Google+ Followers

Saturday, April 13, 2013

என்னத்தைச் சொல்றது? 1 & 2 UpDate 14 04 2013
என்னத்தைச் சொல்றது?
1 message

Innamburan S.Soundararajan Sat, Apr 13, 2013 at 1:04 PM


என்னத்தைச் சொல்றது?
Inline image 1
நாளிதழ்களை திறந்ததுமே அபசகுனச்செய்திகள் தான்: அடிதடி, ரெளடி, விபத்து, கொலை, கொள்ளை, தற்கொலை என்று. கொஞ்சம் சிந்தித்தோமானால், அவற்றை பெரும்பாலும் தவிர்த்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. சட்ட நிர்வாகம் திறனுடன் இருந்தால், ஆளுமை யோக்கியமாக இருந்தால், வன்முறை தணியும்: கொலை, கொள்ளை நடக்காது. நாம் சாக்கிரதையாக இருந்தால், விபத்து ஏற்படாது. தற்கொலையை தடுப்பது எப்படி? 
அறிவழகன் - அபிராமி இளம்தம்பதி மணமான எட்டு மாதங்களுக்குள், மனமுடைந்து, மாடியிலிருந்து குதித்து மாண்டனர் என்றும், இருவரும் மேல்படிப்பு முடித்தவர்கள் என்றும், நல்ல சம்பாத்தியம் என்றும், அமெரிக்கா செல்லும் வாய்ப்பும், வீசாவும் கிடைத்தன என்றும், அபிப்ராய பேதங்கள் இருந்தன என்றும் இன்றைய ஊடக செய்தி.
இது என்னை கவலையில் வாட்டுகிறது. இதை நடவாமல் தடுத்தாட்கொண்டிருக்க முடியும் என்று தான் என் கருத்து. சென்னையில் ‘ஸ்நேகா’ என்ற தன்னார்வ அமைப்பு பல வருடங்களாக இருக்கிறது. அதை நிறுவனம் செய்தவர் ஒரு மனோதத்துவ நிபுணரான டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார் என்றாலும், குடும்பத்தலைவிகளும், மற்றும் பலரும் தான் இலவச ஆலோசனை கொடுத்து, கணக்கற்ற தற்கொலைகளை தடுத்திருக்கிறார்கள் என்று என் சொந்த அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. நான் கேட்டுக்கொள்வது, சின்ன வேலை. அவர்களின் இணையதளத்தில் இருப்பதையெல்லாம் படிக்கவும். நாலு பேருக்கு சமயத்தில், ஈடில்லாததொரு உபகாரம் செய்ய முடியலாம். காட்டுமன்னார்குடி வரை சென்று தற்காலம் அவர்கள் செய்யும் சேவைகளை கண்டு வியக்கிறேன். 
இங்கிலாந்தில், எங்கள் மக்கள் ஆலோசனை மன்றத்தை (Citizens Advice Burueaux) பற்றி நான் புகழாத நாள் கிடையாது. அந்த அனுபவத்தை இந்தியாவில் கொணர நான் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயிற்று. அது போகட்டும். ‘ஸ்நேகா’ பின்னணி நோக்குக. நான் வசிக்கும் போர்ட்ஸ்மத நகரிலும், மற்ற ஊர்களிலும் இருக்கும் Befrienders International என்ற தன்னார்வ அமைப்பு தான், ‘ஸ்நேகா’வின் முன்னோடி. ஒரு இளம்பெண் பூப்படைந்தவுடன், உதிரபோக்கைக்கண்டு நடுநடுங்கி, தன்னுயிரை மாய்த்துத்துக்கொண்டாள். அம்மாக்காரி கிட்ட கேட்கமாட்டாளோ? அந்த நிகழ்வினால் பட்ட விசனம் உந்த, இந்த தன்னார்வ பணி தொடங்கியது. 
‘ஸ்நேகா’ வின் தளத்திலிருந்து தகவல் அப்படியே இங்கு: 
Sneha extends emotional support to the depressed, desperate and suicidal when they feel there is no one to turn to. They need someone with whom they can share their pain and misery in confidence; someone who would listen, understand and accept them unconditionally. In fact, talking about their debilitating feelings can be the first step to resolving them. They are caring and committed persons from all walks of life. Nonjudgemental in their attitude, they are empathetic listeners. They are carefully selected and trained to offer support to those who contact Sneha. Sneha is open on all 365 days of the year.
Contact can be made by visit, over telephone, through email or by letter.
Confidentiality and anonymity are assured. Sneha is a non-political, non-religious organisation. Our services are absolutely free. Visit - 8 a.m. to 10 p.m.
11, Park View Road, R.A. Puram, Chennai 600028.

Telephone (044-24640050) - 24 HOURS ROUND THE CLOCK
Email - help@snehaindia.org
அன்புடன்,
இன்னம்பூரான்

Subashini Tremmel Sat, Apr 13, 2013 at 1:23 PM
அறிவழகன் - அபிராமி இளம்தம்பதி மணமான எட்டு மாதங்களுக்குள், மனமுடைந்து, மாடியிலிருந்து குதித்து மாண்டனர் என்றும், இருவரும் மேல்படிப்பு முடித்தவர்கள் என்றும், நல்ல சம்பாத்தியம் என்றும், அமெரிக்கா செல்லும் வாய்ப்பும், வீசாவும் கிடைத்தன என்றும், அபிப்ராய பேதங்கள் இருந்தன என்றும் இன்றைய ஊடக செய்தி.

பெரும்மாலும் அச்சம் அல்லது நம்பிக்கை இழத்தலே இதற்குக் காரணமாகின்றன என நினைக்கின்றேன். சமூகத்தின் பார்வையில் தவறுதலாகப் படுவோமோ என்ற நினைவிலேயே பலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நிகழ்கின்றது. 

தான் தானாக வாழ்வதற்குத் தான் உலகில் மனிதர்கள் தினம் தினம் போராட வேண்டியிருக்கின்றது.  எதற்காக இவ்வகை தற்கொலைகள் என்ற உளவியலைத் தொடர்ந்து ஆராய்வது தகும். இது சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ள கொஞ்சம் உதவும்.

பலரது பிரச்ச்னைகளை பேச வைத்து அவர்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்கும் நண்பர்கள் உறவினர்கள் அமைவது என்பது எங்காவது ஒரு மூலையில் தான் அமைகின்றன. அப்படி அமையும் போது பேசி மன சஞ்சலங்களைப் போக்கி தன் வாழ்க்கையைத் தொடர உதவும். 

சுபா


 

Geetha Sambasivam Sat, Apr 13, 2013 at 1:52 PM

ஆம், இந்தச் செய்தியைப் படித்ததும் மனம் மிகவும் வருந்தியது.  இன்றைய இளைய தலைமுறைக்கு எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் சுத்தமாக இல்லை.  கோழைகளாக முடிவெடுக்கின்றனர். அதுவும் இருவருமே நன்கு படித்தவர்கள். :(

2013/4/13 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

என்னத்தைச் சொல்றது
 Tthamizth Tthenee Sat, Apr 13, 2013 at 2:04 PMஉண்மையாக யோசித்துப் பார்த்தால்
தாங்கும் திறனை  இப்போதெல்லாம் நாம்  குழந்தைகளுக்கு  கற்றுக் கொடுப்பதே இல்லை

பொறுமையோடு  இதுவும் கடந்து போகும்   என்னும் மனப்பான்மையை  வள்ர்க்க வேண்டும்


விடியும் வரை காத்திரு  என்று உபதேசிக்க வேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


Innamburan S.Soundararajan Sat, Apr 13, 2013 at 2:09 PM
அப்படியானால், கீதா சாம்பசிவம் போல் இல்லாமல், நீங்கள் முதிய தலைமுறையிடம் குற்றம் காண்கிறீர்கள்?

[

Geetha Sambasivam Sat, Apr 13, 2013 at 2:18 PM


தேனி அண்ணா சொல்வதையும் கவனிக்கணும்.  பெரும்பாலான பெற்றோருக்கு ஒரே குழந்தை.  அதீதச் செல்லம்.  கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் திறன். அவங்களுக்கு ஏமாற்றம் என்பதே இருக்கக் கூடாது என்ற எண்ணம்.  ஆகவே பெற்றோர் மேலேயும் குற்றம் இருக்கு தான். இருபக்கமும் கவனித்துப் பார்க்க வேண்டும்.Tthamizth Tthenee Sat, Apr 13, 2013 at 2:40 PMஇப்போது   குழந்தைகளைக் கவனித்துப்  பாருங்கள்
ஒரு சிறு விஷயத்துக்கும் அவர்களுக்கு வரும் கோபம், ஆத்திரம் இவையெல்லா  நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது எங்களுக்கு  ,அதாவது  நமக்கு இருந்ததில்லை

இதற்கு பெரும்பாலான காரணங்கள்  நம் முன்னோர்  சற்றே  சாத்வீகமாக இருந்தார்கள்  என்பது ஒன்று

சாத்வீக குணத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்பது  இரண்டு
ஒரு காலத்தில்   சத்தம் போட்டு  பேசுவதையே  அனுமதிக்க மாட்டார்கள்
ஆனால் இப்போதெல்லாம்  பாடல்களிலிருந்து, விளையாட்டு வரை  சத்தமே ப்ரதானமாக  இருக்கிறது

அதுவும்  கணிணியில் விளையாடும் விளையாட்டுகள்  குறிப்பாக  எக்ஸ்பாக்ஸ் என்னும் விளையாட்டில்   ஒவ்வொரு குழந்தையும்   என்னைக் கொல்லுடா, என்னை வெட்டுடா என்று கூவிக்கொண்டேதான் விளையாடுகிறார்கள்
நல்ல சப்தங்கள் காதிலே விழுந்தால்  மனம் அமைதியாய் இருக்கும், சாத்வீக குணம்  வளரும்


திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் , பத்திரிகைச் செய்திகள், தொலைக் காட்சி செய்திகள் போன்ற எல்லாவற்றிலுமே  வன்முறை , ஆயுதம் ஏந்தல், ஆசி வீச்சு
இவையெல்லாம் தானே குழந்தைகள் மனதில் படிகின்றன
நல்ல  ஸ்லோகங்கள், நல்ல பாடல்கள், போன்றவை இப்போதெல்லாம் அரிதாகிவிட்டனவே


அன்புடன்
தமிழ்த்தேனீ


[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Apr 13, 2013 at 11:13 PM


வணக்கம்.

id, ego, and superego are the three parts of the human personality 
ஆனால் இவற்றையெல்லாம் நிர்ணயிப்பது எது?
அது அவரது சப்பாத்தியம்.

நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே உயிரையும் இழக்கின்றனர்.

அன்பன்
கி.காளைராசன்


Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 12:20 PM


என்னத்தைச் சொல்றது?:2
Inline image 1
தற்கொலையை பற்றி இளைய சமுதாயத்தின் பலவீனத்தையும், பெரியோர்களின் வழி நடத்தலையும் குற்றம் சொல்லி பயன் யாது? தற்கொலை புதிது அல்லவே. சாக்கிரட்டீஸ் காலத்திலேயே இருந்திருக்கிறது. சக்ரவர்த்தி சந்திரகுப்த மெளரியன் ‘வடக்கு’ இருந்து சல்லேஹனம் செய்து கொண்டார். போன நூற்றாண்டில் வீர சவர்க்கார் அவர்களும் அவ்வாறு இருந்து மாய்ந்தார் என்பர். மனோதத்துவ சாத்திரத்தின் பல பிரிவுகள் (உளவியல் என்ற சொல்லை நான் பயன்படுத்துவது இல்லை) ஏகோபித்துக்கூறும் கூற்று: தற்கொலை பயமுறுத்தல் எல்லாம் வெத்துவேட்டுகளாக இருந்தாலும், நிஜமாகவே தற்கொலை செய்ய ஆயத்தம் செய்பவர்கள் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் என்பதே. நுட்பமாக ஒருவரை கவனிக்கும் சொந்தபந்தம், சுற்றம், அண்டை அசலார் அதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். சில தற்கொலை வரலாற்றுகளை நோக்கினால், தற்கொலையை பற்றி இளைய சமுதாயத்தின் பலவீனத்தையும், பெரியோர்களின் வழி நடத்தலையும் மட்டுமே குற்றம் சொல்லமாட்டீர்கள். விஷயம் சிக்கலானது.
செளலி மடம் என்ற கர்நாடக மடத்தின் ஸ்தாபகர் ஶ்ரீ கணேஸ்வர் அவதூத் மஹராஜ் ‘நீங்களும் அக்னி வழித்தடத்தில் வந்து என்னுடன் சேர்வீர்கள்’ என்று தன்னுடைய 18 அத்யந்த சீடர்களிடம் சொல்லி விட்டு, ஃபெப்ரவரி 28, 2013 அன்று விண்ணுலகம் ஏகினார். போலீஸ் அவர் விஷம் அருந்தியதாக சந்தேஹித்தனர். அவர் விட்டுச்சென்ற சீட்டும் அவர் இறையை நாடி செல்வதாக சொல்லிற்று. ஏப்ரல் 8 அன்று மூன்று சீடர்கள் தீக்குளித்து செத்தனர். தடபுடலான தகனமேடை! அவர்களும் குருவை நாடியதாக, வீடியோ சீட்டு வைத்திருந்தார்கள். இந்த மடம் கடந்த 20 வருடங்களுக்குள் அசுர வளர்ச்சி பெற்றது. அந்த கதை பெரிய கதை. கோர்ட் வழக்குகள் வேறு. இத்தகைய மனக்கசப்புகளால் தான், அவதூத் மஹராஜ் தன்னை மாய்த்துக்கொண்டார் என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தால், 1997 ல் வைகுண்ட வாசல் (Heaven's Gate), 1978ல் ஜனமந்திர் (Peoples Temple) என்ற இயக்கத்தினர்கள் கூண்டோடு கைலாசம் போக, தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது. திரிவேணி அனந்தராம் என்ற மனோதத்துவ ஆசிரியர், ‘...மன அழுத்தம், வாழ்வின் பொருளற்ற நிலையை பற்றிய ஆன்மீக ஐயங்கள் தான் தற்கொலையை உந்திவிட்டன’ என்கிறார் என்று ‘வீக்’ என்ற வார இதழில் படித்தேன். எனக்கு மனதில் பட்டது: ‘காயமே இது பொய்யடா! காற்றடைத்தப் பையடா!’. 
‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில், நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. சென்னை நாரதகான சபா அரங்கில் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் காலை வேளையில் ஹரிதாஸ் கிரி சுவாமிகள் நடத்திய நாமசங்கீர்த்தன வைபவத்துக்கு திருவிழா மாதிரியாக பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டது நினைவை விட்டு நீங்காத நாட்கள். கணீரென்ற வெண்கலக் குரலில் கீர்த்தனைகளை குருஜி பாட, மேடையில் அவருடன் அமர்ந்திருக்கும் சிஷ்ய கோடிகளும் சங்கீத வித்வான்களும் இணைந்து இசைக்க, அரங்கில் உட்கார்ந்திருப்பவர்கள் நெக்குருகிப்போன சிலிர்ப்பான நாட்கள் அவை என்று அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர், திரு ஆர்.கிருஷ்ணசாமி கூறுகிறார். ஶ்ரீ ஹரிதாஸ் சுவாமிகள் ஜல சமாதி அடைந்ததாகத்தான் நம்பப்படுகிறது. அவர் என்ன தற்காலத்து இளம்பிள்ளையா?
சமுதாயத்தில் வாழும் நாம் யாவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சமாச்சாரம் என்பதால் தான், நான் இது பற்றி பேச துணிந்தேன்.
இன்னம்பூரான்
14 04 2013

-------
15 04 2013 அப்டேட்:


கி.காளைராசன்
10:16 PM (13 hours ago)
to mintamilManramthamizhvaasalதமிழ்vallamaime
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
அருமையானதொரு சிந்தனையை முன்வைத்துள்ளீர்கள்.

ஸ்ரீராமன், சரயு நதியில் ஜலசமாதி.
‘தற்கொலை‘ என்பது வருத்தத்திற்கு உரியதே.

கோடானுகோடி உயிரினங்களில் ஒன்றாக இப்பூமியில் தோன்றியிருந்தாலும், அத்தனை உயிருடனம் நாம் தொடர்புகளை வைத்துக்கொள்வதில்லை.  எல்லாவற்றையும் நம் உடன்பிறந்தனவையாகப் பார்க்க முடிவதில்லை.

ஜனனவழியாகச் சில நூறு உறவினர். ஆனால் மிகச் சிலரே அன்றாடம் நம்முடன் உறவாடுபவர்.
நாம் நடமாடும் வழியாகச் சில நூறு நண்பர்கள்.  ஆனாலும் மிகச் சிலரே அன்றாடம் நம்முடன் உறையாடுபவர்.  
கோடானுகோடிப்பேரில், இந்த மிகச் சிலரே நமது உலகம் என்றாகி விடுகிறது.
இவர்களுடன் பேச மறுப்பதும், உண்ணாநோன்பிருப்பதும் கூட ஒருவகையில் தற்கொலையே.

“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகொள் தக்கது உடைத்து“
(குறள் 780)
Innamburan S.Soundararajan 
10:40 PM (13 hours ago)
to கி.காளைராசன்
நன்றி, காளைராசன்,

இந்த இழைக்கு நான்கு முகங்கள், திசை மாறவில்லை.

1. ஸ்னேஹா மாதிரியான அமைப்புகளை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வதே ஒரு விழிப்புணர்ச்சி; தற்காப்புக்கும், சமுதாய ஆலோசனைக்கும் உதவலாம். அதனால், அவர்களின் விலாசம், தொடர்பு எல்லாம் கொடுத்தேன்.
2. மக்கள் ஆலோசனை, முதலுதவி திறன் (First Aid: St.John's Ambulance),  அவசர சுவாஸ சிகிச்சை (Artificial Resustication), நல்லிணக்க தன்னார்வ தொண்டு எல்லாவற்றிலும் நாம் யாவரும் பயிற்சி பெற்றால், இந்தியாவின் தரம் 'ஓஹோ' என்று உயர்ந்து விடும்.
3. நாம் இளந்தலைமுறையை குற்றம் சொல்லும் முன் நம்மையே பரிசோதித்துக்க்கொள்வது நியாயம்; எதுவும் புதிது அல்ல. எதுவும் பழசு அல்ல. எல்லாம் புதிதே; எல்லாம் பழசே. தீர்வு நம் கையில்.
4. நீங்கள் கூறும் கனமான சிந்தனை.
பார்ப்போம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
14 04 2013