Showing posts with label தணிக்கை செய்வதில் தணியா வேகம். Show all posts
Showing posts with label தணிக்கை செய்வதில் தணியா வேகம். Show all posts

Tuesday, May 7, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 5:00 PM


04. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’ 
Inline image 1


அப்டேட்: 06 05 2013
இன்றைக்கு ரயில்வே போர்ட் படற பாடு பார்த்தேளோ?
கலோனிய அரசின் படைப்பு. உன்னதமான மரபுகள். கர்மமே கண்ணாயினார். சித்தரஞ்சன் எனக்கு அளித்தப் பாடங்கள் பல. பிற்காலம் ரயில்வே ஆடிட்டில் உயர்பதவிகள் வகிக்கும்போது, அவை கை கொடுத்தன. இந்திய தணிக்கை வரலாற்று தடிமன் நூலில் நிரந்தரமாக இது பொருட்டு என்னுடைய பெயர் பதிவானது எனக்குப் பெருமை தான்.
தேவ பீடம் என்று கருதப்பட்ட ரயில்வே போர்ட் இன்று தெரு நாய் போல அல்லாடுகிறது. 
ஹூம் தலை விதி!
இன்னம்பூரான்
06 05 2013



டைம் லைன்: 1960/62

உங்காத்துலே கல்யாணத்துக்கு பெண் இருக்கோ?  பேசாமா ரயில்வேக்காரனுக்கு கொடுத்துடுங்கோ. ராணி மாதிரி இருக்கலாம், அவ. தோட்டம், துரவு, அம்மாம்பெரிய வீடு,ஆளு, அம்பு, அணையா அடுப்பங்கரை (ஃப்ரீ நிலக்கரி!), கான்சாமா (நள பாகம் இல்லை: தவிசு பிள்ளை), ஓசி பயணம் இத்யாதி. பட்டா தெரியும் பாப்பானுக்கு என்பார்கள். வாக்கப்பட்டா தெரியும், ரயில்வே சொகுசு!

சித்தரஞ்சனுக்கு ரயிலேறும் போது,  எத்தனை புதிய நண்பர்களை விட்டுச் செல்கிறோம் என்று தெரிந்தது. கல்கத்தாவிலிருந்து மொகல்சராய் பாஸ்ஸெஞ்சர் என்ற ஸ்லோ மோஷனில் ஏறப்போனால், வண்டியே காலியாக இருந்தது. ஜாஸ்தியாப்போன பத்து பேர் ! அன்று தான் எட்டுக்கோள்கள் ஒரே கோட்டில் வருவதால், சர்வநாசம் என்ற பீதி. எல்லாரும் வீட்டுக்குள்ளே.அடைந்து கிடந்தார்கள். மஹாப்பெரியவா சொன்னா என்று, 'வேயுறு தோளி பங்கன்...' பாடிக்கொண்டே (இரைந்து) போய் இறங்கினா, முதல் கேள்வி, 'உனக்கு மூளை இருக்கா?' (சரோஜ் குமார் மித்ரா: ரயில்வே அக்கவுண்ட்ஸ்: ஸிம்லா நண்பன்.) அவன் கொடுத்த விளக்கம், ' கோள்கள் என்ன தான் செய்யாது உன்னை?  நீ வந்தது கொள்ளைக்காரர்கள் வழக்கமாக வரும் வண்டி.'

ஆபீஸ் போனால், மூன்று மரபுகள் முன் வைக்கப்பட்டன. எனக்கு முன்னால் இருந்த ஸீ.ஆர். முகர்ஜீ (ப்ரணாப் முகர்ஜியின் மாமா: அதையும் சொல்லிப்பார்த்தார்கள்) மரபு காத்தார் என்றார்கள்.

1. டெபுடி சீஃப் ஆடிட்டர் ஆஃபீஸுக்கு காலையில் மட்டும் ஒரு வேளை மட்டுமே வருகை தரவேண்டும். [பால்யமில்லியோ! அதை ஷரத்து
என்றே  ஒத்துக்கொண்டேன்.]
2. தணிக்கைத்துறை, கணக்குவழக்குத்துறை வாயிலாகவே மற்ற துறைகளுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
3. தலைமை அதிகாரிகள் மீட்டிங்க்குக்கு தணிக்கை அதிகாரிகளைக் கூப்பிடும் ரயில்வே மரபு இங்கு இல்லை; ஏனென்றால், நீ இள நிலை அதிகாரி. [2 & 3 அவுட்! வேலை நடக்கவேண்டாமோ?]

 இப்படியாக குப்பை கொட்டும்போது, நேருஜி வந்தார், மின்சார எஞ்சின் தயாரிப்பை தொடங்கி வைக்க. ஜெனெரல் மானேஜர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் ஜமால்பூர் பாய்*. அவரிடம் தணிக்கைத்துறையும், இந்த தருணத்தில் இட்ட பணி செய்யும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, எங்களுக்கும் பணி அளிக்க உத்தரவிட்டார். அதற்குள், ஒரு நாள் என் மூட்டு நழுவி விட, நேருஜி மீட்டிங்கில், என் இடத்தை நழுவவிட்டு, சனி மூலையில் நின்றுகொண்டிருந்தேன், என் சிறிய மகன் வளைய வர. அந்த தோட்டத்தில் நுழைந்த நேரு அவர்கள், அவனிடம் வந்து, அவனை தூக்கிக்கொண்டார்; அருகில் இருந்த இடத்தில் அவனுடன் உண்ண அமர்ந்தார். மேஜை மேல் சப்ஜாடா காலி! ஒரு முறை முறைத்தாரே பார்க்கலாம். எல்லாம் மின்னல் வேகத்தில் வந்தன. சில நிமிடங்களுக்கு பிறகு, மகிழ்ச்சியுடன் வளைய வந்தார்.

வங்காள முதல்வர் டாக்டர். பிதன் சந்திர ராய் அருமையாக ஒரு செய்தி சொன்னார். பிரதமரோ ராத்தங்குகிறார். இவர் கல்கத்தா திரும்பவேணுமாம். காரணம்: . துர்காபூஜை; சட்டம்,ஒழுங்கு காப்பாற்ற இவர் கல்கத்தாவில் இருக்கவேண்டும். இதழ்களில் வந்த அடுத்த காரணம்,இவர் வந்தால் தான் புதிய அமைச்சர்களுக்கு அறை ஒதுக்க இயலும்! இரண்டும் உண்மை. டா. ராய் புகழ்வாய்ந்த டாக்டர். 80 வயதில், முதலமைச்சராக இருந்த போதும், ப்ராக்டீஸ் உண்டு. தற்காலம், நாம் எல்லாரும் திரு.ஜ்யோதி பாஸு அவர்களின் பெருமை சாற்றுகிறோமோ,அம்மாதிரி அவருக்கு அபரிமிதமான செல்வாக்கு, மக்களிடம். அவர் நேருஜியை 'ஜவஹர்' என்று தான் உரிமையுடன் அழைத்தார். கொஞ்சநாள் கழித்து ஸ்டேட்ஸ்மன் இதழில் படித்த நினைவு: அவரது பிறந்த நாள் விழாவுக்கு அமோகமாக மலர் மாலைகள், பூச்செண்டுகள். அன்று அவர் இறந்து விட்டார். மலர் வளையங்களுக்கு, கல்கத்தா மாநகரத்தில் புஷ்பம் கிடைக்கவில்லையாம்.  

எல்லாம் நல்லபடியாக நடந்து விட்ட வேளையில் ஒரு ஆடிட் பூசல் புகுந்தது. ஜெனெரல் மானேஜர் என் தரப்பில் .பேசி , தீர்த்து வைத்தார். நாளை  சொல்கிறேன்.

இன்னம்பூரான்

* ஜமால்பூரில், தணிக்கைத்துறை எஸ்.ஏ.எஸ் மாதிரி, ரயில்வே நிர்வாகம் மேல்நிலையிலிருந்து பதவி நிலை ஒரு படி குறைந்த வகையில் நேரடித்தேர்வு செய்து கடினப்பயிற்சி அளித்தார்கள். ஒருவர் கூட சோடை போகவில்லை.
Tirumurti Vasudevan  
2/9/10

என்ன எப்ப பாத்தாலும் சஸ்பென்ஸ்லியே வெக்கறீங்க?
இதான் சஸ்பென்ஸ் அகௌண்ட் ஆ?
:-))
Innamburan Innamburan <innamburan@



அடடா!  சஸ்பென்ஸ் அகௌண்ட் கதையே தனி. வருகிறேன் சிகரமா.
இ
____________
Innamburan

Sunday, April 21, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.: ” எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.: ” எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?

Innamburan S.Soundararajan Sun, Apr 21, 2013 at 10:59 AM

16 01 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.: ” எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?
Inline image 1


நல்ல காலமும் பிறந்தது.  ஃபண்ட்ஸ் 4 வேதாளத்திற்கு வேறு முருங்கை மரம். எனக்கு டிபுடி அக்கெளண்டண்ட் ஜெனெரலாக ப்ரமோஷன், அதே ஆஃபீஸில். பொறுப்பு  பொதுப்பணித்துறை தணிக்கை. கண்ணில் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. PWD (Public Works Department) என்ற அந்த துறையை, Public Waste Department என்று ராஜாஜி சாடியதையும், அதை தனது முதல் எதிரி என்று பிரகடனம் செய்தததையும் நினைவு கூர்ந்து, வேலையில் மும்முரமாக இறங்கினேன். கண்கூடாக தெரிந்த விஷயம, ஆஃபீஸில் உட்கார்ந்து கொண்டு தணிக்கை செய்வது, தபாலில் கல்யாணம் செய்து கொண்டு இருப்பது போல என்றும், களத்தில் இறங்கி தணிக்கை செய்வதே உகந்தது என்றும் சொல்லலாம். ஆனால், களத்தில் இருந்து வரும் இன்ஸ்பெக்க்ஷன் ரிப்போர்ட் எல்லாவற்றுக்கும். அதே புரியாத மொழியில் வரும் பதில்களை கண்டு களைத்துப்போனேன்.


ஆபத்பாந்தவனாக வந்தார் திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் என்ற அக்கவுன்ட்ஸ் ஆஃபீஸர். அவரோ ஜாம்பவான். நானோ கத்துக்குட்டி/அவருக்கு மேல்நிலை அதிகாரி. அவருடைய திருமகனார் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு இது தெரியவேண்டும்.  திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் பொறுமையாக பாடம் எடுத்தார். வேலை வாங்கினார். டெஸ்ட் வைத்தார். பதவி நிலைகளையும் மறக்கவில்லை/ அதீதமாக பாராட்டவுமில்லை. அதேமாதிரி, திரு.ஜி.டி.சுந்தரராஜன்,திரு.டி,கே,வெங்கடாசலம். இவர்கள் எல்லாம் வேலை நன்கு அறிந்தவர்கள். மாற்றம் விரும்பாதவர்கள். என்று அந்த மூத்த அதிகாரிகள், நம்மை ஒருமையில் அழைக்கிறார்களோ, அன்று தான் பாடம் தொடக்கம் எனலாம். அப்படி ஒரு இடைவெளி.
தகரியமா, முதல் தடவை களத்தில் இறங்கியபோது, மற்றொரு விஷயம் புலப்பட்டது. போன இடம் ஒரு அணைக்கட்டு; மாலை ஏழு மணி; இருட்டிவிட்டது. உயர்நிலை பொறியாளரோ சகதியில் நின்று கொண்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அறிமுகம் ஆனவுடன், 'எனக்கு தணிக்கை ரிப்போர்ட்டுக்கு ஏன் பதில் போட நேரமில்லை என்று புரிகிறதா?'என்றும் கேட்டுவிட்டார். அது நியாயாமாகதான் பட்டது.  அவரும் பிறகு  Field realities என்று பாடம் எடுத்தார். நாம் அடக்கி வாசித்தால், அவர்கள் முனைந்து சொல்லிக்கொடுப்பார்கள். இது நிற்க.
ஆடிட் என்ற சொல்லுக்கு கேட்டு அறிவது என்று பொருள். கேட்க, கேட்க, முடிச்சுகள் அவிழும். 'தாட் பூட்' என்று லெட்டர் போட்டால், 'பூட் தாட்' என்று பதில் வரும். இப்டியேப்போனா, இங்குள்ள குமாஸ்தாவும், அங்குள்ள குமாஸ்தாவும், அதிகாரிகளின் கையொப்பத்தை பினாமியாக பாவித்து,குத்துச்சண்டை, பழிச்சண்டை போட்டுக்கொள்வார்கள், எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?

இன்னம்பூரான்

பி.கு.

கீதா சொல்ற மாதிரி, ஓம் ஐயா மாவட்ட ஆட்சிமுறைகளை எளிதாக, தெளிவாக, பகிர்ந்து கொண்டார். நல்லதாபோச்சு..ஆஃபீசுக்கு ஆஃபீசு வெவ்வேறு நடைமுறைகள். அவரவர் குழப்பங்கள் அவரவருக்கு; மற்றவர்களையும் பாதிக்கும். இந்த டாட்டந்ஹாம் துரையை பார்த்திருக்கிறேன். ஆட்டொக்ரஃப் கூட வாங்கியிருக்கிறேன். பஹூ கார்யாமாக, 1946ல் புதுக்கோட்டையில் அவருக்கு இறுதி மரியாதை வேறு. ஸ்கூல் லீவா? புதைத்த பிறகு தான் வீடு திரும்பினேன். அவரே ஒரு மாமாங்கம் புதுக்கோட்டை அட்மினிஸ்ட்ரேடர் ஆக காலம் போக்கினார். வேலையத்த வேலை. அவரை  விடுவோம்.

தற்காலம், அதிகாரிகளுக்கோ, ஊழியர்களுக்கோ இந்த முறை தெரிந்திருக்காது. தெரிந்தாலும் செய்யமாட்டார்கள். கேள்விமுறை இல்லை. கடந்த சில வாரங்களாக, ஜூனியர் விகடனில் மாவட்ட நிர்வாகங்கள் அலசப்படுகின்றன,வெளிப்படையாக. நிர்வாகத்தின் எல்லா உறுப்புகளும் பழுது அடைந்ததாக தோற்றம். தணிக்கைத்துறையும் பலவீனமாகாமல், இழுத்துப் பிடித்துக்கொண்டு வேலை செய்யவேண்டும். அங்கும் சீர்திருத்தம் தேவை.
Geetha Sambasivam 
1/16/10

//ஆஃபீஸில் உட்கார்ந்து கொண்டு தணிக்கை செய்வது, தபாலில் கல்யாணம் செய்து கொண்டு இருப்பது போல என்றும், களத்தில் இறங்கி தணிக்கை செய்வதே உகந்தது என்றும் சொல்லலாம்//

அற்புதமான உவமை!
//ஆடிட் என்ற சொல்லுக்கு கேட்டு அறிவது என்று பொருள். கேட்க, கேட்க, முடிச்சுகள் அவிழும். 'தாட் பூட்' என்று லெட்டர் போட்டால், 'பூட் தாட்' என்று பதில் வரும்//

இதுக்குத் தான் விநயம் என்ற சொல்லே தோன்றி இருக்கு!


//ஆபத்பாந்தவனாக வந்தார் திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் என்ற அக்கவுன்ட்ஸ் ஆஃபீஸர். அவரோ ஜாம்பவான். நானோ கத்துக்குட்டி/அவருக்கு மேல்நிலை அதிகாரி. அவருடைய திருமகனார் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு இது தெரியவேண்டும்.  திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் பொறுமையாக பாடம் எடுத்தார். வேலை வாங்கினார். டெஸ்ட் வைத்தார். பதவி நிலைகளையும் மறக்கவில்லை///

பார்க்கக் கொடுத்து வச்சிருந்தேன், இம்மாதிரியான நிகழ்வுகளை! மலரும் நினைவுகள்!!!!!!!!


//அவருடைய திருமகனார் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு இது தெரியவேண்டும்//

குருபக்தி!!!
Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
1/16/10

ஓ! அவரும் களப்பணிதான் செய்து கொண்டிருந்தாரா?
:-)))

2010/1/15 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
இருட்டிவிட்டது. உயர்நிலை பொறியாளரோ சகதியில் நின்று கொண்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/16/10

இது எப்டி? இன்றைய ஜூனியர் விகடனில் வந்த  ஒரு பகுதி:
"...''சமீபத்தில் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு களின்போது சாலையோரங்களில் இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிஞ்சி ருச்சு. ஈட்டி, சில்வர் ஓக், செண்பகம் உள்ளிட்ட அந்த மரங்களோட மதிப்பு கோடிக்கணக்கில் இருக்குமாம். இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அவற்றை வெட்டும் ஏலத்தை எடுக்ககான்ட்ராக்டர்களுக்குள் கடும் போட்டியாம். ஆனா, அவங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு, ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவரோட கை பாணத்துக்கு டெண்டரை குடுத்துட்டாங்களாம். அதுவும் சில லட்சங்களுக்குள்ளே சீப்பா கொடுத்திருக்காங்க. டெண்டரை எடுத்த அந்த கை பாணமோ, இதுதான் சாக்குன்னு சொல்லி, நல்லா இருக்கிற மரங்களிலும் ரம்பத்தை பாய்ச்சுறாராம். இந்த மேட்டர் தெரிஞ்சு விசாரணைக்கு வந்த வனத் துறையினரையும் வாகாய் 'கவனிச்சு' வாயடைச்சுட்டு, மங்களகரமா சுந்தரமா தொடருதாம் மரம் வெட்டு.'' 
மின் தமிழில்  ஜோதிஷம் பற்றி ஒரு இழை சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஸீலிட்ட டெண்டர் கவருக்குள் இருக்கும் மர்மம் காணப்பெறுமோ? 'முடியும். டாட்டந்ஹாம் கையேடு போடுவார். நாஙக் திரிபு மன்னர்கள்' என்று ஒரு பீ.டபிள்யூ.டீஆசாமி சொல்றாரு.
--
இன்னம்பூரான்
 
 

Geetha Sambasivam 
1/16/10


இன்னம்பூரான்
21 04 2013

Friday, April 19, 2013

“சாலமன் வந்தார்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -14






“சாலமன் வந்தார்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -14

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10


 14 01 2010

 “சாலமன் வந்தார்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -14
Inline image 1

சின்ன வயதிலேயே இந்த ஏ.ஜீ.யை  அப்பாவும், சக  ஊழியர்களும் சபிப்பதை கேட்டு இருக்கிறேன். அவர் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு.  ஊரை எல்லாம் அதட்டி வைத்துக்கொண்டிருப்பார் என்றும், எல்லாரையும் தட்டிக்கேட்கும் அவரை கட்டிப்போட ஆளில்லை என்று ஒரு தோற்றம். இதென்ன மிலிட்டேரி மோகம்? அதுவும் எடுத்தவுடனே,அஸிஸ்டெண்ட் அகவுண்டட் ஜெனெரலாமே! ஆடிட் கேப்டன், ஆடிட் மேஜர், ஆடிட் கர்னல் என்றல்லவா வரவேண்டும்?  இப்படியெல்லாம் வியந்தது உண்டு. இருந்தாலும், உலகில் எல்லா நாடுகளில், இவர்கள் ஜெனெரல் தான். தவிர, அட்வகேட் ஜெனெரல், ஸொலிசிட்டர் ஜெனெரல், டேரக்டர் ஜெனெரல் என்று எங்கும் ஜெனெரல் மயம்!

1954ல் தான் கண்டு கொண்டேன், இதெல்லாம் ஒரு மாயம் என்று. அகவுன்டென்ட் ஜெனெரல் ஆஃபீஸ் ஒரு கும்பமேளா; மாமாங்க நெரிசல், எங்கு பார்த்தாலும் ரெங்கநாதன் தெரு மாதிரி ஜே ஜே கூட்டம், தலை மாந்ததர் வருவதும், போவதும் புலப்படாது என்று. ஆனா வேலையும் நடக்கிறது. அந்த அலுவலகத்தின் தல புராணம் எழுதியாகிவிட்டது. தருணம் கிடைத்தபோது கதை மாந்தர்களின் அதிசய குணாதிசயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு முறை அப்பாவின் பிராயாணச்செலவைப்பற்றி அதிகப்பிரசங்கியாக ஒரு கேள்வி. "ரோடு இணைக்காத ஊருக்கு போனதாக, கணக்கு எழுதியிருக்கிறீர்கள். அது தவறு" என்று. இத்தனைக்கும், உள்ளூர் விவகாரம் தெரிந்த அவரது மேலதிகாரி அனுமதித்தது தான். கொதித்தெழுந்தார், முன்கோபியான, அப்பா. "நடந்து சென்றேன். அதற்கும் பயணப்படி உரிமை உண்டு".

பதில் இல்லை. பயணப்படி வாங்குவதில் ஏகப்பட்ட முறைகேடுகள், அவற்றைத் தடுக்க தணிக்கைத்துறையின் இயலாமை, அங்கும் தவறுகள் என  பார்த்திருக்கிறேன். பிறகு வருவோம். சாலமன் காத்திருக்கிறார்.

நான் கல்வித்துறை கணக்கு வழக்குகள் பார்த்துக்கொண்டு இருந்ததால், மான்யங்கள் அளிப்பதற்கு வந்த ஆணைகளின் மேல் ஒரு சிறப்பு முத்திரை, யான் இட்டால் தான், அதை அளிப்பார்கள், கருவூலத்தில். அந்த வகையில் திருச்சிராப்பள்ளி கல்வித்தந்தை திரு. ராமசாமி அய்யர், திரு. டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், பாதிரிமார்,என்.ஸீ.ஸீ ராணுவ அதிகாரிகள் ஆகியோர் என்னிடம் வருவதுண்டு. உடனடியாக நான் மான்யங்களை எடுத்தளிப்பதால்,அவர்கள் நண்பர்கள் ஆயினர். முதலில், 'காலேஜ் பையன் மாதிரி...’என்று ஆரம்பிப்பார்கள்; நான் கண்டு கொள்வதில்லை.

 இப்படியாக நிம்மதியாக பணி புரியும் காலத்தே, இடையில் புகுந்தார் சாலமன். ஒரு நாள் வீட்டுக்கு வந்த அவரின் கூற்று, " பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுக்கப்போகிறது என்று நம்பகத்தக்க வட்டாரங்கள் கூறுகின்றன. நாமும் தயாராகி வருகிறோம். இது ராணுவ ரகஸ்யம். என்.ஸீ.ஸீயில் இருப்பதால் எனக்கு வந்த பணியென்னவெனில், உங்களை ராணுவத்தில் சேர்க்கவேண்டும்; அல்லது நன்கொடை வாங்கி அனுப்பவேண்டும். ஜெனெரல் கரியப்பா அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழ் வரும்.” அடிக்கடி வந்தாராம். மிலிடெரி என்றாலே கிலியடைபவர்களிடம் நன்கொடை வாங்கிகொண்டாராம். என்னை வளைக்க ஒரு நாள் வந்தார். நான் ராணுவத்தில் சேருகிறேன் என்றேன். அவர் அதை ரசிக்காமல் நன்கொடைக்கு தொந்தரவு செய்ய, (ஏற்கனவே இது பித்த்லாட்டம் என்று ராணுவ அதிகாரிகள் மூலமாக அறிந்திருந்த) நான் அவரின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு, ( இல்லாட்ட ஓடிடிவானே.)

 போலீஸாரை இழுத்து வந்தேன். ஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டு வந்தால், வீடு போர்க்களமாக காட்சி அளித்தது! முதல்முறையாக, மாமியாரிடமிருந்து கடுமையான நேரடி தாக்குதல்.


மாமனார் யதார்த்த வாதியானார். மனைவியோ, வ்யாகூலத்தில். எதுத்தாத்துப்பாட்டியோ, "ஏண்டாப்பா! அந்த கட்டலப்போறவன் கத்தியாலே உன்னைக் குத்தினா, இந்த குழந்தை அழுமேடா?" அடுத்தவீட்டு ரிடையர்ட் கமிஷனர் மாமா, "இது வரை உங்கள் வீட்டில் தண்டல்க்காரன் வந்ததில்லை. நீ கொண்டு வந்து விட்டாய். இந்த தெரு உருப்பட்டால் போல!"

நள்ளிரவில் வந்தனரே, போலீஸும், சாலமன் ஸாரும்! அவர் பித்தலாட்டத்தை ஒத்துக்கொண்டார். ஏழை குடும்பம், ஆபரேஷன், கஞ்சி, கூழ்  என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், பலவற்றைக்கூறி,  இரங்கிய ஸ்வபாவம் உடைய போலீஸ், ஃப்.ஐ.ஆர். ஐ வாபஸ் வாங்கிகொள்ள சொல்லி என்னை வற்புறுத்தியது. தெருவே கூடி அதை ஆதரிக்க, நானும் பின்வாங்கிவிட்டேன். அப்பா பிறகு சொன்னார், போலீஸ்காரன் பணம் வாங்கியிருப்பான் என்று. அவருக்கு அத்துறையை நன்கு தெரியும். சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு தடவை தான் பின்வாங்கினேன் என்ற ஆறுதல்.

இன்னம்பூரான்

பி,கு (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
 விக்னேஷ்:
1.அடக்கி வாசிப்பது தணிக்கைத்துறையின் பாரம்பரியம். அக்காலத்திற்கு பொருந்தியது;தற்காலத்திற்கு அல்ல.

2. அரசாங்கத்திற்கு இது சாதகமாயிற்று.

3. மக்களும், இதழியலும், தொலைக்காட்சிகளும் சமீபகாலம் வரை தணிக்கை அ றிக்கைகளை பொருட்படுத்தவில்லை. இப்போதும், அரைகுறை கவரேஜ்.. இது எல்லாம் போதாது என்பது தான் நான் எழுதும் நூலின் அடித்தளம்.
4. கீதா சொல்லும் வரலாறு புரிகிறது. இங்கிலாந்திலேயே தற்காலம் அரசாங்கத்தை கடுமையாக குறை சொல்கிறோம், எங்கள் அமைப்புகளில்.

 தற்கால இந்திய அரசு இயந்திரத்தின் குறை: அசட்டை, மக்கள் மீது அலக்ஷியம், அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகளை மடக்கி, கைக்குள் போட்டுக்கொண்டது,  1947க்கு பிறகு தொடங்கிய அவலம் இது.  அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், கணிசமான அளவு வலையில் வீழ்ந்து விட்டார்கள்.
 திவாஜி: “…ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு?...”
இது ஆழமான, சிக்கலான, கேள்வி;புதிர். பழையன கழித்தலில் காட்டிய ஆர்வம் புதியன புகுத்தலில் இல்லாததால் வந்த விளைவு. பொறுப்பான விடை அளிக்க ஒரு நூலே எழுதலாம்.எதற்கும் வேறு இழை தொடங்கிவிட்டீர்கள். அதில் எல்லாருமே தொடருவோம்.,  விரைவில். கருத்துகள் வேறுபடலாம். நல்லது தானே. வெளிச்சம் கிடைக்கலாம்.

Geetha Sambasivam <
1/14/10

.//முதலில், 'காலேஜ் பையன் மாதிரி...’என்று ஆரம்பிப்பார்கள்; நான் கண்டு கொள்வதில்லை.//



5. திவாஜி: “…ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு?...”'//

காணாம ஒண்ணும் போகலை. செயல்படுத்தும் நேர்மையான அதிகாரிகள் குறைவு, அவர்களையும் சீந்துவாரில்லை, செயல்படுத்தினாலும் கெட்டபெயர் தான் நம் (மத்திய) தேர்தல் கமிஷனர் மாதிரி எல்லாப்பக்கத்திலிருந்தும் இடி வாங்கிக்கணும்!
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: