Monday, May 13, 2013

பாமர கீர்த்தி 4 மனித நேயம்


பாமர கீர்த்தி 4 
மனித நேயம்


இந்த இழையில் கனிவுடன் கலந்து கொண்டோர்களுக்கு நன்றி. பாமர கீர்த்தி என் பல நாள் கனவு. இந்த இழையே 18 04 2011 அன்றே தொடங்கி, ஐந்து மாதங்கள் ஓடி விட்டன. ஷைலஜாவின்/மற்றவர்களின் அனுபவங்களும் நல்வரவே. பேராசிரியரின் ஆய்வு சிந்தனையை தூண்டுகிறது. இத்தருணம், "அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24" இழையில் ஈற்றடியில் யான் பதிவு செய்ததை இங்கு மீள்பதிவு செய்கிறேன்:

"...இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!..." 

அவ்வாறு யான் உரைத்ததின் பின்னணியே, 'யாதும் ஊரே...'.  
ஷைலஜா சொல்படி, ஒரு பாமர கீர்த்தி, ஏற்கனவே சொல்லியிருந்தாலும்: 

1947: டோனாவூர் ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரியும், அதை சார்ந்த கிராமமும். அங்கு என் தங்கை கமலாவுக்கு தீவிர வைத்தியம். சனிக்கிழமை தோறும் கணக்குத் தீர்க்கவேண்டும். விதி விலக்கு கிடையாது. தொகை மறந்து விட்டது. சூத்திரம் தான் என்றும் மறக்க முடியாதது. பில் ரூ. 209/- எனலாம், இப்போதைக்கு.  முழித்தேன். இனி உரையாடல்:

அத்தை: ராஜூ! ஏன் முகவாட்டம்? சொல்லு விஷயத்தை.
நான்: ரூ.209/- எல்லாம்! [இழுக்கிறேன்]
அத்தை: பில்லை செட்டில் பண்ணிடணும், ராஜூ. அதைக்கொடு.
[ரூ.209/- அடிக்கப்பட்டு, ரூ.9/- ஆக, என்னை பார்த்து புன்னகிக்கிறது.]
எனக்கோ ரோஷமதிகம். கண்கள் குளமாயின. 
நான்: அத்தை! இதை ஆயுசு பர்யந்தம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். இதோ! உங்களிடம் சொல்கிறேன். ஸுபாஷிணி புதுசா ரொம்ப பேர் வந்திருக்கிறதாக சொல்லியிருக்கிறார். அதான், மறுபடியும்.
விளக்கம்: அத்தை பெயர் நூரானி. அத்தை என்று கூப்பிடுவது டோனாவூர் மரபு. அத்தை நூரானி ஜெர்மானியர். ஹிட்லரின் காலகட்டத்து பெண்மணி.
அவருடைய கீர்த்தி பாடுவதுடன் நிற்காமல், அவருடைய ஈகையை பரப்புவதும் என் கடனே. இழை தொடரட்டும்: தொகுப்போம்.

நன்றி, வணக்கம். அந்த ஆஸ்பத்திரி நகரை நிறுவியவர் அமி கார்மைக்கேல். அவருக்கு வந்தனம்.
சித்திரத்துக்கு நன்றி: http://images.betterworldbooks.com/161/Amy-Carmichael-Wellman-Sam-9781616269081.jpg

"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -40




"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -40

Innamburan Innamburan Mon, May 3, 2010 at 8:07 PM



03 05 2010
"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -4


     உங்களுக்கு ஜே.பி.மாணிக்கம் அவர்களை தெரியுமோ? நம்ம காஃபி கிளப் நண்பர். அந்தக்காலத்து போலீஸா, கம்பீரமா  முறுக்குமீசை, அதிலே கொஞ்சம் லேசா நரை. குங்குமப்பொட்டு. நல்ல களை. சிவாஜி கணேசன் மாதிரின்னு வச்சுக்கங்களேன். அவர் தான் உளவு துறை தலைவர். ஒரு நாள் வந்தார். அதற்கு முன் செக்ரடரி பி.வி.ஆர். ராவ் தொலை பேசியில் ரஃப்பா பேசினார, 'Manikkam is coming to you. Render all cooperation.' டொக்! பாத்தா கண்ணின் மணி. அதன் முன்னே மாணிக்கனார்! வந்த ஜோர்லே, நம்ம டெலிஃபோனை கட் பண்ணிட்டு, இந்தக்காலத்து சாமியார்கள் மாதிரி, 
'நீ தப்பு பண்ணவில்லையென்றால், கவலைப்படாதே; தப்பு செய்திருந்தால் காராகிருஹம் நியாயம் தானே' 
என்று ஆசுவாசப்படுத்தி விட்டு, ஒரு நாளிதழை பிரித்து, 'இது உன் கையெழுத்தா?' என்றாரே பார்க்கலாம்! அது பாகிஸ்தானின் 'டாவ்ன்' நாளிதழ். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினேனா, 'டபக்'னு போலீஸ் உத்தியை கையாண்டார், மற்றொரு நாளிதழை விரித்து. அது ஈஜிப்ட்டின் 'அல் அஹ்ராம்'. இரண்டிலும் தலையங்கம் சுரீர். ' Nehru proposes; Soundararajan disposes!' என்ற வகையில். இன்றும் முழு விவரம் சொல்ல இயலாது. அரைகுறையா சொன்னால், அடியேன் கையொப்பமிட்ட அரசாணை ஒன்று [நகல் இணைக்கபட்டிருந்தது. என்னுடைய நீளமான கையொப்பம். சும்மா சொல்லாக்கூடாது; நன்னாத்தான் 'பளிச்' னு இருந்தது, ப்ரிண்டில்!]  
பகர்ந்த 'திடுக்' செய்தி, நம் அரசு பிரகடனம் செய்த கொள்கைகளுக்கு முரணாக இருந்தது. போர்காலங்களில் அவ்வாறு நிகழலாம். போரில்லாக்காலங்களிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன! [பிரதமரின் ஒப்புதல் இருந்ததது; ஆனால். எல்லாம் பரம ரகஸ்யம்.] பாகிஸ்தானுக்கு கொண்டாட்டம். எனக்கு திண்டாட்டம். இதன் பின்னணியைக்கேட்டால், கீதா, திருவேங்கிட மணி, தேனியார், மறைமுகம் திவாஜி (டைம் இல்லையாம்!) ஜ்யோதிஷர், ஒளிந்தும் ஒளியாத சுரேஷ் , மத்தவா எல்லாம் (எழுதாதவ எல்லாம் படிக்காதவாளா?) மனம் இரங்கி என் மேல் இரக்கமழை பொழிவார்கள், 

"துப்பார்க்குத் துப்பாய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை" 
போல.

     ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை, என்றும் இல்லாத திருநாளாக, வஸந்தாவும் நானும் சினிமாவுக்கு கிளம்பினோம். வழியில் சவுத் ப்ளாக்கில் (ஆஃபீஸ்). செளந்தரராஜன் 1ன்  கார் தென்பட்டது. ஒரு நிமிஷம். எட்டிப்பார்த்துவிட்டு வருகிறேன் என்று போனேனா. அவர் 'வா,வா, இந்த ஆணை (தேவ்ஜீ சொல்றமாதிரி: இப்பெல்லாம், 'ஜீ' விளி போட்றமாதிரி தானே தூள் கிளப்பறார்!) 'தத்க்ஷணமே' கிளம்பவேண்டும்.' என்றார். வஸந்தாவை மிலிட்டரி வண்டியில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வேலையில் ஆழ்ந்தோம். கை மேல் வெண்ணைய், ஒரு வாரத்திற்குள்!!  'இன்று, எவ்வளவு நேரமானாலும், என்னிடமிருந்து விடுதலை கிடைக்காமல், வீட்டுக்குப் போகாதே' என்று, நேற்று நம்முடன், இன்முகத்துடன் காஃபி அருந்திய மாணிக்கனார் மிரட்டறார்னா, கல்மனமும் கரையுமே. மின் தமிழர் வெல்லம் மாதிரி உருகும் மனத்தினர் அல்லவோ, அப்பப்போ உருட்டி மிரட்டினாலும்!

     போறாக்குறைக்கு,சினிமா துறந்த அன்றிலிருந்து ஊடல். ஹி.ஹி. 'காரை பாத்தாலே, இப்டி ஓட்றவா, ஆளை பாத்தா எப்டியோ! என்று தனிமொழி. அங்கும், இங்குமா, எங்கும். உபத்ரவம்னு சொல்ல முடியாது. இல்லைன்னும் சொல்லிக்கமுடியாது. அது தான் இல்லறம் என்று 

           "நெருநல் ஆடினை புனலே, இன்று வந்து
            ஆக வனமுலை அரும்பிய சுணங்கின் 
            மாசில் கற்பின் புதல்வன் தாய்என
            மாயப் பொய்மொழி"

பரணரே சொல்லிவிட்டாரே. 

எல்லாவற்றிலும் நல்லதே காண்க என்று சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? யார் என்று கேட்கக்கூடாது. தெரிந்தா சொல்லமாட்டேனா? அதை விடுங்கோ. மாணிக்கனார் தற்காலிக சிறையில் வைத்த துன்பத்தை வீட்லே சொன்னேனா, சற்றே மிகைப்படுத்தி. ஊடல் ஓடியே போய்விட்டது. அடடா! மாணிக்கத்திடம் இந்தக்கணக்காயன் சொன்ன கணக்கை எழுத மறந்துட்டேனே. மிதுன ராசிலே மிருகசீர்ஷம் காண்றவா, சுக்ர தெசைலே ஒன்பதாவது மடத்திலெ குரு என்று சொல்றா. அதான் மறந்துடுத்து.  டூ லேட்! அப்றம் அரெஸ்ட் வாரண்டின் கரெண்ட் பிடுங்கிய வரலாறு 
தொடற (லாமா)?
இன்னம்பூரான்


2 ஏப்ரல், 2010 1:26 pm அன்று, Thiruvengada Mani T.K <tktmani@gmail.com> எழுதியது:

விறுவிறுப்பாக இருக்கிறது! அரெஸட் வாரண்ட் வந்ததா? தப்பித்தீர்களா?
மணி

Innamburan Innamburan Mon, May 31, 2010 at 2:02 PM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88@yahoo.com
31 05 2010
________________________________________________________
Image Credit: http://whartonconstable2.com/images/warrantcard_t.jpg
innamburan
13 05 2013



அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1
Innamburan Innamburan Fri, Sep 9, 2011 at 4:54 AM

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1

“ ...தீர்க்கதரிசிகளின், முன்னோரின் ஞானத்தை நாடும் அறிவாளி, அன்னாரின் மேற்கோள்களையும், கதைகளையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் உட்பொருள் காண விழைவான். மர்மங்களை தேடுவான். நுட்பங்களை அனுபவிப்பான். தரணி முழுதும் அலைந்து, நல்லதும், கெட்டதும் காண்பான்...”
 ~ விவிலியம்
 ஜெனிவா நகரத்தில் CERN என்ற விஞ்ஞான மையம் இருக்கிறது. ஜூன் 18, 2004 அன்று அங்கு, இந்திய அரசு பரிசளித்த பொன்னம்பலவாணன் நடராஜரின் சிலை நிறுவப்பட்டது. அணுவின் உள்ள நுன்னணுக்களின் நடனத்திற்கு, சிவபெருமானின் ஆனந்தத்தாண்டவத்தின் ஆசி கூற. 
ஆசி & விளக்கம்: “இத்தனை தெளிவாக இறையாண்மையை சித்திரித்த சமயத்தையோ, நுண்கலையையோ, யாம் கண்டதில்லை.” ~ ஆனந்த குமாரஸ்வாமி
வம்சபரம்பரை மண்ணின் வாசனையை போல. இன்றைய தலைமாந்தனின் தாத்தா அந்தக்காலத்திலேயே அரசியல் பிரமுகர். கொழும்பு நாடாளுமன்றத்தின் நான்கு மூலை காவலர்களின் சிலைகள் இவரது மாமன்களின் அருமை சாற்றுகின்றன. தந்தையோ முதல் முதலாக ‘ஸர்’ விருது பெற்ற ஆசியர். பிரிட்டீஷ் பார்லிமெண்டில் அங்கத்தினராக இருந்த சிவக்கொழுந்து. அன்னையோ ராணி விக்டோரியாவின் பாங்கி;ஆங்கிலேயர். 

இவர் முதலில் பூமியை தான் தோண்டினார்; பின்னர் ககனத்தில் பறந்தார். 36 மொழிகளில் வித்தகர். கலையார்வமும், மரபின் மாண்பும், கலைப்பொருள் போற்றுதலும் இந்த கலை யோகியின் பரிமாணங்களில், சில. விளையும் பயிர் முளையிலே என்பார்கள். 12 வயதில் ஐஸ்லாந்திலிருந்து வந்தவருடன், அவரின் மொழியிலேயே பேசி, எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திய கலை யோகி ஆனந்த குமாரஸ்வாமி பிறந்த தினம், ஆகஸ்ட் 22, 1877. அவர் ஒரு விஞ்ஞானி.  பூமித்தாயின் மடியிலிருக்கும் தாதுப்பொருள்களை பற்றி ஆய்வு செய்து, தொரியோனைட், செரண்டபைட் என்று இரு தாதுப்பொருட்களை சிங்களத்தில் கண்டு பிடித்தவர். இந்த அலைச்சல்கள் ஹிந்து/பெளத்த கலாச்சாரங்களை மேற்கத்திய அணுகுமுறை புரிந்து கொள்ளவில்லை என்பதை இவருக்கு உணர்த்தின. தென்னிந்தியாவிலும், அதே அதோகதி! இவ்வாறு கலாச்சாரங்களில் நுட்பங்களை ஆராயத்தொடங்கிய இந்த விஞ்ஞானி இந்திய/இந்தோனேசிய/ சிங்கள கலை சார்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிடவே, இவருடைய புகழ் உலகெல்லாம் பரவியது. 

வட இந்தியா முழுதும் அலைந்து, திரிந்து, அரிதான அபூர்வமான கலைப்பொருட்களை சேகரித்து, இந்திய அரசிடம் கொடுத்து பொருட்காட்சி மையம் அமைக்க வேண்டினார். அவர்கள் ஆதுரமாக அதை புறக்கணிக்கவே, வேறு வழியில்லாமல், இங்கிலாந்துக்கு எடுத்து சென்றார். நம்மூர் ஆசாமிகள் கொள்ளையடித்துப் போனான் என்று கூசாமல் சூளுரைப்பர். நல்ல வேளை! இந்திரா காந்தி மரபு காக்கும் மையம் இவரை போற்றுகிறது.

இந்திய விடுதலை இயக்கங்களில் கலந்து கொண்டார், இந்த இங்கிலாந்து வாழும் சிங்களவர். முதல் உலக யுத்தத்தின் போது, இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை என்பதால், இங்கிலாந்தில் ராணுவத்தில் சேர மறுத்தார். அவருடைய வீட்டை பறிமுதல் செய்து, நாட்டை விட்டு துரத்தினர், இந்த மஹாராணியின் பாங்கி மைந்தனை. செல்வன்! குறிப்பு எடுத்துக்கொள்ளவும். ஆளை பிடிப்பதில் அமெரிக்கா கெட்டி. ஐன்ஸ்டீனை கவர்ந்தவர்கள், நீல்ஸ் போஹ்ர் அவர்களை கோட்டை விட்டாலும் (அது நிஜமாகவே கோட்டை சமாச்சாரம்! யாராவது கேட்டா பார்க்கலாம்,), அமெரிக்க காங்கிரஸ், பிரத்யேகமாக ஒரு சட்டமியற்றி, இவருக்கு ஸுஸ்வாகதம் கூறியது, கலைப்பொருள்களுடன் வருக என்ற ‘அன்புக்கட்டளையுடன்’. இங்கிலாந்து ஏமாந்த சோணகிரியாயிற்று. பாஸ்டன் ம்யூசியத்தின் பொறுப்பு ஏற்ற கலையோகி, அமெரிக்க கலையுலகில் பிரபலமானார். மெல்ல, மெல்ல, கலையின் உட்பொருள், ‘இறைச்சி’, ஒப்புமை தேடல் என்றெல்லாம் ஆய்வுகள் செய்யத்தொடங்கினார். 

அது அவரை ஆன்மிகப்பாதையில் கொண்டு சென்றது. தன்னுடைய பன்மொழி வித்தகத்தினாலே, வடமொழியின் மேன்மையை மேற்கத்திய உலகுக்கு உணர்த்தினார். கத்தோலிக கிருத்துவம் அறிந்த இவருக்கு, வேதங்களின் சாரம் எடுத்துரைக்க முடிந்தது. சமுதாய பிரச்னைகளயும், ஒரு விஞ்ஞானியாகவும், கலையார்வம் மிகுந்த தேடுபவராகவும், தத்துவஞானியாகவும், ஆன்மிகராகவும் அலசினார். அளவுக்கு மீறி செல்வம் குவிப்பதை அவர் ரசிக்கவில்லை. என்றுமே, அவர் தன்னை ஒரிஜினல் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. சான்றோர் வாக்குகளை புரிந்து கொண்டால் போதாதோ என்பது அவருடைய அணுகுமுறை.

யாமொன்று நினைக்க அவன் ஒன்று நினைக்கிறான். 1947 இல் இந்தியா விடுதலை அடைந்தது அல்லவா! இங்கு வந்து தங்கி, துறவறம் நாடவேண்டும் என்று நினைத்தார். வேலையிலும் இருந்து ஓய்வு எடுத்தாகி விட்டது. ஆனால்,ஸெப்டம்பர் 9, 1947. கலையோகியின் ஆத்மா அன்று தேவருலகம் சென்று அடைந்து விட்டது. காத்திருந்தது பல வருடங்கள். கிடைக்க இருந்தது சில தினங்கள். எட்டியது கிட்டவில்லை. திருமதி அவருடைய அஸ்தியை கங்கை நதியில் கரைக்க வந்தார். கையோடு கையாக, அவருடைய சேகரங்களை இந்திரா காந்தி கலை மையத்திடம் அளித்து விட்டார். 

தாய்நாடு சிங்களம்; ஆளாக்கிய நாடு இங்கிலாந்து; அடைக்கலம் அருளியது அமெரிக்கா. ஆத்மாவின் உறைவிடம் இந்தியா. இவரது அபிமானத்தை எந்த அளவுகோலில் மதிப்பீடு செய்வது? சொல்லுங்கள். 

வாழ்க! அமரர் கலையோகி ஆனந்த குமாரஸ்வாமி அவர்களின் திருநாமம்.
இன்னம்பூரான்
09 09 2011


1977-Coomaraswamy.jpg
pastedGraphic.pdf

உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Sep 9, 2011 at 4:50 PM

நன்றி ஐயா.  சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையில் தான் ஆனந்தகுமாரஸ்வாமி பற்றி முதன்முதல் கேள்விப் பட்டேன். ஆனாலும் இவ்வளவு பரிபூர்ணமாய்த் தெரியாது. 


தாய்நாடு சிங்களம்; ஆளாக்கிய நாடு இங்கிலாந்து; அடைக்கலம் அருளியது அமெரிக்கா. ஆத்மாவின் உறைவிடம் இந்தியா//

கடைசியில் இந்திய மண் அவரை ஏற்றுக்கொண்டு விட்டது ஏதோ ஒரு விதத்தில். .  




Sunday, May 12, 2013

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39




'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

Innamburan S.Soundararajan Sun, May 12, 2013 at 5:38 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

31 03 2010

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

Inline image 1


வேலை கடுமையாக இருந்தாலும், ஒரு நிறைவு இருந்தது. திரு. ராம் மனோஹர் லோகியா, நேரு அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்த அன்று, அதிகாரிகள் அமரும் இடத்தில் நெருக்கம் தாங்கமுடியவில்லை என்றாலும், வீ.டி.தெஹிஜா என்ற உயர் அதிகாரி அநியாயமாக பறித்துக்கொண்டாலும் என் ரெசெர்வ்ட் இடத்தை பறித்தாலும், அருகில் அமர்ந்து, எனக்கு விமர்சனம் அளித்த வண்ணம் இருந்தார்; அதையும் சேர்த்து, என் ரிப்போர்ட்டை தாக்கல் செய்தேன். ஜே.எஸ்.லால் ஐ.ஸீ.ஸ், என்னை கூப்பிட்டு, 'நீ ஜர்னலிஸத்துக்கு தான் லாயக்; டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சொல்கிறேன்;போகிறாயா?' என்று கேட்டார். மறுத்து விட்டேன். அவருக்கு என் மேல் பரிவு. ஒருநாள் காலை எட்டு மணிக்கு, காற்று வாங்க ஆஃபீசிலிருந்து இறங்கும் போது எதிரில் வந்த அவர், 'எப்படியிருக்கிறாய்/' என்று கேட்டதற்கு [நாக்குலே சுக்ரன்!], 'I am most unhappy, Sir.' என்றேன். தன்னறைக்கு அழைத்து சென்று, காஃபி கொடுத்து ஆஸ்வாசப்படுத்திய பிறகு, விசாரித்தார். 'குடக்கூலிக்கு இருக்கும் இடம் ஒழுகல், பாதுகாப்பு இல்லை, மனைவுக்கு, நானோ ராப்பகலா பாசறையில்' என்று யான் குரல் கொடுக்க, 'நானாச்சு, மாலை வா' என்றார். போனால், யாரும் போக விரும்பாத, ராமகிருஷ்ணாபுரம் செக்டர் 4ல், இல்லம் கொடுக்கும் ஆணை, வேறு அமைச்சரகத்திலிருந்து! அங்கு மனைவிக்கு அருமையான கம்பெனி; நல்ல மனிதர்கள். அக்காலம், கார் வாங்குவது, குதிரைக்கொம்பு. ஃபியட் டப்பாவுக்கு மூன்று வருடம் காத்திருக்கவேண்டும். ஸ்டாண்டர்ட் டப்பா வாங்கினேன். நானும் அவருக்கு ஒரு பதிலுபகாரம் செய்தேன். அக்காலம், சுழல் முறையில், கன்ட்ரோல் அறையில் காவல் ட்யூட்டி. கூட இருக்கும் கர்னல் பழங்கதையெல்லாம் சொல்லுவார். ஒரு நாள், திடீரென்று தெற்கு சீமையிலிருந்து, 'சைனாக்காரன் வந்துட்டான்!' என்று சங்கேத மொழியில் அலறல்! லால் ஐயாவை வரச்சொல்லவேண்டும். 'என்னப்பா புரளி. நீயே அம்மாகாணத்து தலைமையுடன் பேசு. நான் பொறுப்பு' என்றார். ரகசிய தொடர்பு மூலம் அந்த தலைமை காரியதரிசியை கேட்டால், 'அப்படியா' என்றார், அரை தூக்கத்தில். ஒரு விடு விட்டேன். மேட்டர் செட்டில்டு. இப்படியா குப்பை கொட்டிகொண்டிருக்கும்போது, என் நண்பரின் தந்தை, சென்னையில் உயர் அதிகாரி, வந்திருந்தார். ஸ்கூட்டர் வாங்கிய அவனுக்கும், கார் வாங்கிய எனக்கும் மெகா-டோஸ் கொடுத்தார், 'வீட்டுமனை வாங்க தெரியாத மக்குகளா!' என்று. ஐ.ஏ.எஸ்ஸுக்கு தான் நீங்கள் கொடுப்பீர்கள் என்று நான் குற்றம் சாட்ட, மிலிடரி விஸ்கி கொடுத்த துணிச்சலில், என்னுடன் பந்தயம் போட்டார். நான் கெலித்தேன். எப்படி தெரியுமா? அவர் வந்த வேலை எங்கள் அமைச்சரகத்தில்; பாஸ் இல்லாமல் அவரை கூட்டிச்செல்லவேண்டும். ரொம்ப சுளிவு. அதிகாலையில் வரும் எனக்கு, செக்யூரிடியில் பல நண்பர்கள். என் பின்னால், அவர் வர, நான் அவருக்கு சலாம் போட, அவர்களும் சலாம் போட்டு உள்ளே விட்டார்கள். எனக்கு மனை ஒதுக்கப்பட்டது, பந்தய விதிப்படி. அது பெரிய கொடுப்பினை. டபால்னு சுக்ரன் ஓடிப்போயிட்டார், சனி நுழையப்போரார். ஏன்?, என்னை அரெஸ்ட் பண்ண வந்துவிட்டார்கள்.

[தொடரும்: அரெஸ்ட் வாரண்ட்!]


Tthamizth Tthenee
4/2/10

'சுக்ரதிசை!' :
 
சுக்கிரதிசையா.?
 
சுக்ர தசையா.?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
Geetha Sambasivam 
4/2/10

சுக்ர தசை என்பதே சரி என நம்புகிறேன். வேறே பெரியவங்க வந்து சொல்லட்டும். திசை என்றால் பொருள் மாறுபடுகிறது.
Thiruvengada Mani 

அரஸ்ட் வாரண்டா? தப்பித்து விட்டீர்களா? ஒரே விறு விறுப்பு!
4/2/10

மணி
Tthamizth Tthenee 
4/2/10

சுக்ர தசை, ஒன்பதாம் மடத்தில் குரு
 
அப்புறம் எப்படி மாட்டுவார்.?
 
தப்பித்திருப்பார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
____________________
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_YXhBd2jSUy8/S0NR9V5zEPI/AAAAAAAACgA/cgRNEjMLRdg/s400/Doubt+21.jpg

அன்றொரு நாள்: மே 13: அனந்தகோடி சூரியரஷ்மி!




அன்றொரு நாள்: மே 13: அனந்தகோடி சூரியரஷ்மி!


Innamburan Innamburan Tue, May 15, 2012 at 3:35 AM

ன்றொரு நாள்: மே 13:
அனந்தகோடி சூரியரஷ்மி!

சிறு வயதில் அதிகாலையில் புதுக்கோட்டையின் புதுக்குளத்தைச் சுற்றி ஓடுவதுண்டு. ஒரு நாள், பிடிவாதமாக, ஏழு வயது தம்பி பார்த்தசாரதி கூட வந்தான். அங்கு பக்கத்திலேயே சுடுகாடு. மெனெக்கெட்டு, அங்கிருந்து மேலேறி வந்து ஒரு ஜடாமுனி, அவனை பார்த்தார். பிறகு வானத்தை பார்த்து அவனிடம், ‘நீ இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பாய்’ என்றார். எனக்கு அச்சான்யமாக பட்டது. விரைவில் வீடு திரும்பினோம். யாரிடமும் சொல்லவில்லை. பத்து வயது ஆனபோது, ஆகஸ்ட் 7, 1949 அன்றிலிருந்து ஜொலிக்கிறான். அது1898ம் வருடத்து அனந்தகோடி சூர்யரஷ்மி நக்ஷத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது.

‘அம்பா! நீ இரங்கலாகாதா?’ 

பிரளயம் கோத்துக்கும் போல பண்ணிட்டேயேடீ. எந்த பிரமேயத்தைக் கொண்டு, மே 13, 1898 அன்று, மிஸ்டர் மான்ய்வல் பைக்கடை அவர்கள் சொன்னதைப் போல் இப்படி செய்தாய்? அதுவும் ஆகஸ்ட் 1949 தான். அவருடைய திருமகனும்...* அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே?

அன்றொரு நாள் கிரிஸ் ஆன்ஸ்ட்டூஸ்சும்,ஜேம்ஸ் மார்லியும் அமெரிக்காவிலிருந்து வந்த போது, இரண்டு பேரும் மனோதத்துவ பேராசிரியர்கள், கீழே படம் போட்டிருக்கேனே, அந்த புஸ்தகத்தைத் தான் கொடுத்தேன். மேலும் சொன்னேன்.
இதை எழுதிய வாலிபன் தான், பி.அய்யாசாமி, ஜி.ஜி. நரஸிம்ஹாச்சாரியார், பீ.வீ.காமாஸ்வர ஐயர் அவர்களுடன் கூட்டு சேர்த்து கொண்டு 1896 ல் ‘ப்ரபுத்த பாரதா‘ என்ற ஆன்மீக விழிப்புணர்வு சஞ்சிகையை பிரசரித்தார்கள். இந்த வாலிபன் தான் ஆசிரியர். நால்வரும், அவர் 1893ல் அமெரிக்கா போகுவதற்கு முன்னேரே ஸ்வாமி விவேகாநந்தரின் சிஷ்ய கோடிகள். இவர் தான் ‘கமலாம்பாள் சரித்திரம்’  என்ற புதினத்தை 1896இல் வெளியிட்டார். தமிழிலக்கியத்தில் அது தான் இரண்டாவது புதினம். அவர்களிடம் நான் திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் தான் அந்த வாலிபன். ஆத்மவிசாரணையில் புதிய ராஜபாட்டைகள் போட்டவர். மே 13, 1896 அன்று அவர் சிவலோக பிராப்தி அடைந்த போது, அவருடைய வயது 24. அவர் பூலோகவாசியாக இல்லாததால், இரண்டே வருடங்களுக்கு பிறகு, ப்ரபுத்த பாரதா அடுத்த மாத இதழுடன் நின்று போனது என்று மேலும் சொன்னேன். விசனத்துடன் கேட்டுக்கொண்டார்கள். இன்று திண்ணை இதழில் நான் பார்த்த கட்டுரை ஒன்று, திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் காலத்தில் நடந்து வந்தத் தத்துவ விசாரணை/மரபு/ஆளுமை/ ஆழம்/ விசாலம்/ உன்னதம் ஆகியவற்றை எடுத்து வைப்பதால், காப்புரிமை & நன்றி நவின்று, பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
13/14 05 2012
Inline image 1

*******************
பாரதியாரது தத்துவ மரபு
முப்பால்மணி
தமிழக மரபில் வேதாந்தம்
பாரதியாருக்கு முந்திய வேதாந்தம்
1880களில் சிதம்பரத்திலிருந்து வந்த பிரம்மவித்யா இதழில் சீனிவாச சாஸ்திரி அத்வைத கட்டுரைகளை வெளியிட்டார், சார்வாகம் உலகாயதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியனவற்றை மறுத்து எழுதினார், ஜhன் லாக்கி. ஹhப்ஸ் ஆகியோருடைய ஆங்கிலேய உலகாயதத்தையும் மற்றும் ஜெர்மானிய புஹ்னர் மேற்கொண்டு இருந்த ஆற்றல்-பொருள் பற்றிய உலகாயதமும். அதோடு சமூகம் மற்றும் சோஷலிசத்தின்பால் இயற்கை சார்ந்த தத்துவங்களைக் கொண்டு செலுத்துவது பற்றிய கருத்துக்களையும் அறியப் பெற்று இருந்த கல்வியாளர் இங்கே 1880 முதற்கொண்டு இங்கே இருந்தனர், மேலும் வால்டேர். ரூஸேh வழிப்படுத்திய பிரெஞ்சுப் புரட்சி மற்றும் விவரித்த நாத்திகம் ஆகியனவற்றைப் பயின்ற படிப்பாளிகள் இங்கே நிலவினர், 1870 முதற்கொண்டு சைவச் சான்றேhர்கள்(யாழ்பாணம். கொக்குவில். குகதாசர் ச, சபாரத்தின முதலியார். Nளை, சோமசுந்தர நாயக்கர்)இங்கே நேர்காட்சிவாதத்தின் ஆன்மிக மற்றும் சமூக விளக்கங்களைக் கைக்கொண்டு புத்தெழுச்சியுடன் திகழ்ந்தனர், கூடவே இங்கே nஜ,எஸ்,மில். ஸ்பென்ஸர். பிராட்லா ஆகியோரது நேர்காட்சிவாத வழிப்பட்ட பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளும் ஆங்கிலக் கல்வியாளரிடையே வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்தன, (இந்த நேர்காட்சி வாதக் கல்விப் பயிற்சி பெற்றவரைத் தான் பாரதி பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என வெறுத்தார், பாரதியரால் பொய்மைசேர் மதியினில் புலைநாத்திகம் கூறுபவர் என்று பேசப் பட்டவர் இவர்களாக இருக்கலாம்), 1880 முதல் 1896 முடிய பிரம்மவித்யா இதழ் அவர்களோடு தத்துவப்போர் புரிந்தது, பி,ஆர், ராஜம் அய்யர். சென்னை அழகிய சிங்கர் தம் பங்குக்குக் கட்டுரைகளைத் தந்தனர், இவர்கள் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர். எல்லாப் பிறப்பும் பிரம்ம ஸ்வரூபங்கள் என்று முதலில் பேசினர், பிறகு பஞ்சபு{தப் பொருள்களும் இல்லை என்றனர், கடவுளானது(பிரம்மானது) தனது மாயை காரணமாகப் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர் என எல்லாப் பிறப்புமாகத் தோற்றம் தருகிறது, ஆகவே புல். பு{ண்டு. ஆகியன தோற்றம் மட்டுமே, இருப்பது ஒன்றே, அது பிரம்மம் எனச் சுட்டினர், புறவயப் பொருள்களையும். இயலுலகையும் ஏற்றனர், பிரம்மத்தையும் ஏற்றனர், என்றhலும். அறிவு மட்டுமே உண்மை. பொருள்கள் பொய் என்ற கருத்தியலின் பால்நின்று பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. (நதி. கடல். தீ. காற்று). தேவர் (நாட்டார் குலதெய்வங்கள்). மனிதர். எல்லாப் பிறப்புகளும் தோற்றம் மட்டுமே என்று முடிவாகக்[ கூறினர், இப்படியாக 20-ஆம் நு}ற்றhண்டுத் தொடக்கத்தில் நின்றனர், அகவய பிரம்மமா அல்லது அனைத்தையும் அளாவி உள்ளும். புறமும் ஆக விளங்கும் புறவய பிரம்மமா என்ற வரலாற்றுச் Nழ்நிலையில்அகம்பிரமாஸ்மி என அகவய பிரம்மத்திற்கு அத்வைதத்துறையில் விளக்கம் கூறினர், அப்போது பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றhன பிரம்ம சூத்திரமானது முதன்முதலாக 1905-இல் சங்கர. ராமாநுஜ. நீலகண்ட பாஷ்யங்களுடன் தமிழில் மாடபு{சி-ராமாநுஜhசாரியாரால் வெனியிடப் பட்டு இருந்தது, இந்த நிலையில் சங்கரர் அகவயஅத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது,,.’
******************
உசாத்துணை:
 "Prabuddha Bharata", Vol. 100 No.1 (January 1995).
 "The Story of Ramakrishna Mission" (Kolkata: Advaita Ashrama, 2006), 798–811
http://www.advaitaashrama.org
http://www.eng.vedanta.ru/prabuddha_bharata.php Vedanta website] from Russia with articles from "Prabuddha Bharata"
* [http://www.vivekananda.net/NotNewButLongForgotten.html Cover] of March 1897 issue of "Prabuddha Bharata"
BRR.jpg
14K

coral shree Tue, May 15, 2012 at 3:56 AM
To: Innamburan Innamburan

அருமையான பதிவு ஐயா, வணக்கம்.

2012/5/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 13:
அனந்தகோடி சூரியரஷ்மி!

சிறு வயதில் அதிகாலையில் புதுக்கோட்டையின் புதுக்குளத்தைச் சுற்றி ஓடுவதுண்டு. ஒரு நாள், பிடிவாதமாக, ஏழு வயது தம்பி பார்த்தசாரதி கூட வந்தான். அங்கு பக்கத்திலேயே சுடுகாடு. மெனெக்கெட்டு, அங்கிருந்து மேலேறி வந்து ஒரு ஜடாமுனி, அவனை பார்த்தார். பிறகு வானத்தை பார்த்து அவனிடம், ‘நீ இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பாய்’ என்றார். எனக்கு அச்சான்யமாக பட்டது. விரைவில் வீடு திரும்பினோம். யாரிடமும் சொல்லவில்லை. பத்து வயது ஆனபோது, ஆகஸ்ட் 7, 1949 அன்றிலிருந்து ஜொலிக்கிறான். அது1898ம் வருடத்து அனந்தகோடி சூர்யரஷ்மி நக்ஷத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது.


ஆச்சரியமாக இருக்கிறது..... 


‘அம்பா! நீ இரங்கலாகாதா?’ 

பிரளயம் கோத்துக்கும் போல பண்ணிட்டேயேடீ. எந்த பிரமேயத்தைக் கொண்டு, மே 13, 1898 அன்று, மிஸ்டர் மான்ய்வல் பைக்கடை அவர்கள் சொன்னதைப் போல் இப்படி செய்தாய்? அதுவும் ஆகஸ்ட் 1949 தான். அவருடைய திருமகனும்...* அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே?

அன்றொரு நாள் கிரிஸ் ஆன்ஸ்ட்டூஸ்சும்,ஜேம்ஸ் மார்லியும்,, அமெரிக்காவிலிருந்து வந்த போது, இரண்டு பேரும் மனோதத்துவ பேராசிரியர்கள், கீழே படம் போட்டிருக்கேனே, அந்த புஸ்தகத்தைத் தான் கொடுத்தேன். மேலும் சொன்னேன்.


ஆகா, என்ன விரைவான நடை...


இதை எழுதிய வாலிபன் தான், பி.அய்யாசாமி, ஜி.ஜி. நரஸிம்ஹாச்சாரியார், பீ.வீ.காமாஸ்வர ஐயர் அவர்களுடன் கூட்டு சேர்த்து கொண்டு 1896 ல் ‘ப்ரபுத்த பாரதா‘ என்ற ஆன்மீக விழிப்புணர்வு சஞ்சிகையை பிரசரித்தார்கள். இந்த வாலிபன் தான் ஆசிரியர். நால்வரும், அவர் 1893ல் அமெரிக்கா போகுவதற்கு முன்னேரே ஸ்வாமி விவேகாநந்தரின் சிஷ்ய கோடிகள். இவர் தான் ‘கமலாம்பாள் சரித்திரம்’  என்ற புதினத்தை 1896இல் வெளியிட்டார். தமிழிலக்கியத்தில் அது தான் இரண்டாவது புதினம். அவர்களிடம் நான் திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் தான் அந்த வாலிபன். ஆத்மவிசாரணையில் புதிய ராஜபாட்டைகள் போட்டவர். மே 13, 1896 அன்று அவர் சிவலோக பிராப்தி அடைந்த போது, அவருடைய வயது 24. அவர் பூலோகவாசியாக இல்லாததால், இரண்டே வருடங்களுக்கு பிறகு, ப்ரபுத்த பாரதா அடுத்த மாத இதழுடன் நின்று போனது என்று மேலும் சொன்னேன். விசனத்துடன் கேட்டுக்கொண்டார்கள். இன்று திண்ணை இதழில் நான் பார்த்த கட்டுரை ஒன்று, திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் காலத்தில் நடந்து வந்தத் தத்துவ விசாரணை/மரபு/ஆளுமை/ ஆழம்/ விசாலம்/ உன்னதம் ஆகியவற்றை எடுத்து வைப்பதால், காப்புரிமை & நன்றி நவின்று, பதிவு செய்கிறேன்.


முற்றிலும் சுவையான தகவல்கள். மிகச் சுருக்கமான சுவையான வரலாறு.. இனிமையான வாசிப்பை வழங்கும் பதிவு. நன்றி ஐயா.

அன்புடன்
பவளா.



Geetha Sambasivam Tue, May 15, 2012 at 9:56 AM


அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே?//

இந்த எழுத்துக்கு என்ன சொல்றது? அப்படியே மனதை உருக்குகிறதே! நேரே நின்னு சொல்றாப்போல் காதில் ஒலிக்கிறது. பி. ஆர். ராஜாமையருக்கு அருமையான அஞ்சலி. அவரைக் குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தாலும் இந்த மேலதிகமான தகவல்கள் புதிது.  மிக்க நன்றி. லா.ச.ரா.வே வந்து  உங்களுக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார். 


2012/5/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இந்த நிலையில் சங்கரர் அகவயஅத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது,,.’
******************


Anna Kannan Tue, May 15, 2012 at 10:33 AM


அட, ஆமாம். அந்தக் காற்று இங்கே வீசுகிறது.



2012/5/15 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
லா.ச.ரா.வே வந்து  உங்களுக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார். 

[Quoted text hidden]

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Tue, May 15, 2012 at 10:49 AM


இந்தப் புத்தகத்தின் பல பிரதிகளை சி.சு.செல்லப்பா தன்னிடம் வைத்திருந்தார்.  எண்பதுகளின் இறுதியில் நண்பர்கள் அனைவரிடமும் வருத்தத்துடன் புத்தகக் கட்டைக் காண்பிப்பார்.

க்ரியாவில் அப்போது வேலை செய்து கொண்டிருந்த திலீப் குமார் மூலமாக நானும் என் நண்பர் ஒருவரும் இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினோம்.  நான் சென்னை சென்றபோது செல்லப்பாவை சந்தித்து  சில  பிரதிகள் தனியாக வாங்கி வந்து சில நண்பர்களுக்குக் கொடுத்தேன்.

இப்பொழுது இந்த நூல் எங்கும் கிடைக்க வில்லை என்று நினைக்கிறேன்.  மீண்டும் பதிப்பிக்கப் படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Geetha Sambasivam Tue, May 15, 2012 at 10:51 AM


வருத்தமான விஷயம். நீங்க சி.சு. செல்லப்பா பத்திச் சொல்கையில் எல்லாம் மனதைப் பிசைகிறது. :((((

Kamala Devi Tue, May 15, 2012 at 10:56 AM



சி.சு. செல்லப்பாவைப்பற்றி வடக்குவாசலில் பென்னேஸ்வரன் எழுதிய கட்டுரை படித்தீர்களா?
மனம் கலங்கி அழத்தோன்றியது, மாமியின் பதில் கேட்டபோது,
”அது எப்படி எங்கள் அந்தரங்கத்தையெல்லாம் உன்னிடம் சொல்வது ? ” ---
கீதா, செல்லாப்பவை அல்ல, அந்த மாமியைப்பார்க்காமல் போனோமே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன்.
கமலம்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Tue, May 15, 2012 at 10:56 AM


இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.

அவருடைய எழுத்து பிரசுரங்களை மொத்தமாக ஒரு கட்டாகக் கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

எழுத்து பிரசுர நூல்களை மொத்தமாக வாங்குபவர்களுக்கு இந்த Rambles in Vedant இலவசமாகவும் கொடுத்துக் கொண்டிருந்தார் செல்லப்பா.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Anna Kannan Tue, May 15, 2012 at 11:12 AM

Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
சி.சு.செல்லப்பா மரணம் அடைந்த டிசம்பர் 18, 1998 அன்றுதான் அவரை முதன்முதலில் பார்த்தேன். திருவல்லிக்கேணி இல்லத்தில் கிடத்தியிருந்தார்கள். அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை. யாருடனும் எதுவும் பேசவில்லை. கைகூப்பி வணங்கிவிட்டு வந்துவிட்டேன்.



Kamala Devi Tue, May 15, 2012 at 11:21 AM



இறுதியாகவேனும் காணும் பாக்யம் கிட்டியதே தம்பி கண்ணன்
97ல் ஞான் சென்னையில் பயிற்சிக்கு வந்துள்ளேன், ஆனால், இப்பொழுதுதான்,
சான்றோர்கள் யாரையுமே ஞான் சந்தித்தில்லையே ,என நினக்கும்போதே கண்ணீர் வருகிறது



Nagarajan Vadivel 
இந்த இழைக்குத் தொடர்புள்ளதாக உள்ள ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளேன்

http://sri-ramana-maharshi.blogspot.in/2008/09/interview-with-prof-t-m-p-mahadevan.html

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எங்கள் மரியாதைக்கும் போற்றுதலுக்குமான பேராசிரியர் டி.எம்.பி.மஹாதேவன் அதவைதா தத்துவத்தில் உலகப் புகழ் பெற்ற பேராசிரியர்.  1982-ல் அவர் அளித்த பேட்டி மேலே உள்ள இணைப்பில்
பாரதியார் காசியில் வாழ்ந்தவர்.  காசி பல தத்துவங்கள் வளர்ந்த பூமி.  பாரதியார் பல ததுவங்களைப் பாடல்களில் எழுதியிருந்தாலும் அவர் சக்தி வழிபாட்டை ஏற்றுக்கொண்டவர்.  சகோ.நிவேதிதாவின் தாக்கத்துக்கு ஆட்பட்டவர் என்பது ஒரு அனுமானம்

'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38




'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38

Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 10:19 PM


23 03 2010

 'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38
Inline image 1

சில மாதங்களுக்கு முன்னால், எங்கள் ஓய்வு பெற்றோர் சங்கத்தில் அக்காலத்தில் எனக்கு டிபுடி செக்ரெடரியாக இருந்தவரை சந்தித்தேன். பழங்கதைகளை சொல்லி மகிழ்ந்தார். 'ஒரு பாடாகஎன் ிபுடிசெச்ரெடரியின் தரிசனம் கிடைத்ததுஅதிர்ச்சி தரும் சூழலில்!' என்று சொன்னேனே, முந்தைய சுற்றில். அந்த மஹானுபாவன் தான்,அவர். 

பின்னோக்கி செல்வோம். எல்லா பெரியவர்களையும் பார்த்து வந்தனம் சொல்லியாயிற்று. இவரை மட்டும் பார்க்க இயலவில்லை. அவரு எப்போதும் பிஸி. ஒரு நாள் என் அறைக்கு வந்து அழைத்துப்போனார். பலிகடா மாதிரி பின் தொடர்ந்தேன். 

உரையாடல்:
அவர்: உன் கையொப்பம் போட்டுக்காட்டு. 
[காட்டினோம்]
அவர்: அடப்பாவி! என் மாதிரியே போடுகிறாயே. இதோ பார்!
[என் காசோலைகளை காண்பித்தார். அவருக்கு டெபிட்! உள்ளூர சந்தோஷம் எனக்கு. காட்லாமோ? ஊஹூம்!]
அவர்: ஏற்கனவே இந்த அமைச்சரகம் பாகல் ஜிம்கானா [பைத்தியக்காரர் கூட்டம் என்க.] நீ வேறே படுத்தரே. 
அடியேன்: நீங்கள் தான் என் மாதிரி கையொப்பம் போடுகிறீர்கள்! 
[சுருங்கச்சொல்லின், ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.]

இவரிடம் நான் கற்றுக்கொண்டது கொஞ்சநஞ்சமில்லை. இவர் ஒரு அதிகாரமையம். அதன் பின்னணி: ராணுவம் பற்றிய எல்லா செய்திகளையும், அப்டேட் செய்து, விரல் நுனியில் வைத்திருந்தார், இந்த செளந்திரராஜன்; அரசு உருப்படியாக செயல்படுவதில் குறியாக இருந்தார்; முறையாக நடக்கவேண்டியதை, நிறைவேற்றுவதிலும், முறையற்றதை, என்ன எதிர்ப்புகள் இருந்தாலும், செயலிழக்க செய்துவிடுவதிலும், அய்யா மன்னன்!. அதற்கு, அருமையான உத்தி வைத்திருந்தார். அந்த கோப்பைகளை 'கடப்ஸ்'ஸில் போட்டுவிடுவார். வேளை வரும்போது அது எட்டிப்பார்க்கும். திரு.கிருஷ்ணஸ்வாமியோ, எந்த சிக்கலையும், ஒரு வினாடியில் அவிழ்த்து விடுவார். ஹரீஷ் ஸரீன் ஐ.ஸீ.ஏஸ் ஒரு தனிப்பிறவி; ராணுவக்கடலில் தோணி. கரையோரம் கலங்கரை விளக்கு. இவர்களிடம் அனுபவப்பாடம் பெறுவது ஒரு கொடுப்பினை.

ஒரு பாடம்: 
நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு எங்கள் மேல் பாய்ந்த தணிக்கை அறிக்கைகளை ஒரு ரகசிய மன்றத்தில், எங்களை சாக்ஷிகளாக நிறுத்தி, அலசும். மாரி பொழிவது மாரி நிந்தனைகள் பொழியும். காலாகாலத்தில் முடிவு எடுக்காததால், பீர் வாங்கியதில், அந்த பிரிவுக்கு நஷ்டம் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று குற்றச்சாட்டு; அந்தப்பணத்தை ஜவான்களிடமிருந்து வசூல் செய்துவிட்டோம், நஷ்டமில்லை என்று சால்ஜாப்பு. பொது கணக்குக்குழு ஒத்துக்கோண்டாலும், போர் நடக்கும் காலகட்டத்தில் ஜவானுக்கு செலவா? என்று முறைத்தது. அத்துடன் விட்டது.

பிரதம சாட்சியான ஹரீஷ் ஸரீனுக்கு நான் உதவியாளன். திரும்பிய பிறகு, நான் அவரிடம் சொன்னேன், 'என் குறிப்பை நீங்கள் பார்க்கவில்லை. நாம் ஜவானிடன் இதை தள்ளிவிடவில்லை.' 

மறுநாள், விசாரணை தொடங்கும் முன், ஸரீன் ஒரு விளக்கமளித்தார், 'நான் நேற்று தவறாக கூறிவிட்டேன்; மன்னிக்கவும். அதிகப்படி செலவை ஜவான்களின் தலையில் கட்டவில்லை; அமைச்சரகம் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும்' என்றார். குழுவும் சிலாகித்தது. மற்ற நிந்தனைகளும் எடுபடவில்லை.  

அன்று எல்லாம் முடிந்தபிறகு, வழக்கம் போல், ஆடிட்டர் ஜெனெரலும், ஸரீன் அவர்களும் மரியாதை நிமித்தம் உரையாடியபோது, அவரும் இந்த அணுகுமுறையை சிலாகித்தார்.  இவன் தான் காரணம் என்று ஸரீன் என்னை முன்னிறுத்தினார். போட்டாரே பார்க்கலாம், ஆடிட்டர் ஜெனெரல், 'இதற்கு தான் இந்த பசங்களை உங்களிடம் பயிற்சிக்கு அனுப்புகிறோம்' என்று! 
[ தொடரும்: 'சுக்ரதிசை!']

இன்னம்பூரான் 
சித்திரத்துக்கு நன்றி:http://3.bp.blogspot.com/-gvuz_vKPhZo/TnmaNJKIg1I/AAAAAAAAB4g/Jcr4-ExMr8M/s1600/1.jpg
இன்னம்பூரான்
12 05 2013

தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை


தமிழார்வம்
‘திரிகடுகம்: தகைமை
Inline image 1
அப்டேட்:2014
எழுத்தை சீரமைக்கச் சொன்னர்கள்.
இன்னம்பூரான்

4. தகைமை மூன்று
தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் - நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில். 
4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம். 

4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘...சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே...’ (7-7-3)   என்று
நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘... இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட
அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார்
காலத்திலேயே   வழக்கில்   இருந்தன...’ என்றும் எழுதியுள்ளார்.

5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

(தொடரும்)

இன்னம்பூரான்
07 11 2012
உசாத்துணை:
திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
தமிழ் இணையக் கல்விக்கழகம்
திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

சித்திரத்திற்கு நன்றி:

பிரசுரம்: வல்லமை