Google+ Followers

Wednesday, April 10, 2013

அவளொரு சகாப்தம். II edition

GmailInnamburan S.Soundararajan


அவளொரு சகாப்தம்.
12 messages

Innamburan S.Soundararajan Mon, Apr 8, 2013 at 3:24 PM

To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , "vallamai@googlegroups.com" , vallamai editorஅவளொரு சகாப்தம்.

அவளொரு அழகிய பெண்மணி; அழுத்தமான அரசியல்வாதி; அமுத்தலான தலைவி. சற்று நேரம் முன்பு இன்று (ஏப்ரல் 8, 2013) 87 வயதில் மறைந்த சீமாட்டி மார்கெரெட் தாட்சருடன் ஒப்பிடத்தகுதியான ஆண்கள் ஒருவரும் வரலாற்றுக் கருவூலத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. இரண்டு பெண்மணிகள் கிடைத்தனர் - கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா). மூவருக்கும் நாட்டுப்பற்று, மக்கள் நலம், தேசபாதுகாப்பு முக்கியம். மூவரும் சந்தேகப்பிராணிகள்; தயங்காமல் ஓங்கி அடிப்பவர்கள்; அஞ்சா நெஞ்சம் இந்த மூவருக்கு மட்டும் தான்.
பாருங்களேன். 11 வருடங்கள் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது, எல்லாவற்றையும் உருட்டி, எல்லாரையும் மிரட்டி, நாட்டு நடப்புகளை தலை கீழாய் புரட்டி, குறுக்கே வந்த குட்டிச்சாத்தான்களை விரட்டி, தான் நினைத்ததை எல்லாம் சாதித்த அதிசய பெண்ணரசி, அவர். அவருடைய ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு அணுகுமுறைக்கு ஒரு மேற்கோள்: “என்னுடைய அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்குக்கவலை இல்லை, அவர்கள் என் சொல்லுக்குக் கட்டுப்படவேண்டும். அவ்வளவு தான்.”
அவருடைய ஆட்சியின் நேரடி பயன்: பாமர வாக்காள பெருமக்களுக்கு சமுதாயத்தில் முக்கிய பங்கு, வீடு வாங்க வசதி, நாட்டு சொத்தில் பங்கு இத்யாதி நன்மைகள் விளைந்தன. பல விஷயங்களில் அவருடைய முதலாளித்துவத்துடன் எனக்கு சம்மதமில்லை. பெருந்தலைவர்கள் பலர் அவ்வாறு தான் சிந்தித்தனர். ஆனால், யாரும் அவருடைய நாட்டுப்பற்றில் குறை காண இயலவில்லை.  ஒரு குறை இருந்தது எனலாம். தன்னுடன் ஒத்துப்போகாதவர்களை அவர் திரஸ்கரித்தார். அதுவே அவருக்கு, அரசியல் துறையில், வினையாகி விட்டது. அவருடைய கன்ஸெர்வேட்டிவ் கட்சியே இரண்டாக உடைந்து, அவரை வெளியேற்றும் வரை தீவிரமாகி விட்டது. 1925 ல் பிறந்த சீமாட்டி மார்கெரெட் தாட்சர் 1959ல் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1970ல் ஹீத் என்ற பிரதமர் இவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். கொள்கை அடிப்படையில் சமார்கெரெட் தாட்சர் 1975 ஹீத் அவர்களை கழட்டி விடுவதில் பெரும்பங்கு வகித்தார். 1979ல் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஆனார். உட்பூசல் விளைவாக 1990ல் வேலை இழந்தார்.
முதுமையில் மறதி வியாதியால் அவதிப்பட்டார். அவருடைய கணவர் இறந்து பல வருடங்கள் ஆயின. அவர் இருப்பதாகத்தான் இவரது பேச்சு இருக்கும்.
அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு தான். சீமாட்டி மார்கெரெட் தாட்சரின் ஆத்மா சாந்தியடைக.
உலகமே சிறியதாகி விட்டது. தமிழனுக்கு மற்ற நாட்டு வரலாறுகள் தெரிவது நல்லதே. இந்த நூற்றாண்டின் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான மார்கெரெட் தாட்சரை பற்றி அறிவது நலனே.
இன்னம்பூரான்
08 04 2013
சித்திரத்திற்கு நன்றி: http://ecx.images-amazon.com/images/I/51KlJ4il6tL._SX500_.jpg

Subashini Tremmel Mon, Apr 8, 2013 at 9:35 PM
ஆம்.
 இன்று காலை செய்தி வாசித்தேன். அரசியல் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற பெண்மணிகளில் ஒருவர்.

சுபா

 

PRASATH

இன்று அலுவலகத்தில் எனது சக ஊழியர் இவரைப் பற்றிச் சொன்னார்...

கண்டிப்பாக உங்களிடமிருந்து பதிவு வந்திருக்கும் என நினைத்தேன்... எனது நினைப்பு வீணாகவில்லை...

