Thursday, July 4, 2013

தேசாபிமானம்:அன்றொரு நாள்: ஜூலை 5




அன்றொரு நாள்: ஜூலை 5:

Innamburan Innamburan Tue, Jul 5, 2011 at 12:01 PM


அன்றொரு நாள்: ஜூலை 5:

தேசாபிமானம் என்றால் என்ன? நாட்டுப்பற்று அது தானா? அல்லது வேறு இலக்கா? அமெரிக்கன் வரலாற்று மன்றத்தின் இதழ் ஒன்றில் இது பற்றிய கருத்து ஒன்று. தேசாபிமானம் என்ற கோட்பாடு/நிலைப்பாடு பரவலாக வரலாற்று தளங்களில் காலூன்றியிருந்தாலும்,  குறிப்பிட்ட மக்கள் சமுதாயங்கங்களின் தனிசிறப்பாக, அது நிலவுவதும் அன்றாடம் தென்படுவது தான், என்கிறது அந்தக்கருத்து. ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பது நலம். ஒரு தேசத்தின் நான்கு எல்லைகளும், நாட்டுப்பற்றின் எல்லைகளும் வெவ்வேறாக இருக்கலாம். உதாரணமாக, ஸ்காட்லேண்டு, இங்கிலாந்தில் இல்லை. அவை இரண்டும் இருப்பது ஒரு நாடு - ஐக்கிய ராஜாங்கம் (யூ.கே.). தேசங்கள் (நேஷனாலிட்டி) வேறு வேறு. நான் தேசாபிமானம் என்ற சொல்லை அந்த பொருளில் பயன்படுத்துகிறேன். இன்று நான்கு தேசாபிமானங்களை பற்றி பேச்சு. 
  1. ஜூலை 5, 1295
ஸ்காட்லாந்தும், ஃபிரான்சும் இங்கிலாந்தை பொது பகையாளியாக பாவித்து செய்து கொண்ட ஒப்பந்ததின் பெயர், ‘தொன்மையான உடன்பாடு’! குழப்பங்கள் நிறைந்த அக்காலத்தில் ஸ்காட்லாந்து மன்னன் ஜான் பேலியலுக்கு மூன்று நாடுகளிலும் நில சொத்து இருந்ததாலும், இங்கிலாந்து அரசன் எட்வர்ட்டுக்கு ஃப்ரான்ஸில் சொத்து இருந்ததாலும், ஒவ்வொருவரும் ஒரு தேசத்தில் மாமன்னனாகவும், மற்றொன்றில் குறுநில மன்னனாகவும் பிரகடனங்கள். எட்வர்ட் ஒரு படி மேல் போய்,ஜான் பேலியலை அடக்கியாள துணிய, அவர் கடல் கடந்து உறவு நாடினார்.  கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு பிறகு, கிருத்துவ சமய கோட்பாடுகளில், கத்தோலிக்க பிரிவை விட ப்ராடஸ்டெண்ட் எனப்படும் பிரிவினை வாதத்தின் தாக்கத்தால், இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் நெருங்கத்தொடங்கின. அப்போது கூட ஸ்காட்லாந்தில், ஃபிரென்ச் கால்வின்-ப்ராடஸ்டெண்ட் மாடல்.  பல நூற்றாண்டுகளாக, they are different nations in one country -the United Kingdom.
இருந்தாலும், இதையும் கேட்கவேண்டும். இங்கிலாந்தின் தயவினால் தலையெடுத்த ஃப்ரென்ச் தலைவர் ஜெனெரல் டிகால், ஸ்காட்லாந்தின் எடின்பரோவில், 1942ல் பேசியது:
‘...வந்த மாத்திரமே, நமக்குள் பல நூற்றாண்டுகளாக ஆழ்ந்திருக்கும் உணர்ச்சிகரமான தொன்மையான பிணைப்பை வாழ்த்துகிறேன்... நமக்குள் அதே கவிதை மோகம், அதே சமய கோட்பாடுகள், அதே இலக்கிய ரசனை...’ (ஒரு விதத்தில் பொதுப்படையாக இருந்தாலும், he carried the day, perhaps, much to the chagrin of his host, Winston Churchill!) 
2. 05-07-1987 :
வல்லிபுரம் வசந்தன் (ஜனவரி 11966 - ஜூலை 51987கரவெட்டியாழ்ப்பாணம்) ஒரு தமிழீழ தேசாபிமானி. தமிழீழ விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் கப்டன் மில்லர் என்ற பெயரில் இயங்கினார். இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார். கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது.
3.இந்திய திருநாட்டின் மக்களின் நலமும், மேன்மையையும் , ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும், வருங்கால சந்ததியின் செழிப்பும் கருதி, நாம் இந்திய ஆளுமையின் எல்லைகளை நாட்டுப்பற்றின் எல்லை தெய்வங்களாக மதித்து, நம்முள் உறையும் ‘நாடுகளை’ எல்லாம் மதித்து இந்திய மண்ணின் பற்றே, என் தேசாபிமானம் என்று இயங்கமுடியுமா?
4. இன்று உலகளாவிய வணிகம், புலன் பெயர்தல், இணக்கங்கள், பிணக்கங்கள், நாடு கடந்த, தார்மீகமான அபிமானங்கள் உலா வருகின்றன. இது பொருட்டு நாம் செய்ய வேண்டியது, செய்யக்கூடியது என்ன?
இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/ில்லர்
Image credit:http://www.academicstudiespress.com/ImagesCover/ISBN%20978-1-936235-11-7.jpg


Dhivakar Tue, Jul 5, 2011 at 12:16 PM


அபாரமான சரித்திர ஞானத்தை வழங்குகிறீர்கள்.. முதலில் மிகப் பெரிய நன்றி அதற்கு.

ஜூலை 5, 1295

தமிழகத்தில் காட்சி எப்படி இருந்திருக்கும். எங்கே பார்த்தாலும் சண்டை, சச்சரவு. அடிதடி உதைதான். தென்னகத்தையே ஆண்ட அந்த மாபெரும் சோழ சாம்ராஜ்யம் இத்துனூண்டு காவேரிப்பாக்கத்துக்குள் அடங்கிப் போய் விட்டது போல பரிதாபம். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன். கொஞ்சம் ஸ்ட்ராங் பாண்டியர்தாம். பாண்டியர்கள் இருவர். ஒருவன் அரசனின் தலைப்பிள்ளை, ஆனால் துணைவியின் மகன். அரசனின் இளையமகன் பட்டத்து ராணியின் மகன். சண்டையோ சண்டை. மூத்தவன் பட்டத்து ராணியின் மகனைத் துரத்தி அடிக்க வடநாட்டு பூதம் ஓடி வந்தது.

அவன் இதற்கு பிறகு டில்லி சுல்தானிடம் உதவி கேட்டு ஓடினான். மாலிக்காபூரை அனுப்பி அத்தனை செல்வத்தையும் கொள்ளையடிக்கவைத்தான். மாலிக்காபூர் வந்து செல்வத்தை அள்ளிக் கொண்டு போனால் போகட்டும். ஆனால் பெண்டு பிள்ளைகள் மானமும் அள்ளிக் கொண்டு போன கதை நடந்த காலம் இது. வேண்டவே வேண்டாம் இந்த இருண்ட நாட்கள்..


கி.காளைராசன் Tue, Jul 5, 2011 at 1:07 PM


ஐயா "இ"அவர்களுக்கு வணக்கம்.


அபாரமான சரித்திர ஞானத்தை வழங்குகிறீர்கள்.. முதலில் மிகப் பெரிய நன்றி

 ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம்.

