Saturday, May 4, 2013

அன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ!




அன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ!
14 messages

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 9:22 PM


=அன்றொரு நாள்: மே 5:
நம்மூர் க்ரேடோ கார்போ!

வரலாறு சமயங்களில் வற்றியயாறு ஆகி விடுகிறது. காலதேவனின் கொடுமை. ஓஹோஹோ என்று கொடி கட்டி பறந்தவர்கள், சுவடு இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால், தற்செயலாக இன்றைய கதாநாயகியின் சஹோதரை சந்திக்க நேர்ந்தது. எங்கள் வாலிபப்பருவத்தில், யுவர்களுக்கு அவர் தான் கனவுக்கன்னி. அந்த நினைவு உந்த, அவருடன் அவருடைய சஹோதரியை பற்றி மேலும் அறிய விரும்பினேன். அவர் தனிமையாக வாழ்கிறார். யாரையும் பார்ப்பதில்லை என்பதற்கு மேல், அவர் அதிகமாகக் கூற விரும்பவில்லை. அவரது அழகு, உடல் நிலை மோசமானதால், குலைந்து விட்டது என்று சொல்பவர்களும் உண்டு, அவரை பார்க்காமலே! க்ரேடோ கார்போ என்ற அழகு பிம்பமும், மேல்நாட்டு திரை நடிகையும் ஆன க்ரேடோ கார்போ தன்னுடைய தனிமையை தீவிரமாகவே காப்பாற்றினார், அதெல்லாம் போகட்டும். சந்திரலேகா சினிமாவை சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர். ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ் ஸ்டாப்பின் பெயரே அது தான். என்னே ஜோடி! இந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் ஜில்ப்பாவும், ஜரிகை அங்கவஸ்திரமும், பெண்கவர் முகவிலாசமும், டீ.ஆர். ராஜகுமாரியின் அழகும், பொலிவும், வனப்பும், மனம்கவர் ஜொலிப்பும், சொல்லி மாளாது போங்கள். ஆனால் பாருங்கள். எம்.கே. தியாகராஜ பாகவதர் வறுமையில் உழன்று, அனாதையாக உயிர் துறந்தார். தமிழ் நாட்டில் வானளாவ புகழுடன் அன்ன நடை போட்ட பேரழகி டீ.ஆர். ராஜகுமாரி 1999 வரை 77 வயது வரை வாழ்ந்தவர் எனினும், அவரை பற்றிய பாமரகீர்த்தி பூஜ்யம்.பேசும் படம் மாதிகைஜனவரி 1951 ஒரு உசாத்துணை: ஆனால், கிடைத்தால் தானே. நாகராஜன் தான் தேடணும். விக்கிப்பீடீயாவில் 19 செப்டெம்பர் 2006 அன்று வரை இவரை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை என்றொரு குறிப்பு. 25 பெப்ரவரி 2012 அன்று வரை அதிகப்படியாக தெரிந்தது சொல்பம். கழுதை, குதிரைக்கெல்லாம் நூற்றுக்கணக்கான படங்கள். தமிழகக் கனவுக்கன்னிக்கு இரண்டே இரண்டு! இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.
 இன்னம்பூரான்
05 05 2012
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/32/ராஜகுமாரி.jpg/200px-ராஜகுமாரி.jpg
Inline image 1

உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/ி._ஆர்._ராஜகுமாரி

N. Kannan Mon, May 7, 2012 at 9:51 PM


2012/5/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>

> சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த
> மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர்.
> ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ்
> இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த
> தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.
>
ஹரிதாஸ் பார்த்து அசந்துவிட்டேன். இவருக்கு முன் இந்தக் காலத்துக்
கவர்ச்சிக் கன்னிகளெல்லாம் அம்பேல்!

நல்ல நினைவுகூறல் இன்னம்பூரான் சார் :-)

க.>

பிகு: நம்ம நல்லபாம்பு நல்ல படமாப்போடும் :-))


renuka rajasekaran Mon, May 7, 2012 at 9:59 PM


சிறிதேயானாலும் சிறப்பு செய்தீர்கள்
பெரிய கீர்த்திக்கு சிறிய மூர்த்தி போதும் என்றவாறு.

நடிகையரின் மூப்பும், அழகு உருமாற்றமடைவதும்
அவர்களுக்கு எத்தனைப் பெரிய அவஸ்தையோ தெரியவில்லை;
ஆனால் ரசிகர்கள், தாங்கள் மூப்பு அடைந்து, உருமாற்றம் பெற்றாலும் பரவாயில்லை, தங்களது கனவுக் கன்னிகள், என்றும் பதினாறாய் இருக்கவே ஆசைப் படுகிறார்கள்.

சமீபத்தில் எதையோ தேடப் போகும்போது, வைஜயந்தி மாலா, கே ஆர் விஜயா ஆகியோரின் புகைப் படங்களைப் பார்த்து, அவர்களா இப்படி என்று நானே ஒரு கணம் அதிர்ந்தேன்!

இது நிற்க:
அந்நாளைய சாதனையாளர்கள் யாவருமே இன்று வெளிச்சத்தில் இல்லை.
தாமரை மணாளன் என்றொரு எழுத்தாளர், அவரைப் பற்றிய தரவுகள் ஒன்றுமே இல்லை!!
மறக்கப்பட்டார் தாமரை மணாளன் என்று நான் முன்பு எழுதிய கட்டுரையில்:

"ஒரு எழுத்தாளனின் எழுத்து நன்றாயிருந்தால் மட்டும் போதாது; அதிர்ஷ்டத்தோடு, தூக்கிவிட ஆளும் தமுக்கடிக்க ஊடகங்களும் இருக்கவேண்டும் - அன்றேல் அவரைத் தமிழுலகம் சுத்தமாக மறந்துவிடும் என்பதனை இந்த ஒரு நபரை வைத்தே சொல்லிவிடலாம் போலிருக்கிறது." 

என்று குறிப்பிட்டிருந்தேன்.

வணக்கம் 


Nagarajan Vadivel Mon, May 7, 2012 at 10:08 PM


பிகு: நம்ம நல்லபாம்பு நல்ல படமாப்போடும் :-))http://www.youtube.com/watch?v=Lt3MRCvAtao

Nagarajan



Innamburan Innamburan Mon, May 7, 2012 at 10:23 PM

மிக்க நன்றி, ரேணுகா, தாமாரை மனாளன் கட்டுரையை அனுப்ப இயலுமா. புதுமை பித்தன் அவர்களின் அஞ்சலி தினம் வந்தது. அவருடைய கையெழுத்துப் பிரதிகள் காணாமல் போயின. எனக்கு கோபம் வரும். அதான் அது பற்றி
எழுதவில்லை.
இன்னம்பூரான்

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 10:29 PM
To: mintamil@googlegroups.com
பார்த்து மகிழ்ந்தேன், நாகராஜா. நன்றி.



renuka rajasekaran Mon, May 7, 2012 at 10:39 PM

http://ambarathooni.blogspot.com/2011/01/blog-post_22.html

நன்றி ஐயா


N. Kannan Tue, May 8, 2012 at 9:51 AM


2012/5/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
>
> பார்த்து மகிழ்ந்தேன், நாகராஜா. நன்றி.
> இ
>
அதில் flying kiss வேறு உண்டு! :-)
கொஞ்சம் ஸ்நேகா மாதிரி இருக்கிறார்!
நல்ல நடனம்!

க.>
[

Innamburan Innamburan Tue, May 8, 2012 at 11:31 AM
To: mintamil@googlegroups.com
எந்த ஸ்நேகா? அவர் இவர் மாதிரியா? இவர் அவர் மாதிரியா? எவர் உவர் மாதிரி?

[

Anna Kannan Tue, May 8, 2012 at 11:36 AM


பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் ஓர் அழகு. 

Tn Elango 
பேரைப் பாருங்களேன். ராஜகுமாரி. என்ன ஒரு கம்பீரம். என்ன ஒரு அழகு..இல்லையா?
[Quoted text hidden]
--
Follow my blogs on  http://tnelango.blogspot.com/

Swaminathan Venkat Tue, May 8, 2012 at 1:36 PM


இயற்பெயர் காமாட்சி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதெல்லாம் போகட்டும், என்ன அழகு, என்ன கம்பீரம் என்றெல்லாம் எல்லாரும் உருகுகிறீர்களே, எதைப் பார்த்து? எனக்கு இங்கு தரப்பட்டிருக்கும் இரண்டு விக்கி லிங்க் களிலும் ஒன்றும் இல்லை.வெற்றிடம் தான் கிடைக்கிறது. உங்களுக்கெல்லாம் தனியாக, ஸ்பெஷலாக தரிசனம் தருவது எப்படி? இதிலும் ஏதும் ஒதுக்கீடு/கோட்டா/சலுகை சமாசாரமா?


Geetha Sambasivam Tue, May 8, 2012 at 2:21 PM


நல்ல அழகு தான். எத்தனை காலமானாலும் மறக்காதபடிக்கு அந்தக் காலத்து நடிக, நடிகையர் இருந்தாப்போல இந்தக் காலத்திலே இருக்காங்களா?? தெரியலை; புரியலை.  நீர்க்குமிழி மாதிரித் தான் வராங்க, போறாங்க.


ஐயப்பன் கிருஷ்ணன் Tue, May 8, 2012 at 2:55 PM


http://varmah.blogspot.in/2009/04/7.html




திரைக்குவராதசங்கதி 7


தமிழ்த் திரை உலகை தனது வசியத்தால் கட்டி வைத்திருந்தவர் ரி.ஆர். ராஜகுகுமாரி, திரைப்படங்களில் நடிப்பவர்களைக் காண்பதற்கு இன்று ரசிகர்பட்டாளம் காத்துக் கிடப்பதைப் போன்றே அன்றைய ரசிர்களும் காத்திருந்தார்கள். தனது அபிமான நடிகையான எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்று வந்தார் ரி.ஆர். ராஜகுமாரி.
தியாக பூமி படத்தைப் பார்த்து பரவசமடைந்த ரி.ஆர். ராஜகுமாரி தனது தம்பியுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்று எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை காண தவமிருந்தார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் இயக்குநர் கே. சுப்பிரமணியமும் திறந்த காரில் செல்லும்போது தூரத்தில் நின்று பார்த்து ரசித்த ரி.ஆர்.ராஜகுமாரி நானும் ஒருநாள் நடிகையாவேன். என்னைப் பார்ப்பத
ற்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தவமிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவில்லை.
குமார குலோத்துங்கன் என்ற படத்தில் நடிப்பதற்கு ரி.ஆர். ராஜகுமாரி தெரிவு செய்யப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ராஜலட்சுமி என்பதே ரி.ஆர். ராஜகுமாரியின் நிஜப் பெயர். ராஜாயி என்றும் அழைப்பார்கள். டி.பி. ராஜலட்சுமி எனும் நடிகை பிரபலமாகயிருந்தபோது டி.வி. ராஜலட்சுமி என்ற பெயரில் இன்னொரு நடிகை பிரபலமாக இருந்தார். பெயர் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக டி.ஆர். ராஜலக்ஷ்மி எனும் பெயரை ராஜகுமாரி என்று மாற்றினார் தயாரிப்பாளர் ராதா ராவ்
ராஜலக்ஷ்மி எனும் பெயர் மறைந்து ரி.ஆர். ராஜகுமாரி எனும் பெயர் பிரபலமாகியது.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்து தனது நடிப்பாற்றலால் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியவர் ரி.ஆர். ராஜகுமாரி.
ரி.ஆர். ராஜகுமாரி முதன் முதலாக நடித்த குமார குலோத்துங்கன் வெளிவரவில்லை. ரி.ஆர். ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி வெளியாகி அவருக்கு பெரும் மதிப்பை தேடிக் கொடுத்தது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவும் கொத்தமங்கலம் சுப்புவும் ரி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்தார்கள். அதன் பின்னர் வெளியான சூரிய புத்திரி, மந்திரவாதி ஆகிய படங்களும் ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான வெற்றிப் படமான ஹரிதாஸ், சிவகவி ஆகியவற்றில் டி. ஆர். ராஜகுமாரி நடித்தார்.எம்.கே. தியாகராஜ பாகவதருடன் போட்டிபோட்டு நடித்த பி.யூ. சின்னப்பாவுடனும் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார். மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகியவற்றில் பி.யூ. சின்னப்பாவுடன் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பிலும் பாட்டிலும் புகழ்பெற்று விளங்கினார். பியூ. சின்னப்பா வசனம், கத்திச் சண்டை, சிலம்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பியூ. சின்னப்பா ஆகிய இரு பெரும் நடிகர்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி மக்கள் திலகம் எம். ஜி.ஆர்., நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடனும் நடித்துள்ளார்.
எம்.ஜி. ஆரின் "புதுமைப் பித்தன்' ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்த படங்களில் ஒன்று.
தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய படங்களில் ஒன்றான மனோகராவில் சிவாஜி கண்ணம்பா ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
நடிப்பு, நாட்டியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ரி.ஆர். ராஜகுமாரியை அகில இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தவர் ஜெமினி ஸ்ரூடியோ நிறுவுனர் எஸ்.எஸ்.வாசன் தமிழிலும் ஹிந்தியிலும் புரட்சியை ஏற்படுத்திய சந்திரலேகாவில் ரி.ஆர். ராஜகுமாரியின் நடிப்பை புகழ்ந்தவர்களே இல்லை.
தமிழ்த்திரை உலகின் பொற்காலம் என்று தான் நடித்த காலத்தை பெருமையுடன் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
அப்பொழுதெல்லாம் படப்பிடிப்புக்கு போய் வருவதென்பது கிட்டதட்ட பள்ளிக்கூடம் போய் வருவது போலத்தான். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் தான் வீடு திரும்புவேன். எல்லாக் கம்பனிகளிலும் ஒரே குடும்பத்தினர் போன்றுதான் பழகுவோம். டைரக்டர், நடிகர், வசனகர்த்தா, கமேராக்காரர்கள், லைட் போய் என்ற பாகுபாடே கிடையாது. சாப்பாட்டின் போது டைரக்டர் சுப்பிரமணியத்தின் அருகில் லைட்போய் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்தளவுக்கு சமத்துவம் வழங்கப்பட்ட பொற்காலம் அது என்று தனது திரைப்பட அனுபவத்தைக் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
ரமணி
மித்திரன் 03/04/2009


[

Friday, May 3, 2013

அன்றொரு நாள்: மே 4: எல்லாமே சங்கீதம் தான்!




அன்றொரு நாள்: மே 4: எல்லாமே சங்கீதம் தான்!
6 messages

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 10:59 AM


ன்றொரு நாள்: மே 4:
எல்லாமே சங்கீதம் தான்!
நேற்று, ஒரு நீண்டப்பயணத்தின் களைப்பை பொருட்படுத்தாமல், ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அந்த தேவகானம் என்னை (ஆங்கிலத்தில் ‘transported’ என்பார்கள்) எங்கெங்கோ, பற்பல சொர்க்கங்களின் தலைவாசல்களுக்கு, அழைத்துச் சென்று களைப்பை அறவே நீக்கி, உற்சாகத்தை அளித்தது. (Glinka: Rusian and Lyudmila Overture & Rachmaninoff: Piano Concerto No.3 in D minor, op.30 & Symphony No.5 in C minor,op.67). அவகாசம் கிடைத்தால், அது பற்றி எழுதலாம். கச்சேரி முழுதும் ஒரு பின்பாட்டு, மனதில்.

சர்வஜித் ௵ சித்திரை மீ பஹுல தசமியும், ஸோமவாரமும் ஆகிய சுப தினத்தில், (மே 4, 1767) கிருஷ்ண யஜுர்வேத கிளையை அத்யயனம் செய்யும் அந்தணர் குலத்தில், ஆபஸ்தம்ப ஸூத்ரம் சார்ந்த குடும்பத்தில், பாரத்வாஜ கோத்ர வம்சாவளியில், கடக லக்னம், பூர்வாஷாட நக்ஷத்ரமும் கூடிய சுப முஹூர்த்தத்தில், (பாருங்கோ! என்னே பொருத்தம்!) சீதம்மாவுக்கும், ராமபிரஹ்மம் அவர்களுக்கும், ஒரு ஆண் பிரஜை சுபஜெனனம்.
திருவாரூரில் பிறந்த குழந்தையா! தியாகராஜன் என்று நாமகரணம்.

250 வருஷங்கள் கடந்து போயின. தியாகய்யாவின் மங்கா புகழ் எங்கும் நிரம்பியிருந்தாலும், அநாவசிய கதைகள் கட்டப்பட்டன என்று வருத்தப்பட்டு, தியாகய்யா அவர்களின் உண்மையான கீர்த்தி பாட, அமெரிக்கா-வாழ் நண்பர் ஒருவரின் பதிவுகள் தான் உசாத்துணை. ஒரு சொல். சில வருடங்கள் முன்னால், திருவையாறு சென்று ஐயாவாளை சேவித்து விட்டு வந்தேன். அன்று தான் இந்தியாவில் ஒருங்கிணைத்த கர்நாடக சங்கீத ஆர்க்கெஸ்ட்ரா கேட்டு மகிழ்ந்தேன். நாற்பது வயலின். எல்லாம் சின்னப்பசங்க. ஆஹா!
இன்னம்பூரான்
04 05 2012
Inline image 1
Inline image 2

உசாத்துணை:

Nagarajan Vadivel Mon, May 7, 2012 at 11:16 AM


Glinka - Ruslan and Ludmila Overture


http://www.youtube.com/watch?v=nblgzR8nPnw

Nagaraja
n



Innamburan Innamburan Mon, May 7, 2012 at 11:18 AM

நான் இதை எதிர்பார்த்தேன். நன்றி.



Nagarajan Vadivel Mon, May 7, 2012 at 1:24 PM



The Essentials of Karnatic Music
BY HARI NAGABHUSHANAM
Karnatic music has two aspects, the transcendental and the conventional, the latter being conceived chiefly as a stepping stone to the former which is the true conception of music as delineated in the previous article. The best exponents of the Karnatic school have laid stress on these two aspects and have demonstrated them by their own example. Ramadas, Purandardas, Narayana Thirtha, Narasimhadas, Thyagaraja, Kshetraya, Dikshitar and a host of such ‘Bhakti Yogins’ furnish instances in themselves for my propositions.
SRI THYAGARAJA
Of all these, Sri Thyagaraja is certainly a divine incarnation come out to preach to us, consistently with Vedic authority, what music is in its essence and how it secures our eternal emancipation. Sri Shankaracharya expounded the Vedic lore especially the ‘Prasthana Traya’ thereof and re-instated the ‘Adwaitic’ system of philosophy in its former glorious, indubitable and invulnerable position. Sri Ramanujacharya interpreted the same so as to recuscitate the ‘Visishtadwaitic’ system of philosophy and Sri Madhwacharya construed it with a view to re-establish the ‘Dwaitic’ system of philosophy on a firm basis. Thus, of course, they became the founders of the three main religious sects into which the whole of the Aryan population in India is divided at present. As time passed, the true spirit of the systems became lost and superficial vestures have remained only to create and widen the barriers of dissension and strife. Sri Thyagaraja therefore came out to restore unanimity among the followers of the three great exponents of the Vedic culture and effect a regeneration of ‘Nada Brahmopasana’ inculcated by the ‘Shrutis’ and the ‘Smrithis’ etc. He conceives that ‘Nada Brahmopasana’ is the backbone of Vedic culture, that the three great schools of philosophy above referred to are agreed upon its form and procedure, and that ‘Samgeetham,’ its conventional counterpart, serves as a universal religion and a common language not only for the whole of the Aryan Race in India but for the whole creation, human and superhuman.
முழுக் கட்டுரை இணைப்பில்.
யாரோ ராகம் தாளம் பற்றிக் கேட்டிருந்தார்கள்.  அவருக்கும் பயனுடையதாக இருக்கும்
நாகராசன்
[Quoted text hidden]

The Essentials of Karnatic Music.doc
83K

Geetha Sambasivam 
எஸ்விபிசி தொலைக்காட்சியில் தியாகையரின் அஞ்சலிக் கச்சேரி சென்ற வாரம் நேரடியாக ஒளிபரப்பினார்கள்.  மிக மிக அருமையாகவும், அதே சமயம் எளிமையாகவும் இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Fri, May 11, 2012 at 5:47 AM


கொடுத்து வைத்தவர் இ சார் நீங்கள்.

இந்த சங்கீதம் எல்லாம் நேரிடையாகக் கேக்கணும்னு ரொம்ப நாள் கனவு.

அதையும் நம் ஊரில் இருந்து கொண்டு (லோக்கல்) தெலுங்கில் பிளந்து கட்டிய ஒரு மஹானைப் பற்றியும் இணைத்தவிதம் அருமை.

தன்னுடைய வீட்டுப் பத்திரத்தில் தமிழில் அழகாகக்  கையெழுத்துப் போட்ட இந்த மனிதர் எதற்கு மாய்ந்து மாய்ந்து தெலுங்கில் எழுதப் போச்சு என்ற என்னுடைய ஆச்சரியம் என்றும் தீராது.

அன்புடன்

பென்
-----------------------------------------------------------------------------------------

உன்மத்தம் : 3



உன்மத்தம் : 3

Innamburan S.Soundararajan Fri, May 3, 2013 at 1:50 PM

Home  »  Featuredஇலக்கியம்பத்திகள்  »  உன்மத்தம் : 3

உன்மத்தம் : 3

இன்னம்பூரான்
எதுவாயினும் காய் பழுக்கக் காலம் தழைக்க வேண்டும். தெய்வசங்கல்பம் அருளிச்செய்தல் கிட்ட வேண்டும். ஒரு மாதகாலமாக, எழுதி வைத்ததை, வாசகர்கள் விரும்பியும், கண்டும் காணாமலும் இருந்தேன். இன்று உத்தரவு பிறந்தது.
‘…அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ…’
~ சுத்தானந்த பாரதியார் பாடல்: டி.கே. பட்டம்மாள் பாடியது: கர்நாடக தேவகாந்தாரி: இணையதளம்.
சில நாட்கள் முன்னால் அசரீரியாக ஒரு வாக்கு உலவி வந்தது; எம்மை ஆட்கொண்டது. அது ஒரு நிகழ்வை பற்றியது. ‘ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்’ இணையதளத்தில் பதிவாகிறது.
‘… வடமொழியில் பல நூல்கள் இயற்றி ஒப்பற்ற சிவபக்தராக விளங்கியஅப்பைய்யதீக்ஷிதர் அவர்களது சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு ஸ்வாமிகள் 2-6-1930-ல் விஜயம் செய்தார்கள். இந்த ஊர் ஆரணிக்கு அருகில் மூன்று மைல் தூரத்திலுள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர்ச் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக் கொண்டு, 400 வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப்பற்றி பிரஸங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரது அவதார நாளை ஒவ்வொருவருடமும் கொண்டாட வேண்டமென்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள்…’
என்ற வாக்கியம் ‘ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பிறகு எழுதலாம். மஹான் அப்பய்ய தீக்ஷிதரவர்களின் உன்மத்தத்தை பற்றியும் அவர் அந்த நிலையில் ‘பொருளுணர்ந்ததை’ பற்றி எழுது.’ என்று பணித்தது தெய்வசங்கல்பம். அதை அடுத்து, உடனக்குடன்
‘… பொருளுணர்ந்து உனையே அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே…’
என்ற பாடல் வந்தது திவ்ய சமிக்ஞை. உடனே, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமண்யம் அவர்கள் தீக்ஷிதர்வாள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை என் சேகரத்தில் விழுந்து விழுந்து தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தது என்னமோ காஞ்சி மடத்து இணைய தளத்தில் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்). அது ஒரு மஹாபாக்யம் என்பதில் எனக்கு சம்சயம் இல்லை.
‘உன்மத்தத்தின்’ நிரல்நிறை ஒரு சுயம்பு. ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’ என்று துவங்கி, அங்குமிங்குமாக அலைந்து திரிந்து, ‘… உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம்…’ என்று கோடி காட்டிவிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளிடம் தஞ்சம் புகுந்தாலும், அப்பைய தீக்ஷிதரிடம் பசுவின் கன்றைப்போல திரும்பி வருகிறது, ஆக்ஞைகள் பல பிறப்பித்து. இனி ‘தெய்வத்தின் குரல்’:
‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’
“…த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு*.
அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்
ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி :*
என்கிறார். “பரமேஸ்வரா!உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது”என்கிறார்.
சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது!ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை;சிவாத் பரதரம் நாஸ்தி”என்றால் எப்படி ஸரியாகும்?அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!”இருக்கிறது”என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி”என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்”என்றதாகத் தோன்றுகிறது.
‘தரம்’என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.
சிவனுக்கு ‘மேலே’தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?
அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது:”இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘ பகவத் தர :’என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!
எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?
எப்படியா?”இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்”என்று ச்ருதியே சொல்கிறது.
‘அபிமர்சனம்’என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே?இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்;தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’என்று ஆக்கிவிடுவான்!
அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’:’ சிவாத் பரதரம் ‘தான்…”
‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு’ என்றார் ஆசார்யாள். தீக்ஷிதரவர்கள் ‘கனகபல ரஸம்’ அருந்தி உன்மத்தம் நாடினார் என்று அமரர் டோண்டு சார் எழுதி வைத்தார். அதை சுருக்கி எழுத எனக்கு மனம் வரவில்லை.
“…ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.”
நிரல் நிறை உன்மத்தம், பால் ப்ரண்டனை இழுத்துக்கொண்டது போல், நம்மை மறுபடியும் பகவான் ரமணமஹரிஷிகளிடம் இழுத்துச் செல்கிறது, பொருளுணர.
“…ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்…”
(முற்றும்?)
பி.கு. ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அப்பையதீக்ஷிதர் வம்சாவளி. நான் அமெரிக்காவில் சந்தித்த நண்பரொருவரும் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று தெரியவந்தது. மகிழ்வூட்டியது.
உசாத்துணை:
  1. http://www.kamakoti.org/tamil/3dk293.ht
  2. ‘Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkataramaiah, page 53 -54’ Cited in விக்கிப்பீடியா.
  3. dondu.blogspot.com/2009/07/30072009.html
சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/appayya-didkhitar.jpg
  • ரேவதிநரசிம்ஹன் wrote on 2 May, 2013, 10:30
    அந்தத் தும்பைப் பூவையும்,வில்வ தளத்தையும் எடுத்து அவருக்கு அர்ச்சிக்க வேண்டிய புத்தியையும்
    அவரே தரவேண்டும்.எத்தனை உன்மத்தம் பிடித்திருந்தால் ஊமத்த இலையையும் உட்கொண்டு புத்தி மாற்றம் ஆகியும் சிவபாதங்களைவிடாமல் பிடித்தவரின் மஹிமையை என்ன வென்பதி.
    அறியக் கொடுத்ததற்கு மிகவும் தன்யளானேன்.
    _______________________
    பிரசுரம் : http://www.vallamai.com/?p=34855: மே 1, 2013
    _____________________
    திரு. தேவராஜன் இவ்விழையை கீழ்க்கண்ட பின்னூட்டம் மூலம் இவ்விழையை பூர்த்தி செய்தார்.
    இன்னம்பூரான்
    03 05 2013
    ***

    நல்லதொரு தொகுப்பு
    ஆத்மார்ப்பண ஸ்துதி -
    http://sanskritdocuments.org/sites/snsastri/Atmarpanastuti-English.pdf

    Innamburan S.Soundararajan1 minute agoEdit

    க்ருதஞ்ஞனானேன், தேவ். உமது இணைப்பு எம் தாழ்மையான கட்டுரையை பூர்ணமாக்கவில்லை. சம்பூர்ணமாக்கியது. எல்லாம் தெய்வ சங்கல்பம் தான்.
    அடியேன்,இன்னம்பூரான்

“ச்சில்! ச்சில்! சில்ரினோ ஜவான்!!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -25




“ச்சில்! ச்சில்! சில்ரினோ ஜவான்!!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -25

Innamburan S.Soundararajan Fri, May 3, 2013 at 11:31 AM


25 01 2010

ச்சில்! ச்சில்! சில்ரினோ ஜவான்!!: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -25
Inline image 1

c + F தணிக்கை எல்லாம் காலாகாலத்திலே வரும்.  அது சரி. சென்னையிலே பனி பொழிகிறதாமே! [விகடன்] இவா ஸிம்லா/போர்ட்ஸ்மத்/சையின் லூயி பாக்கணும்.

*

'ட்ரீஈஈங்க்' 'ட்ரீஈஈங்க்'  டெலிஃபோன் அலற... கும்மிருட்டு. நடு நிசி. "ஷார்ட்டீ! (காரணப்பெயர்) கம் அட் ஒன்ஸ்" என்றார்பிரின்ஸிபால். எதற்கும் எம்து புல்வெளியை எட்டிப்பார்த்தேன்குதிரைவீரன் உலா வருகிறானாஎன்று. அவன் எங்கள் ரெஸிடென்ட் பேய்! கலோனியக்கட்டிடம் (colonial). ல்லாரும் சொல்வார்கள்யாரும் பார்த்ததில்லைநாங்களும்  ப்ருடா விடுவோம்.(வதந்திகளை குலைப்பது மஹாப்பாவம்.)  இன்று தரிசனமோஅப்றம் கரடியெல்லாம் வரும்,  அவர் வீடு பக்கத்தில் என்றாலும். எதற்கும் இருக்கட்டும் என்று மல்ஹோத்ராவை எழுப்பினால்அவன் தாடியை வலையில் சிறை செய்துடை கட்டி (அவன் எப்போதும் டிப் டாப்பிற்காலம் நாங்கள் காஷ்மீர் சுற்றுலா போன போது,அவன் விருந்தோம்பினான்,) மறுபடியும் 'ட்ரீஈஈங்க்' 'ட்ரீஈஈங்க்'! 'நான் கிளம்பியாச்சுஎன்று முரண்பட கூறி ஓடினால்அவருடைய சிறுமகன் மல்லாக்கப்படுத்துண்டுருக்கிறான். யான் சைகையால் விளிக்க,அவர் கண்னசைவில் பதில். பார்த்தால்பாட்டில் பாதி காலி!

எல்லாரும் கை பிசைந்து நிற்கஓடோடி ஃபில்டர் காஃபி போட்டேன்ஒரு செல்ல அறை கொடுத்துவாயில் ஊற்றினேன்மலங்க மலங்க விழித்துவிஸ்கி மாதிரி இருக்கேஎன்றான். ஒரு குட்டு குட்டி(அதானே சாக்கு.) ஆம்புலன்ஸ்ஸில்,  மல்ஹோத்ரா ரன்னிங்க் கம்மென்டரியுடன்ஆஸ்பத்திரிக்குப் போனால்என்ன கொடுத்தீர்கள் என்று வினவினார்கள். காஃபி என்றவுடன்சரிவீட்டுக்கு போங்கள்தூங்கட்டும் என்றார்கள். மறு நாள் இஞ்சி தின்னக்குரங்கு மாதிரி இளிக்கிறான். எனக்கு கித்தாப்பு (சன்டியர் மாதிரிநாலு ஸ்வெட்டர்க்கு மேல்,காலரை தூக்கிவிட்டிக்கொள்ளும் அளவுக்கு) அதிகரிக்கமற்றவர்கள், 'ஓ! பிரின்ஸ்பாலுக்கு வேண்டப்பட்டவனா?  வேட்டு வைக்கிறோம் பாருஎன்று கருவினார்கள்..

வேட்டொ! பூட்டோ! திருஷ்டி விழுந்து விட்டது. பேட்மிண்டன் விளையாடும்போது, (தலையல்ல,ஓய்!) எPன் தோள்பட்டை மூட்டு நழுவி விட்டது அதன் பினனணி அபாரம்பிறகு. ஸ்னோடன் ஆஸ்பத்திரிக்கு ஃபோன் போட்டால்ஆம்புலன்ஸ் அனுப்பினார்கள். ஸிம்லாவில் சைரன் வேண்டாம். ரோட்டில் இந்த வண்டி மட்டும் அலெளட். தலைமை டாக்டர் கே.என்.உடுப்பா FRCS (பிற்காலம்ஆயுர்வேதம்,யோகா என்று பெரும் புகழ் படைத்தவர்) வரும் வரை காக்க வைத்துவிட்டார்கள். வலி துடித்துப்போய்விட்டேன். அவர் வந்தால் ஒரு டோஸ் கொடுக்கவேண்டும் என்று நப்பாசை. இரண்டு மணி நேரம் கழித்து வந்த அவரின் சாந்தமான முகத்தைப்பார்த்து வலி ஓடிப்போய்விட்டது. அகத்தின் அழகு முகத்திலே. பிறகு மயக்கம்;உளரல். பசங்க வேறு என்ன ரகஸ்யம் வரப்போகிறது என்று வல்லூறுகள் போல காத்திருந்தனர். ஒரு பாடா வந்து சேர்ந்தேன். இதுக்கு நடுவுலே கவலை என்ன என்றால், 'ஏற்கனவே,வஸந்தாவின் டெய்லிக்கடிதங்களைப்படிக்க ஆவல் கொண்டோர்பிரித்துப்படிப்பதை தவிர்ப்பது எப்டி?' என்று. அது பற்றிமயங்கிய நிலையில் கொட்டிப்டேன் போல இருக்கிறது. அடுத்த தடவைடேபிள் டென்னிஸிலும்மூட்டு நழுவடாக்டர் உடுப்பாகனிவே உருவாகக் கேட்டார், 'தினம் லெட்டர் வரதாப்பா?' என்று.

விலாவாரியா எழுதலாம். ஆனால், 23 பேர். ரயில்வே அக்கவுன்ட்ஸ் பசங்க 11, இதில் பெண்பாலார்பிரின்ஸிபால்வாஸ்,  (ஆராவ) மதன் என்ற அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீஸர், (சுத்துப்படை என்று நான்கு கதை மாந்தர்கள்.). அனவரதமும், 34 பிருகிருதிகள் மற்ற 33பிருகிருதிகளின் காலை வாருவது பற்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து இருப்பது,  கூட்டுச்சதிகள்பீட்டல் பிரிகேட் (Betel brigade)என்ற பீடா/பான் ஆர்வலர்கள்வடமொழிப்பித்துக்கள்பார்ப்பனச்சிட்டர்கள்தலைகீழ் கணக்கர்கள்சண்டைக்கோழிகள் என்று பல பல இனங்கள். இந்த ஸிம்லா சகாப்தம்ராமாயணம் தோற்றது போங்கள்.

இன்னம்பூரான்
----------------------
இன்னம்பூரான்
03 05 2013

Thursday, May 2, 2013

இன்னம்பூரான் பக்கம் 16


இன்னம்பூரான் பக்கம் 16

“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
‘சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும்  நமக்கு உறுதுணை என்ற பிந்திய தொடரின் பீடிகை, வேறு  ஒரு இடத்தில் சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாயிற்று. அவற்றின் சாராம்சம்:
பொது அங்கீகாரம் (conformity) ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. நிரந்தரம் அடைந்த பொது அங்கீகாரம் அதற்கு முரண். சிந்தனைக்கு அதை மாற்றியமைக்கும் திறன் உண்டு. அதனால் தான், காலத்துக்கேற்ற பொருத்தம்/புதிய கோணங்கள்/காரண காரியங்களை கண்டு கொள்வது ஆகிய கட்டாயங்கள் ஏற்படும்போது,  பொது அங்கீகாரம் சிந்தனையை குலைக்கக் கட்டைப் பஞ்சாயத்து செய்கிறது. மூடநம்பிக்கைகள் அதனுடைய தூண்களாக அமைந்து விடுகின்றன.
விவேகமற்ற அரசியல் மேலாண்மையை கட்டுக்குள் வைக்க சமுதாயத்துக்குத் துணிவு இல்லாததால், தத்துவ விசாரணையின் பிதாமகன் என கருதப்படும் சாக்ரடீஸ் அரசாணைக்குட்பட்டு நச்சு அருந்தி தன்னை மாய்த்துக்கொண்டார். ‘காசே தான் கடவுளடா!’ என்ற பழம்பெருச்சாளிகளை நிந்தித்த ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார். ‘‘சாந்தி நிலவவேண்டும்’ என்ற மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பொது அங்கீகாரத்தின் மூளைச்சலவையின் ஆதிக்கம் வலிமை மிகுந்தது. அதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள, நாம் ஒரு குகையில் நுழைவோமாக.
நீண்டதொரு இருட்டுப்பாதையில் ஓட்டமும் நடையுமாக நடை நடந்து ஒரு கும்மிருட்டு குகைக்குள் செல்கிறீர். அதனுடைய முட்டுச்சுவர் பெரிது; அகலமானது; நீண்டது. மானிடர்கள் பலர், அதில் விலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கழுத்துக்குக்கூட அசையமுடியாத தளையிறுக்க, அவதிபடுகிறார்கள். எதிரில் உள்ள மற்றொரு சுவர் ஒன்று தான் காட்சி. ஒருவரை ஒருவர் பார்க்ககூட முடியாது.  வலியும் வழக்கமாகி போய்விட்டது. விடுதலையில்லை என்பதும் உறுதியாகி விட்டது. அவர்களுக்கு இது பழக்கமாகி விட்டது. ஆயுசு பரியந்தம் இதே நிலை, ஜனித்ததிலிருந்து. இயல்பு ஆகிவிடும், காலாகாலத்தில். இந்த முட்டுச்சுவருக்கு பின்னால் ஒரே பிரகாசம். கொழுந்து விட்டு எரிகிறது தீ. அங்கிருந்து சற்றே தொலைவில் சூடில்லா பிரதேசம். அங்கு மக்கள் வந்து போய் கொண்டு இருக்கிறார்கள்; தலையில் சுமை; வாயெல்லாம் பல்;அப்படி பேச்சு. இவர்களில் நிழல்களை கைதிகள் பார்க்கிறார்கள். பேச்சொலியின் எதிரொலியை கேட்கிறார்கள். வாழ்நாள் முழுதும் இதே கதி என்பதால், அவர்கள் மனதில் இந்த நிழல்களும் எதிரொலியும் உண்மை நிகழ்வுகளாக பதிந்து விடுகின்றன. என்ன தான் எடுத்துச்சொன்னாலும் அது விபரீதம் தான். சுருங்கச்சொல்லின், இந்த நிழலுலகம் அவர்களுக்கு நிதரிசன உலகு. மற்றதெல்லாம் மாயை. எப்பாடுப் பட்டோ, நீவிர் ஒரு கைதியை விடுவித்து, பிரகாசமான பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறீர்கள். ஒளி அவன் கண்ணை குத்துகிறது. முடங்கிக்கிடந்த கைகால் அசைய மறுக்கிறது. ஒன்றும் புரியவில்லை. காலம் செல்ல, செல்ல, அவனுக்கு துணிவு பிறக்கிறது, துளிராக. வெளியுலகம் அவனை ஈர்க்கிறது. நிழலை மறந்து அசலை அனுபவிக்கிறான். எதிரொலியின் விகாரம் மறைந்த இசைஒலி அவனுக்கு அமுதமாகப்படுகிறது. உம்முடன், அடித்துப்பிடித்துக்கொண்டு சகபாடிகளை உய்விக்க ஓடோடி வருகிறான், இருட்டுக்குகைக்குள். அவர்களோ இவனுடைய தீர்க்க தரிசனத்தை எள்ளி நகைத்து, அவனை நாடுகடத்தவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வருகிறார்கள்.
(தொடரும்)
உசாத்துணை: The Myth of the Cave.
சித்திரத்துக்கு நன்றி
http://qiq.ru/media/npict/1008/original/amazing_animals_wallpapers_full_hd_1080p_709421.jpegMore Posts
பிரசுரம் http://www.atheetham.com/?p=4742