"இந்த காலத்தில் இருக்கிற நாம் எல்லாரும், அச்வமேத யாகம் செய்ய முடியுமா?...பழைய காலத்திலேயே க்ஷத்திரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அச்வமேத யாகம் செய்ய முடிந்திருக்கிறது...நம்மில் யாராவது அச்வமேத யாகம் செய்ய முடியுமா? என்று கேட்பதே அசம்பாவிதம் தான்...முடியுமா, முடியாததா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அச்வமேத யாகம் செய்யவேண்டும்? நம் பதவியையும், பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்காகவா? அசுவமேதம் செய்தால் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்கெல்லாம் என்றால் அச்வமேதம் செய்யவே வேண்டாம். பதவு, பவிஷு, தேவ லோக செளக்கியம் எல்லாமே அஹங்காரத்தை வளர்த்துக்கொள்கிற காரியங்கள் தாம்; நம்மிடம் கொஞ்ச நஞ்சம் ஞானம் கூட சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவை தாம்...(அச்வத்தையும் (புரவி}, பகவன் நாமாவளி,ஶ்ரீ லலிதாம்பிகை தோத்திரம் பற்றி ஒரு நீண்ட உரை)...அச்வமேதம் செய்வதை விட்டு விட வேண்டியது தானா? இல்லை. நம் அனைவருக்கும் சாத்தியமான ஒரு அச்வமேதத்தை சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிறது. ஜீவகாருண்யத்தின் மேல் செய்யவேண்டிய அனேக பரோபகாரங்களை சொல்லிக்கொண்டே போய், அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி , இதுவே அச்வமேதத்தின் பலனை அடையக்கூடியது என்கிறது. அது என்ன?
(தொடரும்)
[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
சித்திரத்துக்கு நன்றி:
No comments:
Post a Comment