Google+ Followers

Friday, April 12, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2: 'குருதிப்புனல்'
அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2: 'குருதிப்புனல்'
7 messages

Innamburan Innamburan Fri, Apr 13, 2012 at 9:30 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2
'குருதிப்புனல்'
இன்றைய ஜூனியர் விகடனில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் ஜாலியன்வாலா பாக் இழிநிகழ்வை பற்றி எழுதியிருக்கிறார். அவர் ஏன் முனைவர் கிச்லூ அவர்களின் பெயரை தவறாக உச்சாடனம் செய்துருக்கிறார் என்று புரியவில்லை. ஜாலியன்வாலா பாக் நிகழ்வுக்கு மதம் சார்ந்த பின்னணி என்று சொல்கிறார். அரசியல், தேசீய பின்னணி பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. வரலாற்றுப்போக்கில் நோக்கினால். 1919க்கு முன்னும், பின்னும், பைஷாகி திருவிழா இத்தனை விமரிசையாக நடக்கவில்ல்ஐ. இது நாட்டுப்பற்று பரவசம் ஐயா! அவருடைய அணுகுமுறை நிகழ்வை சார்ந்தது. எனது, நிகழ்வு, அதன் பின்னணி, நிகழ்வின் பலாபலன்கள் ஆகியவை பற்றியது. இது நிற்க.
ரெளலட் சட்டத்தை பற்றி மட்டுமல்ல, அயல் நாடுகளில் (சான்றாக, மெஸபட்டோமியா) இந்திய ராணுவம் உயிரிழப்பது, அகில இந்திய காங்கிரஸ்ஸின் தேசாபிமான பிரச்சாரம், பொருத்தமான பிரமேயங்கள் இல்லாமல், முந்திரிக்கொட்டைத்தனமாக, அதுவும் ரஹஸ்யமாக, அதுவும், வஞ்சகமாக முனைவர் ஸைஃபுத்தீன் கிச்லூவையும், டாக்டர் சத்யபாலையும் கைது செய்து நாடு கடத்தியது எல்லாம் மக்களை உசுப்பி விட்ட சம்பவங்கள். அது ஏப்ரல் 6, 1919 அன்று கொழுந்து விட்டு எரிந்தது. சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி. இல்லாவிடின், பைஷாகி திருவிழாவுக்கு மதம் சார்ந்த அளவுக்கு ஏற்பாடு செய்யாமல், அரசு செயல் இழந்திருக்குமா? அல்லது, அலங்கோலம் நடந்த பின்னரும் தத்து பித்து என்று:
  1. அந்த கடங்காரனுக்கு பதவி உயர்வு அளித்திருக்குமா?
  2. கையோடு கையாக, அவனை பதவியிலிருந்து விலக்கி, கட்டாய ஓய்வில் வைத்திருக்குமா?
  3. அவனுடைய காழ்ப்புணர்ச்சி அமில உளரல்கள்: ‘அது புரட்சி; அடக்கினேன்.’/‘சுடாமல், கூட்டத்தை கலைத்திருக்க முடியும்; அது மறுபடியும் கூடினால், நான் கேலிக்கு உள்ளாவேன். அதான், சுட்டேன்.’/‘மிஷீன் கன்கள் கொண்டு போக இடமில்லை. முடிந்திருந்தால், குருதிப்புனல். ஆஹாஹா.’/‘நான் எதற்கு அடிப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டும். ஆஸ்பத்திரிகள் திறந்த வண்ணம். யார் வேணுமானாலும் போயிருக்கலாம்.’/ 
  4. கர்மவினை: அம்ருத்சரசின் சீக்கிய தங்கக்கோயில் அறங்காவலர்கள் அந்த துஷ்டனுக்கு, ‘அண்ணாச்சி’ என்று விருது கொடுத்து அபகீர்த்தி தேடிக்கொண்டார்கள்.
  5. இங்கிலாந்தின் பிரபுக்கள் அவை, அவனுடைய மெய்கீர்த்தி பாடியது. 
  6. கன்செர்வேட்டிவ் கட்சியினர், அவனை, ‘பஞ்சாப் காவலன்’ என புகழ்ந்து, பட்டாக்கத்தி ஒன்றை பரிசிலாக அளித்தது.
இத்தனை ‘விநாசகாலே விபரீத புத்தி’ நடுவில் ஒரு கண்டனம்: ‘ இந்த ஜாலியன் வாலா பாக் நிகழ்வு அசாதாரணமானது. அசுர நிகழ்வு. பயங்கரமான தனித்த பைசாச நிகழ்வு.’ யார் தெரியுமோ? மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்கு மூடி மெழுகப்பிடிக்காது. மேலும் சொல்ல பல விஷயங்கள் உளன.
(தொடரும்)
இன்னம்பூரான்
13 04 2012
Inline image 1

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Fri, Apr 13, 2012 at 9:37 PM

இ சார்

சரியான ஐயத்தை எழுப்பி இருக்கிறீர்கள்.

இதில் எஸ்.ராமகிருஷ்ணனை மட்டும் சொல்வதில் பயன் இல்லை.  இது கட் பேஸ்ட் பிரச்னை.  ஆங்கிலத்தில் படித்து விட்டு அதனைஅறைகுறையாக, பல நேரங்களில் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.  உங்களைப் போன்றவர்கள் அவற்றை துல்லியமாகக் கண்டுபிடித்து மானத்தை வாங்குகிறீர்கள்.  மற்றவர்கள் ஏக பரவசத்துடன் இந்த அபத்தங்களை விஷயம் தெரியாமல் ரசிகர் மன்றங்கள் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

தமிழில் வலைத்தள வித்தகர்களின் பதிவுகளில் இவை போன்ற கணக்கற்ற அபத்தங்கள் நிறைந்து கிடக்கின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------

shylajaSat, Apr 14, 2012 at 2:39 AM


குருதிப்புனல்  இழிநிகழ்வு உச்சாடனம்  பலாபலன்கள்  பிரேமயங்கள்(ப்ரமயங்கள்?) தாரதம்யம்..இப்படிப்பட்ட வார்த்தைகளை உங்கள் இழையில் ரசித்துப்படிக்கிறேன்  இ சார் அநாயசமாய் எழுதுகிறீர்கள் ஆனாலும் ஜாலியன் வாலாபாக் நிகழ்வு மனதில் என்றும் குருதி ஊற்றுதான். அதுபற்றி மேலும் சொல்ல இருக்கின்றதாய் முடித்திருக்கிறீர்கள் ,எழுதுங்கள்.
2012/4/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>


coral shree Sat, Apr 14, 2012 at 8:35 AM

ஜாலியன்வாலாபாக் படுகொலை மறக்க முடியாத நினைவுகள்....  பிணக்குவியல்களின் காட்சி பார்க்கும் போதே மனம் பிசைகிறது. உங்கள் எழுத்துக்களின் வேகமும் அதை அப்படியே பிரதிபலிக்கிறது.... நன்றி ஐயா,

அன்புடன்

பவள சங்கரி.
[Quoted text hidden]

Subashini Tremmel Sat, Apr 14, 2012 at 8:39 AM

ஆமாம். நானும் இப்படி பல புழக்கத்தில் குறைந்த ஆனால் மிக இனிமையான பல சொற்களை திரு.இன்னம்புரானின் மடல்களில் பார்க்கின்றேன். மறந்து போன பல சொற்களை இவரது கட்டுரைகளை வாசிக்கும் போது மீண்டும் அறிமுகம் செய்து கொள்ள முடிகின்றது. இதுமட்டுமல்லாமல் இவரது கட்டுரைகளில் மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விளக்கம் பெரும்பாலும் அமைந்திருக்கும்.ஒரு செய்தியை மிக மிக உள்வாங்கி அதனை தனது உணர்வுகளோடு இணைத்து சேர்த்து தருகின்றார். அதனால் செய்தினை  உணர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

சுபா

கி.காளைராசன் Sat, Apr 14, 2012 at 11:27 AM


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
'குருதிப்புனல்'
இன்றைய ஜூனியர் விகடனில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் ஜாலியன்வாலா பாக் இழிநிகழ்வை பற்றி எழுதியிருக்கிறார்.
பிரபலமானவர்
பிறபலமும் வேண்டும் என்று எழுதியிருப்பார்.

இதுதான் நாட்டுப்பற்று பரவசம் ஐயா! 
 
  1. அம்ருத்சரசின் சீக்கிய தங்கக்கோயில் அறங்காவலர்கள் அந்த துஷ்டனுக்கு, ‘அண்ணாச்சி’ என்று விருது கொடுத்து அபகீர்த்தி தேடிக்கொண்டார்கள்.
 
மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்கு மூடி மெழுகப்பிடிக்காது. மேலும் சொல்ல பல விஷயங்கள் உளன.
இவையெல்லாம் நீங்கள் சொன்னால்தான் உண்டு.
இல்லையென்றால் எங்களுக்குத் தெரியமாலேயே போயிடும்.
சொல்லுங்கள் ஐயா,

அன்பன்
கி.காளைரான்