Showing posts with label உன்மத்தம். Show all posts
Showing posts with label உன்மத்தம். Show all posts

Friday, May 3, 2013

உன்மத்தம் : 3



உன்மத்தம் : 3

Innamburan S.Soundararajan Fri, May 3, 2013 at 1:50 PM

Home  »  Featuredஇலக்கியம்பத்திகள்  »  உன்மத்தம் : 3

உன்மத்தம் : 3

இன்னம்பூரான்
எதுவாயினும் காய் பழுக்கக் காலம் தழைக்க வேண்டும். தெய்வசங்கல்பம் அருளிச்செய்தல் கிட்ட வேண்டும். ஒரு மாதகாலமாக, எழுதி வைத்ததை, வாசகர்கள் விரும்பியும், கண்டும் காணாமலும் இருந்தேன். இன்று உத்தரவு பிறந்தது.
‘…அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ…’
~ சுத்தானந்த பாரதியார் பாடல்: டி.கே. பட்டம்மாள் பாடியது: கர்நாடக தேவகாந்தாரி: இணையதளம்.
சில நாட்கள் முன்னால் அசரீரியாக ஒரு வாக்கு உலவி வந்தது; எம்மை ஆட்கொண்டது. அது ஒரு நிகழ்வை பற்றியது. ‘ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்’ இணையதளத்தில் பதிவாகிறது.
‘… வடமொழியில் பல நூல்கள் இயற்றி ஒப்பற்ற சிவபக்தராக விளங்கியஅப்பைய்யதீக்ஷிதர் அவர்களது சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு ஸ்வாமிகள் 2-6-1930-ல் விஜயம் செய்தார்கள். இந்த ஊர் ஆரணிக்கு அருகில் மூன்று மைல் தூரத்திலுள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர்ச் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக் கொண்டு, 400 வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப்பற்றி பிரஸங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரது அவதார நாளை ஒவ்வொருவருடமும் கொண்டாட வேண்டமென்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள்…’
என்ற வாக்கியம் ‘ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பிறகு எழுதலாம். மஹான் அப்பய்ய தீக்ஷிதரவர்களின் உன்மத்தத்தை பற்றியும் அவர் அந்த நிலையில் ‘பொருளுணர்ந்ததை’ பற்றி எழுது.’ என்று பணித்தது தெய்வசங்கல்பம். அதை அடுத்து, உடனக்குடன்
‘… பொருளுணர்ந்து உனையே அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே…’
என்ற பாடல் வந்தது திவ்ய சமிக்ஞை. உடனே, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமண்யம் அவர்கள் தீக்ஷிதர்வாள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை என் சேகரத்தில் விழுந்து விழுந்து தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தது என்னமோ காஞ்சி மடத்து இணைய தளத்தில் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்). அது ஒரு மஹாபாக்யம் என்பதில் எனக்கு சம்சயம் இல்லை.
‘உன்மத்தத்தின்’ நிரல்நிறை ஒரு சுயம்பு. ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’ என்று துவங்கி, அங்குமிங்குமாக அலைந்து திரிந்து, ‘… உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம்…’ என்று கோடி காட்டிவிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளிடம் தஞ்சம் புகுந்தாலும், அப்பைய தீக்ஷிதரிடம் பசுவின் கன்றைப்போல திரும்பி வருகிறது, ஆக்ஞைகள் பல பிறப்பித்து. இனி ‘தெய்வத்தின் குரல்’:
‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’
“…த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு*.
அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்
ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி :*
என்கிறார். “பரமேஸ்வரா!உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது”என்கிறார்.
சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது!ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை;சிவாத் பரதரம் நாஸ்தி”என்றால் எப்படி ஸரியாகும்?அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!”இருக்கிறது”என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி”என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்”என்றதாகத் தோன்றுகிறது.
‘தரம்’என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.
சிவனுக்கு ‘மேலே’தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?
அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது:”இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘ பகவத் தர :’என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!
எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?
எப்படியா?”இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்”என்று ச்ருதியே சொல்கிறது.
‘அபிமர்சனம்’என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே?இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்;தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’என்று ஆக்கிவிடுவான்!
அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’:’ சிவாத் பரதரம் ‘தான்…”
‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு’ என்றார் ஆசார்யாள். தீக்ஷிதரவர்கள் ‘கனகபல ரஸம்’ அருந்தி உன்மத்தம் நாடினார் என்று அமரர் டோண்டு சார் எழுதி வைத்தார். அதை சுருக்கி எழுத எனக்கு மனம் வரவில்லை.
“…ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.”
நிரல் நிறை உன்மத்தம், பால் ப்ரண்டனை இழுத்துக்கொண்டது போல், நம்மை மறுபடியும் பகவான் ரமணமஹரிஷிகளிடம் இழுத்துச் செல்கிறது, பொருளுணர.
“…ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்…”
(முற்றும்?)
பி.கு. ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அப்பையதீக்ஷிதர் வம்சாவளி. நான் அமெரிக்காவில் சந்தித்த நண்பரொருவரும் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று தெரியவந்தது. மகிழ்வூட்டியது.
உசாத்துணை:
  1. http://www.kamakoti.org/tamil/3dk293.ht
  2. ‘Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkataramaiah, page 53 -54’ Cited in விக்கிப்பீடியா.
  3. dondu.blogspot.com/2009/07/30072009.html
சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/appayya-didkhitar.jpg
  • ரேவதிநரசிம்ஹன் wrote on 2 May, 2013, 10:30
    அந்தத் தும்பைப் பூவையும்,வில்வ தளத்தையும் எடுத்து அவருக்கு அர்ச்சிக்க வேண்டிய புத்தியையும்
    அவரே தரவேண்டும்.எத்தனை உன்மத்தம் பிடித்திருந்தால் ஊமத்த இலையையும் உட்கொண்டு புத்தி மாற்றம் ஆகியும் சிவபாதங்களைவிடாமல் பிடித்தவரின் மஹிமையை என்ன வென்பதி.
    அறியக் கொடுத்ததற்கு மிகவும் தன்யளானேன்.
    _______________________
    பிரசுரம் : http://www.vallamai.com/?p=34855: மே 1, 2013
    _____________________
    திரு. தேவராஜன் இவ்விழையை கீழ்க்கண்ட பின்னூட்டம் மூலம் இவ்விழையை பூர்த்தி செய்தார்.
    இன்னம்பூரான்
    03 05 2013
    ***

