Friday, May 17, 2013

அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)




அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)

Innamburan S.Soundararajan Fri, May 17, 2013 at 4:56 PM



 அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)
Inline image 1

முன்குறிப்பு:

கிட்டத்தட்ட முப்பது மாதங்களுக்கு முன் திரு. வாசுதேவன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இழை, 'தணிக்கைத்துறையின் தணியா வேகத்தின்' கிளை. பல சான்றோர்கள், மனம் திறந்து, திசை மாற்றாமல் அளவளாவிய இழை. இது இந்தியாவை மட்டுமல்ல, உலகின் மற்ற துரைத்தனத்தாரின் போக்கை உற்று நோக்குவது. வழக்கம் போல் நூல் முடிச்சுப்போட்டுக்கொண்டு, தங்கி விட்டது. தற்கால அரசியல் நிலையை, குறிப்பாக இந்தியாவின் வரும் தேர்தலை நினைக்கும்போது விழிப்புணர்ச்சி அவசரத்தேவை. எனவே, இவ்விதழின் மிச்சபகுதிகளை வலையேற்றிய பிறகு, சிந்தனைகள் தொடரலாம்.
சித்திரத்துக்கு நன்றி
இன்னம்பூரான்
17 05 2013
____________________________________________________________



Tirumurti Vasudevan 
1/13/10

ஆமாம். வெகு நாட்களாக இருக்கிற ஆதங்கம். அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க சட்ட வழி முறைகளே இல்லையா?
உங்கள் பதிவுகளில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். வேறு இழையாக இதை பிரித்து கொண்டு போகிறேன்.
திவாஜி

2010/1/13 Innamburan Innamburan 
திவாஜி விடுவதாக இல்லை.



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10

திவாஜி,
,'எள்' என்றால் எண்ணெய்! இழை பிரிக்கவேண்டும் என நினைத்தேன். செய்து விட்டீர்கள்! இங்கு இந்த வினாவே தொடக்கம்.
.
அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசியல் சாசனம் வழி வகுத்துள்ளது. அந்தந்த செயல்களுக்கு அந்தந்த சட்டம் உண்டு; தண்டனை உண்டு. சான்றாக, சிறார்களையும், சிறுமிகளையும் வேலை வாங்கக்கூடாது, சட்டப்படி.  மற்றொரு சட்டம் அவர்களுக்கு கட்டாய கல்வி என்கிறது. நடப்பது நாம் அறிந்ததே.

௧. மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.
௨. அரசு சட்டத்தின் சாட்டையை வீசுவதில்லை.

௩.நீதித்துறையை என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

௪. நிர்வாகம் தடம் மாறும் போது பொதுநல வழக்கு, தகவல் உரிமை சட்டம், ஆகியவை அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க விரட்டலாம். சட்டம் மற்றவகையில் உதவாது, அதனுடைய பயன் வேறு.

இவையெல்லாம் புதியவை. அறுபது வருடங்ககளுக்கு முன்னாள், திரு வசந்த பை என்ற வழக்கறிஞர் தவறுகளை தட்டிக்கேட்டு நீதிமன்றத்தையே, ஒரு 
ஆட்டு ஆட்டி வைத்தார்.

௫.  அரசை உருப்படியாக வேலை செய்ய, அரசியல் வாதிகள் தன்னலம் அற்றவர்களாகவும்,சர்தார் படேல் போல திறன் படைத்தவர்களாக இருக்கவேண்டும். அது மக்களாட்சியில் துர்லபம். சர்வாதிகாரமோ கொடியது.

௬. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கட்டுப்பாடான விதிமுறைகள் உள்ளன.    கண்டு கொள்பவர்கள் இல்லை.

௭. எனவே, விழுப்புணர்ச்சி, போராட்டம் என்றெல்லாம் ஆரம்பிக்க ஹேது உண்டு. வரலாறும் அதையே கூறுகிறது.

இன்னம்பூரான்

Tirumurti Vasudevan 
1/13/10

அரசு மதிச்சாத்தானே மக்கள் மதிக்க? அரசே சட்டத்தை மதிக்காது, கோர்ட் உத்திரவை அமல் படுத்தாது ன்னா என்ன் மக்கள் செய்வாங்க?
அதான் கேக்கிறேன், அரசு தன் கடமையை செய்ய வேண்டும்ன்னு கேஸ் போட முடியுமா முடியாதா? ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் லே அப்படி கனடிய (?ப்ரிட்டிஷ்?) சட்டத்தில் இடம் உண்டுன்னு படிச்ச நினைவு. நினைவென்ன, படிச்சேன் நிச்சயமா.



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10

திவாஜி,
ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் கற்பனை நூல் எனினும்,  அதன் பின்ணணியில் ஆய்வு இருந்தது. 1960ல் அது எழுதப்பட்டபோது, அப்படி சட்டம் ஒன்றும் இல்லை; பிறகும் இல்லை. ஆனால், அந்தந்த சட்டங்களை மக்கள் கையாண்டார்கள் வெற்றியோடு. 'டார்ட்' சட்டம் இங்கிலாந்தில் வேரூன்றியிருந்தது. ஒரு ப்ராம் வண்டியில் இருந்த கம்பியானால் அமைந்த வசதி, தவறாக இணைக்கப்பட்டிருந்த்ததால், குழந்தையின் கண்ணை குத்தி விட்டது. வழக்கில், அதை விற்றவரும், உருவாக்கிய கம்பெனியும், பளுவான நஷ்டஈடு கொடுக்க  தீர்ப்பு. இந்தியாவில் 'ஏன் 'டார்ட்' பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது மர்மம்.பட்டாசு கம்பேனி சட்டத்தை மீறினால்  ஏற்படும் சாவுக்கு வரிப்பணத்த ஏன் கொடுக்கவேண்டும்? அவனிடம் பிடுங்க வேண்டியது தானே?
As John Stuart Mill put it, "Vigilance is the price of Liberty."
இங்கிலாந்தில் விழிப்புணர்ச்சி அதிகம்; வெல்ஃபேர் ஸ்டேட் அல்லவா. நான் ஐந்து வருடங்கள் இங்கு மக்கள் ஆலோசனை மையத்தில் தன்னார்வ பணி புரிந்த போதும், அத்துறையில் பட்டப்படிப்பு ஆய்வுகளிலும் கற்றுக்கொண்டது மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்பது. நாள் தோறும், அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்னுடையான உறுதியான கருத்து, நாடாளும்
மன்றம், அரசியல் சாஸனம் என்பதையெல்லாம் விட ஆங்கிலேயர்கள் Citizen Advice [established 1939] அமைப்பை நமக்கு தந்திருந்தால், நாம் சுபிக்ஷமாக இருந்திருப்போம். 2002 ஆண்டிலிருந்து அந்த அமைப்பின் தொடக்கத்தையாவது இந்தியாவில் செய்ய முயன்றேன். கஜினி படையெடுப்பு செய்தேன். படு தோல்வி அடைந்தேன். இந்தியாவில் பொதுவாக நான் கண்ட குறை, 'எதிலும் ஆதாயம் தேடுவது'. எனினும், சான்றோர்கள் பல இருந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் டா. பார்த்தசாரதி என்ரு ஒருவர் பழங்குடிமக்களுக்கு சேவை செய்தார். அவர் காலவியோகம் ஆனபோது, மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவரை இறைவன் என்றும், இறைவனுக்கு மரணம் இல்லை என்றும் நம்பி இருந்தார்கள்.
இந்தியாவில் அரசு இயந்திரம் இந்தளவுக்கு பழுது அடையும் என்று நாற்பது வருடங்களிக்கு முன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.
அன்புடன்,

இன்னம்பூரான்
2010/1/13 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>

karthi 
1/14/10


இன்னம்பூரான்,
அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக
இருக்க முடியாது என வரலாறும், பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன.
அதன் குறைகள் அரசு அமைப்புடன் சேர்ந்தே பிறப்பவை. "உடன் பிறந்து கொல்லும்
நோய்கள்."
இதற்கான தீர்வு அரசு சேவைகளை தனியார் மயப்படுத்தலில்தான் இருக்கிறது. அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு சேவைகள் மேம்பாடு
அடைந்துள்ளன. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான் முதலிய
நாடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். மலேசியாவில் வருமான வரி வசூலிப்பு கூடத்
தனியார் துறையினால்தான் செய்யப்படுகிறது. இந்நாடுகளில் அரசாங்கம் பல துறைகளில்
மேலாண்மை மட்டுமே செய்கிறது.
ஆனால் தனியார் துறை இலாப நோக்குடையது. இலாபம் பெற சேவைகளுக்குக் கட்டணம்
விதிக்கும். சேவை பெறும் பொதுமக்கள் அதிகக் கட்டணம் தர வேண்டி இருக்கும்.
இந்தியாவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு கட்டாயம் இருக்கும்.
இந்தியாவுக்கு இன்னமும் ஒரு சோஷியலிச மனப்பான்மை இருக்கிறது. சோஷியலிசம்
மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த போதும் அதனை விடாப்பிடியாகப் பிடித்துக்
கொண்டிருக்கும். நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும் விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஆகவே அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசு இவற்றிலிருந்து விலக வேண்டும்.
மேலாண்மை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா சீரடையும்.
ரெ.கா.

N. Kannan <navannakana@gmail.com>
1/14/10

இந்தியா போன்ற ஆன்மீக பாதிப்புள்ள நாட்டில் எவ்வகையான அரசு செயல்படும்
என்பதே கேள்வி.
ஒரு காலத்தில் தெய்வத்திற்கு பயப்பட்டு காரியங்கள் நடந்து வந்தன.
விரைவில் வெளியாகப் போகும் மின்னூல்களில் உ.வே.சா காலம்வரை (ஆங்கில அரசு)
அது ஆங்கிலேயர்களையும் உடன் சேர்த்து எப்படி நடந்து வந்திருக்கிறது
என்பது தெரிய வரும். இன்னும் அங்கு தர்மசாலைகள் உள்ளன. எல்லாம்
தர்மத்திற்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.
அதே நேரத்தில் கோரமான சுயநலமும், ஊழலும், ஒழுங்கின்மையும் செய்முறை
வாழ்வாகியும்விட்டது.
ஒருபுறம் சோஷலிசம், இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்கு
கட்டுப்படுத்துகிறது.
ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாக, அடிப்படை அலகாக மாறிவிட்டது.
எனவே ஊழலை எப்படி ஒழுங்குபடுத்துவது எனும் புதிய ஃஇர்வாக நுணுக்கங்கள்
அங்கு செயல்முறைக்கு வரவேண்டும்.
ஊழல் என்பதும் தனியார் துறை சமாச்சாரம்தான்!

க.>


Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
1/14/10

ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் விடமுடியுது! :(((((((( 


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10

நன்னா காதுலே விழறது.


Geetha Sambasivam 
1/14/10



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10



Venkatachalam Subramanian 
1/14/10

நடுவண் அரசின் பொறுப்பிலுள்ள ஒரு நிறுவனம். தளவாடச் சாமாங்கள் பதிவேட்டில் (Dead stock Register) ஆயில் எஞ்சின் (பெட்டர்) உருப்படி 1.
என்ற பதிவில் இருந்த எஞ்சினைக் கடத்திச் செல்ல திட்டமிட்ட சில ஊழியர்கள் ஒரு புதிய ஏற்பாடு செய்தனர்.

டெட் ஸ்டாக் பதிவேட்டில் இருந்த பதிவினை மாற்றி(Consumable Stock Register) ‘கன்ஸுயூமபல் ஸ்டாக் ரிகிஸ்டருக்கு எடுத்து எழுதினான் ஒருவன். 

ஏன் பிறித்து எடுத்து எழுதினாய் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. எழுதியவன் ஒரு இட வல மாற்றம் செய்து பெயர்த்து எழுதியிருந்தான்.

’ஆயில் எஞ்சின் ‘ என்பதை ’எஞ்சின் ஆயில்’ என்று எழுதி முறையாக மேலதிகாரியிடம் சுருக்கொப்பமும் பெற்றான்.

பிறகென்ன! 
தினமும் பல வண்டிகளின் பெயரால் செலவு எழுதி ஒரு நன்னாளில் இருப்பு பூஜ்யம் என்று காட்டி காவலரையும் கூட்டத்தில் சேர்த்து பெரிய எஞ்சின் நோகாமல் கடத்தப்பட்டது.
குறுக்கு வழியில் வாழநினைக்கும் திருட்டுக் கூட்டம்!  தணிக்கை குழு ஒன்று இதனைக் கண்டுபிடித்து வெட்ட வெளிக்குக் கொணர்ந்து அந்தக் குழு தண்டிக்கப்படது.

