblowing. However, there is no protection to gross misconduct like rifling the till. We had been exposed to malpractices long enough to spot them, if there be a will. Hawala and black money are examples of Frankenstein spawned and nurtured by the wasteful system. They are open gutters and are not submerged tunnels.
A few examples are mentioned to signpost the rocks on which governments founder. It is but the tip of the iceberg. Government apparatus jealously guards some myths. The public works department, which Rajaji famously declared as his enemy No.1 (ranking the communists next), awards contracts, based on schedule of rates, derived from rate analyses. A multi-purpose dam project had schedules only for buildings, one per cent of its outlay. When the project digs canals, the wasters dig gold. The digging profile consists of overburden (sand or equivalent), soft disintegrated rock and hard disintegrated rock. Deeper the cut, higher the rate. It is fair. However, in one geological zone, hard rock could not be built into the rates, as it was of alluvial soil. The masterstroke was to adopt the schedule of an adjacent district, for enriching the contractors. This was stopped, but the honest man got the sack. The tribals in Phulbani district of Orissa touch neither sugar nor wheat. The public distribution system routinely drew those commodities for that district. This happened decades ago. Nevertheless, the moral is still valid.
Another myth is the sanctioned estimate. Overdesign is the trick. Most culverts need non-pressure clay or at the most, cement pipes. One estimate provided for electronically welded steel pipes (used for tube wells) costing hundreds of times more; the stock reply was that the estimate was a sanctioned one. A highway division had large quantities of thick twisted steel rods, when they needed none. The bridge divisions had enough on their plate. Unable to defend that purchase, they planned to convert them into mild steel rods (which also they did not need), a physical impossibility. Bitumen is one item, which is pilfered on paper and on site. The unedifying spectacle, euphemistically known as March rush of expenditure, is hoarding time for the rogue elephants among government officials. The litany is endless.
Whenever the government is on the threshold of launching large spending programmes, deliberate wasters spend sleepless nights scheming in mind as to how to subvert the system. They form a ubiquitous and unscrupulous community of shared interests, and, of course, the booty, among politicians, officialdom, contractors and middleman. They operate in secret in the beginning and become brazen after some time, as mutual protection gets set, unlike the sand they mixed with the cement.
Apart from vigilance machinery — in-house and external — the government must evolve alert preventive measures to stop this Barbarian (vested interest masquerading as a mere waster) at the Gate. Such measures can be as simple as a log of what was done, a quick reporting mode and the surprise inspections. The colonial rule had a system of district inspection by members of the Board of Revenue, a sinecure establishment. It used to be as instructive as the gazetteers and performance was measured and ranked. There are many other dimensions to waste as a phenomenon. All those who are aware should share and the government should take care.

S. SOUNDARARAJAN

Former Additional Deputy Comptroller and Auditor General of India
© Copyright 2000 - 2009 The Hindu

ஒரு பாமரனின் வரலாறு: 1



ஒரு பாமரனின் வரலாறு: 1
1 message

Innamburan S.Soundararajan Wed, May 8, 2013 at 3:00 PM

ஒரு பாமரனின் வரலாறு: 1

Image Credit: http://www.himalmag.com/images/stories/magazine/Oct_Nov_2011/missing-manmohan.jpg
With humble respect to RK Lakshman

Innamburan Innamburan <innamburan@gmail.com>Mon, Apr 18, 2011 at 7:20 AM

ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பெறாமல் அநாமதேயமாக அமிழ்ந்து,
மூழ்கிப்போய், காணாமல் போய்விடுகிறார்கள், பாமர மக்கள். அன்றும், இன்றும்
மெய்கீர்த்திகள் அகங்காரமும், ஆளுமையும், ஆணவமும் படைத்த பிரதான கதை
மாந்தர்களை பற்றித்தான். சிலசமயம், சான்றோர்கள் வரலாறு கிடைக்கிறது;
அதிலும் சர்ச்சைகள். ஆனால், குப்பனும், சுப்பனும், கண்டு
கொள்ளப்படுவதில்லை. அன்பர்கள் யாவரும், மின் தமிழில், 'பாமரர்களின்
வரலாறு' என்ற இலக்கிய வரவை தரவேண்டும் என்று, இந்த சுட்டியிலிருக்கிற
தகவலை தருகிறேன்.