    நல்லதொரு தொகுப்பு
    ஆத்மார்ப்பண ஸ்துதி -
    http://sanskritdocuments.org/sites/snsastri/Atmarpanastuti-English.pdf

    Innamburan S.Soundararajan1 minute agoEdit

    க்ருதஞ்ஞனானேன், தேவ். உமது இணைப்பு எம் தாழ்மையான கட்டுரையை பூர்ணமாக்கவில்லை. சம்பூர்ணமாக்கியது. எல்லாம் தெய்வ சங்கல்பம் தான்.
    அடியேன்,இன்னம்பூரான்

Tuesday, April 30, 2013

உன்மத்தம்: 2


உன்மத்தம்: 2
9 messages




Thu, Apr 4, 2013 at 6:33 PM
இன்னம்பூரான்

பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.
எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.
உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:
உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…
`அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.
வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.
“…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.
பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.
(தொடரும்)
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHPn89-5GeCPVQe5tlXSHQIYSk9RRVl7cm-G9JRKUxwgo4pfMkvASpgCwY_1R2Cb7vjMfG4ovwUnMwa2HqVOjKILG7FH_ThSJKCUmktbnqiAYqJFCwTpw4FBTGmhzgK31tQLV9dupMtjo/s1600/EMPERUMAL+SESHAN.jpg

பிரசுரத்துக்கு நன்றி: http://www.vallamai.com/?p=34137
மேகலா இராமமூர்த்தி wrote on 2 April, 2013, 2:05
சேஷாத்திரி சுவாமிகளின் வரலாறு அற்புதம். அந்த மகான் குறித்த தகவல்களை அழகாகத் தொகுத்தளித்துள்ள இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். தொடர்ந்து இதுபோன்ற அரிய தகவல்களை எங்களுக்கு அறியத் தாருங்கள் ஐயா.
..மேகலா
பார்வதி இராமச்சந்திரன். wrote on 2 April, 2013, 6:42ஆன்மீகத்தின் உயர்நிலையைப் பற்றிய அருமையான தொடரைத் தந்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். சேஷாத்ரி சுவாமிகளின் பெற்றோருக்கு வெகு காலம் வரை குழந்தையில்லாமல் இருந்து, அம்பிகையின் திருமுன் வேண்டிய போது,’நவநீதம் கொடு, ஞானக் கலை உதிக்கும்’ என்று அம்பிகை திருவாய் மலர்ந்தருள, அவ்வாறே நவநீதத்தை(வெண்ணை, கல்கண்டு) அம்பிகைக்கு நிவேதனம் செய்து அருந்தினர் சுவாமிகளின் பெற்றோர். அப்படி அம்பிகையின் அருட்பிரசாதமாகவே பிறந்தார் சுவாமிகள் என்று சுவாமிகளின் வரலாறு சொல்கிறது. ஞானச்செல்வர்களைப் பற்றி அறியத் தந்து கொண்டிருக்கும் திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

sk natarajan Fri, Apr 5, 2013 at 1:48 AM

பயன் தரும் பகிர்விற்கு நன்றி ஐயா
சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி ஏற்கெனவே அறிந்துள்ளேன்
மீண்டும் அவரைக் குறித்து அறிகையில் ஆனந்தம் அடைந்தேன் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

C.R. Selvakumar Fri, Apr 5, 2013 at 2:14 AM

இப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

அருள்மிகு சேசாத்திரி சுவாமிகள் பற்றி முதலில் ஆனந்தவிகடனில் 
படித்தேன், பிறகு இரமண பகவான் அவர்களைப் பற்றிப் படித்த பொழுதெல்லாம்
இவரைப் பற்றியும் சிறிது படித்திருக்கின்றேன்.  நீங்கள் குறிப்பிடும் `அபிநவ சுகபிரும்மம்` 
எங்கு கிடைக்கும்? எத்தனையோ பெரியவர்கள்
நம்மிடையே வாழ்ந்து நாம் அறிந்தும் அறியாமலும் அருள் பொழிந்துவிட்டுப்
போயிருக்கின்றார்கள்!

அன்புடன்
செல்வா

Geetha Sambasivam Fri, Apr 5, 2013 at 7:52 AM

பரணீதரனின் "அருணாசல மஹிமையில் சேஷாத்ரி ஸ்வாமிகளைக் குறித்துப் படித்துள்ளேன்.  சென்னைக்கருகே மானம்பாக்கத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகளின் சீடர் ஒருவர் கட்டிய பதினெட்டு சித்தர்களின் கோயிலும் உள்ளது.  அங்கும் சென்று வந்தோம்.  அருணாசலத்திலும் பார்த்திருக்கிறோம்.  பகிர்வுக்கு நன்றி. 

Tthamizth Tthenee Fri, Apr 5, 2013 at 1:08 PM

சென்னைக்கருகே மானம்பாக்கத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகளின் சீடர் ஒருவர் கட்டிய பதினெட்டு சித்தர்களின் கோயிலும் உள்ளது.

தாம்பரம்
 ​ சென்று அங்கிருந்து சேலையூர் வழியாகச் சென்றால் வலது பக்கம்  மாடம்பாக்கம் என்னும் ஊர் உள்ளது 

அதில்தான் இந்த சித்தர்  கோயில் உள்ளது
அன்புடன்
தமிழ்த்தேனீ​

Innamburan S.Soundararajan Sat, Apr 6, 2013 at 7:52 AM

அன்பின் செல்வகுமார்,
நன்றி பல. இதை மன்றத்தில் பதிவு செய்ய முதலில் தயங்கினேன், பொருத்தமில்லாததாக இருந்து விடுமோ என்று. உங்கள் கருத்து இசைவாக அமைந்தது ஊக்கமளிக்கிறது. `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. மூலம் கிடைக்கவில்லை, இங்கு. உசாத்துணை நண்பரிடம் கேட்கலாம். சாஸ்திரிகள், சுவாமிகளின் அந்திமகாலத்தில் கூட இருந்த வெகு கால சிஷ்யர் என்று தெரிகிறது. மின்னாக்கம் பண்ண வேண்டிய நூல். தேடியதில் மற்றும் பல உசாத்துணை கிடைத்தன. அவற்றை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
வணக்கம்,
இன்னம்பூரான்


C.R. Selvakumar Sun, Apr 7, 2013 at 12:11 AM

அன்புள்ள இன்னம்பூரான் ஐயா,

நீங்கள் பகிர்ந்திருந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா!

அருள்கூர்ந்து எந்தத்தயக்கமும் இல்லாமல்
தமிழ் மன்றத்தில் நற்கருத்துகளைப் பகிருங்கள்.
தமிழ் மன்றத்தினர்  மகிழ்ச்சியோடும் நன்றியோடும்
உள்வாங்கிப் பயன்பெறுவர். உங்கள் பகிர்வுகளுக்கு
என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் மன்றத்தில் கூடிய மட்டிலும் தமிழிலே,
அதுவும் நல்ல தமிழிலே, அறிவான, 
கலைநயம் மிக்க, நல்லுணர்வு
மிக்கக் கருத்துகள் எதுவாக இருந்தாலும் (அவை
தமிழ், தமிழரைப்பற்றி,
தமிழ்நிலங்களைப் பற்றி, தமிழர் பண்பாடுகள் பற்றி 
என்று மட்டும் இன்றி எதுவாக
இருந்தாலும்) அவற்றைப் பகிர்ந்து கருத்துரையாடிப்
பயன்கொள்வதே நம் நோக்கம். எனவே தயக்கம் எதுவும்
வேண்டாம் ஐயா!

அன்புடன்
செல்வா


Monday, April 29, 2013

உன்மத்தம் :: 1


உன்மத்தம் :: 1


Sat, Mar 16, 2013 at 8:20 AM


உன்மத்தம் :: 1
  1. Thursday, March 14, 2013, 5:00
  1. 1 comment

இன்னம்பூரான்

‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’
‘பித்தா’ என்ற இந்த தெய்வம் தந்த ‘முதல்நற்றமிழ்’ சொல் என்னை எழுபது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் வித்யாசாலையில் காலை பிரார்த்தனை இவ்வாறு தொடங்கும்; உரக்கக் கோரஸாக, பல சுவரபேதங்களில் பாடுவோம்; பொருள் அறிந்ததில்லை. பாலு சாரிடம் பெருமானை ‘பித்தன்’ என்று விளிப்பது முறையோ என்று கேட்டேன். சொன்னது அப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தது; மறந்து விட்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கு சென்றபோது, தலைமை ஆசாரியர் ‘பழைய மாணவரா’ என்று கனிவுடன் வினவி, பிரார்த்தனைக்கு அழைத்துச்சென்றார். அதே கோரஸ். நானும் கலந்து கொண்டேன். ஏதோ ஒரு ஈரப்பசை கண்களில். அது நிற்க.
பெருமான் தனக்கு இட்டுக்கொண்ட விருது, இது. ஆலாலசுந்தரத்துக்கு மந்திரமாக உபதேசிக்கப்பட்டது. சுந்தரர் ஆட்கொள்ளப்பட்டது, திருவெண்ணைநல்லூர் பெருமானால். ‘தாட்பூட் தஞ்சாவூர்’ என்றெல்லாம் அதட்டிவிட்டு, சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி விட்ட மறையோன், திருவெண்ணைநல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார். பின்னர் தன் கோலம் காட்டி, தரிசனம். சொற்றமிழால் பாடுக என்று ஆணை. திகைத்து நின்ற மாஜி மாப்பிள்ளையிடம் பெருமான் ‘மணப்பந்தலில் என்னை பித்தனோ மறையோன்..’ என்றல்லவா நிந்தித்தாய். ‘பித்தா’ என்றே தொடங்கு என்றார். பதிகம், கோரஸ், மீள் கோரஸ், இன்றைய ‘உன்மத்தம்’ தொடர்… அகரவரிசை அன்பர்கள் முதல் திருமுறையிலேயே திருஞானசம்பந்தர் எருக்கத்தம் புலியூரில்,
‘விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ஆண்அலி ஆகும் பித்தா பிறை சூடி…’
என்று தோத்திரம் செய்ததை முன் வைப்பர்; எப்படியும் எல்லாரையையும் பைத்தியமாக அடிக்கும் பித்தத்தின் தலைக்காவேரி இறையருள் தான் என்பதையும் பார்ப்போம்.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. (6.25.7)
காதல் கொள்வதே பித்துப்பிடித்தாற்போலத்தான். பேரும், உருவும், ஊரும் அவளை மயக்கி, பெற்றோரை மறக்கச்செய்து, மரபு, வாழ்நெறி, அன்றாட நடவடிக்கை, தன்னிச்சை எல்லாம், தலைவனை நினைத்த மாத்திரம் காணாமல் போய்விடுகின்றன. ‘தேவாரம்’ என்ற இணையதளத்தில் கூறியப்படி,
‘… இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது… இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க… சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்…’
பிச்சி ஆனாளே, தலைமகள். அது காதலா? மோகமா? அல்லது பக்தியின் உன்மத்தமா? என்று நீங்களே தன்னுள்ளத்தைக் கேட்டு அறிந்து கொள்ளவும். பித்தனின்’ உன்மத்தத்தின் உத்தமத்தை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள் அரிது. உன்மத்தங்கள் தான் எத்தனை வகை? எத்தனை வண்ணம்? அது மனோபாவமா அல்லது மோனமா அல்லது வெறும் மோகமா? வெறும் மோகமென்று ஒன்று உண்டா என்ன? மஹாகவி பாரதியார்’…கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!…’ என்று மன நிறைவுடன் பாடியதில் என்ன குற்றம் கண்டீர், ஐயா? அல்லது கோதா பிராட்டியார் ஶ்ரீரங்கநாதனை மோஹித்ததில் உன்மத்தம் தலைக்கேறவில்லையா? தலபுராணம் என்று அதை ஒதுக்கவா பார்க்கிறீர்கள்? நம் ஶ்ரீரங்கபெளராணிகையை கேட்டால், அவர் செப்புவார்,
 ‘…ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். “என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?”
“சுவாமி, தங்கள் கருணையே கருணை!”
ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.
இப்படியும் ஒரு பிச்சியா!
தற்கால இலக்கியத்தில் தேடுவீர்களானால், இதை படியும்: ‘உமக்கு சிவகாமியின் சபதம் தெரியுமோ? ‘உன்மத்தத்தை’ ‘சித்தபிரமை’ என்கிறார், கல்கி. தன்னுடைய ‘சித்த பிரமை’ தெளிந்த பின், அதை ‘பக்தியின் முதிர்ச்சி’ என்கிறார், ஆயனர் வாயிலாக. கேளும்.
*
‘… ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!” என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்… கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள். சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்” என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று’.
*
மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக, வள்ளலார்,
‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
என்றார். ‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது.
அவன் தான் பிறை சூடிய பித்தன். தோடுடைய செவியன். ஆடிய பாதம். திருவாரூரில் அஜபா நடனம்; திருக்குவளையில் பிரம்மத் தாண்டவம்; நாகையில் பாராவாரதரங்க நடனம்; திருமறைக்காட்டில் ஹம்ச நடனம்; திருவாய்மூரில் கமல நடனம்; திருக்காறாயில் குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடிய காளி தாண்டவம்;
திருநள்ளாற்றில் உன்மத்த நடனம்.
உன்மத்தம் தலைக்கேற, ஏற, தொடர் நீளும் போல் இருக்கிறது. உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை மற்றும் பதித்து, கட்டுரை நீண்டுவிட்டதற்கு சால்ஜாப்புக்கூறி, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.
 ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 -(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
(தொடரும்)
pastedGraphic.pdf

உசாத்துணை:

பிரசுரம் & நன்றி: http://www.vallamai.com/?p=33338
காப்புரிமை: இன்னம்பூரான்


Geetha Sambasivam Sat, Mar 16, 2013 at 12:03 PM

இது ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டம் கொடுத்திருந்த நினைவு.   குறிப்பாப் பிச்சியைக் குறித்துச் சொன்ன நினைவு.

திவாஜி Sat, Mar 16, 2013 at 12:26 PM





2013/3/16 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
இது ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டம் கொடுத்திருந்த நினைவு.   குறிப்பாப் பிச்சியைக் குறித்துச் சொன்ன நினைவு.
​deja vu!​

Swarna Lakshmi Sat, Mar 16, 2013 at 5:25 PM



அருமையான தொடர் இ சார், தொடருங்கள்!! 



Rathinam Chandramohan Sat, Mar 16, 2013 at 5:34 PM


Thiruchitrambalam.

Miga Arumai Ayya. Excellent
Chandramohan


shylaja Sun, Mar 17, 2013 at 4:56 AM

பாரதியின்  சின்னஞ்சிறு கிளியே  பாடலில் உன்மத்தம்  கண்டிருக்கிறேன் ..உங்கள்  இந்த இடுகை  அருமை  இ சார்..்  விரைவில் இன்னும் விவரமாக எழுத வருகிறேன்


ஷைலஜா


Tthamizth Tthenee Sun, Mar 17, 2013 at 9:27 AM



உம்மைப் படித்தாலே  உன்மத்தம் தலைக்கேறும் போல் இருக்கிறது
ரசிகப் பெருமக்கள்  அதிகமாகிக் கொண்டே போவதன் மர்மம்  இதுதானோ?
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Sun, Mar 17, 2013 at 11:33 AM


2013/3/17 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
உம்மைப் படித்தாலே  உன்மத்தம் தலைக்கேறும் போல் இருக்கிறது
~கூடு விட்டு கூடு பாயும் உன்மத்தம் என்றாலும், இங்கும் தேங்கும்; அங்கும் தங்கும். 

ரசிகப் பெருமக்கள்  அதிகமாகிக் கொண்டே போவதன் மர்மம்  இதுதானோ?
~ அப்டியா? ஆச்சரியமான தகவல். 
 அன்புடன்,
[Quoted text hidden]

Gopalan Venkataraman Sun, Mar 17, 2013 at 1:31 PM


அறிஞர்களின் "உன்மத்தம்" குறித்த கலந்துரையாடலின் இடையே அடியேன் புகுந்ததற்கு மன்னிப்பை வேண்டுகிறேன். இந்த "உன்மத்த" நிலை குறித்து பாரதி பாடியிருப்பது தவிர, அபிராமி பட்டர் அனுபவித்த நிலைமையை எடுத்துக் காட்டாகக் காட்டலாம். தஞ்சை மராத்திய மன்னன் ஆடி அமாவாசைக்காக பூம்புகார் சென்று கடலாடிவிட்டுத் திரும்புகையில் திருக்கடவூரில் அபிராமி சந்நிதிக்கு வருகிறான். அங்கு சுப்பிரமணிய பட்டர், அன்னையின் பேரருட் காட்சியில் மனம் ஈடுபட்டு "உன்மத்த" நிலையில் இருந்தார். பின்னர் மன்னன் இன்று என்ன திதி என்றதையும், அதற்கு உன்மத்த நிலை மாறாத நிலையில் பட்டர் இன்று பெளர்ணமி என்றதையும் அனைவரும் அறிவர். இத்தகைய நிலை சிலருக்குச் சில நேரங்களில் ஏற்படுவது உண்டு. Thanjai V.Gopalan (privarsh@gmail.com)

Innamburan S.Soundararajan Sun, Mar 17, 2013 at 2:22 PM
To: mintamil@googlegroups.com
அன்பின் தஞ்சை கோபாலன்,
உங்கள் வருகையினால், இழை மேன்மை அடைகிறது.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

shylajaSun, Mar 17, 2013 at 4:02 PM



கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்...
இ சார்!  திருவாசகம்  நினைவுக்கு வருகிறது.   மிக அருமையான இடுகை இது.முழுவதும் அப்போ  வாசிக்கமுடியவில்லை...  இப்போ  ரசித்து வாசித்தேன்...தொடரவும்


sk natarajan Mon, Mar 18, 2013 at 1:28 AM

அருமை
தொடருங்கள் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
________________________________________________
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/0/02/உன்மத்தம்.jpg
இன்னம்பூரான்
29 04 2013