Showing posts with label 8. Show all posts
Showing posts with label 8. Show all posts

Saturday, September 10, 2016

சிவகாமியின் செல்வன் 8

சிவகாமியின் செல்வன் 8

 " தோழர்கேளஎனக்கோ  வயது  82 ஆகிறது ... இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம்   இரண்டாயிரம்மூவாயிரம் ஆண்டுகளில்  என்றுமே  நடந்தது  இல்லை. .நனது  மூவேந்தர்கள் அடுத்து  நாயக்க மன்னர்கள்மராட்டிய மன்னர்கள் முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை  செய்யப்படவில்லை. .தோழர்களே என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால்  இன்னும் பத்து ஆண்டுகளாவது. காமராசைர விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.. அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் காமராசைர  பயன் படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க  வேறு ஆளே சிக்காது.
 (இராமநாதபுர  மாவட்ட திராவிடக்  கழக நான்காவது மாநாடு. 9.7.1961-ல் தேவக்கொட்டையில் நடந்த பொது  தந்தை பெரியாரின் உரையின் ஒரு  பகுதி -17.7.1961 விடுதலை.
~ இது ஒரு நண்பர் அனுப்பியது. கீழே எனது பதிவு.

~  பெரியார் பெரியவர் காமராஜரை போற்றியது மட்டுமல்லாமல், அவருடைய வெற்றிக்கு அடி கோலியது: 1954லியே, அந்த 'ஏழு வருடங்களுக்கு' முன்பே. முதலமைச்சராக பதவியேற்ற பெரியவர் குடியாத்தம் தொகுதியில் இடைத் தேர்தலில் நிற்க விரும்பினார். யாவரும் அவருடைய வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் நிற்காமல், அவரின் சாதனை: அந்த இடை தேர்தலில் அவரை தோற்கடிக்க நினைத்த தி.மு.க., பெரியாரின் விருப்பப்படி, போட்டியிடவில்லை. பெரியவர்  கிட்டத்தட்ட நாற்பது ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்வு எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. 
இதற்கு பின்னர், பெரியாரின் சீடர்கள் அவருடைய பேச்சை கேட்டதாக வரலாறு இல்லை. காமராஜரை பற்றி அவர்கள் அவதூறுகள் பரப்பியதும் வரலாறு.

இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016


Friday, June 13, 2014

சிரிச்சு மாளலெ 8

*
சிரிச்சு மாளலெ 8



இன்னம்பூரான்
ஜூன் 13, 2014

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலெ, ஹிந்தி மொழியை அரசு அலுவலகங்கள் ஜோரா பயன்படுத்துகின்றனவா? என்று பீராந்து ஆராய பார்லிமெண்டரி கமிட்டிகள் வந்து உயிரை வாங்குவாங்க. நான் அவர்களிடம் இரு முறை சிக்கிக்கொண்டேன். அவர்களுக்கு எக்கசக்கமாக பரிசுகள் வாங்கவேண்டும். திண்டியா சோறு போடவேண்டும். நாங்களோ ஆடிட் பசங்க: அதுவும் குஜராத்தில்! சுஷ்கம் (கருமி). அதனாலெ, அவுங்களுக்குக் கடுப்பு. அலஹாபாத்துக்கு மேலெ ஹிந்தியில் பேசினாலும், கன்னா பின்னா வசவு கியாரண்டி. ஹைதராபாத்தில், ஸாலார் ஜங் ம்யூசியம் காட்றேன் பேர்வழி என்று காலம் கடத்தித் தப்பித்தேன். அஹமதாபாத்தில் வசமாக மாட்டிக்கொண்டேன். அங்கு குஜராத்தி தான் செல்லுபடி; ஹிந்தி அடுத்தபடி தான். ஃபார்முலா படி ஹிந்தி தட்டச்சு இயந்திரங்கள் ஏன் வாங்கவில்லை என்று வசை பாட ஆரம்பித்தவுடன், குஜராத்தி மிஷன்கள் தான் தேவை; ஹிந்தி மிஷின் வேஸ்ட் என்றேன், வாய் தவறி. தொலைந்தது! வசை மழை பொழிய தொடங்கியது. தாங்கமுடியாமல், ‘உரிய பதில் என்னிடம் இல்லை’ என்ற சால்ஜாப்பு பொருளில்,’மைம் தோ லாஜவாப் ஹூம்.’என்றேன். வழக்கு மொழியில், ‘எனக்கு நிகர் யாருமேயில்லை’ என்று அதற்கு பொருளாம். என் ‘அசட்டு தைரியத்தை’ கண்டு விக்கித்து போன கமிட்டியார் எனக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து, மீட்டிங்கை முடித்தார்கள். அதை கொண்டு வந்து கொடுத்தவர் ஒரு அ.தி.மு.க. எம்.பி. ‘நீங்க என்ன சொன்னீங்க? அந்த பிசாசுகள் நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறாங்க.’ என்றார், அவர். எனக்கும் மூச்சு வந்தது. எதற்கு இதை சொல்றேன். ஆமாம். இந்த மாதிரி கமிட்டிகளால், செலவு ஜாஸ்தி. பாருங்களேன். ரூபாய் 89 லக்ஷம் செலவில் ஆறு கோவா எம்.எல்.ஏ.க்கள் பிரேசீலுக்கு போய் கால்பந்து விளையாட்டுப்பார்க்கப் போறாங்களாம். முதல்லெ ‘அப்படித்தான் செய்வோம். இந்த பிரிதிநிதிகள் அங்கு போய் பார்த்து வந்து, கோவாவில் கால்பந்தாட்டம் பரவ, அதற்கு வேண்டியதை பரிந்துரைக்க, கூட்டத்தை மேய்க்க இத்யாதி கற்றுக்கொள்ள இந்த ‘ஜாலி’ பயணம் இன்றியமையாதது. ஆஹா ஊஹூ’ என்றார், முதல்வர். ஆனால், எதிர்ப்பு வளர்வதை கண்டு, அந்த பிரிதிநிதிகளே தங்கள் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்று முடிவாச்சாம். இல்லை. இல்லை. யாரோ இரு செல்வமிக்க கம்பெனிகள் தான் உபயம் செய்கிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஒரு சர்ச்சில் ஜோக் ஞாபகத்தில் வருது. இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் ஒரு யாத்திரை போகோணும். இரண்டு விமானம் புக்ட். சர்ச்சில் இந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார், கிளம்பறசமயத்தில். எல்லாரும் போய் அவர்கிட்ட ரத்து செய்தததை ரத்து செய்ய சொல்லி கேட்டபோது, அய்யா சொன்னாராம், ‘ரோசனை பண்ணிப்பாரு. ஒரு விமானம் விழுந்தாக்கூட, எத்தனை பை-எலெக்ஷன் செய்யணும் என்ன செலவு ஆகும். அதை பாரு’ என்றாராம்!
ஒரே சமாச்சாரம். எத்தனை கோணங்களடா!
-#-\
சித்திரத்துக்கு நன்றி:

Saturday, April 12, 2014

அல்லி டுக் ஓவர்: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 8



அல்லி டுக் ஓவர்: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 8

Innamburan S.Soundararajan Sat, Apr 12, 2014 at 3:43 AM




Inline image 2

அல்லி டுக் ஓவர்: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 8

இன்னம்பூரான்
12 04 2014

போடாதே! போடாதே! என் கணவா, வோட்டு
போடாதே! போட்டாலும், கேட்டுப்போடு, ராசாவே.
நோட்டா போட்டாலும் போடுவேண்டி.
கோட்டா படி அவன் காசு கொடுத்தாலும். 

பொல்லாத சொப்பனம் கண்டேன், ஐயா.
பொம்பளை பேச்சு கேளு, மச்சான்.
சொல்லாத வார்த்தை, வீசிடுவேன், ஆமாம்.
சொம்பிலே ஆவி பறக்க, வந்தாரே முனீஸ்வருரு!

[திரிலோக சஞ்சாரியும், வீணாகானப்பிரியரும், ஆண்டாள் கொண்டையும், பெருமாள் பூமாலையும் அணிந்தவருமான நாரத மகரிஷி, கார்மேகத்தினூடே பிருகாக்கள் உதிர்த்துக்கொண்டு, துக்கடாக்களை அனாயசமாக பாடிக்கொண்டும், மினி-நர்த்தனமாடிய வண்ணமாக, சுவர்க்கத்திலிருந்து சவுகார்பேட்டையில் வந்து இறங்கி, மெட்ரோ பிடிச்சு, நம்ம ஜில்லு வீட்டு வாசல்லே இறங்கி, ‘சிவகாமி’ என்று கனிவுடன் அழைத்தார். பாட்டியும் அவருக்கு ஷோடோசோபசாரம் செய்து, பேராண்டி உபயமாக, ஜிகிர்தண்டா வாங்கிக்கொடுத்து, அபின் கலந்த பீடா கொடுக்கவே, உச்சி குளிர்ந்த நாரதர், எலியட் பீச் சேரி வாழ் செங்கமலத்திடம்  உரைத்ததை கேளும், புவனமாளும் தமிழ் மாக்களே.

செங்கமலம்! செங்கமலம்! சத்தியவான் சோணாசலத்தின் பத்தினியே! நான் சவுடாலா பேசலையே. நீ கண்ட  பொல்லா சொப்பனம் நிசமா நடந்து விட்டால், நானும் அரிதாரம் களைந்து, வீணையை கூஜாவா மாத்திடுவேன். ஜால்ரா போட்டே காலத்தைக் கடத்திடுவேன். எதற்கும், கண்ட சொப்பனத்தை சொல்லவல்லாய், கிளியே! என்றார். 

‘ஆயிரம் கண்ணான் இந்திரன் என்று நினைத்தீரோ?
 போய் வாரும், கபட சன்னியாசியே! என்றதுமே,
 பாட்டி வந்து மத்தியஸ்தம் செய்து வைத்தாள்.
 மெட்டி குலுங்க, செங்கமலம் சொன்னாள். கேளும்.

ஐயமாரே! இந்த அநியாயம் கேட்டீரோ. அரசியல் கூடா நட்பு எல்லாம் பாடா படுத்தி, நொந்த நூடிலாக, எம்மை ஆக்கினது போராது என்று:
நைச்சியம் பல பேசி, புருஷன்மார் அல்லாரையும் டாஸ்மாக்குக்கு அனுப்பி விட்டு...
‘சொரணை புகழ்’ சொர்ணம்மாவும், அதிகார நந்தி வெற்றிக்கனியும், தலைக்கனம் துறவினியும், பழ- மொழியும், சூ! மந்திரக்காளி ப்ரத்யங்கராவும், சுதந்திரி மாமியும், கொள்கை விலக்கிய கூட்டணி வைத்து, மெஜாரிட்டி ஆகிவிட்ட மெஜாரிட்டி பெண்ணுலக ஆதரவினால், அரியணை ஏறி, ஆணாதிக்கத்தை அடக்கி ஆளப்போறங்களாம். தலை தெறிக்க ஓடின மன மோஹனாரும், மோடி மஸ்தானும், ‘புதுத்தமிழ்’ கொள்ளுத்தாத்தாவும், புத்தர் மகனாரும், முருகன் சாமியும், ஜில்லுடன் மல்லுக்கட்டிய லல்லுவும், அத்வானியுடன் அத்வானப்பயணம் போனாஹ.

[மேலும் பேச தயங்கினாள் செங்கமலம். ‘சொல்லடி, ராசாத்தி! என்றாள் பாட்டி.

பொல்லா சொப்பனமில்லை, பாட்டி, இது.
கல்லா பெட்டி திறந்தவங்களுக்கு காலமில்லை, இனிமேல்.
அல்லி டுக் ஓவர் என்றாள். 

தேவார்கள் பூமாரி பொழிந்தனர். மஹாவிஷ்ணுவை பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள். வக்ஷஸ்தல வாசினி.

சித்திரத்துக்கு நன்றி: http://suriyantv.com/wp-content/uploads/2011/05/DSC_0481.jpg







Monday, January 20, 2014

சிந்திப்போமே: 5 -8



சிந்திப்போமே: 5 -8

இது பலர் கருத்துக்கள் அடங்கிய நீண்ட தொடர் என்பதால் ஒரு குறிப்பு:


சிந்திப்போமே: 1 -4 : இதற்கு முந்திய பகுதி, இந்த வலைப்பூவில். அடுத்து வருவது ஒரு ஆங்கில பதிவு.


சித்திரத்துக்கு நன்றி: http://www.zenlawyerseattle.com/wp-content/uploads/2011/12/god-versus-science-time-magazine-cover.jpg
இன்னம்பூரான்
20 01 2014

Input 5:

இந்திய மெய்யியல் அணுகுமுறை அறிவியலுடன் போரிடாது; யுக்திக்கும்,
அனுபவத்துக்கும் பொருந்தி வருவனவற்றை முழுமையாக ஏற்கும் பண்புடையது அது.

ஆழ்துயில் காலத்தில் பொருட்களின் தொடர்பு நீங்கிய நிலையிலும் ஓர்
இன்பத்தை,  அமைதியை மனிதன் உணர்கிறான்; விழிப்பு நிலையிலும் அதை ஏன்
தொடரச் செய்யக்கூடாது என்று அறிவியல் பூர்வமாக ஆராய்வது வேதாந்தம்.

தொடர்பு நீக்கத்தின் முதல்படி ‘துறவு பூணுதல்’;  ஆனால் இன்றைய சூழலில்
அது வெறும் சடங்காகிப் போனது.

எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.

ஐயா சொல்வதுபோல் - We need to define precisely what is Science and what
is Religion from a Hindu perspective



தேவ்
Input 6:
>
> எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.
>
>
> தேவ்
>

ஆயிரம் முறை ஆமோதிக்கிறேன்.  இதைத்தான் இணையத்தில் எழுதத் தொடஙகிய நாளாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  மோசசுக்கு இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தது எந்த மலையில் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.  இதுவரை 14 மலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்தேன்.
பைபிளில் உள்ளதை பூகோள, விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்த முடிகிறது என்றால், மஹாபாரத ராமயணம் சொல்லும் உண்மைகளை அப்படி உட்படுத்த முடியாதா?  உதாரணமாக, மேரு என்று எந்த மலையைச் சொல்கிறோம் என்பதிலேயே நமக்கு இன்னமும் ஒரு தெளிவு இல்லை.  அனுமான் மருந்து மலையை நோக்கிப் புறப்படும்போது ஜாம்பவான் வழி சொல்லி அனுப்புமிடத்தில், இமயமலைத் தொடரைத் தாண்டி, உத்தரகுருவைத் தாண்டி, கைலாச மலையைத் தாண்டி மேருவுக்கு அப்பால் சஞ்சீவி பர்வதம் என்று சொல்லக் காண்கிறோம்.  மேருவுக்கு வடக்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து, சில கணங்களுக்கு ‘உதயம் ஆயிற்றோ’ என்ற தடுமாறிப் போய் பிறகு, ‘இது உதயம் இல்லை’ என்ற தீர்மானத்துக்கு அனுமன் வருவதைப் பார்த்தோம் (அனுமன் இலங்கையிலிருந்து கிளம்புகையில் இரவாக இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்).  அப்படியானால் இலங்கையிலிருந்து நேர்க்கோட்டில் மேரு இருந்திருக்க முடியாது.  கிளிமாஞ்சரோ மலைத்தொடரில் மேரு என்ற பெயரோடு ஒரு மலை இருக்கிறது.  கூகிள் செய்து பாருங்கள்.  இந்த டைம்ஜோன் குறிப்பை வைத்துக் கொண்டு எத்தனையோ இடங்களை அடையாளம் காண முடியும். கட்லர் சொன்னா ஒத்துப்பாங்க.  பட்லர் சொன்னா ‘போய்ட்டு வாய்யா‘ம்பாங்க.  
பாரதத்தில் உள்ள எத்தனையோ குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.  ஆனால் நமக்குதான் ஆத்துல ஒருகாலாச்சே.... இருக்கிற இடம் மதில்தானா இல்லையா என்பதையே இந்தப் பூனை இன்னமும் தீர்மானித்த பாடில்லையே.... என்ன பண்றது!
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
உங்களுக்கு நானும் எனக்கு மற்றவர்களும் அங்கணமாக இருந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.  (திருக்குறளில் வடமொழியே இல்லை என்கிறார்கள்.  கோட்டி என்பது, கோஷ்டி சொல்வது என்ற வழக்கின் அடிப்படையில் தமிழ் வடிவம் பெற்ற சொல் என்று திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு (கி வா ஜகந்நாதன் பதிப்பு) சொல்கிறது.  இதையே நம்ம ஆளுங்க ஒப்புக் கொள்ள மாட்டாங்க.  அப்புறம் என்ன மெய்ஞானத்துல விஞ்ஞானம்?)
மெய்ஞானத்தையும் உள்ளிட்டுக்கொண்டு இயங்கும் அளவுக்கு விஞ்ஞானத்தால் விரிய முடியும் என்கிறேன் நான்.  விஞ்ஞானத்தில் சாணிக்கு இடமில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  அவர்கள் துறையைப் பற்றி அவர்களுக்கு அந்த அளவுக்குதான் நம்பிக்கை இருக்கிறது.  அவ்ளதான். :))  கண்ணுக்கு முன்னால் உள்ள துரும்பு சூரியனை மறைக்கிறது என்றால் பிரத்தியட்ச பிரமாணப்படி, துரும்புதான் சூரியனைவிடப் பெரியது என்ற நிரூபிக்க முடியும்தான.  அப்படித்தான் நிரூபித்திருக்கிறார்களா?  நமக்கு மட்டும்தான் விஞ்ஞானம் தெரியும் என்பது நம்முடைய எண்ணம்.  விட்டுடுங்க.  இருக்கும் இடம் மதில்தானா என்பது பற்றி பூனைக்கு ஒரு நிச்சயம் ஏற்படட்டும்.  அதுக்கு அப்புறம் பேசிக்கலாம். :))
-- 
அன்புடன்,
ஹரிகி.
Input 7:

srirangammohanarangan v

 to indic-roots, mintamil
show details May 18 (5 days ago)
A cat on the wall joke
cat 1 :-- Hi meow!  Can you just tell me whether there is any wall under my feet?

cat 2 :-  Hi brrr you have no problem. may be you stand on nothing....
but  me...  oh  babre...

cat 1:-- why? whats about you?

cat 2:-- I have a feeling that the wall stands on me...and ..
the wall  is invisible and  limitless.
*******
Input 8:

மதில் மேல் பூனை! பூனையின் ஒன்பது வாழ்க்கை! இன்னும் எத்தனையோ?ஆங்கில இடுகைகளுக்கு மன்னிக்கவும். அவற்றை ஒதுக்கவும் முடியாது. மொழிபெயர்ப்பு செய்தாலும் யார் யார் படிப்பார்கள் என்று அறிய இயலவில்லை. நேரமோ போதவில்லை. இயன்றதை செய்வோம். 

இன்னம்பூரான்

5/18/10 5:12 PM