என்றும் வாழ்க, அமரர் கேசவனின் திருநாமம்.
http://www.hindu.com/2011/04/18/stories/2011041854861400.htm
இன்னம்பூரான்
18 04 2011

இது தேவரகஸ்யம்!




இது தேவரகஸ்யம்!
5 messages

Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 9:39 AM

சொல்லியாச்சு.
இன்னம்பூரான்
02 12 2011/ 08 05 2013

இது தேவரகஸ்யம்!
  1. Friday, December 2, 2011, 12:25
  1. இலக்கியம்கட்டுரைகள்
இன்னம்பூரான்
முதல்பத்து -1
சில சன்மார்க்கங்கள் மனதில் பதிந்து விட்டால், ‘அஹோ பாக்யம்’ என்று மகிழலாம். அதற்கு உகந்த மார்கபந்துவும் கிடைத்தும் விட்டால், அது மஹாபாக்யம். அக்கமும் பக்கமும் அனுசரணையாக இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம். பெருமாளே, தாயாருடன், கருடாரூடராக இறங்கி வந்து, சேவை சாதிக்கறாப் போல. அந்த மாதிரி கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்னால் கண்டு களித்த காட்சி ஒன்று, காலம், தேசம், வர்த்தமானம் எல்லாவற்றையும் லகுவாகக் கடந்து, அகக்கண்ணின் முன்னே மட்டுமல்லாமல், புறக்கண்கள் முன்னாலும், களிநடனம் ஆடுகிறது. அதை உள்மனதில் ஊறுகாய் போட்டு தனக்கு மட்டும் ஆத்மதிருப்தி என்று முடங்கிக் கொள்ளாமல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தான் உகந்தது என்று அந்த உள்மனதே சொன்னாலும், தயக்கம் நீங்கவில்லை.  
ஏனெனின், அன்றாடம் எழுதும் வழக்கம் இருந்தாலும், வாசகர்களுக்கு ஆர்வம் இல்லாத விஷயதானம், தனக்கே வழங்கிக் கொள்ளும் பரிசில்/ நற்சான்று/விளம்பரம். தேவையற்றது.  இலக்கிய உலகிலே அவற்றிற்கு வரவேற்பு குறைவு; எள்ளல் அதிகம். அது வேண்டாம் என்றொரு எழுதப்படாத விதியுண்டு. எனினும் ஆசிரியர் கேட்டுக் கொண்டால், அதை மதிப்பது தான் பண்பு என்பதும் ஒரு எழுதப்படாத விதி. ஆகவே, இந்த தொடரின் ப்ராரம்பம். ஆம். இதனுடைய பரிமாணம்/எல்லை/வேலி/திசை எல்லாம் இன்னும் மங்கலாகவே தென்படுகின்றன. இதுவே ஈற்றடியாகவும் அமையலாம். நூறு பத்திகளில் அறிமுகம் மட்டும் அமையலாம். யாமறியோம். 
அந்தக் களிநடனம் புரிந்தவர் ஒரு தொண்டு கிழவர். கதாபாத்திரம்: காமமிகு காதலி ராதா. இடம்: தம்புடு சார் பள்ளிக்கூடம், கீழ மூன்றாம் வீதி, புதுக்கோட்டை. ஏவல்: நரஸிம்ஹ ஜயந்தி உத்ஸவம். காலம்: 1946. நடன நிகழ்ச்சி: ராதா கல்யாணம். பந்ததி: ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர் பந்ததி. ஆத்ம விசாரணை செய்த சில சான்றோர்களால் பகிர்த்து கொள்ளப்பட்ட விஷயங்கள், டிசம்பர் 1, 2011 அன்று என்னை 1946-க்கு இழுத்துச் சென்ற ஆத்ம தரிசனம் பற்றி ஆசிரியருக்கு முன்னாலேயே தெரியுமா? என்ன? அது ஆரூடமா? தேவரகஸ்யமா?
குற்றாலத்து அருவிகள் அளிக்கும் சுகானுபாவத்தைப் போல் தான் இந்த ராதா கல்யாணம். ஒரு தாத்தா சிற்றாடைச் சிறுமியாக மாறினால், அவருடன், ஆளுக்கொரு விளக்கு எடுத்துக் கொண்டு, ஒரு கிழவர் குழு, தட்டாமாலை ஆடினால், கும்மியடித்தால், கோலாட்டமாடினால், நடு நாயகமாக வீற்றிருந்த செல்லப்பிள்ளை உத்ஸவர் நீலமேக சியாமளன் ஓடோடி வந்து அந்த தாத்தாவை கட்டித் தழுவி முத்தம் கொடுக்க வேண்டாமோ? 
நான் அதைத் தான் எதிர்பார்த்தேன், 65 வருடங்களாக. இன்று தான் அருவிகள் பல நீர் வீழ்ச்சியாக வந்து என்னை திக்குமுக்காட வைத்தன. இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். சுகானுபவங்களை என் இஷ்டப்படித்தான் எழுத முடியும். அது கூட ஒரு சுதந்திரம் தான்.
உங்களில் எத்தனை பேருக்கு அபிநய சரஸ்வதி பாலசரஸ்வதியின் ‘கிருஷ்ணா நீ பேகனே வாரோ’ என்ற பதத்திற்குப் பிடித்த முகராசியும், முத்திரைகளையும், கண் அசைவையும் பார்த்து அனுபவிக்கக் கிடைத்ததோ என்று நானறியேன். அவர்களுக்கும், ராதைகளுக்கும், 16-வது நூற்றாண்டில் ரூபா கோஸ்வாமி என்ற சமய தத்துவ மேதை ‘நாடகமே உலகம் என்பது மட்டுமல்லாமல், ஒரு புராண கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை நடித்துக் காட்டுவதை ‘ராகானுக பக்தி சாதனா’ என்று நாமகரணமிட்டு,தேவருலகம் எய்தும் வழிகளில் ஒன்று என்றொரு தேவரகஸ்யம் சொன்னாரல்லவா. அதைப் பகிர்ந்து கொண்டு, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.


Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 9:40 AM

radhakrishna001.jpg
[Quoted text hidden]

Tthamizth Tthenee Fri, Dec 2, 2011 at 11:13 AM

தேவரகசியம் ரொம்ப நன்னா இருக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Dinesh Rams Fri, Dec 2, 2011 at 1:01 PM

என்னால் கலை நடனங்களை ரசிக்க இயலுமான்னு தெரியல.. ஆனா அவற்றை படிப்பதற்கு சுவாரஸ்யமாய் உள்ளது.
[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Dec 3, 2011 at 9:51 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.


சில சன்மார்க்கங்கள் மனதில் பதிந்து விட்டால், ‘அஹோ பாக்யம்’ என்று மகிழலாம்.
ஒருமுறை
இருமுறை படித்ததும் சன்மார்க்கம் மனதில் பதிந்து விட்டது. ‘அஹோ பாக்யம்‘ என்று மகிழ்ந்தேன். 

நான் அதைத் தான் எதிர்பார்த்தேன், 65 வருடங்களாக. இன்று தான் அருவிகள் பல நீர் வீழ்ச்சியாக வந்து என்னை திக்குமுக்காட வைத்தன. இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். சுகானுபவங்களை என் இஷ்டப்படித்தான் எழுத முடியும். அது கூட ஒரு சுதந்திரம் தான்.
எத்தனை மகிழ்ச்சி இந்த உள்ளத்திலே!

அன்பன்
கி.காளைராசன்

Tuesday, May 7, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 5:00 PM


04. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: மரபு’ 
Inline image 1


அப்டேட்: 06 05 2013
இன்றைக்கு ரயில்வே போர்ட் படற பாடு பார்த்தேளோ?
கலோனிய அரசின் படைப்பு. உன்னதமான மரபுகள். கர்மமே கண்ணாயினார். சித்தரஞ்சன் எனக்கு அளித்தப் பாடங்கள் பல. பிற்காலம் ரயில்வே ஆடிட்டில் உயர்பதவிகள் வகிக்கும்போது, அவை கை கொடுத்தன. இந்திய தணிக்கை வரலாற்று தடிமன் நூலில் நிரந்தரமாக இது பொருட்டு என்னுடைய பெயர் பதிவானது எனக்குப் பெருமை தான்.
தேவ பீடம் என்று கருதப்பட்ட ரயில்வே போர்ட் இன்று தெரு நாய் போல அல்லாடுகிறது. 
ஹூம் தலை விதி!
இன்னம்பூரான்
06 05 2013



டைம் லைன்: 1960/62

உங்காத்துலே கல்யாணத்துக்கு பெண் இருக்கோ?  பேசாமா ரயில்வேக்காரனுக்கு கொடுத்துடுங்கோ. ராணி மாதிரி இருக்கலாம்அவ. தோட்டம்துரவுஅம்மாம்பெரிய வீடு,ஆளுஅம்புஅணையா அடுப்பங்கரை (ஃப்ரீ நிலக்கரி!)கான்சாமா (நள பாகம் இல்லை: தவிசு பிள்ளை)ஓசி பயணம் இத்யாதி. பட்டா தெரியும் பாப்பானுக்கு என்பார்கள். வாக்கப்பட்டா தெரியும்ரயில்வே சொகுசு!

சித்தரஞ்சனுக்கு ரயிலேறும் போது,  எத்தனை புதிய நண்பர்களை விட்டுச் செல்கிறோம் என்று தெரிந்தது. கல்கத்தாவிலிருந்து மொகல்சராய் பாஸ்ஸெஞ்சர் என்ற ஸ்லோ மோஷனில் ஏறப்போனால்வண்டியே காலியாக இருந்தது. ஜாஸ்தியாப்போன பத்து பேர் அன்று தான் எட்டுக்கோள்கள் ஒரே கோட்டில் வருவதால்சர்வநாசம் என்ற பீதி. எல்லாரும் வீட்டுக்குள்ளே.அடைந்து கிடந்தார்கள். மஹாப்பெரியவா சொன்னா என்று, 'வேயுறு தோளி பங்கன்...பாடிக்கொண்டே (இரைந்து) போய் இறங்கினாமுதல் கேள்வி, 'உனக்கு மூளை இருக்கா?' (சரோஜ் குமார் மித்ரா: ரயில்வே அக்கவுண்ட்ஸ்: ஸிம்லா நண்பன்.) அவன் கொடுத்த விளக்கம், ' கோள்கள் என்ன தான் செய்யாது உன்னை?  நீ வந்தது கொள்ளைக்காரர்கள் வழக்கமாக வரும் வண்டி.'

ஆபீஸ் போனால்மூன்று மரபுகள் முன் வைக்கப்பட்டன. எனக்கு முன்னால் இருந்த ஸீ.ஆர். முகர்ஜீ (ப்ரணாப் முகர்ஜியின் மாமாஅதையும் சொல்லிப்பார்த்தார்கள்) மரபு காத்தார் என்றார்கள்.

1. டெபுடி சீஃப் ஆடிட்டர் ஆஃபீஸுக்கு காலையில் மட்டும் ஒரு வேளை மட்டுமே வருகை தரவேண்டும். [பால்யமில்லியோ! அதை ஷரத்து
என்றே  ஒத்துக்கொண்டேன்.]
2. தணிக்கைத்துறை, கணக்குவழக்குத்துறை வாயிலாகவே மற்ற துறைகளுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
3. தலைமை அதிகாரிகள் மீட்டிங்க்குக்கு தணிக்கை அதிகாரிகளைக் கூப்பிடும் ரயில்வே மரபு இங்கு இல்லைஏனென்றால்நீ இள நிலை அதிகாரி. [2 & 3 அவுட்! வேலை நடக்கவேண்டாமோ?]

 இப்படியாக குப்பை கொட்டும்போதுநேருஜி வந்தார்மின்சார எஞ்சின் தயாரிப்பை தொடங்கி வைக்க. ஜெனெரல் மானேஜர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் ஜமால்பூர் பாய்*. அவரிடம் தணிக்கைத்துறையும்இந்த தருணத்தில் இட்ட பணி செய்யும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுஎங்களுக்கும் பணி அளிக்க உத்தரவிட்டார். அதற்குள்ஒரு நாள் என் மூட்டு நழுவி விடநேருஜி மீட்டிங்கில்என் இடத்தை நழுவவிட்டுசனி மூலையில் நின்றுகொண்டிருந்தேன்என் சிறிய மகன் வளைய வர. அந்த தோட்டத்தில் நுழைந்த நேரு அவர்கள்அவனிடம் வந்துஅவனை தூக்கிக்கொண்டார்; அருகில் இருந்த இடத்தில் அவனுடன் உண்ண அமர்ந்தார். மேஜை மேல் சப்ஜாடா காலி! ஒரு முறை முறைத்தாரே பார்க்கலாம். எல்லாம் மின்னல் வேகத்தில் வந்தன. சில நிமிடங்களுக்கு பிறகுமகிழ்ச்சியுடன் வளைய வந்தார்.

வங்காள முதல்வர் டாக்டர். பிதன் சந்திர ராய் அருமையாக ஒரு செய்தி சொன்னார். பிரதமரோ ராத்தங்குகிறார். இவர் கல்கத்தா திரும்பவேணுமாம். காரணம்: துர்காபூஜைசட்டம்,ழுங்கு காப்பாற்ற இவர் கல்கத்தாவில் இருக்கவேண்டும். இதழ்களில் வந்த அடுத்த காரணம்,இவர் வந்தால் தான் புதிய அமைச்சர்களுக்கு அறை ஒதுக்க இயலும்இரண்டும் உண்மை. டா. ராய் புகழ்வாய்ந்த டாக்டர். 80 வயதில்முதலமைச்சராக இருந்த போதும்ப்ராக்டீஸ் உண்டு. தற்காலம்நாம் எல்லாரும் திரு.ஜ்யோதி பாஸு அவர்களின் பெருமை சாற்றுகிறோமோ,அம்மாதிரி அவருக்கு அபரிமிதமான செல்வாக்குமக்களிடம்அவர் நேருஜியை 'ஜவஹர்என்று தான் உரிமையுடன் அழைத்தார். கொஞ்சநாள் கழித்து ஸ்டேட்ஸ்மன் இதழில் படித்த நினைவு: அவரது பிறந்த நாள் விழாவுக்கு அமோகமாக மலர் மாலைகள்பூச்செண்டுகள். அன்று அவர் இறந்து விட்டார். மலர் வளையங்களுக்குகல்கத்தா மாநகரத்தில் புஷ்பம் கிடைக்கவில்லையாம்.  

எல்லாம் நல்லபடியாக நடந்து விட்ட வேளையில் ஒரு ஆடிட் பூசல் புகுந்தது. ஜெனெரல் மானேஜர் என் தரப்பில் .பேசி தீர்த்து வைத்தார். நாளை  சொல்கிறேன்.

இன்னம்பூரான்

ஜமால்பூரில்தணிக்கைத்துறை எஸ்.ஏ.எஸ் மாதிரி, ரயில்வே நிர்வாகம் மேல்நிலையிலிருந்து பதவி நிலை ஒரு படி குறைந்த வகையில் நேரடித்தேர்வு செய்து கடினப்பயிற்சி அளித்தார்கள். ஒருவர் கூட சோடை போகவில்லை.
Tirumurti Vasudevan  
2/9/10

என்ன எப்ப பாத்தாலும் சஸ்பென்ஸ்லியே வெக்கறீங்க?
இதான் சஸ்பென்ஸ் அகௌண்ட் ஆ?
:-))
Innamburan Innamburan <innamburan@



அடடா!  சஸ்பென்ஸ் அகௌண்ட் கதையே தனி. வருகிறேன் சிகரமா.
____________
Innamburan

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!’


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 4:33 PM


அப்டேட்: 07 05 2013
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார்அரசின் பிரிதிநிதியாக…’ !

~ இது நடந்த காலகட்டம்: 1963 ~ 65.

ஐம்பது வருடங்கள் கழித்து:
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார்அரசின் பிரிதிநிதியாக…’ !

ஒரு தலித் சிறுவனுக்கு சாதிச்சான்று வாங்க சில வருடங்கள் முன்னால் தாசில்தாரிடன் போனால்: அதே பிச்சை பாத்திரம்.






02. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!
Inline image 1


நான்காவது பத்து தொடங்குகிறது.

‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார்அரசின் பிரிதிநிதியாக…’ !

மெல்ல மெல்லதயங்கிதயங்கிஆங்காங்கே சப்பைக்கட்டுக்களுடன்கசிந்து வந்த செய்தி:

மத்திய அரசு, 'வரவு எட்டணாசெலவு பத்தணாஎன்று அகலக்கால் வைக்கஅவ்வப்போது,ரிஸர்வ் வங்கியின் அறிவுரைப்படிகடன் பத்திரங்களை அளித்துகடன் வாங்குவது உண்டு. தகுந்த வரவேற்பு இல்லையெனில்அரசுக்கே தலைகுனிவு. மத்திய அரசு மாநில அரசுக்களை வற்புறுத்த (அதுஅந்த்தக்காலம்!)அவை கலெக்டர்தாசில்தார்ஆசிரியர்கால்நடை மருத்துவர் இந்தமாதிரிபொதுமக்களின் தேவையை நிறை செய்யும் கடமை உடையோர்களை எல்லாம்ஒரு இலக்கு (டார்ஜெட்) கொடுத்து இற்செறிக்கும்.

ஆந்திர அரசுஅவர்களின் 'இருபக்கமும் அடி வாங்கும் மத்தள நிலைகண்டுஇரக்கத்துடன் !,ஒரு வழி வகுத்தது. அந்த அலுவலகர்கள் (சொல்லப்போனால்எல்லா அலுவலகர்களும்) வந்து போகும் விண்ணப்பதாரர்களிடம்அரசின் சார்பாக பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காசுகளை சேமித்துதனியே வைத்துஅதிலிருந்துகட்ன் பத்திரங்கள் வாங்குபவர்களுக்கு இன்சென்டிவ் பணம் கொடுக்கலாம். (ஏழை டு செல்வந்தன்) அதற்கு விகிதாச்சாரம் வேறு. அரசு ஆணை கிடையாது. வாய்மொழி உத்தரவு. அரசல் பரச்லாகசில கடிதங்களில் பூடகமான குறிப்புக்கள். மானத்துக்கு மானமும் போச்சு. இப்போ,மேலாவிலேருந்து வசை வேறு கொட்டும்உங்களிடம்  சொன்னதிற்காகஎன்று அந்த தாசில்தார் (நல்ல மனிதன்) நொந்து கொண்டார். தன் தலை விதியை.  சற்று நேரம் கழிந்த பின், 'இது வேறே! அரசுப்பணமே இல்லை. நீங்கள் யார் கேட்பது? என்று விரட்டியும் பார்த்தார். என்க்கு என்னமோஅவர் மீது இரக்கம் தான் வந்தது. பழி தீர்ப்பதுஅதுவும் நாணயஸ்தனிடம்அரசியலர்க்கு கை வந்த கலை. 'ஆமாஞ்சாமிஆஃபீஸர்களும் வேறே.

'சட்புட்'னுஒரு காரியம் செய்தேன். ஐயாஉம்மை மட்டும் இழுக்கவில்லை. ஒரு மாதத்திற்குள், மேலும் நான்கு தாசில்தார்களை வளைத்துஐந்து அலுவலகங்களுக்கும் ஒரே ரிப்போர்ட் அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டுமற்ற மாவட்டங்களிலிருந்துநான்கு அலுவலகங்களைப்பொறுக்கிஒரே ரிப்போர்ட் தயார் செய்தோம். அது நமக்கே வசதியாகப்போய்விட்டது,  இந்த 'து வேறே' வியாதி பரவலாக உள்ளது என்று திட்டவட்டமாகச்சொல்ல முடிந்தது.

இப்படிச்சேர்த்த பணம் ஒரு லக்ஷம் ரூபாய்ஒரு கலெக்டரிடம் முடங்கிக்கிடந்தது.(அந்தக்காலத்தில் அது செல்வம்.) எங்களுடன் விதண்டாவாதம் பலநாட்களுக்குப்புரிந்த அரசு,கடைசியாக அரைமனதுடன்அந்த நிதியெல்லாவற்றையும் கஜானாவில் செலுத்த சம்மதித்தது. எவ்வளவு தூரம் கடைப்பிடித்தார்கள் என்று என்னால் சொல்ல இயலாதுமாற்றல் பூதம் காரணமாக. அது நல்ல பூதம். குஜராத் அரசு கட்டிவரும் ஒரு பெரிய அணைக்கட்டு அலுவலகத்துக்கு நிதி ஆலோசகனாக மாற்றப்பட்டேன். அங்கு தான் பல நெளிவு சுளிவுகளை அறிய வாய்ப்பு கிட்டியது. நான் செய்த பணிகளில்எனக்கு மன நிறைவைக்கொடுத்த பணி அது.
இன்னம்பூரான்

பி.கு.

1. கோயில் உண்டியில் பணம் போடும்போதோயாராவது உண்டியிலைக்குலுக்கி வரும்போதோநாம் கணக்கு கேடபதில்லை. சான்றோர்களிடம் கணக்கு கேட்காமல் இருப்பது ஒரு பண்பு என்று கூட கருதப்படுகிறது. 'காந்திக்கணக்குஒரு தமிழ் சொலவடை என்றாலும்அதைப்பற்றிஅதன் இழிச்சொல் பொருளைப்பற்றி காந்திஜிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். கணக்குத்தணிக்கையில் கடுமையான விதிமுறைகளை கட்டாயப்படுத்தின அவர்தான் பெற்ற நிதிக்கு ரசீது கொடுத்ததாக தெரியவில்லை. ஆரம்பகாலத்திலேயே,ஆட்டோக்ர்ஃப் போட பத்து ரூபாய் வாங்குவார். பெண்குழந்தைகள் மாட்டிக்கொண்டால்,நகைகளை கேட்டு வாங்கிவிடுவார். ஒரு பெண்மணியிடம்ஹார்ஸ்லி மலைக்குண்றில் தங்கியிருந்தபோதுஅவரது மகனை கேட்டு வாங்கிக்கொண்டார். நாம் எப்படி சுகபிரம்மரிஷி ஆடையுடுத்தவில்லை என்று கவலைப்படுவதில்ல்லையோஅவ்வாறு காந்தியின் கணக்கு கேட்கவேன்டியதில்லை என்று அக்கால சான்றோர்கள் முடிபு செய்தனர். அது வேறு யாருக்கும்திருமலை தேவஸ்தானம் உள்பட பொருந்ததாது. இது தெரியுமோ. தினந்தோறும் காலை திருமலையில்பெருமாளுக்கு கணக்குவழக்கு சொல்லப்படுகிறது.

2. கீதா: நன்றி. நாலு பேர் படிக்கிறா என்றால் எழுத ஆர்வம். ஒரு ஸெர்வரில் எழுதிமற்றொரு ஸெர்வரில் பதித்துகணிணியை ஒரு வகையாக பைபாஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்து போய் விடுகிறது.பரவாயில்லை. மின் தமிழில் பலவிஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. தெரிந்ததை எழுத முடிகிறது. தண்டியலங்காரமும்டால்ஸ்டாயும்நேற்று வந்த ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டியிருப்பதால் (quadratic equations also, for Rukmini) இனி கொஞ்சம் இடை வெளி விட்டு எழுத முடியும் போல தோன்றுகிறதுதினந்தோறும் எழுதாமல். கீதா சொல்படி கேட்டுசற்று பின்னோக்கிசித்தரஞ்சன் கலாட்டா பற்றி எழுதுகிறேன்பிறகு,பாதுகாப்பு அமைச்சரகம். சரியா?

3. நான்காம் பத்துஇன்று புது இழையில்.

4. உங்கள் கருத்துக்கள் என் பெட்டியில் விழவில்லை. ஏன்தேனியார் அனுப்பிய பிறகு தான்,பார்க்கமுடிந்தது.

Geetha Sambasivam 
2/3/10

இது தெரியுமோ. தினந்தோறும் காலை திருமலையில்பெருமாளுக்கு கணக்குவழக்கு சொல்லப்படுகிறது.//

சிதம்பரத்திலும் நடராஜருக்குக் கணக்குச் சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.
//ஒரு ஸெர்வரில் எழுதிமற்றொரு ஸெர்வரில் பதித்துகணிணியை ஒரு வகையாக பைபாஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்து போய் விடுகிறது//

வேர்ட் டாகுமெண்டில் எழுதிட்டு காப்பி, பேஸ்ட் பண்ணிடலாமே??


//டால்ஸ்டாயும்நேற்று வந்த ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டியிருப்பதால் (quadratic equations also, for Rukmini) இனி கொஞ்சம் இடை வெளி விட்டு எழுத முடியும் போல தோன்றுகிறது//

மெதுவாய், நிதானமாய் வாங்க. காத்திருக்கோம்.
_________________
சித்திரத்துக்கு நன்றி: http://www.inbaminge.com/t/v/Varavu%20Ettana%20Selavu%20Pathana/folder.jpg
இன்னம்பூரான்
06 05 2013