அன்றொரு நாள்: அக்டோபர் 13
முயல் திரும்பி ஆக்ரோஷத்துடன் ஓநாயை தாக்குவது, கீரிப்பிள்ளை பாம்பை துரத்தியடிப்பது, காடு கொள்ளாத அளவு சாது மிரள்வது, வணங்கும் தந்தையை எதிர்த்து காதலனை மணப்பது போன்ற வீர தீர செயல்களை, தனி மனிதனோ அல்லது ஒரு அப்புராணி பிராணியோ தான் செய்ய இயலும் என்று நினைக்கவேண்டாம். சமுதாயங்களும், தேசாபிமானங்களும் அவ்வாறு இயங்கியதை தொடர்கதை போல் வரலாறு அளிக்கிறது. நாம் கண்டுகொள்வதில்லை. இன்றைய தலைமுறைக்கு இரண்டாவது உலகப்போரை பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் படையெடுத்தவர்கள் (அச்சு அணி); இங்கிலாந்து, அதை சார்ந்த இந்தியா, கனடா, வகையறா, ரஷ்யாவும் அதன் சுத்துப்படைகளும், அமெரிக்கா ஆகியோர் தடுத்தாட்கொண்டவர்கள் (நட்பு அணி) என்று அநேகர் அறிவர். ஆனால், அக்டோபர் 13, 1943 அன்று, இத்தாலி தடுத்தாட்கொண்டவர்களுடம் சகவாசம் ஆகி, ஜெர்மனி மீது யுத்தப்பிரகடனம் செய்த கதை கேளும். ஜெர்மானிய ஹிட்லரும், இத்தாலிய முசோலினியும் சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள். (ஸ்டாலினும் தான்; கதை வருது.) ஜூலை 1943லியே முசோலினி மக்கள் புரட்சியினால் ஒழிக்கப்பட்டான். அவனது பாசிஸம் மடிந்தது எனலாம். பேருக்கு இருந்த இஸ்பேட் ராஜா விக்டர் இம்மானுவேலுக்கும், முசோலினியின் தளபதியாக இருந்த கீரிப்பிள்ளை ஜெனெரல் படோக்லியாவுக்கும் மவுசு கூடியது. ஸெப்டம்பர் 8 அன்று, ‘கொயட்டா’ நட்புப்படை ஒன்று இத்தாலியின் சலர்னோ என்ற இடத்தில் இறங்கியது. ஹிட்லரும் முறைத்தான். இத்தாலி மீது படையெடுக்க ஆயத்தம் செய்தான்; ரோமாபுரி விஜயம் செய்தான். ராசாவும் ,மந்திரியும் ஓடிப்போய்ட்டாங்க, பிரிண்ட்ஸி என்ற இடத்துக்கு. அங்கிருந்து தான் அக்டோபர் 13, 1943 அன்று தான் மந்த கதியில் இத்தாலி, மக்களின் முழு ஆதரவுடன், ஐசன்ஹோவருடன் சேர்ந்து கொண்டு, ஒரு பாடாக ரோமாபுரியை மீட்டனர். இப்போது வியப்புக்குரிய திருப்புமுனை! என்ன தான் சொன்னாலும்ெ, ஜெனெரல் படோக்லியா முசோலினியின் கைப்பிள்ளை; தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை; பாசிஸ தளபதி. பாசிச ஒழிப்பு முழுமையாக இருக்கவேண்டுமென்று, அவரும் பதவியிலிருந்து விலகினார்.
நம்ம ஃப்ரெண்ட் தேசிகன் கேக்கறாரு? ̀‘நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா? அவருக்கென்ன?
இன்னம்பூரான்
உசாத்துணை:
No comments:
Post a Comment