ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:XI
இன்னம்பூரான்
25 09 2016
1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததில் ஒரு பகுதி:
வினா ஒன்றை எழுப்பி தானே அதற்கு பதில் அளிப்பது ஒரு உத்தி. பெரியவா அசுவமேத யாகத்தையும், அதன் தொடர்பாக அம்பாள் மீது உள்ள பக்தி தோத்திரங்கள் அளித்ததும் ஒரு முன்னுரை போல:
அவர் மேலும் சொல்வதின் முதல் பகுதி:
" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".
ஆனாலும் கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்ற பேதமேயில்லாமல் ஸகலைரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது என்றால், அது ஆரம்பகாலத்தில் சாத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. இந்த பொது இயற்கையை ஒப்புக்கொள்வது போலத்தான் திருவள்ளுவர் கூட அன்பு, அருள் (அருள் என்பதை கருணை என்று வைத்துகொள்ளலாம்) என்று பிரித்து, (distinction) சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:
'அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.
~ இது வரை மீள்பதிவு.இனி, தொடர்:
இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம் அல்லவா? இந்த 'வேண்டியவர்களை' நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக்கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம், இப்படி அருள் புரிகிறவனைப் பொறுத்த மட்டில் அது 'அருள்', 'கருணை'என்றெல்லாம் உயர்வு மனப்பான்மையை (Superiority Complex)காட்டுகிற விஷயமாக இல்லாமல்,ஸ்வபாவமான, சகஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்த அன்பை பெறுபவர்களோ, அது சாதாரண நன்பர்களிடையே, பந்துக்களிடையே இருக்கிற அன்பு மாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்ற தெய்வமான ச்கதி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான அன்பை 'அருள் அருள்' என்கிறார்கள்.
'எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈச்வரன் இருக்கிறான்.' என்ரு ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன், தன் மனுஷ்யர்களுடன் சமமான நிலையில் இருந்து கொண்டு பிரியம் காட்டுவதை விட இன்னும் ஒரு படி கீழே இறங்கி, தன்னை குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈச்வரனாக நினைத்துக்கொண்டு தான் சேவை செய்கிறான். 'நைச்சியம்' என்று வைஷ்ணவர்கள் இதை விசேஷித்துச் சொல்வார்கள். தன்னை தாழ்ந்தவனாக, நீசனாக, நினைத்து இன்னொருத்தனுக்கு சேவை செய்வது தான் 'நைச்யம்'.இவன் இப்படி த்ன்னை குறைத்துக்கொள்கிற போது தான், இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல், அதற்குக் காரிய ரூபத்திலேயே தெய்வீகமான சக்தி உண்டாகி, அது 'அருளாக' ஆகி விடுகிறது. கொஞ்சம் கூட மமதையே இல்லாமல், 'நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம் என்ற அகந்தையே இல்லாமல், இவன் சமஸ்த பிராணிகளிடமும் ஈச்வர ஆராதனையாக அன்பை செலுத்தும்போது, அதுவே இவனை சகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாக மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈச்வர அனுக்ரஹத்தை வாங்கித்தரக்கூடிய அருட்சக்தியை பெற்று விடுகிறது.
சித்திரத்துக்கு நன்றி:
(தொடரும்)
[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
-#-
No comments:
Post a Comment