Wednesday, November 27, 2013

கில்ஜாய்’ கோமளா மாமி:இதுவும் ஒரு பிரகிருதி

இவாளால்லாம் பேசிக்கிறதைப் பாத்தா, அதுவும் ருத்ர வீணையிலேயே 'ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப் ஹ்யூமன் பெர்ஸனாலிடி.' அப்டிண்ணு மீட்டிப்பிட்டா என்றால், அடுத்த கட்டத்துக்குக் காய் நகர்த்தலாமோ, ஐயாமார்களே, அம்மாமார்களே?
இன்னம்பூரான்
01 12 20113

கில்ஜாய்’ கோமளா மாமி:இதுவும் ஒரு பிரகிருதி

Innamburan S.Soundararajan 27 November 2013 14:25








இதுவும் ஒரு பிரகிருதி
கில்ஜாய்’ கோமளா மாமி

ராஜா பாதர் தெருவிலே அந்த நெய்கொட்டான் மரத்துக்குப் பக்கத்து முடுக்கு தெருவில் மூணாவது வீட்டில்  ஏழாவது ஒண்டுக்குடித்தனக்காரி தான் அவள். நாப்பதிலெருந்து அறுபது வயசுக்குள்ளெ. ஒரு நாள் கைகேயி மாதிரி விரித்த தலை அலங்கோலமா நிக்கச்சே அறுபது வயசுன்னு தோணும். அவளே ஆரணி பட்டுப்புடவை சரசரக்க கார்த்திகை தீபம் ஏத்தச்சே நாப்பது வயசு மாதிரின்னு, (நான் என்னத்தைக்கண்டேன்.) சுடுகஞ்சி ஆராமுது சொன்னான்.  அவனுக்கு சுடுகஞ்சின்னு பேர் வச்சதே, அவள் தானே. அந்த கதை பெரிய கதை. சொன்னா, ஊர் சிரிச்சுப் போய்டும். தூணுக்குப் புடவை கட்டினாக்கூட மோகித்து போற ஆராமுது ஒரு பொம்மனாட்டிப்பித்து. இவ கிட்ட எங்கே மாட்டிண்டான், எப்போ மாட்டிண்டான், எதுக்கு மாட்டிண்டான்னு கேட்டா மழுப்புவான். நாக்கைத்துருத்தி சிரிச்சுப்பான். ‘போடா! சோப்ளாங்கி! உனக்கு வயசு பத்தாது’ என்று சொல்லி கை கொட்டி சிரிப்பான். உனக்கு இங்கிலீஷ் தெரியுமோ? இனண்டோ னு ஒரு வார்த்தை. சொல்லாம சொல்றது. தண்டியலங்காரத்திலெ விபாவனை அணி, விபரீத அணி என்றெல்லாம் சொல்றாளே, அது மாதிரியா ன்னு கேட்காதே. நான் என்னத்தைக்கண்டேன்? படித்துக் கரை கண்டவாளைக்கேளு. எது எப்படியோ? ‘சுடுகஞ்சியின்’ இனண்டோ எல்லாம் பொய். 

வாழாவெட்டின்னு கோமளா மாமியை பத்தி அம்புஜம் பாட்டி அலுத்துண்டா ஒரு நாள், அவளோட நாராசம் பொறுக்காம. வாஸ்தவம். அவளோட துக்கிரிநாக்குலெ மாட்டிண்டா சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா. குடக்கூலியை ஒழுங்கா முதல் தேதியே, ‘தண்ணி வரல்லை; ஓடு மாத்தினாத்தானே, ஒரே தேளு; சாக்கடை அடச்சுண்டு இருக்கு.’ இப்படி லொட்டு, லொசுக்கு மண்ணாங்கட்டி என்று ஆயிரம் கம்ப்ளையிண்டோட கொடுப்பாளா, ஸ்டோர் ஓனர் மணி ஐயருக்கு ஒரு மாதிரியா இருக்கும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது. ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ‘கில்ஜாய்’ கோமளா மாமி குடித்தனம் இருந்தாலும் பிரச்னை. காலி பண்ணாலும் பிரச்னை.

ஒரு உரையாடல்:

மணி ஐயர் (தனி மொழி): தெரியாமலா ‘கிருத்திரமம்’ கிட்டு அவளுக்கு ‘கில்ஜாய்’ னு பேர் வச்சான். ஊரையே வாழாவெட்டியாக பண்ணிடுவாளே! ( செயற்கை புன்வறுவல் வரவழைத்துக்கொள்கிறார்).

மணி ஐயர்: கோமளம்! (அவர் பார்வை அப்போ சரியாக இருக்காது. கோமளத்தின் கண்ணிலிருந்து அது தப்ப முடியுமோ? ஊஹூம்!) போனமாசம் தானே வடிவேலு சாக்கடையை க்ளீன் பண்ணான்.  நான் சொன்னா நன்னா இருக்காது. நீ கண்ட குப்பையை போட்றே. அதான்.

‘கில்ஜாய்’ கோமளம்: ‘ஐயர்வாள்’! நீங்க சொல்றது உங்களுக்கே நன்னாருக்கா! எச்சுமி மாமீ! (மணி ஐயரின் பார்யாள்) உங்காத்து....

மணி ஐயர்: (தனி மொழி) ஊர் வம்புனா அவளுக்கு லட்டு தின்ன மாதிரி.  வாய்ச்சவுடால்லெ அவளை மிஞ்சறத்துக்கு ஆள் பிறக்கணும். அதான் அவ புருஷன் ‘வெத்துவேட்டு’ வெங்கிட்டு காததூரம் ஓடிப்போயிட்டான்.
*
மணி ஐயருக்கு சமாதானம் ஆகல்லெ. எந்த புத்துலெ எந்த பாம்பு இருக்கோ? ‘கில்ஜாய்’ கவுத்துவிட்டுட்டா! முனிசிபாலிட்டிக்கு அநாமதேய மனு  கொடுத்தாட்டாள்ணா! எதற்கும் ஆலோசனை கேட்போம் என்று அம்புஜம் பாட்டியாத்துக்குப் போனார். மாயவரத்திலேயே அவள் ஒரு விஐபி. சிங்கிள் உமன் பஞ்சாயத்து. அவளுடைய ஹஸ்பெண்ட் ராகவைய்யங்காருக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆஸ்திகர். நேர்மையான வக்கீல். அவர் காலத்துக்கு அப்றம் அம்புஜம் மாமி எலெக்ஷனுக்கு நிற்க வில்லையே தவிர, அவள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி. அவள் சொன்னாள், “மணி! சில பேர் போக்கை மாத்தமுடியாது. கோமளம் கேட்டதைப் பண்ணி கொடுத்துடு. அவளும் ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்டுண்டு தான் இருப்பாள்.’ 
இன்னம்பூரான்
27 11 2013






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Pandiyaraja
27 Nov (4 days ago)

திரு. இன்னம்பூரான்!
இது எங்கே எழுதியது? எதற்கு எழுதியது? யார் எழுதியது என்று கேட்கத்தேவையில்லை. நீங்கள்தான் என்று யூகிக்கின்றேன். படிக்க சுவாரசியமாக இருந்தது. வட்டார வழக்கு பலே!
ப.பாண்டியராஜா

Innamburan S.Soundararajan 
27 Nov (4 days ago)

நன்றி, ஐயா,
அடியேன் தான் அஞ்சு நிமிடம் முன்னால் என்னுடைய பொழுதுபோக்குக்காக  எழுதியது.  நான் தான் உசாத்துணை ஆசாமியாச்சே. மற்றவர்கள் படைப்பு என்றால் சொல்லி விடுவேன். சொற்கள் இரவல் வாங்கலாம். அவை பொது சொத்து. இது ஒரு தொடர். எண்ணிக்கை மறந்து விட்டேன். எல்லா பிரகிருதிகளும் யான் அனுபவத்தில் கண்ட மாந்தர்களே.
Pandiyaraja
27 Nov (4 days ago)

அருமையான அனுபவங்கள் - இயல்பான கதைமாந்தர் - சரளமான நடை - இனிமையான பகிர்வு தங்களது. தொடருங்கள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா



கி.காளைராசன்
27 Nov (4 days ago)
to mintamilManramதமிழ்thamizhvaasalvallamaitamilpayanime
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/11/27 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா.
சிறுசா இருந்தால் வாயைப் பிளந்துண்டு கேக்கலாம்,
பெரிசா இருந்தால் காதைப் பொத்திக்கிட்டு செவியைத் தீட்டிக்கலாம்,

நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

Your are a social auditor என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அன்பன்
ருத்ரா இ.பரமசிவன்
28 Nov (3 days ago)

இது சிறுகதை இல்லை.
கடுகுக்கதை.
மூட்டைக்காரம் உள்ளே.
பொம்மனாட்டின்னு
கொஞ்சம் ஈரங்காட்டினா
அந்த பொம்மனாட்டிகளுக்கே
ஆயிரம் துரோகம் அது.
நாட்டாம மாமிக்கே
நடுக்கம் தான்.
மனுஷாளை
தோல உரிக்காமலேயே
அவா
நெறம் உரிச்சு
நன்னாக்காட்டிட்டேள்.
ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப்
ஹ்யூமன் பெர்ஸனாலிடி.
"இனா"ன்னா
இமயம் தான்
"சொல்"லையே பல்ல புடிச்சு
வித்தை காட்டுவதில்.
Sk Natarajan
29 Nov (2 days ago)

நேரிலியே நடப்பது போன்ற ஒரு நடை 
அருமை 
வாழ்த்துகள் ஐயா 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.





Tuesday, November 26, 2013

வைரக்குவியல்: I:அன்றொரு நாள்: நவம்பர் 27:I

அப்டேட்: என்ரிக்கோ ஃபெர்மி வரவில்லை இது வரை. போனவருட நோபெல் எல்லாம் போட்டேன். Not this year. Wo reads, anyway?
இன்னம்பூரான்
27 11 2013


அன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I
7 messages

Innamburan Innamburan 27 November 2011 19:14

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I
ஒரு மனோவாக்கு அதிசயமாக பயணித்து, நிரந்தமான கொடையாக குடை விரித்து, உலகை ஒரே இனமாக பாவித்து, 1901லிருந்து கிட்டத்தட்ட 800 சாதனையாளர்களை பாராட்டி, சுடராழி போல் திகழ்கிறது என்றால், அது தான் நோபெல் பரிசு. அதற்கான திட்டம் ஒன்றை வகுத்து, தன் செல்வத்தில் 94 %  பங்கை அதற்காக ஒதுக்கி வைத்து எழுதிய உயிலில் திரு. ஆல்ஃப்ரெட் நோபெல்் கையொப்பமிட்ட தினம், நவம்பர் 27, 1895. திரு. ஆல்ஃபெரட் நோபல் ஒரு விஞ்ஞானி. டைனமைட் என்ற வெடிமருந்தை கண்டு பிடித்தவர். அதன் விளைவாக, அபரிமிதமான செல்வம் ஈட்டியவர். (பிற்காலத்து ‘அபகீர்த்தி போஃபோர்ஸ்’ இவருடைய சொத்து தான்.) இறவா வரம் பெற்ற இந்த பரிசில் வந்த விதம் விந்தை. ‘மரணத்தின் வியாபாரி இறப்பு’ என்று அவருடைய சகோதரனின் மரணத்தை பற்றி வந்த செய்தி, இவரது மனோதர்மத்தை அலக்கழித்தது. திடுக்கிட்ட ஆல்ஃப்ரெட், இந்த முடிவுக்கு வந்தார். ஐந்து துறைகளுக்கு நோபெல் பரிசில். 1968லிருந்து பொருளியலுக்கும்; அது ஸ்வீடன் மத்திய வங்கியின் உபயம். நோபெல் பரிசு பற்றி சர்ச்சைகள் பல உண்டு. கணக்கு சாத்திரத்துக்கு பரிசில் இல்லை! ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும்,  அமைதி பரிசில் மஹாத்மா காந்திக்கு மறுக்கப்பட்டது. பெர்னார்ட் ஷா நோபெல் பரிசை, கேலி செய்து, நிராகரித்தார். சில வருடங்கள் பரிசில்கள் அறிவிக்கப்படவில்லை. இத்யாதி.
பல வருடங்களுக்கு முன் உலக அளவிலான பொது அறிவை வளர்ப்பதை பற்றி பேச்சு வந்த போது, நோபல் பரிசின் வரலாறு பெரிதும் உதவும் என்றேன். அவ்வப்பொழுது அதை படிப்பதும் என் வழக்கம். இடம், பொருள், ஏவல், ஆர்வம், அவற்றின் எல்லைகள், வாசக ருசி ஆகியவை கருதி, ஒரு சிறிய அறிமுகத்துடன் முடித்து விடுகிறேன். அதற்காக, 111 வருடங்களாக பாராட்டப்பெற்ற சாதனையாளர்களில் சிலரை பற்றி மட்டும், சில வரிகள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்றாலும், எனக்கே இப்படி தந்தி பாஷையில் கோஷமிடுவதில் சந்தோஷம் இல்லை. என்றோரு நாளில், உரிய முறையில் விளக்கமாக, நோபெலர்கள் பற்றி ஒரு மின்னூல் வரவுக்கு இது தூண்டிலாக இருக்கட்டும். நான் எழுதினால் என்ன? மற்றவர்கள் எழுதினால் என்ன?
  1. இலக்கியம்:
1999ல் இலக்கிய நோபெலர், கந்தர் க்ராஸ் (Günter Grass). இலக்கியம் படைத்த தத்துவஞானி. தத்துவம் பேசும் படைப்பாளி. நோபெல் பரிசு பெறும் போது அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்.
‘கதை சொல்லிகள் இல்லாத காலமே கிடையாது...படிக்காத மேதைகளின் கதைகள் சுவை மிகுந்தவை...வாசகர்களின் ஆரவம் குன்றினாலும் கவலையில்லை. அவர்களே கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...சைனா, இந்தியா, பெர்சியா, பெரு நாடு அங்கெல்லாம் கதை சொல்லிகள் தாம் இலக்கியம் படைத்தார்கள்...மறக்கவேண்டாம்.கதையின் உற்பத்தி உதட்டில். பேச்சு மொழி இலக்கியம் தான் முதல் வரவு...நான் எழுத்தாளனாக ஆனதின் பின்னணி: பகற்கனவு, சொல் விளையாட்டு, பொருத்தமான பொய் சொல்வதில் உள்ள சுகம் & அரசியலின் தலையீடு...ஐ.நா.வில் வில்லி ப்ரேண்ட் அவர்கள் ‘பசியும் ஒரு போர்க்களமே’ என்று அதிரவைக்கும் முழக்கம் செய்த போது நான் அங்கிருந்தேன். அப்போது நான் எழுதிவந்த ‘குப்புறவிழுந்தான்’ என்ற புதினம், மிதமிஞ்சிய விருந்தும், பட்டினிச்சாவும், சாப்பாட்டு ராமன்களும், அன்றாடம் காய்ச்சி நோஞ்சான்களும், எருமை நாக்கின் ருசியும், எச்சில் பொறுக்கியும் போன்ற வாழ்வியல் அடித்தளங்களை பற்றி இருந்ததும் ஒருமிக்க கருத்துக்கள்...”.
2. அமைதி:
1999ம் வருட நோபெல் பரிசில் ஒரு தன்னார்வ அமைப்புக்கு தரப்பட்டது. ப்ரஸ்ஸல் நகரில் 1971 ம் வருடம் பத்து ஃபெரன்ச் டாக்டர்களால் துவக்கப்பட்டு, 20 நாடுகளில் அலுவலகங்கள் அமைத்து 70 நாடுகளில், தேவைக்கேற்ப, அந்தந்த நாட்டு அரசுகளின் அழைப்புக்கு காத்திராமல், மருத்துவப்பணி செய்யும் அந்த அமைப்பின் பெயர்: ‘எல்லை கடந்த மருத்துவர்கள்’. செஞ்சிலுவை சங்கத்தின் போக்கின் மீது இருந்த அதிருப்தியால், இந்த அமைப்பு உருவாயிற்று.1972ல் நிக்கராகுவே பூகம்ப நிவாரணப்பணியில் எடுத்த நற்பெயர், தொடர்ந்த நற்பணியினால், 1999ல் நோபெல் கிடைக்க ஹேதுவாயிற்று. அநியாயத்தை எதிர்க்கும் தன்மை இருப்பதால், சில நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுபவமும் இதற்கு உண்டு.
3. மருத்துவம்:1912, வருடத்து நோபெல் பரிசு டாக்டர் அலெக்ஸிஸ் கெரல் என்ற ஃபெரன்ச் டாக்டருக்கு, ரத்தக்குழாய்களுக்கு தையல் போடும் விதம் கண்டு பிடித்ததற்கு. சொல்லப்போனால், இவருடைய சாதனை போர்முனை ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளுக்கும், பிற்கால உறுப்பு அறுவடை/மாற்றல் சிகிச்சைக்கும் அபூரவ்மான வழி வகுத்தது. அவருடைய ‘மனிதன்: நாம் அறியா மர்மங்கள்’ என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது.
4. பொருளியல்: 
1998ம் வருட நோபெல் பரிசு அமார்த்தியா சென். பொருளியலின் மனசாக்ஷி என்று அழைக்கப்படும் அமார்த்தியா சென் ஒரு நேர் காணலில் சொன்னது: ‘பொருளியல் ஆளுமையில் அரசுக்கும் பங்கு உண்டு; சுதந்திர சந்தைக்கும் பங்குண்டு;திட்டமிடுவதும் வேண்டும். சலுகைக்களுக்கும் இடமுண்டு; ஜனநாயகமும், மனித உரிமையும் முக்கியம் என்பது மட்டுமல்ல; சமுதாய முன்னேற்றத்திலும், பொருளியல் வளர்ச்சிக்கும் அவை இன்றியமையாதவை...’.
பரிசில் கிடைத்த சமயத்தில், அவர் கேம்பிரிட்ஜ் ட் ரினிட்டி காலேஜின் மாஸ்டர் (தலைவர்) ஆக இருந்தார். கேம்ப்ரிட்ஜின் 31வது நோபெல் சாதனையாளர். ட் ரினிட்டியின் சமீப கால ஐந்து மாஸ்டர்களில் மூவர் நொபெல் சாதனையாளர்கள்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
27 11 2011
sweden_photo2.jpg10610s.jpgstamps1.jpgalexis_carrel_021.gifAmartyaSENN.jpg



உசாத்துணை:


Geetha Sambasivam 27 November 2011 19:22

தொடருங்கள்.  அமர்த்தியா சென்னை மட்டும் அறிவேன்; மற்ற இருவர் பற்றியும் அறிந்ததில்லை.  மற்றபடி நோபல் பரிசின் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். தொடருங்கள் காத்திருக்கோம்.
2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I

rajam 27 November 2011 19:57

கட்டாயமாகத் தொடருங்கள்! சங்கத்தமிழ் இலக்கணத்துக்கும் அந்தப் பரிசு வேணும் என்றும் பரிந்துரை செய்யுங்கள்! [கொசுறு: அது எனக்குக் கிடைக்கணும்-னும் ஸ்ரீராமனை வேண்டுங்கள், என்ன!!]  :-) :-) :-)

[

Innamburan Innamburan 27 November 2011 21:29

நான் எவெர் ரெடி, ராஜம். கட்டுரையின் முதற்பகுதியே பிடித்துப்போனது சந்தோஷம். அது சரி. 'அன்றொரு நாள்: நவம்பர் 25செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்' கண்ணில் தென்பட்டதோ?

