(ருக்மிணி சுபஜனனம்....)
அந்த சமயத்தில் என் அப்பாவிற்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து போய்விட்டதாம். பிறகு நான்காவது ஒரு பெண் பிறந்தது.9 பிறகு என் அப்பா அம்மா வேண்டாத கோவிலை வேண்டி (பிறகு) ராஜமன்னார்குடிக்குப் போய் அங்கு ஒரு சந்தானகிருஷ்ணன் வைத்திருக்கிறார்கள். அந்த கிருஷ்ணனை என் அம்மா எடுத்துக்கொண்டபிறகு ஒரு பிள்ளை பிறந்தான்.10
ஆனால், என் அப்பா அதே செட்டியப்ப செட்டியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதம் 50 ரூபாய் (அடித்தல், திருத்தல்) சம்பளம். அந்தச்சம்பளத்தில் தான் பெரிய பெண்ணுக்கு கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை படிப்பு அந்த நாளில் பத்து க்ளாஸ் படித்தால் போதும் என்று இருப்பார்களாம். அதனால் என் அப்பா மாப்பிள்ளையை ஆத்தில் வைத்துக்கொண்டு படிப்பதற்காக தன் வீட்டில் வைத்துக்கொண்டார். செட்டிநாட்டில் பெரிய பணக்கார செட்டியார் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் சொக்கலிங்க செட்டியார் என்று பெயர் அவர் செட்டி நாடு என்கிற காரைக்குடியில் பெரிய சிவன் கோவில் தெருவில் ஹேட்ஸ்கூலும் 2. பாய் (Boy) ŠÜÖõ ¸ðÊÉ¡÷¸û. «Å÷¸û ¾¡õ ÌÆ󨾸ÙìÌ ÒŠ¾¸õ, §¿¡ð, ¦Àýº¢ø ±øÄ¡õ ¦¸¡ÎôÀ¡÷¸û. அதில் அப்பா மாப்பிள்ளையை படிக்க வைத்தார். அதே போல் பெண்ணும் ஹேட்ஸ்கூலில் படித்தாள். இருவரும் சின்னவர்கள் தாம்.
ஆனால், அந்தக்காலத்தில் செட்டியார்கள் கோவில் உத்ஸவம் நடத்துவது, குளம் வெட்டுவது செய்வார்கள்.11 தவிற ஒரு விஷயம். அவர்கள் வீட்டில் கல்யாணம் என்றால் ரொம்ப விமரிசையாக நடக்கும்.
அப்போது பிராமணர்களுக்கு வெத்திலைப்பாக்கு கொடுக்கும் போது, பித்தளை பாத்திரம் தருவார்கள். பிராம(ண)ர்களுக்கு தான் தர்மம் செய்வார்கள்?12 இப்படியிருக்கும்போது (அடித்தல், திருத்தல்) மாப்பிள்ளைய மெட்ரிகுலேஷன் எழுதவேண்டும் என்றால், புதுக்கோட்டை போய்த்தான் எழுதவேண்டும். அதனால், மாப்பிள்ளையை13 புதுக்கோட்டை போய் எழுதச்சொன்னார், என் அப்பா. அதே போல் அவர் எழுதி வந்தார். அப்போது என் அப்பா மாப்பிள்ளையைக் கூப்பிட்டு நான் இன்கம்டாக்ஸ் கணக்குகள் கொடுக்கிறேன். 14 அதைப்பார்த்துக்கொண்டுவந்தால் நல்லது. எனக்கு உதவியாக இருக்கும். எனக்குச் செட்டியார் கொடுக்கிற சம்பளம் போதவில்லை. அதனால் உன்னை என்னோடு சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
நீ என்ன சொல்கிறாய் சொல் என்று மாப்பிள்ளையைக் கேட்டார்.ஆனால் மாப்பிள்ளை இஷ்டபடவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் என் அப்பாவிற்கு கொஞ்சம் வருத்தம். இப்படியாக வருஷம் ஆகிவிட்டது?அப்போது எனக்கு 9 வயது. என் தம்பிக்கு 7 வயது ஆகிறது என்றும் எங்களுக்கு கொஞ்சம் நினைவு தெரியும். செட்டியார் வீட்டில் வேலை பார்க்கும்போது நான் தான் டிஃபன் கொண்டு கொடுப்பேன். ஆனால் செட்டியாருக்கு ரங்கூன், சிங்கப்பூரிலிருந்து கடைக்கணக்குகள் வரும். அதோடு எங்களுக்கு பிஸ்கோத்து, பாவாடைத்துணி எல்லாம் வரும். என் அக்கா கல்யாணத்தின்போது நான் ஒரு வயதுக்குழந்தையாம். என்னை அத்திம்பேர் தூக்கி வைத்துக்கொண்டிருப்பாராம். என் அப்பா மாப்பிள்ளையை கோபிப்பாராம். அதே சமயத்தில் அப்பாவிற்கு குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருந்ததாம். அதனால் தான் வேலை பார்க்கும் செட்டியாரிடம் (அடித்தல் திருத்தல்) 500 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மத்ராஸ் போய் ஒரு குமாஸ்தாவை வைத்துக்கொண்டு கணக்கு முடித்து தருகிறேன் என்று வாங்கிக்கொண்டு, அம்மாவிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டு அப்பா மத்ராஸ் போய்விட்டார்.
9. ருக்மிணி, தன்னை தான் குறிக்கிறார் போலும்.
10. ஊழ்வினையோ, செல்லம் கொடுத்து கெட்டதோ, சகவாசதோஷமோ, மாமாவின் வாழ்க்கையை திசைமாற்றி அலக்கழித்துவிட்டது. திடீரென்று வருவார். திடீரென்று போவார்.
11. நகரத்தார் சமுதாயச்செய்திகள் இந்த வரலாற்றில் பல உள்ளன. வாழ்வு கொடுத்தவர்கள் அல்லவா.
12. கேள்விக்குறி ருக்மிணியின் தார்மீகநிலையை உணர்த்துகிறது.
13. பெரியண்ணாவுக்கு உலகமே நட்பு, தாத்தாவைத்தவிர! ருக்மணி அவரது பிரதாபங்களையையும் விட்டு விடவில்லை. எங்கள் மீது, அவருக்கு அளவு கடந்த வாஞ்சை. அவருக்கு வந்த வெளிநாட்டு கவர்களின் ஸ்டாம்புகளை லாகவமாக எடுத்துக்கொண்ட நான், அவற்றை என் பேத்தி ருக்மணியிடம் கொடுத்துள்ளேன். பெரியண்ணாவுக்கு பெருமிதத்துடன் தோள் கொடுத்தவன்ர்களில், நான் ஒருவன்.
14. அன்றிலிருந்து கடைசிநாள் வரை (என் திருமணத்திற்கு பிறகும்) தாத்தா காரைக்குடியில் பிரபல இன்கம்டாக்ஸ் பிராக்டிஷனர். மேற்படிப்புகள் படித்து உயர் பதவிகள் வகித்த எனக்கு, இன்றும் ஆங்கிலம் அறியாத அவரது ஆற்றலும், திறனும், புதிராகவே உள்ளன. அங்கும் ரகசியமாக ஸ்டாம்புகளை உருவிவிடுவேன். பெரியண்ணாவுக்கு இவருடன் போட்டாப்போட்டி. 1947க்குப்பிறகு, புதுக்கோட்டையில், எங்கள் வீட்டில் தாத்தா விளம்பரப்பலகை வைத்தார். பெரியண்ணாவும் பக்கத்திலேயே தனதையும் பொருத்தினார்! குட்டி சமஸ்தானமா? அங்கு வருமானவரி முன்பு கிடையாது. வருமானவரியை எதிர்த்து மாஜி திவான் ஒருவர் ஹிந்துவில் எழுத, மாணவனாகிய நான், ‘ Does he think tha Pudukkottai is an enclave in Free India?’ என்று மறுப்பு எழுதினேன், காரசாரமாக. என்றுமில்லாத திருநாளாக, பெரியண்ணா அதை தாத்தாவுக்கு வாசித்துக் காட்ட, தாத்தா என்னை அன்றிலிருந்து ‘முந்திரிக்கொட்டை’ என்று தான் கூப்பிடுவார். ‘ இப்போ மட்டும் என்ன வாழ்ந்த்தாம்?’ என்று மின் தமிழில் யாரோ கேக்கிறாளே! புதுக்கோட்டை மெர்ஜெர் ஆன நிகழ்வுக்கு நான் ஒரு சாட்சி..
No comments:
Post a Comment