Tuesday, April 9, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 10: திரைகடலோடிய இந்தியா!




அன்றொரு நாள்: ஏப்ரல் 10: திரைகடலோடிய இந்தியா!
22 messages

Innamburan Innamburan Tue, Apr 10, 2012 at 4:48 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா!

‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.

இந்தியாவின் மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்களில், தடியெடுத்தவன் எல்லாம் தாண்டவராயர்களான மாதிரி, எத்தியோப்பாவிலும் 1769 -1855 காலகட்டத்தில் மூலைக்கொரு மகராசா வந்து, ராஜ்யத்தைக் குலைத்து, நாட்டாண்மையும், கட்டைபஞ்சாயத்தும் செய்து கொண்டிருந்தனர். 1855ல் லிஜ் காசா ஹைலு ( அருமையான பெயர்!) என்பவர் தன்னை சக்ராதிபதி திவொட்டரோஸ் II (தியோடர்?) என்று முடி சூட்டிக்கொண்டு, வரிசையாக எதிரிகளை வீழ்த்தி, பகை தேடிக்கொண்டார். நல்ல மனிதர்.  சோம்பேறி பிரபுக்களை உதைத்து, ஏழை பாழைக்கு உதவினார். அடிமை வணிகத்தை ஒழிப்பதில் கணிசமான வெற்றி. பிரஜை விரும்பிய ராஜா. ராணுவத்தை துப்பாக்கி, தளவாடங்கள் வாங்கி, தடபுடல் செய்ய பார்த்தார் மாவீரன். எல்லாம் தெரியும், ராஜ தந்திரத்தைத் தவிர. போறாக்குறைக்கு ஆத்திரக்காரன். அதனாலே புத்தி மட்டு. அதான் சாக்கு என்று திரைகடலோடி, இந்தியா எத்தியோப்பியாவை தாக்கியது. நடந்த கதை கேளும்.


renuka rajasekaran Tue, Apr 10, 2012 at 4:58 PM
To: Innamburan Innamburan

இப்படியும் நிகழ்ந்ததா!
எங்களைப் போன்றவர்களுக்கு இவையெல்லாம் தெரியாதே!
எத்தனைப் பொது இருட்டடிப்பிலே நாங்கள் வளர்ந்திருக்கிறோம்?
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 1:03 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சொல்லுங்க, கேட்டுக்கிறேன்.  இது குறித்து அரிச்ச்சுவடி கூடப் படித்ததில்லை. இந்தியாவும் இன்னொரு நாட்டைத் தாக்கியது என்பதே புதுச் செய்தி.

On Tue, Apr 10, 2012 at 9:18 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா

கி.காளைராசன்Wed, Apr 11, 2012 at 2:02 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/11 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
சொல்லுங்க, கேட்டுக்கிறேன்.  இது குறித்து அரிச்ச்சுவடி கூடப் படித்ததில்லை. இந்தியாவும் இன்னொரு நாட்டைத் தாக்கியது என்பதே புதுச் செய்தி. 
ஆமாம், அவசியம் சொல்ல வேண்டுகிறேன்.
இந்தியா எந்தஒரு நாட்டின் மீதும் போர் தொடுத்தது இல்லை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டுள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்



Innamburan Innamburan Wed, Apr 11, 2012 at 2:17 AM
To: mintamil , thamizhvaasal
கவனமாக இருந்த கீதாவுக்கும், காளைராஜனுக்கும் நன்றி.
[Quoted text hidden]

shylaja Wed, Apr 11, 2012 at 3:12 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan


2012/4/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா!
‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.>>>>>

ஷேபா?  பேரே  புதுமையா இருக்கே. 




இந்தியா  எத்தியோப்பாவைத்தாக்கினதா?  இந்த வரலாறெல்லாம்தெரியாமல் என்ன ஹிஸ்டரி பாடம் படித்தேனோ என்று  இரு்க்கு சொல்லுங்க இ சார்  வாசிக்க காத்திருக்கோம். 




Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 3:42 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal@googlegroups.com, Innamburan Innamburan
ஷேபா?  பேரே  புதுமையா இருக்கே. //

No. Rani Sheeba is very famous!  I know her name (at least)


Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 3:44 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
அறியாத ஒன்றைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி ஐயா.  எனக்குச் சரித்திரத்தில் ஈடுபாடு உள்ளதால் கவனம் எப்போதுமே இருக்கும். மற்றபடி அவ்வளவெல்லாம் புத்திசாலி இல்லை. 

On Wed, Apr 11, 2012 at 6:47 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
கவனமாக இருந்த கீதாவுக்கும், காளைராஜனுக்கும் நன்றி.

[Quoted text hidden]

rajam Wed, Apr 11, 2012 at 3:53 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
"Queen of Sheeba ('ஷீபா')," right? "Queen of Sheeba and Solomon" என்ற கதையில் வரும் அரசிதானே இவள்?  
"இ" சார் பல நாடுகளில் சூறாவளிச் சுற்றுப் பயணம். அதனால் ... இருக்கிற இடத்துக்கும் நேரத்துக்கும் ஏத்தபடி உச்சரிப்பும் மாறலாம் என்று நினைக்கிறேன். :-)




shylaja Wed, Apr 11, 2012 at 4:05 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
sheeba   தெரியும்     ஷேபான்னதால் கொஞ்சம் குழம்பினேன்!The Queen of Sheba - an exotic and mysterious woman of power - is immortalised in the world's great religious works, among them the Hebrew Bible and the Muslim Koran. She also appears in Turkish and Persian painting, in Kabbalistic treatises, and in medieval Christian mystical works, where she is viewed as the embodiment of Divine Wisdom and a foreteller of the cult of the Holy Cross. In Africa and Arabia her tale is still told to this day and, indeed, her tale has been told and retold in many lands!
[Quoted text hidden]
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Apr 11, 2012 at 6:57 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அந்தப் பகுதியில் அலைந்தவன் என்ற முறையில் இந்தப் பாமரனின் கருத்து
நேப்பியர் அனுப்பிய கப்பல் (பாலு அவர்கள் கவனிக்க) சென்னையில் இருந்து கிளம்பி மறவர்கள் அடங்கிய போர்ப்படையுடன் எரித்ரியக் கரையை அடைந்தது
அவர்கள் அங்கிருந்து கால்நடையாக ஆஃப்ரிக்காவின் மேற்குக் கரையில் இன்றைய கானாவில் உள்ள அக்ரா என்ற மலைநகருக்குச் சென்றது.  அங்குள்ள சர்வாதிகாரி அரசருடன் போர் நடந்தது
எத்தியோப்பியாவில் இருந்து நேப்பியர் படை சென்ற பாதையில் இன்றும் கருப்பழகிகள் நீணட கூந்தலுடன் தமிழகக் கோவில் சிலைபோல் கொள்ளை அழகுடன் இருப்பதைக் காணலாம்
எல்லாம் நேப்பியர் படை வீர மறவர்களின் கொடை என்று பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்
ஒருவர்கூட என்னைக் கெடுத்திட்டானே என்றூ கூச்சலிடவில்லை என்பது சிறப்பு என்று இன்ஸைட் ஆஃப்ரிக்கா என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்
இதன் நம்பகத்தன்மை நிறுவ என் பழைய குறிப்புகளைத் தேடவேண்டும் என் பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்
இடையில் இந்தப் பாமரப்பதிவில்  ஏதேனும் கருத்துப்பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்
நாகராசன்


[Quoted text hidden]

செல்வன்Wed, Apr 11, 2012 at 7:03 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எல்லாம் ஒத்துக்க முடியாத வாதம் இ சார். இந்த கணக்குபடி பார்த்தால் ப்ரிட்டிஷ் இந்தியா ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, துருக்கி, இத்தாலி, ஜப்பான், இராக் என பல நாடுகள் மேல் படை எடுத்துள்ளது. காலனிய இந்தியாவுக்கு எந்த சுதந்திரமும் இல்லை என்பதால் இது இந்தியா படை எடுத்த கணக்கில் வராது. ப்ரிட்டிஷ்காரன் கணக்கில் தான் வரும்
[Quoted text hidden]
-

Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 7:15 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: தமிழ் வாசல்
கன்னாபின்னாவென செல்வனை ஆதரிக்கிறேன்.  இது எத்தனையாவது ஆதரவு????



செல்வன் Wed, Apr 11, 2012 at 7:18 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


:-)))...கூட்டணி வெச்சு தேர்தலை சந்திக்கும் அளவு ஆதரவு கொடுத்தாச்சு:-)

--
செல்வன்



Nagarajan VadivelWed, Apr 11, 2012 at 7:41 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கூட்டணி வச்சா அப்புறம் குழப்புவீங்களே
வெட்கப்படாம கிழக்கிந்தியக் கம்பெனி ஆண்டதையும் ஒத்துக்கனும்
மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து அரசியும் அரசரும் இந்தியாவின் அரசராக முடிசூட்டிக்கொண்டார்கள்
தமிழகத்திலிருந்து பலரும் டில்லியில் நடந்த மறு பதிப்புப் பட்டமளிப்பு விழாவிலே பங்கு கொண்டார்கள்
தன் இசையின் மீது மாறாத காதல் கொண்டு அவர் தேச பக்திப்பாடல்களைப் பதிப்பிக்க உதவி செய்த வி.கிருஷ்ணசாமி ஐயர் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் பதவி பெற்றதும் வெறுத்து ஒதுக்கிய பாரதியும் நான் ஆங்கில அரசாண்மையை ஏற்றுக்கொள்கிறேன் என்று வம்படியாக எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கியது பிரிட்டிஷ் அரசு
நேப்பியர் அனுப்பிய மறவர் படை பற்றி நிறையச் செய்திகள் உண்டு.
அப்படை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியாவின் படை
என் கூட்டணி ‘இ’ ஐயா பக்கமே
நாகக்ராசன்
[Quoted text hidden]

செல்வன் Wed, Apr 11, 2012 at 7:59 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/11 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
கூட்டணி வச்சா அப்புறம் குழப்புவீங்களே
வெட்கப்படாம கிழக்கிந்தியக் கம்பெனி ஆண்டதையும் ஒத்துக்கனும்
மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து அரசியும் அரசரும் இந்தியாவின் அரசராக முடிசூட்டிக்கொண்டார்கள்
தமிழகத்திலிருந்து பலரும் டில்லியில் நடந்த மறு பதிப்புப் பட்டமளிப்பு விழாவிலே பங்கு கொண்டார்கள்


எவனோ முடிசூட்டி கொண்டால் அவனை நாங்க மன்னனா ஏத்துக்கணுமா நாகராசன் ஐயா? அவனை நம்ம மக்கள் யாரும் மன்னனா ஏற்கலை. அவனாதான் தான் மன்னன்னு சொல்லிகிட்டு இருந்தான். கிழக்கிந்திய கம்பனி இந்தியாவை காலனி ஆதிக்கதுகுட்படுத்தியது. ஆனால் அதன் படையெடுப்புக்கு எல்லாம் இந்திய மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எத்தியோப்பியாவுக்கும், இத்தாலிக்கும், ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் என்ன பகை?அவர்கள் மேல் நாம் ஏன் படை எடுக்கணும்?
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Apr 11, 2012 at 8:26 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
செல்வன் ஐயா
இப்ப இருக்குற ஆட்சி மட்டும் பெரும்பான்மையான மக்கள் விருப்பத்தோடு தேர்ந்தெடுத்த ஆட்சியா என்ன?
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம்போட்டிருந்த பல மன்னர்கள் இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை என்பதே உண்மை
சர்தார் பட்டேலின் இரும்புக்கரம் கொண்ட அணுகுமுறையில் மட்டுமே இந்திய மன்னர்கள் சுதந்திர இந்தியாவுக்குள் வந்து இணைந்தனர்
அவ்வாறு முயற்சி செய்தபோது வடகிழக்கில் உள்ள மேகாலயா அரசர் டில்லியில் தான் இந்தியாவுடன் இணைவதற்குமுன் தன் குடிகளை அழைத்து அவர்கள் கருத்தறிந்து சொல்வதாகச் சொல்லிச் சென்றார்
அங்கு அவர் குடிமக்கள் மரபு வழியாக வரும் மன்னர் ஆட்சிமுறையை விலக்கி இந்தியக் குடியாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்
அவரும் டில்லியில் சென்று தன் குடிமக்களின் கருத்தைக் கூறினார்
ஒரு துளியூண்டு நிலத்தில் உள்ள பழங்குடிமக்களின் கருத்தை அறிந்து வியந்த நேரு அவர்கள் இந்தியாவில் அவர்கள் இணைந்தபின்னும் அவர்களின் அரசரும் அவர் தர்பாரும் தொடரும் என்றும் மன்னர் வழக்குகளைப் பைசல் செய்ய முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் அந்த்ஸ்தைப் பெறுவார் என்றூ அரசியல் சட்டத்தில் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்
மக்கள் விருப்பப்படி இன்றும் அரசர் தர்பார் மந்திரிகள் என்று இருந்து மக்கள் மரபு போற்றப்படுகிறது
மக்கள் கருத்தை அறிந்து இந்தியாவை ஆளமுடியமா செல்வன் சார்
நாகராசன்


2012/4/11 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

செல்வன் Wed, Apr 11, 2012 at 8:30 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/11 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
செல்வன் ஐயா
இப்ப இருக்குற ஆட்சி மட்டும் பெரும்பான்மையான மக்கள் விருப்பத்தோடு தேர்ந்தெடுத்த ஆட்சியா என்ன?

