Google+ Followers

Saturday, April 13, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம். 4

தணிக்கை செய்வதில் தணியா வேகம்.4Innamburan Innamburan Tue, Jan 5, 2010 at 4:15 PM
To: mintamil@googlegroups.com
திவாஜி!
ஏ.ஜீ ஆஃபீஸ் மர்மங்களைப்பற்றி தலப்புராணத்தின் முதல் பகுதி தனி இழையாக வந்து விட்டது. இத்துடன் மெர்ஜ் பண்ணுவது எப்டி?
ஒரு குட்டிக்கதை:
அரசு மடலாடும் முறை வினோதமானது. ரொம்ப பெரியவா அனஃபஷியல் என்று எழுதினால், அந்த கோப்பு முக்யம். டெமி அஃப்பீஷியல் (அரைகுறை) என்றால் உடனே பதில் போடணும் என்று அர்த்தம். அப்படியாக, என்னுடன் மடலாடிய சிதம்பரம் பீ.டி.ஓ ஒருவர், அங்கு நடந்த என் மனைவியின் சீமந்தத்திற்கு, என் தந்தையின் அழைப்பின் மேல் வந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு, பென்ஷன் விஷயமாக எழுதிய கடிதத்தில் ' குழந்தை பிறந்தாகி விட்டதா' என்றும் எழுதி விட்டார். அந்த மடல், ராமனாதன் என்ற ஆஃபீசரிடம் போகவேண்டும், சும்மா இல்லாமல், நான் அடியில் கிறுக்கியது, 'என்ன? கஜகர்ப்பம் என்று நினைத்தாரோ? '
தொலைந்தது. ஆஃபீஸ் பூரா வலம் வந்த அந்த மடல், அவருக்கு பென்ஷன் பற்றி பதில் போட மறந்து விட்டது.Tirumurti Vasudevan Tue, Jan 5, 2010 at 4:46 PM

மெர்ஜ் ஆகாது.
புதுசாக ஒரு தலைப்பிட்டு தனி இழை ஆரம்பித்து இது வரை வந்ததை மன்னிப்பு கேட்டுக்கொண்டு போட்டுவிடுங்கள். இனி அதிலேயே தொடருங்கள்.

திவாஜிGeetha Sambasivam Wed, Jan 6, 2010 at 2:20 AM

//குழந்தை பிறந்தாகி விட்டதா' என்றும் எழுதி விட்டார். அந்த மடல், ராமனாதன் என்ற ஆஃபீசரிடம் போகவேண்டும், சும்மா இல்லாமல், நான் அடியில் கிறுக்கியது, 'என்ன? கஜகர்ப்பம் என்று நினைத்தாரோ? '//

ஹையோ! சிரிச்சு முடியலை! இன்னிக்குப் பூரா நினைச்சு நினைச்சுச் சிரிக்கணும்!
[

Innamburan Innamburan Wed, Jan 6, 2010 at 4:44 AM
To: mintamil@googlegroups.com
அந்த ராமநாதன் புதுக்கோட்டை காலேஜ்மேட். வாடா,போடா தான். ஒரு நாள், வசமா மாட்டிவிட்டான். ஏ.ஜீ 'அக்ரமன்'  டவாலி அனுப்புவாரே, தவிர ஃபோன் பண்ணமாட்டார். ஒரு நாள் உரையாடல், ஸத்யமா நடந்தது.
அப்பெல்லாம் எல்லாருமே ஓட்டைக்கப்பல் இங்லீஷ் தான்.
' Ramanathan, A.G. here. You know Padhi இஸ் here. I am calling home for dinner; join us with your wife. OK?'

'போடா! உன்னோட பப்பு இங்கே வேகாது; இடியட்!
'கம்'னு மெளனம்.
மறுபடியும்: 'கல்யாண ராமன் ஹியர்.
'டேய்! நான் வேலையா இருக்கேன்டா. இந்த ஏ.ஜீ...!!!
கட்
ராமநாதன், எக்ஸ்சேஞ்ஜிடம்: 'Who spoke to me?
'AG.Sir! (giggling)

ஏ.ஜீயிடம் ஓடிப்போய், இந்த காவாலிப்பையன் ராமநாதன், தான் ஸெளந்தரராஜன் ஏ.ஜீ. வாய்ஸை இமிடேட் பண்ணதாக நினைத்தாகச்சொல்லி, மன்னிப்புக்கேட்டு, நல்லப்பையனாகிவிட்டான். எங்கிட்டேயும் சொல்லிவிட்டான். அதற்கு முன்னாலேயெ அவர் என்னை அழைத்தபோது, பதவிசா வருவதாக சொல்லிவிட்டேனா, 'ஸத்தியப்பிரமாணமாக, ஒரு நாளாவது அவரை இமிடேட் செய்யவில்லை, டி.ஏ,ஜீ ராமசந்திர ராவைத்தான் செய்வது வழக்கம்!' என்று தன்னிலை விளக்கம் கூறத் தருணம் கிடைக்கவில்லை. ராத்ரி டின்னர். அக்ரமன் ஸார், என்னை வற்புறுத்தி அவர் மாதிரி பேச வைத்தார். அன்று தான் நான் பீ.ஸீ.பாதி, டிபுடி ஆடிட்டர் ஜெனரலுக்கு பெட் ஆனேன்.
மாரல்: தணியா வேகம் எதிலும் கை கொடுக்கும்.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

devoo Wed, Jan 6, 2010 at 4:59 AM

'கஜ கர்பம்’ ஜோக் இன்னும் சிரித்து முடியல

தேவ்

*

> பென் & விக்னேஷ்
>
> அதுக்குள்ளே அதிகமாக இங்கே உதறல். நாளை பனி பெய்யும்.

Suresh sundaresan Wed, Jan 6, 2010 at 5:21 AM

அய்யா
 
ஆவலுடன் உள்ளன்
 
சுந்தரேசன் இன்னம்புரன் நண்பன் 

_____________________________
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
13 04 2013