Showing posts with label காந்தி மஹான். Show all posts
Showing posts with label காந்தி மஹான். Show all posts

Thursday, October 1, 2015

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்


இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2015

Take that thine is, and go thy way: I will give unto this last, even as unto thee.
-Matthew 20:14

நீரின்றி அமையாது உலகு. நூலின்றி அமையாது அவ்வுலகின் மேன்மை. பொருளாதாரம் என்ற சொல்லைத் தவிர்த்து பொருளியல் என்று எகனாமிக்ஸ் என்ற துறையை வகைப்படுத்துவது சாலத்தகும்.  அத்துறையில் நான்கு நிபுணர்கள் இருந்தால், ஐந்து கருத்துக்கள் வலம் வரும் என்று கேலி செய்வதுண்டு. ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற பொருளியல் தந்தைகளால் போதிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளியல் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்னால் கூட, நமது பாடபுத்தகங்களில் கோலோச்சின. பின்னரும்!  இத்தனைக்கும் 1860லேயே அதில் புதைந்திருந்த பாகுபாடுகளை, சமுதாய அநீதிகளை அலசி உதறிய ஜான் ரஸ்கினின் ‘Unto This Last’ என்ற நூல் வலம் வந்து, சில மாற்றுக்கருத்துக்களை முன் வைத்தது. சான்றோரை சிந்திக்க வைத்தது. அக்காலத்து பொருளியல் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியது. அந்த நூல் புரட்சிக்கு வித்திடுகிறது என்று முதலாளித்துவம் அஞ்சியது.

விவிலியத்தில் ஒரு குட்டிக்கதை. திராக்ஷை தோட்டம் ஒன்று. முதலாளி காலையில் சில கூலிகளையும், பின்னர் சில கூலிகளையும் ‘ஆளுக்கொரு தம்பிடி’ என்று சொல்லி அமர்த்தினார். அவ்வாறே கொடுத்தார். சிரமத்துக்கு ஏற்ற கூலியில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தவர்களிடம், ‘நான் அநியாயம் செய்யவில்லையே! பேசியதை கொடுத்தேன். ["Friend, I do thee no wrong. Didst not thou agree with me for a penny? Take that thine is, and go thy way. I will give unto this last even as unto thee."] என்றார். சரி தான். ஆனால் சரியில்லை தான்.

அண்ணல் காந்தி புரட்சிக்கு வித்திடும் இந்த நூலை 1904ல், ஒரு ரயில் பிரயாணத்தின் போது படித்த போது, ‘ எடுத்த புத்தகத்தை முழுதும் படிக்காமல் வைக்க முடியவே இல்லை’ என்று தன்னுடைய சுயசரிதையில் பின்னர் எழுதினார். அவர் மேலும் சொன்னது, “...என்னை பிடித்து ஆட்டியது அந்த நூல். அதன் இலக்குகள் தான் எனக்கு அடிப்ப்டை போதனை...என் வாழ்வை அதற்கிணங்க அமைத்துக்கொள்வேன்... என்னுடைய மனத்தின் ஆழத்தைத் தொட்ட இந்த நூல் என் கோட்பாடுகளுக்கு கலங்கரை விளக்கு. என் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது, அது” என்றார்.
சுருங்கச்சொல்லின், மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை மஹாத்மா ஆக்கியது, இந்த நூல் தான். இங்கு நான் பொருளியல் பேசவில்லை.அதற்கு பல பரிமாணங்களும், பரிநாமங்களும் உண்டு. அண்ணல் காந்தியை பற்றி பேசி, அவரை, அவரது ஜன்மதினமன்று, வணங்குகிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.dominantbooks.com/pic/book/big/8178886669.jpg


Sunday, April 7, 2013

‘கருணை செய்யும் “கர“ வருடம்.’



‘கருணை செய்யும் “கர“ வருடம்.’
100 messages

Innamburan Innamburan Mon, Apr 11, 2011 at 6:18 PM
To: vallamai editor

‘கருணை செய்யும் “கர“ வருடம்.’