இப்ப இருப்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சிதான் ஐயா.

இந்தியாவோடு சேரமாட்டேன் என சொல்ல மன்னர்களுக்கு என்ன உரிமை உள்ளது?அவர்களே ப்ரிட்டிஷ்காரன் காலை பிடித்து பதவி வாங்கியவர்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் அல்ல.
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Apr 11, 2012 at 8:48 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சரி சரி இது முடியறமாதிர்த் தெரியல எனக்கு முடியல
போற போக்கிலே இந்திய ராணுவத்துக்கு அஸ்மாராவிலே என்ன வேலை என்று கேட்டீக
இலங்கையில் ஐ.பி.கே எஃப் க்கு என்ன வேலை ஏன் போனார்கள்?
இப்பொழுது நடந்து முடிந்த இறுதிப்போரிலும் இண்டிய ராணுவத்தினரைப் போர்முனையில் பார்த்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்
இலங்கையில் ராணுவ உதவி அளிக்க என்ன முகாந்திரம்
இனிமேல் பேசினா ராணுவத்தை அனுப்புவீங்க நான் ஜூட்
நாகராசன்



செல்வன் Wed, Apr 11, 2012 at 8:55 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/11 Nagarajan Vadivel
இலங்கையில் ஐ.பி.கே எஃப் க்கு என்ன வேலை ஏன் போனார்கள்?

அது அமைதிப்படை ஐயா. போனதும் அண்டைநாட்டுக்கு. அஸ்மாராவுக்கு அல்ல.

இப்பொழுது நடந்து முடிந்த இறுதிப்போரிலும் இண்டிய ராணுவத்தினரைப் போர்முனையில் பார்த்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்

வதந்திங்க.சூடுகண்ட பூனை மறுபடி பாலை குடிக்குமா?

Innamburan Innamburan Wed, Apr 11, 2012 at 12:07 PM
To: mintamil@googlegroups.com
அர்ஜெண்டா ஒரே ஒரு விளக்கம், கீதாவுக்கும், ஷைலஜாவுக்கும். வெண்குடை சாலோமன், தனது ராணியை ஷேபா என்று தான் கூப்பிடுவார். ராஜம் சொல்வது என்றுமே சரியாக இருக்கும். பேராசிரியர் நம்ம கொடியை தூக்கிப்பிடித்து இருக்கிறார். நன்றி பல. மார்கட்டெங்க் ஆசாமிகளுக்கு, வரலாறு இரண்டாம் பக்ஷம். மற்றவை பிறகு.
இன்னம்பூரான்
2012/4/11 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]


இன்னம்பூரான்
10 04 2013

நோபெல் திருவிழா பகுதி-4

Innamburan Innamburan Thu, Oct 11, 2012 at 12:28 PM
To: mintamil , thamizhvaasal , vallamai@googlegroups.com, vallamai editor , தமிழ் சிறகுகள்

நோபெல் திருவிழா
பகுதி-4
இன்னம்பூரான்Inline image 1
11 10 2012
இலக்கியத்துக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படும் முன்னதாகவே, ஊடகங்களில் பல பெயர்கள் அடிபடுகின்றன. கூர்மையாக விவாதிக்கப்படுகின்றன, ஆங்காங்கு பட்டி மன்றங்களில். அவற்றில், ஹரூகி முரகாமி (Haruki Murakami) என்ற ஜப்பானிய நாவலாசிரியர் பெரிதும் பேசப்படுகிறார். இஸ்மாயில் காதரே என்ற அல்பேனியரும், மோ யான் என்ற சீனரும், சீஸ் நூடெபூம் என்ற டச்சுக்காரரும், ஐயான் மக்வான் என்ற ஆங்கிலேயரும், பாப் டைலான் என்ற பிரபல பாடலாசிரியரும், ஃபிலிப் ரோத் என்ற தடிமன் நாவல் புகழ் அமெரிக்கரும், கார்மெக் மெக்கர்த்தி என்ற மற்றொரு அமெரிக்கரும், அமேஜ் ஓஸ் என்ற இஸ்ரேலியரும், மிகவும் அதிக ஊதியம் பெற்று வரும் டாஸிய மெரைனி என்ற இத்தாலிய பெண்மணியும், களத்தில் இருப்பதாக அசரீரிகள் அங்குமிங்கும் ‘விர்’ ‘விர்’ என பறந்த வண்னம் உள்ளன.
இந்த விநாடி. ஓடி வந்த ஃப்ளாஷ்: மோ யான் என்ற புனைப்பெயரில் பல மொழிகளில் எழுதி வரும் திரு குவான் மோயே (Guan Moye) பரிசை தட்டிச்செல்கிறார். ஒரு வேளாண்மை குடும்பத்தில் 1955ல் வடகிழக்கு சைனாவில் பிறந்து வளர்ந்த மோயே, 12 வயதில் பள்ளிப்படிப்பை உதறிவிட்டு, விவசாயம், தொழிற்சாலையில் ஊழியம் என சென்று விட்டார். 1976ம் ஆண்டு ‘மக்கள் விடுதலை ப்படையில் சேர்ந்த பின், இலக்கியம் படிக்கத்தொடங்கினார். எழுதவும் தொடங்கினார். முதல் சிறுகதை வளி வந்தது 1981ல். 1986ல் வெளி வந்த குறு நாவல் Touming de hong luoboம் 1993ல் வெளிவந்த ஃப்ரென்ச் நாவல் Le radis de cristal ம் அவருக்கு புகழ் தேடித்தந்தன. அவருடைய படைப்புகளில் வரலாற்று மோகமும், பாமர கீர்த்தியும், சமுதாய குறை காணலும் அதிகம்.
கற்பனையையும், நிஜத்தையும் , வரலாற்று/சமூக வரலாற்றுத்துணுக்குகளாக, ரசவாதம் செய்து, கிழக்குக்கும், மேற்குக்கும் உகந்த இலக்கிய பாலங்கள் அமைத்தார். 
******



Iyappan KrishnanFri, Oct 12, 2012 at 8:25 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
// ‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே! //  

IST = Indian Stretchable Time க்கு இது சரி பட்டு வருமா?

மனித நேயம் 1




மனித நேயம் 1
29 messages


Innamburan Innamburan Wed, Nov 18, 2009 at 12:35 AM
To: mintamil

நேற்று சென்னையில் ஒரு அற்புதம் நடந்தது. சென்னையை தாயகமாகக் 

கொண்ட வடநாட்டு முதியவரொருவர் (79) இயற்கை எய்தினார். கண் தானமும் 

நடந்தது. தற்காலம், இந்த பணி அதிகரித்துவருவது நற்செய்தியென ஒரு 

பக்கமிருக்க, இச்ச்சான்றோனின், ஒரு கண்ணை எடுத்தது, அவரது திருமகனார். 

மற்றொன்றை எடுத்தது, வீட்டிற்கு வந்த திருமகள். அவர்கள் இருவரின் 

மனநிலை எவ்வாறு இயங்கியிருக்கும் என்று நினைக்கவே நம் மனம் 

கலங்குகிறது. அந்த முதியவரின் பெயர்: டாக்டர் அகர்வால், பிரபல கண் 

மருத்துவர்.

இன்னம்பூரான்

Tthamizth Tthenee Wed, Nov 18, 2009 at 3:42 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பஞ்ச பூதங்களுடன் மீண்டும்  கலக்கும் இந்த உடலை  இந்த உலகில் வாழும் மற்றவர்க்கு உபயோகப்படும்படி   தானம் செய்தல் உண்மையான  மனிதாபிமானம்
 
அதில் வரும் இது போன்ற  சில வருத்தங்களை நாம் சமாளிக்க வேண்டியதுதான்
 
அப்போது நாம் ஒரு பெரிய அரிய செயலைச் செய்த த்ருப்திக்கு ஆளாவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
18-11-09 அன்று, Innamburan Innamburan <innamburan@googlemail.com> எழுதினார்:



Venkatachalam Subramanian Wed, Nov 18, 2009 at 4:58 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஓம்.
உறுப்புதானம் செய்யும் நற்பணி தற்போது செயறேபடுகின்றது.. உறுப்புதானத்தின் விளைவாய் தமிழுக்கு ஒரு புதிய சொல் கிடைத்திருக்கிறது.

’உதானம்= உறுப்பு தானம்.’

என்தாயார் மாதுஸ்ரீ சங்கரிஅம்மாள் அவர்களின் விருப்பப்படி அவர்களது கண்கள் இரண்டும் இரண்டு பார்வையற்றோருக்கு தலா ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன.

எவருக்கு தரப்பட்டது என்பதை மறைபொருளாக வைக்கச் சட்டம் சொல்கிறது போலும்.ஏனெனில் பின் தொடர்ச்சி செய்வோர் உளர் என்றபதும் ஒருவகையில் சரிதான்.

இதில் மிகுந்த சிரமம் என்னவெனில், இறந்தவர் விரும்பினாலும், அங்கு குழுமும் சுற்றம் போதிய விழிப்புணர்வின்மையின் காரணத்தால் கண் தானம் செய்வது பாபம் என்பது போன்று ஓங்கிப் பேசித்  தடுக்கும். அதையும் மீறி செயற்பட உரிமையான நெருக்கம் மறுக்கும்.
தானம் செய்ய விருப்பம் உள்ள குடும்பத்தினர் உடனடியாகச் செய்ய வேண்டியட்வை:
  • கண்மருத்துவ மனையின் தொலைபேசியுடன் தொடர்புகொண்டு நம் முகவரியை தெளிவாகக் கூறி, வந்தடைவதற்கு தேவையான இடவிளக்கம்,அருகில் உள்ள அனைவருக்கும் தெரிகின்ற அடையாளங்கள் (லேண்ட் மார்க்) தெரிவிக்கவேண்டும்.
  • இறந்தவரின் இருகண்களிலும் சிப்ளாக்ஸ் கண்மருந்தை ஊற்றி இரு விழிகளையும் மூடவேண்டும்.
  • சிறிது ஐஸ் எடுத்து சர்ஜிகல் பஞ்சில் வைத்து விழிகளின் இமையின் மிது ஒற்றித் துடைத்தாற்போன்று வக்கவேண்டும்.
  • தலைப்பாகம் உடலை விட சற்று உயரத்தில் இருக்குமாறுஒரு தலையின் அடியில் தலையணையை வைக்கவேண்டும்.
  • மருத்துவ குழு தேவையான உபகரணங்கள் தர்மோஸ் பிளாக்ஸ் ஆகியவற்றுடன் வந்தவுடன் எவ்வளௌ விரைவாக அவர்களுக்கு உதவ முடியுமோ உதவிசெய்து அனுப்பவேண்டும்.
  • இவை சரிவர முடிந்தபின்னர் இதர நடைமுறைக் காரியங்கள்  செய்யலாம்.


  • அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Nov 19, 2009 at 3:50 AM
To: mintamil@googlegroups.com
வழக்கம் போல, ஓம் அவர்கள் நடைமுறை விளக்கமும் கொடுத்துள்ளார். நன்றி. இந்த இழையின் நோக்கம், மனிதநேயத்தின் நல்வரவுகளை, யாவரையும் பதிவு செய்ய வேண்டுவது. 

சான்று 2: 

விசனத்தில் ஆழ்ந்தோருக்கு, தக்கதொரு ஆறுதலும், ஆலோசனையும், முடிந்தால் அடைக்கலமும், வழங்குவது. ஓம் அவர்கள் இங்கிலாந்து நாகரீகம் பற்றி இரு அருமையான இணைப்பு அளித்துள்ளார். அந்த நாட்டின் மரபு ஒன்று, இருக்க இடமில்லாதோர்க்கு அடைக்கலம் அளிப்பது. பொதுவுடமை தத்துவத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸ், தனது நாட்டிலேயிருந்து துரத்தப்பட்டு, இங்கிலாந்தில் அடைக்கலம் நாடினார்
ஆஸ்திரிய முதல்வரோ, 'இவன் மஹாராணி விக்டோரியாவை கொலை செய்ய வருகிறான். துரத்தி விடுங்கள்' என்று ரகசியக்கடிதம் எழுதினார். அதை குப்பையில் போட்டுவிட்டு, அவருக்கு அடைக்கலம் அளித்தது, பிரிட்டீஷ் அரசு. பின் வந்த வரலாறு, உலகே அறியும்.
இன்னம்பூரான்

Monday, April 8, 2013

சமச்சீர் போஜனசாலை




சமச்சீர் போஜனசாலை
9 messages

Innamburan Innamburan Thu, Sep 2, 2010 at 6:21 PM
To: mintamil

சமச்சீர் போஜனசாலை

ஓர் அறிவிப்பு

இடம்: சாப்பாட்டுராமன் மேன்ஷன்ஸ் அனெக்ஸ், கடங்காரன் தெரு, திருவல்லிக்கேணி.

நேரம்: வைகறை 5 மணி (அளவில்) - நடுநிசி 12 மணி வரை

நல்வரவு: கட்டைபிரம்மசாரிகள் (முன்னுரிமை, மேன்ஷனாருக்கு), வழிப்போக்கர்கள், கிழம்ஸ், கிருஹஸ்தாள் (அவர்கள் மட்டும் ஸ்திரீஜனங்களை கூட அழைத்து வரலாம்; குடும்ப அறை கட்டாயம்: கட்டணம் உண்டு. அதை கட்டிவிட்டால், திருமணச்சான்றுகள் கேட்கப்படமாட்டா. )

மெனு: 
  • காலை 5 மணி (அளவில்): ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்திரி, பட்டை தட்டிப்போட்டு காய்ச்சி, அஸ்ஸாம் தேயிலை (தூள் அல்ல) தோய்த்து, பசும்பாலில் கலந்த கொதிக்கும் தேனீர். ரேடியோவில் ருத்ரம். எனவே நீவிர் மெளனம்; சத்தமில்லாமல் பிராணாயமம் செய்யலாம்
  • காலை 8 17 மணி (அளவில்): பரங்கி, காரட், வெள்ளரி, முருங்கை, பட்டாணி, தக்காளி ஆகியவை பொடி, பொடியாக துண்டடித்து கசக்கிய கருகவேப்பிலையும், நசுக்கிய இஞ்சியும், (வெங்காயம், பூண்டு ஆப்ஷனல்), ஒரு கரணைமுட்டை நல்லெண்ணையில் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு வெடித்து, சீரகம், பெருங்காயம், மல்லிபவுடர், சிறிது மஞ்சள் பொடி, மிதமாக கல்லுப்பு ஆகியவையுடன் ஸூப்பர் தாளிகை செய்து, கலவையை அரைவேக்காடு செய்து, கொத்தமல்லி தழையை தூவி, பொடித்த மிளகு சேர்த்து, கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து, இரு ப்ரெளன் ப்ரெட் பலகைக்குள் இட்டு சாண்ட்விச் செய்து தரப்படும். மென்று சாப்பிட்டால், ஆனை பலம் உத்தரவாதம்.
  • அத்துடன் ஃபில்டர் காஃபி.
  • மதியம் உச்சி வேளை (அளவில்) ஒரு பிடி பாசுமதி அரிசியில், முறைக்கும் சாதம், சாம்பார், ரஸம் (ஐயங்கார் ஸ்டைல்), கறியமுது, கூட்டு, சுட்ட அப்பலம், கடைந்த தயிர். சில தினங்களில் டாங்கர் பச்சடி அல்லது கோசுமல்லி.
  • மாலை 4 49 (அளவில்) சுண்டல், ஹெர்பல் டீ.
  • இரவு 8 03 (அளவில்) மல்லிப்பூ இட்லி 3 வித் தேங்காய்/வெங்காய சட்னி/ எள்ளு மொளகாய் பொடி
  • நடு நிசி என்று சும்மா போட்டோம். கதவு 8 57க்கு அடைக்கபடும்.
  • விலை பட்டியல்:; நாள் கணக்கு, தொட்டாலும், தொடாவிட்டாலும். வரவுக்கு ஏற்றபடி வேறுபடும். உள்ளே விசாரிக்கவும்.  மாதாந்திர அச்சாரம்: பத்தாயிரம் ரூபாய் (துல்லியமாக அட்ஜஸ்ட் செய்யப்படும்). 
  • டயபட்டீஸ்காரர்கள் குறைத்து சாப்பிட்டாலும், சலுகை கிடையாது.
  • விளக்கம்: எங்கள் விலை அதிகமாகப்பட்டாலும், இந்த உயர் தரம் எங்கும் கிடைக்காது.
- பிரத்யேக கெளரவ ஆலோசகர்: நளமாமணி திருமதி கீதா சாம்பசிவம்.
- ஏகபோக உரிமையாளர்: இன்னம்பூரான்.



செல்வன் Thu, Sep 2, 2010 at 9:23 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மென்யுவை படித்தாலே சாப்பிடணும் மாதிரி இருக்கு:-)

--
செல்வன்


Innamburan Innamburan Fri, Sep 3, 2010 at 12:46 AM
To: mintamil@googlegroups.com
முந்துங்கள்! முந்துங்கள்! திடீர் சலுகை!
செல்வன் போன்ற அர்த்தராத்திரி...களுக்கு, நடு நிசியில், காஷ்மீர் குங்குமப்பூ போட்டு சுண்டக்காய்ச்சிய எருமைப்பால்! ரூம் சர்வீஸ்! இலவசம்!

எச்சரிக்கை!
அவா அவா கூட்டிண்டு வர பொண்டுகளுக்கு, அவா அவாளே பொறுப்பு!

இன்னம்பூரான்

[Quoted text hidden]

ஆராதி Fri, Sep 3, 2010 at 1:26 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
என்ன திடீர் என்று இன்னம்பூரார்  மெஸ் ஆரம்பித்துவிட்டார்? வேண்டியவர் என்றாலும் என்னைப் போல் அசலூர்க்காரன் என்ன செய்வது?
அன்புடன்
ஆராதி
[Quoted text hidden]

vadivelu kaniappan Fri, Sep 3, 2010 at 3:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா! கழுக்குன்றத்திலிருந்து நான் வரலாமா? மெனுவைப் படித்துப் பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுதே. அனுமதி உண்டா? என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

3 செப்டெம்ப்ர், 2010 5:56 am அன்று, ஆராதி <aaraathi@gmail.com> எழுதியது:
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Sep 3, 2010 at 4:02 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அட??? இதைக் கவனிக்கவே இல்லையே?? நல்ல வேலை தான்.  எனக்குப் பிடிச்சதும் கூட.  நல்லாச் சமைச்சு பசியோட இருக்கும் ஒருத்தருக்குப் போட்டுட்டு அவங்க சாப்பிடறதைப்  பார்த்தாலே போதும், கண்ணீர் மட்டும் வராது. மனசு, வயிறு எல்லாம் நிறைஞ்சு போகும். நிறைய அநுபவம் உண்டு. அதனால் தாராளமா தயக்கமே இல்லாமல் ஏத்துக்கறேன்.  நன்றி. 

2010/9/2 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
[
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Sep 3, 2010 at 4:05 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
திருவல்லிக்கேணி பெரிய தெருவிலேயும், சாமிப்பிள்ளை தெருவிலேயும் (முன்னால் ரத்னா கஃபே இருந்ததுக்கு அடுத்த சந்து)  இருந்த என்னொட பெரியப்பா அங்கே இம்மாதிரி உள்ள ஒரு மெஸ்ஸில் தான் கிட்டத் தட்டப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டு வந்தார். எத்தனை வருஷங்கள்னு கணக்குத் தெரியலை.  ரிடையர் ஆகி இரு முறை வேலையில் நீட்டிப்புக் கிடைச்சுக் கடைசியா மதுரையில் அவர் செட்டில் ஆனது, 74-ம் வருஷம்னு நினைக்கிறேன். அது வரை திருவல்லிக்கேணி மெஸ் சாப்பாடுதான். எங்களையும் அழைச்சுப் போயிருக்கார். சுக்கு, மல்லிக் காபி பிரமாதமா இருக்கும்! சுண்டலும் உண்டு. 


[Quoted text hidden]

Swarna Lakshmi Fri, Sep 3, 2010 at 7:52 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
i will take care of bangalore branch :)




Innamburan Innamburan Mon, Sep 6, 2010 at 8:56 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan

இன்னும் முக்யமானவா - த.தே, ஷைலஜா, மீனா முத்து போன்றவர்களின் அறிவுரைக்குக் காத்திருக்கிறேன். மற்றபடி அறிவிக்கை 2 தயார். என்னே கற்பனை சக்தி! என்னை தான் சொல்கிறேன்! திருவல்லிக்கேணி மான்ஷன்ஸ் பற்றி திருமதி கீதாவின் ஃப்லாஷ்பேக் பார்த்த பிற்கு தான் தெரியும். ஆனா, தெரிஞ்சாப்லே அவிழ்த்து விட்டிருக்கேன், பாருங்கள். ஃப்ரான்ச்சைஸ் திருமதி. ஸ்வர்ணலக்ஷ்மிக்கு  ரிஸெர்வ்ட்.

இன்னம்பூரான்


சித்திரத்துக்கு நன்றி: 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEindnFHvk_D43cENWe2K-ia7DstRPCW0WehUv4r_Z0t5ivxJywHjGCGXEmxbcXiyfVku12jiCkhIB6ZPJHdXyHLSFKOo9-rHhnD_3qzMsXsSZAAZRlZXKoK0I4XT7Erh3wbeCSEBS2GAPA/s1600/51.jpg

நோபெல் திருவிழா பகுதி-3


Innamburan Innamburan 
10/10/12
to vallamaimintamilthamizhvaasalvallamai
நோபெல் திருவிழா
பகுதி-3
இன்னம்பூரான்
10 10 20121
Inline image 2
ரசாயனமா? ரசவாதமா? இதெல்லாம் ஒரு ரசவாங்கியா?என்ற வினாவுக்கு விடை எளிதில் கிடைக்காத அளவுக்கு, வேதியல் பீடுநடை போட்டு வருகிறது. அன்றொரு நாள், பேராசிரியர் லெஸ்லி லியெவ் (Leslie Loew) தீர்க்கதரிசியாக சொன்னமாதிரி: 
மைதானம் பெரியது அப்பனே. கால்பந்தும் விளையாடலாம்; எறிபந்தும் வீசலாம்; கூடை பந்தையும் எறியலாம்; பஞ்சுப்பந்தையும் ஆசையாக ஆடலாம். வசதியிருக்கு. இனி உன் வசதி.  மேற்படி உபமானம் என் சொந்த சரக்கு. லெஸ்லி லியெவ்: ‘விஞ்ஞானத்தின் இயற்பியலும், பெளதிகமும், வேதியலும், எல்லா இயல்களும் தனித்து இயங்காமல், கலந்து ரசவாதமாகத் தான் (என்ன தான்? கத்திரிக்காய் தான்!) இயங்குகின்றன; இயங்கவேண்டும். அதற்கான பாலங்களை சமைப்போம்’. பாரதியாரின் கனவை போல லெஸ்லி லியெவ் அவர்களின் ஆரூடம் பலித்ததை இன்று கண்கூடாகக்கண்டு மகிழ்கிறோம்.
வேதியலுக்கு ஆன நோபெல் பரிசு, இரு அமெரிக்கர்களுக்கு, சமமாக, பகிர்ந்து கொடுக்கப்பட்டது, இன்று: ட்யூக் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சார்ந்த ராபர்ட்.ஜே.லெஃப்கோவிட்ச் (Robert J. Lefkowitz) & ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சார்ந்த பிரயன்.கே.கொபில்கா (Brian K. Kobilka). இருவரும் ‘ஜி-புரதம்-தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கை’ ("for studies of G-protein–coupled receptors") என்ற வேதியல் ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புக்கு பரிசளிக்கப்பட்டனர். நான் ‘ரசவாங்கியை’ கொண்டுவந்ததின் காரணம் புரிகிறதா? பரிசு, வேதியலுக்கு. இருவரும் ஆராய்ச்சி செய்தது சமைத்தது, மருத்துவ மையங்களில் !!! ராபர்ட்.ஜே.லெஃப்கோவிட்ச், ஹோவர்ட் ஹ்யூஸ் மருத்துவ மையத்திலும், பணி ஆற்றினார். அந்த ஹோவர்ட் ஹ்யூஸ் உலக பெரிய கில்லாடி. ஒரே நாளில் உலகத்தின் வெள்ளி உலோக ஸ்டாக்கைக் கைப்பற்றி, புவனி முழுதும் (ஐயங்கார் வீடுகள் உள்பட) பரபரப்பு உண்டாக்கிய பிருகிருதி. போய்ட்டுப்போறான். அமெரிக்க மரபுக்கு ஒத்துப்போய் தன் ஆஸ்தியை முழுதும் நன்கொடையாக அளித்து விட்டார், அவர். உலகை ஆட்டிப்படைத்ததற்கு நோபெல் பரிசு கொடுத்தால் அவருக்குத் தான் முதலில்.
நமது உடலின் கோடிக்கணக்கான நுண்ணயவயங்கள் (திசு) (cells) ஒன்றுடன் ஒன்று உறவாடியவண்ணமே இருக்கின்றன. அவற்றில் ராஜா பார்ட், ஸ்திரீபார்ட், ராஜகுரு, பஃபூன் எல்லாம் உண்டு. கதாபாத்திரங்கள் எக்கச்சக்கம். அந்த ‘நாடகமே உலகம்’ பிரபஞ்சத்தில் எல்லாம் நுட்பமாக திட்டமிட்டபடி,லகுவாக, இயங்குகின்றன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கை எட்டிப்பார்க்கிறது. அவை சுற்றுவட்டாரத்தை அருமையாக நுகர்ந்து, ஸீன் எப்படி மாறினாலும், தடுமாறாமல், சமயோஜிதமாக நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் நம் ஒவ்வொருவரின் உடலில் இம்மாதிரியான சவால்களும், சமாளிப்புகளும் கோடிக்கணக்கில் நடந்து வருகின்றன. அவை எவ்வாறு இந்த இந்திரஜாலத்தை செய்து நம்மை, சமயோஜிதமாக, காப்பாற்றி வருகின்றன என்பதை நாம் இது வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பது விஞ்ஞானத்தின் வரலாறு. அந்த புதிரை அவிழ்த்து, ‘ஜி-புரதம்-தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கை’( G-protein–coupled receptors) மிகவும் நேர்த்தியாக, இடைவிடாமல், நடத்தி வரும் உள்கை நடப்பை ஆராய்ந்தறிந்து உலகுக்கு பிரகடனம் செய்தவர்கள்: ராபர்ட்.ஜே.லெஃப்கோவிட்ச் & பிரயன்.கே.கொபில்கா. ஐயாமார்களே! வாழ்க நீவிர்.
1968ல் அட்ரெலினின் திசுவின் தும்பிக்கையை, அதன் ‘குகை’யிலிருந்து வெளிக்கொணர்ந்தார், லெஃப்கோவிட்ச். கிஞ்சித்துப் புரிந்தது. 1980ல்கொபில்கா மேலும் பற்பல நகாசு வேலைகளிலும், புத்தம்புதிய வழிகளிலும் ஆராய்ந்து, ‘பீறாய்ந்து’ அட்ரெலினின் திசுவின் தும்பிக்கை, ஒளியை கண்கள் நுகரும் தும்பிக்கை போன்றது என்றார். அதற்குத்தான் G-protein–coupled receptors என்று நாமகரணம் செய்யப்பட்டது. பஞ்சேந்திரியங்களின் நுட்பமான ‘புரிதலை’ புரிந்து கொண்டோம். இன்று தரணிதனில் உலவி வரும் மருந்து, மாயம், ஒளஷதாதி வகைகள், மூலிகைகள் எல்லாம் இந்த G-protein–coupled receptors மூலமாக தான் வேலை செய்கின்றன.
அதா அன்று.பலே! பலே! போன வருடம், கொபில்கா, G-protein–coupled receptors மிகவும் நேர்த்தியாக, இடைவிடாமல், நடத்தி வரும் உள்கை நடப்பின் காட்சியை படம் பிடித்து விட்டார். மன்னிப்பீர்களாக. ரொம்பவும் சுருக்கி விட்டேன். இல்லாவிடின், எனக்கு புரியாதது என்னவென்ற தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கைகளை ஆராய தொடங்கிவிடுவார்கள், சிலர்.
(தொடரும்)
இன்னம்பூரான்
10 10 2012

அன்றொரு நாள்: ஏப்ரல் 9: நன்னெஞ்சே!




அன்றொரு நாள்: ஏப்ரல் 9: நன்னெஞ்சே!
7 messages

Innamburan Innamburan Tue, Apr 10, 2012 at 1:33 AM

To: mintamil , thamizhvaasal


அன்றொரு நாள்: ஏப்ரல் 9:
நன்னெஞ்சே!
பகைவன் யார்? என்றென்றும் நிரந்தரமான பகைவன் யார்? அவனை என் செய்ய வேண்டும்? பதிற்றுப்பத்து இரண்டாவது பத்தில் முதல் பாடலாக, புலவர் குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ள வகையில், 
‘... அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்/ மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து/மனாலக் கலவை போல வரண்கொன்று/ முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை/ பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்/கடியுடை முழுமுத றுமிய வேஎய்/வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்...’ என்று வீரவணக்கம் செய்வதா? (பொருள்: முனைவர் மு.இளங்கோவன் அளித்தது: ‘... பகைவரின் மார்பைப்பிளந்து,அக்குருதி பெருக்கெடுத்து ஓடி,நீர்நிலையில் உள்ள நீலநிறம் குங்குமநிறமாக மாறியது.பகைவர்களின் அரண்களை அழித்தாய்.பகைவர்களின் கடப்பமரத்தை வெட்டி அழிக்கும்படி வீரரை ஏவியவன்.அம்மரத்தில் முரசம் செய்தாய்.இவ்வாறு போர் செய்யும் ஆற்றலும்,மாலை அணிந்த மார்பும் அறப்போர் செய்யும் படையையும் உடைய சேரலாதனே!) அல்லது  அத்தகைய கொடுமைகளை மறந்து,மஹாகவி பாரதியாரின் நன்னெஞ்சை துணைக்கு அழைப்பதா? மஹாகவி பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்த காலகட்டத்தில் அவரை நைச்சியமாக பிரிட்டீஷ் எல்லைக்குள் அழைத்து வந்து விடலாம் என்று ஒரு சதி நடந்ததாம். ‘அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்த போதிலும்..’ என்று வீரமுழக்கம் செய்த பாரதியார் மிருதுவான ஸ்வபாவம் கொண்டவர் என்றும், அவரை ஏமாற்றுவதும், பயமுறுத்துவதும் எளிது என்றும், அதனால் தான் அந்த சதிகாரனிடம் மாட்டிக்கொண்டாராம். விஷயம் அறிந்த வவேசு ஐயர் அவர்களும், அரவிந்தரும் ஓடோடிப்போய், அவரை மீட்டு, அந்த சதிகாரனை நைய புடைக்கத் தொடங்கினராம்.அத்தருணம், கருணை மேலிட, பாரதியார், 
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!....
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!...’
என்று பாடி அவனை காப்பாற்றினாராம். 
இது பாலபருவத்தில் படித்தது. ஆதாரம் தேடி வைத்துக்கொள்ள தெரியாத வயது.நினைவில் இருப்பதைச் சொன்னேன்.April 9
இது நினைவில் வர காரணம், ஏப்ரல் 9, 1865 அன்று நடந்த ஒரு நிகழ்வு. அமெரிக்காவில் அடிமை தளையை நீக்கவேண்டும் என்று அப்ரஹாம் லிங்கன் விடாக்கொண்டனாக இருக்க, தெற்கத்திய அமெரிக்க மாநிலங்கள் கொடாக்கண்டனாக இருக்க, உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்தது. ஏப்ரல் 9, 1865 அன்று தெற்கத்திய படைகளின் ராணுவத்தலைவர் ஜெனரல் ராபர்ட் லீ, ஐக்கிய அரசின் படைகளின் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் உலிஸீஸ் க்ராண்ட் அவர்களிடம், தோல்வியை ஒப்புக்கொண்டு, சரணடைந்தார். இருபக்கமும் பகை அதிகம் தான். நடந்த போரும் கடுமையானது தான். இருந்தும் அன்றைய தின சரண் சம்பந்தமான ஆவணங்களில், நாகரீகம், பண்பு, பெருந்தன்மை, அளவு கடந்த பரிவு ஆகியவை இடம் பிடித்துள்ளன. இரு ராணுவத்தலைவர்களும் பல மடல்களை பரிமாறிக்கொண்டனர். ஒன்றிலாவது விரோத மனப்பான்மை இல்லை. இருவரும், ‘Yours respectful Obedient Servant’ என்று தான் எழுதி, கையொப்பம் இட்டுள்ளனர்.ஒவ்வொரு சிப்பாயின் தளவாடங்கள், ஆயுதங்கள், சொத்து, பத்து ஆகியவற்றை பேணுவதை பற்றி,சமாதானம் நாடும், புண்களை ஆற்றும் உடன்பாடுகள். அதிகம் சொல்ல என்ன இருக்கிறது. நன்னெஞ்சு வேண்டும் தாயே!
இன்னம்பூரான்
09 04 2012
Inline image 1

உசாத்துணை:

Geetha Sambasivam Tue, Apr 10, 2012 at 1:36 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மிகத் தேவையான அவசியமான தகவல்களைப் பரிமாறிக் கொண்டதுக்கு மிக்க நன்றி.

On Tue, Apr 10, 2012 at 6:03 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொரு நாள்: ஏப்ரல் 9:
நன்னெஞ்சே!



உசாத்துணை:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

shylaja Tue, Apr 10, 2012 at 1:53 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே  என்கிறார் பாருங்கள்  அங்கேதான்  பாரதி நிற்கிறார்..வெறும் நெஞ்சம் பகைவனுக்கு அருளாது என மகாகவிக்கா தெரியாது?!  நன்னெஞ்சு முதலில் வந்தால்தான் பகைவனுக்கு அருள இயலும்.
 ‘பகைவனை நாம் சந்தித்துவிட்டோம்  அது நாம்தான்!’ என்கிறார்  போகோ என்னும் கேலிச்சித்திரக்காரர்!
பாரதியில்  பாடல்களில் பல  மனசில் எப்போதும் பதிந்தே நிற்கும் அப்படிப்பட்ட பாடலோடு இன்றைய உங்கள் பதிவு மனதை நிறைக்கிறது. ‘உன்னதத்தைதவிர வேறெதையும் நாம் ஏற்க மறுத்தால் அநேகமாய் அதுவே கிடைக்கும், வாழ்க்கையின் விசித்திரம் அது’ என்றார் ஆங்கில எழுத்தாளர்  சாம்ர்ஸெட்மாம். உன்னத நிலை எய்திவிட்டால் பாரதியின்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்  என்பதை உணரவாவது முடியும் எனதோன்றுகிறது!




Mohanarangan V Srirangam Tue, Apr 10, 2012 at 3:02 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan


On Tue, Apr 10, 2012 at 6:23 AM, shylaja <shylaja01@gmail.com> wrote:
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே  என்கிறார் பாருங்கள்  அங்கேதான்  பாரதி நிற்கிறார்..வெறும் நெஞ்சம் பகைவனுக்கு அருளாது என மகாகவிக்கா தெரியாது?!  நன்னெஞ்சு முதலில் வந்தால்தான் பகைவனுக்கு அருள இயலும்.
 ‘பகைவனை நாம் சந்தித்துவிட்டோம்  அது நாம்தான்!’ என்கிறார்  போகோ என்னும் கேலிச்சித்திரக்காரர்!
பாரதியில்  பாடல்களில் பல  மனசில் எப்போதும் பதிந்தே நிற்கும் அப்படிப்பட்ட பாடலோடு இன்றைய உங்கள் பதிவு மனதை நிறைக்கிறது. ‘உன்னதத்தைதவிர வேறெதையும் நாம் ஏற்க மறுத்தால் அநேகமாய் அதுவே கிடைக்கும், வாழ்க்கையின் விசித்திரம் அது’ என்றார் ஆங்கில எழுத்தாளர்  சாம்ர்ஸெட்மாம். உன்னத நிலை எய்திவிட்டால் பாரதியின்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்  என்பதை உணரவாவது முடியும் எனதோன்றுகிறது!




நன்றாக இருக்கிறது. அருமை. 

*

anantha narayanan nagarajan Tue, Apr 10, 2012 at 6:43 AM

To: Innamburan Innamburan
Cc: mintamil , thamizhvaasal , Innamburan Innamburan
இதைத்தான் போர் அறம் என்று சொன்னார் போலும் !
அரவக்கோன்
[Quoted text hidden]

shylaja Tue, Apr 10, 2012 at 7:20 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

அருளியதற்கு நன்றி!
[Quoted text hidden]
[Quoted text hidden]

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
[Quoted text hidden]

செல்வன் Tue, Apr 10, 2012 at 7:36 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அன்றைய ஆ.அ பற்றி நல்ல பதிவு. தெரியாத தகவ்ல்கள். நீங்க ஒரு தகவல் சுரங்கம்

-- 
செல்வன்