Saturday, May 4, 2013

அன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ!




அன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ!
14 messages

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 9:22 PM


=அன்றொரு நாள்: மே 5:
நம்மூர் க்ரேடோ கார்போ!

வரலாறு சமயங்களில் வற்றியயாறு ஆகி விடுகிறது. காலதேவனின் கொடுமை. ஓஹோஹோ என்று கொடி கட்டி பறந்தவர்கள், சுவடு இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால், தற்செயலாக இன்றைய கதாநாயகியின் சஹோதரை சந்திக்க நேர்ந்தது. எங்கள் வாலிபப்பருவத்தில், யுவர்களுக்கு அவர் தான் கனவுக்கன்னி. அந்த நினைவு உந்த, அவருடன் அவருடைய சஹோதரியை பற்றி மேலும் அறிய விரும்பினேன். அவர் தனிமையாக வாழ்கிறார். யாரையும் பார்ப்பதில்லை என்பதற்கு மேல், அவர் அதிகமாகக் கூற விரும்பவில்லை. அவரது அழகு, உடல் நிலை மோசமானதால், குலைந்து விட்டது என்று சொல்பவர்களும் உண்டு, அவரை பார்க்காமலே! க்ரேடோ கார்போ என்ற அழகு பிம்பமும், மேல்நாட்டு திரை நடிகையும் ஆன க்ரேடோ கார்போ தன்னுடைய தனிமையை தீவிரமாகவே காப்பாற்றினார், அதெல்லாம் போகட்டும். சந்திரலேகா சினிமாவை சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர். ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ் ஸ்டாப்பின் பெயரே அது தான். என்னே ஜோடி! இந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் ஜில்ப்பாவும், ஜரிகை அங்கவஸ்திரமும், பெண்கவர் முகவிலாசமும், டீ.ஆர். ராஜகுமாரியின் அழகும், பொலிவும், வனப்பும், மனம்கவர் ஜொலிப்பும், சொல்லி மாளாது போங்கள். ஆனால் பாருங்கள். எம்.கே. தியாகராஜ பாகவதர் வறுமையில் உழன்று, அனாதையாக உயிர் துறந்தார். தமிழ் நாட்டில் வானளாவ புகழுடன் அன்ன நடை போட்ட பேரழகி டீ.ஆர். ராஜகுமாரி 1999 வரை 77 வயது வரை வாழ்ந்தவர் எனினும், அவரை பற்றிய பாமரகீர்த்தி பூஜ்யம்.பேசும் படம் மாதிகைஜனவரி 1951 ஒரு உசாத்துணை: ஆனால், கிடைத்தால் தானே. நாகராஜன் தான் தேடணும். விக்கிப்பீடீயாவில் 19 செப்டெம்பர் 2006 அன்று வரை இவரை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை என்றொரு குறிப்பு. 25 பெப்ரவரி 2012 அன்று வரை அதிகப்படியாக தெரிந்தது சொல்பம். கழுதை, குதிரைக்கெல்லாம் நூற்றுக்கணக்கான படங்கள். தமிழகக் கனவுக்கன்னிக்கு இரண்டே இரண்டு! இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.
 இன்னம்பூரான்
05 05 2012
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/32/ராஜகுமாரி.jpg/200px-ராஜகுமாரி.jpg
Inline image 1

உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/ி._ஆர்._ராஜகுமாரி

N. Kannan Mon, May 7, 2012 at 9:51 PM


2012/5/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>

> சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த
> மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர்.
> ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ்
> இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த
> தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.
>
ஹரிதாஸ் பார்த்து அசந்துவிட்டேன். இவருக்கு முன் இந்தக் காலத்துக்
கவர்ச்சிக் கன்னிகளெல்லாம் அம்பேல்!

நல்ல நினைவுகூறல் இன்னம்பூரான் சார் :-)

க.>

பிகு: நம்ம நல்லபாம்பு நல்ல படமாப்போடும் :-))


renuka rajasekaran Mon, May 7, 2012 at 9:59 PM


சிறிதேயானாலும் சிறப்பு செய்தீர்கள்
பெரிய கீர்த்திக்கு சிறிய மூர்த்தி போதும் என்றவாறு.

நடிகையரின் மூப்பும், அழகு உருமாற்றமடைவதும்
அவர்களுக்கு எத்தனைப் பெரிய அவஸ்தையோ தெரியவில்லை;
ஆனால் ரசிகர்கள், தாங்கள் மூப்பு அடைந்து, உருமாற்றம் பெற்றாலும் பரவாயில்லை, தங்களது கனவுக் கன்னிகள், என்றும் பதினாறாய் இருக்கவே ஆசைப் படுகிறார்கள்.

சமீபத்தில் எதையோ தேடப் போகும்போது, வைஜயந்தி மாலா, கே ஆர் விஜயா ஆகியோரின் புகைப் படங்களைப் பார்த்து, அவர்களா இப்படி என்று நானே ஒரு கணம் அதிர்ந்தேன்!

இது நிற்க:
அந்நாளைய சாதனையாளர்கள் யாவருமே இன்று வெளிச்சத்தில் இல்லை.
தாமரை மணாளன் என்றொரு எழுத்தாளர், அவரைப் பற்றிய தரவுகள் ஒன்றுமே இல்லை!!
மறக்கப்பட்டார் தாமரை மணாளன் என்று நான் முன்பு எழுதிய கட்டுரையில்:

"ஒரு எழுத்தாளனின் எழுத்து நன்றாயிருந்தால் மட்டும் போதாது; அதிர்ஷ்டத்தோடு, தூக்கிவிட ஆளும் தமுக்கடிக்க ஊடகங்களும் இருக்கவேண்டும் - அன்றேல் அவரைத் தமிழுலகம் சுத்தமாக மறந்துவிடும் என்பதனை இந்த ஒரு நபரை வைத்தே சொல்லிவிடலாம் போலிருக்கிறது." 

என்று குறிப்பிட்டிருந்தேன்.

வணக்கம் 


Nagarajan Vadivel Mon, May 7, 2012 at 10:08 PM


பிகு: நம்ம நல்லபாம்பு நல்ல படமாப்போடும் :-))http://www.youtube.com/watch?v=Lt3MRCvAtao

Nagarajan



Innamburan Innamburan Mon, May 7, 2012 at 10:23 PM

மிக்க நன்றி, ரேணுகா, தாமாரை மனாளன் கட்டுரையை அனுப்ப இயலுமா. புதுமை பித்தன் அவர்களின் அஞ்சலி தினம் வந்தது. அவருடைய கையெழுத்துப் பிரதிகள் காணாமல் போயின. எனக்கு கோபம் வரும். அதான் அது பற்றி
எழுதவில்லை.
இன்னம்பூரான்

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 10:29 PM
To: mintamil@googlegroups.com
பார்த்து மகிழ்ந்தேன், நாகராஜா. நன்றி.



renuka rajasekaran Mon, May 7, 2012 at 10:39 PM

http://ambarathooni.blogspot.com/2011/01/blog-post_22.html

நன்றி ஐயா


N. Kannan Tue, May 8, 2012 at 9:51 AM


2012/5/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
>
> பார்த்து மகிழ்ந்தேன், நாகராஜா. நன்றி.
> இ
>
அதில் flying kiss வேறு உண்டு! :-)
கொஞ்சம் ஸ்நேகா மாதிரி இருக்கிறார்!
நல்ல நடனம்!

க.>
[

Innamburan Innamburan Tue, May 8, 2012 at 11:31 AM
To: mintamil@googlegroups.com
எந்த ஸ்நேகா? அவர் இவர் மாதிரியா? இவர் அவர் மாதிரியா? எவர் உவர் மாதிரி?

[

Anna Kannan Tue, May 8, 2012 at 11:36 AM


பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் ஓர் அழகு. 

Tn Elango 
பேரைப் பாருங்களேன். ராஜகுமாரி. என்ன ஒரு கம்பீரம். என்ன ஒரு அழகு..இல்லையா?
[Quoted text hidden]
--
Follow my blogs on  http://tnelango.blogspot.com/

Swaminathan Venkat Tue, May 8, 2012 at 1:36 PM


இயற்பெயர் காமாட்சி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதெல்லாம் போகட்டும், என்ன அழகு, என்ன கம்பீரம் என்றெல்லாம் எல்லாரும் உருகுகிறீர்களே, எதைப் பார்த்து? எனக்கு இங்கு தரப்பட்டிருக்கும் இரண்டு விக்கி லிங்க் களிலும் ஒன்றும் இல்லை.வெற்றிடம் தான் கிடைக்கிறது. உங்களுக்கெல்லாம் தனியாக, ஸ்பெஷலாக தரிசனம் தருவது எப்படி? இதிலும் ஏதும் ஒதுக்கீடு/கோட்டா/சலுகை சமாசாரமா?


Geetha Sambasivam Tue, May 8, 2012 at 2:21 PM


நல்ல அழகு தான். எத்தனை காலமானாலும் மறக்காதபடிக்கு அந்தக் காலத்து நடிக, நடிகையர் இருந்தாப்போல இந்தக் காலத்திலே இருக்காங்களா?? தெரியலை; புரியலை.  நீர்க்குமிழி மாதிரித் தான் வராங்க, போறாங்க.