‘பிரபவ’ என்று தொடங்கி அறுபது வருடங்கள் சுழண்டு சுழண்டு வரும் காலசக்ரம் அநாதி என்க. இன்று ‘விக்ருதி’ ஆண்டு முடிந்து,’கர’ வருடம் பிறக்கிறது: கடக லக்னம், மகம் நக்ஷத்ரம், சிம்ம ராசி. ஒரு ஜோதிடர் இந்த வருடம் கருணாமூர்த்தி என்றார். அது மனதுக்கு ஹிதமாக இருக்கவே, அதையே தலைப்பாக வரித்துக்கொண்டேன். இந்த பஞ்சாங்கப்படனம், வருஷாந்திர பலன், வாஸ்து புருஷ வர்ணனை, புளிப்பும், இனிப்பும் கலந்த மாங்காய் பச்சடி, கோயில்,குளம், புத்தாண்டு வாழ்த்துக்கள், தீர்மானங்கள் எல்லாம் எதற்கு? மனசுக்கு சந்துஷ்டி தேடிண்டு தான். 

இந்த மனசு சொன்னபடியா கேட்கிறது? இல்லை. அது சொன்னபடியா நமது நடை, உடை,பாவனை எல்லாம்? மாங்காய் பச்சடி என்றால், அது உன் மனோரதம் என்னப்பா என்று கேட்கிறது. கையோடு கையாக, காலம் போகும் போக்கில், அநாயசமாக இழுத்துக்கொண்டு, அங்குமிங்கும் ஓடி அலக்கழிக்கிறது. இலக்கணத்தார் காலத்தின் நிலையை, ‘இறந்த காலம்/ நிகழ் காலம்/ வருங்காலம் என்று வகுத்துள்ளார்கள். பரிக்ஷை பாஸ் செய்யணும் என்றால், அப்படித்தான் எழுத வேண்டும். 

ஆனால் பாருங்கோ. காலமாவது இறக்கறாதவது? அபத்தம். வேணும்னா, கடந்த காலம் என்று சொல்லுங்கள். எதை, எப்போது கடந்தது என்று மனசு கேட்டால், பேந்த, பேந்த முழியுங்கள். ‘நி’யின் நிகழ்காலம், ‘ழ்’ வருவதற்க்குள் முடிந்து விட்டது. ஒரே நதியில் இருமுறை கால் அலம்ப முடியுமோ? சரி. எதை ‘வருங்காலம்’ என்கிறீர்கள்? நாளை உதிக்கும் ஆதவன், உன்னுடைய மூதாதைகளில் முதல்வர் ஜனிக்கும் முன், அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன் உதித்தவன். என்னோட அலமு பாட்டி மத்தவா மனசை படிச்சுறுவாள். இந்த பூவுலகில் தற்காலம் வாசம் செய்யாவிடினும், வந்து பேசுவாள்; தெம்பு கொடுப்பாள்; பளிங்கு நீர் மாதிரி கல கலப்பாள். வீணை நாதமும் உண்டு, அவளிடம்; அவள் மிருதங்க பாஷிணியும் கூட. சுளுவா கேட்டாள், ‘ஏண்டா! உன்னிடம் பேசும் நான் ‘காலமாயிட்டேன்’ என்றால், அது வாயா வார்த்தை. எல்லாரும் என்றும் தேவர்கள் தாம். கோட்டையில் இருந்தால் என்ன? கொத்தளத்தில் இருந்தால் என்ன? ஏன் வாயடைத்து நிற்கிறாய்? சொல்.’ என்றாள். 

ஒரு உரையாடல் தொடர்ந்தது. என் மனதே பாட்டி. அதுவே நான்.
நான்: 
‘பாட்டி, என்ன ப்ளேட்டோ மாதிரி பேசறே. இன்னிக்கு கருணை செய்யும் “கர“ வருடம் பிறந்தது. வள்ளலார் ஞாபகம் வந்தது. வந்து நிக்கிறதோ நீ!’
பாட்டி:
 பேசுவைடா! பேசுவை! உங்க அப்பன் பசங்களை தன்னிச்சையா வளத்துட்டான். குறஞ்ச்சா போய்ட்டேன், நான்?
நான்: 
இல்லை பாட்டி. புத்தாண்டு கொண்டாட்டம்  இன்று. நிகழ் காலம். இந்த பாழாப்போன மனசு இந்த இலக்கண காலவறையை, ‘துக்கிரி’ மாதிரி கேலி செய்கிறது. ஒரே எள்ளல், கண்ணாடி உடஞ்ச மாதிரி ‘ஹோ ஹோ’ சிரிப்பு. எனக்கு தாங்கல, பாட்டி.

பாட்டி என்னை எடுத்து மடியில் விட்டுக்கொண்டாள். தலை முடியை கோதினாள். கன்னத்தில் முத்தமிட்டாள். மனதை தழுவினாள். தூக்கத்திற்குள் தூக்கம் எனக்கு. நிம்மதி என்னை ஆட்கொண்டது. காலம் சென்றதா, இருந்ததா, வந்ததா? யான் அறியேன். மாத்ருபூதம் வந்து எழுப்பினான். ‘என்னடா அப்படி தூக்கம்? போய்ட்டையோ என்று நினைத்தேன்.’ என்று அவன் தூபம் போட நான் சொன்னேனாம்!

'அலமு பாட்டி வந்தாள். புத்தாண்டு வாழ்த்து சொன்னாள். கருணையின் மறுவடிவமடா, அவள். கவலையற்க என்றாள். தெளிவு பட, அவள் அளித்த அறிவுரை கேள்.'
“மனசு என்பது பொது சொத்து. உன்னுடையதும், என்னுடையதும் அன்று. என்றோ உதித்த துருவ நக்ஷத்ரமப்பா, அது. ஸ்திரமானது. காலம் என்ற பரிமாணத்துக்கு அப்பாற்பட்டது. அழியாதது. அது சிரஞ்சீவி, ராஜூ. யாரும் அதை உருவாக்கவில்லை. அத்தைப்பாட்டி கதையெல்லாம் கேட்காதே. அந்த அருவம் புராதனமானது; பரிசுத்தமானது; எங்கும் நிறைந்தது. புல், பூண்டு எல்லாவற்றுக்கும், இந்த பரந்த மனதில் இடம் ‘ரிசர்வ்ட்’. நீ மனதுடன் பேச சொல்லிக் கொடுத்து விட்டேன். எல்லா ஜீவன்களுடனும் நேசத்துடன் பழகு. புலியுடன் உனக்கு விரோதம் எதற்கு? பாம்பும் ஜீவித்திருக்க வேண்டாமோடா? இன்னும் சொல்லப்போனா, புலியும், பாம்புமாக, மனுஷா இருக்காளே, அப்பா. நீ நேசித்தால், எல்லா பிராணிகளும் உன்னை நேசிக்குமே. பிள்ளையாருக்கு மூஞ்சூறு, ஐயப்பனுக்கு புலி, மஹாவிஷ்ணுவுக்கு ஆதிசேஷன் என்றெல்லாம் வாஹனபிராப்தியே, உனக்கு பாடம். நேசித்தால் மட்டும் போறாது. பசித்தவனுக்கு சோறு போடு. வித்யா தானம் செய். உன்னால், உன்னை சேர்ந்தவர்கள்- அதாவது ஜீவன்கள் எல்லாம் -மேன்மை அடைய வேண்டும். உன் கடன் பணி செய்து கிடப்பதே. கொஞ்சம் கொஞ்சமாவது எல்லாரும் இப்படி இருந்துட்டா, இந்த உலகத்தை உய்விக்கலாமே.”