ஓம். வெ.சுப்பிரமணியன

Geetha Sambasivam 
1/14/10

இப்படியும் நடக்கும் என்பதே ஆச்சரியம் தான், கடத்தல் மட்டுமல்ல, தண்டனையும் கூட!

karthi 
1/14/10


ஐயா,
எங்கள் நாட்டிலும் எஞ்சின் திருடர்கள் உள்ளார்கள்.
இங்கே காணலாம்:
ரெ.கா.
2 attachments — Download all attachments   View all images   Share all images  
517.gif517.gif
1K   View   Share   Download  
360.gif360.gif
1K   View   Share   Download  



Thursday, May 16, 2013

பாமரகீர்த்தி -6


பாமரகீர்த்தி -6


பலவருடங்களுக்கு முன்னால் மும்பையில் திலீப் பாப் என்பவர் 'வாய்மொழி வரலாறு' சேகரம் செய்ய ஆரம்பித்தார். அதை கவனித்த நான் அலஹாபாத்தில் நூறு வயது ஆன ஒரு மாஜி போலீஸ் உயரதிகாரியை பேட்டி கண்டேன். நன்முத்துக்கள் உதிர்ந்தன. நான் பெரிதும் மதித்துப்பாராட்டும் உலகளாவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) சில நேர்காணல்களை பதிவு செய்தது. அதில் மிக முக்கியமானது முதுமையில் வாடிய எழுத்தாளர் திருமதி.ராஜம் கிருஷ்ணனை பேட்டி கண்டது. கருத்தா: திரு. தமிழ்த்தேனி. அவர் எனக்கு ஜன்ம தின வாழ்த்து அளித்த விதம் மிக நேர்த்தி. அவரின் ஐயமும், வினாவும், விடையும:

'பாமர கீர்த்தி' என்று நான் அடியெடுத்துக்கொடுக்க, பலர் பல்லவி பாடினார்கள். தொடர்ந்து கொண்டே போகும் இந்த இழையில் அவர் கூறிய கருத்து இங்கே:

"அமரர் கேசவனில் தொடங்கினோம்.
டாக்டர் மாருதி ராவ் அவர்களை வாழ்த்தினோம். ஜெர்மனியிலிருந்து வந்த நூரானி அத்தையின்

கீர்த்தி இசைத்தோம். தமிழனின் வள்ளன்மையை போற்றினோம். எங்கிருந்தோ கொடியாலம் ஜமீன்தார் ரங்கஸ்வாமி ஐயங்காரை, அவரது அரவிந்த/மஹாகவி பாரதி/மஹாத்மா காந்தி சேவையை/ தேசாபிமானத்தை, இங்கு கொணர்ந்து பாராட்டினோம். திருவேங்கிடமணி புலவர் பெருமான் முத்துக்கண்ணப்பரின் வரலாற்றை படைக்கிறார், இன்னொரு இழையில். ஏற்கனவே, த.ம.அ. ஜுனைதா பீகம் கஹானியை அளித்திருக்கிறது. ருக்மணியின் கதா சாகரமும், கமலம்மாவின் சாஹித்யங்களையும் கொஞ்சம் கேட்டாச்சு."


 மேற்கூறிய  அனைவரும் பாமரர்களா? ஒரு சந்தேகம்   பாமரன் எனறால்  யார்? என்று கேட்ட அவருக்கு அடுத்த சந்தேகம் அடைப்புக்குறிக்குள்: (அதிகப் ப்ரசங்கத்துக்கு  மன்னிக்கவும்)
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
பதில். ஆமாம்.
Image Credit:http://farm5.staticflickr.com/4016/4569889903_765c80dde5_z.jpg

இன்னம்பூரான்
16 05 2013

Wednesday, May 15, 2013

இன்னம்பூரான் பக்கம் ~ 17


இன்னம்பூரான் பக்கம் ~ 17

“ என் சொல்லை கேட்பீரானால், சாக்ரட்டீஸை புறம் தள்ளி, உண்மையை நாடுவீர்கள்.”
Socrates-new

- சாக்ரடீஸ்
‘…இந்த நிழலுலகம் அவர்களுக்கு நிதரிசன உலகு. மற்றதெல்லாம் மாயை…நிழலை மறந்து அசலை அனுபவிக்கிறான்…அடித்துப்பிடித்துக்கொண்டு சகபாடிகளை உய்விக்க ஓடோடி வருகிறான்…அவர்களோ இவனுடைய தீர்க்க தரிசனத்தை எள்ளி நகைத்து, அவனை நாடுகடத்தவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வருகிறார்கள்…’.
பக்கம் 16ன் ஈற்றடியின் ஒரு பகுதி மேலே: அன்றாட மனித வாழ்க்கையின் அனுபவங்களும், அவற்றின் பயனாகவோ/முரணாகவோ நடைந்தேறும் பழக்கவழக்கங்கள், பண்பு, பாரம்பரியம் போன்றவற்றின் தாக்கம், கலாச்சார மரபு, ‘சான்றோர்’ வாக்கு, எழுதப்படாத விதிமுறைகள், சமய கட்டுப்பாடுகள், சம்பிரதாயம் போன்றவை தான் மூளைச்சலவையின் பிரதான பிரயோகங்கள், ஆயுதங்கள், கருவிகள் என்றால், அது மிகையல்ல. அதை புரியவைக்கத்தான் ப்ளேட்டோ இந்த ‘குகை’ உருவகத்தை முன் வைத்தார். அவருடைய ஆசான் சாக்கிரட்டீஸ் ‘தார்மீகம்’ என்ற சொல்லுக்கு பொருள் நாடினார். உலகின் முதன்மை ஸ்தானம், ‘நாம் வாழவேண்டிய வாழ்நெறிக்கு மட்டும் தான்’ என்றுரைத்தார்.
தற்கால கேலி சித்திரங்களைப் போல, தொல்காப்பியரின் எட்டு மெய்ப்பாடுகளில் ஒன்றான நகைச்சுவைக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் உண்மையை விளம்பும் ஆற்றலுண்டு.  அக்காலத்தில் பிரபல நாடகாசிரியராக இருந்த அரிஸ்டோஃபேன்ஸ் ( உத்தேசமாக கி.மு.448 – கி.மு.380 ) ‘மேகங்கள்’ என்ற நாடகத்தில் சாக்கிரட்டீஸ் தார்மீகம் நாடுவதை கேலி செய்வதற்கு கையாண்ட உத்தி: சாக்கிரட்டீஸ் ஒரு கூடையில் தொங்க விடப்படுகிறார். ஸ்ட் ரெப்ஸேட்ஸ் என்ற நபர் அவர் மீது ஒரு கேள்விக்கணை தொடுக்கிறார். ஏற்கனவே பிரபலமாகி விட்ட வினாமன்னர் சாக்கிரட்டீசின் கொள்கைகளை (?) மேலும் பரப்ப, அந்த நாடகம் ஏதுவாயிற்று.
சாக்ரெட்டீஸ்ஸின் கொள்கைகளை சுருக்கியளிப்பது எளிதல்ல; பொருத்தமும் இல்லை. இந்த கட்டுரைத்தொடரே அறிமுகத்தொடர் என்பதால், என்னால் இயன்றவரை அவற்றின் சாராம்சத்தை மூன்று தொடர்களில் அளிக்கிறேன். அவற்றில் யாராவது குறை காண விரும்பினால், அது நல்வரவே.
சாக்ரட்டீஸ் (கி.மு. 470~399) கிரேக்க நாட்டின் பிரதான நகரமாகிய ஏதென்ஸ்ஸின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். தனக்கு முந்திய தத்துவபோதனைகளை படித்து அவற்றில் இரு குறைகளை கண்டார். பல தத்துவங்களின் கலந்துகட்டியாக இருந்தன, அவை; ரசவாதமொன்றும் இல்லை, அவற்றில். ஒன்றுக்கொன்று முரணாக  அமைந்ததால், குழப்பம் தான் மிஞ்சியது என்றார். (தற்காலத்திலும் தத்துவபோதனைகளை திரட்டிப்படித்தால், தலை சுற்றுகிறது என்பீர்கள்!) மேலும், ‘பூவுலகை பற்றி அதியற்புதமான கருத்துக்கள் கூறியவர்கள், அவற்றை அலசி ஆராயவில்லையே என்று ஆதங்கப்பட்டார். அதன் விளைவு: உண்மை தென்படவில்லை. புவியிலிருந்து ஆதவன் இருக்கும் தொலைவு, அதன் பரிமாணம் போன்ற அதியற்புதமான கருத்துக்கள் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்று வினவினார். பைத்தியத்தை சுற்றி நாலு பேர் என்றால், தத்துவ பைத்தியத்தை சுற்றி நாற்பது பேர் என்று தான் அவர் உலவி வந்தார். எங்கு சென்றாலும், ஒரு இளைஞர் பட்டாளம் சூழ, வலம் வருவார். அவருடைய அணுகுமுறைக்கு அப்படி ஒரு கவர்ச்சி. ஏதாவது ஒரு அடிப்படை கருத்துக்கு விளக்கம் கேட்டே யாவரையும் அசத்தினார்:
‘நட்பு என்றால் என்ன?’/‘தைரியம் என்றால் என்ன?’/ ‘சமயபற்று என்றால் என்ன?’/ ‘நல்லது என்றால் என்ன?’/‘சரியானது என்றால் என்ன?’/‘நியாயம் என்றால் என்ன?’ இத்யாதி. தற்கால மேல்படிப்பு ஒரு வரி விடைகள் சொல்லி தப்பிக்க முடியாது. இன்னலை தாங்கும் சக்தி தான் தைரியம் என்று பதிலளித்தால், பிடிவாதக்காரனும் அப்படித்தானே செயல்படுகிறான். அது தைரியமா? என்பார். சபையோர், ‘பழைய குருடி! கதவை திறடி!’ என்று சிந்தனையில் ஆழ்ந்து விடுவார்கள். அவருடைய இலக்கு அது தானே. ‘சிந்தனை செய் மனமே’ என்று தான் அவர் உரைத்தார்.
மாதிரிக்கு ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக்கொண்டு, நீங்கள் அலுத்துப்போகும் முன் இன்றைய கட்டுரையை முடித்து விடுகிறேன். ‘நியாயம் என்றால் என்ன?’ சாக்ரட்டீஸ், பள்ளி மாணவன் போல், சொல்லொன்றுக்கொருபொருள் என்று நாடவில்லை. சிலேடைப்பேச்சில் இறங்கவில்லை. அவர் தொணத்தி, தொணத்தி எடுத்த குறிப்புகள்: நியாயம் என்ற சொல்லை நாம் பல நிலைப்பாடுகளில், பல மக்களின் எண்ணவோட்டங்களில், பல தீர்மானங்களின் உட்பொருளை அறிவதில், சட்டதிட்டங்களின் பின்னணி நோக்குவதில், பற்பல நடவடிக்கைகளை ஆராயும் போது (தற்கால உதாரணங்கள்: விதவா விவாகம், திருநங்கை விவகாரம், தீண்டாமை விவாதம், சமய/மொழி விகாரம், அரசியல் விதண்டாவாதங்கள் இத்யாதி) பயன் படுத்துகிறோம்.  அவை யாவற்றையும் பற்றி சிந்தித்தால், நியாயத்தின் பொது இயல்பு பற்றி சில தெளிவுகள் கிடைக்கலாம் என்றார். அத்தகைய தெளிவுகளை வரவழைக்கப்பார்த்தாரே தவிர, தன் கருத்தை ஏற்க சொல்லவில்லை.
(தொடரும்)

 
பிரசுரத்திற்கு நன்றி: http://www.atheetham.com/?p=4851

சித்திரத்துக்கு நன்றி: http://1.bp.blogspot.com/-Qm85i9mL5TU/UJeuTbLdaSI/AAAAAAAAADc/1i2P06boMQs/s1600/Socrates-new.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பாமர கீர்த்தி - 5



பாமர கீர்த்தி - 5

Innamburan S.Soundararajan Wed, May 15, 2013 at 5:10 PM

பாமர கீர்த்தி - 5

காந்தி மஹானின் சத்யாக்ரஹத்தை பற்றி அனவரதமும் தியானிக்கலாம். அது ஒரு தர்மயுத்தம். சென்னையில் அந்த வேள்வி நடந்ததை பற்றியும், அதை மேற்பார்வையிட்ட குழுவை பற்றியும் எழுதும் போது, அந்தக் குழுவின் உறுப்பினர்களாகிய ராஜாஜியையும், திரு.வி.க. அவர்களை பற்றியும்  அறிந்திருந்தேன். மூன்றாவது உறுப்பினராகிய கே.வி.ரங்கஸ்வாமி ஐயங்காரை பற்றி, எத்தனை தேடியும் விவரங்கள் கிடைக்கவில்லை. எங்கள் மின் தமிழ் குழுவில் கூட்டுறவு அதிகம், அப்போதைக்கு, இப்போது சிலர் மல்லுக்கு நின்றாலும். மேலும் விவரங்கள் அளித்த பேராசிரியர் வடிவேல் நாகராஜன் அவர்கள், 'ஏட்டில் எழுதிய வரலாற்றைவிட மக்கள் வாய்மொழி வரலாறு எந்த சிறு குழு குடும்பத்தில் மானுடவியல் சமூகவியல் அடிப்படையில் அனுகி ஆய்ந்தால் குறைந்தது 100 ஆண்டுகளுக்கான தகவல் திரட்டமுடியும்.' என்று உரைத்து முற்றிலும் உண்மை. அவருக்கு நன்றி கூறி, அவர் அளித்த மேலதிக விவரங்களை கீழே பதிவு செய்கிறேன்.

இந்த வலையை பார்வையிடுபவர்கள் தினந்தோறும் கூடி வருகிறது. அதுவும் உலகளாவிய வகையில். அவர்களில் பலர் 'பாமரகீர்த்தி' தகவல்களை தர விரும்பலாம். அவர்களை ஜீ+லிலோ, என் வலையில் பின்னூட்டமாகவோ, தனி மடலிலோ அனுப்பச்சொல்லி வேண்டுகிறேன். அவர்கள் விருப்பத்துக்கு உகந்தபடி பாமரகீர்த்தி சேகரம் நடக்கும். சான்றாக, நேற்று ஜனாப் அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்களை பற்றி, 'பற்று வரவு' என்ற தலைப்பில் எழுதினேன். அவருடன் ஊழியம் செய்த ஒருவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எனக்கு வேறு என்ன கைம்மாறு வேண்டும்?

இன்னம்பூரான்

____________________________________________________________________________________


’இ’ ஐயா கொடியாலம் ரங்கஸ்வாமி ஐயங்காரைப் பற்றி தகவல் கேட்டிருந்தார்.  ஏட்டில் எழுதிய வரலாற்றைவிட மக்கள் வாய்மொழி வரலாறு எந்த சிறு குழு குடும்பத்தில் மானுடவியல் சமூகவியல் அடிப்படையில் அனுகி ஆய்ந்தால் குறைந்தது 100 ஆண்டுகளுக்கான தகவல் திரட்டமுடியும்.
சிலநேரம் எழுத்தில் கோணலாகிப்போன வரலாறைச் சரி செய்ய முடியும்
bharathi1.jpg
பாரதிக்கும் அரவிந்தருக்கும் பொருளுதவி செய்தவர்.  
தமிழக வரலாற்றைத் திருப்பிப் போட்ட பெருமை இவரைச் சாரும்

In the 1916 elections to the Imperial Legislative Council, the non-Brahmin candidates T. M. Nair (from southern districts constituency) and P. Ramarayaningar (from landlords constituency) were defeated by the Brahmin candidates V. S. Srinivasa Sastri and K. V. Rangaswamy Iyengar. The same year Thyagaraya Chetty and Kurma Venkata Reddy Naidu lost to Brahmin candidates with Home Rule League support in local council elections
தோல்வியில் துவண்டுபோன இவர்கள் ஒன்று கூடி 

On 20 November 1916, about thirty prominent non-Brahmin leaders met in Victoria Public Hall under Chetty and T. M. Nair. They established the South Indian People's Association (SIPA) to publish English, Tamil and Telugu newspapers to publicise grievances of non-Brahmins.
எலியும் பூனையுமாக இருந்த செட்டியும் நாயரும் இணைகிறார்கள்

Chetty became the secretary. Chetty and Nair had been political rivals in the Madras Corporation council,
but Natesa Mudaliar was able to reconcile their differences. The meeting also formed the "South Indian Liberal Federation" (SILF) as a political association. Later, the association came to be popularly called the "Justice Party", after the English daily Justice published by it. In December 1916, the association published "The Non Brahmin Manifesto", affirmed its loyalty and faith in the British Raj, but decried Brahminic bureaucratic dominance and urged for non-Brahmins to "press their claims as against the virtual domination of the Brahmin Caste".[5] 

The manifesto was harshly criticized by the nationalist newspaper The Hindu (on 20 December 1916):
ஃபெடரல் என்ற வார்த்தைக்குக் கடைசிவரை விளக்கம் கொடுக்காமலேயே அரசியல் நடத்தினார்கள்.  அவர்களுடைய அஜன்டாவில் பிராமண எதிர்ப்பு இல்லை மாறாக ஆங்கிலேயரிடம் எங்களுக்குப் பங்கு வேண்டும் எங்கள் பங்கில் ஒரு பகுதி அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்ற அளவில் அவர்கள் அரசியல் இருந்தது
நாகராசன்
____________________________________________________________

Tuesday, May 14, 2013

பற்று வரவு


பற்று வரவு

Innamburan S.Soundararajan Tue, May 14, 2013 at 10:20 PM


பற்று வரவு
Inline image 1

‘சமயம் பொருட்டு சண்டை வருவதில்லை; சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது தான் காரணம்.’
~ அஸ்கர் அலி இஞ்சினீயர்


காலை உவகையுடன் எழுந்த நான் மாலையில் வதங்கித்தான் போனேன். ‘இன்னம்பூர் சிங்கம்’  எனப்பட்ட என் தாத்தாவின் மூத்த நண்பரொவர் சொல்வார், ‘எண்பது வயதாகி விட்டது. மனதில் பட்டதை சொல்வதில் தயக்கம் இல்லை’.  அது இப்போது தான் எனக்குப் புரிகிறது; வயது எண்பது ஆகிவிட்டதல்லவா.

காலையிலிருந்து இங்கிதமான நல்வாழ்த்துக்களும், பரிசுகளும் வந்த வண்ணம். அது வரவு. இன்னும் பதில் போடவில்லை. அதற்குள் என் மனதை கலங்கடித்த செய்தி ஒன்று. இது பற்று (இன்றைய தமிழில்,செலவு). நோய்வாய்ப்பட்டு கிடந்த ஜனாப் அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்கள் (74) காலமானார். நான் பல வருடங்களாகவே அவருடைய விசிறி. அவர் துணிவின் பிரிதிநிதி. சீர்திருத்தவாதிகளில் முதல்வர் எனலாம். வாய்மை அவரது மூச்சு. ஒரு இஸ்லாமிய மத போதகரின் மைந்தரான அஸ்கர் அலி இஞ்சினீயர் அந்த சமய போதனைகளை அக்கறையுடன் படித்து தெளிவு கண்ட சான்றோன். இஸ்லாமின் பழமையை போற்றும் சவுதி அரேபியாவே அவரை அழைத்து சிறப்பித்தது. பெண்ணுரிமையை இஸ்லாம் மறுக்கவில்லை என்று கூறிய அஸ்கர் அலி இஞ்சினீயர் இஸ்லாமிய மதத்தின் ஒரு கிளையான போஹ்ரா சமூகத்தின் மதத்தலைவர் வரி விதிப்பதை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரண் என்று எதிர்த்தார். அடிக்கடி அடித்து வதைக்கப்பட்டார். இரு தடவை உயிருக்கே ஆபத்து. மதபகிஷ்காரம் செய்யப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் மறைந்த போது அவர்களுக்கு நல்லடக்கம் மறுக்கப்பட்டது. மதத்தின் அருமையான கோட்பாடுகள், இந்த வன்மையை ஆதரிக்கவில்லை என்றாலும் சமயவெறி கொண்டவர்கள் (எந்த மதமானாலும், அதே.)  அத்து மீறி நடப்பார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. போஹ்ரா ஒரு சிறிய சமூகம். பெரும்பாலும் செல்வந்தர்கள். அவர்களின் செல்வத்தின் மீது,  மதத்தலைவர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உதாசீனம் செய்து, வரி விதித்து ஆதிக்கம் செலுத்தியது போல், நாம் எல்லா சமயங்களிலும் கண்கூடாக பார்க்கிறோம். இலங்கையில் பெளத்தம் அஹிம்சா மூர்த்தி சாக்யமுனியின் போதனைகளுக்கு முரணாகத்தான் நடந்து கொண்டது. தற்காலத்தில் மதுரை ஆதீனம், நித்யானந்தா போக்குவரத்துக்களுக்கும் ஹிந்து மத போதனைகளுக்கும் லவலேசமும் சம்பந்தம் கிடையாது. சில கிருத்துவ மத அதிபதிகளின் இகழ்ச்சிக்குரிய நடவடிக்கைகள் அம்பலத்துக்கு வந்த வண்ணம்.

அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்களுடன் நெருங்கி பழகிய ஜ்யோதி புன்வானி கூறுவது:
‘அஸ்கர் அலி இஞ்சினீயர் தாராளமனப்பன்மையுடன் இயங்கிய இஸ்லாமிய வல்லுனர். புரட்சியாளர், மார்க்கபந்து, சடங்குகளை புறக்கணித்த ஆத்திகர், மதபேதத்தை ஒழிக்க பாடுபட்டவர், பெண்ணுரிமைக்கு கொடி பிடித்தவர் என்கிறார். ஓரிடத்தில் இந்திரா காந்தியும், வாஜ்பாய் அவர்களும், இவரை தாக்கிய மதவெறிக்குத் துணை போனார்கள் என்கிறார். அயலார் வாக்கு சேகரிக்க, சொந்த வாக்கை தவறவிடுவார்கள் போல!
அஸ்கர் அலி இஞ்சினீயர், மார்க்சிஸம், இஸ்லாமிய பண்பாடு, மனித நேயம், பெண்ணியம், வாய்மை ஆகியவற்றின் ரசவாதம்.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் தாமதம் கூடாது என்று, இந்த இழை.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
14 05 2013
Image Credit:http://dawoodi-bohras.com/images/engineer.jpg

பி.கு. அஸ்கர் அலி இஞ்சினீயர் அவர்களுக்கு உடனுக்குடனே அஞ்சலி செலுத்திய விக்கிப்பீடியாவை பாராட்டத்தான் வேண்டும்.