Wednesday, May 1, 2013

“ஸிம்லா ஸில்ஸில்லா!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -23


“ஸிம்லா ஸில்ஸில்லா!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -23
1 message

Innamburan S.Soundararajan Wed, May 1, 2013 at 4:42 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88
23 01 2010
 
“ஸிம்லா ஸில்ஸில்லா!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -23
Inline image 1

கொஞ்சம் கணகணப்பாக இருக்கிறதே என்று அரைகுறையாக விழித்துப்பார்த்தால், ஒரு நெடிய ஆசாமி, கட்டைகளை அடுக்கி சிம்ணிக்கு அடியில் தீ மூட்டிக்கொண்டிருக்கிறான்! டைம்லைன் 1955. அக்காலம், குளிர் காய இது தான் வசதி. 'அப்பாடா' என்று சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தால், அவர் ஒரு பல்வகை விருந்து ஒன்றை வைத்துக்கொண்டு காத்திருந்தார். புதுக்கோட்டை ஹிந்தி கைகொடுக்க, அவர் பெயர் லபூராம் என்றும், இனி அவர் தான் என் பணியாளர் (bearer) என்று அறிந்துகொண்டேன். இது ஆண்டை-அடிமை போன்றது ஓரளவு என்றும் புரிந்து கொண்டேன். பரம ஏழைகள் அவர்கள். மலைநாட்டு பழங்குடி. பண்பு, நாணயம், கனிவு ஆகியவற்றில் மேன்மை உடையவர்கள். கூடிய சீக்கிரம் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது;  அதிகமாக அதை விளம்பரப்படுத்தவில்லை. அவருக்கு அது ஆகாது. வாஸ் என்ற கோவா நிலம் சார்ந்தவர் தான், அங்கு இவர்களுக்கு, அடுப்படி,எல்லாத்திற்கும் மேற்பார்வை. அவருக்கு இது எல்லாம் பிடிக்காது.

ஸிம்லா ஸில்ஸில்லா ஒரு வருடம் நடந்தது. நாங்கள் 23 பேர். ஆளாளுக்கு  பொறுப்புகள். நான் நூலகப்பொறுப்பு. பல சுற்றுப்பிரயாணங்கள் -கூலு, மனாலி, பாக்ரா நங்கல் , தர்ம்சாலா என்று.
திண்டியா தீனி. பாடம், பயிற்சி, விளையாட்டு, பொழுது போக்குகள்.

'சட்புட்' என்று சில விஷயங்களை முடித்து விடுகிறேன்.

1. தர்மசாலாவில், நானும், பஞ்சுவும் ஒரு மாதம் டேரா. கூப்பிடு தூரத்தில் வானளாவிய பனிமூடிய ஹிமாலாய சிகரங்கள். பிற்காலம் அருள்மிகு. தலாய் லாமா தங்கும் மக்லாயிட்கஞ்சுக்கு அடிக்கடி போவோம்.. செளக்கிதார் -கம்- கான்ஸாமா உற்ற நண்பர். தான் செய்த கொலை, கொள்ளைகளைப்பற்றி, கதை கதையா சொல்வார். திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்போம். கிட்டத்தட்ட ஒரு நாள், கோழிக்குஞ்சு, ஆடு, மூட்டைகள், முடிச்சுகளுடன், டப்பா வண்டியில், மலையோரம் ரஜனிகாந்த் மாதிரி (விஜய் டீ.வீ. உபயம்) பயணித்து கூலு போனால், அந்த செளக்கிதார், நல்ல மப்பு. 'நீ சமைத்துப்போடு' என்று ஆணையிட்டார்!  மறு நாள், சப்ட்ரெஷரி ட்ரைய்னிங்க். அந்த அதிகாரியே மாஜிஸ்ட்ரேட். செளக்கிதாரை வறுத்து எடுத்துவிட்டார். அங்கிருந்து 'நகர்' என்ற ஊருக்கு, மலைகள் தாண்டி நடைப்பயணம். ரோரிட்ஸ் துரையின் வண்ணப்படங்களை ரசித்தோம். மனாலிக்கு நடை 20 மைல், பனிசகதியில். கால் வீங்கிப்போச்சு. பூட்ஸைக்கிழித்து விடுதலை. மனாலி பூரா ஆப்பிள். மேஜர் பேனன் என்ற ஆப்பிள் விவசாயியை சந்தித்து ஃபோட்டோ..