மூச்சிறைக்க மேலும் சொன்னேன் என்றாள், பக்கத்தில் வந்து நின்று கொண்ட எச்சுமி, “ எங்கு பார்த்தாலும் கொள்ளி, கொள்ளை, கொலை, உலகெங்கும். எரிய வீட்டிலே, பீடிக்கு நெருப்பு கேட்கிறாங்க! நம்ம தேசாபிமானம் கரைஞ்சுண்டே வரது. எங்க காலத்திலே, காந்தி மஹான் என்று ஒருத்தர், ஊரைக்கூட்டி வெள்ளைக்காரனை விரட்டிட்டார். பாரதியார் என்ற மஹாகவி ஒரு உத்வேக வெள்ளமடா, ராஜூ. ஏன்? நீங்களெல்லாம், மனசை உதறிட்டு, கரும்புள்ளியும், செம்புள்ளியும் தானே குத்திண்டுட்டு, அரைபட்டினி கழுதை மேலே, தலையை திருப்பிண்டு, கண்ணை மூடிண்டு, அழுது கொண்டே சவாரி செய்கிறேள்.”

மூச்சுத்திணற, விழுந்து விட்டேனாம். ஓடோடி வந்த குழந்தை ஒன்று, முகத்தில் தீர்த்தபிரஸாதம் தெளித்ததாம். அதனிடம், பாட்டி சொல்கிறாள், “கிருஷ்ணா! நீ தான்டா இந்த பூலோகத்தை உஜ்ஜீவிக்கவேண்டும். ‘கர’ வருஷமும் பிறந்தது. கருணா கோஷமும் எழுந்தது. நல்லதே நடக்கட்டும். அந்த அக்னியில் தீது எல்லாம் பொசுங்கிவிடும்.”

[அலமு பாட்டி ஜபிக்கிறாள்.]
“ஜய ஜய ஹே! ஜகதீஷ ஹரே!
 ஜய ஜய ஹே! காமாக்ஷி தேவி!
 ஜய ஜய ஹே! சதா சிவா!
 ஜய ஜய ஹே! கருணா ‘கர’!
{கோயில் மணி அடித்தது. நாற்று தலையாட்டியது. ஆனை ஆசி வழங்கியது. பசு மாடு ‘அம்மா’ என்றது. பாட்டி மலையேறிவிட்டாள்.}



2 attachments
கர நோட்.rtf
29K
கர.pages
171K
சித்திரத்துக்கு நன்றி (07 04 2013)http://thamaraikannan.com/images/Book-10.jpg

Monday, April 1, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: 3


இதுவும் ஒரு பிருகிருதி: 3

நல்ல மனுஷாளும் இருக்காளோல்லியோ! கோடியாத்து சுப்பய்யர் மாமாவும் அப்படித்தான். காலாம்பறவே ஸ்னானபானாதிகள் முடிச்சுட்டு, தெரு பசங்களை, என்ன சொக்குப்பொடியோ போட்டு, ஒக்கார வச்சு, தேவாரம் க்ளாஸ் எடுப்பார். அப்றம் ஒரு திருக்குறள் விளக்கம். அட்டவணை மாறும். புதனும், வெள்ளியும், திருமுறைகளுக்கு பதிலா திவ்யபிரபந்தம் எடுப்பார். இப்போ யாருக்கு புரியாது. சைக்கிள் கட்டு என்று பெயர். தட்டாமாலை வேஷ்டியும் இல்லை. பஞ்ச்க்கச்சமும் இல்லை. ப்ராக்டிக்கலா, சைக்கிள் பெடல்லே சிக்கிக்கொள்ள்ளாத வேஷ்டி கட்டுதல். ஸ்கூலுக்கு பயணம். நாள் பூரா, அங்கே ஆசிரியர் கண்டிப்பு, ஆதரவு, உண்டு, இல்லை எல்லாம் இருக்கும். எல்லா பாடங்களும், எல்லா வகுப்புகளுக்கும் எடுக்கும் ஆற்றல் இருப்பதால், ஹெட் மாஸ்டர் சொன்னார் என்பதற்காக, இவர் தான் பெர்மெனெண்டா, சொல்லிக்காம லீவு எடுக்கறவா க்ளாஸ் எடுப்பார். முணுமுணுப்பை முற்றும் துறந்தவர்.

மத்த வாத்தியெல்லாம் இவரை அசடு என்று கேலி செய்வார்கள். சாமர்த்தியமா, எந்த அதிகபடி வேலை வந்தாலும், இவர் தலையிலே தான். மத்யானம், கொஞ்சம் ஓய்வு உண்டு, டிஃப்ன் சாப்பிட. அப்பத்தான், 'அந்த சந்தேஹம், இந்த பிரச்னை' என்று சில பெற்றோர்கள் வருவார்கள். இவர் தலைலே கட்டிடுவாங்க. ஃப்ர்ஸ்ட் பாயிண்ட்: வந்தவனுக்கு திருப்தியான பதில் உத்தரவாதம். அடுத்தபடியா ஸ்கூலுக்கு நல்ல பெயர். இப்பெல்லாம், இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் அரசியல் வாதிக்கு வால் பிடிக்கவே நேரமில்லை. அந்தக்காலத்தில் இன்ஸ்பெக்டர் வருவது பெரிய சேலஞ்ச். க்ளாஸ் எடுப்பதை பசங்க்ளோட அமர்ந்தும் பார்ப்பார்கள். கண்ணுக்கு தென்படாமலும் கண்காணிப்பார்கள். கணக்கு, வழக்கு பார்ப்பார்கள். இது, அது என்று இல்லை; புரட்டி எடுத்து விடுவார்கள். ஒரு நாள் இன்ஸ்பெக்டர் நமசிவாயம் முதலியார், ஹெட் மாஸ்டர் கிட்ட சொன்னார். பக்கத்து ஊர்லே -என்ன நாலு மைல் - பள்ளிக்கூடம் சரியாக நடக்கவில்லை. சுப்பய்யர் சார் வாரத்துக்கு இரண்டு நாட்கள் சென்று சில வகுப்புகள் எடுக்கலாமே என்று. ஊதிய உயர்வு பத்து ரூபாய் கொடுக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றார். ஹெட் மாஸ்டர் முன்னதைச் சொன்னார்; பின்னைதை விட்டு விட்டார். ஒரு பிரதிபலன் எதிர்பார்க்காமல் சுப்பய்யரும் போய்ட்டு வந்தாரே. 

இதெல்லாம் இருக்கட்டும். அப்போ காந்தி மஹான் மேலே எல்லாருக்கும் ரொம்ப மதிப்பு. அவர் சொல்லுக்குக் கட்டுபட்டு, ஊருக்கு ஊர் ஹிந்தி க்ளாஸ். சார் வாரத்துக்கு நாலு நாள், சாயங்காலம் ஹிந்தி சொல்லிக்கொடுப்பார். மூணு நாள் ஸ்லோகங்கள், சம்ஸ்கிருத ஸுபாஷிதங்கள் சொல்லிக்கொடுப்பார். எப்போ போனாலும் அவரை பார்க்கலாம். மாமி கர்நாடகம் தான். புடவையை மூணு சுத்து சுத்திண்டு தான் , வாசபக்கமே வருவா. "ஏண்டா! மாமாவை இப்படி படுத்தறா, படுத்தறேள்?" என்று மாமி கேட்டதில்லை. உத்தமி. தெரிஞ்சவாகிட்ட மாமி குசலம் விஜாரிக்கறது ஆச்சரியமா இருக்கும். வம்பு, தும்பு பேச மாட்டா. ஆனா, மென்மையான விஷயங்களை கிரஹிச்சுண்ட்றுவா. ஒரு நாள் அம்மா அப்பாகிட்டே சொன்னது காதிலே விழுந்தது: 'ஏன்னா! அந்த சங்கரன் ஆம்படையாளை தள்ளி வச்சுட்டான்னோல்லியோ. மாமி கிட்ட சொல்லிருக்கா. அவ என்ன பண்ணா தெரியாது. அவன் சேத்துண்டுட்டான். அந்த பொண்ணை கோயில்லை பாத்த்தேன். அவ தான் சொன்னா: சங்கரன் ஆத்துக்கு வந்து, அவளொடா அப்பா, அம்மாவை சேவிச்சிட்டு, அவளை அழைச்சுண்டாட்டானாம். அந்தரங்கமா சொன்னானாம், ''சுப்பய்யர் சார் உப்பை நான் சாப்பிடல்லைடி. அவர் ரத்ததை குடிச்சிருக்கேன். நாமா யாருமே மனுஷாளா பிறக்கறதில்லை. வெறும் சிசு. சார் மாதிரி இருக்கறவா தான் குயவன் மாதிரி நமக்கு உரு கொடுக்கறா. மாமி எங்கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னா, அவளோட குடித்தனம் பண்ணுடா என்றாள்". அந்த பொண் மாமி தான் சிவகாமி அம்மன் என்று சொல்லி தாரை தாரையா ஜலம் விட்டது'. 

இதெல்லாம் அவ்வளாவா புரிய வயசு இல்லை எனக்கு. இருந்தாலும் அந்த தம்பதியை போற்றணும்னு புரிஞ்சது. சொன்னா நம்ப மாட்டேள். பல வருஷம் கழிச்சு அவாத்துக்கு போறேன். இரண்டு பேரும் அசக்தம். வாசல்லே கொஞ்சம் கூட்டம். சார் மடிலே மாமி. மெல்ல, மெல்ல, அவளோட ஆத்மா பிரிஞ்சுண்டுருக்கு. அந்தக்காலத்து அக்ரஹாரம் தான்.  ஆயிரம் கட்டுப்பாடு. ஆனா, சேரி பூரா வாசல்லெ நின்னுண்டு அழறது. ஆளாளுக்கு ஒரு நன்றிக்கதை, குழறி குழறி சொல்றா.

எனக்கு ஒரு சந்தேஹம். இவாளுக்கெல்லாம் கொடுக்கப்படாத 'பாரத ரத்னா' வாங்கிக்க, மத்தவாளுக்கு என்ன அருகதை இருக்கு?

இன்னம்பூரான்
20 12 2010

பி.கு. பின்னூட்டங்களுக்கு நன்றி. மனசு கொஞ்சம் அழறது. என்னை விட்றுங்கோ.
Tthamizth Tthenee 
12/20/10
to thamizhvaasal
”, ''சுப்பய்யர் சார் உப்பை நான் சாப்பிடல்லைடி. அவர் ரத்ததை குடிச்சிருக்கேன். நாமா யாருமே மனுஷாளா பிறக்கறதில்லை. வெறும் சிசு. சார் மாதிரி இருக்கறவா தான் குயவன் மாதிரி நமக்கு உரு கொடுக்கறா. மாமி எங்கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னா, அவளோட குடித்தனம் பண்ணுடா என்றாள்". அந்த பொண் மாமி தான் சிவகாமி அம்மன் என்று சொல்லி தாரை தாரையா ஜலம் விட்டது'.  “
எங்க சார் இருக்கா  இது மாதிரி  மனுஷா எல்லாம் இப்போ ?
யோசிச்சுப் பாத்தா   நாமெல்லாம்  அடைஞ்சதை விட  இழந்தது  அதிகம்னு  தோண்றது
உண்மையா  ,ஆத்மார்த்தமா  இருக்கற மனுஷாளப் பாத்தே ரொம்பக் காலமாச்சு
அன்புடன்
தமிழ்த்தேனீ
LK 
12/20/10
to thamizhvaasal
என்ன ஒரு மனுஷா ? இப்படி இருக்காளா இன்னும் ??
shylaja 
12/20/10
to thamizhvaasal
ரொம்ப எதார்த்தமா இருக்கு...நெகிழ்ச்சியாவும்.