அன்றொரு நாள்: அக்டோபர் 9
எனக்கு ஒரு மஹரிஷி போல் தோற்றமளிக்கும் தேசாபிமானி, இலக்கிய ஆய்வாளர், நண்பர் திரு.பெ.சு.மணி சொல்வது போல் ‘தமிழ் மரபின் காவலர் வ.வே.சு. ஐயர் அவர்களை பற்றி என் தந்தை அவ்வப்பொழுது சொன்னதெல்லாம், எழுபது வருடங்களாக, உள் மனதில் ஆழங்காணாத கருவறையில், பதிந்துள்ளது. அப்பா என்னை வீர சவர்க்காரை பார்க்க மதுரைக்கு அழைத்து சென்ற போது, சொன்னவை ~ வ.வே.சு. ஐயர் புரட்சிக்காரனாக இருந்த போது மெக்காவுக்கு, முஸ்லீம் மாறு வேடத்தில் சென்றது, கப்பலில் தன்னை வீ.வீ.சிங்க் என்று அடையாளப்படுத்திக்கொண்டு ஏமாற்றியது, வாஞ்சிக்கு உதவியது, பாரதி நண்பனாக புதுச்சேரிக்கு வந்தது, அதுவே அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, காந்தீயவாதியாக மாறியது, அம்பாசமுத்திரம் அருவியில், அருமைப்பெண் சுபத்ராவுடன் எதிர்பாராத விதமாக ஜல சமாதியானது எல்லாம். நான் அவருடைய வரலாறு எழுத வேண்டியதில்லை. நான் எழுதக்கூடியதை விட சிறந்த கட்டுரை (தமிழ்மணி - தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்: ெப. சு.மணி:நன்றி:- தினமணி ) தமிழ் மரபு விக்கியில் இருக்கிறது. உசாத்துணையில் உளது. உங்களை அதை படித்து, தேசாபிமானத்தை, தமிழார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.
யாருக்குமே பிறந்த தினம் நினைவில் இருக்கவே இருக்காது. இறக்கும் தறுவாயில் கூட, அநேகருக்கு. ஆனால், யாராவது திருப்புமுனைகளை மறப்பார்களோ? அக்டோபர் 9, 1910 அன்று மாறுவேடத்தில் அவர் புதுச்சேரி வந்தது ஒரு திருப்புமுனை, வ.வெ.சு. ஐயர் அவர்களுக்கு.
சில சமயங்களில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை அனுமதிக்கலாம். த.ம.அ.வின் தயவினால், என் பெயர் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பால் சுட்டப்பட்டது எனலாம். என்னால் மின்னாக்கம் செய்யப்பட்ட வ.வே.சு. ஐயர் அவர்களின் கம்பராமாயண ஆய்வு நூல், அங்கு இடம் பெறுகிறது. மலர் அன்றையது. நார் இன்றையது.
இன்னம்பூரான்
09 10 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment