வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2
இது ஒரு தொடரிதழ் என்பதை விட தொகுப்பிதழ் என்று சொல்வதே பொருந்தும். சட்டம், நீதி போன்ற விஷயங்களை கோர்வையாக அளிப்பது கடினம், அன்றாட நிகழ்வுகள் முன்னுரிமை கேட்பதால்.
இன்று ‘Omne crimen ebrietas et incendit et detegit!’ என்ற லத்தீன் முதுசொல்லை இந்திய பின்னணியில் விளக்கி, அதற்குப் பிறகு ‘Habeus Corpus’ என்ற ஆள் கொணரும் உரிமையை பற்றி எழுதுவதாக இருந்தேன். அதற்கு நடுவில் ஒரு நெகிழ்வான செய்தி முதலிடம் நாடியது. ‘பெண்ணியம்’, ‘பெண்ணுரிமை’, ‘பெண்ணின் மனம்’ என்று அடி எடுத்துக்கொடுத்தாலே, வாரிச்சுருட்டிக்கொண்டு பங்கேற்கும் பட்டிமன்றங்கள் சட்டரீதியாக சமூகத்தில் பெண்களின் இடம் என்பதைப் பற்றி வேண்டிய அளவு ஆராய்வதில்லை. கமலஹாசன் படம் ஒன்றில், நண்பர் பூர்ணம் விஸ்வநாதன் அபாரமாக நடித்திருப்பார். அதுவும், ‘நிலா காய்கிறது’ என்ற பாட்டும் தான் நினைவில் இருக்கிறது. கதை சுருக்கம். விலைமாது சமூகத்தில் சிக்கிய ஒரு சிறுமி தந்தையை வாடிக்கையாளராக நினைத்து விடுவார். பின்னர் மீட்கப்படுவார். இத்தனைக்கும் விபசாரம், பெண்களை கடத்தல் போன்றவை சட்டவிரோதம். THE IMMORAL TRAFFIC (PREVENTION) ACT, 1956
டைம் லைன்: 2013:
அந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்த ஸ்வேதா கட்டி என்ற இளம்பெண் தந்தையாலேயே கொடுமை படுத்தப்பட்டவர். எத்தனை பெண்கள் இப்படி அழிந்து மடிந்தனரோ? ஸ்வேதா ஒரு புரட்சிக்காரி. அவளுடைய கூட்டாளிகளும் அப்படியே. அன்றாட சராசரி வாழ்க்கை நடத்தும் பெரும்பாலோரின் இன்னல்களும், சிக்கல்களும், இடர்ப்பாடுகளும், ஸ்வேதாவின் அக்னிமூலையிலிருந்துப் பார்த்தால் துகள்கள். அவளுடைய எதிர்நீச்சல் வாய்க்காலில் அன்று; வாழும் கடலில். ஸ்வேதா சிறந்த மாணவியாக திகழ்ந்து, அமெரிக்காவில் படிக்கப்போகிறார். அமெரிக்க சமுதாயம் அவளுக்கு அளிக்கும் உதவித்தொகை $50,000/-. இது சம்பந்தமான விழியத்தை இணைத்திருக்கிறேன். அதை பார்வையிடுவீர்கள் என நம்புகிறேன்.
அதற்கு முன் ஒரு வார்த்தை. மும்பையில் போரஸ் ரோடு என்ற இடத்தில் விலைமாதுகள் சமுதாயம். அங்கு 1970-80 களில் டாக்டர்.ஐ.எஸ்.கலாடா என்ற இளைஞர் அரும்பணிகள் பல செய்து அநாதை ஜன்மங்களாகிய விலை மாதுகளுக்கு புனர்வாழ்வு அளிக்க உழைத்தார். அவருடைய பரிச்சியம் நினைவில் வந்தது. அவருக்கு வந்தனம் சொல்ல யாராவது ஸ்வேதாவிடம் பரிந்துரை செய்யவேண்டும்.
காப்புரிமை & நன்றி:
No comments:
Post a Comment