தகவல் பகிர்விற்கு நன்றி ஐயா...

coral shree Tue, Apr 9, 2013 at 1:04 AM


அன்பின் இ ஐயா,

அன்றொரு நாள் போல அவளொரு சகாப்தம் அழகான தொடருக்கான தலைப்பு! நல்லதொரு சிந்திக்க வைக்கும் பதிவு. நன்றி.

அன்புடன்
பவளாshylaja Tue, Apr 9, 2013 at 3:52 AMஅவள் ஒரு சகாப்தம் தான்!  உங்க எழுத்தில் படிக்கிறபோது அது நிரூபணமாகிறது இசார்...நல்லதொரு  இடுகை!Geetha Sambasivam Tue, Apr 9, 2013 at 8:17 AM


மார்கரெட் தாட்சருக்கு என் அஞ்சலிகள்.  ஆனாலும் இந்திரா காந்தியைக் குறித்து என் கருத்து வேறு மாதிரி. 


சித்திரத்திற்கு நன்றி: http://ecx.images-amazon.com/images/I/51KlJ4il6tL._SX500_.jpg

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

 


--
[Quoted text hidden]

Gopalan Venkataraman Tue, Apr 9, 2013 at 8:43 AM


மார்கரெட் தாட்சர் காலம் காலமாக ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள தேசபக்தர்கள் நிறைந்த நாட்டில் இருந்த தலைவர். எதிர்ப்பு இருந்த போதிலும், அவர் ரகசியத் தாக்குதலுக்கு ஆளானபோதும் அந்த நாட்டில் நிலவிய தேசபக்தி, கல்வி அறிவு, பொருளாதார மேம்பாடு இவற்றால் அவரால் ஒரு எஃகு மனுஷியாக இருக்க முடிந்தது. கோல்டா மேயரின் நிலைமை வேறு. தாக்கி அழிக்கப்படும் தருவாயில் இருந்த ஒரு இனத்தை வீரமிக்க, சுயநலமில்லாத, எதிரிகளை ஈவிரக்கமின்றி அழிக்கும் ஆற்றல்மிக்க இனமாக உருவாக்குவதிலும், சோதனையான நேரங்களில் விவேகத்தோடு நடந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதும், பிரிட்டிஷ் சைப்ரசிலிலுருந்து யூத இன மக்களை பிரிட்டிஷ் கண்காணிப்பையும் மீறி தோணிகளில் கொண்டு வந்து இஸ்ரேலில் குடியேற்றிய ஆண்மை மிக்க செயல்பாடுகளிலும் அவர் ஒரு இரும்புப் பெண்ணாக இருந்தார். ஆனால் இந்திரா காந்தி, அவருடைய தந்தையோடு உலகம் பூராவும் சுற்றி வந்து பெற்ற அரசியல் அறிவு, சாணக்கியத்தனம் இவற்றோடு, இளமையில் தந்தை சிறையில், தாய் காசநோய் நோயாளியாக அன்னிய மண்ணில் இந்த நிலையில் மகாத்மாவை அண்டி வந்தபோது, பெரிய இடத்துப் பெண்ணான உன்னால் என்ன சேவை செய்ய முடியும் என்றபோது, முடியும் என்று 'வானர சேனையை' உருவாக்கி டில்லி நகர மதக் கலவரத்தின் போது தனது வீரமிக்க செயல்பாடுகளால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெண்மணி. ஆனால் இந்திய அரசியலின் நெளிவு சுளிவுகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்வது, காலை வாரி விடுதல், ஆள் கவிழ்த்தல் போன்ற அரசியல் செயல்பாடுகளால் மனம் வெறுத்து ஒதுங்காமல், சூழ்ச்சிக் காரர்களின் முகத் திரையைக் கிழித்து, எதிர்ப்பு எந்த பெரிய இடத்திலிருந்து வந்தாலும் கவலை இல்லை என்று பலரையும் பிடித்து உள்ளே தள்ளி, நாட்டில், முதன் முறையாக ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நேரம் தவறாமையையும் கொண்டு வந்த ஆண்மை படைத்த வீரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலைமை 'ஜனநாயக‌க் கொலை' என வர்ணிப்பவர்கள் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகம் நிலவி வந்ததா? ஏமாந்தால் முதுகில் ஏறி சவாரி செய்யவும், அடுத்தவன் தேடிச் சேமித்தவற்றை ஒரே இரவில் கொள்ளை கொண்டு போகும் கொள்ளைக்காரர்கள் போல, நாட்டுக்கு எதையும் செய்யாமல், ஆதாயங்களை மட்டும் மலை மலையாய்ச் சேர்த்தவர்கள் நிறைந்த 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' எனும் நிலைமையை ஒரு பெண்ணாக நாணி ஒதுங்காமல், ஆண்மையாளராக இருந்து எமர்ஜென்சியில் நாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தவர் இந்திரா. அந்த நிலைமை ஒரு பத்து ஆண்டுகளாவது இந்தியாவில் இருந்திருந்தால், நாடு ஓரளவு சீரடைந்திருக்கும். கொள்ளைக்காரர்கள் கையில் நாடு சிக்காமல் இருந்திருக்கும். ஜனநாயகம் எனும் பெயரில் நடந்த கேவலங்கள் தடுக்கப் பட்டிருக்கும். கம்யூனிஸ்டுகள் விரும்பியதுகூட ஜனநாயகம் அல்ல. பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் தான். அந்த வகையில் இந்திரா காந்தியை பாரத புத்திரியாக, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவரை ஒரு ஆதர்ச பெண்மணியாகப் பார்க்கிறேன். அவரை வேறுவிதமாக விமர்சிப்பவர்களுக்கு அதற்கு உரிமை உண்டு. எனினும் என்போன்ற கருத்துடையவர்களும் நிறையவே உண்டு என்பதை வலியுறுத்தவே இந்த கருத்தாக்கம். நன்றி.

 -- 
VGopalan

-

Geetha Sambasivam Tue, Apr 9, 2013 at 9:03 AMGopalan Venkataraman 

 I dont understand the meaning of this expression. If my opinion is wrong, I welcome such expression, if others feel that I am correct partially or wholly it is also welcome. But in my opinion Madam Indira Gandhi is the best Prime Minister, although I do not have faith in the Congress party after Independance. I admire the boldness and decision making of Indira Gandhi.
[Quoted text hidden]
--
VGopalan
[Quoted text hidden]

Nagarajan Vadivel Tue, Apr 9, 2013 at 9:16 AMஅவருடைய ஆட்சிக் காலத்தில் அடிக்கடிஅந்த நாடுக்குச் சென்றதுண்டு.  துணிச்சலான ஆனால் பின் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தெறிந்து பேசுபவர் என்பது அங்கு வாழ்ந்த பாமரர்களின் கருத்து
ஒருமுறை கடுமையான பனிக்காலம் அங்கு வாழ்ந்த அரசு உதவிவேண்டி நிற்கும் ஏழைகளுக்கு கம்பளிப் போர்வை கொடுக்கலாமே என்று வைத்த வேண்டுகோளுக்கு என்னுடைய அரசு சீரான பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் கொள்கைப்பிடிப்புடையது வறியவர்களாக ஒரு போர்வைக்கு வக்கில்லாமல் வாழ்வது அவர்களின் குறை அதற்கு என் அரசு ஒன்ன்றும் செய்யாது என்று சொன்னார்

அப்போது லண்டனில் ஒரு பெண்மணி அரசியல் கலப்பில்லாமல் பரிவுணர்வோடு ஏழ்மைப்பட்டவர்கள் வாழ்விடங்களுக்குச் சென்று இலவசமாக குளிரில் இருந்து காத்துக்கொள்ள கம்பளி ஆடைகளைக் கொடுத்தார்
அரசில் அங்கமில்லாத அந்தப்பெண் இறந்தபோது லண்டன் மக்கள் வடித்த கண்ணீர் மனித வரலாற்றில் எந்தப் பெண்மணிக்கும் கிடைக்கும் என்று நம்ப வழியில்லை
டயானா என்ற பெண்மணி நல்ல பெண்மணி அவளுக்கு இரும்புப் பெண்ண் என்ற பட்டமெல்லாம் பொருந்தாது
தாட்சருக்கு முற்றும் முதலும் எதிமறையாக இருந்தவர் டயானா
நாகராசன்
[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Apr 9, 2013 at 9:16 AM


அவரவர் கருத்து அவரவருக்கு. அவ்வளவே. எமர்ஜென்சியின் ஒரு பக்கத்தை மட்டுமே பாராட்டுவது சரியல்ல. அரசியல் குறித்த விவாதங்கள் இங்கே தேவையில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Innamburan S.Soundararajan 

1.'... என்போன்ற கருத்துடையவர்களும் நிறையவே உண்டு என்பதை வலியுறுத்தவே இந்த கருத்தாக்கம். நன்றி...'

பாயிண்ட் மேட், திரு.கோ.வெ. உங்கள் வரவு நல்வரவு ஆகுக. ஒரு பாயிண்ட்: இது இரங்கல் இழை.

2. '...அவரவர் கருத்து அவரவருக்கு. அவ்வளவே. எமர்ஜென்சியின் ஒரு பக்கத்தை மட்டுமே பாராட்டுவது சரியல்ல. அரசியல் குறித்த விவாதங்கள் இங்கே தேவையில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  ..'

பாயிண்ட் மேட். திருமதி. கீ.சா. ஸுப்பர் மேட்.

3. '...அரசில் அங்கமில்லாத அந்தப்பெண் இறந்தபோது லண்டன் மக்கள் வடித்த கண்ணீர் மனித வரலாற்றில் எந்தப் பெண்மணிக்கும் கிடைக்கும் என்று நம்ப வழியில்லை..'

ஆமாம். ஆண்கிண்டாமணிகளுக்கும் கிடைக்காது, பேரா. ஒரு பாயிண்ட்: MT was ruthless. But, you are quoting her slightly out of context. Not that I agree with her brand of capitalism. I praised her other qualities, you will find, if you read my piece again. The world was all sympathy for Diana, the beautiful butterfly, who was cocooned in a gilded cage. She was, of course, a graceful lady. You cannot compare the Prime Minister with a wealthy socialite.

ஓடிட்றேன்.

இன்னம்பூரான்