சிவகாமியின் செல்வன் 12
இன்னம்பூரான்
செப்டம்பர் 12, 2016
அரசியல் தலைவர்கள் உலா வந்தால், நம் சொந்தகாரியங்களுக்கு உலை வைத்து விடுவார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. ஜனாதிபதி நேற்று வந்திருந்தார். மீனம்பாக்கம், அக்கம்பக்கமெல்லாம் வண்டிகள் நகரமுடியாமல் துக்கம் தான், மணிக்க்கணக்காக.பெளன்ஸர்ஸ் எனப்படும் குண்டாம்தடியர்கள் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள். கறுப்புப்படை, நீலப்படை என்றெல்லாம் பூனை/புலிப்படைகள் வேறு. காமராஜருக்குப் பிடிக்காத விஷயமிது. முதுகளத்தூர் கலவரம் மூண்டிருந்த காலத்தில், அவருடைய காருக்கு முன்னும் பின்னும் கட்டியம் கூறும் வண்டிகள் பவனி வந்தன. 'சைரன்' ஒலி நாராசமாக பெரியவர் செவியை தாக்க, தன்னுடைய பாதுகாப்பு அலுவலகர் கிருஷ்ணனை பார்த்து, 'நான் உசிரோட தானேய்யா இருக்கேன்; அவன் என் முன்னாலே சங்கு ஊதிக்கிட்டுப்போறான்னேன். மொதல்ல அவனை நிறுத்தய்யா' என்று போட்டாரே ஒரு சப்தம். படோடாபத்தின் மீது அவருக்கு ஒவ்வாமை.
சித்திரத்துக்கு நன்றி:
http://www.clipartkid.com/images/822/police-car-clipart-panda-free-clipart-images-0mjFNz-clipart.gif
No comments:
Post a Comment