ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VI
இன்னம்பூரான்
21 09 2016
வினா ஒன்றை எழுப்பி தானே அதற்கு பதில் அளிப்பது ஒரு உத்தி. பெரியவா அசுவமேத யாகத்தையும், அதன் தொடர்பாக அம்பாள் மீது உள்ள பக்தி தோத்திரங்கள் அளித்ததும் ஒரு முன்னுரை போல:
அவர் மேலும் சொல்வதின் முதல் பகுதி:
" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".
(தொடரும்)
[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
பின் குறிப்பு:
இந்தியாவுக்கு இந்த கறை படிந்த நாடாளுமன்ற ஆளுமைக்கு பதில், 'துரைத்தனத்தார்' மக்கள் ஆலோசனை மன்றம்' என்ற நிர்வாகத்தை அளித்திருந்தால், நாம் மிகவும் நல்ல நிலைமையில் இருந்திருக்கக்கூடும். நான் இங்கிலாந்தில் அத்துறையில் தன்னார்வப்பணி புரிந்தபோது, அதை பற்றி அப்போது தான் துவக்கப்பட்ட முதுகலை படிப்பில் ஆழ்ந்து விட்டேன். இன்னலில் தவிக்கும் மக்களுக்கு எப்படி ஆலோசனை வழங்கவேண்டும் என்ற வினாவுக்கு அதன் பொருட்டான ஆய்வில் விடை தேடினேன். பின்னர், 'ஆலோசனை அளிப்பவரிடம் பொருத்தமான ஆலோசனை என்ற பவர் இருக்கிறது. அந்த பவரை ஆலோசனை கேட்க வந்தவருக்கு அளித்த பின் தான் ஆலோசனை தொடங்கவேண்டும் என்ரு முடிபு கூறினேன். அது வரவேற்கப்பட்டு, செயலில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வு இப்போது மனதில் பட்டது. சொல்கிறேன்.
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment