Friday, September 16, 2016

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan Fri, Sep 16, 2016 at 8:57 PM



சிவகாமியின் செல்வன் 14

"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!

சமூகநலன் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் செவ்வனே பணிபுரியவேண்டும் என்று காமராஜர் கடைபிடித்த நன்னடத்தையுடன் பிற்கால நிகழ்வுகளில் சிலவற்றை நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது.

சிலநாட்களுக்கு முன் வழங்கிய தீர்ப்பில் உச்சமன்றம் 2008ம் வருடம் திமுக ஆட்சி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து விட்டது. அந்த அரசாணைப்படி அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை சாக்கிட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 1,400 கைதிகளை விடுதலை செய்தது. அப்போதே, இது விஷயமாக பலத்த குதிரைபேரங்கள் நடந்ததாக பேச்சு பரவலாக இருந்தது. 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த சேகர் என்பவரை, இதை முன்னுதாரணமாகக் கூறி விடுதலை செய்ய சொல்லி ஒரு மனு 2015ல் தாக்கல் செய்யப்பட்டது. 1,400 பேருக்கு ஒரு நீதி, ஒருவருக்கு மட்டும் மற்றொரு நீதியா என்ற கேள்விக்கு பதில் அளித்து அவரை விடுதலை செய்ய உத்திரவிட்ட கோர்ட்டார் கூறிய கருத்து:

"குற்றவாளிகளை மன்னித்து விடுதலை அளிக்கும் கவர்னரின் அதிகாரத்தை(அரசியல் சாஸனத்தின் 161 வது  பிரிவு)சகட்டுமேனிக்கு ஒட்டுமொத்தமாக பிரயோகிப்பது சரியல்ல. ஒவ்வொரு நபர் விஷயத்திலும் தனித்தனியாகப் பரிசீலித்து இருக்கவேண்டும்."

2008ல் விடுதலையான இந்த குற்றவாளிகள் வெளிவந்த பின் செய்த அட்டுழியங்கள் பற்றி விவரம் இல்லை. ஆனால், கொடுமையான குற்றங்கள் நாள்தோறும் நிறைவேறி வருகின்றன. இத்தகைய அரசாணையை காமராஜர் பிறப்பித்திருப்பாரா என்ற அசட்டுக்கேள்விக்கு பதில், 'நிச்சயம் அப்படி பிறழ்ந்து சட்டத்தையும் ஒழுங்கையும் காற்றி பறக்க விட்டிருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அண்ணாவும் காமராஜர் மாதிரி தான் முடுவு எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.

ஒரு உபரி கேள்வி: 2008ம் வருடத்து செல்லுபடி ஆக தகுதியற்றது என்று இன்று சொல்லப்படும் அரசாணையை 2016ல் ரத்து செய்வதால், மீண்டார் வருவரோ கூண்டில் அடைபட? 

2006ம வருட புள்ளி விவரப்படி, அக்காலகட்டத்தில், தமிழ் நாட்டில் விசாரணைக்கு காத்திருந்த குற்றம் சாற்றப்பட்ட அண்டர் ட்ரையல் கைதிகள் 15.5% சிறைச்சாலைகளின் மொத்த ஜனத்தொகையில். ரிமாண்டில் வைக்கப்பட்டவர்கள் 45.1 %. இவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்படாதவர்கள். காமராஜரின் கவனம் இவர்கள் மீது தான் சென்றிருக்கும்.

தமிழ்நாட்டுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை போலும்!

சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment