Saturday, April 13, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: #: ஆசிரியர்கள் க்ஷேம நிதி





Innamburan S.Soundararajan Sat, Apr 13, 2013 at 10:51 AM












1/5/10
3. தணிக்கை செய்வதில் தணியா வேகம்:
ஆசிரியர்களின் க்ஷேம நிதி .
நான் முதலில் ஏற்றுக்கொண்ட பொறுப்பில் பள்ளி/கல்லூரி ஆசிரியர்களின் க்ஷேம நிதி ஒன்று. பதவிக்கு பெத்த பேரு. அஸிஸ்டெண்ட் அகவுன்டெண்ட் ஜெனெரல். என்னிடம் சூபரின்டெண்டென்ட் ஆக இருந்தவர்கள், பிரபல புதின ஆசிரியர் பீ.வி.ராமகிருஷ்ணனும், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரும் ஆவர். நண்பர்களாக பழகுவோம்.

இந்த க்ஷேம நிதி கோப்புக்கள் அல்லாடும், ஒரு வினாவுக்கு ஒரு பதில், பிறகு அடுத்த வினா என்று 'அவள் ஒரு தொடர்கதையாக'.   சொந்தப்பணம் கைக்கு வருமுன் ஆசிரியப்பெருமக்கள் செத்து சுண்ணாம்பாகி விடுவர். இப்படியிருக்கும்போது, ஒரு சுப ராத்திரியில், நான் தஞ்சாவூர் பயணிக்க, அதே வண்டியில், டவாலிப்ப்யூன், அது, இது என்று ஒரு உத்யோகஸ்தரும் வந்தார். பேசிக்கொண்டே பொழுது போக்கினோம். முதலில், ஏதோ பணக்காரப்பையன் ஏ.ஸீ. ஃபர்ஸ்ட் க்ளாஸ் என்று என்னை ஒதுக்கிய அவர், எனது வேலைப்பளுவைப்பற்றி அறிந்து வியந்து போனார்.  அவர் தான் நமது பெருமிதத்துக்குரிய நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள். தமிழ்த்தேனீ எடுத்துரைத்த முன்யோசனையோடு, அவரிடம், பிரச்னையையும், தீர்வையும் கூறினேன். அதாவது, நான் தயாரித்த படிவத்தை பூர்த்தி செய்து கல்வி அதிகாரிகள் அனுப்பினால், ஒரே தடவை வினா, விடை என்று இந்த க்ஷேமநிதி காசோலை அனுப்ப வழி சொன்னேன். அக்காலம், என் ஆசிரியர்களுக்கு தனிக்கடிதமும் அனுப்பிவந்தேன். அது கேட்டு மகிழ்ந்த அவர்,எல்லா ஜில்லாக்களுக்கும் கண்டிப்பாக கடிதம் எழுதினார். எல்லாம், ரயிலில் எடுத்த முடிவு. எங்கள் முயற்சி பலன் அளித்தது. இந்து பத்திரிகையில், இந்த புதிய வேகத்தை பாராட்டி கடிதங்கள் வந்தன. 

இன்னம்பூரான்



--
Geetha Sambasivam 
1/5/10

to mintamil


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/5/10

to mintamil

ஓஹோ! பூமாரி பெய்கிறது. ஒவ்வொரு புஷபத்திற்கும் ஒவ்வொரு நிகழ்வு சொல்லல்லாமே!.


இன்னம்பூரான்
Geetha Sambasivam 
1/5/10

to mintamil

super
Venkatachalam Subramanian 
1/5/10

to mintamil

ஓம்.
பெயர் சொல்லவிரும்பாத ஒரு ஆசிரியர் அவர்
.
தன்னுடைய சேமநல நிதியிலிருந்து கடன் விண்ணப்பித்திருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நடையாக நடந்தும் கடன் பெற இயலவில்லை.

 நேரில் வந்து தொடர்புடைய அலுவலர்களிடம் பேசிய போதெல்லாம் ஏதாவது ஒரு குறையினைச் சுட்டி எழுதி திருப்பிவிடுவார்கள்.  குறை சுட்டப்பட்ட அளவில் மீளவும் பதில் எழுதி சம்ர்ப்பிப்பார். இவ்வாறு பத்து முறைகளுக்கு மேல் திரும்ப வந்த கடன் விண்ணப்பத்துடன் அந்த ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் வந்தார். ஆணையர் தனியாக உட்கர்ந்து கோப்புகளைப் படித்துக் கொண்டிருந்தார். 

ஆசிரியர் உள்ளே வர எத்தனிக்கையில் ஒரு ஊழியர் அனுமதி பெற்ற பின்னர் உள்ளே செல்லமுடியும் என்று கூறினர். அவரை அசட்ட்டை செய்து ஆசிரியர் உள்ளே நுழைந்து ஆணையருக்கு வணக்கம் சொன்னார். 

குனிந்த தலை நிமிராமல் ஆணையர் ‘எங்கோ மழை! எங்கோ இடி!’ என்றாற்போல் தன் வேலையில் இன்னமும் தீவிரமாக ஈடுபட்டார். ’டமார் ‘ என்று ஓர் ஓசை!

ஆசிரியரின் கையில் வைத்திருந்த அரிவாள் ஆணையரின் அகலமான மேஜையின் மீது இறங்கி, உள் நுழைந்து, கைபிடி மட்டும் ஆசிரியரின் கையில் இருந்தது. 

ஓசையின் விளைவாய் தியானம் கலைந்த ஆணையர் தன் முன்னால் நிகழ்ந்த சம்பவத்தை முதல் முறையாகத் திரும்பிப் பார்த்தார். 
என்ன! என்ன! என்று கேட்டுக்கொண்டே ஆசிரியரின் முகத்தை அப்போதுதான் பார்த்தார். ஒருவாராக ஆயுதம் ஒன்று மேஜையைத் தாக்கியிருக்கிறது என்பதையும், ஏதோ ஒரு கோரிக்கையினை முன்வைத்து ஏதோ குறை களைய வந்திருக்கிறார் என்பதையும் அனுமானித்தார் ஆணையர். 

ஆசிரியர் இடது கையில் வைத்திருந்த கடன் மனுவை ஆணையரின் முன் வைத்தார்.
நிலைமை எனவென்பதைப் புரிந்து கொண்டார் ஆணையர்.

“கூல் டௌண்! நாளை வாருங்கள் கடன் மனுவை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் ஆணையர்.

“இது வரை நடந்து நடந்து ஓய்ந்துவிட்டேன். இனியும் பொறுக்கமுடியாது. இன்றே வேண்டும்;இப்பவே வேண்டும்! என் ஊதியத்தில் நான் சேகரித்த சேமநல நிதி. அதில் ஒரு சிறிது விதிகளுக்கு உட்பட்டு கடன் பெற வாய்ப்பில்லை. நிர்வாகத்தின் மேல் பழிசொல்ல விரும்பவில்லை. நியாயம் வேண்டும்” ஆசிரியர் கூறினார். ” மேலும்ஒழுங்கு நடவைக்கை! என்று வியாக்கியானம் எதுவும் இதன் மேல் இருக்கக் கூடாது. அப்படித் தொடர்வதாக நிங்கள் விரும்பினால் நான் சிறைக்குச் செல்லவும் தயாராகிவிட்டேன்” இந்த கடன் விண்ணப்பத்தின் நகல் பல வைத்துள்ளேன். அரசுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பவிருக்கிறேன்.”

மேசையின் மீது இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். டவாலி உள்ளே நுழையவில்லை. அவன் பிள்ளை குட்டிக் காரனாம். வெளியில் நின்றுகொண்டு முகத்தை மட்டும் காட்டினான் அந்த ஊழியன். ”

பி.எஃப். கிளார்க்கை வரச்சொல்”.

ஒரு கோப்புடன் வந்தார் எழுத்தர். உள்ளே வாங்க! இந்த கடன் மனுவில் அவர் கோரியுள்ள தொகையை அனுமதித்துவிட்டேன். ஏன் இத்தனை கேள்விகள் இந்த மனுவின் மீது ? உங்களுடை குறிப்புகள் முழுவதும் படித்தேன். சிறுபிள்ளைத்தனமான் குறிப்புகள். உங்களுடைய முகாந்திரம் கேட்டிருகிறேன். இன்னும் அரைமணி நேரத்தில் உங்கள் பதில் வேண்டும். ஆசிரியரிடம் உடன் தொகையை அளித்துவிட்டு நேரில் உங்கள் முகாந்திரத்தை கொடுக்கவேண்டும்.

தொகையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார் எழுத்தர்.  ஸ்டாம்ப் ஒட்டிய பதிவேட்டை நீட்டினார். ஆசிரியர் பணத்தைப் பெற்றுக்கொண்டு ,”அய்யா! மேஜை சீர்செய்ய ஆகும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். 

அவசியம் இல்லை. நீங்கள் செல்லலாம். கடமையில் கண்ணாக இருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/5/10

to mintamil

ஓம் அவர்கள் கூறிய சம்பவம் அன்றாட நிகழ்ச்சி. ஒரு நுட்பம். எங்களுக்கு பயிற்சி எல்லாம் இந்த கந்தரகூளத்துக்கு எப்படி தீ வைப்பது என்று  தான். சிலர் கெலிக்கிறோம். பலர் பலியாகிவிடுகின்றனர். எனக்கு நல்ல பெயரும் உண்டு. விதிகளை மீறுபவன் என்று  அபகீர்த்தியும் உண்டு. ஒரு அம்பது கேஸ் ரெடி, விக்ரமாதித்யன் கதை சொல்ல. .
இன்னம்பூரான் 
Tirumurti Vasudevan 
1/5/10

to mintamil

ஒரு அம்பது பேர் ரெடி....கதை கேக்க...
திவாஜி
PENNESWARAN KRISHNA RAO 
1/5/10

to mintamil

அம்பத்து ஒண்ணாக இங்கே ஒருத்தன் யமக்குளிரில் நடுங்கிக் கொண்டு காத்து இருக்கிறான்.
Astrologer Vighnesh சென்னை 
1/5/10

to mintamil

ஐம்பத்திரண்டாவதா நான் இருக்கேன் உங்கள் அனுபவங்களை கேட்கஇங்கே குளிர்எல்லாம் இல்லைசாதராரணமா மார்கழி பணி அவ்வளவுதான்சொல்லுங்கோகே.வீ.விக்னேஷ்சென்னை

*

சித்திரத்துக்கு நன்றி


இன்ன்ம்பூரான்
13 04 2013

No comments:

Post a Comment