Saturday, September 24, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VIII


ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VIII

இன்னம்பூரான்
24 09 2016

1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததில் ஒரு பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".

~ இது வரை மீள்பதிவு.இனி, தொடர்:

"கருணை, காருண்யம் என்கிற வார்த்தையை சொல்வதை விட, அன்பு என்று சொல்லி விட்டால், இந்த ஏற்ற தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடையே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே, போனால் போகிறது என்று யாரோ அன்னியருக்கு இரக்கம் காட்டுகிறமாதிரியான் அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலும் கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்ற பேதமேயில்லாமல் ஸகலைரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது  என்றால், அது ஆரம்பகாலத்தில் சாத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. இந்த பொது இயற்கையை ஒப்புக்கொள்வது போலத்தான் திருவள்ளுவர் கூட அன்பு, அருள் (அருள் என்பதை கருணை என்று வைத்துகொள்ளலாம்) என்று பிரித்து, (distinction) சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:
'அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:



No comments:

Post a Comment