[Quoted text hidden]

தனி மடல்




Subashini Tremmel 2 December 2011 21:40



2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I

..
(தொடரலாமா?)

தொடருங்கள்.. 

சுபா

Innamburan Innamburan 2 December 2011 21:46
To: mintamil@googlegroups.com

~  நன்றி. என்ரிக்கோ ஃபெர்மி வந்து கொண்டே இருக்கிறார்.

Monday, November 25, 2013

அடி தங்கமே! அபரஞ்சி தங்கமே!

அடி தங்கமே! அபரஞ்சி தங்கமே!

தாய்லாந்து பாங்காங்லெ $15000த்துக்கு தங்கச்சங்கிலி வாங்கிக்கொண்டு, தாய்நாட்டு பம்பாய்லெ விற்றால் லாபம் லக்ஷம் ரூபாய். ஆனால் சட்டவிரோதம். பொன்னுக்கு வீங்கும் இந்தியர்களை கட்டுப்படுத்த அரசு விதிகளும், வரிகளும் விதித்தாலும், புள்ளி விவரங்கள் சொல்வதற்கு மாறாக, முறைகேடாக இந்தியர்கள் தங்கம் வாங்குவது அதிகரித்து விட்டது என்கிறது, லண்டன் எகானமிஸ்ட், இன்று. அபு தாபி, பஹ்ரைன், டுபாய் நாடுகளிலிருந்து வருபவர்களிடம் முறை கேடான இறக்குமதியை சட்டரீதியாக பறிப்பது அதிகரித்து வருவதாக சுங்க அதிகாரிகளே சொல்கிறார்கள். நமது நில எல்லைக்கோடு 15 ஆயிரம் கி.மீ. கடல் 7.5 ஆயிரம் கி.மீ. யார் யார் எங்கெல்லாம் சட்டத்தை மீறுகிறார்களோ! இப்போ தாய்லாந்திம் இறக்குமதி அதிகம். இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் கொண்டு போகவே தான், இது என்கிறது அகில உலக பொன் கவுன்சில். தாய்லாந்து பிரச்னைகளும் ஒரு காரணம் எனலாம். அது போகட்டும். இந்தியாவில் சட்டத்தை நைசாக மீறி தம்மாத்தூண்டுத் தங்கம் உமக்குத் தெரிந்து யாராவது கொண்டு வந்தார்களா?
உசாத்துணை:
http://www.economist.com/blogs/schumpeter/2013/11/gold-trade-thailand?fsrc=nlw%7Cnewe%7C11-25-2013%7C7065087%7C36856225%7C

Image Credit: http://www.howcashforgold.net/wp-content/uploads/2012/10/gold_photo.jpg


மதி தந்தருளிய விதி:அன்றொரு நாள்: நவம்பர் 26


அப்டேட்: 26 11 2013
  1. ‘...அரசு ஊழியர்களைப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் உண்மையே.  எங்களாலும் ஏற்கப் படக்கூடியதே! (கிட்டத்தட்ட அதே தணிக்கைத் துறை; ஆனால் பாதுகாப்பு அமைச்சகம்; ) எழுபதுகள் வரை நிதி அமைச்சகத்தோடு இருந்த இந்த பாதுகாப்புத்  தணிக்கைக் கணக்குத் துறையை  எப்போது நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தார்களோ அப்போதே ஊழல் ஆரம்பித்ததாய்ச் சொல்லிக் கொள்வார்கள்...’.
~அன்றே சொல்லியிருக்கவேண்டிய ஒரு விளக்கம். பாதுகாப்புத்துறையின் தணிக்கை பத்திரமாக ஆடிட்டர்ஜெனரல் பாதுகாப்பில் தான் இருக்கிறது. அதான் ஹெலிகாப்டர் விஷயம் ஆலாய் பறக்கிறது. 1989-91 காலகட்டத்தில் அந்தப்பிரிவுக்கு நான் தலைமை வகித்த போது, யாதொருவிதமான தலையீடு வந்ததில்லை. இத்தனைக்கும் போஃபோர்ஸ் அனல் பறந்து வந்த தணல் நீறு பூத்துக்கிடந்த காலகட்டம். கீதா சொல்வது வேறு ஏதோ சமாச்சாரம். ராணுவக்கணக்குத்துறை என்றால் கூட அது பிரிந்து பல்லாண்டுகள் ஆயின. 150 வருடம் முன்னால் தலையெடுத்தது Military Accountant General தான்.
  1. அரசியல், பொருளியல், பொது நிர்வாகம் என்பதை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் நாணயஸ்தர்கள் 1948 வரை; பிறகும் தான். படிப்படியாக அவர்களின் மதிப்புக்குறைய விஸ்தாராணமான நடுநிலை ஆய்வு வேண்டும்.
  2. நோபல் பற்றி ஒரு தொடரே ஆரம்பித்தேன். நசுங்கிப்போச்சு, ஈயச்சொம்பு மாதிரி.
இன்னம்பூரான்

