பாமரகீர்த்தி -7
ஜூனியர் விகடன் கழுகார் இன்றைய இதழில் கூறியது. இந்தத்தொடரே அதற்குத்தான்.
இன்னம்பூரான்
12 06 2013
வினா:
“மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரலாற்று உணர்வு மங்கிவருகிறதே?
விடை:
வரலாறு என்றாலே அசோகர், கனிஷ்கர், பல்லவர், சோழர்.. எனப் படிப்பதுதான் என்று பலரும் நினைப்பதால்தான், வரலாறு பற்றிய கசப்பு வந்துவிடுகிறது. இதெல்லாம் படித்து என்ன செய்யப்போகிறோம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆண்டுவாரியாக புள்ளிவிவரங்களை அடுக்குவது அல்ல வரலாறு. நம்முடைய மூதாதையரைப் பற்றித் தெரிந்துகொள்வதும், தங்களது குடும்பத்தின் ஊரின் கோயிலின் முந்தைய கதையை அறிந்து கொள்வதும் வரலாறுதான். சுவாரஸ் யமான அந்தத் தகவல்களை முதலில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலத்தை அறியாதவர்களால், நிகழ் காலத்தில் பயணிக்க முடியாது. நிகழ்காலம் இல்லாதவர்க்கு, எதிர்காலம் இல்லை.”
No comments:
Post a Comment