Monday, September 12, 2016

சுகவனம் 6

Innamburan S.Soundararajan




சுகவனம் 6







இன்னம்பூரான்
செப்டம்பர் 9, 2016

பிரசுரம்:http://www.vallamai.com/?p=71890


நாளை வெளிவரும் லான்ஸெட் என்ற உலகபுகழ் வாய்ந்த மருத்துவ இதழ் ஒரு மாபெரும் சாதனையை வெளிக்கொணரும். அதுவும் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சரும், உலக சுகாதார மையத்தின் பிராந்திய தலைவரும் கலந்தாலோசித்து எழுதியதை நாம் யாவரும் படித்து, இயங்கி, நமது சுகவனத்தை போற்ற வேண்டும்.

ஶ்ரீலங்காவின் சாதனை: மலேரியாவை ஒழித்ததும், அதற்கான நற்சான்றை நான்கு நாட்களுக்கு முன்பு WHO விடமிருந்து பெற்றுக்கொண்டதும். உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த போதே, இந்த ஆய்வும், செயலும் நடந்து வந்தன. அந்த நாட்டின் மக்களில் பெரும்பாலோர் கீழ் நடுத்தர வகையினர். 80%  கிராமங்களில் வாழ்பவர்கள். கொசுவின் சிரஞ்சீவி வாழ்க்கைக்கு வேறு வினை ஒன்றும் வேண்டாம். அத்தனை சொகுசு கொசுவுக்கு அங்கே! கலோனிய ஆட்சியில் மலேரியாவால் மாண்டோர், லக்ஷக்கணக்கில். 1934-35 காலகட்டத்தில் மலேரியா எங்கெங்கும் தீ போல் பரவி, ஜனத்தொகையில் 1.5% மக்களை விழுங்கியது.

அந்த நாடு 1945ல் டி.டி.டி தெளிப்பதை மும்முரமாக கையாண்டு பலன் கண்டாலும், அந்த முறையின் விளைவுகளை கண்டு நிறுத்தியவுடன், நாட்டில் மலேரியா தாக்கம் 17 பேர் மட்டுமே என்று 1963ல் சாதனை படைத்திருந்தாலும், கொசு புத்துயிர் பெற்றது; மலேரியா 1967-69 காலகட்டத்தில் 15 லக்ஷம் பேர் மலேரியாவினால் தாக்கப்பட்டனர்.

1980க்கு பிறகு பத்து வருடங்களில் ஶ்ரீலங்கா கொசுவை பலமுனைகளில் தாக்கி ஒழிக்க முற்பட்டனர் - நீர்நிலைகளிலும், ஈரப்பதமுள்ள விளைநிலங்களிலும் கொசுவை அழிப்பது, அபாயம் நிறைந்த பகுதிகளில் மட்டும் மருந்து தெளிப்பது, டி.டி.டி.யை தவிர்த்த பூச்சிக்கொல்லிகள், சிசுவதம், கொசுவலை, பரந்த இடைவிடாத ஆழ்ந்த மேற்பார்வை, வகையறா.

கொசு என்றால் சும்மாவா? இதுவெல்லாம் போதவில்லை. 1980, 1980, 1987 களில் ஆறு லக்ஷம் கேசுகள். 264,349 1999ல். உடனடி மருத்துவம், சாவுகளை குறைத்தது. இந்த நூற்றாண்டு தொடக்கத்தில்  அங்கு ஒரு திருப்புமுனை அமைந்தது எனலாம். ஒரே வருடத்தில் 68% குறைந்தது, மலேரியா. 2008ம் வருடம் உள்நாட்டு மலேரியா தலையெடுக்கவில்லை.

இந்தியாவின் உள்குத்து வீரர்களே! மறக்காதீர்கள். ஶ்ரீலங்கை அரசுக்கு, மலேரியாவின் தாக்கம் அறிந்த விடுதலை புலிகள், இந்த மலேரியா ஒழிப்புப்போரில் ஒத்துழைத்தார்கள். நம் புத்தியும் அவ்வழி செல்ல வேண்டும். நம் நாட்டில் கொசு தர்பார் தடபுடல் என்பதால்.

-#-

விடுதலை புலிகளின் ஒத்துழைப்பு பற்றி: 
Abeyasinghe, RR, Galappaththy, GN, Smith Gueye, C, Kahn, JG, and Feachem, RG. Malaria control and elimination in Sri Lanka: documenting progress and success factors in a conflict setting. PLoS One. 2012; 7: e43162

உதவி :DOI: http://dx.doi.org/10.1016/S0140-6736(16)31572-0

சித்திரத்துக்கு நன்றி:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Ronald_Ross_18_Cavendish_Square_blue_plaque.jpg/220px-Ronald_Ross_18_Cavendish_Square_blue_plaque.jpg




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use

.

__,_._,___

No comments:

Post a Comment