Thursday, June 20, 2013

அன்றொரு நாள்: ஜூன் 21



அன்றொரு நாள்: ஜூன் 21

அப்டேட்: தன்னிலை விளக்கம். கொஞ்சம் சுகவீனம். விட்டுப்போன வேலை பளு, ஆஸ்பத்திரி அலைச்சல், பிரயாணம். விட்டு விட்டுப் பிடிப்பதாக உத்தேசம். புள்ளி விவரப்படி,உலகில் பல இடங்களில் தமிழார்வம் இருப்பது தெரிகிறது; ஊக்கமளிக்கிறது. வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். 
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://exurbe.com/wp-content/uploads/2013/02/The-Prince-Machiavelli-Niccolo-9780979415401.jpg


Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 7:04 PM



அன்றொரு நாள்: ஜூன் 21
http://exurbe.com/wp-content/uploads/2013/02/The-Prince-Machiavelli-Niccolo-9780979415401.jpg
அனுதினமும் ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஏன் ஒவ்வொரு வினாடியும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நாட்காட்டியை வைத்துக்கொண்டு, அன்றைய தினம், இன்றைய தினம் என்றெல்லாம் எழுதினால் யார் தான் படிப்பார்கள்? இன்று புவனம் போற்றிய தத்துவ ஞானி ழான் பால் சார்த்தெரே (Jean Paul Sartre) அவர்களின் பிறந்த தினம் (1905). என் மனதுக்கு பிடித்தவர். அவருடைய தத்துவம் என்னை ஆட்கொண்டது. அதற்காக, எல்லோரும் அவரை போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கலாமோ? 
தவிர, இன்றைய தினம் நிக்கலோ மாக்கியவல்லி (Niccolò Machiavelli) என்ற இத்தாலிய அரசியல் குருவின் மறைந்த தினம் (1527). அரசாளுவது ஒரு கலை, வாழ்வியல், கர்ம மார்க்கம். பாரதவர்ஷத்தின் வரலாற்றில் சீதா தேவியின் தந்தை ஜனக மஹாராஜாவுக்கு, மஹரிஷி என்றும் பெயர். பிற்கால மன்னர் பர்த்துருஹரியும் அப்படித்தான்: நீதி/ வைராக்யம்/ காமம் மூன்றிற்கும், திருவள்ளுவர் மாதிரி நெறி வகுத்த முனிபுங்கவர். விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவை நம்மிடம் (ஏட்டளவில்!) இருக்கும் வரை, நிக்கலோ மாக்கியவல்லியை பற்றி என்ன பேச்சு? என்ற எதிரொலி வருகிறது; என் காதில் விழவில்லை. ஏனெனில், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அறிவுரைத்தபடி, கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்வது நல்லது தானே.
அரசாளுபவர்கள் தன் ஆளுமையை தவறவிடக்கூடாது. மன்னனின் செங்கோல் வளையலாகாது. மக்கள் நலம் நாடுவதே, அவனது இலக்கு. அண்டை, அயல் மன்னர்களை தன் வசம் இழுக்கவும் வேண்டும். கண் காணிக்கவும் வேண்டும். பட்டியல் நீளமானது. அதை விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றிலும் காணலாம். நிக்கலோ மாக்கியவல்லியின் ‘அரசகுமாரன்’ என்ற நூலிலும் காணலாம். அவரை பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் கோடி காட்டிவிட்டு, இந்த நூலின் சுருக்கத்தின் சாராம்சத்தை மட்டும், இங்கு தருகிறேன்.
அவர் தத்துவம் பேசியதில்லை. அனுபவமும், வரலாற்று சான்றுகளுமே அவருடைய ராஜதந்திரத்தின் தூண்கள். எனவே, முன்னும் பின்னுமாகவும், முரண் தோற்றமுள்ள கருதுகோள்களையும் எடுத்துரைத்திருக்கிறார். தத்துவம் பேசுபவர்கள், அவற்றை கையாளுகிறார்கள் என்பதும் உண்மை. இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் குறுநிலத்தின் சார்பாக, பல நாடுகளில் ராஜதந்திரியாக பணி செய்துள்ளார். அவர் எழுதிய முதல் நூல் ‘அரசகுமாரன்’(1514); அதை பதிப்பிக்க 18 வருடங்கள் ஆயின. பல தொல்லைகள்; வேலை போயிற்று; ஆட்சி மாறியது. அந்த நூலில் தனித்துவமே, அக்காலம் ஆளுமையையும், வாழ்நெறியும் இணைத்து உதட்டளவில் பேசப்பட்டதை, கேள்விக்குறியாக்கிய விசாரணை. எது என்னவாயினும் அரசன் ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்; நன்னெறி மட்டும் போதாது; ஆளுமையை பயன்படுத்தும் கலையை மன்னன் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையெனின், தனிமனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள்; அத்தருணம், தேசத்தின் பாதுகாப்பும், காபந்தும் அடிபடும் என்கிறார்.
சட்டமும் நல்லதாக இருக்கவேண்டும்; ஆயுதங்களும் கூர்மையாக இருக்கவேண்டும் என்பது, இவரது கூற்று. அவருடைய வாக்கும், போக்கும்: ‘ வலிமை மிக்க ஆயுதங்கள் இல்லையெனின், நல்ல சட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, நான் சட்டத்தை பற்றி பேசவில்லை. தளவாட வலிமையை பற்றி பேசுகிறேன்...பெரும்பாலும், மனித இனம் நன்றி/ பற்று/ வாய்மை ஆகியவற்றை மதிப்பதில்லை. ஆதாயம் தேடுவார்கள். அபாயம் வந்தால் காத தூரம் ஓடுவர்... எனவே, கனிவை விட கட்டுப்பாடு வேண்டும்...’. (மஹாகவி பாரதியாரின் ‘நடிப்பு சுதேசிகள்’ ஒரு தடவை படித்து விடுங்கள்). தயவு தாக்ஷிண்யம் இல்லாமல், இவர் கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கவில்லை. போலி ‘நல்லாட்சியை’ உதறி விடுகிறார். அதனால் தான் கட்டு காபந்து என்ற கடமையாற்ற, அரசகுமாரனுக்கு சிறந்த பயிற்சி தரவேண்டும் என்கிறார்; அதற்கு தான் இந்த நூல். திட்டவட்டமாக அதிகாரபலத்தை சிபாரிசு செய்யும் இவர், அரசகுமாரன், கால தேச வர்த்தமானத்தை அறிந்து விவேகமாக செயல் படவேண்டும் என்கிறார். அத்துடன் நிற்காமல், காட்டாறு போல் பெருகி வந்து, ஒரு சமயம் வெள்ளத்தில் அடித்து போவதும், சில சமயம் பாசனத்திற்கு பயன் என்பது போல் அதிர்ஷ்ட தேவதை, எதிர்பாராத சோதனைகளை தருவாள்; அதை தாக்குப்பிடிக்கும் வித்தை தெரியாத அரசகுமாரன் அழிந்து போவான் என்று பொருள்பட கூறுகிறார்.
இவரது அறிவுரைகள் என்றுமே சர்ச்சைக்குள்ளானவை. அதர்மத்தின் உறைவிடம் என்பார், லியோ ஸ்ட்ராஸ். அன்று. நடைமுறைக்கு உகந்த கட்டுப்பாடு என்பார் பெனெடெட்டோ க்ரோஸ் என்ற தத்துவ ஞானி. இது அரசியல் அறிவியல் என்பார், எர்னெஸ்ட் காஸியர். ஆனால், என்றோ ரூஸோ என்ற தத்துவ ஞானி சொன்னார், ‘இது அரசு இலக்கணம் அன்று; ஆளும் தரப்பினதின் கடூர போக்கை, மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது, இங்கே.’ என்று.
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படிப்பதும் நான் தானே? தமிழாக்கம் என் பொறுப்பு. 

