Google+ Followers

Saturday, May 4, 2013

'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -27: Updated
'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -27: Updated
Innamburan S.Soundararajan Sat, May 4, 2013 at 8:01 PM
27 01 2010 II Edition 04 05 2013

 'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -27

Inline image 1
 இன்றைய அப்டேட். 06 05 2013
கான்ஸ்டபிள் ட்ரான்ஸ்ஃபெர் கூட மந்திரியின் வேலை.:  
டைம்லைன்: 1958/1964:/2013

55 வருடங்களில் நிர்வாஹம் சீரடைந்ததை நோக்குக. அமைச்சர்னா மச்சம் தான்! 
சித்திரத்துக்கு நன்ற்:http://1.bp.blogspot.com/_mv81X-BrzWk/ShzHDv5oGrI/AAAAAAAAAzg/NePKGMLbEH4/s320/maraicoir_cartoon.png

இன்னம்பூரான்
06 05 2013
Director general of police Sanjeev Dayal's threat to resign over withdrawal of his powers to transfer and promote police personnel roused home minister R R Patil. Belatedly, the minister slipped into damage-control mode even as retired police chiefs J F Ribeiro, M N Singh and A N Roy successfully highlighted his "greedy for power". 

A day before K Subramanyam took over the reins of the state police from D Sivanandan in June 2012, the home department withdrew crucial powers of the DGP to transfer police sub-inspectors (PSIs), assistant inspectors (AIs) and police inspectors (PIs) without assigning any reasons. 

Subramanyam followed by Roy had brought it to the notice of Patil that if the DGP's powers were not restored, then the head of the state's police force would be toothless. While no steps were taken to restore the DGP's powers, in April, the general administration department led bychief minister Prithviraj Chavan issued another circular stating that the DGP's powers to promote lower-rung police officers stands withdrawn in view of the law on transfers in force since 2006. 

A committee headed by senior bureaucrat K P Bakshi was set up to make amends, but no decision was taken on its recommendations. Now another panel headed by industries minister Narayan Rane is examining the law. It's well known that when the government is not keen on taking a decision, a committee headed by Rane is set up. Ribeiro, Singh and Roy feel that if Patil is serious on restoring the DGP's powers, he must promulgate an ordinance soon. 
______________________________________________________

இன்றைய அப்டேட்: (04 05 2013)
இந்த சிவப்பு மசி புற்று நோய் இந்தியா முழுதும் பரவி விட்டதாக இன்றைய ஊடக செய்திகள். ராஜாஜி இறந்த போது, தி.மு.க. ஆட்சி. தலைவர் காமராசர் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்தார். அதை கண்காணித்த கமிஷனர் திரு. ஷெனாய், வேறு அலுவலுக்கு செல்லுமுன், என்னை ' ஒரு நிமிஷம் ஐயா கூடவே இரு' என்று சொல்லிவிட்டுப்போனார். இலாக்காக்களுக்குள் நல்லிணக்கம் இருந்தது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததும் அவர் தானே. மறு நாள் தகனத்தின் போது, வாய்க்கரிசி போட்ட வரிசையில் முதல்வர்; அடுத்து பொதுஜனமாகிய நான்! ஜஸ்டிஸ் ஆனந்த நாராயண் முல்லா அறிக்கை பற்றி தெரியுமோ?
சித்திரத்துக்கு நன்றி: 
இன்னம்பூரான்
04 05 2013தணிக்கையிலிருந்து கொஞ்சம் விலகிஅரசு ஸ்டைல் பற்றி கொஞ்சம். அம்மா சொன்னது நினைவு இருக்கோபெரிய  பையனுக்கு வீடு கிடைக்கவில்லை என்று

டைம்லைன்: 1958/1964:

தொன்னூறு ரூபாய் குடக்கூலி கொடுக்க முடியாத சொற்பசம்பளம் 1958ல். கிடச்ச கீக்கிடத்திலே எல்லாம் தொல்லை. அந்தக்காலத்திலே காங்கிரஸின் தர்மராஜ்யம் நடந்திருக்கச்சேவீடு கிடைப்பதுஒரு போர்ஷன் கூட, குதிரைக்கொம்பு. அக்காமொடேஷன் கன்ட்றொல்லர் என்று ஒரு சம்பிரதாய  ஆஃபீசு. கால் தம்பிடிக்கு வக்கு இல்லாத ஆஃபீசு. எல்லாம் தண்டச்செலவு. அக்காமொடேஷன் கன்ட்றொல்லர்  ஒரு நபும்ஸக ஆஃபீஸர். காலி வீடு லிஸ்ட் போடுவாக. நம்ம மாதிரி ஏமாளிகள்,கன காரியமாகமனுவைபத்து நகலெடுத்து அனுப்பிவிட்டு காத்திருப்போம். எங்கிட்டோ வந்தவனுக்கு வீடு அல்லாட் ஆகும்,குறைந்த  வாடகையில். இதை கண்டு பதைபதைத்த என்னை ஏளனமாப்பார்த்த ஒரு விவரம் அறிந்தவர்மந்திரியைப்போய் பார்த்தால் கிடைக்கலாம் என்றார். எல்லாம் 'லாம்!தான்.

திரு.கக்கன் ஒரு முறைதிரு ராமையா ஒரு முறை. எவர் எந்த முறை என்று நினைவு இல்லை. மந்திரியைப்போய் பார்த்தேன்கஜினி படையெடுப்பு. அவர்களைப்பார்ப்பது கடினமில்லை. காரியம் எளிதில் நடக்காது. 1958ல் மாண்புமிகு கேட்ட கேள்விகள். 1. உங்கள் ஆஃபீஸில் ஏன் வீடு கட்டமாட்டேன் என்கிறார்கள். 2. அப்பாவைப்பார்த்துகொள்ள வேண்டுமானால்கைப்பணத்தை செலவு செய்வது தானே? 3. எனக்கு வேறு வேலை இல்லையா? [(ஓய்! அபத்தமான கேள்வி என்று நினைத்துக்கொண்டேன். ' Give thy thought no tongue' என்று சும்மா இருந்து விட்டேன்.) இப்டியாக! சினத்தை அடக்கிக்கொண்டுகை கட்டி வாய் புதைத்தாலும், 'இல்லை'பாட்டு நபும்ஸகரிடமிருந்து. ஒரு பாடாகமந்திரி மனசு வைத்தார். ஒரு வீடு கிடைத்தது. இத்தனைக்கும், 'கடேலெ இருக்கற நெய்யேஎன் பெண்டாட்டி கையே கதை தான். வீட்டு ஓனர்,பாவம்மாட்டிக்கொண்டார். விண்ணப்பதாரர்பாவம்,ஓடிக்கொண்டே. 1964ல் கொஞ்சம் சுதாரித்துக்கோண்டுமுதல்லேயே, மந்திரியிடம் போனேன்அப்பாவின் ஆப்ரேஷன் ஆவணங்களை எடுத்துக்கொண்டு. உரையாடலை ஆபரேஷனில் சென்டர் பண்ணிமந்திரி வினா எழுப்பாமல் பார்த்துக்கொண்டேன்.  இரண்டுமூன்று படையெடுப்பு. நல்ல வீடு கிடைத்தது. டில்லியும் வாழ்ந்து விடவில்லைஆனால் அங்கு கூத்து வேறு கதை. பிறகு,கேட்டால்.

படிப்பினைகள்:

1. நிர்வாக அரசாங்கத்தின் அங்கங்கள் மூன்று: ஊழியர்அதிகாரிஅரசியல் ஆளுமை.

~ ஊழியர் விதிமுறையை அனுசரித்து இட்ட பணியையும்;
~அதிகாரிவிதியை, விதிவிலக்கையும் பண்புடன், தர்மம், நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்டு, இட்ட பணியுடன்,
நிர்வாகமும்;
~அரசியலர் மக்கள் நலன் கொள்கை வரைவதுசட்டமியற்றுவது என மேல்நிலை ஆளுமையும் செய்யவேண்டும். 

சுதந்திரம் வந்த பத்து வருடங்களில்அரசியலர் அன்றாட அலுவல்களில் ஆர்வம் கொண்டதற்கு காரணம்அதில் உள்ள பசையை புரிந்து கொண்டது தான். ஆக மொத்தம்
~தாந்தோன்றி பணி ஊழியருக்கு;
~கொள்கை/சட்டம் அதிகாரிகளுக்கு [அந்த ஆவணங்களைகண்ணால் பார்க்காமல்,அரசியலர் ஒப்புதல் கொடுப்பர்.]; ~ ~ ~அன்றாட பசை அரசியலருக்கு என்று ஆகி விட்டது. கான்ஸ்டபிள் ட்ரான்ஸ்ஃபெர் கூட மந்திரியின் வேலை.இத்தனைக்கும் ஃஃப்.வி.அருள், /ஷெணாய் போன்ற திறன்மிக்ககண்ணியமான அதிகாரிகள் அரசியல் தலையீட்டுக்கு செவி சாய்க்கமாட்டார்கள்.

2. ஒன்று காசுஇல்லையேல் தாக்ஷிண்யம்அதன் பிரதிபலனை கேட்டு வாங்குவது என்று ஆகிவிட்டது. முதல் பலிகடா: நியாயம். எதற்கும்: உடனக்குடன்பணிவுடன்தாழ்மையான மொழியில் நன்றிக்கடிதம். அத்துடன் தாக்ஷிண்யத்தை மறந்து விடுவது, என்னுடைய வழி, வேறு வழி இல்லாததால்; நான் சிறிய ஆள்; மந்திரி என்னிடம் வருவதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும், யானை, பூனை என்று ஒன்று இருக்கிறதே!

3. தற்கால பாலிஷ்: அணுகவேண்டியதுஅமைச்சரின் நேர்முக உதவியாளர்களில் ஒருவர். லஜ்ஜையை ஒழித்தவர்கள் தான் அந்த வேலைக்கு வருவார்கள்.

4. அரசியலர் நைச்சியமாக ஊழியர் வேலையையும் எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் நேரிடை தொடர்பு வைத்துக்கொண்டு,கலக்டர் போன்ற அதிகாரிகள் நியாயாமாக நடந்து கொண்டால்அதற்கு வேட்டு வைப்பது அரசியலர் நாகரீகம் என்பது என்றோ மேடை ஏறிவிட்டது. பிற்கால அரசுகள்அந்த முறையற்ற வழிகளை ஸ்திரப்படுத்தின.

5. என்ன செய்யலாம்சொல்லுங்கள்.
_______________________________