ஜூலை 5, 1295

பாண்டியர்கள் இருவர். ஒருவன் அரசனின் தலைப்பிள்ளை, ஆனால் துணைவியின் மகன். அரசனின் இளையமகன் பட்டத்து ராணியின் மகன். சண்டையோ சண்டை.
மாலிக்காபூர் வந்து செல்வத்தை அள்ளிக் கொண்டு போனால் போகட்டும். ஆனால் பெண்டு பிள்ளைகள் மானமும் அள்ளிக் கொண்டு போன கதை நடந்த காலம் இது. வேண்டவே வேண்டாம் இந்த இருண்ட நாட்கள்..
எவ்வளவு ​பெரிய இனப்படு​கொ​லை அது?
இனச் சீரழிவு?

நி​னைத்தால் ​நெஞ்சம் ப​தைக்கிறது.

மாலிக்காபூரிடம் மாட்டிக் ​கொண்டவர் எல்லாம் இன்றும் மனம் மாறாமல் இருப்பதும்,
தப்பிப்பி​ழைத்​தோர் எல்லாம்
மாலிக்காபூர் ப​டையிடம் மாட்டிக் ​கொண்டவர்க​ளை ​வெறுப்பதும் இன்றும் ​தொடர்கிறது!
இத்த​னை ஆண்டுகள் ஆன பின்னும் நாம் எல்லாம் ஒருதாய் பிள்​ளைக்கள் என்ப​தை உணர மறுக்கின்றனர்.

அன்பன்
கி.கா​ளைராசன்



Geetha Sambasivam Wed, Jul 6, 2011 at 9:45 AM


அருமையான விளக்கம் ஐயா.  பல அரிய தகவல்கள் நிறைந்த தொகுப்பு. உங்கள் நினைவாற்றலுக்கும், சரித்திர சம்பவங்களைத் தொகுத்தளிக்கும் திறமைக்கும் எல்லை இல்லை.  நன்றி.



Innamburan Innamburan Wed, Jul 6, 2011 at 9:51 AM


நன்றி, கீதா. இதில் இருக்கும் ஒரு நுட்பம் நமக்கு படிப்பினை. Unique diversity cohabiting in Unique Unity. India can be different robust nations in one robust country.


வணக்கம்.

இன்னம்பூரான்

Geetha Sambasivam 
7/6/11

ஓ, ஜூலை நான்கு படிச்சிருக்கேனா?? மறந்திருக்கேன். 
கிருஷ்ணமூர்த்தி 



http://www.youtube.com/watch?v=ffRQ6e29Dw0&feature=related

http://www.youtube.com/watch?v=DJU1VsgI_-I&feature=related

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/4/newsid_2786000/2786967.stm

முதலிரண்டு சுட்டிகளில் ஆபரேஷன் தண்டர்போல்ட் /என்டெபே என்று பெயரில்
ஒரிஜினலாகவும், பின்னாட்களில் ஆபரேஷன் யோனாதன் என்றும் அழைக்கப்பட்ட இந்த
இஸ்ரேலி அதிரடி நடவடிக்கைகளை சுருக்கமாக வீடியோ வடிவில் பார்க்கலாம்.

மூன்றாவதாக, அன்றைய தினத்தைப் பற்றி பிபிசி செய்தி,அதிலேயே அன்றைக்கு
ஒளிபரப்பான பிபிசி செய்தியறிக்கை ஒலி ஒளிவடிவக் கோப்பையும் பார்க்கலாம்.

முக்கியமாக,நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வளவு கவனமாகத்
திட்டமிட்டார்கள், ஒத்திகை பார்த்தார்கள் என்பதும், வீண் செலவினங்களைத்
தவிர்த்து அரசுக்கு சுமையாக இல்லாதபடிக்கு இந்த நடவடிக்கை இருந்தது
என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

காங்கிரஸ் அரசாளும் தருணங்களில் தான் தொடைனடுங்கியாக
இருப்பதுமட்டுமல்லாமல், இந்த தேசத்துக்கும் தலைக் குனிவு
ஏற்படுகிறமாதிரித்தான் நடந்து கொள்வதும் வாடிக்கையாகிப்போன சோகம், 1948
காஷ்மீர் ஊடுருவலில் இருந்து, நேற்றைய மும்பைத்தாக்குதல்வரை தொடர்வதைப்
புரிந்துகொள்வதற்காக!

-------------------------
மௌனமாக இருக்கத்தான் முயற்சி செய்கிறேன்!
ஆனாலும், அவ்வப்போது இன்னம்புரானும் மோகனரங்கனும் இருக்கவிடமாட்டோம்
என்கிறார்கள்!!
YouTube - Videos from this email
Innamburan Innamburan 
7/6/11

நன்றி, திரு.கிருஷ்ணமூர்த்தி, இம்மாதிரி கூடுதல் தகவல்களை தரும் பின்னூட்டங்கள், நல்வரவே. எனக்கு ஊக்கம் தருகிறது. பீ பீ ஸியை உசாத்துணையில் நானும் சுட்டியிருந்த்தேன்.   வணக்கம்.

இன்னம்பூரான்





Wednesday, July 3, 2013

அன்றொரு நாள்: ஜூலை 4:




அன்றொரு நாள்: ஜூலை 4:
முன்குறிப்பு: அந்த அமெரிக்க பிரகடனத்தை, இரண்டு வருடம் கழித்து படிக்கும் போது, செல்வன் சொன்னமாதிரி, முழு வரலாற்றையும் நிதானமாக எழுதலாம். வாசகர்கள் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு முன் இந்திய தேசீய வரலாறு எழுத வேண்டும்.
இன்னம்பூரான்
ஜூலை 4, 2013

Innamburan Innamburan Mon, Jul 4, 2011 at 10:53 AM



அன்றொரு நாள்: ஜூலை 4:

  1. ஒட்டுமாங்கனி பிராந்தியம்.
இன்று உலகளவில் இந்தியர்கள் பிரபலமானதிற்குக் காரணம், நம் குடும்பங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு நபராவது அமெரிக்காவில் பேரெடுப்பது தான். நிர்வாஹத்திறன் என்று ஒன்று, எனக்கு நினைவு தெரிந்த நாட்களில், இந்தியாவில் இருந்தது என்றால், ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ்  அளித்தக் கல்வியின் முழுமை, பாரிஸ்டர் (படிப்பு?) தோழமை முக்கிய காரணம் எனலாம். கலையுணர்வு, இலக்கிய தாகம் இவற்றை அதிகரித்தது மொகலாய சாம்ராக்யம், ராஜபுதானா வீரம், மராட்டா நாட்டுப்பற்று, தமிழனின் சிந்தனை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம். மாற்றியும் அடுக்கலாம். ஒன்று சொல்ல, மற்றொன்று சொல்லி அழைப்பது தான் வழக்கம்.

இன்று ‘ஆவ்சம்’ அமெரிக்காவின் சுதந்திர தினம். ஜென்மதினமும் இது தான், அகதிகளால் உருவாக்கப்பட்ட, உலகின் வலிமை மிக்க இந்த  ஒட்டுமாங்கனி பிராந்தியத்திற்கு. அந்நாட்டு மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போமாக. ஜூலை 4, 1776 அன்று 56 பிரபலங்கள் கையெழுத்திட்ட இன்றளவும் மதிக்கப்படும் சுதந்திர பிரகடனத்தின் முழுமையையும், அதனுடைய கூகிள் பெயர்த்தெழுதுதலையும், பட்டயத்தின் சித்திரத்தையும் இணைத்து, அப்பிரகடனத்தின் முதல் வரியை மொழியாக்கம் செய்து, அதற்கு வந்தனை சொல்வதே, இந்த இழை. ஒரு தடிமனான நூல் எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது.