உசாத்துணை:http://plato.stanford.edu/entries/machiavelli/ அது ஒரு கருவூலம். 
ஒரு சிந்தனை: இன்று இந்திய அரசியல் நடப்பில், நிக்கலோ மாக்கியவல்லியின் அறிவுரை எங்கெல்லாம் பொருந்தும். எங்கெல்லாம் சிந்தியுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2011


Tthamizth Tthenee Mon, Jun 20, 2011 at 7:07 PM




நல்ல பகிர்வு, கற்றுக்கொள்ள  நிறைய இருக்கிறது  எனக்கு
அன்புடன்
தமிழ்த்தேனீ


Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 7:15 PM

யாரும் படிப்பதில்லை என்று நினைத்தேன், தமிழ்த்தேனி. இதற்கு முந்திய தங்களின் இடுகைகளை படிக்க முடிந்ததோ?


அவற்றையும் படித்தேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ


balarajan geetha Mon, Jun 20, 2011 at 7:45 PM





அன்புள்ள இ அய்யா,

வாழ்க வளமுடன்.
மறுமொழி எதுவும் வரவில்லை என்றால் யாரும் படிக்கவில்லை என்று தயவு செய்து நினைத்துக் கொள்ள வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா
= = = = = = = = =

Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 7:55 PM


இருவருக்கும் நன்றி. எனது இடுகைகள் யாவும், interactive threads. அதாவது, அவை, மற்றோர் கருத்தை வேண்டுபவை. இல்லையெனில், வோல்டேஜ் குறைந்த மின் விளக்குகள் போல் மங்கும்; பிறகு கும்மிருட்டு. நமக்குள் ஒரு வார்த்தை. ஒரு நாளில் பல வேலைகள், படிப்பு, சிந்தனை, தியானம், உடற்பயிற்சி, மருத்துவம், இப்படி சகஸ்ர அலுவல்கள். அதையெல்லாம் விட்டு விட்டு, யாரும் படிக்கிறார்களா, இல்லையா என்று தெரியாத  interactive threads ல் மணிக்கணக்காக ஈடுபடலாமோ? மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கலாமோ? அந்த தயக்கம் தான்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

Thiruvengada Mani T.K Tue, Jun 21, 2011 at 2:54 PM



பலர் படிக்கிறார்கள்் என் உட்பட! சிலர் பதில் எழுத சோம்புகிறார்கள் அதுவும் என்னைப்போல.. அதற்காகச் சுவையான கட்டுரைகள் நிற்கலாமா என்ன?
மணி

Dr.T.K.Thiruvengada Mani


meena muthu Tue, Jun 21, 2011 at 3:12 PM



பதில் சொல்லத்தெரியாமல் மௌனம் காக்கிறேன் என்பதைத் தவிர 
தாமதமாக வந்தேனும் அருமையான பல பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 


Geetha Sambasivam Wed, Jun 22, 2011 at 5:46 AM



அரசன் ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்; நன்னெறி மட்டும் போதாது; ஆளுமையை பயன்படுத்தும் கலையை மன்னன் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையெனின், தனிமனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள்; அத்தருணம், தேசத்தின் பாதுகாப்பும், காபந்தும் அடிபடும் என்கிறார்.//

இதை நம் பிரதமர் அன்றோ படிக்கவேண்டும்?? என்ன செய்வது?? இந்தியா இதுவரை கண்ட பிரதமர்களிலேயே மிக மிக மோசமான ஒரு பிரதமரை இப்போதே காண்கிறோம். :(((((

2011/6/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>


ஒரு சிந்தனை: இன்று இந்திய அரசியல் நடப்பில், நிக்கலோ மாக்கியவல்லியின் அறிவுரை எங்கெல்லாம் பொருந்தும். எங்கெல்லாம் சிந்தியுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2011


Geetha Sambasivam Wed, Jun 22, 2011 at 5:46 AM


பாலராஜன் கீதா??? நல்வரவு, நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. 
2011/6/21 balarajan geetha <balarajangeetha@gmail.com>



அன்புள்ள இ அய்யா,

வாழ்க வளமுடன்.
மறுமொழி எதுவும் வரவில்லை என்றால் யாரும் படிக்கவில்லை என்று தயவு செய்து நினைத்துக் கொள்ள வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா
உங்கள் நிதர்சனமான கருத்துக்கு நன்றி, கீதா. என்னுடைய செய்தியை புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்
22 06 2011


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Wed, Jun 22, 2011 at 9:09 AM


நாங்கள் எல்லோரும் படிக்கிறோம் இ சார்.

நான் தான் எப்போதாவது உங்களுடைய பதிவுகளுக்கு பதில் எழுதுவதாக நினைத்து பெரிய மொக்கை பிளேடாகப் போட்டு உங்களைப் பழிக்குப் பழி வாங்கவும் செய்கிறேனே...

கவனிப்பதில்லையா நீங்கள்?



அன்புடன்

பென்
--------------------------------------------------------



Innamburan Innamburan Wed, Jun 22, 2011 at 10:18 AM

சேத்து வச்சுண்டிருக்கேன், பென். டபால்னு பதில் பாயும்!

நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Wed, Jun 22, 2011 at 10:26 AM
அய்யோ இ சார்.

நான் சும்மா ரொம்ப நாள் கழிச்சு அய்யம்பேட்டை வேலை பார்க்கலாம் என்று பார்த்தேன்.

ஆரம்பத்திலேய மிரட்டல் கனஜோராக வருகிறதே...

தங்கள் பாதாரவிந்தங்கள் பணிந்து

பென்







அரசு -2 மக்கள் எழுச்சி





அரசு -2 மக்கள் எழுச்சி
அப்டேட்: 3:  21 06 2013

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 12:14 PM


அரசு -2
மக்கள் எழுச்சி
Inline image 1
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நாடும் கொள்ளாது எனலாம். வரலாற்றில் முதல் காட்சி: ஃப்ரென்ச் புரட்சி. ‘ரொட்டி கிடைக்கவில்லையென்றால் அப்பம் சாப்பிடு.’ என்ற பொருள்பட மேரி அண்டாய்னட் சொன்னதாக ஆதாரமில்லாத வதந்தி. மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். பிறகு, பல புரட்சிகள். புரட்சிகளே யதேச்சதிகாரத்துக்கு வித்தாக அமைந்த கூத்துக்களும் நிகழ்ந்துள்ளன. அது வேறு விஷயம். ‘அன்றொரு நாள்’ தொடரில் அது பற்றி விவரங்களை காணலாம். சில நாட்களாக பிரேசில் நாட்டில் நடுத்தரவகுப்பு மக்களையும் அரசையும் எதிரும் புதிருமாக வைத்துள்ள அமைதியின்மை கவலையளிக்கிறது. ஒரு பார்வை:
சிறு துளி பெரு வெள்ளம் என்பதை விட, சிறியதொரு தீப்பொறி ஊரையே கொளுத்தி விடும் என்பதே சரியான உவமை. கால்பந்து விளையாட்டு பிரேசில் மக்கள் விரும்பும்  பொழுது போக்கு என்றாலும், உலகளாவிய கால்பந்து விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டுமானச்செலவுகள்/ஊழல்கள் மீது மக்களுக்கு அதிருப்தி. இந்தியாவின் காமென்வெல்த் விளையாட்டு மோசடிகளை, இது நினைவுபடுத்துகிறது. அதிருப்தி, அலைகளை போல மோதி, மோதி வலுத்துவிடும். பிறகு பஸ்/சப்வே கட்டணங்கள் ஏற்றப்பட்டது மேல் அதிருப்தி. ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் அமைதியாக கூடி போராடும்போது, அதை வன்முறையால் அடக்குவது கடினம். காந்திஜியும், மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் இதற்கு சாக்ஷி. பிரேசிலில் தற்பொழுது அமைதியான புரட்சி அலை கரை புரண்டுவிட்டது என்று தோற்றம், கமீலா ஸேனா என்ற நிடொராய் நகரத்து 18 வயது யுவதி கூறியது போல: ‘விலையேற்றத்தை எதிர்த்த காலகட்டம் கடந்து விட்டது. நாட்டு நடப்பு, அரசு தன்மை (சிஸ்டம்)  கேவலமாக இருக்கிறது. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அதை சப்ஜாடா மாற்றியமைக்க வேண்டும்... பணத்தை கொண்டுபோய் ஊழலில் வீணடிப்பதைக் கண்டு கொதித்தெழுந்தோம்’.
ஊருக்கு ஊர் பஸ்/சப்வே கட்டணங்களை குறைத்தும், மக்களின் ஆத்திரம் குறையவில்லை. ஃபோர்டெலெஸா என்ற ஊரில் 15 ஆயிரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் அடி வாங்கினர். கல்வி உரிமை வேண்டும், சுகாதாரப்பணிகள் மேன்படவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத' மக்கள் கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1247510.ece/alternates/w460/q5.jpg


http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com





Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 12:44 PM


உத்தராஞ்சலில் மலையை வெடி வைத்துத் தகர்த்தார்கள்.  மண் அரிப்பைத் தடுக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள்.  அரசாங்கம் எங்கே வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்திருந்ததோ அங்கே அரசாங்கத்துக்குத் தெரியாமல் வீடுகள் கட்டிக் கொண்டார்கள்.  ஒரு வகையில் ஆக்கிரமிப்பு எனலாம். மனிதன் ஏற்படுத்திய அழிவே உத்தராஞ்சலில் !  மக்கள் கொதித்தெழுந்து என்ன செய்ய? இதை எல்லாம் ஆரம்பத்திலேயே இதே மக்கள் தடுத்திருக்க வேண்டும். ஆக தவறு இருபக்கமும்.

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 1:23 PM

நன்றி பல. இது மேலதிக செய்தி. சுந்தர்லால் பஹுகுணாவின் அமைதி புரட்சியை பற்றி எழுதியிருந்தேன் என்று ஞாபகம். உங்கள் இடுகையை கொஞ்சம் விஸ்தாரப்படுத்தினாலும், இவ்விழை மேலும் பயன் அடையும்.

இன்னம்பூரான்
Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 2:25 PM
To: mintamil@googlegroups.com
அப்டேட்:


  1. மூன்று வருடங்கள் முன்பே ஆடிட் ரிப்போர்ட்: (1) பாகீரதி/அலக்நந்தா நதிகளில் அரசு நிறுவி வரும் மின் நிலையங்களால் ( ஹைடல்) மலைகளுக்கு பேராபத்து. (2) இவற்றின் பயனாக திடீர் வெள்ளம் ஆபத்து அதிகரிக்கும்; (3) அதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். (4) வனங்களை அழிப்பது தொடருகிறது. இதுவும் மலைகளுக்கு ஆபத்து. (5) 38% அளவுக்கு, இந்த ப்ராஜெக்ட்களில் செடிகொடி நடுவது இல்லை. அந்த தவறு செய்தவர்களை அரசு தண்டிக்க வில்லை. ஆடிட் சொன்னால் கேட்கலாமோ? 
  2. இன்றைய தகவல்: உச்ச நீதிமன்றம்,பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அரசும்,உத்தராகாண்ட் அரசும் சோறு, தண்ணி, மருந்து, எரிபொருள், மற்ற உதவிகள் எல்லாம், பாகுபாடு இன்றி, கொடுத்துதவவேண்டும் என்று, இன்று,ஆணையிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவதியில்.


ஆக மொத்தம்: அடிபடுவது மக்கள். ஏன் கொதித்தெழக்கூடாது?

இன்னம்பூரான்
20 06 2013

Prakash Sugumaran Thu, Jun 20, 2013 at 2:32 PM


வணக்கம். இப்போதைய சூழலிலும், எதிர்வரும் காலங்களிலும் மக்கள் போராட்டம் என்பதெல்லாம் கனவுதான். அதிகபட்சம் ஒரு இயக்கம் தொடங்கி கொஞ்ச காலம் முட்டி மோதி பார்க்கலாம். அரசு அலுவலகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொண்டை நோக கத்தி விட்டு, உண்ணாவிரதம், உண்ணும் விரதம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு.. இப்படி பலவிதங்களில் எதிர்ப்பை காட்டிவிட்டு அடங்கி விட வேண்டியதுதான். இதையெல்லாம் ஒடுக்கவென்றே பல அரசுத் துறைகள் உள்ளன. நீதிமன்றக் கதவை தட்டுவது ஓரளவு பயன் தரலாம்.. ஆனால் நீதி அரசாங்கம் போடும் சட்ட விதிகளை பொறுத்தது.
ஒரு கொள்கை சார்ந்தோ, ஒருமித்த சிந்தனை சார்ந்தோ, குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பார்வையிலோ மக்கள் ஒன்று கூடி விடக் கூடாது என்பதில் பாரபட்சம் இல்லாமல் எல்லா அரசாங்கங்களும் தெளிவாக உள்ளன. மக்களின் முன்னேற்றத்துக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள துறைகள் செயல்படாத நிலை குறித்து எப்போதும் கவலையே கொள்ளாத அரச கட்டமைப்பு இப்படியான மக்கள் திரளை கலைக்க உருவாக்கி வைத்துள்ள பல நுண் பிரிவுகள்  மீது மிக கவனம் கொடுத்து இதே மக்களின் வரிப்பணத்தில் பெரும்பான்மையை செலவிட்டு இயக்குகின்றன.
இவற்றை எல்லாம் மீறி ஆச்சரியப்படும் வகையில் இன்னும் தொடரும் ஒரே அறப்போராட்டம் கூடங்குளம் போராட்டம் மட்டுமே. இதுவே இறுதியான பெரிய மக்கள் போராட்டமாக இருக்கும் என சொல்ல முடியும். ஏனெனில் யாருக்கு லாபமோ இல்லையோ இந்தப் போராட்டத்திலும் பாடம் கற்றுக் கொண்டு விட்டது அரசு இயந்திரங்களின் நுண் அறிவு பிரிவுகளே.
[Quoted text hidden]
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 2:33 PM


ஓஹோ, நான் நினைச்சது இப்போதைய வெள்ளப் பெருக்கைப் பத்திச் சொல்றீங்கனு.  பஹுகுணாவைப் பற்றிச் சொல்றீங்கனு புரிஞ்சுக்கலை.  தப்பு என்னோடது தான். 

CAG warned of hazards 3 years ago. 

The CAG, in an environmental assessment of the Bagirathi and Alaknanda, three years ago, had warned of hazards. It said hydel projects on the rivers were damaging hills and increasing possibility of flash floods.The devastation in the 

2013/6/20 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 2:34 PM


நீங்களே போட்டுட்டீங்க.  இதான் நான் சொல்ல வந்ததும்
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 2:42 PM
To: mintamil@googlegroups.com
 நன்றி, கீதா. ஒரே க்ஷணத்தில் நாமிருவரும் ஒரே செய்தியை விமரிசித்ததும் ஒரு மகிழ்வே.
நன்றி, பிரகாஷ். நீங்கள் கூறுவதின் யதார்த்தம் புரிகிறது. ஆனால், அலை வரிசைகள் வேறு. நான்
வரலாற்று நோக்கில் நீண்டகால பார்வையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். காந்திஜி, மார்ட்டின் லூதர் கிங்க், மாண்டேலா ஆகியோர் புரட்சிகளை நிகழ்த்திக் காண்பித்தவர்கள்.

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 12:02 PM

அரசு 2: மக்கள் எழுச்சி:அப்டேட்:2
உத்தராகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த காட்டாற்று வெள்ளம் சுனாமி போன்ற பேராபத்து தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும், பூர்வோத்தரம் அறிந்து கொள்வது நல்லது. டாக்டர் கே.எல்.ராவ் என்ற பிரபல விஞ்ஞானி மத்திய அமைச்சரவையில் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். அவர் வகுத்த ‘மலர்மாலை’ நதிகள் இணைப்பு பெரிதும் பேசப்பட்டது; பின்னர் கடப்ஸில் போடப்பட்டது. இந்தியாவின் நதிகளின் நீரோட்டம், பிரவாகம், மேடுபள்ளம், வெள்ளங்களின் வரலாறு அவற்றையும், இந்த மலர்மாலை திட்டத்தையும் தழுவி மத்திய அரசு 1975ல் தயாரித்தத் திட்டத்தின் படி அமையும் சட்டத்தின் விதிப்படி, வெள்ள அபாயம் உள்ள இடங்களிலிருந்து குடியிருப்புகளை அகற்றலாம். ஆனால் குறுக்கே நின்றன, உத்தர்பிரதேச, பீகார், மேற்கு வங்காள மாநில அரசுகள். அந்த வகையில் பார்த்தால், இந்த பேராபத்தில் சிக்கிய பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கும். ஆள்சேதம் குறைந்திருக்கும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த மசோதாவுக்கு பதில் அளிக்க ‘கின்னஸ் சாதனை’ மாநிலங்கள் தான் நமக்கு மேலாண்மை! மணிப்பூரும். ராஜஸ்தானும் மட்டுமே ‘ததாஸ்து’ கூறி, பின்னர் வாளாவிருந்து விட்டன. மசோதா மறுபரிசீலனையில். இந்த அழகில் மக்கள் மீது எப்படி பழி சாற்றலாம்?

அது போகட்டும். ஏப்ரல் 23, 2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆடிட் ரிப்போர்ட் வெளிப்படுத்திய உண்மை:
  1. உத்தராகாண்ட் மாநிலத்தின் ‘பேராபத்து நிவாரண மையம் 2007 ல் நியமிக்கப்பட்டது;
  2. அது இன்று வரை (ஏப்ரல் 2013) ஒரு தடவை கூட கூடவில்லை.
  3. அத்தகைய மையங்கள் தன்னுடைய கொள்கை, நடைமுறை, விதிகள் ஆகியவற்றை வரைந்தால் தானே இட்ட கடமையை செய்ய முடியும். அதைக்கூட செய்யவில்லை;
  4. பேராபத்து வந்தால் முதல் நிலை நடவடிக்கை பற்றிய திட்டம் ஒன்று கூட வரையவில்லை.
  5. பாதிக்கு மேல் பணியிடங்கள் காலி. 

இந்த களேபரத்திக்கு நடுவில் சாக்கோ என்ற ̀காங்கிரஸ் கட்சித்தலைவர் சாக்குப்போக்குகள் பல சொல்லி வினா தொடுத்தார். அவற்று பதில் அவரல்லவா சொல்லவேண்டும். அதான், நான் கொயட்டு.
இன்னம்பூரான்
21 06 2013

இன்னம்பூரான்

Geetha Sambasivam Fri, Jun 21, 2013 at 12:17 PM


ஜோஷி மட்டுக்கு வந்திருக்கும் மந்திரியை மக்கள் முற்றுகையிடுகின்றனர். அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
2013/6/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 12:24 PM

இந்த படங்களை பாருங்கள்.


இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 7:09 PM

'அரசு -2: மக்கள் எழுச்சி' என்ற முதல் இழை பிரேசில் நாட்டின் மக்கள் எழுச்சியை பற்றியது. சமகாலத்து இந்திய நிகழ்வு ஒப்புமைக்குக் கூறப்பட்டது. அதை பற்றி மட்டுமே இழைகள் தொடர்ந்தது வியப்பளிக்க வில்லை. மறுபடியும் பிரேசில் நாட்டுக்கு திரும்புகிறோம். பத்து நூறாகி, அதுவும் ஆயிரமாகி, பல்லாயிரமாக வளர்ந்து, இப்போது மிலியன் கணக்காக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தொலைக்காட்சியில் கண்டதை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னம்பூரான்

அரசு-1 மக்கள் கருத்து:அப்டேட்


அரசு-1 மக்கள் கருத்து:அப்டேட்.அரசு-2 மக்கள் எழுச்சி: அடுத்து வரும்.
இன்னம்பூரான்
20 06 2013

Innamburan S.Soundararajan Tue, May 21, 2013 at 7:24 PM

அரசு-1
மக்கள் கருத்து
Inline image 1
இது புதிய தொடர். பல வருடங்களாக மடலாடும் குழுக்களில் எழுதி வந்ததை வலைப்பூவில் பதிக்கவில்லை. சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க, அவற்றை மீள்பதிவு செய்ய தொடங்கினேன். சேகரமும் ஆகிறது; வாசகர்களும் கூடினர். ஒரு பக்கம், அது தொடரும். நிகழ்காலத்துக்கும் வரவேண்டுமல்லவா. அதற்காக, புதிய தொடர்கள். சுருக்கமான தலைப்புகள். எளிய உரைநடை. ஆங்கிலம் கலக்கலாம். இவற்றை மடலாடும் குழுக்களுடனும், வல்லமை இதழுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
இரு வாரங்கள் முன்னால் ஸீ.என்.என்.ஐ.பி.என் ஒரு சர்வே நடத்தியது. தற்கால மத்திய கூட்டணி ஒன்பது வருடங்களாக அரசாளுகிறது. இனி தாக்குப் பிடிக்கமுடியாது என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதாக ஒரு தோற்றம். இந்த சர்வேயில் பெரும்பாலோர் இது துணிவிழந்த அரசு, அரசியல் திறன் குறைந்து விட்டது என்கிறார்களாம் -95% டில்லியில்; லஞ்சலாவண்யம் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்து விட்டதாக 94% டில்லியில் வருந்தினார்கள். விலைவாசி எக்கச்சக்கமாகவே உயர்ந்து விட்டது என்ற கவலை வேறு. சென்னையிலும் இதே மாதிரி தான் கணிப்பு. மும்பையில் சரி பாதி இந்த அரசுக்கு ஆதரவு. சரி பாதி அதை போற்றவில்லை. பெங்களுரில் ஆதரவு கொஞ்சம் கூட. அங்கே தான் பிஜேபியின் வண்டவாளம் வெளுத்து விட்டதே. இந்தியாவின் செல்வ நிலை (பொருளாதாரம் என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) மங்கி விட்டதாக ஒரு கருத்துப் பரவலாக இருந்தாலும் சண்டிகரிலும், போபாலில் இதற்கு மாறான கருத்து. மிகவும் கவலை தரும் விஷயம்: 80 வயதான பிரதமர் மன் மோஹன் சிங் அவர்கள் கண்ணியத்துக்குப் புகழ் பெற்றவர். பிரமாதமான பட்ஜெட் அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால் உலகை அசத்தியவர். பொருளியல் நிபுணர். சமீபத்து உழல்களின் பின்னணி பயங்கரமானது. அவற்றில் சில தேசத்துரோகம் செய்தவை. கறுப்புப்பணம் ஈட்டியவை. வெளிநாட்டு மர்மக்கணக்குகளில் நம் செல்வத்தை முடக்கியவை. அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று மக்கள் அவரை குறை சொல்வது அதிகரித்து விட்டது. என் செய்வது? நான் அவரை மதிப்பவன். ஆனால், நமக்கு எத்தனை நெருடல்!
இன்னம்பூரான்
21 05 2013






Tthamizth Tthenee Wed, May 22, 2013 at 9:43 AM

பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.

1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள்  என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்
2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும்   அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால்  பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார்   அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால்,
3.தேசாபிமானியாய்  இருந்தால்,  அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி  அக்ரமங்களை  கண்டும் காணாமலும்   இருக்க மாட்டார்.
4.முகத்துக்கு நேரே  நீங்கள் சரியாக செயல்படவில்லை  என்று  கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது  விலகி இருப்பார்  நேர்மையான மனிதராய் இருந்தால்
5.அல்லது உண்மையாகவே  நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால்  தவறு நடக்கும் இடத்தில்  தைரியமாக தட்டிக் கேட்பார்  தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால்  அவரைக் குற்றம் சாட்டுவதில்  தவறே இல்லை


பொருளாதார மேதை  என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு  பொருள் என்ன?
அன்புடன்
தமிழ்த்தேனீ

*




இன்னம்பூரான்






நேரம் செலவழித்து அருமையான பட்டியல் போட்டதற்கு நன்றி.
பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.

1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள்  என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்.
~ அச்சமில்லை. தயங்குவர். இரா.செழியன் அவர்கள் பதவி நாடியதில்லை.

2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும்   அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால்  பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார்   அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால், 
~ மாஜி  ஜனாதிபதி ஜனாப் அப்துல் கலாம் கூட அவ்வாறு உணர்ந்த போது, பதவியை தூக்கிப்போட்டு வெளியேறவில்லை.

3.தேசாபிமானியாய்  இருந்தால்,  அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி  அக்ரமங்களை  கண்டும் காணாமலும்   இருக்க மாட்டார்.
~? 

4.முகத்துக்கு நேரே  நீங்கள் சரியாக செயல்படவில்லை  என்று  கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது  விலகி இருப்பார்  நேர்மையான மனிதராய் இருந்தால்
~ நேர்மையானவர்களுக்கு அந்த குறிப்பு தேவையில்லை. 

5.அல்லது உண்மையாகவே  நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால்  தவறு நடக்கும் இடத்தில்  தைரியமாக தட்டிக் கேட்பார்  தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
~ சான்றாக, ராஜாஜி, காமராஜர், நேதாஜி. 

இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால்  அவரைக் குற்றம் சாட்டுவதில்  தவறே இல்லை
~அது மட்டும் போதாது. 


பொருளாதார மேதை  என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு  பொருள் என்ன?

~ யார், யாரை அவ்வாறு கூறினார்கள்? 

Wednesday, June 19, 2013

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 7




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 7

Innamburan S.Soundararajan Wed, Jun 19, 2013 at 9:46 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 7
Inline image 1
கடிதம் 6 நீண்டொதொரு பயணம் மேற்கொள்ளும் போல் இருக்கிறது. எனவே கடிதம் 5க்கு திரும்பினோம். அதனுடைய ஈற்றடி: 
‘இது எஃப்.ஐ. ஆர். எனப்படும் பிரம்மாஸ்திரத்துக்கு/புஸ்வாணத்துக்கு ஒரு பீடிகை. கதை சொன்னால் நம்மருமை வாசகர்கள் படிப்பாகளோ என்ற அல்பாசை...’.
இந்த எஃப்.ஐ. ஆருக்கு தசாவதாரங்கள் உண்டு என்று எச்சரித்து, ஒரு டியூடோரியல் எழுத நினைத்த போது அதனுடைய பகாசுர அவதாரம் பற்றிய தகவல் ஒன்று இன்று வெளியான ஜூனியர் விகடனில் கிடைத்தது. அடேங்கப்பா! கடிதம் 5ல் சொல்லப்பட்ட ஸ்லீமன் காலத்து தரோகாவை தூக்கியடிக்கிறது இந்த எஃப்.ஐ. ஆர். தடாலடி.
அதை முழுதும் இங்கு இணைத்துள்ளேன். ஏனெனில், எஃப்.ஐ. ஆர். சொல்லை வைத்துக்கொண்டு, ‘மணலை கயிறாய் திரிக்கலாம்’ என்றும் திரித்த கயிறை அரவமாக உயிர்ப்பிக்க முடியும் போலீசால் என்று தோன்றுகிறது. காத தூரம் என்ன கப்பலேறி ஓடிடலாம் என்று கையும் காலும் உதறல் எடுக்கிறது. எஃப்.ஐ. ஆர் கலாட்டாவுக்கு அது பொருத்தமான  டியூடோரியலாக அமைகிறது. எனக்கு விவரங்கள் தெரியாது. அதனால் தான் கட்டுரையை உள்ளது உள்ளபடி அளித்துள்ளேன். தர்ம அடி வாங்கிய போலீஸின் தம்பி போலீசாரை தாக்கியதாக ஒரு வரி இருக்கிறது. அதெல்லாம் விட எஃப்.ஐ. ஆர்.அணுகுமுறையையும் நோக்குக.  அடுத்த கடிதத்தில் சட்டரீதியான டியூடோரியல். 
இன்னம்பூரான்
19 06 2013
_________________________________________________________________________________________________________________________________________
மத்திய உளவுத் துறை என்றால் என்ன வென்ற அடிப்படை அறிவுகூட இல் லாமல் சென்னை போலீஸ்காரர்கள் நடத்திய வெறியாட்டத்தால், தமிழகக் காவல் துறையே தலை குனிந்து நிற்கிறது. 
கடந்த 10-ம் தேதி, எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் ஒரு செருப்புக்கடை தகராறில் ஆரம்பித்தது இந்த விவகாரம்.
ஒரு செருப்புக் கடைக் காரருக்கும் செருப்பு வாங்க வந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறால், இரண்டு தரப்பும் அந்தக் காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர்கள், 'நாளை வாருங்கள். விசாரித்துவிட்டு எஃப்.ஐ.ஆர். போடு கிறோம்’ என்றனர். செருப்புக் கடைக்காரருடன் வந்த வழக்கறிஞர் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்தத் தகராறு முற்றி, அது காவல் துறை - வழக்கறிஞர்கள் மோதலாக மாறியது. இதில் போலீஸ்காரர்களைத் தாக்கிய வழக் கறிஞர்களில் பூபாலன் என்ற வழக்கறிஞரும் ஒருவர்.
pastedGraphic.pdf
அவரது வீட்டுக்கு, அன்று இரவே ஒரு டஜன் போலீஸார் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் வழக்கறிஞர் பூபாலன் இல்லை. அவருடைய சகோதரர் திருநாவுக்கரசு இருந்துள்ளார். அவர் இன்டலிஜென்ஸ் பீரோ எனப் படும் மத்திய உளவுத் துறையில் சப்-இன்ஸ்பெக்டர். பூபாலன் மீது இருந்த ஆத்திரத்தில் மத்திய உளவுத் துறை அதிகாரி யான திருநாவுக்கரசை போலீஸார் போட்டுப் புரட்டி எடுத்ததில், அவர் இரண்டு கை எலும்புகளும் இடது காலும் முறிந்துபோய் கந்தலாகிக்கிடக்கிறார். திருநாவுக்கரசு சார்பில்,  உளவுத் துறையின் மூத்த ஊழியர் ஒருவர் நம்மிடம் பேசினார்.
''சம்பவம் நடந்த அன்று, இரவு 10 மணிக்கு, திருநாவுக்கரசின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் காரர்கள், 'பூபாலன் எங்கடா? நீ யாருடா?’ என்று எடுப்பிலேயே ஏகவசனத்தில் பேசியுள்ளனர். உடனே திருநாவுக்கரசு, வந்திருந்த போலீஸ்காரர்களில் பச்சமுத்து என்ற எஸ்.ஐ-யிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, 'நான் பூபாலனின் அண்ணன். ஹைதராபாதில் இன்டலிஜென்ஸ் அதிகாரியாகப் பணியாற்றுகிறேன்’ என்றார். ஆனால், அவர்கள் யாருக்கும் இன்டெலிஜென்ஸ் என்றால் என்னவென்றே புரியவில்லை. திருநாவுக்கரசு சொன்னதைக் காதில் வாங்காமல், அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, நான் மத்திய உளவுத் துறையில் உங்களுக்கு சமமான ரேங்க்கில் பணிபுரியும் அதிகாரி என்று தமிழிலும் கூறியுள்ளார். ஆனால், அப்போதும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. நடுரோட்டில் லுங்கி அவிழ்ந்த நிலையில், அவரை தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது, பச்சமுத்து பிளாஸ்டிக் பைப் ஒன்றால் திருநாவுக்கரசின் இடது பக்கக் கழுத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில் மயங்கிப்போன திருநாவுக்கரசை அங்கிருந்து ஸ்டேஷனுக்குக்கொண்டு போய், சுவற்றில் சாய்த்து வைத்து, பெண் எஸ்.ஐ-யான சோனியா காந்தி உட்பட எஸ்.ஐ-க்கள் பச்சமுத்து, அருள்தாஸ், இளையராஜா, கார்த்திக் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் உதைத்துத்  துன்புறுத்தியுள்ளனர். அந்தச் சமயங்களில் திருநாவுக்கரசின் சாதியைச் சொல்லியும் திட்டியுள்ளனர்.
இந்த நேரத்தில் திருநாவுக்கரசின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருடைய அடையாள அட்டையை  எடுத்துப்போய் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து விவரம் கூறினர். அதை வரிசையாக வாங்கிப் பார்த்த எஸ்.ஐ-க்கள் நான்கு பேரும், 'இவன் ஐ.பி-ல இருக்கானாம். சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்டாஃப்பாம். ஐடென்டி கார்டெல்லாம் காமிக்கிறான்’ என்று சொல்லியபடியே, 'நீ சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்டாஃப்னா பெரிய இவனா? ஐடென்டி கார்டைக் காமிச்சா, நாங்க பயந்துருவமா?’ என்று மேலும் மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்த பிறகுதான் திருநாவுக்கரசுக்கு அடி ஓய்ந்துள்ளது. 'ஐ.பி-ன்னா என்னன்னு தெரியாம நீங்க எப்படி டிபார்ட்மென்ட்டுக்கு வந்தீங்க?’ என்று திட்டிவிட்டு திருநாவுக்கரசிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார். 'இந்த விவகாரத்தை இப்படியே விட்ருங்க சார். எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம். உங்க உயர் அதிகாரிகளுக்கு இதைப்பத்தி எந்தத் தகவலும் சொல்லாதீங்க. ட்ரீட்மென்ட் செலவை நாங்க பார்த்துகிறோம். உங்க மேலதிகாரிகள் கேட்டா பைக்ல போகும்போது ஆக்ஸிடென்ட் ஆயிருச்சுனு சொல்லுங்க’ என்றார். அவர் அதற்கு சம்மதிக்காததால், சாதாரணமாக சிகிச்சை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டனர். இதையடுத்துத்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக திருநாவுக்கரசின் சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடுக்கி யுள்ளோம். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவதில்லை.
இப்போது இந்த விவகாரம் டெல்லியில் உள் துறை அமைச்சகம் வரை போய்விட்டது. ஆனால், இப்போதுகூட இங்குள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் எங்கள் டிபார்ட்மென்ட் ஆட்களை சமாதானப்படுத்தும் வேலையில்தான் இருக்கிறார்களே தவிர, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்'' என்றார்.
இதுபற்றி புளியந்தோப்பு துணை ஆணை யாளர் சுதாகரிடம் பேசினோம். ''நடந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
காவல் துறையும் பச்சமுத்து என்ற எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்ததுடன் மற்றவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
மத்திய உளவுத் துறை அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுஜனத்தின் நிலை?
  • ஜோ.ஸ்டாலின்
__________________________________________________________________________________________________________________________
உசாத்துணை; காப்புரிமை ஜூனியர் விகடனது. என் நன்றி அவர்களுக்கு உரித்ததாகுக.


அன்றொரு நாள்: ஜூன் 20




அன்றொரு நாள்: ஜூன் 20


Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 8:52 AM





அன்றொரு நாள்: ஜூன் 20


வாழ்வியல், சிந்தனை, நம்பிக்கை, ஒழுக்கம், நியதி, சட்டம், நீதி, நியாயம், தர்மம் என்ற வரிசை, ஒரு நேர்க்கோட்டில் சஞ்சரிப்பதில்லை. தண்டவாளம் மாதிரி சந்திக்காமலும் போகலாம். சந்து பொந்தில் நுழைந்தாலும், அவை ராஜபாட்டையில் பீடு நடை போடலாம். ‘முரண்’டு பிடித்து, வளைந்து உடைந்தும் போகலாம். இந்த முத்தாய்ப்பு எதற்கென்றால், நீதிமன்றங்களில், சில வழக்குகள் சந்து பொந்தில் நுழைந்தாலும், அவை ராஜபாட்டையில் பீடு நடை போட்டு, வாழ்நெறியின் தத்துவங்களை முன் வைத்து, வரலாற்றில் நிரந்தமான இடம் பிடித்து விடுகின்றன. 

ஷாஹிபாத், மாடமாளிகைகளும், உப்பரிகை மாடங்களும், வீட்டுக்கு வீடு தோட்டம், துரவு, தடாகங்கள் என செல்வந்தர்கள் வாழும் பகுதி. அங்கு ஒரு பெரிய அரசு விருந்தினர் மாளிகை. ஒரு காலத்தில் நீதிமன்றம். அங்கு ஒரு விசித்திரமான வழக்கு, சூட்சுமம் அறியாதவர்களுக்கு. நீதிபதி, கூண்டில் நிற்பவரிடம், அபரிமித மரியாதை காட்டுகிறார். அரசு தரப்பு வக்கீல், அதற்கு மேல். வழக்கே இல்லை. கூண்டில் நிற்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதிகபக்ஷமான தண்டனை வேண்டுகிறார். அது பற்றி, உரிய தருணத்தில் எழுதுகிறேன். 

இன்று (1967) அமெரிக்காவில் நடந்த வழக்கு ஒன்றை பற்றி: ஒரு 25 வயது வாலிபன். ஏற்கனவே உலக புகழ் பெற்றவன். தீர்ப்பு: ஐந்து வருட கடுங்காவல், $10,000/- அபராதம். சட்டப்படி உச்சகட்ட தண்டனை. இத்தனைக்கும் அரசு வக்கீல் தண்டனை குறைந்த பக்ஷம் போதும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இதை எழுதும் போது என் கண் முன் நிற்பது, கயிற்றுக்கட்டிலில் சாந்தமே உருவாக அமர்ந்திருந்த ஷஹீத் பகத் சிங்க் அவர்கள். 23 வயதில் தூக்கிலிடப்பட்டவர் தான் அப்படி அமர்ந்து இருந்தது. என்னே முதிர்ச்சி! அவரின் ஜெயில் டயரி சொல்கிறது, ‘மனதை கட்டுப்படுத்தாதே. சமனப்படுத்து’. அவரை பற்றியும் பிறகு தான் எழுத வேண்டும். அது அதற்கு உகந்த காலம். 

இந்த அமெரிக்க வாலிபன் அமைதியின் மறு உருவம். நிச்சலதத்வம் அவர் முகாரவிந்தத்தில். கோர்ட்டார் இடைவேளை எடுத்துக்கொண்டபோது, சாவதானமாக, சிறுவர்களுடன் அளவளாவினார். கையொப்பம் போட்டுக்கொடுத்தார்.  ஜட்ஜ் ஜோ. ஈ. இங்கரஹாம் வினவியபோது தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார். ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் அடங்கிய வெள்ளையர் ஜூரி 20 நிமிடங்களில், அவர் குற்றவாளி என்க, அவரின் வக்கீல் உடனடியாக தீர்ப்பு வேண்டுகிறார்; ‘என் கட்சிக்காரர் நிம்மதியாக இன்று இரவு உறங்க விரும்புகிறார்!’

வழக்கு: சட்டப்படி கட்டாய ராணுவசேவை செய்ய மறுக்கிறார், இந்த இளைஞன். அது குற்றமே. தண்டனை விதிக்கவேண்டும்.
பிரதிவாதி தரப்பு: இவர் ஒரு இஸ்லாமிய மத போதகர். அதற்கான விலக்கு அளிக்க அரசின் அமைப்பு மறுத்து விட்டது.
அரசு தரப்பு: இவரது மதம் அரசியல் பேசுகிறது. அரசின் அமைப்பு சரியான முடிவு தான் எடுத்தது. [ வாய் திறவாத அந்த இளைஞர், இந்த கூற்றை மென்மையாக மறுக்கிறார்.]
கோர்ட்டில் இஸ்லாமியர் கூடி இருந்தாலும், அமைதி காத்தனர். இவரும் கவலையே இல்லாமல் இருந்தார். 
குறிப்பு: மேல் முறையீடு செய்த போது, இந்தத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அமெரிக்க சட்ட வரலாற்றில் அது ஒரு மைல்கல்.
குற்றம் சாட்டப்பட்டவர்: ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் கெலித்தும், குத்துச்சண்டையில் உயர்ந்த நிலை உலக சாம்பியனாக வாகை சூடி, அமெரிக்காவுக்கு புகழ் வாங்கித் தந்த அஃப்ரோ அமெரிக்கன் திரு. காஷியஸ் க்ளே. 1964ல் இஸ்லாமியர் ஆனார். 
படிப்பினை என்ன, நண்பர்களே?
இன்னம்பூரான்
20 06 2011
Image Credit:http://imgsrv.eagle969.com/image/kseg2/UserFiles/Image/Bob%20Keller%20folder/0541965-cassius_clay.jpg


கி.காளைராசன் Tue, Jun 21, 2011 at 9:04 AM




சாந்தமே உருவாக அமர்ந்திருந்த ஷஹீத் பகத் சிங்க் அவர்கள். 23 வயதில் தூக்கிலிடப்பட்டவர் தான் அப்படி அமர்ந்து இருந்தது. என்னே முதிர்ச்சி! அவரின் ஜெயில் டயரி சொல்கிறது, ‘மனதை கட்டுப்படுத்தாதே. சமனப்படுத்து’. அவரை பற்றியும் பிறகு தான் எழுத வேண்டும்.

ஐயா ,
தாங்கள் அன்புள்ளம் ​கொண்டு இதுபற்றி விரைவில் எழுதிடுமாறு அன்புடன் ​கேட்டுக் ​கொள்கி​றேன்.



இந்தத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அமெரிக்க சட்ட வரலாற்றில் அது ஒரு மைல்கல்.
குற்றம் சாட்டப்பட்டவர்: ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் கெலித்தும், குத்துச்சண்டையில் உயர்ந்த நிலை உலக சாம்பியனாக வாகை சூடி, அமெரிக்காவுக்கு புகழ் வாங்கித் தந்த அஃப்ரோ அமெரிக்கன் திரு. காஷியஸ் க்ளே. 1964ல் இஸ்லாமியர் ஆனார். 
படிப்பினை என்ன, நண்பர்களே?

ஐயா,
படிப்டிபி​னை என்ன?
பாம்பு, க​ரையான் வசிக்கும் புற்றில் வாழ முடியாது.
அன்பன்
கி.கா​ளைராசன்

Geetha Sambasivam Wed, Jun 22, 2011 at 5:41 AM



ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்த முத்துக்கள்
*
காளை ராஜன், நன்றி. ஷஹீத் அவர்களை பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். சிறுவயதில் எனக்கு தாக்கம் ஏற்படுத்திய தேசபக்தம். அரவம் கறையான் புற்றை தானே தேடுகிறது! படிப்பினை கூட, தர்மம் வெல்லும் என்பது தான். இந்த தீர்ப்பு பின்னால் நிராகரிக்கப்பட்டது அல்லவா. தவிர, முகம்மது அலியின் கேசு ஒருவிதத்தில் வீக். மத போதகராக இருப்பது விதிவிலக்குக்கு ஒரு தகுதியா? சத்யமான கேசு யாதெனில், வெள்ளையன் அல்ல என்ற வகையில், prejudice.


Subashini Tremmel Wed, Jun 22, 2011 at 3:51 PM

Dear Pavala,
This series are very interesting and informative. When you find time, could you kindly add a catgory in Heritagewiki அன்றொரு நாள்  and start adding this collection?
Thanks
Suba


Innamburan Innamburan Sat, Jun 25, 2011 at 10:30 AM
To: Subashini Tremmel
Many thanks for the encouragement, Subashini. This is, indeed, a discovery path for me
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

நீயும் நானும் விஞ்ஞானமும் – 3




நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

Innamburan S.Soundararajan Wed, Jun 19, 2013 at 1:42 PM

நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

இன்னம்பூரான்
Wednesday, June 19, 2013, 16:38
‘அவர் (கரியமாணிக்கனார்) புகழ் வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் அதற்கெல்லாம் மேலே மிகவும் உயர்ந்தவர்; புருஷோத்தமன்; லட்சியப் பிரஜை; முழுமையான மனிதர். ‘ – ஜவஹர்லால் நேரு.
உங்களுக்கு சிவக்கொழுந்து சாரைத் தெரியுமோ? தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் பெளதிக பாடம் எடுத்த காலக்கட்டம், நூறு வருடங்களுக்கு முன்னால்: 1911: 9ஆவது வகுப்பு: ஹிந்து உயர்நிலை பள்ளி: ஶ்ரீவில்லிபுத்தூர். தமிழில் பெளதிகத்தையும், பூகோளத்தையும்/ வேதியியலையும்  எளிதில் விளக்கி எனக்கு அதில் ஆர்வமூட்டினார், என்கிறார் ஒரு விஞ்ஞானி. அவரும் சளைத்தவரல்ல. மதிய விருந்துண்ணும் வேளையில், போகிற போக்கில், பாட அட்டவணையில்லாமல், பெளதிகத்தை போதித்து இறவாப் புகழ் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான விஞ்ஞான கட்டுரைகள் எழுதியவர்:Sir.K.S.Krishnan.
விஞ்ஞானத்துக்கும் நமக்கும் காத தூரம் என்று நமக்குள் பச்சாதாபப்பட்டுக்கொண்டு மருகி வாடவேண்டிய தேவை ஒன்றுமில்லை. விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானத்தின் மீதும், பொறியியல் மேலாண்மை மீதும், மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஆர்வமும் தீவிரமும் இருந்தது. பிரதமர் நேருவின் தீர்க்கதரிசனமும், கற்றோர்களின் தொண்டும், அன்றைய இளைய சமுதாயத்தின் தீவிர ஆர்வமும் அதற்குத் துணை நின்றன. காரைக்குடியில் இருக்கும் நவீன மின் – ரசாயன பரிசோதனை சாலையில் நடந்த இரும்பு துருப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், அந்த மையத்தின் தலைவர் டாக்டர் பி.பி.டே அவர்கள் அளித்த பேட்டியும் நினைவலையில் உலவி வந்த போது, புனே நகரில், பெளதிகம் சார்ந்த பரிசோதனை மையம் கண் முன் வந்து நின்றது. மாபெரும் கட்டடம். ஒரு குட்டி கலாட்டா. கவின் அழகைப் பாதிக்கிறது என்று இரு மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தனர். காரில் அந்த பக்கம் வந்த ஒருவர் ‘சட்’ என்று இறங்கி ஓடோடி வந்து அரைகுறை ஹிந்தியில் சத்தம் போடுகிறார். மரத்தை வெட்டக் கூடாது என்கிறார். மற்ற அதிகாரிகள் வந்து வினயத்துடன் பிரச்சினையைச் சொன்னவுடன், மலர்ந்த முகத்துடன், ‘ மூன்றாவது மரம் நட்டு விட்டால், அழகு கூடுமே’ என்றார். கணக்குப் புலி; பாவ்லாவோ பாலே நாட்டியத்திலும் ரசனை. அவர் தான் இன்றைய தலைமாந்தன், கரியமாணிக்கனார்.
இராமனும் கிருஷ்ணனும் இணைந்து விஞ்ஞான சாதனைகள் புரிந்த கதை, இது. அணுக்களுக்குள் புகுந்து விளையாடிய சர். கே.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ராயல் சொஸைட்டியில் அனுமதிக்கப் பரிந்துரை செய்த சர்.சி.வி.ராமனின் பரிசோதனைகளுக்கு உடனிருந்து பல ஆராய்ச்சிகளை செய்த தம்பி கிருஷ்ணனை வானாளவ புகழ்கிறார், அண்ணா. ராமன் எஃப்பெக்ட்’ என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான சாதனை, சொல்லப் போனால், ‘ராமகிருஷ்ண எஃப்பெக்ட்’ தான். ஆனால், தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும், ராமன், ‘இது கிருஷ்ணன் எஃப்பெக்ட்’ என்கிறார். கிருஷ்ணன், ‘இது ராமன் எஃப்பெக்ட் தான்’ என்கிறார்.  பெளதிக சாத்திரத்தின் மற்ற கிளைகளிலும் இவரது கொடி பறந்தது. தற்காலத்தில், ஒளஷதங்கள், வர்ணங்கள், பிளாஸ்டிக், எரிபொருள்கள், நடையுடை யாவற்றிலும் கரியமாணிக்கனாரின் கைவண்ணம் மிளிர்கிறது.
வத்திராயிருப்பு கிராமத்தில் டிசம்பர் 4, 1898இல் பிறந்த நமது கரியமாணிக்கம் சிவக்கொழுந்து சாரைப் பற்றி சொல்வது,’…அவர் விஞ்ஞானியல்ல. ஆனால். விஞ்ஞானத்தை விளக்குவதில் மன்னன். மகுடிக்கு மயங்கிய அரவம் போல எங்களைக் கட்டிப் போட்டார். பெளதிகமோ, பூகோளமோ, வேதியியலோ, அவரது ஸ்டைலே தனி. அவர் பாடம் மட்டும் நடத்தமாட்டார். பரிசோதனைகளைச் செய்து காட்டுவார். எங்களைச் செய்ய ஊக்குவார். அவரால் தான் நான் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டேன்…’.
சிவக்கொழுந்து சாருக்கு நெடுஞ்சாண்கிடையாக தாள் பணிந்து வந்தனம் செலுத்தும்
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:
உசாத்துணை:
பிரசுரம்:http://www.vallamai.com/?p=36253