Thursday, May 16, 2013

பாமரகீர்த்தி -6


பாமரகீர்த்தி -6


பலவருடங்களுக்கு முன்னால் மும்பையில் திலீப் பாப் என்பவர் 'வாய்மொழி வரலாறு' சேகரம் செய்ய ஆரம்பித்தார். அதை கவனித்த நான் அலஹாபாத்தில் நூறு வயது ஆன ஒரு மாஜி போலீஸ் உயரதிகாரியை பேட்டி கண்டேன். நன்முத்துக்கள் உதிர்ந்தன. நான் பெரிதும் மதித்துப்பாராட்டும் உலகளாவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) சில நேர்காணல்களை பதிவு செய்தது. அதில் மிக முக்கியமானது முதுமையில் வாடிய எழுத்தாளர் திருமதி.ராஜம் கிருஷ்ணனை பேட்டி கண்டது. கருத்தா: திரு. தமிழ்த்தேனி. அவர் எனக்கு ஜன்ம தின வாழ்த்து அளித்த விதம் மிக நேர்த்தி. அவரின் ஐயமும், வினாவும், விடையும:

'பாமர கீர்த்தி' என்று நான் அடியெடுத்துக்கொடுக்க, பலர் பல்லவி பாடினார்கள். தொடர்ந்து கொண்டே போகும் இந்த இழையில் அவர் கூறிய கருத்து இங்கே:

"அமரர் கேசவனில் தொடங்கினோம்.
டாக்டர் மாருதி ராவ் அவர்களை வாழ்த்தினோம். ஜெர்மனியிலிருந்து வந்த நூரானி அத்தையின்

கீர்த்தி இசைத்தோம். தமிழனின் வள்ளன்மையை போற்றினோம். எங்கிருந்தோ கொடியாலம் ஜமீன்தார் ரங்கஸ்வாமி ஐயங்காரை, அவரது அரவிந்த/மஹாகவி பாரதி/மஹாத்மா காந்தி சேவையை/ தேசாபிமானத்தை, இங்கு கொணர்ந்து பாராட்டினோம். திருவேங்கிடமணி புலவர் பெருமான் முத்துக்கண்ணப்பரின் வரலாற்றை படைக்கிறார், இன்னொரு இழையில். ஏற்கனவே, த.ம.அ. ஜுனைதா பீகம் கஹானியை அளித்திருக்கிறது. ருக்மணியின் கதா சாகரமும், கமலம்மாவின் சாஹித்யங்களையும் கொஞ்சம் கேட்டாச்சு."


 மேற்கூறிய  அனைவரும் பாமரர்களா? ஒரு சந்தேகம்   பாமரன் எனறால்  யார்? என்று கேட்ட அவருக்கு அடுத்த சந்தேகம் அடைப்புக்குறிக்குள்: (அதிகப் ப்ரசங்கத்துக்கு  மன்னிக்கவும்)
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
பதில். ஆமாம்.
Image Credit:http://farm5.staticflickr.com/4016/4569889903_765c80dde5_z.jpg

இன்னம்பூரான்
16 05 2013

No comments:

Post a Comment