அன்றொரு நாள்: மே 18:
மேதாவிலாசம்
தீர்க்கதரிசிகள், தத்துவபோதகர்கள், நீதி நூலாசிரியர்கள், வேதாந்த சிரோன்மணிகள், சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு ஒரு உபத்ரவம்: அவர்களது கூற்றுக்களை, மற்றவர்கள், காலங்காலமாக, அவரவர் போக்கில் பொருள் காண்பது தான், அது. திருவள்ளுவர் படும் பாடு கண்கூடு. பல சாக்ரட்டீஸ் மேற்கோள்கள் அவர் அறியாதவை. பிளேட்டோவின் பிளேட்டுகள் திருப்பிப்போடப்படுகின்றன. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் படிக்காதவர்களின் அனர்த்தம் தாங்கமுடியவில்லை. சொன்னால் பொல்லாப்பு. போதி தர்மரை பற்றி அவரை பற்றி அறியாதவர்கள் தான் அழுத்தமாக கருத்துத் தெளிக்கிறார்கள். கபீர் தோஹாக்களுக்கு குபீர் விளக்கங்கள் வந்த வண்ணம். வள்ளலாரை எப்படியோ எல்லாம் முன் நிறுத்துகிறார்கள்! கலீல் ஜிப்ரானின் லெபனீஸ்/ஆங்கில ஆக்கங்களுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. ‘என்னை ஆசானின் பீடத்தில் அமர்த்தாதீர்கள்’ என்று சொல்லி தனக்கு அமைக்கப்பட்ட ஆதீனத்தைக் கலைத்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அனந்தகோடி சிஷ்யர்கள்.
இந்த உபத்ரவத்திலிருந்து பன்மொழிப்புலவரும், விஞ்ஞானியும், கணக்கு சாத்திர வல்லுனரும்,தத்துவ ஞானியும் அமரகாவியங்கள் படைத்த கவிஞருமான அப்து’ல் ஃபாத் உமர் இப்ன் இப்ராஹீம் கய்யாம் (11வது நூற்றாண்டு ஈரானியர் எனலாம்.) அவர்களும் தப்பவில்லை. அவர் மே, 18, 1048ல் பிறந்தவர் என்று விக்கிப்பீடியா சொன்னாலும், நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அவர்கள், இவருடைய பிறந்த/இறந்த தேதிகளை நிர்ணயிக்க முயலவில்லை. இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸர் எட்வர்ட் ஃபிட்ஸ்கெரால்ட் அவர்களின் இலக்கிய சேவை பாராட்டத்தக்கது. அதில்
Of knowledge naught remained I did not know,
Of secrets, scarcely any, high or low;
All day and night for three score and twelve years,
I pondered, just to learn that naught I know.
|
(Rubā‘iyyāt, Sa‘idī 1991, p. 125)
|
என்ற வரிகள் மிக பிரபலமானவை. அநேகர் அதற்கு மேல் போவதில்லை. எனக்கு பிடித்த வரிகள்:
Of knowledge naught remained I did not know,
Of secrets, scarcely any, high or low;
All day and night for three score and twelve years,
I pondered, just to learn that naught I know.
|
(Rubā‘iyyāt, Sa‘idī 1991, p. 125)
|
‘72 வருடங்களாக, இரவும் பகலுமாக, நான் படித்ததும், அதை பற்றி சிந்தித்ததும், மர்மங்களும், ரகசியங்களும்...ஹூம்! கற்றது கைமண் அளவு: கற்க விட்டுப்போனது கடலளவு’ (ஒரு துளி மொழியாக்கம்)
நான் இத்துடன் நிறுத்தவில்லை. விமானம் இறங்கும் நேரம் நெருங்கிவிட்டது.
தொடருதாக உத்தேசம். விட்டுப்போகக்கூடாது பாருங்கள்.
இன்னம்பூரான்
18/19/05 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment