Friday, April 12, 2013

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் 3


‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 3
1 message

Innamburan S.Soundararajan Fri, Apr 12, 2013 at 11:33 AM
To: Innamburan Innamburan
‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 3
Inline image 1
பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய 
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!’

மஹாகவி பாரதியாரின் பொன்மொழிகளை மட்டும் எடுத்தோதினால் போதும். பாரதமாதாவை வணங்குவது அன்றாட வழக்கமாகிவிடும்;பாரத தேசமென்று பெயர் சொல்வது, அஷ்டோத்தரமாகவும், சஹஸ்ர நாமாவளியாகவும், லக்ஷார்ச்சனையாகவும், பல்லாயிரம், பல்லாயிரம், பலகோடி நூறாயிரமாகவும் மனனமாகிவிடும். அவருடைய தொலைநோக்கின் பரிமாணத்தைச் சொல்லி மாளாது.  தேசாபிமானம், செந்தமிழ், பட்டொளி என்றெல்லாம் தீவகமாக ஒளி பரப்பிய அந்த தேசபக்தர் பாரத சமுதாயத்தை வாழ்த்திய பாடலில் இருக்கும் உருக்கமும், கருத்துச்செறிவும், சிந்தனை அலைகளும், நம்மை ஆலிங்கனம் செய்து கொள்ளும் கனிவும், இன்றைய பாரதசமுதாயத்துக்கு வழித்துணை என்க. அதை பற்றி விரிவாக இன்று எழுதாதற்கு நான்கு காரணங்கள் உளன.
  1. இந்த இழை மடலாடும் இழை; interactive thread. திசை மாற்றாமல் எழுதப்படும் கருத்துக்கள் யாவையும் வரவேற்கும் இழை. ‘...மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை...’ என்றவர் வித்யாதானம் என்று வந்தவுடன், 
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! 
 நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
 அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
 ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
 

என்றல்லவா விண்ணப்பம் செய்துகொண்டார், நம்மிடம். 
  1. இந்தியா இன்று இக்கட்டில் இருக்கிறது. ஜனநாயகம் பட்டுப்போய்விடுமோ என்ற அச்சமும், அரசியல் சாஸனம் அடிப்பட்டுப்போகுமோ என்ற கவலையும், பாரதியாரின் கண்ணீரிலே நனைந்த‘... தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால்காத்தோம்...’ என்ற அழுகையும் ( அன்று அவர் நிஜமாகவே அழுதார்.) இந்த இழையின் எல்லைகளை வரையறைத்து, எச்சரிக்கை விடுகிறது. ‘படிப்புத்தான் முக்கியம்’ என் தாத்தா சொன்ன மாதிரி. எனவே நம் வருங்கால தலைமுறைகளுக்குக் கல்வி என்பதைப் பற்றி கலந்தாலோசிப்போம். முதல் காரியமாக. சரியா?
  2. தலைப்பு மஹாகவியின் அருளாசி; மகத்தானது. விசாலமானது. கோடானுகோடி மக்கள் பங்கு கொள்ள வேண்டிய சமாச்சாரம். நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். அதற்கு நாம் யாவரும் இணைந்து திட்டமிடுவோம்.
  3. முதற்கண்ணாக, கருத்து அளித்தவர்களுக்கு பதில் சொல்லவேண்டும்.
பொது:
பாரத சமுதாயத்தில், இந்த இழையில் மடலாடி, அதன் பயனாக தன்னார்வப்பணியில் இறங்குபவர்கள், ஒரு உன்னத சமுதாயமே. எல்லரும் வாருங்கள். எந்த மொழியிலும் எழுதுங்கள்.

தேமொழி:
‘பிரதம்’ என்ற தன்னார்வகுழு கல்வியை பற்றி பொறுப்பான ஆய்வுகளை தருகிறது. அதன் ஆய்வுப்படி, தமிழகத்தில் கல்வி செழிப்பாக இல்லை. என் அனுபவமும் அது தான். படித்து வேlai தகுதி வேறு. வித்யா எனப்படும் கல்வி அதை விட பன்மடங்கு மேன்மையானது. அது வேண்டும். மனித மனம்/ நாட்டுப்பற்று/சமூக சேவை எல்லாமே சுருங்கினால் செத்து விடும்.  உங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதில் ஐயமே இலை. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு வித்யா தானம் செய்யவேண்டும். உங்கள் ஆசிரியர் வகுப்பறை நடத்தியது போல. கட்டுரை நீண்டு விட்டது. இணையத்தில் இலவசமாக கல்வி போதனை மும்முரம். நேற்றுக்கூட புதிய மாடல்கள் வந்துள்ளன. அடுத்த கட்டுரையில் அது பற்றி எழுதுகிறேன்.

காளைராஜன்:
நீங்கள் எனக்கு அளித்த கொடை இது வாழ்க. என்றும் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன். 1942ல் ஆங்கிலேயர் ஆட்சியில், உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள், அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் அரிக்கேன் லைட்டு வச்சு பாடம் எடுப்பார்கள். அரசு ஆதரவு அபரிமிதம்.

எஸ்.கே.நடராஜன்:
உமது ஊழியம் பெருமிதத்துக்கு உரியது. மேற்படி, தன்னார்வப்பணியாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.

ஷைலஜா:
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்  

ஓடு! ஓடு! இன்னம்பூர் எழுத்தறிவுநாதரின் ஆணை என்று ஒரு ஏழையை படிக்கவை.

கீதா சாம்பசிவம்:
நல்ல காரியம் செய்கிறீர்கள், பண உதவி மூலம். வாழ்த்துக்கள். ஆன்மீகம் நல்லது தான். மூளைச்சலவையாளர்களும், போலிகளும் நிறைந்திருக்கும் பிராந்தியம். அது தான் என் கவலை. உங்கள் பதிவுகள் போன்றவை நன்மை பயக்கும். நீங்கள் சொன்ன நூலுக்கு ஒரு விமர்சனம் இங்கு எழுதுங்களேன். அவசரமில்லை. 
பிறபின்னர் 

இன்னம்பூரான்
27 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_gWdyNag85kA/TKrx-HJ9VQI/AAAAAAAAB2g/YAtOZhoCNZA/s320/penn3.jpg
தேமொழி via googlegroups.com 
Mar 27
 
to vallamaimintamilme
 
On Wednesday, March 27, 2013 12:22:12 PM UTC-7, இன்னம்பூரான் wrote:
தேமொழி:
‘பிரதம்’ என்ற தன்னார்வகுழு கல்வியை பற்றி பொறுப்பான ஆய்வுகளை தருகிறது. அதன் ஆய்வுப்படி, தமிழகத்தில் கல்வி செழிப்பாக இல்லை. என் அனுபவமும் அது தான். படித்து வேlai தகுதி வேறு. வித்யா எனப்படும் கல்வி அதை விட பன்மடங்கு மேன்மையானது. அது வேண்டும். மனித மனம்/ நாட்டுப்பற்று/சமூக சேவை எல்லாமே சுருங்கினால் செத்து விடும்.  உங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதில் ஐயமே இலை. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு வித்யா தானம் செய்யவேண்டும். உங்கள் ஆசிரியர் வகுப்பறை நடத்தியது போல. கட்டுரை நீண்டு விட்டது. இணையத்தில் இலவசமாக கல்வி போதனை மும்முரம். நேற்றுக்கூட புதிய மாடல்கள் வந்துள்ளன. அடுத்த கட்டுரையில் அது பற்றி எழுதுகிறேன்.


அன்பு இன்னம்பூரான் ஐயா,
என்னால் இயன்ற வண்ணம் (அதாவது நான் வசிக்கும்  சூழ்நிலைக்கு ஏற்ற வகையில்), எனக்குத் தெரிந்த வகையில் கல்விக்குத் துணை புரிவது என்ற எண்ணத்தில்தான்  நான் சில TED காணொளிகளின் தமிழ் மொழி பெயர்ப்பில் பங்கேற்றேன்.
இது தமிழ் வழிக்  கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உதவிடும் என்பது என் எண்ணம்.
மேலும் நான் மொழிபெயர்த்த சில காணொளிகள் சரிபார்ப்போர் இன்றி வெளிவராது போனதும் அந்த தன்னார்வப்பணி முயர்ச்சி  தடை பட்டது. 

அத்துடன் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டுதான் அறிவியல் தகவல்கள் என்பது போன்ற குறிக்கோளுடன் 'நுண்பொருள் காண்பதறிவு' என்ற கருத்தினை மையமாகக் கொண்டு சில கட்டுரைகளும் எழுதி வருகிறேன். பின்னர் நூல் வடிவில் கொணரும் எண்ணம் உள்ளது .

கல்விப் பணியில் பங்கு பெறுவதில் பல வகைகள் உண்டுதானே?


முன் மடலில் நான் குறிப்பிட்டது தமிழகத்திலோ/இந்தியாவிலோ கல்வி சிறந்ததினால்தான் அவர்களைத் தங்கள் நாடுகளில் பணிபுரிய வெளி நாட்டு நிறுவனங்கள் இரு கை நீட்டி வரவேகின்றன.   
அத்துடன் அமெரிக்க பல்கலைகளில் முனைவர் பட்டம் பெரும் வெளி நாட்டினரில் இந்தியர்கள் அதிகம் என்ற புள்ளியியல் அடிப்படையிலும்  இந்தியாவின் கல்வியின் தரம் பற்றி நான் கொண்ட நோக்கு அது. 
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Mar 27
 
to vallamai
 
பிறகு, விவரமாக எழுதுகிறேன். உங்கள் பணி பற்றியும், தடைபெற்றது பற்றியும் அறிவேன். என் அனுபவமும் அது தானே.
அதை பற்றி பிறகு எழுதுகிறேன். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, வெளிநாடுகளில் இந்தியர்களின் சாதனை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர்கள் அப்துல் லதீஃப் ஜமீல். செந்தில் முல்லைநாதன், அபிஜித் பானர்ஜீ பற்றி படிக்கும்போது, அவர்களுக்குக் கிடைத்த பள்ளிக்கல்வி உதவியதும், சுயமுன்னேற்றமும் தெளிவு. ஆனால், நம் கவலை பெரும்பாலோரை பற்றி.
இன்னம்பூரான்
27 03 2013
தேமொழி via googlegroups.com 
Mar 28
 
to mintamil
 
Images are not displayed. Display images below - Always display images from themozhi@yahoo.com
செல்வன்
Mar 28
 
to mintamil
 
அரசுபள்ளியில் படித்த ஏழைகள் மூவரின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்று மாதா மாதம் உபகார சம்பளமும் கொடுத்தேன். இருவர் மாணவர்கள், ஒருவர் மாணவி. மாணவர்கள் இருவரும் சகோதரர்கள், மாணவி சமையல்காரர் ஒருவர் மகள். மூவருக்கும் தந்தை இல்லை. 

முதல் மாணவன் கணிணியில் டிகிரி படித்து இப்போது இன்போசிஸில் பணிபுரிகிறார்.

அவர் தம்பி இப்போது கணிணியில் டிகிரி படிக்கிறார். இன்னும் ஒரு வருடத்தில் அவருக்கும் வேலை கிடைத்துவிடும். 

மாணவி +2 முடித்து ஆடிட்டிங் கோர்ஸ் படித்து கொண்டுள்ளார்.
ஐயப்பன் கிருஷ்ணன்
Mar 28
 
to mintamil
 
துரைஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். 


Iyappan Krishnan
*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாலும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**
Rathinam Chandramohan 
Mar 28
 
to mintamil
 
Dears,
Today's education is a trade and all these tradesman are well exposed to Thiruvalluvars, Gandhiji, Nehru and barathi works. These books have really failed to correct these corrupt, old, well educated, rich political clouts. Their inabilty to look in to their own inner wisdom is signalling wrong ethics amongst youths.  Even people of good conduct and ethics are behind these powerful persons and make them as role models to the new generations. 
But dont worry, China was ruined by drug addictions one day,(Opium war) but its youth got an upsurge by the chinese womenfolk and have built a great nation now. Speak the real value every where. Identify valuable personalities who are still remaining uncorrupt and back them.  Continue sponsoring poor students. Show them gentle and noble  gestures and direct them to a right guru. This is the need of the hour. Selfish, non ethical, corrupt, aged Indians are now ruling the entire politics, education and industries and hence are becoming powerful day by day. But they should never be praised as Kalams or Gandhijis. Please take a vow. Let them get exposed sooner or later and lament without the support of the clean youths. We can rely on our youths and beg them take the nation.
Chandramohan
Subashini Tremmel
Mar 28
 
to மின்தமிழ்
 
வழக்கம் போல நல்லதொரு சிந்தனை.
2013/3/26 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>


அவரவரது ஊர்களிலும், பேட்டைகளிலும் தோன்றி, மறைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பணி, தியாகம், பட்ட துன்பங்கள், எதிர்ப்புக்கள், சந்தித்த இன்னல்கள், சிறை வாசம் ஆகியவை தான் நமக்கு அஸ்திவாரம். அதை பராமரிக்காமல் இருந்து விட்டோம். 
உண்மைதான். 

ஆனால் நான் இந்த விஷயத்தை வேறொரு வகையிலும் காண்கின்றேன். இந்த மாமனிதர்களின் தியாகத்தை நினைத்துப் பார்க்கின்றோம் என்றால் அதனை எவ்வகையில் செய்வது? பொதுவாக நான் காண்பது, அந்த தியாகிகளின் குடும்பத்தார் வருமையில் வாடுகின்றார்கள். அவர்களுக்குப் பண உதவி தேவை என்பதாகவும் அவர்களுக்குச் சிலை வைத்து ஒரு நாள் அவர்களை நினைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி விட்டுச் செல்வது என்பதாகவும் தான் உள்ளது. இதனால் சமூகத்தில் என்ன பயன்?

தியாகிகள் முன்னர் சுதந்திரம் தேவைப்பட்ட காலகட்டத்தில் மட்டும்தான் வாழ்ந்தார்களா? இப்போது நம்மிடையே தியாக உள்ளம் கொண்டோர் இல்லையா? தேசப் பற்று சமுதாயச் சேவை என தன் வாழ்க்கையை அர்ப்பணிப்போர் இல்லையா.. ? இது ஒரு கேள்வி!

பொறுப்புணர்ச்சி, நாட்டுக்காக, மக்களுக்காக சேவை செய்தல் என்பது மனதில் ஆழமாகப் பதிந்து வைக்க வேண்டிய ஒரு விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு சமுதாய நலன் பற்றிய அக்கறை உணர்வு தேவை. அதனை வளர்ப்பது தானே நிரந்தரமான நல்மக்கள் கொண்ட சமூகத்தை உருவாக்க உதவும்?????

சுபா

2 comments:

  1. What i do not understood is actually how you're nnot really much more neatly-appreciated
    than you may bbe right now. You are verey intelligent.

    Yoou realize thus significantly when it comes to this topic, produced
    me individually imagine it from so many various angles.
    Its like women and men are not fascinated until it is something to do with Girll gaga!
    Your individual stuffs outstanding.All the time handle it up!

    ReplyDelete
    Replies
    1. Thank You, very much. Due to sheer aging, 87, I shall go for Utube hereafter. Please offer your advices,

      Delete