Friday, November 8, 2013

தணிக்கைக்குணுக்கு – 1



தணிக்கைக்குணுக்கு – 1

Innamburan S.Soundararajan 8 November 2013 15:48

தணிக்கைக்குணுக்கு – 1

Friday, November 8, 2013, 6:11

இன்னம்பூரான்

Octroi-Nakaசொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. வாஸ்தவம் தான். இந்த ஆக்ட்ராய் முனிசிபல் வரி இருக்கே, அது ஒரு பொன் வாத்து. ஆக்ட்ராய் நாக்கா (பிடிக்கிற இடம்) சுத்துப்படைகளுக்கு செம காசு. முனிசிபாலிடிக்கும் கொள்ளை வரும்படி. அதான் இந்த இன்னம்பூரான் 1966ல் உகாய்க்கு மாற்றல் ஆகி வரும்போது சூரத் முனிசிபாலிடி அவனோட பழைய காருக்கு ஆக்ட்ராய் நோட்டீஸ் அனுப்பிச்சு கலங்கடிக்கப்பார்த்தால், அவன் பிளேட்டை திருப்பிப்போட்டு நம்ப்ளை கலங்கடிச்சுட்டான். அதான் சொல்றேனே: சொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. இது நின்று போக. பழங்கதை.
இன்றைய ஜூஸ். ஐ மீன் ந்யூஸ். இந்த ஆக்ட்ராய் வாங்கறதெல்லாம் காண்டிராக்ட்லெ விட்றுவோம். கட்சிக்காரன், பிரும்ம சேனை, லோக்கல் பிஸ்தா, அது இதுன்னு கண்ட கழுதையெல்லாம் காண்டிராக்ட் எடுக்கும். நாலு வருஷம் ஆச்சுனா காலாவதி; புனரபி ஜெனனம். ஆனா பாருங்கோ ஒரு மாமாங்கமா 36 காண்டிராக்ட்டை புராணகாலத்து ரேட்டுலெ வச்சுருக்கோம். ஆடிட்காரனுக்கு என்னையா நஷ்டம்? ஒத்துக்கிறோம். ஏழு ஜன்மத்துக்கு – ஐ மீன் -ஏழு வருஷமா ஒரு காண்டிராக்ட் மேலெ கூட கையை போடலை. எங்களுக்கு எத்தனை வேலை இருக்கு? ஆமாம். 407 ஆக்ட்ராய் காண்டிராக்ட் ஏஜண்டுகளுக்கு சட்டப்படி லைசன்சே ரத்து. அவங்க வரி வாங்குவது சட்ட விரோதம்னு சொல்றாய்ங்களே, அந்த வரி நமக்கு வந்து சேரவில்லை. வழியிலேயே கடப்ஸ். கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடச்சிட்டாய்ங்கனு சொன்னா, அதையும் ஏத்துக்க மாட்டேங்றான். சரி. போனவருஷம் இதுக்கெல்லாம் ஒரு முடிவு காணணும்னு டைட் பண்ணா, அவங்க கலாட்டா பண்ணியே தப்பிச்சிட்டாய்ங்க அப்டிணு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்க்றான். அரசாங்கமே இந்த பாவப்பட்ட ஆக்ட்ராய் வரியை தூக்கிப்பிட்டு லோக்கல் பாடி வரி (பேர் என்ன வச்சா என்ன. அதே காண்டிராக்ட்காரன் தான் வருவான்.) போடுவாக. பொறுத்து வாரும் என்று சொன்னாலும் இந்த ஆடிட்காரன் காதுலெ போட்டுண்டாதானே. ஆடிட்காரன் கால்லெ ஏன் விழணும்? அதுக்குத்தான் காண்ட்ராக்ட்காரன் இருக்கான்லெ. இது எல்லாம் நடப்பது: மும்பாய் மினிசிபல் கார்ப்பெரேஷன், ஐயா. ரிப்பன் பில்டிங்க் இல்லை.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி: http://images.mid-day.com/2013/may/Octroi-Naka.jpg

பின்குறிப்பு: நான் தண்ணிக்கைக்குணுக்கு என்று தான் தலையில் எழுதியிருந்தேன். வல்லமை ஆசிரியர் அதை துணுக்கு என்றார். அங்கே துணுக்கு; இங்கே குணுக்கு. இனி எங்கேயும் குணுக்கு.
அப்போது தான் சுவை. 
பிரசுரம்: வல்லமை: 08 11 2013: http://www.vallamai.com/?p=39859
 இன்னம்பூரான்

No comments:

Post a Comment