2. பக்ரா நங்கலில், இரண்டு பாடங்கள். அங்கு கட்டில்கள் போதவில்லை. பிரன்ஸிபால் க்ரெகரி மத்தியாஸ், தரையில் படுக்கை விரித்தார்! நாங்கள் ஏகமனதுடன் மன்றாடியும், அவர் செவி சாய்க்கவில்லை. காலையில் சொன்னார்: இது உங்களுக்கு பாடம் என்று. அது பிற்காலம் என் தம்பி முரளிக்கு உதவியது, ஆச்சர்யமாக (சொல்லணுமா?). இரண்டாவது பாடம், கொஞ்சம் அடாவடி. பெண்ணேஸ்வரன் ரசிப்பார் வேண்டும் என்றால் தனிப்பெட்டி செய்தியாக அளிக்கலாம்.

3. பரிக்ஷை வந்தது. ஏப்ரலில் ரிஸல்ட்டும் வந்தது. நான் கோட்டு. டூர்லெ இருந்ததால், பிரின்ஸ்பாலிடமிருந்து கடித டோஸ். மறுபடியும் ரிஸல்ட் வந்த பிறகு, அவர் சுதாரித்துக்கொண்டார், முதலில் வந்தது ஏப்ரல் ஃபூல் ஜோக் என்று.!! எல்லாம் உள்கை. திவாகர் மன்னிப்பாராக. அவன் பெயர் சொல்வதிற்கில்லை. பலசாலி; அடிப்பான். அவனை டிஸ்மிஸ் பண்ணி விடவேண்டும் என்று மத்தயாஸ் துடித்தார். நாங்கள் எல்லாரும் காஷ்டெஸ்ட் மெளனம். ஷைலஜா நோக்குக. எங்களில் ஒரு பெண்மணியின் சிபாரிசினால் தான் அவன் தப்பினான். பெண்களுக்கு இருக்கும் பெரிய மனசு, பெரிய மனசு தான்.

இன்னும் எத்தனையோ! படித்தது குறைவு. மத்தியாஸ் அவர்களின் மேலாண்மையில் புரிந்து கொண்ட வாழ்வியல் அதிகம். 23 பசங்களும் 23 பிருகிருதிகள். எங்களை ஒருபாடாக, ஒருமைப்படுத்திய புண்யம் அவரைச்சேரும்.

இதற்கெல்லாம் நடுவில், எனக்கு எங்கிருந்தோ ஒரு அரிய நண்பன் ரொமேஷ் சந்திர பர்மார் கிடைத்தான். ஒரு காதல் பயணம் பிற்காலம் கல்யாணத்தில் முடிந்தது. நான் தான் சாக்ஷி. மற்றவை, ஒருதலைக்காதலாக 'புஸ்' என்று அணைந்தன. அக்காலம் நான் நம்பியகப்பொருள் படிக்கவில்லை. படித்திருந்தால், ஏற்புடைய வகையில், பாங்கனாக பணி புரிந்திருக்கலாம். நாங்கள் எல்லாரும் கடைசி வரை நண்பர்கள்.

*
Tthamizth Tthenee
1/23/10


'சட்புட்' என்று சில விஷயங்களை முடித்து விடுகிறேன்.

போகிற போக்கைப் பார்த்தால்  அப்படியெல்லாம்  உம்ம  இஷ்டத்துக்கு  முடிக்க முடியாது  என்று நினைக்கிறேன்

அனுபவ  சுரங்கத்தையே  வைத்துக்கொண்டு
சட்டென்று முடித்துவிடுகிறேன்  என்றால்
அது முடிகிற காரியமா

அனுபவம் பேசட்டும்
எங்களுக்கும் வாய்வழி அல்லது இணையவழி  கிட்டும்

நம்பியகப் பொருள் படிக்காமலே இப்படி என்றால் இன்னும் அதைப் படித்திருந்தால்

என்ன ஆகியிருக்கும்  நல்ல வேளை


அன்புடன்
தமிழ்த்தேனீ
*





 “ஸிம்லா ஸில்ஸில்லா!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -23


1. தர்மசாலாவில், நானும், பஞ்சுவும் ஒரு மாதம் டேரா. கூப்பிடு தூரத்தில் வானளாவிய பனிமூடிய ஹிமாலாய சிகரங்கள். பிற்காலம் அருள்மிகு. தலாய் லாமா தங்கும் மக்லாயிட்ககு அடிக்கடி போவோம்.. செளக்கிதார் -கம்- கான்ஸாமா உற்ற நண்பர். தான் செய்த கொலை, கொள்ளைகளைப்பற்றி, கதை கதையா சொல்வார். திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்போம். கிட்டத்தட்ட ஒரு நாள், கோழிக்குஞ்சு, ஆடு, மூட்டைகள், முடிச்சுகளுடன், டப்பா வண்டியில், மலையோரம் ரஜனிக்காந்த் மாதிரி (விஜய் டீ.வீ. உபயம்) பயணித்து கூலு போனால், அந்த செளக்கிதார், நல்ல மப்பு. 'நீ சமைத்துப்போடு' என்று ஆணையிட்டார்!  மறு நாள், சப்ட்ரெஷரி ட்ரைய்னிங்க். அந்த அதிகாரியே மாஜிஸ்ட்ரேட். செளக்கிதாரை வறுத்து எடுத்துவிட்டார். அங்கிருந்து 'நகர்' என்ற ஊருக்கு, மலைகள் தாண்டி நடைப்பயணம். ரோரிட்ஸ் துரையின் வண்ணப்படங்களை ரசித்தோம். மனாலிக்கு நடை 20 மைல், பனிசகதியில். கால் வீங்கிப்போச்சு. பூட்ஸைக்கிழித்து விடுதலை. மனாலி பூரா ஆப்பிள். மேஜர் பேனன் என்ற ஆப்பிள் விவசாயியை சந்தித்து ஃபோட்டோ.

என்ன, ஸிம்லா ஸில்ஸில்லாவா! வாலி பார்த்தால் இதைப் பல்லவியாக வைத்து அடுத்த பாட்டை எழுதி விடுவார்.

அது கிடக்கட்டும். இந்த மாதிரி மோர்ஸ் கோடெல்லாம் என் மண்டையில் ஏறாது. இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி, முதல் வரிக்கு சிரிக்கறதுக்குள்ளயே மூணு வரி போயிடுது. கொஞ்சம் விலாவாரியாகத்தான் எழுதுங்களேன் இன்னம்பூரான் ஐயா.

அன்புடன்
மதுரபாரதி 
*

ஹி! ஹி! சில்சில்லா என்ற ஹிந்தி சினிமா பார்த்த ஞ்யாபகம் வந்தது. வேறு ஒன்றும் இல்லை. அப்பப்போ கவிதை எழுதற பழக்கமா!

--

Tirumurti Vasudevan
அதானே!
இந்த மாதிரி தந்தி அடிப்பதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துக்கொள்கிறேன்.
திவாஜி
____________________________________________________________________________________
சித்திரத்துக்கு நன்றி:
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/1/11/Silsila.jpg/220px-Silsila.jpg

இன்னம்பூரான்
01 05 2013

No comments:

Post a Comment