அப்பிரகடனத்தின் முதல் வரியை மொழியாக்கம்:

மனிதனின் வரலாற்றுப்போக்கில், சில சமயங்களில் அக்காலத்து அரசியல் தளைகளை கழற்றுவது இன்றியமையாததாக அமையலாம். அவரவர், இயற்கையும், இறையாண்மையும் அளித்த உரிமை, பதவி ஆகியவற்றை காப்பாற்றிக்கொள்ள தேவையானது, அவ்வாறு கழற்றியதின் பின்புலத்தை உரைப்பதே. அது தான் மனித இனத்திற்கு மரியாதை காட்டும் பண்பு.
யாவரும் சமானமானவர்கள்; இறையாண்மை யாவருக்கும், வாழ்வு, சுதந்திரம், மனநிறைவு நாடும் உரிமை ஆகியவற்றை அளித்துள்ளது. மக்களின் சம்மதத்துடன், அந்த உரிமைகளை அளிக்க, அரசு உழைக்கும். அதற்கு தான் அரசு. அந்த கடமையிலிருந்து தவறி, அவற்றை ஒழிக்க ஒரு அரசு முனையுமானால், அந்த அரசை மாற்றி/ஒழித்து செயல் பட மக்களுக்கு முழு உரிமை உண்டு......”

2. அடேங்கப்பா!

‘வந்த சுவடு தெரியாமல்’ என்றொரு சொற்றொடரொன்று உண்டு. பின் லேடனை அமெரிக்கர் ‘வந்த சுவடு தெரியாமல்’ வந்திறங்கி கொன்றனர். கந்தஹார் விமானதளத்தில் ஒரு இந்திய விமானம் சிக்கிய போது, அக்காலத்து இந்திய அரசு, ‘தொம் தொம் தொபக்ட்டீர்’ கோகுலாஷ்டமி கிருஷ்ணனைப்போல் அங்கும், இங்கும், எங்கும் சுவடு பதித்து, அபகீர்த்தி கட்டிக்கொண்டது. வல்லுனர்கள் செய்யவேண்டியதை அரசியலர் செய்தால், பிடிக்கப்பட்ட பிள்ளையாரும் வானர ரூபத்தில்! ஜூலை 4, 1976 அன்று நடந்த கதையே வேறு. 

மழை ‘சோ’ என்று பொழியும். ஆனால், மின்னலும், இடியும் தோன்றி மறையும், வினாடித்துளியில். அந்த மாதிரி ஆகாசத்திலிருந்து குதித்தனர் நூறு வீரர்கள், கும்பிருட்டில். பகையிடம் சிக்கியிருந்த அப்பாவிகளில் 103 பேரை மீட்டு, அலாக்கா, தூக்கிச்சென்றனர். பகை புகையாகி விட்டிருந்தது! கூண்டோடு கைலாசம். துணைக்கு மேலுலகம் சென்றது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டு வீரர்கள் 45, அப்பாவிகள் மூன்று, 11 மிலிடரி விமானங்கள். கன கச்சிதமாக, கறாராக, உச்சகட்ட ரகசியமாக, ஒரு வார காலம் இட்ட திட்டம் 90 நிமிடங்களில் அமர்க்களமாக நிறைவேற்றப்பட்டது. ஒரு குறை. அல்ல. கறை. தளபதி போர்க்களத்தில் மாண்டு போனான். ஐவருக்கு பலத்த அடி. இது தற்கால வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வீராதி வீர, தீராதி தீர பராக்கிரமங்களில் முதலிடம் வகிக்கும்.

மின்னலும், இடியும்’: 
இஸ்ரேலி கமாண்டோ படை; 
தளபதி:  
கர்னல் யோனாதன் நேதன்யாஹூ (பிற்கால இஸ்ரேலிய பிரதமரின் அண்ணன்: ‘மின்னலும் இடியும்’ என்று நாமகரணம் செய்யப்பட்ட இந்த அதிரடி தாக்குதலுக்கு அவருடைய பெயர் சூடப்பட்டது).
இடம்:
 உகாண்டா, ஆப்பிரிக்கா

நடந்தது என்ன?: 
ஒரு வாரம் முன்னால் ஜூன் 27 அன்று 248 பயணிகளுடன் ஏதென்ஸிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் ஃபிரான்ஸ் விமானத்தை பாலஸ்தீனிய & ஜெர்மானிய பயங்கரவாதிகள் நால்வர் கடத்தி லிபியாவின் பெங்காசியில் இறக்கினர். ஒரு பெண் விடுதலை. விமானம் கிளம்பி உகாண்டாவின் எண்டெப்பெ விமானதளத்தில் இறக்கப்பட்டது. மேலும் நால்வரும், உகாண்டா கொடுங்கோலன் இடி அமீனும் பகைக்குத் துணையாயினர். யூதப்பயணிகள் கொலைகளத்துக்காக தனிப்படுத்தப்பட்டனர். டிமாண்டு: 53 பயங்கரவாதிகளை விடுவிக்க
வேண்டும். ஆனால், ஃபிரன்சு விமான தளபதியும், அவரது பணியாளர்களும், ஒரு கன்யாஸ்திரீயும், மற்றும் சில பயணிகளும் விடுதலையை மறுத்து விட்டனர். என்னே பெருந்தன்மை! என்னே தியாகம்!

உலகை வியக்க வைத்த இந்த வாகை சூடிய படலத்தைக் கண்டு அமெரிக்க ராணுவமே பாடம் கற்க வந்தது. ஆனால், அவர்களுக்கு வந்த சோதனையில் தோல்வி அடைந்தனர். அது போகட்டும்.

இஸ்ரேல் சிறிய நாடு. யூதர்களுக்கு சொந்த மண் கிடையாது என்ற நிலை வரலாறு முழுதும் உண்டு. ஆயினும் தங்கள் குட்டி ராஜ்யத்தை திறம்பட நிர்வஹித்தனர். இன்னல்களை சமாளித்தனர். இந்த இன்னலை தீர்க்க, முடிந்தவரை இடி அமீனோடு சமாதானப் பேச்சு நடத்தினர். அதெல்லாம்  வீண் ஆன உடன், அவர்கள் வகுத்தத் திட்டங்கள், செய்து பார்த்த சோதனைகள், வெள்ளோட்டங்கள் எல்லாம் உச்சாணிக்கிளை தரம் வாய்ந்தவை. ஆறு விமானங்கள் நள்ளிரவில், எண்டெப்பெ விமானதளத்திற்குத் தெரியாமல் வந்து இறங்கின. அப்பறம் என்ன? டமால் டுமீல்? இல்லை! ஒரு கறுப்பு பென்ஸ் கார் வந்திறங்கி, இடி அமீனை அழைத்துப்போவது போய் பாவ்லா செய்து, மாட்டிக்கொண்டது, அவன் வெள்ளைக்காருக்கு மாறிய சமாச்சாரம் தெரியாததால், எதிர்பாராமல் வந்த சிக்கல். குறுக்கே வந்த இருவரை கொன்று, கையோடு கையாக டமால் டுமீல்.
நான் இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு மூன்று காரணங்கள்:

  1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை, இஸ்ரேலுக்கு. 1990ல் கூட இந்தியா இஸ்ரேல் நாட்டைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால், 1962லியே சில ரகஸ்ய தகவல் பரிமாற்றத்தின் பயனாக, அப்போதே எனக்கு அவர்களின் தீவிர தேசபக்தி, அசாத்ய துணிச்சல், பல துறைகளில் கிடு கிடு வளர்ச்சி, திட்டமிடுவதில் மேன்மை, கடமை, கட்டுப்பாடு, தியாகம் ஆகியவற்றின் மேன்மையெல்லாம் புரிந்தது. சில நாட்கள் முன்னால் ஒரு இஸ்ரேலிய நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அன்னாட்டு மக்களின் என்றும் குறையாத தேசாபிமானத்தின் ஆழம் புரிந்தது. நமக்கு ஒரு துளி ஒட்டிக்கொள்ளட்டுமே.
  2. மின்னல், இடி எல்லாம் சரி தான். ஒரு உடும்புப்பிடி வேண்டும். வலுவான திட்டம் வேண்டும். ரகசியம் காக்கவேண்டும்.
  3. கொடுங்கோலன் இடி அமீனுக்கு கென்யா மீது சந்தேஹம். உகாண்டா வாழும் நூற்றுக்கணக்கான கென்யர்களை கொன்றான். வெறுப்பு மிகுந்து மக்கள் அவனை ஒதுக்கினர். கழுதை கெட்டால் குட்டிச்சுவர். செளதி அரேபியாவில் சரண் புகுந்தான். அங்கு, ஆகஸ்ட் 2003ல் செத்தான்.
    இன்னம்பூரான்
   04 07 2011

உசாத்துணை



நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



3 attachments
operation-thunderbolt-klaus-kinski.jpg
118K
Declaration of Independence - Page 2.webarchive
281K
பிரகடனம்.pages
241K

Geetha Sambasivam Mon, Jul 4, 2011 at 11:07 AM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
வழக்கம்போல் அரிய தகவல் தொகுப்பு.  இன்று சுதந்திர நாளைக் கொண்டாடும் யு.எஸ். பிரஜைகளுக்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.


ஒட்டுமாங்கனியாய் இருந்தாலும் சுவை இழுக்கிறதே அனைவரையும். 

2011/7/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>





Tuesday, July 2, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! 18




கனம் கோர்ட்டார் அவர்களே!
1 message



இன்னம்பூரான்

யாமொன்று நினைக்க…

அக்காலத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.எம்.பதஞ்சலி சாஸ்திரி பற்றி எழுத நினைத்தேன். சதாசிவம் வந்து விட்டார். ஈரோடு மாவட்டம்: கடப்பநல்லூர் கிராமம். விவசாயகுடும்பம். அதில் முதல் பட்டதாரி. கிராமத்திலேயே முதலாக வழக்கறிஞர் சன்னது பெற்றவர். 1996லேயே இளம்வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி; பொதுவாக, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்ந்தவர்களுக்குத் தான் உச்சநீதிமன்றத்துக்கு உயர்வு கிடைப்பது வழக்கம். இவருக்கு டபிள் ப்ரமோஷன். 2007ல் நேராக உச்ச நீதிமன்றம். ஜூலை 19 அன்று உச்சநீதி மன்றத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்கப்போகும் இந்த தமிழ்மகனை வாழ்த்துவோம்.
இவருடைய முக்கியமான தீர்ப்புகளில் சில: ரத்ன சுருக்கமாக:
  1. ஒரு ரிலையன்ஸ் முட்டல் வழக்கில் அவர் கூறியது: இயற்கை வளங்களை அரசு வாரியங்களுக்கு மட்டுமே கொடுப்பது நலம். நம் தேசீய குடியரசில், அவை மக்களுக்கு சொந்தம். அரசு அவர்களுக்காக, அவற்றை பேணவேண்டும்.
  2. அநேகருக்கு ஒடிஷாவில் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரியும் அவரது மகன்கள் காரில் வைத்துக் கொளுத்தப்பட்டது நினைவில் இருக்கலாம். அந்த வழக்கில் மஹாத்மா காந்தியின் சர்வமத சம்மதம் இந்தியாவில் பரவவேண்டும் என்ற நம்பிக்கைத் தெரிவித்தார்.
  3. மாயாவதி மீது சீபீஐ போட்ட வழக்கு தர்மம் அல்ல என்று புறக்கணித்து விட்டார்.
  4. சஞ்சய் தத்துக்கு ஐந்து வருட சிறை தண்டனை கொடுத்ததும் இவரே.
  5. பெண்கள்/குழந்தைகள் மீது பலாத்காரம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.
இன்னம்பூரான்
30 06 2013
உசாத்துணை:


Monday, July 1, 2013

அட்றா சக்கை! -1




அட்றா சக்கை! -1

Innamburan S.Soundararajan Tue, Jul 2, 2013 at 6:42 AM

அட்றா சக்கை! -1
Inline image 1

குடு! குடு! - குடு! குடு!
நல்ல காலம் பிறக்குது!
ஜன நாயகம் தழைக்கவே! 
பாடம் நடத்ததியது யாரு?
குடு! குடு! - குடு! குடு!
ஆந்திரபிரதேஷ் மாநிலம்.
கரீம்நகர் மாவட்டம்.
ஸிர்ஸிலா ஃபிர்க்கா.
பஸ்வப்பூர் கிராமம்.
சர்பஞ்ச் (பட்டாமணியம்/வில்லேஜ் முன்சீப்) போஸ்ட் ஏலம்!!
முந்திக்கிட்டாஹ.
குடு! குடு! - குடு! குடு!
தேர்தல் கமிஷனுக்கு வேலை இல்லாம போச்சு.
ஊர் பெரிய தலைகளும், மாணவர்களும், பெண்ணியமும், மற்றவர்களும்
செய்த தீர்ப்பு. 
ஏலத்தில் கெலித்தது பொன்னம் ரவி கெளட்.

குடு! குடு! - குடு! குடு! குடு! குடு! - குடு! குடு!
அவர் கொடுத்தது ரூபாய் 4.15 லக்ஷம்.
அவர் மட்டும் தேர்தல் விண்ணப்பம் செய்வார்.
இது கட்டை பஞ்சாயத்துத் தீர்ப்பு.
நோ பாரபக்ஷம்!!!!!
வாழ்க ஜனநாயகம்! 
வாழ்க ஏலம்!

குடு! குடு! - குடு! குடு!
ஆதாரமில்லா வதந்தி: இந்திய பூரா அப்டி செய்தால், தேர்தல் செலவு மிச்சம்.
அப்டியே நடந்தால், பிரதமர் போஸ்ட் எத்தனைக்கு ஏலம் போகும்?
யாருக்குக் கிடைக்கும்: காந்தியா? மோடியா?
இது ஒரு போட்டி.
கலந்து கொள்ள கட்டணம் இல்லை. இலவசம்!
கெடு: ஜூலை 7, 2013.
அதற்கு பின், ‘நவீன ஜனநாயகா’ நாடகம் தெருக்கூத்தாக பரிமளிக்கும்.
வர்ரேன்..
குடு! குடு! - குடு! குடு!

இன்னம்பூரான் பக்கம் – 20




இன்னம்பூரான் பக்கம் – 20

Innamburan S.Soundararajan Mon, Jul 1, 2013 at 5:56 PM


பிரசுரம்: http://www.atheetham.com/?p=5300 : 01 07 2013
Inline image 1

மனிதர்களால் இயங்கும் அரசு இயந்திரத்தின் ஆயுதம் அதிகாரம்; அதிகாரமே அதற்குத் துரு. துருப்பிடித்த கத்தியால் அறுவை சிகிச்சை செய்தால், அது தான் துஷ்பிரயோகம். அதிகாரத்தின் அந்த ‘அன்பளிப்பு’ மக்களை வாட்டும். ஜனநாயகம் வாடி, அழுகி, துர்நாற்றம் வீசும். அதன் மரணம் சம்பவிக்கும். பேராசை பிடித்த யதேச்சதிகாரத்தின் தூள் பறக்கும்.   இம்மாதிரியான தொடர்கருத்துக்களைத் தொகுத்து, அலசி, விடை தேடுகிறது ‘த ரிபப்ளிக்’( ) என்ற அரசியல் இலக்கண நூல். அதை எழுதிய ப்ளேட்டோ, சாக்கிரடீஸ்ஸின் சிஷ்யர். குருவந்தனம் சொல்லிக்கொண்டே, முரணாயினும், தன் சுய சிந்தனையை முன் வைத்த ஞானி, அவர். அந்த நூலில்:
ஒரு வாசகர்,’ Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.’ என்று கூறியதை விளக்கி எழுதச் சொன்னார். Callicles & Thrasymachus  இருவரும் அந்த நூலில் வலம் வருகின்றனர். ஆங்கில பெயர்களே இருக்கட்டும். ஆள் அடையாளம் காட்ட உதவும். Thrasymachus  நிஜமனிதர். Callicles ப்ளேட்டோவின் கற்பனை பாத்திரம் என்று தான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. ‘சம்பிரதாயமாக போற்றப்படும் நன்னெறியை’ அவர்கள் இருவரும் உதறிவிட்டனர். சாக்கிரட்டீஸ்ஸால் பெரிதும் போற்றப்பட்ட ‘நியாயத்தை’ கவைக்கு உதவாது, இது; தற்காப்பு சுயநலத்துக்குக் கூட முட்டுக்கட்டை போடுகிறது, இது; புத்திமான்கள் எளிதில் இதை இனங்கண்டு கொள்வார்கள் என்று இவர்கள் கூறியதின் சுருக்கம்: ‘அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது.’
கில்பெர்ட் முர்ரே அவர்களின் நூலொன்று இணையதளத்தில் கிடைத்தாலும், நான் தேடியது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பேராசியர் ராஸ்சேல் பார்னி சொல்லும் நுட்பம் தான் இந்த இழையின் அடித்தளம். ‘…கிரேக்க சிந்தனைகளுக்கு நாம் யார் முத்திரை போட? ‘சம்பிரதாயமாக போற்றப்படும் நன்னெறிக்கு அடி பணிய’ காரணங்கள் வேண்டும். ‘இல்லையெனில், நம் போக்கில் செல்லலாம் என்று அவர்கள் கூறுவதாக எழுதப்பட்ட இந்த நூலுக்கு சாக்கிரட்டீஸ்ஸின் சிந்தனைகள் ஒத்திகை போல’ என்கிறார். பேராசியர் ராஸ்சேல் பார்னி. Callicles & Thrasymachus இரட்டை நாயனங்கள் அல்ல. ப்ளேட்டோவின் ஆழமான கருத்துக்களை புடம் போடுவதாக அமைகிறது இவர்களின் அளவளாவுதல். இருவருக்கும் இடையே கருத்து பரிமாற்றங்கள். எப்போதும் உடன்பாடு கிடையாது. அதாவது, குருமஹராஜ் ஸாக்கிரட்டீஸ், தத்துவ போதகர் ப்ளேட்டொ, Thrasymachus என்ற நிஜ மனிதர், Callicles என்ற கற்பனை தலைமாந்தர்,Glaucon, Antiphon என்ற பழமை வாதி ஆகி ஆறு சிந்தனையாளர்களின் தாக்கம், இந்த ஒரு வரியில் பிரகாசிக்கிறது.
முதலில் தர்மோபதேசத்தின் சுருக்கம் காண்போம். மற்றவை அடுத்த சில இழைகளில். Thrasymachus and Callicles எதை உதறினார்கள் என்ற வினாவே சிக்கலானது – dikaiosunê எனப்படும் நன்னெறியையா?/dikê எனப்படும் தர்மதேவதையையா?/dikaion எனப்படும் மனிதர்கள் இயற்றிய சட்டமளிக்கும் நியாயத்தையா? தற்காலம் போல கிரேக்கர் காலத்திலும் நன்னெறிகளை பற்றிய நிலைப்பாடுகள் தெளிவாக இல்லை. எதற்கும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாகிய ஹெஸியத் (c. 700 B.C.E.) நியாயம் என்ற சொல்லை விளக்காமலே, லஞ்சம், வாக்குத் தவறுதல், பொய்,புரட்டு, திருட்டு, சூது, மட்டமான தீர்ப்பு மாய்மாலங்களை அநியாயம் என்றார்.
இந்த பட்டியல் பொதுப்படையாக சொல்லப்படவில்லை. திட்டமிடப்பட்ட பட்டியல், அது. அவை ஒவ்வொன்றுக்கும் இரண்டு கால்கள். ஒன்று nomos ( இன்றைய Rule of Law  ); மற்றொன்று அதற்கு முரணான pleonexia (பேராசை). ஒன்று கிழக்கே போகும் ரயில் என்றால், மற்றது மேற்கே செல்லும் ஊர்தி. nomos தான் வேதபாடம். சில பகுதிகள் எழுதப்பட்டன. சில எழுத்தில் இல்லாவிடினும், முன்னுரிமை பெறும். அப்படியானால் அரசு ஆணைகளை திரஸ்கரிப்பது கடினம். அதை விட முக்கியம்.  பட்டியலில் உள்ள அநியாயங்கள், nomos இட்ட சட்டப்படி தான். காலப்போக்கில் இதன் பொருள், திரள் திரளாக வேறுபட்டது. அந்த பிரச்னைக்கு பிறகு வருவோம்.
இந்த pleonexia -பேராசை இருக்கிறதே, அதனுடைய அவலக்ஷணங்கள்:
  1. எனக்கு எல்லாம் அதிகமாக வேண்டும் [pleon echein];
  1. அண்டை வீட்டுக்காரனை விட அதிகம் வேண்டும்;
  2. எனக்கு எது தகுதியானது என்பதை விட அதிகம் வேண்டும்;
  3. ஆக மொத்தம், எல்லாமே வேண்டும்.
இந்த பட்டியலை எழுதி இரண்டாயிரத்து ஐன்னூறு வருடங்கள் ஆன போதிலும், பிற்காலம் அரிஸ்டாட்டில் வகுத்து, இன்று வரை கோலோச்சி வரும் Nicomachean Ethics V என்ற கிரேக்க ‘அர்த்த சாத்திரத்தின்’ வித்து, இது தான்.
படிப்பவர்களுக்கு தத்துவம் பேசினால் அலுத்து விடுகிறது. அதனால் மெதுவாகத்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது.
(தொடரும்)



அன்றொரு நாள்: ஜூலை 2:





அன்றொரு நாள்: ஜூலை 2:

Innamburan Innamburan Fri, Jul 1, 2011 at 9:58 PM



அன்றொரு நாள்: ஜூலை 2:

‘தெய்வம் மனுஷ ரூபேண...’ என்றும், ‘அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்’ என்றும் சொல்வதற்கும், நாட்டுப்புறதெய்வங்களாக மூதாதையார் வணங்கப்படுவதற்கும் இணக்கமுண்டு; பிணக்கமில்லை. காங்கோ நதியை பற்றியும் பூமத்தியரேகையை பற்றியும் பூகோள பாடங்களில் அரையும் குறையுமாகப் படித்ததுண்டு. தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்த, கானகங்கள் படர்ந்த அந்த தொன்மை வாய்ந்த ஆஃப்பிரக்க நாட்டில், நிஸாம்பே (தெய்வம்) லுமும்பா என்ற தேவன் வியாதிகளை தீர்ப்பார் என்று படேடலா பழங்குடி மக்கள் நம்புகிறார்கள். அவருக்கு தொழுகை நடக்கிறது. ஜூன் 2, 1925ல் பிறந்த அவர் ஜனவரி 17,1961 அன்று மறைந்தார். ஐம்பது வருடங்களில் தெய்வமாகிவிட்டார். அவரை ‘சங்கரர்’ போல என்கிறார், என்றது பீ.பீ.ஸீ, 2003ல். மன்னார்குடி ‘ராஜகோபாலனை’ப்போல், பிறந்த குழந்தைகளுக்கு எல்லாம், இவருடைய பெயர். இத்தனைக்கும் அவர் சாதாரணமான சராசரி மனிதன்; அஞ்சலுவலக குமாஸ்தா. பீர் விற்றவர். இல்லறம் பேணியவர். பொய்க்கேஸ்ஸில் மாட்டிக்கொண்டு, சிறை சென்றவர்.

தேசாபிமானிகளுக்கு என்றுமே ஆபத்து. எந்த நாட்டிலும். நமக்கு தமிழ் நாட்டை பற்றியும், இந்தியாவை பற்றியும் ஓரளவு தெரியும் எனினும், மற்ற நாடுகளின் விடுதலை வீரர்களை பற்றியும் எழுதுக, என்றார் நண்பரொருவர். ஏசு பிரான் கழுவேற்றப்பட்டார். அண்ணல் காந்தியை தெய்வமென போற்றியவர்கள் உண்டு. அவரை சுட்டுக்கொன்றனர். அமெரிக்க ஜனாதிபதி லிங்கன், ஏழை கறுப்பனின் புன்முறுவலைக் கண்டார். அவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். தேசாபிமானி பாட்ரிக் எமரி லுமும்பா அவர்களுக்கும் அதே அதோ கதி தான். ஒரு வித்தியாசம். அவரை டார்ச்சர் செய்து தான் கொன்றார்கள். தெரியாமலா சொன்னார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, 
‘படுகொலை செய்வது உச்சக்கட்ட கருத்துரிமைப்பறிப்பு.” என்று. 

அமெரிக்க ஜனாதிபதியான ஐஸன்ஹோவரும், இங்கிலாந்து பிரதமர் மாக்மில்லன் துரையும், பெல்ஜிய மன்னரும், அன்னாட்டு தொழிலதிபர்களும், முதலாளிகளும் அவரை ஒழிக்கத் திட்டமிட்டனர். அமெரிக்க உளவு நிறுவனம் சீ.ஐ.பி. தான் சூழ்ச்சிகளின் ஊற்று. ஐநாவின் பிரதிநிதியான இந்தியர் பிரிகேடியர் இந்தர் ஜித் ரிக்கேயும் ஐநாவின் கையாலாகாத நிலையை ஒப்புக்கொண்டார். உலக வரலாற்றில் இதனை விட கேவலமான நிகழ்வுகள் மிகக்குறைவு. மற்றொரு நீசச்செயல் நடந்ததாக வலுவான ஐயம் உண்டு. அதை பிறகு சொல்கிறேன்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் தென் கொரியாவில் ஸிங்மன் ரீ என்ற அந்த நாட்டின் முதல் அதிபர் இருந்தார். அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களை உலுக்கி முனைவர் பட்டம் பெற்றவர்,சர்வதேச சட்டம் என்ற துறையில். அதற்கு செலவழித்த பணத்தை, அப்படி ஒரு துறை இல்லாததால், திருப்பித்தரவேண்டும் என்று கேட்ட மஹானுபாவனவர். ரீ சார்! பாயிண்ட் மேட்.

கடைத்தேங்காயை திருடுவதில்லை; முதலில் தேங்காய் மண்டியை லபக்குவார்கள்; பின்னர் தென்னந்தோப்பிலேயே, உம்மை வெளியேற்றி, குடியேற்றம். இது தான் மேற்கத்திய கலோனிய பேராசைப்பேரரசுகளின் சர்வதேச நெறி. அமெரிக்கா, ஒரு படி மேலே போய், எண்ணைய்க்கு முன் எள்ளாக, எள்ளுக்கு முன் கொள்ளாக, கொடுங்கோலர்கள், வெறியர்கள், பகல் கொள்ளையர், லஞ்ச மஹாப்பிரபுக்கள், ஊழல் மன்னர்கள் எல்லோருடனும் கூடா நட்பு வைத்துக்கொள்ளும். சமயம் வரும்போது, அவர்கள் காலையும் வாரி விடும். வாய் கிழிய நியாயம் பேசும். உடனே, அந்த நாடுகளில் நற்பண்புகள் இல்லை, நம் மாதிரி என்று மார் தட்டிக்கொள்ளலாகாது. அங்கும் நற்பண்புகள் உண்டு; இங்கும் கரும்புள்ளிகள் உண்டு. இது எல்லாம் வரலாறு என்ற குன்றத்தின் மேடு பள்ளங்கள், கல்லு முள்ளுகள். மேற்கத்திய நாடுகளில், எங்கிருந்தோ ஒரு நிருபர்/படைப்பாளர்/ குறும்பட அமைப்பாளர்/பேராசிரியர் வருவார். தன்னுடைய நாட்டு அவலங்களையும் அலசி, அலசி, தயவு, தாக்ஷிண்யமில்லாமல் உண்மை விளம்புவார். லூடோ டி விட் என்ற பெல்ஜியன் ஆசிரியர், ‘லுமும்பாவின் படுகொலை’ என்ற நூலில் அக்கு வேறு, ஆணி வேறு என்று கழட்டி எடுத்து, பிற்காலம் (ஃபெப்ரவரி 2002) பெல்ஜியம் நாடே காங்கோ மக்களிடம்,லுமும்பா கொலையில் மறுக்கமுடியாத பங்கும், தார்மீக பொறுப்பும் ஏற்று, பொது மன்னிப்பு  கோரும் அளவுக்கு ஆதாரங்களை முன் வைத்துள்ளார். 40 வருட ஆய்வு. அதை பார்க்கும் முன் சில வார்த்தைகள். வரிசை ஆவேச வரிசை; நாட்காட்டி வரிசை அல்ல.

கொலை விழும் என்று அவருக்குத் தெரியும். மனைவிக்கு எழுதும் கடைசி மடலில், காதலில்லை, காமமில்லை, குடும்ப நலம் பற்றிய பதற்றம் இல்லை, இந்த 36 வயது இளைஞருக்கு. படியுங்கள்:

‘என் பிரிய சிநேகிதியே! நாம் தனித்து இல்லை. ஆஃப்பிரிக்கரும், ஆசியரும், விடுதலை பெற்ற உலகளாவிய மக்கள் யாவரும், நமது காங்கோ பக்கம். கலோனிய அரசுகளும், அவர்களின் கூலிப்பட்டாளங்களும் இருக்கும் வரை, அவர்களின் ஒளியும், ஆதரவும் அழியாது. மாண்பு இல்லையெனின், விடுதலை இல்லை. தர்மம் இல்லையெனில் மாண்பு இல்லை. விடுதலை இல்லையெனின் நாம் அடிமை... வாழ்க காங்கோ! வாழ்க ஆஃப்பிரிக்கா!’
படிக்க, படிக்க, மருது சகோதரர்களின் பிரகடனம் போல் அல்லவா இருக்கிறது. 

மற்றொன்றை பார்ப்போம். காங்கோவின் சாபக்கேடு  இனவெறி. வேறு பழங்குடி இனங்களை சார்ந்த மோய்ஷே ட்ஷோம்பேயும், ஜோஸஃப் கஸவுபுவும், இவரை போல் பரந்த மனப்பான்மை இல்லாதததால், பகையுடன் சேர்ந்து, இவருக்கு இன்னல்கள் பல விளைவித்தனர். இவரோ படித்து, தெளிவடைந்தவராக இலங்கினார். நான்கே வருடங்களில் பிரதமரானார். தம்மாத்தூண்டு பெல்ஜியம் வசம் கட்டுண்டு கிடந்தது, இயற்கை வளம் நிறைந்த விசாலமான, காங்கோ பிரதேசம். 1960ம் வருடம் விடுதலை. விழாவில் புறக்கணிக்கப்பட்ட பிரதமர் லுமும்பா ஆற்றிய சொற்பொழிவு, பெல்ஜியம் மன்னரின் வழவழா பேச்சையும், அதிபர் கஸவுபுவின் கொழகொழா பேச்சைப்போல் இல்லாமல், ஆணித்தரமாக மக்களின் துன்பத்தையும், அவர்கள் பட்ட இன்னல்களையும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல், எடுத்துரைத்தது. இதை ஜூலை 1ம் தேதி பீ.பீ.ஸீ. உள்ளது உள்ளபடியாக, உலகுக்கு உரைத்தது. கத்திகள் தீட்டப்பட்டன. ட்ஷோம்பேக்கு உதவியாக, பெல்ஜியம் துருப்புகள் வந்தன. கடாங்கா மாகாணம் பிரிவினை கோஷம் எழுப்ப தூண்டப்பட்டது.. ஐ.நா.விடம் நியாயமும், உதவியும் கேட்டார், லுமும்பா. ஐ.நா. கையை விரித்தது. வேறு வழியில்லாமல், சோவியத் ரஷ்யாவை நாடினார். கசவுபு அவரை கம்யூனிஸ்ட் என்றார். அமெரிக்க பொம்மை தலையாட்டியது. கசவுபு இவரை டிஸ்மிஸ் செய்ய, இவர் அவரை டிஸ்மிஸ் செய்ய, சந்தடி சாக்கில் மொபுடு என்ற கொடுங்கோலன் ஆளுமையை பறிக்க, காங்கோ மக்கள் அல்லாடினர். ஒரு கால கட்டத்தில்,ஒவ்வொரு எதிரிக் குழுவும், சிறையடைக்கப்பட்டிருந்த லுமும்பாவை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்தன, ஒரு மாத காலம். ஜனவரி 17, 1961 அன்று லுமும்பா, விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். அன்று இரவு பெல்ஜியன் ராணுவ அதிகாரிகளால் அடித்து, உதைத்து, துன்புறுத்தப்பட்டார். ட்ஷோம்பே என்ற கயவனின் சன்னிதானத்தில், காலை 9 40லிருந்து 9 43க்குள், ஒரு மரத்தில் கட்டப்பட்டு, சுடப்பட்டார், இரு சகபாடிகளுடன். அவர் அனைத்து சித்திர வதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர். அரைகுறையாக புதைக்கப்பட்ட உடலை மீட்டு, துண்டு துண்டாக்கி, கந்தகாகி அமிலத்தில் (sulphuric acid) கரைத்தனர், பெல்ஜியன் அதிகாரிகள். ஒரு மடையன், அவருடைய பற்கள் இரண்டை பிடுங்கிக்கொண்டதாக, அகந்தையுடன் பிற்காலம் கூறினான்.

அக்காலத்தில் காங்கோவில் ஐ.நா. காரியதரிசியின் ராணுவ பிரதிநிதியாக இருந்த பிரிகேடியர் இந்தர்ஜீத் ரிகே கூறியது: ‘ஐநா வல்லுனர்களின் பணியை வழி மறித்தது பெல்ஜியன் அதிகாரிகள். அவருக்கு சதியை பற்றி தெரியும் என்கிறது ஆய்வு. அவர் இந்தியர். அது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. அன்று இச்செய்தி படித்து, மனம் கலங்கியது, நினைவில் உள்ளது. நேருவும் கலங்கியதாக செய்தி படித்ததாக நினைவு. 
உலகெங்கும் மக்கள் சக்தி ஓங்குக.
இன்னம்பூரான்
02 07 2011

உசாத்துணை:
De Witte, L. (2003) The Assassination of Lumumba





5549568-patrice-emery-lumumba-was-an-african-anti-colonial-leader-and-the-first-legally-elected-prime-minist.jpg
154K

இன்னம்பூரான் பக்கம் ~ 19




இன்னம்பூரான் பக்கம் ~ 19
Innamburan S.Soundararajan Mon, Jul 1, 2013 at 1:39 PM



-=Inline image 1
‘…சாக்ரட்டீஸ் (கி.மு. 470~399) கிரேக்க நாட்டின் பிரதான நகரமாகிய ஏதென்ஸ்ஸின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். தனக்கு முந்திய தத்துவபோதனைகளை படித்து அவற்றில் இரு குறைகளை கண்டார். பல தத்துவங்களின் கலந்துகட்டியாக இருந்தன, அவை; ரசவாதமொன்றும் இல்லை, அவற்றில். ஒன்றுக்கொன்று முரணாக  அமைந்ததால், குழப்பம் தான் மிஞ்சியது என்றார்…’. (இன்னம்பூரான் பக்கம் ~ 17)

