Tuesday, April 28, 2015

Günter Grass: நாளொரு பக்கம்




நாளொரு பக்கம்
இன்னம்பூரான்
Wednesday the 25th February 2015

“Translation is that which transforms everything so that nothing changes.”
-Günter Grass

Günter Grass is a globally-renowned creative writer, who won the Nobel Prize for his ‘The Tin Drum’. The citation praised his “frolicsome black fables (that)portray the forgotten face of history”. He hails from the literary movement: ‘coming to terms with the past (vergangenheitsbewältigung). He is a well- translated author and the quote is significant as his original texts invariably posed a challenge to the translators.
Excellent translations, like the ones that we find in the Katha volumes in our library are actually transcreations that do not stick to a word-by-word translation, but manage to transform and convey the author’s creation in such a chaste form that it looks as though the author himself wrote in a language with which he is unfamiliar.
... 

FN: We lost Günter Grass after I wrote this. In Homage, I place his picture on top.

Image Credit: http://static01.nyt.com/images/2010/11/14/books/review/Mohr-t_CA0/Mohr-t_CA0-popup.jpg

Saturday, March 21, 2015

சிரிச்சு மாளலெ ~ 15: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (10)

சிரிச்சு மாளலெ ~ 15: 
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (10)

இன்னம்பூரான்
21 03 2015

பல்லாண்டுகளுக்கு முன்பு டில்லி வாழ் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.500/- கூடாரம் வைத்துக்கொள்ள என்றோ அருளப்பட்ட ஆணை, கூடாரமில்லாத காலகட்டத்திலும் தொடர்ந்தது. அந்த ஆணையை அரசு ரத்து செய்ய விரும்பவில்லை. அதே மாதிரி இரண்டாவது உலகப்போர் பொருட்டு பின்னி நெசவாலையில், அதற்கென்ன தனியாக கொடுக்கப்பட்ட பஞ்சப்படியை நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் ரத்து செய்யக்கூடாது தொழிற்சங்கங்கள் போரிட்டன. விளைவு: மூடு விழா. பேட்டரி போட்ட பச்சை/சிவப்பு விளக்குக் கொடுக்கப்பட்ட பின்னரும் ரயில்வே கார்டுகள் விளக்குக்கு எண்ணெய் கேட்டார்கள். இப்படியாக இந்தியா பீடுநடை போட்டு வரும் போது கிடைத்த இந்த செய்தி என்னை உலுக்கி விட்டது. ஏனெனில், காசு போச்சு, மானம் போச்சு, காலம் போச்சு. எல்லாம் போச்சு!

தஞ்சை, கும்பகோணம், மதுரை செளராஷ்டிர சமுதாயம் நெசவுக்கு பேர்போனவர்கள்.அப்போது அவர்களுக்கு சிட்டம் நூல் வேண்டும். அதற்கு ஆங்கிலத்தில் ஹான்க் யார்ன் என்று பெயர். அதை தயாரிக்க வேலை மெனெக்கெடவேண்டும் செலவு ஜாஸ்தி. நன்றாக பேக் செய்யவேண்டும். கருணை கொண்ட கலோனிய அரசு அக்காலத்தில் மில்களை இவற்றை கணிசமாக தயாரிக்கவேண்டும், நஷ்டப்பட்டாலும் என்று கோட்டா போட்டு ஆணையிட்டது. இப்போது நெசவாளிகள் ஆட்டோமெட்டிக் பவர் லூம் நாடுகிறார்கள், பல்லாண்டுகளாக ஹான்க் யார்னை ஒதுக்கிவிட்டு. ஆனால் நஷ்டத்தில் அவை உற்பத்தி செய்ய்ப்படுகின்றன. கேட்பார் இல்லை. நஷ்டம் கண்டு வருந்துகிறேன். ஆனால், மூளையை இயக்காமல் பத்தாம்பசலி செலவு செய்வதை கண்டால், சிரிப்பு வருது! சிரிப்பு வருது! சந்திரபாபு பாடினால் போல்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://d2q9kw5vp0we94.cloudfront.net/regular/5420193.jpg



Saturday, March 14, 2015

சிரிச்சு மாளலெ ~ 14: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (9)

சிரிச்சு மாளலெ ~ 14: 
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (9)




இன்னம்பூரான்
14 03 2015

மாட்டிக்கிட்டார் தும்மட்டிக்காய் பட்டர் என்றதொரு சொலவடை உண்டு. நமது தமிழ்நாட்டின் தும்மட்டிக்காய் பட்டர்கள் இருவர் உலகசாதனை படைத்து அழியாபுகழ்
பெற்ற கதை இது.
முதலாழ்வார்கள் மூவரும் திருமால் புகழ்பாடும் கட்டத்தில் அவனே வந்து நெருக்குவதை புரிந்துகொள்ளாமல் தவித்த பின், ‘திருக்கண்டேன்! பொன்மேனிக்கண்டேன்...’ என்று ஆசுவாசப்படித்துக்கொண்ட திருக்கோவிலூரில் போன வியாழனன்று (12 03 2015) ஒரு அதிசயம் நடந்தது. கலிகாலத்தில் கூட ‘தெய்வம் மனுஷரூபேண’ என்றபடி ஒரு சத்திய பிரமாணம் நடந்தேறியது.
கதை கேளு: 
திருக்கோவிலூர் தெருக்களிலே மக்கள் நடமாடமுடியாதபடி லஞ்சநடமாட்டம் பீடு நடை போட்டு வந்தது. பக்கத்து செட்டித்தங்கல் கிராமத்து பெட்ரோல் கடையில் ஊத்திக்கொண்டு, காசு கொடுக்க மறுத்தார்கள். திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று மார் தட்டிக்கொண்டு, பொய்கேஸ் போடுவேன் என்று பயமுறுத்தி 150 ரூபாய் வேறு பிடுங்கிக்கொண்டார்கள். ( போலீஸ் கியாதி அப்படி. கொடுத்தாங்களே மாமூல். அது வேறு கதை.) 
ஒரு அளவாளாவுதல்: 
எபெனெசர் & மணிகண்டன்: ‘டேய்! காரை நிறுத்துடா. ஆர்.சி. எடு. சட்னு எடுறா பேமானி! போலீசுக்கு வேறு வேலை இல்லை!
வண்டியோட்டி: அய்யாமார் ஆருன்னு தெரிலெங்களே. 
எபெனெசர் & மணிகண்டன்: இன்னா தகரியம் இருந்தா இப்டி கேட்பே, கேப்மாரி. எடுடா.
பயணி மோகன்: நீங்க ஆரு? ஐடி காட்டுங்க.
எபெனெசர் : டேய். நான் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர். இந்த அய்யா ஆஃபீஸரு. எங்க கிட்ட வாலா ஆட்றே. ஒட்ட நறுக்கிடுவேன், மவனே. ஆமாம். சொல்லிப்போட்டேன்.
மோகன்: நான் தான் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர். உங்களை கைது செய்கிறேன். கைபேசி அலறியது. களவாளிகள் ஜெயிலில். 
எதுக்கு சொல்ல வரேன்ன்னா! எதுக்குங்க. வேணாமுங்க.
மயக்கநிலையில் டிராஃப்பிக் ராமசாமியை கைது செய்துட்டாங்க. அவர் பிழைப்பதே துர்லபமாச்சு. கோர்ட்லே கீச்சு கீச்சுன்னு கத்தினாலும், படுபாவி 
தண்டல்காரன் தன் டகமையை செய்வான்லெ.திருக்கோவிலூர்லெ மட்டும் அல்ல. திருவண்ணாமலையிலும் நகைக்கடையில் கலாட்டா செய்தவர் போலீஸுஷ்! ஆஃபீசர்! நம்ம மதுரை சயராசூ பங்களுர்லெ நடுத்தெருவிலெ பொம்பளைப்பிள்ளையை அடிச்சு உதைச்சான் இல்லை. பங்களுர் போலீசுக்கு நல்ல மனசு. இது சின்ன குடும்ப பிரச்னை அப்டின்னு சயராசுக்கு வக்காலத்து வாங்கிக்கிணு... ஆண்டவா!
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://origin1.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/kaithi-2802.jpg

Sunday, February 22, 2015



மருந்து வாங்கலையோ! [1]
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் {II 8}


அவ்வப்பொழுது நான் மருந்து, மாயம், மருத்துவர், மாயாஜாலங்கள் வகையறா பற்றி எழுதி வாங்கிக்கொட்டிக்கொள்வது ஊரறிந்த ரகசியம்.
அதனால் இந்த புது இழை துவக்கும் துணிவு கொண்டேன். இணைப்பில் இருக்கும் ஆங்கிலகட்டுரையை படிப்பவர்கள டாக்டர் சீட்டை உன்னிப்பாகப் படிக்கக் கற்றுக்கொள்வார்களாக.

It is bilingual to the extent feasible for reaching a wider circle of fellow-sufferers. I enter a caveat. Do read the attachment and remember to read the doctor's illegible prescription with a magnifying glass before buying the medicines.

May the Lord Danvanthiri and Lord Vaitheeswaran be with you!

இன்னம்பூரான்



Attachment(s) from Innamburan S.Soundararajan | View attachments on the web 
1 of 1 File(s) 


Saturday, February 14, 2015

அச்சச்சோ! சோச்சோ! ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 7




அச்சச்சோ! சோச்சோ!
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 7
இன்னம்பூரான்
14 02 2015

‘நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்’ என்ற வகையில் அந்தக்காலத்து குறுநிலமன்னர்கள் கழுவேற்றுவார்கள் என்றும், தான்தோன்றித்தனமாக ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற வகையில் அரசியல் தலைவர்கள் குளறுபடி செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் ஓவர் இல்லை !? என்னைக்கேட்டால், கஷ்குமுஷ்கு யஷ்ஷை விட படுமோசம் என்று தோன்றுகிறது. விமானம் ஏறத்தொடங்கிய உடனேயே, அங்கு ஊழியம் செய்யும் அழகிகள் பலமான உபசாரம் செய்வார்கள். முந்திரி தந்திரம், பான அபிஷேகம், நசுங்கிய சோறு, பொங்கிய சப்பாத்தி, காரமான மிட்டாய் வகைகள் என்றெல்லாம் பூமியில் கிடைக்காத மாற்றுருவ சாப்பாட்டு வைபோகம் நடக்கும். அதற்காக விமானபோக்குவரத்தையே, நம்ம ‘அச்சச்சோ சோச்சா’ மாமி மாதிரி ஸ்தம்பிக்க செய்யலாமோ?  ‘அச்சச்சோ சோச்சா’ மாமியிடைய தகப்பன்சாமி தான் விமான கம்பெனி சொந்தக்காரர். ‘போத்திப் போத்தி’ செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்கள் போல. அவள் பெயர் ஹீதர் சோ. நியூயார்க்லெ விமானம் ‘டொய்னு’ மேலெ ஏறின உடனே மக்கடம் என்ற வகை கடலையை பையோடு கையாக ஒரு ஊழியர் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு ஏழரைநாட்டு சனி போல. பொங்கியெழுந்த ஹீதர் சோ அவரை திட்டி விட்டு, விமானத்தைத் திருப்பச்சொல்லி தடாலடி நாட்டாமை செய்தாள். அந்த கம்பெனிலெ அவள் உயரதிகாரி வேறே. பயணிகள் எல்லாருக்கும் சினமெழுந்தது. என்ன செய்தார்கள் தெரியுமா? இந்திய வாசனை அடிச்சது போல். முணுமுணுத்தார்கள்! முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோர்ட்டுக்கு போய்விட்டது விவகாரம். அழுதுகொண்டே, ஒரு மன்னிப்பு கடுதாசை பேருக்குக் கொடுத்தாளே தவிர பச்சாதாபமே காட்டவில்லை என்று ‘ஓ’ என்ற நீதிபதி கூற அப்பனும் அவளை கண்டித்து வைத்தாராம். அரசு தரப்பில் சட்டத்தை மீறியதற்காகவும், அடிதடியில் இறங்கி ஒரு ஊழியரை மொத்தினதற்கும், விசாரணையில் தலையிட்டதற்கும் சேர்த்து மூன்று வருட சிறை தண்டனை கொடுக்க பரிந்துரை செய்தார்களாம். ஒரு கற்பனை: இந்தியாவில் 2013ம் வருடம் பர்ட் டவரார்ரா மாதிரியான ஒரு பெரும் புள்ளிராசா விமானத்தில் இப்படி பாடாய்படுத்தினால், அவரு தான் கெலிப்பார்.

இதையெல்லாம் இங்கு எழுதும் காரணம் யாது எனில்: தெற்கு கொரியாவில் வம்சாவளி செல்வக்கொழுந்துகள் இப்படி தான் தாறுமாறாக நடந்து கொள்வார்களாம். இந்த வழக்கு நல்ல படிபினையாம். 
இந்தியாவிலும் இந்த மாதிரி தடாலடி கலாட்டா வீஐபீகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தான் காரணம்.
-#-




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, February 12, 2015

சிரிச்சு மாளலெ ~ 13: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

சிரிச்சு மாளலெ ~ 13:
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)
இன்னம்பூரான்
12 02 2015

உஷ்! உஷ்! யஷ் பற்றிய கொஷ்யன்ஸும் வழவழா கொழகொழா ஆன்ஷர்ஷும்! ஒரு கோர்ட் சாட்சியமும், அதை சார்ந்த உரையாடல் பற்றி எழுத நினைத்தால், இன்று ஒரு புத்தகம் வந்து எம்மை அலக்கழிக்கிறது. பிரபல பென்குவின் பிரசுராலயம். ஷோபா டே என்ற பிரபல மாமியின் பிரிவு. தலைமாந்தர் யஷ் பிர்லா என்ற செல்வந்தர். சின்ன வயது; பெரிய வம்சாவளி; அண்ணல் காந்திக்கு போஜனம் அளித்த கஜானன் பிர்லா தான் மூதாதையர். புத்தகத்தில் அவருடைய திவாலாகும் நிலையில் உள்ள வணிகங்களை பற்றி அதிகம் சொல்லாமல், யஷ்ஷின் சார்லஸ் அட்லாஸ் தேகவாகு (நம்ம ராபர்ட் வடேரா மாதிரி!), கலையார்வமான பச்சைக்குத்தல், ஃபேஷன் மேலும் மேற்குடி வாழ்க்கை தான் எடுபடுகிறது என்கிறார், புத்தக விமர்சகர். இது நிற்க. கனம் கோர்ட்டார் கூப்பிடுகிறார்.

ஒரே ஒரு கிராமம். அங்கு ஒரு யஷ் பிர்லா கம்பெனி. சாட்சி & சாட்சி என்ற விளம்பரகம்பெனி தங்களுக்கு வரவேண்டிய தொகை வரவில்லை என்று சாட்சியத்துடன் ஆகஸ்ட் 2014ல் வழக்குத் தொடர, கோர்ட்டாரும் கதவை இழுத்து மூட ஆணையிட்டனர்.
போதாக்குறையாக, கம்பெனி கிட்டங்கியிலிருந்து துர்நாற்றம் என்று கிராம பஞ்சாயத்து புகார் கொடுத்தும், கேட்பாரில்லை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோயில் ஆண்டி இல்லையா? யஷ் பிர்லா அவர்களே கோர்ட்டில் வந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்று ஃபெப்ரவரி 5 அன்று ஆணை. இது சம்பந்தமான இரண்டு நாட்கள் முன்னால் நடந்த கோர்ட் உரையாடல்:

நீதியரசர் கதாவாலா: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் அமர்த்தியது யார்?

யஷ் பிர்லா: நான் இல்லை.

நீதி: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் இருப்பது, உமக்கு தெரியுமா?

ய: தெரியும்,இப்போது தான்.

நீ: அவர்களை அமர்த்தியது யார்?
ய: என்னுடைய ஊழியர்கள்.
(ஃபெப்ரவரி 5 அன்று இந்த சமையற்காரனும், எடுபிடியும் கிஞ்சித்துக்கூட ஆங்கிலம் தெரியாதவர்கள், ஐந்தாம் வகுப்பும் ஆறாம் வகுப்பும் வரை படித்த அவர்களுக்கு ஹிந்தி கூட தொந்தரவு தான் என்றும், அவர்கள் இருவரும் மூன்றாம் நபரும் ஒரு போர்ட் மீட்டிங்க் கூட வராதவர்கள் என்று அறிந்த நீதிபதி திடுக்கிட்டுப்போய் தான் முதலாளியை வரச்சொன்னார்.)
நீ: இந்த மாதிரியான கடை நிலை வேலைக்காரர்களை டைரக்டர்களாக யார் நியமித்து இருப்பார்கள்?
ய: என் ஊழியர்களுக்கும் இந்த கடை நிலை வேலைக்காரர்களுக்கும் பரிச்சயம் உண்டு. அவர்கள் இவர்களை நியமித்திருக்கலாம்.
நீ: உண்மை பேச கற்றுக்கொள். கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது. உன்னுடைய வக்கீலே உன்னை நம்பியிருக்கமாட்டார். உங்கள் ஆட்கள் உண்மையை கக்கிவிட்டனர்.

நவ்ரோஜ் சீர்வை (யஷ்ஷின் வக்கீல்) உங்கள் 5ம்தேதி ஆணையை எதிர்த்து விண்ணப்பிப்பதாக இருந்தோம்.
நீ: (குழப்பத்துடன்) என்னது இது? கோர்ட்டுக்கு வா என்றால் அப்பீலா!!!???
ஆமாம். கம்பெனியில் உங்கள் முதலீடு எத்தனை?
ய: 0.01%, தொடக்கத்திலிருந்து அதே.
நீ: ஓ! கம்பெனியை ஆரம்பிச்சு அடியாட்களை டைரக்டர்களாக்கி, நீ கழண்டு விட்டு..
என்ன சொல்ல விரும்புகிறாய்?
ய: கோர்ட்டார் சொன்னபடி செய்யறேன்.
நீ: நான்கு வாரங்களுக்குள் உண்மை விவரங்கள் கூறி, துர்நாற்றத்தை ஒழி.



pastedGraphic.pdf 

உசாத்துணை

பின்குறிப்பு: எனக்கு இவர் யார் என்று லவலேசமும் தெரியாது. யாதொரு விதமான காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கோர்ட்டில் நடந்ததை உள்ளது உள்ளபடி சொன்னேன். கொஞ்சம் தேடிப்பார்த்தாலே தலை சுற்றுகிறது. அத்தனை குற்றச்சாட்டுக்கள். ஆக மொத்தம் மக்கள் ஏமாற்றப்படுவது தெரிகிறது. சம்பந்தம் இல்லாத இரு விஷயங்கள்.
நான் ஒரு கம்பெனியில் டைரக்டராக அரசு நியமனம். முதலாளி தபால் தலை சேகரிப்பவர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு, கம்பெனி அஞ்சல் செலவில் கலவி செய்து விடுவார்கள். நான் ராஜிநாமா செய்தேன். ஒரு ஜோக் சொல்வார்கள். கம்பெனி ஆடிட்டர்கள் ‘என்ன சாமான்களை பேக் செய்யாமலே பேக்கிங்க் செலவு எக்கச்சக்கம் ஆனது?’. கம்பெனி காரியதரிசி ரகசியமாக வந்து சொன்னாராம், ‘அப்பன் செத்துட்டான். சவ அடக்க செலவை கம்பெனி மேல் போட்டுட்டான்’ எப்படி?.

-#-
Those who cannot read Tamil can read the news item, by clicking on the reference.

Wednesday, February 11, 2015

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)


இன்னம்பூரான்
11 02 2015

மாமாங்கத்துக்கு மாமாங்கம் சால்ஜாப்பு சொல்லுவோம். 
ஜாமத்துக்கு ஜாமம் ஊரை நாசமடிப்போம்.
ஏமாத்து வேலைக்கு ஜால்ரா போடுவோம். விளக்கு
மாத்தாலெ அடிச்சாலும் சுரணை கிடையாது.

‘பீஸ் சால் கே பாத்’ (20 வருடங்களுக்கு பிறகு) என்ற ஒரு சினிமா அந்த காலத்தில் பிரபலம். பேரை மட்டும் வாங்கிக்கிறேன், ஒரு முப்பது வருட கொலைக்களத்து பிலாக்கணம் பாட:

1996ம் வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு முன்னால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கொடுத்த சபதம் இது:

"It is submitted that there are 584 tanneries in North Arcot Ambedkar District vide annexure 'A' and 'D'. Out of which 443 Tanneries have applied for consent of the Board. The Government were concerned with the treatment and disposal of effluent from tanneries. The Government gave time upto 31.7.1985 to tanneries to put up Effluent Treatment Plant (E.T.P.). So far 33 tanneries in North Arcot Ambedkar District have put up Effluent Treatment Plant. The Board has stipulated standards for the effluent to be disposed by the tanneries."

அந்த சபதத்தை மீறி, கண்ட கழுதைகளுக்கு ஆதரவு அளித்து, அண்ணல் காந்தியின் தரித்ர நாரயணனை அவர் கொலையுண்ட தினத்தில், கொலை செய்தவர்களை என்ன செய்யலாம்? நடந்தது என்ன? முப்பது வருடங்களுக்கு பிறகு:

ராணிபேட்டையில் ஒரு சாக்கடை. அந்த ‘சாக்கடை’ எனப்படுவது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஒரு சாயகழிப்பறை. நஞ்சு கலந்த சாயக்கழிவுகளால் காந்தி மகான் அஞ்சலி தினமன்று அங்கு ஒரு பிணக்குவியல். அந்த ஹெக்ஸாவெல்ண்ட் க்ரோமியம் அந்த பிராந்தியத்தில் குடிநீர் குடிப்பவர்களையும் கொன்றுவிடுமாம். எத்தனை அப்பாவிகள் செத்தனரோ? அந்த வெள்ளிக்கிழமையில் இறந்த பத்து பேர்களில் ஒன்பது பேர் வறுமையின் காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த அன்றாடங்காய்ச்சி இளைஞர்கள். அவர்களை கொன்று குவித்த முதலாளிகளுக்கு தேசீய சுற்றுப்புறசூழல் நீதிமன்றம் ரூபாய் 75 லட்சம் தண்டனை அளித்திருக்கிறது. அதில் 50 லட்சம் அரசுக்கு; பாக்கி கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு. வரிப்பணத்தில் கைவைக்காமல், மாசுபடுத்தியவர்களிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கியது சரி தான் என்றாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரங்கெட்ட அதிகாரிகள்  இதற்கெல்லாம் உள்கை.  கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு. அந்த வாரியத்தின் தலைமை குற்றத்தை ஒத்துக்கொண்டு இருக்கிறது. 

உசாத்துணை;








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, January 30, 2015

Monday, January 26, 2015

ஆர்.கே.லக்ஷ்மண்



என் நண்பன் இறந்து விட்டான். நான் அழுகிறேன்.


Wednesday, January 21, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6 முதல் ஐந்து கடிதங்கள்

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6

முதல் ஐந்து கடிதங்கள் 
இன்னம்பூரான்
21 01 2015

தமிழ் மரபு அறக்கட்டளையின் முகமலராகிய மின் தமிழ் நாட்தோறும் புதிய விஷயங்களை கட்டியம் கூறி வரவேற்கவேண்டும்: ஆக்கப்பூர்வமாக இயங்கவேண்டும்; மாணவ சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும்;  த.ம.அ சேகரங்களை அலசி, ஆராய்ந்து அருளவேண்டும் என்ற என் அவாவுக்கு வரவேற்பு இருப்பதாக, கண்ணன், சுபா, திரு.நரசய்யா, ஷைலஜா போன்றவர்களின் பின்னூட்டங்கள் அமைகின்றன. தமிழ் மொழியை கையாளும் போது, நான் தமிழ்த்  தென்றல் திரு.வி.க. அவர்களின்  அறிவுரைகளை ஏற்கிறேன். 

“...தாய்மொழியிற் கல்வி பெறுவது இயற்கை...பின்னை வேறு பல மொழிகளை பயிலலாம்: ஆராயலாம்...இந்நாளில் (1932) தூயத்தமிழர் இன்னாரென்றும், குடிபுகுந்து நிலைத்த தமிழர் இன்னாரென்று பிரித்துக்காட்டல் எவராலும் இயலாததொன்று...இப்போது தூய ஆரியர் இன்னார்’-’தூய தனித்தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்?...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி...”

வல்லமையிலும் அவ்வாறே தான் எழுதிவருகிறேன். சொல்லின் பயனைப் பொருளின் சுவையில் காண்கிறேன். இந்த ஐந்து கடிதங்களும் வெவ்வேறு விதங்களில் சுவை கூட்டுகின்றன; மகிழ்விக்கின்றன; அறிவுரை அருளுகின்றன; இயல்பாக அமைந்து என் அணுகுமுறையை ஆதரிக்கின்றன.

  1. முதல் கடிதம் மிகவும் பிரபலமாக அமெரிக்காவில் பல்லாண்டு பல்லாண்டாக வளையவரும் சிரஞ்சீவி மடலின் தமிழாக்கம். பொறுப்பு எனதே. தற்கால தமிழாளுமையார்கள் வர்ஜீனியாவுக்கு பதில் போடுவார்களா என்பது கேள்விக்குறி.  பதில் எழுதிய இதழாளர் சிறுமிக்கு புரியும் வகையில் எழுதினார்; ஷேக்ஸ்பிரிய ஆங்கிலத்தில் எழுதவில்லை. வர்ஜீனியாபிரிய ஆங்கிலத்தில் எழுதினார்.
  2. இது ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கடிதத்தில் ஒரு பகுதி. ‘ஆஸ்பத்திரி’, ‘பிரத்யேகமாக’, ‘பாஷை’ போன்ற சொற்களை இயல்பாகவே பயன்படுத்தியுள்ளார்.  தமிழார்வத்தில் நாம் ஒருவருக்கும் குறைந்தவர் இல்லை, அவர். இது அந்தக்கடிதத்தில் உள்ள மென்மையான நகைச்சுவையிலிருந்து  தெரிகிறது. யாருமே அவர் பெயரை ஊகிக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறேன்.
  3. இந்த கற்பனை கடிதம், எம்.ஏ. பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு.நரசய்யா சொல்வதை என் நிர்வாக அனுபவம் ஆதரிக்கிறது. சுபாஷிணி சொல்வதை என் சமூகவியல் ஆய்வுகள் ஆமோதிக்கின்றன. அதீதமாக மிகைப்படுத்தி எழுதப்படும் கடிதங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், மிகையாக தோன்றும் புகையே, பகை தான் என்றால் சிந்திக்கப்படவேண்டிய/அவசர உதவி அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது எனலாம்.  ஒரே கடிதத்தில், டாஸ்மாக் கண்டனம், சுகாதாரக்குறைவின் சாபமாக அன்னை ஆஸ்பத்திரியில், ஒரு உளவியல்,  வேலையில்லாத்திண்டாட்டம், பளாரென்று நம்மை செருப்பால் அடிக்கும் வறுமை எல்லாம் இடம் பெற்று விட்டன. இதை தர்ப்பண (முகம் பார்க்கும் கண்ணாடி) இலக்கியம் எனக் கருதுகிறேன். ‘இக்கடிதம் உண்மையே என்று எடுத்துக் கொள் ளும் நிலையில், தமிழகத்தின் மிகச் சாதாரண வாழ்வியல் நிலை அதாவது அடித்தட்டுவர்க்கமக்களின் அன்றாட நிலையை ஒரு கடிதத்திலேயே வெளிச்சமாக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது.’ என்பது நிதர்சனம்.
  4. ‘... 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.’ என்பதிலேயே இவருடைய முகவிலாசம் இருக்கிறது. இவர் தான் கம்யூனிஸ்ட் துறவி ப. ஜீவானந்தம் அவர்கள். பெண்ணியத்துக்கு முகநூல் இந்தக்கடிதத்தொகுப்பு என்றால் மிகையல்ல. அவர் விளிக்கும் பெண்மணி கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் கடித இலக்கியம் அற்புதமான படிப்பினைகளை அள்ளி அள்ளித் தருவதற்கு, இது ஒரு சான்று. ஜீவாவும் கோஷம், வியாபகம்,பரிட்சை போன்ற வடமொழிச்சொற்களை பயன்படுத்த தயங்கவில்லை. மேலும் ரஞ்சனி சொன்னாற்போல், ‘"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்ரு பகுதியில் மூலத்திலேயே ‘இரண்டு’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘இறந்து’ என்ற சொற்பிழை நேர்ந்துள்ளது. ரஞ்சனி உன்னிப்பாகப்படித்தது எனக்கு ஆறுதல். மற்றபடி யார் படிப்பார்கள் என்று நினைத்தேன்.
  5. தமிழனை ‘அப்பாவி’ என்றும் அவன் பேசும் பாஷையை பொல்லாதது என்றும், அவனை பயித்தார ஆஸ்பத்திரிக்கு அனுப்பவேண்டும் என்று கேலி செய்தது ரசிகமணி அவர்கள் தாம். நாம் தான் இன்னும் மாறவில்லை.

-#-