Showing posts with label ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். Show all posts
Showing posts with label ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். Show all posts

Saturday, September 24, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:XI

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:XI

இன்னம்பூரான்

25 09 2016

1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததில் ஒரு பகுதி:

வினா ஒன்றை எழுப்பி தானே அதற்கு பதில் அளிப்பது ஒரு உத்தி. பெரியவா அசுவமேத யாகத்தையும், அதன் தொடர்பாக அம்பாள் மீது உள்ள பக்தி தோத்திரங்கள் அளித்ததும் ஒரு முன்னுரை போல:

அவர் மேலும் சொல்வதின் முதல் பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".

"கருணை, காருண்யம் என்கிற வார்த்தையை சொல்வதை விட, அன்பு என்று சொல்லி விட்டால், இந்த ஏற்ற தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடையே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே, போனால் போகிறது என்று யாரோ அன்னியருக்கு இரக்கம் காட்டுகிறமாதிரியான் அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலும் கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்ற பேதமேயில்லாமல் ஸகலைரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது  என்றால், அது ஆரம்பகாலத்தில் சாத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. இந்த பொது இயற்கையை ஒப்புக்கொள்வது போலத்தான் திருவள்ளுவர் கூட அன்பு, அருள் (அருள் என்பதை கருணை என்று வைத்துகொள்ளலாம்) என்று பிரித்து, (distinction) சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:
'அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.

~ இது வரை மீள்பதிவு.இனி, தொடர்:

இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம் அல்லவா? இந்த 'வேண்டியவர்களை' நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக்கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம், இப்படி அருள் புரிகிறவனைப் பொறுத்த மட்டில் அது 'அருள்', 'கருணை'என்றெல்லாம் உயர்வு மனப்பான்மையை (Superiority Complex)காட்டுகிற விஷயமாக இல்லாமல்,ஸ்வபாவமான, சகஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்த அன்பை பெறுபவர்களோ, அது சாதாரண நன்பர்களிடையே, பந்துக்களிடையே இருக்கிற அன்பு மாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்ற தெய்வமான ச்கதி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான அன்பை 'அருள் அருள்' என்கிறார்கள். 

'எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈச்வரன் இருக்கிறான்.' என்ரு ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன், தன் மனுஷ்யர்களுடன் சமமான நிலையில் இருந்து கொண்டு பிரியம் காட்டுவதை விட இன்னும் ஒரு படி கீழே இறங்கி, தன்னை குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈச்வரனாக நினைத்துக்கொண்டு தான் சேவை செய்கிறான். 'நைச்சியம்' என்று வைஷ்ணவர்கள் இதை விசேஷித்துச் சொல்வார்கள். தன்னை தாழ்ந்தவனாக, நீசனாக, நினைத்து இன்னொருத்தனுக்கு சேவை செய்வது தான் 'நைச்யம்'.இவன் இப்படி த்ன்னை குறைத்துக்கொள்கிற போது தான், இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல், அதற்குக் காரிய ரூபத்திலேயே தெய்வீகமான சக்தி உண்டாகி, அது 'அருளாக' ஆகி விடுகிறது. கொஞ்சம் கூட மமதையே இல்லாமல், 'நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம் என்ற அகந்தையே இல்லாமல், இவன் சமஸ்த பிராணிகளிடமும் ஈச்வர ஆராதனையாக அன்பை செலுத்தும்போது, அதுவே இவனை சகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாக மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈச்வர அனுக்ரஹத்தை வாங்கித்தரக்கூடிய அருட்சக்தியை பெற்று விடுகிறது. 

சித்திரத்துக்கு நன்றி:

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
-#-

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VIII

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VIII

இன்னம்பூரான்
24 09 2016

1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததில் ஒரு பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".

~ இது வரை மீள்பதிவு.இனி, தொடர்:

"கருணை, காருண்யம் என்கிற வார்த்தையை சொல்வதை விட, அன்பு என்று சொல்லி விட்டால், இந்த ஏற்ற தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடையே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே, போனால் போகிறது என்று யாரோ அன்னியருக்கு இரக்கம் காட்டுகிறமாதிரியான் அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலும் கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்ற பேதமேயில்லாமல் ஸகலைரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது  என்றால், அது ஆரம்பகாலத்தில் சாத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. இந்த பொது இயற்கையை ஒப்புக்கொள்வது போலத்தான் திருவள்ளுவர் கூட அன்பு, அருள் (அருள் என்பதை கருணை என்று வைத்துகொள்ளலாம்) என்று பிரித்து, (distinction) சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:
'அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:

Tuesday, September 20, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VI

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VI

இன்னம்பூரான்
21 09 2016

வினா ஒன்றை எழுப்பி தானே அதற்கு பதில் அளிப்பது ஒரு உத்தி. பெரியவா அசுவமேத யாகத்தையும், அதன் தொடர்பாக அம்பாள் மீது உள்ள பக்தி தோத்திரங்கள் அளித்ததும் ஒரு முன்னுரை போல:
அவர் மேலும் சொல்வதின் முதல் பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]

பின் குறிப்பு:
இந்தியாவுக்கு இந்த கறை படிந்த நாடாளுமன்ற ஆளுமைக்கு பதில், 'துரைத்தனத்தார்' மக்கள் ஆலோசனை மன்றம்' என்ற நிர்வாகத்தை அளித்திருந்தால், நாம் மிகவும் நல்ல நிலைமையில் இருந்திருக்கக்கூடும். நான் இங்கிலாந்தில் அத்துறையில் தன்னார்வப்பணி புரிந்தபோது, அதை பற்றி அப்போது தான் துவக்கப்பட்ட முதுகலை படிப்பில் ஆழ்ந்து விட்டேன். இன்னலில் தவிக்கும் மக்களுக்கு எப்படி ஆலோசனை வழங்கவேண்டும் என்ற வினாவுக்கு அதன் பொருட்டான ஆய்வில் விடை தேடினேன். பின்னர், 'ஆலோசனை அளிப்பவரிடம் பொருத்தமான ஆலோசனை என்ற பவர் இருக்கிறது. அந்த பவரை ஆலோசனை கேட்க வந்தவருக்கு அளித்த பின் தான் ஆலோசனை தொடங்கவேண்டும் என்ரு முடிபு கூறினேன். அது வரவேற்கப்பட்டு, செயலில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வு இப்போது மனதில் பட்டது. சொல்கிறேன்.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 19, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:V

Innamburan S.Soundararajan

 ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி

'Innamburan S.Soundararajan' innamburan@gmail.com [aalappaakkamakkampakkamum] 

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:V

இன்னம்பூரான்
20 09 2016

மீள்பதிவுகள் தொடர்புக்கு மட்டும் என்பதால், அவற்றை பிடிஎஃப் கோப்பாக இணைத்து,ஶ்ரீ  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்  (பெரியவா) அசுவமேத யாகத்தை பற்றி சொல்லியதின் சாராம்சம் இங்கே.

"இந்த காலத்தில் இருக்கிற நாம் எல்லாரும், அச்வமேத யாகம் செய்ய முடியுமா?...பழைய காலத்திலேயே க்ஷத்திரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அச்வமேத யாகம் செய்ய முடிந்திருக்கிறது...நம்மில் யாராவது அச்வமேத யாகம் செய்ய முடியுமா? என்று கேட்பதே அசம்பாவிதம் தான்...முடியுமா, முடியாததா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அச்வமேத யாகம் செய்யவேண்டும்? நம் பதவியையும், பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்காகவா? அசுவமேதம் செய்தால் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்கெல்லாம் என்றால் அச்வமேதம் செய்யவே வேண்டாம். பதவு, பவிஷு, தேவ லோக செளக்கியம் எல்லாமே அஹங்காரத்தை வளர்த்துக்கொள்கிற காரியங்கள் தாம்; நம்மிடம் கொஞ்ச நஞ்சம் ஞானம் கூட சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவை தாம்...(அச்வத்தையும் (புரவி}, பகவன் நாமாவளி,ஶ்ரீ லலிதாம்பிகை தோத்திரம் பற்றி ஒரு நீண்ட உரை)...அச்வமேதம் செய்வதை விட்டு விட வேண்டியது தானா? இல்லை. நம் அனைவருக்கும் சாத்தியமான ஒரு அச்வமேதத்தை சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிறது. ஜீவகாருண்யத்தின் மேல் செய்யவேண்டிய அனேக பரோபகாரங்களை சொல்லிக்கொண்டே போய், அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி , இதுவே அச்வமேதத்தின் பலனை அடையக்கூடியது  என்கிறது. அது என்ன?

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com> 
Reply via web post•Reply to sender •Reply to group •Start a new topic•Messages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___

II& III & IV-செல்வன்:சுபாஷிணி:இன்னம்பூரான் .pdf
87K 

Sunday, September 18, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்

 ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்

I.
காஞ்சி மடத்தை பற்றிய சுபாஷிணியின் தனிமடலின் பின்னூட்டங்கள் அசுவமேதை யாகத்தின் புரவியைப்போல திக்கெட்டும் கட்டுக்கடங்காமல் ஓடின. எனவே, அதிலிருந்து மூன்று பதிவுகளை மட்டும் தற்காலிகமாக மீள்பதிவு செய்து ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை பற்றி மட்டும்  அவருடைய 1932/33 வருட உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்து கல்கியில் 1976ம் வருடம் வழங்கப்பட்ட பதிவுகளை ஆதாரமாக வைத்து, எழுதுகிறேன். அவரை பற்றி, பெரியாரை பற்றி வந்தது போல ஏகப்பட்ட விஷய தானம் ஒலி/எழுத்து என வெளி வந்துள்ளது. அவற்றில் பரணீதரனும், வானதி பதிப்பகம் மூலமாக ரா.கணபதியும் எழுதிய ஆன்மீகக்கட்டுரைகள் ஆத்திகர்களால் போற்றப்பட்டாலும், நாட்தோறும் எல்லா இதழ்களும், தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உளன.கலவை இருக்கலாம். அவற்றை நாடாமல், இந்த தொடருக்கு, நம்பகமான அவருடைய 1932/33 வருட உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்து கல்கியில் 1976ம் வருடம் வழங்கப்பட்ட பதிவுகளை மட்டும் முன்வைத்து, பணிவுடன், அந்த மாமுனிவரின் வாக்குக்களின் சாராம்சத்தை பதிவு செய்கிறேன். 13 வயதில் பீடத்தில் அமரவைக்கப்பட்டு, 87 வருடங்கள், அதை அவர் அலங்கரித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை கணக்கிடுவது எளிது அல்ல. நான் இங்கு பதிவு செய்யப்போவது, இரு வருட தொகுப்பின் சாராம்சம். அவர்  ஒரே உரையில் பல விஷயங்களை பற்றி பேசுவார். பல உரைகளில் பக்தி, புராணம், வேதம், இதிஹாசம் ஆகியவை மற்றவையுடன் இடம் பெறும். அவற்றை எல்லாம் இங்கு அலசவில்லை. அவரை பற்றி அறிய உதவும் வகையில் இந்த பதிவு அமைகிறது. அவர் அந்தக்காலத்து மனிதர். 83 வயது ஆகும் நான் பிறந்த வருடம் 1933. அவருக்கு அப்போது அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம் எனலாம். 

அவரொரு அத்வைதி. காஞ்சி மடத்தில் அத்வைதிகள் பெரும்பாலாராக இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், அவர் பால் பிரண்டனையும், கிரேக்க ராணியையும், கிருபானந்த வாரியாரையும், வில்லுப்பாட்டு ஆறுமுகனாரையும், நானி பால்கிவாலாவையும், க்ரிஸ் ஆன்ஸ்ட்டூஸையும், மற்றும் எண்ணற்ற அத்வைதிகள் இல்லாதவர்களையும் ஆகர்ஷித்தவர்.

(தொடரும்)