ஏதென்ஸ்ஸின் பொற்காலம் பற்றி எழுத நினைத்தபோது, அருமையான நூல் ஒன்று கிட்டியது. வித்யாதானத்தை பற்றிய சாக்ரட்டீஸ்ஸின் சிந்தனைகள் வரவேற்கப்பட்டதால், அந்த நூலின் வரவு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவபோதனைத்துறையின் நுழைவாயிலிருந்த வில் டூராண்ட் (WILL DURANT, PH.D.) என்ற ட்யூட்டர் (instructor) 1917 ல் எழுதிய ‘தத்துவமும் சமூக சிக்கல்களும்’ என்ற நூல், அது. சமூகத்தின் சிக்கல்களை களைவதில் தத்துவம் ஆர்வம் காட்டவில்லை என்ற அந்த நூல் தான் அவருடைய முனைவர் விருதுக்கான ஆய்வு கட்டுரை/ முதல் நூல். பிற்காலம் கலாச்சாரங்களும் நாகரீகங்களும் பிறந்த வரலாறுகள் எழுதி , இன்றளவும் இறவா புகழ் பெற்ற வில் டூராண்ட் அவர்களே, நமக்கு அருமையான நடைமுறை தத்துவங்களை போதித்தவர். என்றாவது ஒரு நாள் அவரை பற்றி எழுதுவது நலம் பயக்கும். ஏதன்ஸ்ஸின் பொற்காலத்தை பற்றி அவர் எழுதியதின் சில அத்யாயங்களின் சாராம்சத்தை மட்டும் கூறி, உசாத்துணையாக, அந்த மின் நூலை தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். கட்டுரையையும் அந்த ஒற்றையடி பாதையில், சிறிது காலம் பயணிக்கும்.
சாக்கிரட்டீஸ் காலத்து மறுமலர்ச்சி/ புரட்சிகரமான சிந்தனைகள்/எதையும் புரட்டிப்பார்க்கும் மனப்பான்மை எல்லாவற்றிற்கும் மூல காரணமே, அதற்கு முந்தியகாலத்து சர்வாதிகார அரசியல் போக்கு. தனிமனிதர்களின் ஆதரவை கட்டாயப்படுத்தி ஆளுமை பெற்றுக்கொள்வதால், நீறு பூத்த தணலாக அதை எதிர்க்கும் சிந்தனைகள், மறைமுகமாயினும், வலுத்து வந்தன. வெளிப்படையாக நிலவும் சம்பிரதாயங்களை புறக்கணிக்கும் தனி நபர் போக்கு வலுத்தது.
“நம்மால் ‘உயர்ந்த பழக்க வழக்கங்கள்’ என்று கருதப்படும் எல்லாவற்றையும் குவித்து வைத்து, தீவிர சிந்தனைக்கு பிறகு, அவற்றில் ‘மட்டமானவையை’ கடாசி விட்டால், மிச்சம் ஒன்றுமிருக்காது.” என்ற சிந்தனை கி.மு. நான்காவது நூற்றாண்டிலேயே முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் தடபுடலாக (மேலாண்மை ஆதரவு/பிரசாரம்/வற்புறுத்தல் மூலமாக) போற்றப்பட்ட நடைமுறைகள் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கப்படும் போது வலுவிழந்து விடுகின்றன.
*
தற்காலம்: இந்திய சூழ்நிலை: குடியரசு, அரசியல் சாஸனம், விடுதலை, சுயாட்சி, தேர்தல் என்ற மந்திரங்களின் மீது ஒரு காலத்தில் இருந்த அசையா நம்பிக்கைத் தளர்ந்து விட்டது. பிரதிநிதிகளின் அணுகுமுறையும், அட்டகாசமும், ஆளுமையும், ஆகாத்தியமும், இற்செறிப்பும் தாங்கமுடியவில்லை. மக்கள் நலம் அம்பேல். அரசியல் சாஸனத்தின் பிம்பம் தணிக்கை. ஆளுமைக்கு அதன் மீது அளவு கடந்த ஒவ்வாமை. ஆரம்பக்கல்வியை மனித உரிமையாக பாராட்டிய அரசியல் சாஸனம், அதை செல்லாக்காசாக ஒதுக்கி வைத்தது. மூன்று தலைமறையாக உறங்கிக்கிடந்த இந்த உரிமையை இழந்து செத்துப்போன இந்தியர்களின் தொகை பல கோடி. இன்றும், இந்த உரிமை அல்லாடுகிறது. சுயாட்சியும், தேர்தலும் எள்ளலுக்கு உரியவையாக ஆயின. நாம் இவற்றையெல்லாம் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கவேண்டும். களையறுக்க வேண்டும்.
*
வில் டூராண்ட் தனது ஆய்வில் பட்டியலிடும் சில கிரேக்க காலத்து சிந்தனைகளையும், நடைமுறைகளையும் காண்போம்.
  1. ‘கடவுள் எல்லாரையும் சுதந்திர மனிதனாகத்தான் படைத்தார். (அக்காலம் அடிமைகள் உண்டு; இக்காலம் கொத்தடிமைகள்.)
  2. இயற்கை யாரையும் அடிமையாக படைக்கவில்லை. (ஏழ்மை அடிமைகளை உருவாக்குவதை கண்முன் காண்கிறோம். உலகின் செல்வத்தின் பேர்பாதியின் சொந்தக்காரர்கள் 8% செல்வந்தர்கள் என்று உலக வங்கி ஆய்வு ஒன்று சொல்கிறது: 2013).
  3. போட்ஸ்ஃபோர்த் என்ற வரலாற்றாசிரியர் கிரேக்க சிந்தனையில் உள்ள புரட்சிகரமான சோஷலிஸ்ட் கருத்துக்களை கூறுகிறார்.
  4. பெண்ணுரிமையை பற்றிய முற்போக்குக் கருத்துக்களை Euripides & Aristophanes துணிவுடன் முன் வைக்கிறார்கள்.
  5. அரசின் போக்கை அவர்கள் கண்டிக்க பயன் படுத்திய உவமானம்: சிலந்தி வலையை போல், அது சின்ன பூச்சியை பிடித்து, பெரிய தலைகளை தப்ப விடுகிறது என்று!
*
தற்காலம்: சொல்லியா தெரியவேண்டும்! பல்லாயிரம் கோடிகளை தொலைத்தவர்கள் அல்லவா, நம் மக்கள்.
*
  1. Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.
இந்த கண்காட்சியை நடத்திய பிறகு தான், வில் டூராண்ட், சாக்கிரட்டீஸ்ஸுக்கு முன் கோலோச்சிய ஸொஃபிஸ்ட்ஸ் (The Sophists) என்ற தத்துவ போதகர்களுக்கு வருகிறார். இந்த கட்டுரையே கனமாகி விட்டது. பிறகு பார்க்கலாம்.
(தொடரும்)

பிரசுரம்: http://www.atheetham.com/?p=5202

Sunday, June 30, 2013

அரசு 11: கருவூலம்




அரசு 11: கருவூலம்

Innamburan S.Soundararajan Sun, Jun 30, 2013 at 3:46 PM




Inline image 1அரசு 11: கருவூலம்
பல வருடங்களாக தேடி வந்த் கவிதையொன்று இன்று தற்செயலாகக் கிடைத்தது. சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Kancional_Jistebnicky.jpg

இன்னம்பூரான்
30 6 2013

Daily 
Prayer 
For 
red tape 
Votaries...
A LITURGY
Let
us 
Pray

O Lord grant that this day
We come to no decisions,
neither run into any kind
of responsibility, 
but that all our doing may be 
 ordered to establish
new and quite  unwarranted 
departments
for ever and ever.
A
HYMN
O thou, who seest all things
below.
grant that thy servant
may go slow,
that they may study to comply
with regulations till they die.

Teach us Lord to reverence
committees more than common
sense.
Impress our minds to make no plan.
but pass the baby when
we can.
And when the Tempter
seems to give
us feelings of initiative,
or when alone we go too far,
chastise us with a Circular.
Amen!

Amen
தமிழாக்கம்
சிவப்பு நாடா பக்தர்களே!
உமக்கான பிரார்த்தனை.
தொழுகை
நாம் பிரார்த்திப்போமாக.

பரமபிதாவே! வரம் தருவீர்களாக!
நாங்கள் ஒரு தீர்மானமும் எடுக்க வேண்டாமென்று.
தவறிக்கூட பொறுப்பேற்க வேண்டாமென்று.
 உருப்படாத  புதிய புதிய இலாக்காக்களை  என்றென்றைக்கும்
உருவாக்கும் திறனை அளிப்பாயாக.


கீர்த்தனை
ஆண்டவனே!
மண்ணுலகில் நடப்பது எல்லாம் நீ 
அறிவாயே.
உன்னடிமையாகிய எங்களை அருள் கூர்ந்து 
வரமளிப்பாயாக.
சாகும் வரை, ஐயனே, நாங்கள் நத்தை நடை நடந்து,
ரூல்! ரூல்! ரூல்! 
என்று ஜபிப்போமாக.
தேவனே! பொது அறிவை விட கமிட்டி துரைத்தனத்தை
போற்றுவோமாக.
திட்டமும் வேண்டா; சட்டமும் வேண்டா.
பிரச்னைகளை நைஸா தள்ளிவிடவேண்டுமையா.
சாத்தான் வந்து எமக்கு சாதனை ஆசை காட்டினாலோ,
நாங்களே தொலைவு நோக்கி பயணித்தாலோ,
ஒரு சுற்றறிக்கை  போதும், பரமபிதாவே.
ஹல்லேலூயா!
Amen