Monday, November 25, 2013

ஆருஷி கொலை வழக்கு

அப்டேட்: 26 11 2013
ஆருஷி கொலை வழக்கில் அவளது பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதியின் 210 பக்க தீர்ப்பின் சாராம்சம்:

‘...இந்த வழக்கில் முடிவு காணும் தருணத்துக்கு வந்து விட்டோம். கொலை செய்தது இவர்கள் தான் என்பது யாதொரு சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டு நிரூபணம் ஆகி விட்டது. குழந்தைகளின் காவலர்கள் அவர்களின்  பெற்றோர்கள் தான். அது தான் மனித இயல்பு. ஆனால் தன் சந்ததியை மாய்த்த பெற்றோர்களும், இயற்கைக்கு முரண்படாக இருந்திருக்கிறார்கள். 14 வயது மகளையும் வேலைக்காரனையும் இரக்கமில்லாமல் கொன்று விட்டார்கள். ‘கொலை செய்யக்கூடாது’/இறைவனின் புனிதபரிசு ஆகிய உயிரை எடுக்காதே’ என்ற விவிலிய/புனித குரான் ஆணைகளை மீறி விட்டார்கள். தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டி சாட்சியங்களை அழித்திருக்கிறார்கள்..’

அந்த குடும்பத்தினர் சார்ந்த பதிவு ஒன்றை காண நேர்ந்தது. அதை பற்றி நான் எழுதவில்லை, பண்பை மதித்து.

முழு தீர்ப்பு இங்கே: http://www.scribd.com/doc/187237668/Aarushi-Talwar-Murder-Case-Judgment-Nov-26-2013-Sessions-Trial-Case



இன்னம்பூரான்


ஆருஷி கொலை வழக்கு

Innamburan S.Soundararajan 25 November 2013 12:41



ஆருஷி கொலை வழக்கு

வரலாற்றுப்பக்கங்களில் கொலைகள் பல பதிவாகி உளன. சில கொலை வழக்குகளை மக்கள் காதல் கதைகளை விட அதிக விருப்பத்துடன் படிக்கிறார்கள் -அப்போதும், இப்போதும், எப்போதும்.

சாக்க்ரெட்டீஸ்-ஹெம்லாக், ஏசு-சிலுவை,
குடைக்காம்பினால் குத்தி பிளேக் கிருமியை புகுத்திக்கொன்றதாக ஒரு வழக்கு. மர்மமாக மறைந்த மேஜோ குமாரின் சவம், டெ லா ஹே கொலையும் கடம்பூர் சாக்ஷியும், இந்து நேசன் லக்ஷ்மீகாந்தன் தன் கொலையாளியை மடக்கியது, ஆளவந்தார்-தேவகி உல்லாசமும், கொலையும், அஹூஜாவை நானாவதி கொன்றது, அண்ணல் காந்தி கொலை, இந்திராவை சுட்ட மெய்க்காப்பாளர்கள், ராஜீவ் காந்தி படுகொலை என்ற நீண்ட வரிசையில்

(கெட்டிக்காரத்தனமாக நான் டைம்லைன் கொடுக்கவில்லை. கேட்டுக்கொடுத்தால் தான் சுவை),

செல்லபெண்ணாக வளர்ந்து அநியாயமாக சின்ன வயதிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அழகி ஆருஷி சேர்ந்துகொள்கிறாள். இன்று (25 11 2013) அவளுடைய பெற்றோர்களான ராஜேஷ் தல்வாரும், நூபுர் தல்வாரும் கொலைக்குற்றவாளிகள் என்று கோர்ட் தீர்ப்பு.

நடந்தது என்ன?

மே 16, 2008: பிரபல பல் டாக்டர்களான ராஜேஷ் தல்வாரும், நூபுர் தல்வாரும் சிறுமி ஆருஷி தன் படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்டுப் பிணமாகக் கிடந்ததை பார்த்தார்கள். ஹேம்ராஜ் என்ற நேபாளி வேலையாள் மீது சந்தேகம்.
மே 17, 2008: ஹேம்ராஜின் பிணம் மொட்டை மாடியில்.
மே 18, 2008: கச்சிதமாக டாக்டர் வெட்டுவது போல வெட்டுக்குத்து, இந்த கொலைகளில்: போலீஸ்.
மே 23, 2008: ஆருஷியின் தந்தை கைது.
மே 31, 2008: சி.பி.ஐ. வழக்கை எடுத்துக்கொள்கிறது.
ஜூன் 13, 2008: கம்பவுண்டர் கிருஷ்ணா கைது. பத்து நாட்களுக்கு பிறகு அண்டை வீட்டு வேலைக்காரன் விஜய் மண்டல் கைது.
ஜூலை 12, 2008: ராஜேஷுக்கு ஜாமீன்.
ஜனவரி 5, 2010: ராஜேஷை நார்க்கோ டெஸ்ட் செய்ய சி.பி.ஐ. மனு.
டிசெம்பர் 29, 2010: ராஜேஷ் மீது தான் சந்தேகம் என்ற சி.பி.ஐ., சாட்சியம் போதாததால், வழக்கை முடித்து வைக்கக்கோருகிறது.
இனி மேல் தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.
பார்க்கலாம்.
இன்னம்பூரான்
25 11 2013









No comments:

Post a Comment