அட்றா சக்கை! -1
குடு! குடு! - குடு! குடு!
நல்ல காலம் பிறக்குது!
ஜன நாயகம் தழைக்கவே!
பாடம் நடத்ததியது யாரு?
குடு! குடு! - குடு! குடு!
ஆந்திரபிரதேஷ் மாநிலம்.
கரீம்நகர் மாவட்டம்.
ஸிர்ஸிலா ஃபிர்க்கா.
பஸ்வப்பூர் கிராமம்.
சர்பஞ்ச் (பட்டாமணியம்/வில்லேஜ் முன்சீப்) போஸ்ட் ஏலம்!!
முந்திக்கிட்டாஹ.
குடு! குடு! - குடு! குடு!
தேர்தல் கமிஷனுக்கு வேலை இல்லாம போச்சு.
ஊர் பெரிய தலைகளும், மாணவர்களும், பெண்ணியமும், மற்றவர்களும்
செய்த தீர்ப்பு.
ஏலத்தில் கெலித்தது பொன்னம் ரவி கெளட்.
குடு! குடு! - குடு! குடு! குடு! குடு! - குடு! குடு!
அவர் கொடுத்தது ரூபாய் 4.15 லக்ஷம்.
அவர் மட்டும் தேர்தல் விண்ணப்பம் செய்வார்.
இது கட்டை பஞ்சாயத்துத் தீர்ப்பு.
நோ பாரபக்ஷம்!!!!!
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க ஏலம்!
குடு! குடு! - குடு! குடு!
ஆதாரமில்லா வதந்தி: இந்திய பூரா அப்டி செய்தால், தேர்தல் செலவு மிச்சம்.
அப்டியே நடந்தால், பிரதமர் போஸ்ட் எத்தனைக்கு ஏலம் போகும்?
யாருக்குக் கிடைக்கும்: காந்தியா? மோடியா?
இது ஒரு போட்டி.
கலந்து கொள்ள கட்டணம் இல்லை. இலவசம்!
கெடு: ஜூலை 7, 2013.
அதற்கு பின், ‘நவீன ஜனநாயகா’ நாடகம் தெருக்கூத்தாக பரிமளிக்கும்.
வர்ரேன்..
குடு! குடு! - குடு! குடு!
No comments:
Post a Comment