ஐயப்பன் கிருஷ்ணன் Tue, May 8, 2012 at 2:55 PM


http://varmah.blogspot.in/2009/04/7.html




திரைக்குவராதசங்கதி 7


தமிழ்த் திரை உலகை தனது வசியத்தால் கட்டி வைத்திருந்தவர் ரி.ஆர். ராஜகுகுமாரி, திரைப்படங்களில் நடிப்பவர்களைக் காண்பதற்கு இன்று ரசிகர்பட்டாளம் காத்துக் கிடப்பதைப் போன்றே அன்றைய ரசிர்களும் காத்திருந்தார்கள். தனது அபிமான நடிகையான எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்று வந்தார் ரி.ஆர். ராஜகுமாரி.
தியாக பூமி படத்தைப் பார்த்து பரவசமடைந்த ரி.ஆர். ராஜகுமாரி தனது தம்பியுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்று எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை காண தவமிருந்தார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் இயக்குநர் கே. சுப்பிரமணியமும் திறந்த காரில் செல்லும்போது தூரத்தில் நின்று பார்த்து ரசித்த ரி.ஆர்.ராஜகுமாரி நானும் ஒருநாள் நடிகையாவேன். என்னைப் பார்ப்பத
ற்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தவமிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவில்லை.
குமார குலோத்துங்கன் என்ற படத்தில் நடிப்பதற்கு ரி.ஆர். ராஜகுமாரி தெரிவு செய்யப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ராஜலட்சுமி என்பதே ரி.ஆர். ராஜகுமாரியின் நிஜப் பெயர். ராஜாயி என்றும் அழைப்பார்கள். டி.பி. ராஜலட்சுமி எனும் நடிகை பிரபலமாகயிருந்தபோது டி.வி. ராஜலட்சுமி என்ற பெயரில் இன்னொரு நடிகை பிரபலமாக இருந்தார். பெயர் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக டி.ஆர். ராஜலக்ஷ்மி எனும் பெயரை ராஜகுமாரி என்று மாற்றினார் தயாரிப்பாளர் ராதா ராவ்
ராஜலக்ஷ்மி எனும் பெயர் மறைந்து ரி.ஆர். ராஜகுமாரி எனும் பெயர் பிரபலமாகியது.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்து தனது நடிப்பாற்றலால் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியவர் ரி.ஆர். ராஜகுமாரி.
ரி.ஆர். ராஜகுமாரி முதன் முதலாக நடித்த குமார குலோத்துங்கன் வெளிவரவில்லை. ரி.ஆர். ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி வெளியாகி அவருக்கு பெரும் மதிப்பை தேடிக் கொடுத்தது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவும் கொத்தமங்கலம் சுப்புவும் ரி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்தார்கள். அதன் பின்னர் வெளியான சூரிய புத்திரி, மந்திரவாதி ஆகிய படங்களும் ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான வெற்றிப் படமான ஹரிதாஸ், சிவகவி ஆகியவற்றில் டி. ஆர். ராஜகுமாரி நடித்தார்.எம்.கே. தியாகராஜ பாகவதருடன் போட்டிபோட்டு நடித்த பி.யூ. சின்னப்பாவுடனும் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார். மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகியவற்றில் பி.யூ. சின்னப்பாவுடன் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பிலும் பாட்டிலும் புகழ்பெற்று விளங்கினார். பியூ. சின்னப்பா வசனம், கத்திச் சண்டை, சிலம்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பியூ. சின்னப்பா ஆகிய இரு பெரும் நடிகர்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி மக்கள் திலகம் எம். ஜி.ஆர்., நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடனும் நடித்துள்ளார்.
எம்.ஜி. ஆரின் "புதுமைப் பித்தன்' ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்த படங்களில் ஒன்று.
தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய படங்களில் ஒன்றான மனோகராவில் சிவாஜி கண்ணம்பா ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
நடிப்பு, நாட்டியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ரி.ஆர். ராஜகுமாரியை அகில இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தவர் ஜெமினி ஸ்ரூடியோ நிறுவுனர் எஸ்.எஸ்.வாசன் தமிழிலும் ஹிந்தியிலும் புரட்சியை ஏற்படுத்திய சந்திரலேகாவில் ரி.ஆர். ராஜகுமாரியின் நடிப்பை புகழ்ந்தவர்களே இல்லை.
தமிழ்த்திரை உலகின் பொற்காலம் என்று தான் நடித்த காலத்தை பெருமையுடன் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
அப்பொழுதெல்லாம் படப்பிடிப்புக்கு போய் வருவதென்பது கிட்டதட்ட பள்ளிக்கூடம் போய் வருவது போலத்தான். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் தான் வீடு திரும்புவேன். எல்லாக் கம்பனிகளிலும் ஒரே குடும்பத்தினர் போன்றுதான் பழகுவோம். டைரக்டர், நடிகர், வசனகர்த்தா, கமேராக்காரர்கள், லைட் போய் என்ற பாகுபாடே கிடையாது. சாப்பாட்டின் போது டைரக்டர் சுப்பிரமணியத்தின் அருகில் லைட்போய் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்தளவுக்கு சமத்துவம் வழங்கப்பட்ட பொற்காலம் அது என்று தனது திரைப்பட அனுபவத்தைக் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
ரமணி
மித்திரன் 03/04/2009


[

No comments:

Post a Comment