அன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி
9 messages

Innamburan Innamburan 26 November 2011 16:47

அன்றொரு நாள்: நவம்பர் 26
மதி தந்தருளிய விதி
‘சாலையோரம் ஆலமரங்கள் நட்டேன், மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் நிழல் தருவதற்கு;ஆங்காங்கே மாந்தோட்டங்கள்; எட்டெட்டு கோசங்களிடையே கிணறுகள் வெட்டினேன்; இளைப்பாறும் விடுதிகள் அமைத்தேன்; ஆங்காங்கே பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் நீர்ச்சுனைகள் அமைத்தேன்; இவை எல்லாம் சின்ன விஷயங்கள். மற்ற அரசர்களும் செய்தவை தான். யான் செய்ததெல்லாம், நமது மக்கள் யாவரும் ‘தம்மம்’ உயர் வாழ்நெறியை கடைப்பிடிக்க வேண்டும்” என்ற இலக்கை நோக்கி.
~ அசோக சக்ரவர்த்தியின் கலிங்கா கல்வெட்டு. 
‘சட்டத்தின் முன் யாவரும் சமமே. பாரபக்ஷமில்லாத பாதுகாப்பு எல்லாருக்கும் உண்டு. அரசு இந்நிலையிலிருந்து பிறழலாகாது... அரசு,சமயம், இனம், சாதி,பாலினம், பிறந்த மண் ஆகியவற்றை வைத்து, வேற்றுமை பாராட்டக்கூடாது. கடை, கண்ணி, நீர் நிலைகள், பொது ராஸ்தா இவைகளில் இத்தகைய வேற்றுமை பாராட்டக்கூடாது. பெண்கள்/சிறார்கள்/ ஹரிஜனம் ஆகியோருக்கு சலுகைகள் இருக்கக்கூடும்.
~ பகுதி 14 & 15: இந்திய அரசியல் சாஸனம்.
அசோகர் உயிரினங்கள் யாவற்றையும் போற்றினார். இந்திய அரசியல் சாஸனம் கொஞ்சம் சறுக்கி, மனித இனத்தை மட்டும் போற்றுகிறது என்றாலும், அது சுதந்திர இந்தியாவுக்கு ஏற்புடைய  நுழைவாயில். 
‘பேச்சு உரிமை வந்தாச்சுன்னு
கீச்சு கீச்சுன்னு கூவுவோமே.’
என்று இன்று, தொடை தட்டி கொட்டி முழக்கி துட்டுலெ புழங்கும் அரசியலருக்கு, நமது அரசியல் சாஸனம் வந்த விதம் மறந்து போயிருக்கும். சான்றோர் சபை ஒன்று பல முறை கூடி, ஆய்வுகளும், ஒப்புமைகளும் பல செய்து, பல துறை வல்லுனர்கள் ஆக்கபூர்வமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, கட்டுக்கோப்பான ஒற்றுமையுடன், தேசாபிமானத்தை அடித்தளமாக அமைத்துக்கொண்டு, மக்கள் நலத்தை இலக்காக நிறுவிக்கொண்டு, சமத்துவத்தை நாடி, ஜனநாயகத்தை போற்றி, புகழ் வாய்ந்த அரசியல் சாஸனம் ஒன்றை நமக்கு அருளிய தினம், நவம்பர் 26, 1949. 
அரசியல் சாஸனங்கள் வேத பாடம் மாதிரி. பிரிட்டீஷ் அரசியல் சாஸனம் ஶ்ருதி. எழுத்து மூலம் இல்லை. அமெரிக்காவின் அரசியல் சாஸனம் கீர்த்தி மிகுந்தது. அது ஒரு அமர காவியம். ஐரோப்பிய நாடுகளில் தேச வரலாறும், அரசியல் சாஸன வரலாறும், ரயில் தண்டவாளம் போல: அடுத்தடுத்தும், ஒரே பயணத்திலும். ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாஸனம் அந்த சமுதாயத்தின் பண்பை பிரதிபலிக்கும் என்று பொதுவாகச் சொல்லலாம். இருந்தும் போலிகள் நிறைந்திருக்கும் உலகமல்லவா! கொடுங்கோல் அரசுகளின் த்வஜஸ்தம்பத்தில் ஜனநாயக அரசியல் சாஸனம் கொடி கட்டி பறக்கும், ஸோவியத் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் போல. 
நமது அரசியல் சாஸனத்தின் வரலாறு, என்னுடைய கணிப்பில், தொடங்கியது 1909ல். பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் இந்தியாவை ஆளத்தொடங்கியது 1857ல். ஐம்பது வருடங்களிலேயே, தேசாபிமான புத்துணர்ச்சியை மதித்து இயங்கவேண்டியது, இன்றியமையாததாக ஆகி விட்டது. பாடம் புகுத்தியதில் ஆங்கிலேயரின் பங்கு உண்டு. மிண்டோ-மார்லி திட்டம் 1909ல் உள்ள முற்போக்கு நன்னெறிகளை மறக்கலாகாது. பின்னர் மாண்டேகு - செம்ஸ்ஃபோர்ட் திட்டம் 1919. அடுத்து இந்திய அரசியல் சட்டம் 1935. அதை முதுகெலும்பு போல் பாவித்துத் தான் நமது அரசியல் சாஸனம் வரையப்பட்டது.  இன்றைய அரசியல் பின்னணியில் வாசித்தால், மிண்டோ-மார்லி திட்டம் 1909ல் உள்ள முற்போக்கு நன்னெறிகள் தென்படவில்லையே என்ற கேள்வி எழலாம். வாஸ்தவம் தான். தனி மனிதன், சிறிய சமுதாயம், பெரிய சமுதாயம், அரசியல் ஆகியவற்றின் வேகம் ஒரே துரித கதி அல்ல. பாருங்களேன். 1950ல் ‘சட்டத்தின் முன் யாவரும் சமமே. பாரபக்ஷமில்லாத பாதுகாப்பு எல்லாருக்கும் உண்டு. அரசு இந்நிலையிலிருந்து பிறழலாகாது...’ என்று சட்டம் தீட்டி விட்டு, அறுபது வருடம் கழித்து இரட்டை டம்ளர்! கட்டப்பஞ்ச்சாயத்து! தேர்தலில் சாதீயம்! போலீஸ் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு! 
நமது அரசியல் சாஸனம் அமைத்த சான்றோர் சபை சுதந்திரம் வருமுன் நிறுவப்பட்ட இந்திய பார்லிமெண்ட் எனலாம், நேர் முறை தேர்தல் இல்லை என்றாலும். தொடக்கத்தில், பாகிஸ்தானும் இன்றைய பங்களா தேஷும் உள்ளடங்கியவை என்றாலும்.  அதனுடைய முதல் மீட்டிங் டிசம்பர் 9, 1946. 11 தடவை கூடி 165 நாட்கள் விவாதித்து, நவம்பர் 26, 1949 அன்று இறுதி கூட்டம் நடந்தது. ஜனவரி 26, 1929 அன்று தான், இருபது வருடங்களுக்கு முன்னால், பூர்ண ஸ்வராஜ்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனுடைய ஞாபகார்த்தமாக, இந்திய அரசியல் சாஸனத்தின் பிரகடன தினம் ஜனவரி 26, 1950. முதல் கூட்டத்தின் தலைர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் பாபு ராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 உபகமிட்டிகள். சாஸனத்தை வரைந்து, உருக்கொடுத்து அமைக்கும் உப கமிட்டியின் தலைவர் பாபாசாஹேப் அம்பேத்கார். மெஜாரிட்டி கட்சியான காங்கிரஸை சார்ந்தவர் இல்லை. சொல்லப்போனால், அவர் எதிர்க்கட்சிக்காரர் எனலாம். அந்தக்காலத்தில் இந்த சின்ன விஷயங்கள் ஒரு பொருட்டல்ல. தேசாபிமானம், உண்மை உழைப்பு, திறன், பகிர்வு ஆகியவை தான் முக்யம்.  அதை கவனத்தில் கொள்ளாமல், பாபா சாஹேப் அம்பேத்கார் ஒருவர் மட்டுமே நம் அரசியல் சாஸனத்தின் ஆயனசிற்பி என்பவர்களும் உண்டு. 
அநேக பேர் அறியாத விஷயம். இந்த சான்றோர் சபையில் அங்கத்தினராக இல்லாத ஒரு மாமேதை தான் இந்திய அரசியல் சாஸனத்தின் சூத்ரதாரி. ராஜன் பாபு நவம்பர் 26, 1949 அன்று சொன்னார், ‘... ஊதியம் யாதும் பெற்றுக்கொள்ளாமல், தன்னார்வத்துடன் பணி புரிந்தார். இங்கேயே வாசம் எனலாம். தன்னுடைய அபார புலமை, அறிவாற்றல், நுண்ணறிவு மூலமாக சபைக்கு உதவியதோடு நிற்காமல், எல்லா அங்கத்தினர்களும், அறிவு கூர்மையுடன், முழுமையான ஆய்வுக்கு பிறகு இயங்குவதற்கு உதவியாக ஆதாரங்கள் கொடுத்து உதவினார்.‘  அவ்வாறு புகழப்பட்டவர், ஸர். பெனகல் நரசிங்க் ராவ் ஐ.சி.எஸ். சுருங்கச்சொல்லின், அவரில்லையேல் சாஸனமில்லை...'
சில ஊடகங்களில், மின் தமிழ் உள்பட, அரசு ஊழியர்களை சுய நினைவு இழந்தவர்கள் போல, திறனற்றவர்கள் போல, கண்ணியமிழந்தோர் போல சித்தரிப்பது ஃபேஷன் ஆகி விட்டது. பெரும்பாலும், அரசு ஊழியம் பற்றி அறியாதவர்கள் தான் இந்த உடுக்கடிக்கிறார்கள். நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கும் உளர். மனித சமுதாயத்தின் ஒரு பாகம் தான் அரசு ஊழியம். அங்கு தேர்ந்தெடுக்கும் முறை சரியாக இருந்தால், பிரச்னை குறைவு. எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, பெனெகல் ராம ராவ், பெனகல் நரசிங்க் ராவ், வி.பி.மேனன், கிரிஜா சங்கர் பாஜ்பாய், பி.சிவராமன், ஹெச்.வி ஆர். ஐயங்கார், லோபோ பிரபு, எஸ்.கே.செட்டூர், பி.வி.ஆர். ராவ் போன்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தங்கத்தட்டில் ஏந்தவேண்டும். ஏன்? இன்றைய காலகட்டத்தில் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. ஆஸ்ரா கார்க் ஐ.பி.எஸ். நற்பணி செய்கிறார்களா? இல்லையா? கொஞ்சம் தெரிந்ததால் தான் சொல்கிறேன். 1950 களில் நேர் காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.எஸ். என்ற தணிக்கைத்துறையின் நடுத்தர நிலை ஊழியர்களில் பெரும்பாலோர் ரத்னங்களாக திகழ்ந்தனர். ஐ.ஏ.எஸ். தேர்வும் சிறந்த முறையில். நேர்காணல் செய்யும் பணியிலும் சில வருடங்கள் முன் வரை இருந்ததால், இதை சொல்ல துணிந்தேன். முதல் நிலை பயிற்சி மிக முக்கியம். ஐ.ஏ.எஸ். பயிற்சித்துறை முதல்வராக இருந்த பி.எஸ். அப்பு ஐ.ஏ.எஸ். முறைகேடான அரசியல் தலையீட்டினால் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. இருந்தும் ஒரு சம்சயம். அரசு ஊழியர்களை குறை சொல்லும் தமிழர்களின் கண்ணில் பட்ட  சமீபகால ஊழியர்களில் பலரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு தேர்வாலயம் இப்போது குற்றசாட்டுகளால் குளிப்பாட்டப்பட்டு, தலை விரிகோலமாக, நடுத்தெருவில் நிற்கிறது. ஊரே சிரிப்பாய் சிரிக்கிறது. மேலே சொல்ல வெட்கமாகுது. ஒரு சமயம், இந்த சிக்கலால், நல்லவர்களுக்கும் கெட்ட பேரோ! 
இன்னம்பூரான்
26 11 2011
Indian-Constitution.png1210.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 26 November 2011 19:52

அதை கவனத்தில் கொள்ளாமல், பாபா சாஹேப் அம்பேத்கார் ஒருவர் மட்டுமே நம் அரசியல் சாஸனத்தின் ஆயனசிற்பி என்பவர்களும் உண்டு. //

உண்மையே.   அம்பேத்கரை மட்டுமே சொல்லுவது இப்போது வழக்கமாகி விட்டது.   அரசு ஊழியர்களைப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் உண்மையே.  எங்களாலும் ஏற்கப் படக்கூடியதே! (கிட்டத்தட்ட அதே தணிக்கைத் துறை; ஆனால் பாதுகாப்பு அமைச்சகம்; ) எழுபதுகள் வரை நிதி அமைச்சகத்தோடு இருந்த இந்த பாதுகாப்புத்  தணிக்கைக் கணக்குத் துறையை  எப்போது நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தார்களோ அப்போதே ஊழல் ஆரம்பித்ததாய்ச் சொல்லிக் கொள்வார்கள்.  இப்போது கேட்கவே வேண்டாம்.  நேரடியாகவே பார்க்கிறோம்.  அலுவலகத்தில் அலுவல்வேலைகள் நடைபெறும் அழகை!  ஏனெனில் தேர்வு சரியில்லை. இது குறித்து இன்னும்  சொல்ல ஆசை!  எனினும் வேண்டாம் எனக் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.   இதனால் நல்லவர்களுக்கும் கெட்ட பெயரே வந்து சேர்கிறது என்பதும் உண்மைதான்.  தமிழ்நாட்டுத் தேர்தல் கமிஷனராக இருந்த நரேஷ் குப்தா படாத பாடா! :(((((((  என்றாலும் அவர் மசியவில்லை.

2011/11/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 26
மதி தந்தருளிய விதி

இன்னம்பூரான்




Raja sankar 27 November 2011 01:29


அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கம் எங்கேனும் அரசு ஊழியர்களின் கடமையை பேசியதுண்டா?

இதனாலே எல்லா இடங்களிலும் கிண்டல், கேலி, அவமானம் தொடர்கிறது.

ராஜசங்கர்

coral shree 27 November 2011 07:58

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
உண்மைதான்...... எப்போது பார்த்தாலும், உரிமைப் போராட்டம்தான். கடமை பற்றி எண்ணுவோர் வெகு சிலரே....


Geetha Sambasivam 27 November 2011 15:52


அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கம் எங்கேனும் அரசு ஊழியர்களின் கடமையை பேசியதுண்டா?

இதனாலே எல்லா இடங்களிலும் கிண்டல், கேலி, அவமானம் தொடர்கிறது. //



தேர்வு முறையே காரணம்.  இதைப் பற்றி விபரமாய்ப் பேச முடியவில்லை.  பல தேர்வுகளிலும் தகுதியை விட சிபாரிசுக்கே முன்னுரிமை. இது வேலையில் சேர்ந்தப்புறம் ப்ரமோஷன்களிலும் காணமுடியும்.  தகுதி வாய்ந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். 


Innamburan Innamburan 27 November 2011 21:21
To: mintamil@googlegroups.com

அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கம் எங்கேனும் அரசு ஊழியர்களின் கடமையை பேசியதுண்டா?


~ பொதுமக்களிடையே அரசு ஊழியர்களை பற்றி ஒரு கசப்புணர்ச்சி இருப்பதின் காரணங்கள் பல.
கடமையாற்றும் ஊழியர்களின் கறார் அணுகுமுறை தற்காலத்தில் விரும்பப்படுவது இல்லை. அரசியலர்கள் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்றும் தெரியும். மாமூல் வாங்குபவனுக்கு மரியாதை இருக்காது.  சமுதாயத்தின் பல துறைகளில் -பொற்கொல்லர், கள்ளிறக்குவோர், ரயில் பிரயாணிகள், நுகர்வோர், வணிகர் வகையறா தன்னலம் காக்க சங்கங்கள் வைத்துள்ளனர். அவர்களுக்கும் வரிப்பணத்திலிருந்து மான்யம் போகிறது. அரசு ஊழியர்கள் மட்டும் விலக்கா? அது போகட்டும். 

காலங்காலமாக அரசு ஊதியம் மிகக்குறைவு; ஆளுமை, அதிகாரம் மிக அதிகம்; வேலை நிரந்தரம். மேலா நினைத்தால், இடமாற்றம். இந்த கலோனிய சூத்திரத்தை முறைகேடாக தலைகீழ் பாடம் ஆக்கியது அரசியலர்கள். அதற்கு துணை போனவர்கள், மக்கள். அரசு ஊழியர்கள் கடமையை பேசும் இடங்கள் பல உள்ளன. அவை பிரச்சாரம் செய்வதில்லை. முடிந்தால், சென்னை வரும்போது, திரு.ராஜசங்கரை அழைத்துச்சென்று காட்டுகிறேன்.

திருமதி. கீதா சொன்னமாதிரி, அரசு ஊழியம் இன்னல்களும், இடர்ப்பாடுகளும் நிறைந்தது. சொல்லவும் முடியாது; மெல்லவும் முடியாது. ஒரு உதாரணம். லஞ்சமிகு துறைகளில் சில மாநிலங்களில், மாநில அரசு பணியில் இருந்திருக்கிறேன். ஒரு மாநிலத்தில் கண்ணியத்துக்கு பெறுமை. மற்றொன்றில் சிறுமை. எனவே, விஷயம் தெரிந்தவர்கள் அரசு ஊழியர்களுக்கு வரிப்பணத்தில் ஊதியம் அளிப்பதை ஏதோ கொள்ளையடிப்பதாக நினைத்தால், வருத்தமாகத்தான் இருக்கும்.

ஊழியர் சங்கம் பற்றி சில வார்த்தைகள்: உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் கையாலாகாதவர்கள். ‘ப்ரமோஷன் மறுப்பு’, ‘பரிக்ஷை சமயத்தில் இடமாற்றம்’, ‘அன்றாட தலையீடு’, ‘அவமதிப்பது’ போன்ற சிண்டுகள், அரசியலர் கையில். அடிமட்ட/நடுத்தர ஊழியர் சங்கங்கள் ‘தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற’ நிழல் யுத்தங்கள் செய்வது உண்டு, வங்கி ஊழியர்களை போல, கள்ளிறக்குவோர் போல. சொல்லப்போனால், அந்த அணுகுமுறையுடன் நான் போரிட்ட காலங்கள் உண்டு. ஒரு சூக்ஷ்மம் என்னவென்றால், அவர்கள் அரசியலரை கைக்குள் போட்டுக்கொண்டிருப்பர்.

‘காலங்காலமாக அரசு ஊதியம் மிகக்குறைவு; ஆளுமை, அதிகாரம் மிக அதிகம்; வேலை நிரந்தரம். மேலா நினைத்தால், இடமாற்றம். இந்த கலோனிய சூத்திரத்தை முறைகேடாக தலைகீழ் பாடம் ஆக்கியது அரசியலர்கள்.’ என்பதை விளக்க வேண்டும். தற்காலம் அரசு ஊதியம் கணிசமாக ஏறியும், லஞ்சம் தென்படுகிறது. என் மாதிரி பத்தாம்பசலிகள் காலத்தில், எனக்கெல்லாம், மாதக்கடைசியில் டண்டெணக்கா!, ஆரம்பித்த தினம் முதல். 1991ல் பென்ஷன் பணம் சுண்டைக்காய். ஆனால், லஞ்சம் வாங்கினவர்களுக்கு அவமானம். மிகக்குறைவு. ஆளுமை/ அதிகாரம் இருக்கத்தான் செய்யும். ஒரு ரெவென்யூ இன்ஸ்பெக்டர் படாத பாடு படுத்த முடியும். அதற்கு கட்டுப்பாடு, மேற்பார்வை. அது காணாமல் போய்விட்டது. 

‘மதி தந்துருளிய விதி’ கட்டுரையில் நான் சொன்ன விஷயம் வேறு. சென்னை தேர்வாலயம் பற்றிய பிரச்னையை, தனித்து, தியரட்டிக்கலாக, கவனிப்போம். பல வருடங்களாக, அரசு அதிகாரிகள் முறை கேடான வழிகளில், பணம் கொடுத்தோ, மற்ற நீசவழிகளிலோ வேலை வாங்கி இருந்தால், அவர்களிடம் கடமையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? துணை வேந்தர் ஒருவர் அப்பதவிக்கான ஏலத்தொகையை சொன்னார். பஸ் ஓட்டுனரும், ஆசிரியரும், டாணாக்காரரும், காசு கொடுத்து வேலை வாங்கியதாக சொல்கிறார்கள்.  
இதற்கெல்லாம் துணை போன பொது மக்கள் அரசு ஊழியர்களை மட்டும் காய்ச்சுவதை விஷயம் தெரிந்தவர்களே வழி மொழிந்தால், நம் நாட்டுக்கு விமோசனம் இல்லை. கிணற்றில் நச்சு கலந்து விட்டு, ஏதோ ஒரு லோட்டா தண்ணி தான் நச்சு என்றால், பரலோகயாத்திரை தான்.
கேலி சித்திரத்துக்கு நன்றி. காப்புரிமை அதில் சுட்டியபடி.


இன்னம்பூரான்

28 11 2011 


2011/11/27 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? lfon445l.jpg

Geetha Sambasivam 27 November 2011 21:40


எனக்கெல்லாம், மாதக்கடைசியில் டண்டெணக்கா!, //

உண்மையே.  சொல்லப் போனால் மாதம் நடுவிலேயே திண்டாட்டம் ஆரம்பிக்கும்.  ஜனவரி, பெப்ரவரி, மார்ச், மூன்று மாதங்கள் சம்பளம் அப்படியே வருமான வரிக்குப் போகும்.  முன் கூட்டியே திட்டமிட்டு மாசா மாசம் கட்டக் கூடாதா என்பார்கள்.  சொல்வது சுலபம்.  மாசாமாசம் வரிக்குக் கட்டும் பணம் இருந்தால் பல செலவுகளைச் சமாளிக்கலாம்னு அப்போ தோணும்.  இந்த மூன்று மாதங்களுக்கும் குடித்தனம் நடத்த பிராவிடென்ட் ஃபன்ட் தான் கை கொடுக்கும். ஆறு மாசத்துக்கு ஒருதரம் பிராவிடென்ட் ஃபன்டிலே ஸ்பெஷல் சாங்க்‌ஷன்ன் வாங்கிப் பணம் எடுத்துத் திடீர்ச் செலவுகளைச் சமாளித்திருக்கிறோம்.  


----2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>




‘காலங்காலமாக அரசு ஊதியம் மிகக்குறைவு; ஆளுமை, அதிகாரம் மிக அதிகம்; வேலை நிரந்தரம். மேலா நினைத்தால், இடமாற்றம். இந்த கலோனிய சூத்திரத்தை முறைகேடாக தலைகீழ் பாடம் ஆக்கியது அரசியலர்கள்.’ என்பதை விளக்க வேண்டும். தற்காலம் அரசு ஊதியம் கணிசமாக ஏறியும், லஞ்சம் தென்படுகிறது. என் மாதிரி பத்தாம்பசலிகள் காலத்தில், எனக்கெல்லாம், மாதக்கடைசியில் டண்டெணக்கா!, ஆரம்பித்த தினம் முதல். 1991ல் பென்ஷன் பணம் சுண்டைக்காய். ஆனால், லஞ்சம் வாங்கினவர்களுக்கு அவமானம். மிகக்குறைவு. ஆளுமை/ அதிகாரம் இருக்கத்தான் செய்யும். ஒரு ரெவென்யூ இன்ஸ்பெக்டர் படாத பாடு படுத்த முடியும். அதற்கு கட்டுப்பாடு, மேற்பார்வை. அது காணாமல் போய்விட்டது. 


இன்னம்பூரான்
28 11 2011 



Raja sankar 30 November 2011 07:49


கண்டிப்பாக ஐயா. அரசு ஊழியர்களுக்கு சங்கம் வைக்க உரிமை உண்டு. அதே நேரம் மற்றவர்களை போல் சங்க உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? நகை செய்வோர் சங்கத்தில் போலி நகை பற்றி புகார் கொடுத்தால் உங்களுக்கு பணம் திருப்பி கிடைப்பது உறுதி. புகார் கொடுக்க போகிறோம் என்று சொன்னாலே உடனே பணம் வந்துவிடும். நகை செய்வோர் சங்கமே மத்தியஸ்த எடை போட்டு தருவார்கள். அதிலே பிரச்சினை வந்தால் உடனடியாக கேள்வி கேட்கலாம். சிறு வியாபரிகள் சங்கமே அவர்களை குண்டர்கள், அரசியல் கட்சி வசூல்களில் இருந்து பாதுகாக்கிறது. இப்படி நிறைய சொல்லமுடியும். உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்.

ஆனால் அரசு ஊழியர்களிடம்? இந்த பிரச்சினை தான் கசப்புணர்வை உருவாக்குகிறது. உரிமை மட்டும் ஓக்கே கடமை கிடையாது என்றால் யாருக்கு தான் கோபம் வராது.

//இதற்கெல்லாம் துணை போன பொது மக்கள் அரசு ஊழியர்களை மட்டும் காய்ச்சுவதை விஷயம் தெரிந்தவர்களே வழி மொழிந்தால், நம் நாட்டுக்கு விமோசனம் இல்லை. கிணற்றில் நச்சு கலந்து விட்டு, ஏதோ ஒரு லோட்டா தண்ணி தான் நச்சு என்றால், பரலோகயாத்திரை தான்.//

பொது மக்களுக்கு வேறு வழி இல்லை. ஒன்று லஞ்சம் கொடுத்து உசிரை காப்பாற்றிக்கொள்வது இல்லையேல் லஞ்சம் கொடுக்காமல் இருந்து பட்டினியால் பரலோகம் போவது. இதிலே எது சரி என பொது மக்கள் முடிவு எடுப்பார்கள்????
அரசு ஊழியர்களிடம் இருக்கும் லஞ்சத்தை கண்டு சக அரசு ஊழியர்களுக்கே கோபம் வராத போது எப்படி மற்றவர்கள் முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்ப்பது?

எல்லோரும் திருந்த வேண்டும் தான். அதை அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஆரம்பித்து வைக்கலாம் என்று மட்டும் சொல்கிறேன்.

ராஜசங்கர்

Innamburan Innamburan 30 November 2011 08:02
To: mintamil@googlegroups.com
எல்லோரும் திருந்த வேண்டும் தான். அதை அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஆரம்பித்து வைக்கலாம் என்று மட்டும் சொல்கிறேன்.
~  நானும் அதை வழி மொழிகிறேன்.  சில இடங்களில் செய்தும் வருகிறோம். பொது மக்களுக்கு விஇப்புணர்ச்சி ஏற்படுத்துவதும் நலன் பயக்கும். ஒரு பெரிய சமுதாய பிரச்னையை, யாவரும் இணைந்து தான், தீர்க்கவேண்டும். இன்று நாம் மிகவும் அச்சப்படுவது: அரசியலர் ஆளுமை + குற்றம் புரிவோர் சங்கம்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்



ஆருஷி கொலை வழக்கு

அப்டேட்: 26 11 2013
ஆருஷி கொலை வழக்கில் அவளது பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதியின் 210 பக்க தீர்ப்பின் சாராம்சம்:

‘...இந்த வழக்கில் முடிவு காணும் தருணத்துக்கு வந்து விட்டோம். கொலை செய்தது இவர்கள் தான் என்பது யாதொரு சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டு நிரூபணம் ஆகி விட்டது. குழந்தைகளின் காவலர்கள் அவர்களின்  பெற்றோர்கள் தான். அது தான் மனித இயல்பு. ஆனால் தன் சந்ததியை மாய்த்த பெற்றோர்களும், இயற்கைக்கு முரண்படாக இருந்திருக்கிறார்கள். 14 வயது மகளையும் வேலைக்காரனையும் இரக்கமில்லாமல் கொன்று விட்டார்கள். ‘கொலை செய்யக்கூடாது’/இறைவனின் புனிதபரிசு ஆகிய உயிரை எடுக்காதே’ என்ற விவிலிய/புனித குரான் ஆணைகளை மீறி விட்டார்கள். தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டி சாட்சியங்களை அழித்திருக்கிறார்கள்..’

அந்த குடும்பத்தினர் சார்ந்த பதிவு ஒன்றை காண நேர்ந்தது. அதை பற்றி நான் எழுதவில்லை, பண்பை மதித்து.

முழு தீர்ப்பு இங்கே: http://www.scribd.com/doc/187237668/Aarushi-Talwar-Murder-Case-Judgment-Nov-26-2013-Sessions-Trial-Case



இன்னம்பூரான்


ஆருஷி கொலை வழக்கு

Innamburan S.Soundararajan 25 November 2013 12:41



ஆருஷி கொலை வழக்கு

வரலாற்றுப்பக்கங்களில் கொலைகள் பல பதிவாகி உளன. சில கொலை வழக்குகளை மக்கள் காதல் கதைகளை விட அதிக விருப்பத்துடன் படிக்கிறார்கள் -அப்போதும், இப்போதும், எப்போதும்.

சாக்க்ரெட்டீஸ்-ஹெம்லாக், ஏசு-சிலுவை,
குடைக்காம்பினால் குத்தி பிளேக் கிருமியை புகுத்திக்கொன்றதாக ஒரு வழக்கு. மர்மமாக மறைந்த மேஜோ குமாரின் சவம், டெ லா ஹே கொலையும் கடம்பூர் சாக்ஷியும், இந்து நேசன் லக்ஷ்மீகாந்தன் தன் கொலையாளியை மடக்கியது, ஆளவந்தார்-தேவகி உல்லாசமும், கொலையும், அஹூஜாவை நானாவதி கொன்றது, அண்ணல் காந்தி கொலை, இந்திராவை சுட்ட மெய்க்காப்பாளர்கள், ராஜீவ் காந்தி படுகொலை என்ற நீண்ட வரிசையில்

(கெட்டிக்காரத்தனமாக நான் டைம்லைன் கொடுக்கவில்லை. கேட்டுக்கொடுத்தால் தான் சுவை),

செல்லபெண்ணாக வளர்ந்து அநியாயமாக சின்ன வயதிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அழகி ஆருஷி சேர்ந்துகொள்கிறாள். இன்று (25 11 2013) அவளுடைய பெற்றோர்களான ராஜேஷ் தல்வாரும், நூபுர் தல்வாரும் கொலைக்குற்றவாளிகள் என்று கோர்ட் தீர்ப்பு.

நடந்தது என்ன?

மே 16, 2008: பிரபல பல் டாக்டர்களான ராஜேஷ் தல்வாரும், நூபுர் தல்வாரும் சிறுமி ஆருஷி தன் படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்டுப் பிணமாகக் கிடந்ததை பார்த்தார்கள். ஹேம்ராஜ் என்ற நேபாளி வேலையாள் மீது சந்தேகம்.
மே 17, 2008: ஹேம்ராஜின் பிணம் மொட்டை மாடியில்.
மே 18, 2008: கச்சிதமாக டாக்டர் வெட்டுவது போல வெட்டுக்குத்து, இந்த கொலைகளில்: போலீஸ்.
மே 23, 2008: ஆருஷியின் தந்தை கைது.
மே 31, 2008: சி.பி.ஐ. வழக்கை எடுத்துக்கொள்கிறது.
ஜூன் 13, 2008: கம்பவுண்டர் கிருஷ்ணா கைது. பத்து நாட்களுக்கு பிறகு அண்டை வீட்டு வேலைக்காரன் விஜய் மண்டல் கைது.
ஜூலை 12, 2008: ராஜேஷுக்கு ஜாமீன்.
ஜனவரி 5, 2010: ராஜேஷை நார்க்கோ டெஸ்ட் செய்ய சி.பி.ஐ. மனு.
டிசெம்பர் 29, 2010: ராஜேஷ் மீது தான் சந்தேகம் என்ற சி.பி.ஐ., சாட்சியம் போதாததால், வழக்கை முடித்து வைக்கக்கோருகிறது.
இனி மேல் தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.
பார்க்கலாம்.
இன்னம்பூரான்
25 11 2013









Sunday, November 24, 2013

செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்:அன்றொரு நாள்: நவம்பர் 25


அப்டேட்: 25 11 2013
தற்செயலாக சில நிகழ்வுகள் அமைந்து விடுகின்றன. நேற்றைய ஆண்டோ பீட்டர் அஞ்சலி அவ்வாறு அமைந்தது தான். அவரை கேலி செய்தேன். தத்தியோதனம் அருளினார். I miss him. இன்றைய சமர்ப்பணத்தில் நூறு வயது வாழ்ந்து சில நாட்கள் முன்னால் மறைந்த பூரணி அவர்களுக்கு அஞ்சலி/சமர்ப்பணம்.
திரு.வி.க. வருகிறார். அவரை பற்றிய பேச்சு வரும்போது, அவருடைய பிரசன்னம் ஒரு நன்நிமித்தமே. அதனால் தான் மீள்பார்வை மடலாடலும்.
இன்னம்பூரான்
அன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்

Innamburan Innamburan 25 November 2011 16:40

அன்றொரு நாள்: நவம்பர் 25
செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்

பெண்ணியத்தை பற்றி நாலு வார்த்தை சொன்னால் போதும். மொட்டைத்தலை ஆணுக்குக் கூட முடி சிலிர்க்கும். ஃபெப்ரவரி 6, 2011 அன்று மின் தமிழர்கள் எனக்கு ராஜோபசாரம் செய்தார்கள். என் விருந்தினராக, கவிஞர் க்ருஷாங்கினியும், கணவர் நாகராஜனுடன் வந்திருந்தார். பூரணி~ க்ருஷாங்கினி ~நீரஜா என்ற மூன்று தலைமுறை பெண்ணியத்தை சார்ந்த அவர், அதை பற்றி நாலு வார்த்தை மென்மையாக சொன்னார். பட்டிமன்றத்தின் களை கூடியது. யாரும் தவறாக பேசவில்லை. ஆனால் ‘ஆணின் நியாயம்’ ஈனக்குரல் எடுத்து, சப்பைக்கட்டுக்கட்டியது. அதை அவிழ்த்து,‘மங்கையராய்ப்பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’  என்று கவிமணியுடன் பாடுவதுடன் நிற்காமல், மனமுவந்து திரு.வி.க. அவர்களுடன் ‘பெண்ணின் பெருமை’ யை போற்றும் நாள் வந்து விட்டது. அது நவம்பர் 25 தேதி, வருடந்தோறும். பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறையை எதிர்த்து போராடும் நாளாக 1981 லிருந்து பெண்ணியம் குறித்துள்ளது, அந்த தினத்தை. அது சம்பந்தமான டைம்-லைன்.

1. November 25, 1960: மிராபெல் சகோதரிகள் நால்வர். அவர்கள் தென்னமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு என்ற பொய்யியல் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தார்கள். சர்வாதிகாரி ராஃபேல் ட்ருயியோ, அவர்களை ஆள் வைத்து கொலை செய்தான். ஒருவர் தப்ப, மூவர் செத்தனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தினம்.

2. 1981: பெண்ணியம் மிராபெல் சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தத் தொடங்கிய வருடம். சும்மா 20 வருட தாமதம் அவ்வளவு தான்.

3. டிசம்பெர் 17, 1999: ஐ.நா. தீர்மானம் 54/134. நவம்பர் 21ஐ ‘பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறையை எதிர்த்து போராடும் நாளாக’ ‘அதிகாரபூர்வமாக’ அறிவித்தது. சும்மா 40 வருட தாமதம். அவ்வளவு தான்.

4. நவம்பர் 25, 2011: அரை நூற்றாண்டு கழிந்தும் பெண்களுக்கு காபந்து இல்லை.

சமீபத்தில் மின் தமிழில் இடுப்புவலியை பற்றி சில எண்ணங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. எண்ணங்களை தவிர்த்து, வலியை மட்டும் நோக்கினால், வலி நிவாரணத்துறையில் நற்பெயர் எடுத்த என் பிள்ளை ‘ஒருவர் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளமுடியாது. எனினும், நிவாரணம் அளிக்க நாங்கள் ஓரளவு புரிந்து கொள்ளவேண்டும். அதற்கென்ற அளவுகோலின் எல்லை அறிந்து, பணிவுடன் செயல்படுகிறோம்.’ என்று சொல்வது ஆண்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பு என்க. மேற்கத்திய நாடுகளின் பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தந்தையை அனுமதிக்கிறார்கள்; ஊக்கப்படுத்துகிறார்கள். ஏனெனின், ஓரளவு புரிந்து கொள்ளமுடியும். இதோ பாருங்கள், கவிஞர் க்ருஷாங்கினி, ‘இரட்டுற மொழிதல்’ பாணியில், பிரசவித்தலையும், வாஷிங் மெஷினின் செயல்பாட்டையும்’ இணைத்து எழுதிய கவிதையை:
“அடைத்து உள்செலுத்தியும்
கதவை அழுத்தி மூடியபின்
நீரும் நிழலும் அதற்குள்ளேயே
திரவத்தில் மிதக்கும்,
உருளும், புரளும்
உரிய நேரம் வரும்வரை
சுழன்று சுழன்று மேலெழும்பும்
அறைக்குள் சிறைவாசம்
சிறுதுளை வழியே உள்நீர் வெளிவடிய
உச்சக் கட்ட அலறலுக்குப் பின்
கையிரண்டு இழுத்துப்போட
சுற்றிய கொடியும் ஈரமணமுமாக
ஏந்திய பாத்திரத்தில் இறக்கி கீழே விழும்.”

 உருக்கமான கவிதை. நெருடலான கருத்து. அதிரவைக்கும் உவமை. நற்றாயை பற்றிய இலக்கியமிது.
இப்போது ‘கால்கட்டு’ இல்லத்தரசியை காண்போம். நீலா கண்ணன் மின் தமிழில் மே 8, 2010 அன்று அனுப்பிய சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு!. அதிலிருந்து ஒரு பகுதி:
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, அசோக்குமார் கங்குலி இருவரும் இல்லத்தரசிகளின் முக்கியத்துவத்தை அலசிப் பார்த்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
"வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதன்படி, வாகன விபத்துக்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படுகிறது. அது தவறான வகைப்படுத்தல்" என்று கண்டித்திருக்கும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, இல்லத்தரசிகளின் பணி எத்தகையது என்பதையும் விளக்கியிருக்கிறார் தனது தீர்ப்பில்...
பணத்தால் மதிப்பிட முடியாத கொடை!
"இல்லத்தரசிகளின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது. வீட்டு வேலைகள், குழந்தைகளின் படிப்பு, கணவரின் ஆரோக்கியம் என்று அவர்கள் பணத்துக்காக இந்த அன்பையும் உழைப்பையும் கொடுக்கவில்லை. கொடையாக(Gratuity) வழங்குகிறார்கள். வேலையாள் வைத்து செய்யும் இந்த வேலைகள், அவர்களின் எதிர்பார்ப்பற்ற சேவையைப் போல் இருக்காது. எனவே, அவர்களின் பெருமதிப்பை, பங்களிப்பை இந்த நீதிமன்றம் அறியும். அதை அங்கீகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தீர்ப்பு எழுதப்படுகிறது..." என்று கூறி, கீழ் கோர்ட்டையும், குறிப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளாததையும் கண்டித்து தீர்ப்பு வழங்கினார்.
"குறைந்தபட்சம் மோட்டார் வாகனச் சட்டப்படி கணவனின் வருவாய் அடிப்படையிலாவது இந்த பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கியிருக்க வேண்டும். அதன்படி ரூபாய் ஆறு லட்சம் நஷ்டஈட்டை வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து கணக்கிட்டு வட்டியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டதோடு, வழக்குக்கான செலவுத் தொகையையும் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி!
கணவனின் சம்பளத்தில் பாதி மனைவிக்கு!
இல்லத்தரசிகளை நாட்டுக்குப் பொருளாதார ரீதியாக பயன்தராதவர்கள் பட்டியலில் வைத்துள்ளதை கடுமையாக கண்டித்து தீர்ப்பு எழுதியிருக்கிறார் மற்றொரு நீதிபதியான அசோக்குமார் கங்குலி.
"2001-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். பிச்சை எடுப்பவர்கள், விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் இல்லத்தரசிகளையும் சேர்த்துள்ளனர். இது பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம். குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களை, பொருளாதார அளவில் பயன்தராதவர்கள் பட்டியலில் எப்படி சேர்க்கலாம்? வேலைக்குச் செல்லும் கணவனின் வருமானத்தில் பாதியை, வீட்டையும்... குழந்தைகளையும் கவனிக்கும் அவருடைய மனைவியின் பணிகளுக்கான சம்பளமாக மதிப்பிட வேண்டும்" என்று தீர்ப்பு கூறிய கங்குலி,
"கடந்தாண்டு இதேமாதிரி சென்னையைச் சேர்ந்த மைனர் பெண் தீபிகாவின் தாயார் விபத்தில் மரணமடைந்த வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பில், பெண்களின் வீட்டுப் பணிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து, அவற்றையும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தோடு சேர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது இந்த வழக்குக்கும் பொருந்தும்" என்றதோடு,
சட்டத்தை திருத்துங்கள்!
"இந்தியாவில் பெண்களின் வீட்டுப் பணிகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். இதற்கான சட்டத் திருத்தை மோட்டார் வாகன சட்டத்தில் மட்டுமல்ல... திருமணங்களுக்கான சட்டத்திலும் கொண்டு வந்து இல்லத்தரசிகளுக்கு அவர்களுக்கான அங்கீகாரத்தை, மரியாதையை வழங்க வேண்டும்!" என்று வலியுறுத்தி வரைந்துள்ளார் இந்த முக்கியமான தீர்ப்பை!
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இது காமன் சென்ஸ் இல்லையோ? உச்ச நீதி மன்றம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா? உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், சட்டத்துறை எல்லாவற்றிலும் இருப்பது ரிஷ்ய சிருங்கர்களா? அல்லது சுகபிரும்ம ரிஷிகளா? ‘வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள்’ என்பது தான் தற்கால பொது அணுகு முறை என்றால், ஆண்கள் பிள்ளை பெறவேண்டும். குறைந்தது பிள்ளை கொடுக்காமலாவது இருக்க வேண்டும். வெட்கக்கேடு.
அது தான் போகட்டும். தாத்தா பாட்டிகளை பாருங்கள். அன்யோன்ய தம்பதி என்றால், தொண்டு கிழம் ஆனபிறகு ‘உங்களுக்கு பிறகு நான் அமங்கலியாக போகிறேன். உங்களால் தனிமையை தாக்குப்பிடிக்கமுடியாது’ என்று தமிழக பாட்டிகள் சொல்லி கேட்டிருக்கிறேன். அது ஒரு தியாக உணர்ச்சி, யதார்த்தம் என்றாலும், ஆணின் பலவீனத்தை ஃப்ரேம் போட்டு காட்டுகிறது. 
இதற்கு மேல் எழுதினால், யாரும் படிக்க மாட்டார்கள். ஏற்கனவே நீண்டு போய்விட்டது. இன்றைய இழையை செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வது ஒரு யக்ஞம்.பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறை உலகெங்கும் காலங்காலமாக அமலில் உள்ளது. அதை தண்டிக்கும் சட்டம் போட்டால் ஆயிரம் விதண்டாவாதம். இத்தனை தூரம் பேசியாச்சு. இதையும் சொல்லி விடுகிறேன். இங்கிலாந்தில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் வேலை செய்யும்போது, பக்கத்தில் Victim Support. அடடா! எத்தனை சிக்கலான கேஸ்கள். என்னே கரிசனம். நான் அனுபவம் என்று சொன்னால், உடனே முதுமையின் குரல் என்று நினைத்து விடுகிறார்கள். வெளியூரிலிருந்து எல்லாம் domestic violence  பிரச்னைகளுடன் ‘திக்கற்ற பார்வதிகள்’ வரும் போது, கல்லும் உருகி விடும். ஆனால், அவர்களின் ரகசியத்தை காப்பாற்றி, முழு பாதுகாப்பு அளித்து, சட்டரீதியாக சண்டை போட வழி வகுக்கும் போது, மனது கனத்து விடுகிறது. ஒரே ஒரு கேஸ். கொஞ்சம் விவரம் சொல்லலாம். 20 வருடம் வாழ்ந்த பிறகு ஒருத்தி தனித்து விடப்படுகிறாள், ஆங்கிலம் கூட தெரியாமல். நாள் தோறும் அவளை, கைத்தாங்கலாக, கவனித்து, குடியுரிமை வாங்கிக்கொடுத்து, வேலை வாங்கிக்கொடுத்து, வீடு அமர்த்தி. அடேயப்பா! அந்த மையம் செய்த உபகாரத்துக்கு, அந்த மையமே சொர்க்கத்துக்கு தகுதி. இவற்றையெல்லாம் என் ஆய்வுக்கு எடுத்ததால், அனுபவம். வயது ஏறியதால் அன்று. இதே இங்கிலாந்தில், ஒரு செல்வந்தர் வீட்டு இல்லத்தரசி ஒதுக்கப்பட்டாள். உள்ளூர் வக்கீல்கள் கூட உதவ தயங்கினார்கள். அந்த அவலக்ஷணம் இந்தியாவில் அதிகம். ‘வாழாவெட்டி’ என்ற சொல்லே நம் நாகரீகத்தின் துன்ப வரவு. ஆனாலும் ஒரு நல்ல வார்த்தை சொல்லி முடித்து விடுகிறேன். போன நூற்றாண்டின் முன்பகுதியில் ஒரு தொண்டு கிழவர் மைலாப்பூரில் சொந்த செலவில் ஒரு Victim Support நடத்திக்கொண்டு இருந்தார். எத்தனை ப்ரெஷர் வந்தாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவருடைய ஆத்மா இன்றைய தினம் பக்கதில் நிற்பதாக தோன்றுகிறது.
இன்னம்பூரான்
25 11 2011
16days_drum.jpg
 உசாத்துணை:


Geetha Sambasivam 25 November 2011 19:24


அருமையான அலசல்.  பெண்களைப் போற்றும் தன்மை ; உணர்வுகளை மதிக்கும் தன்மை; யதார்த்தம் அனைத்தும் கலந்தது. க்ருஷாங்கினியை மின் தமிழ் ஆண்டு விழாவிலும் பின்னர் உங்கள் வீட்டிலும் சந்தித்தேன்.  அவ்வளவு பழக்கம் இல்லை.  ஆனால் பெயர் மட்டும் அறிமுகம். அவர்கள் கவிதையை இங்கே பகிர்ந்தமைக்கும் நன்றி.
இல்லத்தரசிகளின் சேவைக்கு மதிப்பெல்லாம் போட்டுக் கட்டுப்படியாகாது.  தன்னலமற்ற சேவை.
2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 25

. போன நூற்றாண்டின் முன்பகுதியில் ஒரு தொண்டு கிழவர் மைலாப்பூரில் சொந்த செலவில் ஒரு Victim Support நடத்திக்கொண்டு இருந்தார். எத்தனை ப்ரெஷர் வந்தாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவருடைய ஆத்மா இன்றைய தினம் பக்கதில் நிற்பதாக தோன்றுகிறது.

இன்னம்பூரான்
25 11 2011

Innamburan Innamburan 25 November 2011 19:37

நன்றி, திருமதி கீதா,

நீங்கள் கொண்டு வந்த அரிசி உப்புமா காந்தலை அனுபவித்து சாப்பிட்டவர்களில், க்ருஷாங்கினி ஒருவர். அந்த மீட்டிங்கை பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை 'திண்ணை' இதழில் பார்த்தேன். மறுபடியும் தேடி பார்க்கிறேன். It is a pity that Rajam, Sita and Subashini and Anto missed the Anto Special. I did not want to name today's as Rajam Special, lest it be construed as a wrong signal. Your comments, I look forward to. 
All the best,
Innamburan


Subashini Tremmel 25 November 2011 19:48

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
அருமையான பார்வை.
2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 25
செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்


...

"2001-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளனர். பிச்சை எடுப்பவர்கள், விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் இல்லத்தரசிகளையும் சேர்த்துள்ளனர். இது பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம். குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களை, பொருளாதார அளவில் பயன்தராதவர்கள் பட்டியலில் எப்படி சேர்க்கலாம்?
2 குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளை பட்டியலிட்டு அதற்கு வேலையாள் வைத்து பார்த்தால் எவ்வளவு செலவாகும் என யோசித்துப் பார்த்தால் தெரியும் இவர்கள் பொருளாதார அளவில் பயன்பெறாதவர்களா என்று.
ஜெர்மனியில் குழந்தைகள் பராமரிக்க மனைவி வீட்டில் இருக்க நேரிட்டால் கணவனின் சம்பளத்தொகையில் வரிப்பணத்தில் கணிசமான சலுகை வழங்கப்படுகின்றது. இதன்வழி மனைவியின் பொருளாதாரத் தேவைகளையும் சமாளிக்க முடிகின்றது.
அதே சமயம் வீட்டில் குழந்தைகளைப் பராமரித்த மனைவியை விட்டு கணவன் பிரிந்தாலோ அல்லது மனைவியே விரும்பி கணவனிடமிருந்து பிரிந்தாலோ திருமணத்திற்குப் பின் அவர்கள் இருவரும் சேர்த்த சொத்து சரி பாதியாக பிரிக்கப்பட்டு மனைவிக்கும் 50% என வழங்க சட்டம் உள்ளது. மனைவி அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் வேலை செய்யாமலிருந்தாலும் இதே நிலை. அதனால் பல ஜெர்மன் ஆண்கள் திருமணத்திற்கு பயப்படுகின்றார்கள் என்பது ஒரு புறமிருக்க பெண்களுக்கு இங்கு இல்லத்தைப் பராமரிப்பதில் சமூக பொருளாதார அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது நோக்கப்பட வேண்டிய விஷயம்.

.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இது காமன் சென்ஸ் இல்லையோ? உச்ச நீதி மன்றம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா?

யர் சொன்னாலும் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் மாற்றம் வராத போது என்ன செய்வது? 

உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், சட்டத்துறை எல்லாவற்றிலும் இருப்பது ரிஷ்ய சிருங்கர்களா? அல்லது சுகபிரும்ம ரிஷிகளா? ‘வருவாய் இல்லாதவர்கள் பட்டியலில் இல்லத்தரசிகள்’ என்பது தான் தற்கால பொது அணுகு முறை என்றால், ஆண்கள் பிள்ளை பெறவேண்டும். குறைந்தது பிள்ளை கொடுக்காமலாவது இருக்க வேண்டும். வெட்கக்கேடு.

இல்லையே.. பிள்ளை பெறவில்லையென்றால் மனைவியை ஒதுக்கி விட்டு இன்னொரு பெண்ணை தேடுவதை சரி என அங்கீகரிக்கும் சமூகமல்லவோ நம்முடையது..!
..
இதற்கு மேல் எழுதினால், யாரும் படிக்க மாட்டார்கள். ஏற்கனவே நீண்டு போய்விட்டது. இன்றைய இழையை செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வது ஒரு யக்ஞம்.பெண்ணினத்தை பாதிக்கும் வன்முறை உலகெங்கும் காலங்காலமாக அமலில் உள்ளது. அதை தண்டிக்கும் சட்டம் போட்டால் ஆயிரம் விதண்டாவாதம். இத்தனை தூரம் பேசியாச்சு. ...
உங்கள் மனத்தின் ஆழத்திலிருந்து வரும் சொற்கள் என படிக்கும் போதே தெரிகின்றது. அருமை.. அருமை.
சுபா