வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1 ̀ |
updated
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> | Wed, Jun 12, 2013 at 5:36 PM |
|
வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1 ̀
மின்தமிழர் அன்பர்களே,
மடலாடும் குழுக்களில் சட்டத்தின் இயலாமை, குற்றங்குறைகள், ஓட்டைகள் தாமதம், சீர்திருத்தம், அநீதி ஆகியவை பற்றிய விமர்சனங்கள் எழுவது இயல்பு. விழிப்புணர்ச்சிக்கு அந்த உந்துகோல் இன்றியமையாதது. சில விமர்சனங்கள் உணர்ச்சி வேகத்தில் அமைவதாலும், நம் எல்லோருக்கும் சட்ட நுணுக்கங்கள் தெரிவது சாத்தியமில்லை என்பதாலும் தவறான கருத்துக்கள் பொதுமன்றத்தில் தற்காலிகமாக ஏற்கப்படலாம். அதனால் நாளாவட்டத்தில், மக்கள் ஆட்சி நீர்த்துப் போகக்கூடிய அபாயம் உண்டு. மேலும், சட்டங்களை இயற்றுவது ஒரு சாரார்; பராமரிப்பது ஒரு சாரார்; தீர்ப்புகள் அளிப்பது ஒரு சாரார். அதனால், பொது மக்களிடம் ‘சட்டம் எது?’ என்பதை பற்றியே குழப்பம் தென்படுகிறது. தற்காலம் சட்ட அமைச்சரகத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் சடுகுடு நடப்பது மேலும் குட்டை குழப்புகிறது. போதாக்குறையாக, வன்முறை குற்றம் சாற்றப்பட்டவர்களை, குற்றமிழைத்தவர்களாகவே ஊடகங்களும், பொதுஜனமும் சித்தரிக்கின்றனர்.
விநோதினி என்ற இளம்பெண் மீது அமிலம் வீசி தாக்குதல். அவர் மரணம். குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் என்ற விசனம் தரும் நிகழ்வுகளை பற்றி, அவருக்கு ஜாமீன் கொடுத்ததை பற்றி சுபாஷிணி எழுப்பிய வினா நியாயமானதே. எனக்கு உடனே தீர்ப்பு கிடைக்கவில்லை; சட்டபின்னணியை எழுதினேன். ஆனால், அது போதாது.
வல்லமை இதழில் துவக்கப்பட்ட ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற தொடரின் கருத்து வளையம் இந்தியாவின் அரசியல் சாஸனம், அதை அசைத்துப்பார்த்த அரசு நடவடிக்கைகள், மைல்கற்களாக அமைந்து விட்ட தீர்ப்புகள், சட்ட தீர்திருத்தம் போன்ற அலை வரிசைகளில் வளைய வருவதால், சுபாஷிணியின் வினாவை அடித்தளமாக வைத்துக்கொண்டு, கடித இலக்கியமாக, இந்த தொடரை எழுதத் துணிந்தேன். மற்றவர்கள், அவரவர் சித்தம் போல் பங்கு கொள்வதற்கு, இது வசதியாக அமைந்து விட்டது. யாராவது கேள்வி கேட்டால் பதில் அளிப்பதும் எளிது.
சட்டம் என்ற கட்டுப்பாடு இந்திய வரலாறுகளில் ராமராஜ்யத்துக்கு முன்பே உளது. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஒரு அருமையான சட்ட நூல். சிலப்பதிகாரத்தின் பாவை மன்றம் தருமத்தின் உருவகம். உலகளவில் தற்கால சட்ட அணுகுமுறை ரோமானிய நியாய சாத்திரத்தின் வாரிசு. சட்டத்தை வழி நடத்தி, அதற்கு ஒரு உரு கொடுத்தது பிரிட்டீஷ் சட்ட வல்லுனர்கள். திட்டமும், வட்டமும் இல்லாமலே, பக்குவமாக சிந்தித்து, சிந்தித்து, சட்டம் என்ற உப்பரிகையை எழுப்பிவிட்டார்கள். புதிய பறவையான அமெரிக்காவின் கொடுப்பினை, தலை சிறந்த நீதிபதிகள்.
ஆகவே, இந்த பின்னணிகளை வைத்துக்கொண்டு மூன்று தாரக மந்திரங்களின் அறிமுகம், சுருக்கமாக: ( ஆங்கிலம் சரளமாக கலந்து வரும்.)
- Sufficient evidence: சாட்சியம் போதுமானதா?
இந்த பக்கமோ, அந்த பக்கமோ சாயாத மனதுக்கு எது போதுமான சாட்சியமோ அது போதும். [Estate of Cruson v. LONG, 189 Ore. 537, 562 (Or. 1950)]. அமெரிக்கன்.
இது முற்றிலும் நிரூபிக்கப்பட்ட சாட்சியமாக இருக்க தேவையில்லை. அந்த அளவுக்கு செல்ல வேண்டியதை சட்டம் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு ஜூரியோ, ஜட்ஜோ ஏற்புடையது என்று சொல்லக்கூடியது தான் Sufficient evidence. அது போதும்.
- தண்டனை வாங்கிக்கொடுப்பது சாத்தியமா? பிரிட்டீஷ் அணுகுமுறை: மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டியது, இது. குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு என்ன என்ன சொல்லும் என்பதை பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். எத்தனை மோசமான குற்றமாயிருந்தாலும், தண்டனை சாத்தியமில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான். வேறு வழியில்லை. ( நடைமுறையில் மிகவும் கறார். சென்னை ஷாஜி வழக்கு தான் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே. இங்கு காரை வேகமாக ஓட்டிய அமைச்சர், பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். சிறை சென்றார். அவருக்கு சாதகமாக மெய்யை கொஞ்சமாக வளைத்து பொய் பேசியதாக ஒரு ஜட்ஜ் மீது வழக்கு தொடரப்போகிறார்கள். சாட்சியம் மிகக்குறைவாக தோற்றம். ஆனால், விடுவதாக இல்லை.)
- public interest (பொது நலம்) இது சம்பந்தமாக ஏழு கனமான கேள்விகள். அதற்கு பிறகு வருவோம். அதில் ஒன்று, குற்றத்தின் தாக்கம்: சிறிய/பரந்த சமுதாயத்தின் மீது
- இறுதியில் ஒரு கேள்வி: சட்ட நூல்களில், ரோமானிய பின்னணியினால், லத்தீன் சொற்றொடர்கள் எக்கச்சக்கமாக வந்து உறுத்தும் அவற்றில் ஒன்று:
Omne crimen ebrietas et incendit et detegit!
ஓடிட்றேன்!
இன்னம்பூரான்
12 06 2013
உசாத்துணை:
|
|
Nagarajan Vadivel | Wed, Jun 12, 2013 at 5:56 PM |
|
|
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> | Wed, Jun 12, 2013 at 6:33 PM |
|
Thank You, VaVa. Both of us make the same point.
What intrigues me about this judgement is the reasoning and case law urged in favor of bail, while the case is seemingly weighed the other way.
I cannot comment without seeing the judgement and what the prosecution urged.
இன்னம்பூரான்
|
|
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> | Thu, Jun 13, 2013 at 5:59 AM |
|
வாத்துப் பிடித்த கதை
காவல் துறையின் பந்தோபஸ்து! எந்த சட்டத்தில் அடிப்படையில் நடந்ததோ தெரியவில்லை. Something in a lighter vein.
?
Police have “arrested” a swan as the bird was pecking at passers-by in a colony. The police action came under sharp criticism from animal welfare activists.
According to sources, a woman lodged a complaint with Nunna police a few days ago, alleging that a swan (khajana bathu) pecked at her five-year-old daughter while she was playing in front of her house in Sugali colony. She alleged that the swan was chasing people and creating nuisance. Acting on the complaint, police seized the bird and tied it on the station premises.
When the police informed Forest Department authorities of the matter, they said that the case did not come under their purview. Police released the swan on Tuesday when higher officials pulled them up.
Central Zone Assistant Commissioner of Police (ACP) D.V. Nageswara Rao said that the Blue Colts (wing of police) brought the swan to the station and booked a ‘petty case.’ “I condemn the action of Nunna police against the bird. An inquiry will be conducted into incident,” said the ACP.
Speaking to The Hindu, Divisional Forest Officer (Wildlife) G. Anand clarified that a domesticated swan did not come under the wildlife category. “We will enquire whether the bird was subjected to cruelty or not,” said the DFO.
A.P. State Cow Protection and Prevention of Cruelty to Animals in-charge Hastimal C. Jain said that the police could take action against the custodian of the swan in the case, but not against the bird. It is learnt that the police did not provide it with proper food and water.
|
|
Subashini Tremmel | Thu, Jun 13, 2013 at 2:18 PM |
|
சமூக விஷயத்தைப் பயனுள்ள வகையில் அலசும் பதிவு. உங்கள் அரசாங்கப் பணி அனுபவம், சமூகப் பொது விஷயத் தெளிவு, சமூகத்தின் மேல் உள்ள அக்கறை அனைத்துமே எழுத்தில் தெரிகின்றது.
சுபா
|
|
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> | Thu, Jun 13, 2013 at 5:36 PM |
|
நன்றி, சுபாஷிணி.
வாழ்க்கையின் இலக்கே பணி செய்து கிடப்பது என்பது தமிழ்தென்றல் திரு.வி.க அவர்களின் வாக்கு; வாழ்நெறி. அரசாங்கப் பணி அனுபவம் என் சம்பந்தப்பட்டவரை மகத்தானது; அதற்கு கிடைத்த ஊதியம், சலுகைகள், ஓய்வூதியம் ஆகியவை நான் மக்களுக்குப் பட்ட கடனே. ஆகவே, அனுபவத்தின் நற்பயனையையும், படிப்பினைகளையும் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம். சமூகப் பொது விஷயத் தெளிவு ஜனனம் அளித்த வரன். தற்கால தலைமுறைகள் எத்தனை முயன்றாலும், சுதந்திரம் பெறுமுன் இருந்த தணியா தாகத்தின் ஆழத்தை அறிவது கடினம். தெய்வாதீனமாக, 'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்' என்று அமைந்த தன்னிலை என்னை என்றென்றும் மாணவனாகவே அமர்த்தியுள்ளது. சமூகத்தின் மேல் உள்ள அக்கறை தணிக்கைத்துறையின் நன்கொடை என்றால் மிகையாகாது.
மேலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர்பு எனக்கு ஊக்கம் அளிக்கிறது (வயது காலத்தில்!). அதனால் தான் முதுசொம் கல்விமேடையின் மீது ஈடுபாடு. அதை மேன்மை படுத்த விரும்பி, சில ஆய்வுகள். அதனால் தாமதம். தவிர, நான் 'அன்றொரு நாள்' இதழ் தொடங்கியது ஜூன் 17, 2011. ஒரு வருடம் படாதபாடு பட்டு அதை ஒப்பேற்றினேன். இரு வருடங்களுக்குப் பிறகு துவங்கிய இந்த 'வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்' தொடரின் இலக்கு:
~அரசாங்கப் பணி அனுபவம், சமூகப் பொது விஷயத் தெளிவு, சமூகத்தின் மேல் உள்ள அக்கறை, ஆகியவற்றை அடித்தளமாக வைத்து சிந்தனை பகிர்வு, கருத்து பரிமாற்றம்.
இன்னம்பூரான்
|
|
Geetha Sambasivam | Sat, Jun 15, 2013 at 4:04 AM |
|
நல்லதொரு தொடக்கம். இன்று தான் பார்த்தேன். உங்கள் மேன்மையான பணிக்குத் தலை வணங்குகிறேன்.
|
|
shylaja | Sat, Jun 15, 2013 at 4:28 AM |
|
பழுத்த அனுபவம் படிக்கும் போதே புரிகிறது.. தொடரவும் இ சார்
|
|
Subashini Tremmel | Sat, Jun 15, 2013 at 8:45 AM |
|
|
|
|
No comments:
Post a Comment